தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மாலை கொண்டு வருகிறேன்.....
4 posters
Page 1 of 1
மாலை கொண்டு வருகிறேன்.....
கண்ணே!
முதலில்
கன்னத்தில் வழியும்
கண்ணீரைத் துடை..
அடி
புடவை கட்டிய
பொக்கிஷமே!
என்
வாலிபம் தவமிருந்து
வாங்கி வந்த வரமே!
என் சீதையே!
மிதிலையில் இருந்துகொண்டு
அசோகவனத்தில் இருப்பதுபோல்
அழுது கொண்டிருப்பவளே !
கண்ணீரைத் துடை...
என்
ரெட்டைக் கண்கள் காணும்
ஒற்றைக் கனவே!
என்
உயிர்க் கரையில்
ஓயாமல் அடிக்கும் அலையே!
என் உடலின்
இரண்டாம் நிழலே!
கண்ணீரைத் துடை...
அறிவாயா?
நீதான்
என்
அதிசயக் கனவென்பதை
அறிவாயா?
ஆம்,
நான்
தூக்கத்தின்
தயவின்றி காணும் கனவு...
தூக்கம் கலைந்தாலும்
தொடரும் கனவு....
ஆம்,
நீதான்
என்
அதிசயக் கனவென்பதை
அறிவாயா?
நாளை
என் தோளுக்கு நீயும்
உன் தோளுக்கு நானும்
சூட்டவிருக்கும்
மாலையைத் தொடுக்கத்தானடி
நான்
நாராய் இளைத்துக் கொண்டிருக்கிறேன்...
நான்
றெக்கைகள் இரண்டும்
பற்றி எரிய எரிய
பறந்து கொண்டிருப்பது
நாளை
நாம் வசிக்கக்
கூடு ஒன்று
கட்டத்தானடி...
இவன் விழுந்தால் போதும்
புதைத்துவிடலாம் என்று
பலர் காத்திருக்கிறார்கள்!
அவர்களுக்கெப்படித் தெரியும்?
இவன்
விழுகின்ற இடங்கள் கூட
வரலாற்றுத் தலங்களாகும் என்று....
இவன்
நிழலுக்கு ஒதுங்கும் மரம்கூட
போதிமரம் ஆகுமென்று....
அவர்களுக்கெப்படித் தெரியும்?
காக்கைகள் கூடி
எச்சமிட்டால்
எரிமலை அணைந்துவிடுமோ?
கிழக்கு தெற்காக
மேற்கு வடக்காக
திசைகளை எல்லாம்
தலை கீழாக மாற்றிவைத்தாலும்
சூரியனுக்கு நட்டமில்லை.
இவன்
உதிக்கும் திசைதான் கிழக்கென்று
உலகம் உரைக்கும்!
கலங்காதே
கண்ணே!
நம்
காதலுக்கிடையில்
குறுக்கிடுவது
காலமே என்றாலும்
அதன்
குரல்வளை தப்பாது....
வேடிக்கை காட்டுவது
விதியே என்றாலும்
அதன்
விலா எலும்புகளை முறித்து
நம்
திருமண மேடையின்
அக்கினிக் குண்டத்திற்கு
விறகாக்குவேன்....
ஏழு கடல்களும் ஒன்றாய்
எழுந்து நிற்கட்டுமே
அந்த
நெருப்புக் குண்டத்திற்கு
நெய்யாய் இறைக்க மாட்டேனோ?
கண்ணீரைத் துடை...
இனியவளே!
இனியுன் கண்ணில்
ஒற்றைத்துளி வழிந்தாலும்
என் உயிரின் வேர்
அந்தக் கண்ணீரில்
அழுகிவிடாதோ?
காதலியே!
உன்
கண்களுக்கு
கனவு காண்பதொன்றே
கடமையென்று
கட்டளை இட்டுக்கொள்!
கவலையின்றி
கனவு காண்!
அப்படி
அந்தக் கனவை ஏதேனும்
கலைக்கக் கூடுமெனில்
அது
நான் கொண்டு வரும்
மணமாலையால்
மட்டுமே முடியும்....
-------------ரௌத்திரன்
முதலில்
கன்னத்தில் வழியும்
கண்ணீரைத் துடை..
அடி
புடவை கட்டிய
பொக்கிஷமே!
என்
வாலிபம் தவமிருந்து
வாங்கி வந்த வரமே!
என் சீதையே!
மிதிலையில் இருந்துகொண்டு
அசோகவனத்தில் இருப்பதுபோல்
அழுது கொண்டிருப்பவளே !
கண்ணீரைத் துடை...
என்
ரெட்டைக் கண்கள் காணும்
ஒற்றைக் கனவே!
என்
உயிர்க் கரையில்
ஓயாமல் அடிக்கும் அலையே!
என் உடலின்
இரண்டாம் நிழலே!
கண்ணீரைத் துடை...
அறிவாயா?
நீதான்
என்
அதிசயக் கனவென்பதை
அறிவாயா?
ஆம்,
நான்
தூக்கத்தின்
தயவின்றி காணும் கனவு...
தூக்கம் கலைந்தாலும்
தொடரும் கனவு....
ஆம்,
நீதான்
என்
அதிசயக் கனவென்பதை
அறிவாயா?
நாளை
என் தோளுக்கு நீயும்
உன் தோளுக்கு நானும்
சூட்டவிருக்கும்
மாலையைத் தொடுக்கத்தானடி
நான்
நாராய் இளைத்துக் கொண்டிருக்கிறேன்...
நான்
றெக்கைகள் இரண்டும்
பற்றி எரிய எரிய
பறந்து கொண்டிருப்பது
நாளை
நாம் வசிக்கக்
கூடு ஒன்று
கட்டத்தானடி...
இவன் விழுந்தால் போதும்
புதைத்துவிடலாம் என்று
பலர் காத்திருக்கிறார்கள்!
அவர்களுக்கெப்படித் தெரியும்?
இவன்
விழுகின்ற இடங்கள் கூட
வரலாற்றுத் தலங்களாகும் என்று....
இவன்
நிழலுக்கு ஒதுங்கும் மரம்கூட
போதிமரம் ஆகுமென்று....
அவர்களுக்கெப்படித் தெரியும்?
காக்கைகள் கூடி
எச்சமிட்டால்
எரிமலை அணைந்துவிடுமோ?
கிழக்கு தெற்காக
மேற்கு வடக்காக
திசைகளை எல்லாம்
தலை கீழாக மாற்றிவைத்தாலும்
சூரியனுக்கு நட்டமில்லை.
இவன்
உதிக்கும் திசைதான் கிழக்கென்று
உலகம் உரைக்கும்!
கலங்காதே
கண்ணே!
நம்
காதலுக்கிடையில்
குறுக்கிடுவது
காலமே என்றாலும்
அதன்
குரல்வளை தப்பாது....
வேடிக்கை காட்டுவது
விதியே என்றாலும்
அதன்
விலா எலும்புகளை முறித்து
நம்
திருமண மேடையின்
அக்கினிக் குண்டத்திற்கு
விறகாக்குவேன்....
ஏழு கடல்களும் ஒன்றாய்
எழுந்து நிற்கட்டுமே
அந்த
நெருப்புக் குண்டத்திற்கு
நெய்யாய் இறைக்க மாட்டேனோ?
கண்ணீரைத் துடை...
இனியவளே!
இனியுன் கண்ணில்
ஒற்றைத்துளி வழிந்தாலும்
என் உயிரின் வேர்
அந்தக் கண்ணீரில்
அழுகிவிடாதோ?
காதலியே!
உன்
கண்களுக்கு
கனவு காண்பதொன்றே
கடமையென்று
கட்டளை இட்டுக்கொள்!
கவலையின்றி
கனவு காண்!
அப்படி
அந்தக் கனவை ஏதேனும்
கலைக்கக் கூடுமெனில்
அது
நான் கொண்டு வரும்
மணமாலையால்
மட்டுமே முடியும்....
-------------ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்
Re: மாலை கொண்டு வருகிறேன்.....
நான் கொண்டு வரும்
மணமாலையால்
மட்டுமே முடியும்...
- காதலின் வெற்றி. தன்னம்பிக்கைதான் காதலுக்கும் காதல் கவிதைக்கும் முக்கியம். காதல் காதலர்களுக்கே...
மணமாலையால்
மட்டுமே முடியும்...
- காதலின் வெற்றி. தன்னம்பிக்கைதான் காதலுக்கும் காதல் கவிதைக்கும் முக்கியம். காதல் காதலர்களுக்கே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மாலை கொண்டு வருகிறேன்.....
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மாலை கொண்டு வருகிறேன்.....
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum