தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முன்னுரை
3 posters
Page 1 of 1
முன்னுரை
முன்னுரை
ஆங்கிலக் கல்விமுறை, அச்சு எந்திர நுழைவு போன்றவற்றின் காரணமாகத் தமிழ்நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாவல் என்ற உரைநடை இலக்கியம் தோன்றியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வக்கால மக்களின் சமூகச் சூழலையும் வாழ்வியலையும் அவர்கள் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும், மானிடம் மனிதப் பண்பை மறந்து நெறிதவறும்போது தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த சிறந்த இலக்கிய வடிவமாக நாவல் வடிவம் சிறப்புற்று விளங்கிவருகிறது.
அவ்வகையில் இன்றைய சமூகச் சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்தும் வித்யாசாகரின் படைப்புகள் நடப்பியல் நிலையில் சமூகத்தில் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் போராட்டங்களையும், மனிதப் பண்புகளையும், மனித நேயத்தையும் கொண்டு அமைந்துள்ளன.
ஆய்வுக் களம்
தமிழ் இலக்கிய உலகில் ஆய்வுக்களங்கள் பரந்து காணப்படுகிறது. அக்களங்களின் வகைமைகளைக் கொண்டு வித்யாசாகர் தன்னுடைய எழுத்தாளுமையால் குறிப்பிடும்படி சில சாதனைகள் செய்துள்ளார் எனலாம். வித்யாசாகர் புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்க் கவிஞருமாவார். இவர் இளங்கலை இயந்திரப் பொறியாளர். குவைத்தில் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத் துறையில் மேலாளராகப் பணி செய்து வரும் இவர் கடந்த பதின்மூன்று வருடங்களாகச் சமூக அக்கறையும் எழுத்தார்வமும் கொண்டு அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் சிறுகதை, கவிதை, நாவல் மற்றும் கட்டுரை என இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். கவிமாமணி, இலக்கியச் செம்மல், தமிழ்மாமணி போன்ற விருதுகளைப் பெற்றுள்ள இப்படைப்பாளரின் படைப்புகளுள் ‘கனவுத் தொட்டில்’ என்னும் நாவல் ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வுத் தலைப்பு
‘வித்யாசாகரின் கனவுத் தொட்டில் (நாவல்) - ஓர் ஆய்வு’ என்பது ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டுள்ள ஆய்வு தலைப்பாகும்.
ஆய்வு நோக்கம்
சமூகச் சிக்கல்களாக அமையக்கூடிய ஒழுக்கச் சிதைவு - மனித உறவுச் சிதைவு, காதலின் தன்மை, கடவுள் பற்றிய கோட்பாடு, சமூகத் தீமையாகிப் போன விபச்சாரம் – விபச்சாரிகளின் உண்மைநிலை, முரண்பட்டுள்ள மனித சமுதாயப் பாத்திரங்கள் போன்றவற்றை வித்யாசாகர் தமது நாவலின் மூலமாக எடுத்துரைத்துள்ள பாங்கினை ஆராய்ந்து அவற்றின் மூலம் சமூகச் சிக்கல்களை அடையாளம் கண்டு, அவற்றிற்கான தீர்வுகளாக ஆசிரியர் முன்மொழியும் தீர்வுகளையும் எடுத்துரைப்பது இவ்வாய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.
ஆய்வு மூலங்கள்
வித்யாசாகர் படைத்துள்ள ‘கனவுத் தொட்டில்’ என்னும் நாவல் இந்த ஆய்வுக்கான முதன்மை ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இவ் ஆய்விற்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் சமூகம், சமூகச் சிக்கல், தீர்வுகள் குறித்த அறிஞர்களின் கருத்துகளும், திறனாய்வு நூல்களும், கட்டுரைகளும், இதழ்களும், ஆய்வேடுகளும் துணைமைச் சான்றுகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இயல் அமைப்பு
‘வித்யாசாகரின் கனவுத் தொட்டில் (நாவல்) - ஓர் ஆய்வு’ என்னும் தலைப்பில் உருவாக்கப்படும் இந்த ஆய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக,
1. தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்கள்
3. கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்களின் தீர்வுகள்
4. கனவுத் தொட்டிலின் மொழிநடையும் உத்தியும்
என்னும் நான்கு இயல்களில் அமைந்துள்ளது.
இயல் விளக்கங்கள்
இயல் – ஒன்று
‘தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்பது ஆய்வேட்டின் முதல் இயலாகும். தமிழர் சமூகத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களே தமிழில் நவீன உரைநடையின் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைந்தன. நாவலில் இடம்பெறும் எந்த ஒரு கதை மாந்தரும் தனித்து இயங்கி வாழ்வதில்லை. கதை மாந்தர் சமூகத்தின் ஓர் அங்கமாகத் திகழ்வதால் சமூகத்தின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் தன் பங்கினைச் செய்கின்றனர். சமூகம் கதை மாந்தரைப் பாதிப்பதால் சமூகம் நாவலில் முக்கியப் பங்காற்றுகின்றது. எனவே, நாவல் இலக்கியம், தான் தோன்றிய காலத்துச் சமூக வாழ்வை முழுமையாகப் பதிவு செய்கிறது. அவ்வகையில் நாவலின் தோற்றம் அதன் வளர்ச்சிநிலை மற்றும் நாவல் படைப்பாளர்களின் அறிமுகம் ஆகியவை ரத்தின சுருக்கமாக இவ்வியலில் எடுத்துரைக்கப்படுகிறது.
இயல் – இரண்டு
‘கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்கள்’ என்பது ஆய்வேட்டின் இரண்டாம் இயலாகும். கனவுத் தொட்டிலில் காணலாகும் குடும்ப அமைப்பில் காணப்படும் சிக்கல்கள், பெற்றோர்களின் போக்கு, வேலை தேடும் போராட்டம், வறுமை நிலையால் விலைமகளாக மாறும்; மாற்றப்படும் சூழல், இறையியல் பற்றிய தெளிவின்மை, சமூக முரண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றாகிப்போன விவாகரத்து போன்ற பிரச்சினைகள் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளது.
இயல் - மூன்று
‘கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்களின் தீர்வுகள்’ என்பது ஆய்வின் மூன்றாம் இயலாகும். நாவலின் மூலம் கண்டறியப்பட்ட சிக்கல்களுக்கு ஆசிரியர் தீர்வுகளாகக் கூறுவன இங்கு எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. நாவலின் பாத்திரங்களின் கூற்றுத் திறனுடன் குடும்பம், திருமணம், காதல், விவாகரத்து, விபச்சாரம் முதலானவற்றிற்கு ஆசிரியரின் தீர்வுகளை ஒப்பிட்டுக்காட்டி இக்காலச் சமூக அவலங்களைத் தீர்க்க வழிகூறுவதாக இவ்வியல் அமைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இயல் – நான்கு
‘கனவுத் தொட்டிலின் மொழிநடையும் உத்தியும்’ என்பது ஆய்வேட்டின் இறுதி இயலாகும். நாவல் வாசகர்களிடம் வரவேற்பு பெறவும், நாவலை முழுமையாகவும், புரிந்துகொண்டு படிக்கவும், சலிப்பின்றி எத்தனைமுறை வேண்டுமானாலும் படிக்கத் தூண்டுவது அந்நாவலின் எளிய மொழிநடையும் உத்தியும்தான். கனவுத் தொட்டிலின் எளிய நடை, வட்டார நடை, பிறமொழி, வருணனை, உரையாடல், அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி, மரபுத்தொடர், குறியீடு, உவமை எனப் பலவகையான மொழிநடையையும் உத்தியையும் இவ்வியலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
மேற்கண்ட நான்கு இயல்களிலும் கண்டறியப்படும் இன்றியமையா மெய்ம்மைகள் ஆய்வின் முடிவுரையாகத் தொகுத்து முடிவுரையில் கொடுக்கப் பட்டுள்ளதோடு, மேலும், ஆய்வதற்கான மேலாய்வுக் களங்களைச் சுட்டிக் காட்டுவதாக முடிவுரை அமைந்துள்ளது.
முன்னுரையில் ஆய்வுப்பொருள் தேர்வு, ஆய்வுக் களம், ஆய்வுத் தலைப்பு, ஆய்வு நோக்கம், ஆய்வு மூலங்கள், ஆய்வேட்டின் அமைப்பு, இயல்கள் விளக்கம் முதலானவை விளக்கம் பெற்றுள்ளன. ஆய்வேட்டின் இறுதியில் துணை நூற்பட்டியல் நிரல்படுத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து ஆய்வின் முக்கியத்துவம் கருதி கனவுத் தொட்டிலின் நாவலாசிரியர் வித்யாசாகரிடம் பெறப்பட்ட நேர்காணல் இடம் பெற்றுள்ளது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: முன்னுரை
பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முன்னுரை
மகிழ்ச்சி...
Ramajayam- ரோஜா
- Posts : 176
Points : 354
Join date : 01/12/2011
Age : 59
Location : வேலூர்
Re: முன்னுரை
மகிழ்ச்சி நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum