தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
2 posters
Page 1 of 1
சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
சுட்டிப் பூங்கா
நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் செல் 8903926173
வெளியீடு மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் ரோடு ,சென்னை .18 விலை ரூபாய் 30
செல் 9841436213.
விமர்சனம் கவிஞர் இரா .இரவி
குழந்தை இலக்கியமாக குழந்தைகளுக்கான ஹைக்கூ நூலாக மலர்ந்துள்ளது
.பெரியவர்களும் படித்து மகிழலாம் .மழலைகள் பற்றிய மலரும் நினைவுகளை
மலர்விப்பதோடு மகிழ்ச்சியும் தருகின்றன. ஹைக்கூ கவிதைகள் அளவில் மூன்று
வரிகள்தான் .ஆனால் கருத்து ஆழத்தில் அளவிட முடியாதது. ஹைக்கூ கவிதைகளின்
உணர்வுகள், தாக்கங்கள் பெரிது .நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் அவர்களின் முதல் நூல் இது .மின்மினி இதழ் ஆசிரியர் ,கவிஞர் கன்னிக் கோவில் இராஜா அவர்களின்
அணிந்துரை அழகுரை .பதிப்பாளர் பொதிகை மின்னல் இதழ் ஆசிரியர் கவிஞர்
வசிகரன் இவர்கள் இருவரும் தந்த ஊக்கத்தால்தான்
இந்த நூல் வந்தது என்று நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் .முதல் ஹைக்கூ
கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .
குழந்தைக்கு முத்தம்
குழந்தையின் முத்தம்
பின்னதே அடர்த்தியானது !
இந்த ஹைக்கூ படித்தவுடன் படித்த வாசகர்களுக்கு குழந்தைக்கு தந்த முத்தமும் ,குழந்தை தந்த முத்தமும் நினைவிற்கு வந்து, ஒப்பீடு நடத்தி கவிஞர் கூற்று உண்மை என்ற முடிவிற்கு வந்து விடுவார்கள் .இதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி .
கை நோகிறது
இறக்கினால்
மனம் நோகிறது !
உலகின் ஒப்பற்ற உறவான அம்மாவின் மன நிலையை படம் பிடித்துக் காட்டும் ஹைக்கூ .
குழந்தை எழுதியது
கியூட்டான ஹைக்கூ
அம்மா !
கியூட்டான என்ற ஆங்கிலச் சொல்லை தவிர்த்து அழகான என்ற அழகு தமிழ்ச்
சொல்லை பயன் படுத்தி இருக்கலாம் .அடுத்த பதிப்பில் ஆங்கிலச் சொல்
தவிர்த்திடுங்கள் .தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் செய்யும் தமிழ்க்
கொலையை , தரமான படைப்பாளிகள் செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள் .
திங்கட்கிழமை பூத்தாலே
வாடிவிடுகின்றன
பொம்மைகள் !
நல்ல ஹைக்கூ இது .குழந்தைகள் சனி ஞாயிறு பொம்மைகளோடு விளையாடும் .திங்கட்கிழமை வந்து விட்டால் பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள் .பொம்மைகளைப் பிரிகின்றோம் என்று குழந்தைகள் உள்ளம் நோகும் .கவிதைக்கு கற்பனை அழகு ! பொம்மைகள் வாடுவதாக எழுதியது படைப்பாளியின் திறமை .
தாய் உள்ளத்தை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .தாயின் உச்சரிப்பை உற்று நோக்கி ஹைக்கூ வடித்துள்ளார் .
என்னமோ பேசுகிறது
என்னமாய் பேசுகிறது
என்கிறாள் தாய் !
குழந்தைகளின் குறும்புகள் ரசித்து மகிழலாம் .ஆர்வத்தோடு கவனிக்க வேண்டியது முக்கியம் .
குறும்புகளே
அழகாய் இருக்கிறது
அரும்புகளிடம் !
எள்ளல் சுவையுடன் ஹைக்கூ வடித்துள்ளார் .படித்ததும் சிரிப்பு வந்து விடும் .
தேர்வில் முட்டை
குழந்தை சொன்னது அப்பாவிடம்
ஆசிரியைக்கு ஒன்னும் தெரியல்ல !
இன்று தனிக் குடும்ப வாழ்கையே எங்கும் பெருகி விட்டது .வீட்டில் ஆலோசனை
வழங்கிட, குழந்தைகளுக்கு கதை சொல்லிட தாத்தா ,பாட்டி இருப்பதில்லை .
அதனை உணர்த்திடும் ஹைக்கூ .
உறங்கிட
குழந்தை தயார்
கதை சொல்ல யார் !
இந்து பள்ளிகளே சிறைக் கூடங்களாக மாறி விட்டன .பிடிக்காத
மொழியில் பாடங்களை கட்டாயப் படுத்தி படிக்க வைக்கும் அவலம் .கவிக்கோ
அப்துல் ரகுமான் சொன்னது போல புத்தகங்கள் குழந்தைகளை கிழித்து விடுகின்றன
.அதனால்தான் குழந்தைகள் விடுமுறை நாளை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர் .
கோடையும் குளிர்ந்தது
குழந்தைகளுக்கு
கோடை விடுமுறை ! நிகரில்லா உறவான நிகரில்லா உறவான அன்னையின் மேன்மையை அழகாக உணர்த்தும் ஹைக்கூ .
உயிரை
பணயம் வைத்து
உயிர் தந்தவள் தாய் !
நம் நாட்டில் கூலி வேலை பார்த்தாவது தன் குழந்தையைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் உள்ளனர். அவர்களின் ஒப்பற்ற தியாகத்தை நினைவூட்டும் ஹைக்கூ இதோ !
பிள்ளை புத்தகம் சுமக்க
செங்கல் சுமக்கிறாள்
தாய் !
தமிழ்நாட்டில் ஆங்கிலப் பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேசினால் அபராதம் கேட்கும் அவலம் தமிழகத்தில் உள்ளது .
மழலைகள் விரும்புவதில்லை ஆங்கில மொழியை ,ஆனால் பெற்றோர்கள் திட்டமிட்டு
பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சு கலக்கின்றனர் .அம்மா அப்பா என்ற அழகு மிக்க
தமிழ்ச் சொற்கள் இருக்க மம்மி டாடி என்று அழைக்க வற்புறுத்துகின்றனர்
.ஆங்கிலேயர் யாராவது தங்கள் குழந்தைகளை அவர்கள் தாய் மொழி தவிர்த்து பிற
மொழியில் அழைக்க சொல்வார்களா ? சிந்திக்க வேண்டும் .அதனை உணர்த்தும் ஹைக்கூ.
ஆங்கிலப் பள்ளி வாசலில்
அம்மா என்றது
விழுந்த குழந்தை !
வாழ்வியல் தத்துவம் உணர்த்தும் ஹைக்கூ .
குழந்தை இருந்தால் மகிழ்ச்சி
குழந்தையாய் இருந்தால்
என்றுமே மகிழ்ச்சி !
நகரத்து குழந்தைகளுக்கு நெல் விளையும் நிலம் பற்றி எதுவுமே தெரியாது வளர்க்கின்றனர்
தெரிகின்றது கணினி
தெரியவில்லை கழனி
தற்கால குழந்தைகள் !
நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .தொய்வின்றி எழுதுங்கள் .
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum