தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?

2 posters

Go down

வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?  Empty வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?

Post by ஆளுங்க Sat Jul 28, 2012 9:08 pm

ஜூலை இறுதி என்றாலே "சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய
வேண்டும்" என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும். அதற்கென இருக்கும்
படிவத்தை முழுதும் நிரப்புவது பெரும்பாடு தான்!!


வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?  Online-Tax

இணையத்தை நாம் பல செயல்களுக்குப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம்.
இணையத்தில் மூலம் நமது வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது
(Efiling of income tax returns) என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.



வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?  Filing




வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?  EFiling_process

வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இணைப்பு: https://incometaxindiaefiling.gov.in/

1. முதலில் தளத்திற்குச் சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள்.

கணக்கை எப்படி உருவாக்குவது?



வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?  Selection_140



  • தளத்தில் வலது பக்கத்தில் இருக்கும் Login என்கிற பகுதியில் இருக்கும் Register என்பதைச் சொடுக்குங்கள்.
  • அடுத்து வரும் பக்கத்தில், உங்களது PAN எண்ணை இடுங்கள் (உங்களது PAN எண் தான் உங்களின் கணக்கு! (user id) )


  • அடுத்து வரும் பக்கத்தில், உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள்.உங்கள் PAN
    CARD விண்ணப்பப்படிவத்தில் கொடுத்தது போலத் தான் உங்கள் பெயர் இருக்க
    வேண்டும். கூடவே, மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.
  • உங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், அதனையும் பதிவு செய்யவும் (pfx file/ USB token)
  • செய்து முடித்த பின், உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் சென்று இணைப்பைச் சொடுக்கவும்.
  • உங்கள் கணக்கு தயார்!!

2. வருமான வரி தாக்கல் படிவத்தைத் தரவிறக்குங்கள்


வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?  Menu_152


  • உங்கள் கணக்கிற்குள் உள்நுழையுங்கள்
  • மேலே உள்ள Downloads --> AY 2012-13 என்பதில் செல்லுங்கள்
  • தகுந்த படிவத்தைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள் (Excel Utility) . அருகில்
    இருக்கும் உதவிக் கோப்பையும் (Help Manual) ஐயும் தரவிறக்கிக்
    கொள்ளுங்கள்!

குறிப்பு: நீங்கள் செய்யப்போவது தனிநபர் தாக்கல் (Individual) என்றால், மேலே கூறியதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி அவற்றைத் தரவிறக்கலாம்.

3. விண்ணப்பப் படிவத்தை நிரப்புங்கள்.

இந்த Spread Sheet (Excel) படிவத்தில்Macro கள் மூலம் பல செயல்கள் நடப்பதால், Macro களைச் செயல்பாட்டில் (Enable Macro) வைக்கவும்.

  • படிவத்தில் உள்ள தொடர்புடைய பச்சை நிறக்கட்டங்களை மட்டும் நிரப்பவும்.
  • ஒவ்வொரு பக்கத்தையும் (Sheet) நிரப்பிய பின்னர் Validate என்பதனைச் சொடுக்கி எதுவும் விடுபட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும்.
  • அதன் பின், அடுத்த பக்கம் (Sheet) செல்லவும்.
  • அனைத்தையும் உள்ளிட்ட பின்னர், முதல் பக்கம் வரவும்.
  • "Calculate Tax" என்பதனைச் சொடுக்கினால், படிவம் முழுதும் நிரப்பப்பட்டு விடும்.
  • அதன் பின், Generate XML என்பதனைச் சொடுக்கவும்
  • வரும் புதிய பக்கத்தில் "Save XML" என்பதனைச் சொடுக்கவும்
  • இப்போது உங்கள் தாக்கல் படிவத்தின் XML வடிவம் உங்கள் கணிணியில் இருக்கும்.


4. நிரப்பிய படிவத்தைத் தளத்தில் பதிவேற்றுங்கள்





  • உங்கள் கணக்கிற்குள் உள்நுழையுங்கள்
  • இடது பக்கத்தில் உள்ள "Submit Return" என்பதன் கீழே உள்ள Select Assessment Year --> AY 12-13 என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்


வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?  Menu_146

  • வரும் பக்கத்தில், தகுந்த படிவ எண்ணைத் தேர்வு செய்யவும்.
  • உங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், "Do you
    want to digitally Sign the file" என்பதில் Yes கொடுக்கவும். இல்லையேல்,
    "No" கொடுக்கவும்.
  • Digital Certificate இருப்பவர்கள் (Yes கொடுத்தவர்கள்) தொடர்புடையதைத் தேர்வு செய்யவும்.
  • அதன் பின் "Next" என்பதைச் சொடுக்கவும்


வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?  Selection_147

  • வரும் பக்கத்தில், உங்கள் கணிணியில் சேமிக்கப்பட்ட XML கோப்பைப் பதிவேற்றுங்கள்.
  • தற்போது நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து விட்டீர்கள்!!

5. ஒப்புகை (Acknowledgement) பெறுங்கள்


இருங்க.. கடமை முடிந்து விட்டது எனக் கிளம்பாதீங்க!!


வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?  EFiling-Types-India

  • எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) கொடுத்தவர்கள் ஒப்புகை
    படிவத்தை (Acknowledgement Form) சேமித்து/ அச்சிட்டு வைத்துக்
    கொள்ளுங்கள்
  • மற்றவர்கள் வந்த ஒப்புகை படிவத்தை (ITR-V) அச்சிட்டு, கீழ்காணும் முகவரிக்கு (120 நாட்களுக்குள்) அனுப்புங்கள். [அஞ்சல்/ விரைவு அஞ்சல் (Speed Post) மட்டுமே!]



முகவரி:

Income Tax Department – CPC,
Post Bag No - 1, Electronic City Post Office,
Bengaluru - 560100, Karnataka




அனுப்புபவர்கள் ஒப்புகைப் படிவத்தில் கையொப்பம் இட மறந்து விடாதீர்கள்!!


நீங்கள் தாக்கல் செய்த உடன் வரும் பக்கத்திலேயே, ஒப்புகைப் படிவத்தின்
இணைப்பு இருக்கும். தவற விட்டவர்கள், உங்கள் கணக்கில் மேல் தத்தலில் உள்ள
My Accounts--> My Returns சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.


வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?  Menu_154

ஒப்புகைப் படிவம் கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டது.
கடவுச்சொல்: உங்கள் PAN எண் பிறந்த நாள்
(இடையில் Space வராது)

என்ன நண்பர்களே, இனி எளிதாக உங்கள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்து விடலாம் தானே?






டிஸ்கி:

தாமதமாக பதிவிட்டமைக்கு வருந்துகிறேன். இருந்தாலும், இன்னும் மூன்று
நாட்கள் இருப்பதால், பெருவாரியானவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற
நோக்கத்தில் பதிவிடுகிறேன்!!

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31!

படங்கள்: கூகிள் தேடல் மற்றும் கைமுறை (Self uploaded)

எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?  Empty Re: வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 31, 2012 11:00 am

பயனுள்ள நல்ல தேவையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum