தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலைby அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
வைரமுத்துவின் கருவாச்சி காவியம் கதையும் கதைப்பின்னலும்
3 posters
Page 1 of 1
வைரமுத்துவின் கருவாச்சி காவியம் கதையும் கதைப்பின்னலும்
வைரமுத்துவின் கருவாச்சி காவியம் கதையும் கதைப்பின்னலும்
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் ஒரு பகுதி சொக்கத்தேவன்பட்டி. கட்டையன் - கருவாச்சி இருவருக்கும் திருமணமாகி பதினொரு நாளே ஆகியிருக்க, கட்டையனின் தந்தை வற்புறுத்தலால் பஞ்சாயத்துக் கூடுகிறது. பஞ்சாயத்தில் கட்டையன், கருவாச்சிக்கும் தனக்குமான திருமண உறவை அறுத்துவிடச் சொல்லுகிறான். பஞ்சாயத்தில் கருவாச்சியின் தாய் பெரியமூக்கி பிரித்துவிட்டுவிட வேண்டாம் சேர்ந்தே இருக்கட்டும் என்று வேண்டுகிறாள். பஞ்சாயத்து பதினைந்து நாள் பொறுத்துக் கூடுமென்று கலைகிறது.
பிறவியிலேயே தப்பான பிறவி என்று கட்டையனை ஊரார் ஏசுவார்கள். அந்த அளவிற்குப் பலவகையான இழி செயல்களைச் செய்யும் அளவிற்குச் செல்வாக்குப் படைத்தவன். இவனின் தவறான வளர்ப்பு முறைக்குக் காரணம் அவன் தந்தை சடையத்தேவர்.
சடையத்தேவர் பெரிய மூக்கியின் மகளை சம்பந்தம் பேசப்போகிறார். பெரியமூக்கியாள் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தவிக்கிறாள். நாற்பது வருடப் பகை மறந்து தற்போது திடீரென வந்து திருமணப் பேச்சு எடுப்பது... என்று சந்தேகம் அடைகிறாள். கடவுள் விட்ட வழியென்று பூப்போட்டுப் பார்க்கிறாள். தான் நினைத்தப் பூவே கருவாச்சி எடுத்துக் கொடுக்க திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள்.
திருமணம் சீர் சனத்துடன் நடந்து முடிகிறது. கட்டையன் கருவாச்சியை பலவகைகளில் கொடுமைப் படுத்துகிறான். இன்பமும் அனுபவித்துக் கொள்கிறான். பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் இவளால் அதனை ஜீரணிக்க முடியாமல் பித்துப் பிடித்தவளாகிறாள்-பேய் பிடித்து விட்டதென்று கட்டையன் பெரியமூக்கி வீட்டிற்குத் துரத்தி விடுகிறான்.
பெரிய மூக்கி, தன் மகளின் வாழ்வு இவ்வாறு ஆகிவிட்டதே என்று கவலைப்படுகிறாள்; ஒப்பாரி வைத்து அழுகிறாள். ஊர்கோடங்கியை அழைத்துப் பேயை விரட்டுகிறாள். அவ்வாறு பேய் விரட்டலின் போதுதான் கருவாச்சியைக் கொடுமை செய்ததற்கான காரணம் தெரிய வருகிறது.
நாற்பது வருடத்திற்கு முன்பு பெரிய மூக்கியின் அண்ணன் மகன் செயில்ராசு, பெரிய மூக்கியின் திருமணத்தின் போது சொக்கத்தேவன்பட்டி வருகிறான். வந்தவன் பல தவறானச் செயல் செய்கிறான். மாறுக் கண்ணத் தேவரின் ஒரேமகள், குலத்திற்கே ஒரே ஒரு பெண் வாரிசு சொர்ணக்கிளி. இவளை வஞ்சகமாகக் கற்பழித்துக் கொன்றும் விடுகிறான். தன்னைக் கொல்லத் தேடுவதைத் தெரிந்ததும் தானும் தற்கொலை செய்து கொள்கிறான் செயில்ராசு. இந்நிகழ்வே கட்டையன் கருவாச்சியின் கொடுமைகளுக்கும் திருமண உறவு முறிவிற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
பதினைந்துநாள் பொறுத்துப் பஞ்சாயத்துக் கூடுகிறது. கட்டையன் பிடிவாதமாகப் பிரித்துவிட்டு விட வேண்டும். தான் சேர்ந்து வாழ முடியாது என்று உறுதிப்பட கூறுகிறான். சடையத்தேவரும் கொள்கையில் உறுதியாக நிற்பதால் பஞ்சாயத்து பிரித்துவிட முடிவு செய்கிறது. திருமணத்தின்போது சீர்செய்த பொருட்களைத் திரும்ப இருவீட்டாரையும் ஒப்படைக்கச் சொல்கிறார்கள்; ஒப்படைத்தும் இருவருக்குமான உறவு முறிவைப் பஞ்சாயத்து அறிவித்துப் பிரித்து விடுகின்றது. கருவாச்சி கழுத்தில் உள்ள தாலியைக் கொடுக்கச் சொல்லி கட்டையன் கேட்க, கருவாச்சி என் உயிர் உள்ள வரை தாலியைக் கழட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறி பஞ்சாயத்தில் இருந்து வெளியேறுகிறாள்.
இறந்த வீட்டிற்கும் பஞ்சாயத்தால் பிரித்துவிட்ட வீட்டிற்கும் செய்யப்படுகின்ற சடங்குகள் ஒன்றாகத்தான் இருக்கும். ஊரார் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து தினம் ஒரு வீட்டார் உணவு சமைத்துக் கொண்டு வந்து கொடுத்து விட்டு ஆறுதல் சொல்லிவிட்டும் போகிறார்கள்.
தனக்கும் கருவாச்சிக்குமான உறவை அறுத்துவிட்டதுபோல, அவளுக்கும் ஊராருக்குமான உறவை அறுத்துவிட பல வகையான சூழ்ச்சிகள் செய்கிறான். நிலத்தில் வேலை செய்யப் போகக் கூடாது. அவள் வசிக்கும் தெருவிலும், பக்கத்துத் தெருவிலும் யாரும் எதையும் முறை கடனாககொடுக்கக் கூடாது; பேசக் கூடாது என்று ஊராருக்குக் கட்டளை இடுகிறான். கட்டளையை நிறைவேற்ற ஒலக்கையன், சலம்பல்பாண்டி போன்றோரை உடன் சேர்த்துக் கொள்கிறான்.
பெரியமூக்கியின் நிலத்தில் யாரும் உழுவதற்கு வர மறுக்கிறார்கள். பெரியமூக்கி தன் மகளையே (கருவாச்சியை) ஏர் மாடாக்கி நிலத்தை உழுகிறாள், தானியங்களையும் விதைக்கிறாள். கட்டையன் கோபம் கொள்கிறான். பெரிய மூக்கியால் வளர்க்கப்படும் கொண்ணவாயனுக்குக் கொடுமைகள் செய்கிறான்.
கட்டையன் மறைமுகமாக பெரியமூக்கி குடும்பத்திற்குத் தொல்லைகள் கொடுப்பதைப் பஞ்சாயத்தார் தட்டிக் கேட்கிறார்கள். அவர்களிடமும் வம்பாகவே பேசுகிறான். கட்டையன் நிலத்தில் களை எடுப்பதைத் தடுக்கிறான். கருவாச்சி தான் ஒருத்தியாகவே களைகளை எடுத்து வீடு திரும்புவதைக் கண்டு பெரியமூக்கி தன்மகளை வாயார வாழ்த்துகிறாள்.
கருவாச்சியை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வைக்க பெரியமூக்கி உறவினரை வரச் சொல்கிறாள். கருவாச்சி இரண்டாவது மனத்திற்கு மறுக்கிறாள்; தான் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறுகிறாள்.
பெரியமூக்கி தன் மகளின் கர்ப்பத்தைக் கலைக்க உதவுமாறு மருத்துவச்சி ரங்கம்மாவின் துணையை நாடுகிறாள். ரங்கம்மா கருவைக் கலைப்பது தவறென்று கூறுகிறாள். பெரியமூக்கியின் வற்புறுத்தலால் பாவத்தால் உண்டான உயிரை அழிப்பதால் தவறில்லை என்ற முடிவிற்கு வந்துவிடுகிறாள். மூன்று, நான்கு முறை கர்ப்பத்தைக் கலைக்க முயற்சித்தாலும் தோல்வியையே அடைகிறாள் ரங்கம்மா. தன் கர்ப்பத்தைத் தான் கலைக்க முயற்சிக்கிறார்கள் என்பதைத் தாமதமாக உணரும் கருவாச்சி ‘உசுரே போனாலும் அழிக்கமாட்டேன் என் வகுறு... என் கரு... நானே சொமக்கிறேன்.... நானே பெத்துக்கிறேன். இதுல கடவுளே குறுக்க வந்தாலும் கருவாச்சி மாறமாட்டா’ என்கிறாள்.
கட்டையனுக்கு இரண்டாம் திருமண ஏற்பாட்டை சடையத்தேவன் செய்கிறார். பெண்ணைக் கொடுக்கும் வீட்டார், கட்டையன் கருவாச்சிக்குக் கட்டிய தாலி இன்னும் அவள் கழுத்தில் இருப்பதை அறிகிறார்கள். முதலில் கருவாச்சி தாலியை வாங்கிக் கொண்டுவா. உனக்குப் பெண் கொடுக்கிறோம் என்று கூறிவிட்டுச் சென்று விடுகிறார்கள். (முதல் மனைவியின் கழுத்தில் கட்டிய தாலி இருந்தால் இரண்டாவது திருமணத்திற்கு இச்சமூகத்தில் பெண் வீட்டார் பெண் கொடுக்க மறுத்தார்கள் - தவிர்த்தார்கள்.)
கருவாச்சி கர்ப்பமாக இருப்பதை, கட்டையன் அறிகிறான். தனக்குப் பிறந்த குழந்தைதான் என ஊருக்குத் தெரிவிப்பாள்; தனக்கு இரண்டாம் திருமணம் நடைபெற அவள் கழுத்தில் உள்ளதாலி தடையாக இருப்பதாகவும் நினைக்கிறான். தாலியை அறுத்துக் கொண்டு வர ஆட்களை ஏற்பாடு செய்கிறான்.
கருவாச்சிக்கு பவளம் பேன் பார்த்துக் கொண்டு இருக்கிறாள். நீண்ட நேரம் செல்ல கருவாச்சி முற்றத்திலேயே தூங்கி விடுகிறாள். கட்டையனால் ஏவப்பட்டவன் கருவாச்சி கழுத்தில் உள்ள தாலியை அறுத்துக் கொண்டு ஓடுகிறான். திடுக்கிட்ட கருவாச்சி சப்தம் போட்டு, ஊரைக்கூட்டி, திருடனை ஓடிப்போய் பிடித்து தாலியை மீட்கிறாள். பெரியமூக்கி தன் மகளுக்கு நேர்ந்த கதியைக்கண்டு ஒப்பாரி வைக்கிறாள்.
வறுமையின் காரணமாகவும், ஆட்கள் யாரும் கருவாச்சி, பெரிய மூக்கியைக் கூலி வேலைகளுக்குக் கூப்பிடாததாலும் மனம் வருந்துகின்றனர். தன்தாய்க்குத் தெரியாமல் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள கருவாச்சி, இறந்தவரின் வீட்டிற்கு கூலிக்கு மாரடிக்கப் போகிறாள். இரவு திரும்பும் போது மழை கொட்டுகிறது. வீட்டிற்குப் போய் சேரமுடியாதவளாய் ஒரு கொல்லைப்புறம் ஒதுங்குகிறாள்.
காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டு இருக்கும் இரவு வேளையில் பெரியமூக்கி வெளியே வந்து மகளைத் தேடுகிறாள். அச்சமயம், பலத்தக் காற்றின் காரணமாக வீட்டின் கூரைமேல் தண்ணீர் ஒழுகாமல் இருக்க வைக்கப் பட்டிருந்த தகரம் ஒன்று காற்றோடு கற்றாகப் பறந்து வந்து பெரியமூக்கியின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுகிறது.
பொழுது விடிந்தவுடன் வீடு திரும்பும் கருவாச்சி, தாய் பெரிய மூக்கியைத் தேடும்போது, தகரம் கழுத்தை அறுத்து இறந்துகிடப்பதை அறிந்து ஒப்பாரி வைக்கிறாள். ஊர் மக்கள் கூடிவிடுகிறார்கள். பஞ்சாயத்தே பிணத்தை எடுக்க தீர்மானம் செய்கிறது.
பெரிய மூக்கியின் பிணத்தை எரிக்க முற்படும்போது, கட்டையனும், சடையத்தேவரும் கொள்ளி வைப்பதில் பிரச்சினை செய்கிறார்கள். கொண்ணவாயன் மூலம் இப்பிரச்சினையைக் கேள்விப்படும் கருவாச்சி சுடுகாடு சென்று, நானே என் தாய்க்கு கொள்ளி வைக்கிறேன் என்று கூறி இறுதி கடமையைச் செய்து முடிக்கிறாள். கட்டையன், பெரிய மூக்கியின் சொத்தை அபகரிக்கப்போட்ட சதித்திட்டத்தை கருவாச்சி முறியடிக்கிறாள்.
கருவாச்சியின் அப்பா, முன்னர் செய்த உதவிக்காக, சுப்பஞ்செட்டியார், கருவாச்சியிடம் தன் வீட்டில் வந்து தங்கிக் கொள் உன்னை என் மூன்றாம் மகளாகவே நினைத்துக் கொள்கிறேன் என்கிறார். கருவாச்சியோ மறுத்து விடுகிறாள். தாய், தந்தையை இழந்து நிறைமாத கர்ப்பிணியாக உள்ள கருவாச்சி பல துன்பங்களை அனுபவிக்கிறாள். மருத்துவச்சி ரங்கம்மா அவ்வப்போது சற்று உதவிகள் செய்கிறாள். மேலும், பிள்ளை பெற்றுக் கொள்ளும் முறைகளையும் பத்தியத்தையும் கற்றுக் கொடுக்கிறாள்.
குழந்தை இன்றோ, நாளையோ பிறக்கும் என்று ரங்கம்மா சொன்னதைக் காதில் வாங்காதவளாய் விறகு உடைக்கக் காட்டிற்குச் செல்கிறாள். விறகுடன் திரும்பும் போது வலி ஏற்பட்டுவிடுகிறது. காட்டுக் கொள்ளையில் இருக்கும் ஒரு கொட்டகைக்குள் ஒதுங்குகிறாள். யாரும் இல்லாத அந்த இடத்தில் தானே தனக்குப் பிரசவம் பார்த்துக் கொள்கிறாள். ஆண் குழந்தையை உயிரோடு பெற்றேடுத்து மகிழ்கிறாள். ஒத்தையில் பிள்ளைப் பெற்றவளை ஊரார் வாயார வாழ்த்துகின்றனர்.
பிறந்த குழந்தையைக் கொல்ல கட்டையன் ஆட்களை ஏவுகிறான். குழந்தை பிறந்ததை அறிந்த உறவினர்கள் தினமும் வந்து போவதாலும் ஊரார் குழந்தையை அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போவதாலும் மக்கள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து கொண்டு இருப்பதால் குழந்தை உயிரோடு இருக்கிறான். ரங்கம்மா குழந்தை பிறந்தவுடன் தாய்க்குச் செய்ய வேண்டிய சில சடங்கு சம்பரதாயங்களைச் செய்து முடிக்கிறாள்.
கட்டையன், சடையத்தேவரிடம் குழந்தையைக் காட்ட சுப்பஞ்செட்டியார் எடுத்துச் செல்கிறார். ‘உன் பேரனுக்கு ஒரு பேர் வை’ என்கிறார். சடையத்தேவரோ, யாருக்கோப் பிறந்த பிள்ளைக்கு எல்லாம் நான் பேர் வைப்பதில்லை என்று கூறி குழந்தையின் முகத்தையும் கூட பார்க்க மறுத்துவிடுகிறார். குழந்தை காணாததைக் கண்டு கருவாச்சி பயந்தும், தேடியும் கொண்டிருக்க சுப்பஞ்செட்டியார் கருவாச்சியிடம் கொடுத்துவிட்டு நடந்த விஷயங்களைக் கூறுகிறார். தன் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை (பெரிய மூக்கி கனகத்திற்கு கொடுத்தது) குழந்தையின் கழுத்தில் மாட்டுகிறார்.
சுப்பஞ்செட்டியாரின் மூத்த மகள் கனகம் சுப்பஞ்செட்டியாரைத் தேடி கருவாச்சி வீடு வருகிறாள். கனகம், என் புருஷன் முத்துக்காமு வைரமோதிரம் போடச் சொல்லி என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டான் என்று கூறுகிறாள். கருவாச்சி, அவளுக்கு அறிவுரை கூ றுகிறாள். சுப்பஞ்செட்டியார் திரும்பவும் வளையல் வியாபாரம் செய்யப் புறப்படுகிறார்.
முத்துக்காமு கனகத்தைத்தேடி சொக்கத்தேவன் பட்டி வருகிறான். சுப்பஞ்செட்டியாரிடம் ‘திருமணத்தின்போது போடுவதாகச் சொன்ன வைரமோதிரம் இன்னும் போடவில்லை’ என கேள்வி கேட்கிறான். மேலும், ‘மூத்தவளுக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்ல. அதனால இளையவளையும் கல்யாணம் செஞ்சி அழைச்சிட்டுப் போயிடுறேன், வைரமோதிரம் மட்டும் போட்டுறுங்க’ என்கிறான். கருவாச்சி தன் குழந்தை கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கொடுத்து, வைரமோதிரம் செய்து கொடு அவளாவது புருஷனோடு சேர்ந்து வாழட்டும் என்கிறாள்.
தங்கச் சங்கலியைக் கொண்டு போய் ஆசாரியிடம் வைர மோதிரம் செய்யச் சொல்லுகிறார். பாதிவேலை முடித்த ஆசாரி, மீதி வேலையைச் செய்ய மற்றொரு இளம் ஆசாரியை அழைக்கிறார். இளம் ஆசாரி சரியாகச் செய்துகொடுக்காமல் வைரமோத்திரத்தை கொடுத்து அனுப்புகிறான்.
சுப்பஞ்செட்டியார் இரண்டாம் தாரமாக தன் இளைய மகள் பவளத்தையும் திருமணம் செய்து கொடுத்து வைரமோதிரத்தையும் கொடுத்து வழியனுப்புகிறார். கருவாச்சி ‘தந்தை இல்லைன்னு ஆனதுக்கு அப்புறமும் என்னத்தேடி வாங்கடி நான் ஒருத்தி இருக்கேன்’ என்று கூறி அனுப்பி வைக்கிறாள்.
வீட்டிற்குச் சென்ற முத்துக்காமு ‘கோழிக்கறி சாப்பிட்டு இரண்டு, மூணு நாளாச்சி கோழி அடிச்சி குழம்பு வை’ன்னு கட்டளை இடுகிறான். கனகமும் பவளமும் சமைத்துப் பரிமாறுகிறார்கள். முத்துக்காமு நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறான். அப்போது அவன் வலக் கையில் அணிந்திருந்த வைர மோதிரத்தில் இருந்த கல் சோற்றில் விழுந்து விடுகிறது. சோற்றோடு வைரக் கல்லையும் சேர்த்து சாப்பிடுகிறான். வைரக்கல் என்பதை அறியாதவன் கல் தான் என நினைத்து கல்லைத் துப்பினால் கறி கீழே விழுந்துவிடுமென்று எண்ணி வைரக்கல்லையும் சேர்த்து விழுங்கி விடுகிறான். இரவு படுக்கைக்கு கனகம், பவளத்தை தயார் செய்து படுக்கை அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவள் முற்றத்தில் படுக்கிறாள்.
பவளம் காலையில் கூச்சலிட்டபோது தான் தெரிந்தது, வயிற்றினுள் சென்ற வைரக்கல் அவன் குடலை அறுத்து கொன்று விட்ட செய்தி. இருவரும் ஒரே நாளில் விதவையாகி பிறந்த வீட்டிற்கே வருகிறார்கள். இதை அறிந்த சுப்பஞ்செட்டியார். தன் பிள்ளைகளின் வாழ்வு இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தவர்; துடித்தார். துடித்தவர் நெஞ்சு வலியால் மரணமடைந்து போகிறார். எல்லாரையும் இழந்தவர்களுக்கு கருவாச்சி அந்த மோதிரத்தை விற்று இருவருக்கும் பெட்டிக்கடை வைத்துக் கொடுத்து வாழ வழிவகை செய்கிறாள்.
கருவாச்சி பூலித்தேவன் என்று பெயரிட்டு ஒரு ஆட்டினை வளர்க்கிறாள். சாமிக்கு நேர்த்திக் கடனுக்காக அதை வளர்க்கிறாள். ஆடு வளர்ந்ததும் தன் பிள்ளைபோல் பாவிக்கும் அந்த ஆட்டினை நேர்த்திக் கடன் செய்ய முடியாத மனநிலைக்கு ஆளாகிறாள். கடவுளிடம் என்னை மன்னித்திடு ஆட்டினைக் கொல்ல மனமில்லை. இறந்தவுடன் உன் சன்னிதியில் புதைத்து விடுகிறேன் என திரும்பவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறாள்.
பூலித்தேவனைக் (ஆட்டை) கண்டு ஊரே பயப்படுகிறது அந்த அளவிற்கு அதன் உடல் அமைப்பும், தோற்றமும், சக்தியும் கொண்டிருந்தது. இதைப் பொறுக்காத சிலர் கட்டையனிடம் போய் கோள் சொல்லுகிறார்கள். கட்டையன் தன் ஆட்களுடன் சென்று புலித்தேவனுக்கு ‘ஆண்மையிழப்பு’ செயலைச் செய்து விடுகிறான். கருவாச்சி வருந்துகிறாள். ஒரு நாள் கட்டையன் வயல் வரப்பில் நடநது சென்று கொண்டிருக்க, வயல் வரப்பில் மேய்ந்து கொண்டிருந்த புலித்தேவன், அவன் தன்னை கடக்கும் போது அவனை முட்டித் தள்ளி விடுகிறது; அவன் கீழே விழுந்து விடுகிறான்.
புலித்தேவன் மேல் கோபம் கொண்ட கட்டையன் தன் அடியாட்களோடு சென்று அந்த ஆட்டைப் பிடித்து சாகடித்து பாறைக் கறி சமைத்து விடுகிறான். அந்தத் தோலை கருவாச்சி வீட்டு வாசலில் போட்டுவிட்டு போய்விடுகிறான். அந்தத் தோலை வைத்து கருவாச்சி அடையாளம் கண்டு கொண்டு சென்று புதைக்கிறாள்.
பஞ்சாயத்தார், கட்டையன் செய்த தவறுக்கு தண்டனையாக அபராதம் விதித்து, அபராதத்தை கருவாச்சியிடம் சேர்க்கிறார்கள். கருவாச்சி தன் குழந்தை, ‘அழகு சிங்க’த்தை செல்வச் செழிப்போடு வளர்க்கிறான்; ஒரே மகன் என்பதால் சிறுசிறு தவறுகளைத் தட்டிக் கேட்காமலே விட்டு விடுகிறாள்.
அழகு சிங்கத்திற்கு ஐந்து வயது நிரம்பியதும் பள்ளிக்கூடம் அழைத்துச் சென்று சேர்க்கிறாள். அழகு சிங்கம் சரியாகப் படிக்க முடியாமல் விருப்பமில்லாமல் பள்ளிக் கூடம் சென்று வருகிறான். சரியாகப் படிக்காததால் ஆசிரியர் அழகு சிங்கத்தை தண்டிக்கிறார். ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடம் எனக் படித்துத் தன் பதினான்காவது வயதில் ஐந்தாம் வகுப்பை முடிக்கிறான். ஆசிரியரிடம் கொண்ட கோபத்தால் ஆசிரியர் விடுமுறையில் தன் வீட்டிற்குச் செல்ல இருக்கும்போது அன்றைப் பயணத்தை தடுத்து நிறுத்தி விட்டு பழித்தீர்த்துக் கொண்டதாகப் பெருமைபட்டுக் கொள்கிறான்.
அழகு சிங்கம் தன்னையொத்த நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டு வருபவன். ஒரு நாள் தெருவில் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும்போது, அழகுசிங்கத்தை ‘அப்பன் பேர் தெரியாதவன் என்று ஒருவன் திட்டி விடுகிறான். அழகு சிங்கம் கோபத்தோடு வீடு போகிறான். தாய் கருவாச்சியிடம் நீ என்ன யாருக்குப் பெத்த?’ என்று கேள்வி கேட்கிறான். மகன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தயங்கி, கட்டையன் தான் உன் தகப்பன் என்று பதில் சொல்கிறாள்.
ஊராரின் ஒரு காதுகுத்தல் நிகழ்ச்சியின்போது தன் தாத்தா சடையத்தேவரைவிட அதிகம் மொய் எழுதுகிறான். சடையத்தேவர் தம்மைவிட இந்த ஊரில் அதிகமாக மொய் எழுதுபவன் யாரெனப் பார்க்கிறார், விசாரிக்கிறார், தன் மகன் பிள்ளை என்பதை ஒப்புக்கொள்ளாத அவர் அவனை கீழ்த்தரமாகத் திட்டுகிறார். அழகு சிங்கம், தானும் எந்த அளவிற்கும் சளைத்தவன் அல்ல என்பதை ஊராரின் மத்தியில் மல்லு கட்டி நிற்கிறான். ஊரார் இருவரையும் பிரித்து விடுகிறார்கள்.
சடையத்தேவர் கட்டையனுக்கு இரண்டாம் தாரமாக ‘திம்சு’ என்பவளைத் திமணம் செய்து வைக்கிறார். திம்சு தான் அந்த ஊரில் முதல் முதல் மேல்சட்டை (லவுக்கை) போட்டப் பெண். பெரிசுகளும், சிறுசுகளும் அவளை ஒருவிதமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். ஊராரிடம் நல்லபேர் எடுக்கப் பல தந்திரங்களைச் செய்து ஊராரிடம் நல்ல பேர் சம்பாதித்துக் கொள்கிறாள்.
சடையத்தேவருக்கும், கட்டையனுக்கும் தேவையானதைத் தேவையானபோது கொடுத்து இருவரிடமும் நல்ல பெயர் சம்பாதித்துக் கொள்கிறாள். இருவருக்கும் அவளே தெய்வமாகிப் போனாள். அவள் சொற்படியே நடந்தும் கொண்டார்கள்.
எல்லாரையும் கையில் போட்டுக் கொள்ளத் தெரிந்த திம்சு அழகு சிங்கதையும் பாசத்தால் கவிழ்த்து விடுகிறாள். கை நிறையப் பணம் தினமும் நெல்லுச் சோறு கறி என்று சமைத்துக் கொடுத்து அடக்கி விட்டாள். அழகு சிங்கத்தைத் தவறாக வழி நடத்தி எல்லாத் தவறுகளையும் செய்ய கற்றும் கொடுக்கிறாள். கஞ்சா, மது, மாது போன்ற தவறான பழக்கத்திற்கு தூண்டிவிட்டு அவனை சீரழிக்கிறாள். இதைப் புரிந்து கொள்ளாதவன் அவளே தன் தாயாகம் எண்ணி பாவிக்கத் தொடங்கிவிடுகிறான்.
அழகு சிங்கத்தின் தவறான நடத்தைகளாலும், செயல்களாலும் கருவாச்சி மனம் வருந்துகிறாள். இதற்கு ஒரே ஒருமுடிவுதான் என்றெண்ணி அழகு சிங்கத்திற்குத் திருமண ஏற்பாட்டைச் செய்கிறாள். அழகுசிங்கம் மறுக்கிறான். கருவாச்சி பல நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்ல அப்போது மனம் இரங்கினவனாய் சரி என்று திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கிறான். புதுத்துணி கொடுத்து நாளை உன்னை மாப்பிளை பார்க்க வருகிறார்கள் என்று கூறிவிட்டுப் படுக்கைக்குச் செல்கிறாள்.
காலையில் எழுந்து பார்க்கும்போது அழகு சிங்கம் படுக்கையில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். அவனை அம்புலிப்புத்தூர் பக்கம் பார்த்ததாக ஒருவர் தகவல் சொல்கிறார். தன் மகனைத் தேடி அம்புலிப்புத்தூர் போகிறாள் (அம்புலிப்புத்தூர் - தாசிகள் வசிக்கும் இடம்) தன் மகனை அங்கிருந்து மீட்டுக் கொண்டு வருகிறாள்.
திம்சு சடையத்தேவரிடம் தந்திரமாகப் பல கதைகள் சொல்லியும் கட்டையனின் நிலைமையை எடுத்துச் சொல்லியும் சொத்துக்கள் அனைத்தையும் தன் பெயருக்கு மாற்றி எழுதச் சொல்கிறாள். சடையத்தேவரும் அவள் சொற்படியே நடந்து கொள்கிறார். சொத்து தன் கைக்கு வந்ததும் தந்தை - மகன் இவரின் உறவை முறிக்கவும் காய் நகர்த்தத் தொடங்கி விடுகிறாள்.
அழகு சிங்கத்தைத் தாசி வீட்டிற்கு ஏவிவிட்டவளான திம்சுவே அவள் உறவு முறைப் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதாக வாக்குக் கொடுக்கிறாள். அழகுசிங்கம் கருவாச்சியின் பேச்சைக் கேட்காமல், திம்சுவின் மாமன்மகளை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கியும் விடுகிறான்.
குப்பணம்பட்டியில் இருந்து வந்த ஒரு கிழவி திம்சுவை சொக்கத்தேவன் பட்டியலில் பார்த்து அதிர்ச்சி அடைந்தவளாய் பக்கத்துத் தெருவில் இருந்த கருவாச்சியிடம் தண்ணீர் வாங்கி குடிக்கிறாள். தண்ணீர் குடித்துவிட்டு பேயம்மாவைப் (திம்சு) பற்றி விசாரிக்கிறாள். குப்பணம்பட்டிக் கிழவியால் திம்சுவின் கடந்த கால வாழ்க்கை அனைத்தையும் தெரிந்து கொள்கிறாள்.
காட்டில் விறகு உடைக்கும்போது ஏதேச்சையாக இருவரும் சந்தித்துக் கொள்ள நேரிடுகிறது. எல்லாரையும் கவிழ்த்தது போல கருவாச்சியையும் கவிழ்க்க நீலி கண்ணீர் சிந்தி அழத் தொடங்குகிறாள். கருவாச்சியோ உன் ரகசியம் எல்லாம் எனக்குத் தெரியும். குப்பணம்பட்டிக் கிழவி சொன்ன ரகசியத்தைச் சொன்னாள்: ஆரியபட்டி சின்னவீரன் மேல் ஆசைப்பட்டு கர்ப்பம் அடைந்தது; கர்ப்பத்தை அழிக்கும்போது கர்ப்பப்பை வெந்து போனது; காசு சம்பாதிக்க மிராசுதாரிடம் வப்பாட்டியாக இருந்தது; சோழவந்தான் வயக்காட்டை விற்றுவிட்டு, எருக்கம்பால் ஊற்றி கொன்றது என்று ஒவ்வொன்றையும் விவரித்துக் கொண்டிருக்க ‘திம்சு’ சிரிக்கத் தொடங்குகிறாள்.
கருவாச்சி இதுமட்டும் தான் உனக்குத் தெரியும். உனக்குத் தெரியாததை ஒன்று சொல்கிறேன் என்று கூறி அழகு சிங்கத்தின் ரகசிய திருமணத்தை விவரிக்கிறாள். தன் மகன் வாழ்க்கையை இவ்வாறு செய்துவிட்டாயே என்று நினைத்து கருவாச்சி வருந்தினாலும் உன்னைப் பற்றிய ரகசியம் தெரிந்தவள் நான் மட்டும்தான் யாருக்கும் சொல்ல மாட்டேன் பிழைத்துப்போ என்று கூறிவிட்டு நகர்கிறாள்.
எல்லா ரகசியங்களையும் தெரிந்து கொண்ட கருவாச்சியைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறாள். சொத்தை அபகரிக்க, அழகுசிங்கத்தைப் பயன்படுத்தி கருவாச்சி வீட்டை விற்கச் செய்கிறாள். கருவாச்சி வீட்டை இழக்கிறாள். ஊராரும், கொண்ணவாயனும் சேர்ந்து ஓலைவீடு ஒன்றைக் கட்டித் தருகிறார்கள்.
சில ஆண்டுகளாகவே மழை இல்லாததால் ஊரே வறட்சியாகக் காட்சி அளிக்கிறது. திருமங்கலத்தில் அழகுசிங்கம் இருப்பதாகக் கேள்விப்படுகிறாள். தாய் வயிறு துடிக்கிறது அவனைப் பார்க்க, பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டு புறப்படுகிறாள். திருமங்கலம் அடைந்ததும் அழகு சிங்கம் வீட்டைக் கண்டு பிடித்து விசாரித்து வீட்டிற்குள் நுழையும்போது, திண்ணையில் ஓர் உருவம் சங்கிலி போட்டுக் கட்டி வைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று அழகுசிங்கத்தின் மனைவியையும், குழந்தைகளையும் பார்த்து பூரிப்பு அடைகிறாள். தான் கொண்டுவந்த துணிகள், தின்பண்டங்களை அவர்களிடம் கொடுக்கிறாள். ‘எங்கே? என் மகனக் காணோம்?’ என்று சிலமணி நேரம் கழித்து கேட்கிறாள். பதிலுக்கு அவள் சொல்கிறாள்: ‘ஏம்மா உன் பையனுக்குதான் உன்ன அடையாளம் தெரியாது? உனக்குமா தெரியாது? அதோ திண்ணயில கட்டி வெச்சியிருக்கமுல்ல தேவாங்க’ போய் பார்த்துவிட்டு கொஞ்சி விட்டுப் போ’ என்கிறாள்.
திண்ணைக்கு வந்தவள்; அவனைக் கட்டி அழுதுவிட்டு, உன்நிலமை இப்படி ஆகி விட்டதே, நீயா எனக்குப் பிறந்த மகன்? இல்லை நீ என் மகன் இல்லை இந்த கோலத்தில் உன்னை நான் இப்படி பார்க்கவா உயிரோடு இருக்கிறேன். ஒன்று நான் வருவதற்கு முன்பே நீ இறந்திருக்க வேண்டும். இல்லை என்றால் நான் இறந்திருக்க வேண்டும் என்று கூறி கதறி அழுதுவிட்டு வீடு திரும்புகிறாள்.
ஐந்து ஆறு வருடங்களாக ஊரை மழை இல்லாமல் வாட்டுகிறது. பலர் பஞ்சம் பிழைக்க ஊரை விட்டுச் சென்று விட்டார்கள். தண்ணீர் குடிக்கக் கூட இல்லாமல் அல்லல் படுகிறார்கள். கால் நடைகளை விற்றுத் தானியங்கள் வாங்கி சாப்பிடத் தொடங்கி, தானியங்களும் தீர்ந்து போய்விட, ஊரே பஞ்சத்தால் வாடுகிறது.
கருவாச்சியின் சொத்தை அபகரித்த திம்சு சடையத்தேவன், கட்டையனின் சொத்து தன் கைவந்ததும் சடையத்தேவரைக் கொலை செய்கிறாள். கட்டையன் இன்னும் மூன்று மாதத்தில் இறந்து விடுவான் என்று நினைத்துக் கொலை செய்யாமல் விட்டு விடுகிறாள். இரவோடு இரவாக எல்லா சொத்துக்களையும் எடுத்துக் கொண்டு ‘திம்சு’ ஊரை விட்டு ஓடிப்போய் விடுகிறாள். ஊரார் திம்சுவின் செயலைச் சாடினாலும், நல்ல பாடம் கற்பித்துவிட்டாள் என்று பேசிக் கொள்கிறார்கள்.
கொண்ணவாயன் எலிப்பொந்தில் இருக்கும் தானியங்களைச் சேகரிக்கச் செல்கிறான். எலிப்பொந்தைத் தோண்டிக் கொண்டு இருக்கும்போது, வலையில் கையை விட்டுத் தானியப் பருக்கையை எடுக்கும்போது கருநாகம் கடித்து இறக்கிறான். இறுதி மரியாதையைக் கொண்ணவாயனுக்குக் கருவாச்சி செய்து முடிக்கிறாள்.
கருவாச்சியின் அருமை பெருமைகளைக் கேள்விப்பட்டு சாமியார் ஒருவர் வருகிறார். பஞ்சத்திலும் கஞ்சி கொடுத்து வரவேற்கிறாள். சாமியாரின் சந்தேகங்களுக்குத் தெளிவாகப் பதில் சொல்கிறாள். எல்லாவற்றையும் அறிந்த ஞானியாய் கருவாச்சி திகழ்வதைக் கண்டு வணங்கி விட்டுப் போகிறார். சாமியார் போனதும் சலவைக்கரி: ‘உன்ன அப்பன் பாக்கனுமாம் (கட்டையன்) தனியாக இருட்டினதும் வரணுமாம்’ என்று சொல்லச் சொன்னதாகச் சொல்லி விட்டுப் போகிறாள். கருவாச்சியோ குழப்பமான பல கேள்விகள் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு போய்ப் பார்த்து விட்டு வருவது என்று முடிவெடுக்கிறாள்.
இருட்டியதும் கட்டையன் வீட்டிற்குச் செல்கிறாள். வீடு தாழ்ப்பாள் போட்டு விட்டு இருப்பதை அறிகிறாள். கதவைத் தட்டி நான் தான் மாமா கருவாச்சி வந்திருக்கிறேன் கதவைத் திற என்கிறாள். கதவைத் திறந்து விட்டதும் அவன் ஒரு மூலையில் சென்று பதுங்கிக் கொள்கிறான்.
கதவு திறந்ததை அறிந்து கொண்டு உள்ளே போகிறாள்; உள்ளே ஒரே இருட்டு; விளக்கு எங்கே மாமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் முன்பே, அவ்வீட்டை விட்டு வெளியேறி முப்பத்தேழு ஆண்டுகள் ஆயிருந்தாலும் பத்து நாள் அவ்வீட்டில் வாழ்ந்ததால் எங்கு மாடம் இருக்கும் என்பதை அறிந்திருந்தாள்.
விளக்கைப் பற்ற வைத்ததும், கட்டையன் விளக்கு வெளிச்சத்தில் உன் முகத்தை ஒரு முறை காட்டி விட்டு நீ போய்விடு என்கிறான். ஏன் என்கிறாள் உனக்கு செய்த துரோகத்திற்காக மன்னித்து ஒரே முறை உன் முகத்தைக் காட்டு என்கிறான். கருவாச்சி அவன் இருக்கும் பக்கம் விளக்கைத் திருப்ப தன் முகத்தை மறைத்து என்னை நீ பார்க்க வேண்டாம். உன்னால் தாங்க முடியாது என்கிறான். கருவாச்சியோ பிடிவாதமாக அவனைப் பார்க்கிறாள், அவனோ:
‘திமிராப் பொழச்ச ஊர்ல நான் இப்பிடிச் சீரழஞ்சி சாகப்படாது. போறேன்; கண்காணாப் பொணமாப் போயிர்றேன்’என்கிறான். அவளோ: ‘எந்திரி மாமா. என் குடிசைக்குப் போவலாம். திரேகம் நல்லாருந்தப்ப மனசு அழுகிக் கெடந்த. இப்ப திரேகம் அழுகிப்போன பெறகு மனசு நல்லாயிட்ட’ என்று கூறிக்கொண்டே ‘ரெண்டு கையும் கோர்த்து அவன அள்ளித் தூக்குனா; கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டான். மன்னித்தவளாய் அவன் கையைத் தன் தோள் மேல் போட்டு, தன் கையை அவன் இடுப்பு மேல் போட்டு தன் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.
அழைத்துச் சென்றதை ஊரார் பார்க்கவில்லை. வீடு கொண்டுவந்து சேர்த்தவள் படுக்க வைத்துவிட்டு, சுக்குத் தண்ணி வச்சிக் கொடுத்தாள்; தன் சீலையை ஓரங்கிழிச்சி ஊத்த ஓடம்பத் தொடச்சி விட்டாள்.சிறிது நேரத்துக்கெல்லாம் கட்டையன் அழுத கண்ணோடு உறங்கிப் போனான்.
பட பட பட வென மழைச் சத்தம் கேட்பது போலிருந்தது, வெளியே வந்து பார்த்தாள். சட சட சடவென மழை கொட்டத் தொடங்கியது. ஏழு வருசம் கழித்து மழையா? வியந்தவள், பிசு பிசு பிசுன்னு ஒட்டியிருந்த தன் கையை மழையில் கழுவினாள்.
வந்துருச்சே! வராத மழை வந்திருச்சே! தப்பியும் வரலாம்; தள்ளியும் வரலாம் ஆனா எப்பவும் மழை இல்லைன்னு போகாது என கருவாச்சி காவியம் முற்றுப் பெறுகிறது.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Sep 29, 2012 8:30 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வைரமுத்துவின் கருவாச்சி காவியம் கதையும் கதைப்பின்னலும்
ஆய்வுப் பார்வையில் இணைக்கலாம் என்று பதிந்தேன். ஆனால் பக்கங்கள் அதிகம் என்பதினாலோ என்னவோ ஒரே பதிவுக்குள் எல்லாவற்றையும் பதிய முடியவில்லை.
இனி கொஞ்சம் கொஞ்சமாக இணைக்கிறேன்.
இனி கொஞ்சம் கொஞ்சமாக இணைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வைரமுத்துவின் கருவாச்சி காவியம் கதையும் கதைப்பின்னலும்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வாம்மா கிராமத்துக் கருவாச்சி
» வைரமுத்துவின் ‘பாற்கடல்’
» வைரமுத்துவின் அழைப்பை புறக்கணித்த பாரதிராஜா!
» வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை
» வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 23 மொழிகளில் வெளியிட முடிவு
» வைரமுத்துவின் ‘பாற்கடல்’
» வைரமுத்துவின் அழைப்பை புறக்கணித்த பாரதிராஜா!
» வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை
» வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 23 மொழிகளில் வெளியிட முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum