தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என்று விடியும் எமக்கு?
+2
கவியருவி ம. ரமேஷ்
ரௌத்திரன்
6 posters
Page 1 of 1
என்று விடியும் எமக்கு?
எட்டுத் திசையிருந்தும்
எம்மைச் சூழ்ந்தவிருள்
தொட்டுத் துடைப்பதற்கு
திசையொன் றிங்கிலையே
குருடர்களும் சுகமாகக்
கண்ணுறங்கும் பூமியிலே
ஒருநாள் ஒருநொடி
யாமுறங்க வழியிலையே!
பாடையைக் கண்முன்னே
பார்த்துவிட்ட பிறகு
கூடி இமையிரண்டும்
குலவுவதும் எங்ஙனமே?
எடுக்கும் பசியுணர்வும்
எதிரிகள் நினைவினிலே
பிடிக்கும் கிலியதனிற்
பறந்தோடிப் போகிறதே!
பருவக் கனவுகளில்
பாரிலுள இளைஞரெலாம்
துருவங்கள் தோறும்
துள்ளித் திரிந்திருக்க
மரணக் கனவன்றி
மற்றேதும் அறியாராய்
மருண்டெம் மக்களெலாம்
மண்ணிலே உலவுகிறார்!
முத்தமிழ்க் குலத்திலிம்
மண்ணில் பிறப்பதற்கு
அத்தன் அடிதொழுது
அருந்தவம் இயற்றிலமே!
இனம்பார்க்கும் கண்களிலே
இரக்கம் சிறிதிருந்தால்
பிணம்பார்க்கும் பேராசை
பிறந்திருக்க வாய்ப்பிலையே!
கற்பூரத் தீகாணும்
கடவுளர் கண்களுக்கெம்
சடலத் தீகாணும்
சக்தி தானிலையே!
ஒருநாளில் சாவென்று
எல்லோர்க்கும் எழுதியவன்
அன்றாடம் எமக்கென்று
எழுதியதை என்சொல்ல?
நாற்காலி ஆசையிலே
நாற்றிசை எரியவிட்டுப்
பார்க்கின்ற பெரியோரின்
புத்தியினை என்சொல்ல?
புத்தம் சரணமென்றே
பொழுதெலாம் கூறிவிட்டு
ரத்தம் கொண்டுவாய்
கொப்புளிப்ப தென்சொல்ல?
புத்தன் கோவிலிலே
துலங்கும் மணியதனை
யுத்தக் களச்சங்காய்
மாற்றிய தென்சொல்ல?
அகதிகளாய் இந்த
அவனியில் வாழ்வதற்கும்
தகுதிகள் அற்றவராய்த்
தவிப்பதை என்சொல்ல?
நீதியிலா சபைகளே
நானிலத்தில் நிறைந்ததனால்
நாதியிலா தோரினம்
நிற்பதை என்சொல்ல?
------------ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்
Re: என்று விடியும் எமக்கு?
அவர்களுக்கு நாம் ஓட்டுப்போட்டுத் தொலைக்கிறோமே... அதை என்ன சொல்ல...
கவிதை நன்றாக இருக்கிறது. மாறும் உலகம். நாம் இருக்கும்போது மாறினால் மகிழ்ச்சி அடையலாம்.
கவிதை நன்றாக இருக்கிறது. மாறும் உலகம். நாம் இருக்கும்போது மாறினால் மகிழ்ச்சி அடையலாம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: என்று விடியும் எமக்கு?
அகதிகளாய் இந்த
அவனியில் வாழ்வதற்கும்
தகுதிகள் அற்றவராய்த்
தவிப்பதை என்சொல்ல?
ஆட்சிக்கு வரவங்க கொஞ்சமாவது மனசாட்சி இருக்கணும் கவிதை அருமை
அவனியில் வாழ்வதற்கும்
தகுதிகள் அற்றவராய்த்
தவிப்பதை என்சொல்ல?
ஆட்சிக்கு வரவங்க கொஞ்சமாவது மனசாட்சி இருக்கணும் கவிதை அருமை
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: என்று விடியும் எமக்கு?
மாறும் உலகம்.
நாம் இருக்கும்போது மாறினால் மகிழ்ச்சி அடையலாம்...
-
நாம் இருக்கும்போது மாறினால் மகிழ்ச்சி அடையலாம்...
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: என்று விடியும் எமக்கு?
அன்பு இளவலே.. தங்களைப்பற்றிய குறிப்பொன்றும் தங்கள் கவிதைகளின் தொகுப்புத்தொடுப்பொன்றையும் எனது தனிமடலுக்கு விரைந்தளிக்க இயலுமா..?
ஓர் பாரதியின் சொல்வீச்சினை எனது கவிதைகளில் காண்பதாக அனைவரும் கூறியுள்ளனர். அவர்களுக்கு தங்கள் கவிதைகளை அறிமுகப்படுத்த விழைகிறேன்..
இதோ பார்.. மீண்டும் ஒரு பாரதி பிறந்துவிட்டான் எனக்காட்ட விரும்புகிறேன்..
பாராட்டுகள் இளவலே..
ஓர் பாரதியின் சொல்வீச்சினை எனது கவிதைகளில் காண்பதாக அனைவரும் கூறியுள்ளனர். அவர்களுக்கு தங்கள் கவிதைகளை அறிமுகப்படுத்த விழைகிறேன்..
இதோ பார்.. மீண்டும் ஒரு பாரதி பிறந்துவிட்டான் எனக்காட்ட விரும்புகிறேன்..
பாராட்டுகள் இளவலே..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: என்று விடியும் எமக்கு?
பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என்று விடியும் எமக்கு?
இது உண்மையான புகழுக்கும் புகழ்ச்சிக்கும் உரியவைதான். உரியவர்கள் தான். இருவருக்குமே தமிழ்த்தோட்டம் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறது.கலைவேந்தன் wrote:அன்பு இளவலே.. தங்களைப்பற்றிய குறிப்பொன்றும் தங்கள் கவிதைகளின் தொகுப்புத்தொடுப்பொன்றையும் எனது தனிமடலுக்கு விரைந்தளிக்க இயலுமா..?
ஓர் பாரதியின் சொல்வீச்சினை எனது கவிதைகளில் காண்பதாக அனைவரும் கூறியுள்ளனர். அவர்களுக்கு தங்கள் கவிதைகளை அறிமுகப்படுத்த விழைகிறேன்..
இதோ பார்.. மீண்டும் ஒரு பாரதி பிறந்துவிட்டான் எனக்காட்ட விரும்புகிறேன்..
பாராட்டுகள் இளவலே..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» சிரிப்பதில் எமக்கு உளைச்சல்
» மேலும் மேலும் கடன் வாங்கினால் மக்கள் தலையில்தானே விடியும்?-ஜெ.
» நச் என்று ஒரு இச்
» நீ மன்னிப்பாய் என்று ...!
» புனிதம் என்று...!
» மேலும் மேலும் கடன் வாங்கினால் மக்கள் தலையில்தானே விடியும்?-ஜெ.
» நச் என்று ஒரு இச்
» நீ மன்னிப்பாய் என்று ...!
» புனிதம் என்று...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum