தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பார்த்தால் சிணுங்கி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
4 posters
Page 1 of 1
பார்த்தால் சிணுங்கி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
பார்த்தால் சிணுங்கி
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் thabushankar@yahoo.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விலை ரூபாய் 70
விஜயா பதிப்பகம் 20.ராஜ வீதி ,கோவை .1 .தொலைபேசி 2394614
கவிஞர் தபூ சங்கர் அவர்கள் காதல் கவிதைகளின் மூலம் காதலர்கள் இடையே பிரபலமாகி ,காதல் பரிசாக இவரது நூலே பரிசளித்து வருகின்றனர் காதலர்கள்.அதனால்தான் இவரது நூல்கள் குறுகிய காலத்தில் அடுத்த பதிப்புகளும் வெளி வந்து கொண்டு இருக்கிறது . காதலர்கள் காதலுக்கு அடுத்த படியாக, நேசிப்பது தபூ சங்கர் கவிதைகள் என்றால் மிகை அன்று .அட்டைப்பட வடிவைப்பு ,கட்டமைப்பு, அச்சு என அனைத்தும் மிக நேர்த்தியாக
உள்ளது .நூலை பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் விதமாக
உள்ளது. பதிப்பித்த விஜயா பதிப்பகதாருக்கு பாராட்டுக்கள் .நூலின்
பெயரே சிந்திக்க வைக்கின்றது .தொட்டால் சிணுங்கி கேள்வி பட்டு இருக்கிறோம்
."பார்த்தால் சிணுங்கி "வித்தியாசமாக உள்ளது .காதலித்தவர்களுக்கு இதன் பொருள் நன்கு விளங்கும் . திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் நா .முத்துக் குமார் அவர்களின்
அணிந்துரை அழகுரையாக உள்ளது .காதலர் தின பரிசாக இந்த நூலை வழங்கலாம் என்று
பரிந்துரை செய்து முடித்துள்ளார் .
மரங்கள் அசைய வில்லை என்றால் காற்று வர வில்லை என்று நினைப்போம் .இது சாதாரண பார்வை .மரங்கள் அசைய வில்லை என்றால் கவிஞர் தபூ சங்கரின் காதல் பார்வை என்னவெண்டு கவிதையில் பாருங்கள் .
நூலின் முதல் கவிதையே காதல் உணவுடன் தொடங்குகின்றது .
உங்கள் வீதியில் மரங்கள்
அசைய வில்லை என்றால்
அங்கே
எங்கோ ஒரு காதல்
புழுங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் .
காதலியை புகழ்வது காதலன் கடமைகளில் ஒன்று .மிக அதிகமாக புகழ்ந்தாலும் ஏற்றுக் கொள்வாள் காதலி .கவிஞர் தபூ சங்கர் காதலியை புகழும் அழகு தனி அழகு .தனி நடை .
ஒரு வருட
உலக அழகிகளே
ஒதுங்கி நில்லுங்கள்
ஆயுள் கால
உலக அழகி
வருகிறாள் .
இன்றைய இளம் பெண்கள் இன்று அவ்வளவாக அணிவதே இல்லை .ஆனால் கவிஞர் தபூ சங்கர் காதலி அணியும் வழக்கம் உள்ளதை பார்த்தால் வடித்த கவிதை இது .
கொலுசு
வளையல்
பூ
இதெல்லாம்
உன் அழகுபரப்புச்
செயலாளர்கள் .
கொள்கை பரப்புச் செயலாளர்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம் .அழகுபரப்புச் செயலாளர்கள் இப்போதுதான் கேள்விப் படுகிறோம். வித்தியாசமான சிந்தனை .பாராட்டுக்கள் .
காதலி அமைதியானவள் ஆனால் அவளது அழகோ மிகவும் ஆர்ப்பாட்டமானது என்பதை எப்படி ? எழுதுகிறார் பாருங்கள் .
நீ ரொம்ப ரொம்ப
அமைதியான
பெண்தான்
ஆனால்
உன் அழகுதான்
அடங்கப் பிடாரி .
"இமைக்காமல் பார்க்கும் போட்டியில் என்னை வென்றவள் அவள் "என்று நான் எழுதிய கவிதையை நினைவூட்டிய கவிதை ஒன்று .
கண்கள் கூசாமல்
சூரியனைப் பார்ப்பதற்குக் கூட
கண்ணாடி உதவுகிறது .
ஆனால்
உன்னைக்
கண்கள் கூசாமல் பார்க்க
எதுவுமே
உதவுவதில்லை .
காதலி தந்த ஒன்றை மிக சாதரணமானதாக இருந்தாலும் அதை பத்திரப் படுத்துவது
காதலன் கடமை .அந்த வகையில் ஒரு கவிதை. படிக்கும் வாசகர்களுக்கு அவரவர்
காதல் நினைவை மலர் விக்கும் விதமாக ஒரு கவிதை .
பேருந்தில்
நீ எனக்காக
எடுத்துக் கொடுத்த
பயணச்சீட்டு
இன்னும்
பயணித்துக்
கொண்டிருக்கிறது.
நூல் முழுவதும் காதலர்களுக்கு அவரவர் மலரும் நினைவுகளை மலர்விக்கும் கவிதைகள் ஏராளமாக உள்ளது.
இந்த உலகம்
எத்தனையோ
சர்வாதிகாரிகளைப்
பார்த்திருக்கிறது
ஆனால்
உன்னை மாதிரி ஒரு
சர்வ அழகுக்காரியை
இப்போதுதான்
பார்க்கிறது .
காதலியை சர்வாதிகாரி என்று சொல்ல வருகிறாரோ என்று எதிர்பார்த்து ஏமாந்தேன் .என்பதே உண்மை .சர்வ அழகுக்காரியை என்று எழுதி வியப்பில் ஆழ்த்தி விட்டார் நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .
காதலன் கனவு காண்பது இயல்பு .அதனை உணர்த்தும் கவிதை .
தினமும்
நான் தூங்கிய
உடனேயே
என் கனவில்
வந்து விடுகிறாயே
நான் எப்போது
தூங்குவேன் எண்டு
நீ எங்கிருந்து
கவனிக்கிறாய் .
காதலியிடம் கெஞ்சிக்கூத்தாடி ஒரு வேண்டுகோள் வைக்கிறார் பாருங்கள் .
நீ என்னை
காதலிக்கக் கூட
வேண்டாம்
உன் தோழிகளில்
ஒருத்தியிடமாவது
அவன் என்னைக்
காதலிக்கிறான் தெரியுமா
என்று
ஒரே ஒருமுறை சொல்
அது போதும் .
இப்படி நூல் முழுவதும் அட்டை முதல் அட்டை வரை காதல் ரசம் சொட்டச் சொட்ட
கவிதைகள் வடித்துள்ளார் .விமர்சனம் எழுத மேற்கோள் காட்ட எனக்குப் பிடித்த
கவிதைகளை மடித்து அடையாள படுத்தினேன் .கடைசியில் எல்லாம் பக்கமும் மடித்து
விட்டேன். பிறகு மறு முறை படித்து மிகவும் சிரமப்பட்டு சிலவற்றை தவிர்த்து
எழுதி உள்ளேன் .
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூலை படித்து முடித்தவுடன் நாமும்
காதல் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்து விடும் .சில நாட்களில்
நானும் காதல் கவிதை எழுதி இணையத்தில்பதிப்பித்து விடுவேன் . கவிஞர்
தபூ சங்கர் காதலர்களை மட்டும் மகிழ்விக்க வில்லை .கவிஞர்களையும்
மகிழ்வித்து இளமையாக இருக்க சிந்திக்க உதவுகின்றார் கவிதைகள் மூலம் .
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் .காதல் கவிதைகள் மட்டுமே எழுதி வருகிறீர்கள் .
உங்களுடைய கவித் திறமையை சமுதாய விழிப்புணர்வு கவிதைகள் எழுதவும் பயன்
படுத்துங்கள்

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: பார்த்தால் சிணுங்கி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
-
சமுதாய விழிப்புணர்வு கவிதைகள் எழுதவும்
கவித்திறமையை பயன் படுத்துங்கள்...
-
விமர்சனம் நல்லா இருக்கு...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
பார்த்தால் சிணுங்கி
பெண்ணே நீ ஒரு கவிதை
உனக்கு நான் ஒரு கவிதை எழுதினேன்
எழுதிய கவிதை உன் போல் அழகாக இல்லை
என்று கண்ணீர் விடுகிறது பெண்ணே...
உனக்கு நான் ஒரு கவிதை எழுதினேன்
எழுதிய கவிதை உன் போல் அழகாக இல்லை
என்று கண்ணீர் விடுகிறது பெண்ணே...
vickramhx111- புதிய மொட்டு
- Posts : 2
Points : 2
Join date : 27/08/2012
Age : 35
Location : Coimbatore
Re: பார்த்தால் சிணுங்கி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: பார்த்தால் சிணுங்கி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அழகு சொல்ல வார்த்தையே இல்லை என்னால் இப்படி எழுதமுடியவில்லையே கொஞ்சம் பொறாமை (வருத்தம் )
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பார்த்தால் சிணுங்கி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum