தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நானும் நக்ஸலைட் ஆகிறேன்.....

+4
கலைவேந்தன்
அ.இராமநாதன்
pakee
ரௌத்திரன்
8 posters

Go down

நானும் நக்ஸலைட் ஆகிறேன்..... Empty நானும் நக்ஸலைட் ஆகிறேன்.....

Post by ரௌத்திரன் Fri Jul 13, 2012 6:46 pm


என்ன செய்யச் சொல்கிறாய்

என்னை?



சொல்லடி



என்ன செய்யச் சொல்கிறாய்

என்னை?



வேறு வழியில்லை!

ஆம்,



ரத்தத்தை

வேர்வையாய்ச் சிந்தி

வாங்கிய சுதந்திரம்

வீணர்களின் உள்ளங்கையில்

ரேகையாய் அடங்கிய பிறகும்...



காந்தியின்

அஹிம்சை கூட

ஆண்மையற்றவனின்

அடையாளமாய்

ஆகிவிட்ட பிறகும்...



எம் தேசியக் கொடியின்

மூவர்ணம் கூட

பிரிவினை வாதத்தின்

பேருரையாய்ப்

பிறழ்ந்துவிட்ட பிறகும்....



என்னடி செய்யச் சொல்கிறாய்

என்னை?



வேர்வை வற்ற வற்ற

உழைத்தும் கூட

வறுமை வற்றவில்லையே என்று

வயிறு எரிவோரை

கண்ட பிறகும்...



போலிச் சாமியார்களோடு

போட்டிபோட முடியாமல்

கோவில் சாமிகளெல்லாம்

காவி கட்டி

கண்மறைவாய்ப் போன பிறகும்....



பாட்டாளியின் உரிமைகளெல்லாம்

பாஞ்சாலியின் புடவையாய்

உருவப்படுமொரு சமூகத்தில்....

கிருஷ்ண பரமாத்மாக்கள் எல்லாம்

கோபியர்களைக்

கொஞ்சி கொஞ்சியே

களைத்துக் கிடப்பதைக்

கண்ட பிறகும்....



என்னடி செய்யச் சொல்கிறாய்

என்னை?



ரத்தத்தை விற்று

தண்ணீர் வாங்குவதென்பது

தவிர்க்க முடியாத

தலையெழுத்தாய் ஆகவிருக்கும்

தேசத்தில்...



ஓட்டுரிமை

ஒன்றைத் தவிர

ஒட்டுமொத்த உரிமைகளும்

பறிக்கப் பட்டுவிட்டதொரு

அடிமைச் சமூகத்தில்...



மதங்கள் வீசிகின்ற

கத்தியில்

தெய்வத்தின் தலை

துண்டாகுமொரு

துயரப் பொழுதில்...



என்னடி செய்யச் சொல்கிறாய்

என்னை?



தேசமே

பற்றி எரிந்துகொண்டிருந்தாலும்

காதலுக்குத் தீக்குளிப்பதைக்

கொள்கையாக்கி வைத்திருக்கும்

குருட்டு இளைஞர்களுக்கு

இடையில்....



கட்சிக் கொடிகள்

படபடக்கும் காற்றில்

தேசியக் கொடியே

கிழிந்துவிடுமொரு

அபாயச் சூழலில்.....



என்னடி செய்யச் சொல்கிறாய்

என்னை?



போர்வாளாய் அவதரித்தும்

புல்லை அறுத்துக்கொண்டிருப்பதோ?



வேறு வழியில்லை!



இதோ

இவன் கையில் இருப்பது

எழுதுகோலன்று

துப்பாக்கி...



மெய்யை நிலைநாட்ட

மையாய் வழியும்

துளிகள் ஒவ்வொன்றுமே

தோட்டாக்கள்...



ஆம்,



நானும்

நக்ஸலைட் ஆகிறேன்...



--------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

நானும் நக்ஸலைட் ஆகிறேன்..... Empty Re: நானும் நக்ஸலைட் ஆகிறேன்.....

Post by pakee Fri Jul 13, 2012 6:51 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

நானும் நக்ஸலைட் ஆகிறேன்..... Empty Re: நானும் நக்ஸலைட் ஆகிறேன்.....

Post by அ.இராமநாதன் Fri Jul 13, 2012 8:05 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நானும் நக்ஸலைட் ஆகிறேன்..... Empty Re: நானும் நக்ஸலைட் ஆகிறேன்.....

Post by கலைவேந்தன் Sat Jul 14, 2012 3:48 pm

குப்பைகளுக்கிடையே கிடைத்த மாணிக்கக்கற்கள் போல் அவ்வப்போது ஆறுதல் தரும் தங்கள் கவிதைக்காகவே தோட்டம் தினமும் வரலாம் ரௌத்திரன்..

இன்றைய இந்தியாவின் இழிநிலையை இதைவிட சாட்டை வரிகளால் எழுத இயலுமா என்பது ஐயம் தான்..!!

மீண்டும் மீண்டும் பாராட்டுகள் இளவலே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

நானும் நக்ஸலைட் ஆகிறேன்..... Empty Re: நானும் நக்ஸலைட் ஆகிறேன்.....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jul 14, 2012 4:27 pm

அருமை [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நானும் நக்ஸலைட் ஆகிறேன்..... Empty Re: நானும் நக்ஸலைட் ஆகிறேன்.....

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 14, 2012 8:22 pm

கட்சிக் கொடிகள்

படபடக்கும் காற்றில்

தேசியக் கொடியே

கிழிந்துவிடுமொரு

அபாயச் சூழலில்...

- சிறந்த கவிதை... அவர்கள் பட்ட பாடெல்லாம்... வீணாகிப் போனது. இனி அவர்கள் திருந்த மாட்டார்கள். நீதியாலும் யாராலும் திருத்தவும் முடியாது என்றாகிவிட்ட சூழலில்தான் வாழ்ந்து வருகிறோம்.

அவர்கள் இக் கவிதையைப் படிக்க நேர்ந்தால் அடுத்த கணம் கண்டிப்பாக வாழை தகுதியற்றவர்கள் என்றெண்ணி செத்தே போய்விடுவார்கள்.

இந்தக் கவிதைகள் அவர்கள் கண்ணில் ஒரு நாளிலேனும் பட வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நானும் நக்ஸலைட் ஆகிறேன்..... Empty Re: நானும் நக்ஸலைட் ஆகிறேன்.....

Post by sivarathy Sat Jul 14, 2012 8:44 pm

[You must be registered and logged in to see this image.]
sivarathy
sivarathy
ரோஜா
ரோஜா

Posts : 217
Points : 343
Join date : 13/03/2011

Back to top Go down

நானும் நக்ஸலைட் ஆகிறேன்..... Empty Re: நானும் நக்ஸலைட் ஆகிறேன்.....

Post by vinitha Sun Jul 15, 2012 1:34 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

நானும் நக்ஸலைட் ஆகிறேன்..... Empty Re: நானும் நக்ஸலைட் ஆகிறேன்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum