தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் தெலுங்கு பழமொழிகள் ஒப்பாய்வு - மா. இரவி
2 posters
Page 1 of 1
தமிழ் தெலுங்கு பழமொழிகள் ஒப்பாய்வு - மா. இரவி
பழமொழி நானூறு (தமிழ்) தெலுகு சாமெதலு (தெலுங்கு) இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் உண்மைகள் – ஓர் ஒப்பாய்வு
(Reflection of Human life in proverbs of Pazhamozhi Naanooru (Tamil) and Telugu Samethalu (Telugu) – A comparative study)
முகவுரை
உயிரியல், உளவியல், மொழியியல் என்னும் துறைகள் மனிதனின் உடல், உள்ளம், உயிர் ஆகியவற்றின் பொதுத்தன்மைகளைக் கண்டு அறிவியல் அடிப்படையில் நிறுவின. இதனைத் தொடர்ந்து மொழி என்பது மானுடப் படைப்பாயின், மொழியினால் இயற்றப்படும் இலக்கியமும் மானுடப் படைப்பே. அதாவது மனிதன் மட்டுமே இலக்கியத்தைப் படைக்க இயலும். எனவே உடலாலும், உள்ளத்தாலும், மொழியாலும் அடிப்படையில் ஒற்றுமையுடைய மனிதன் படைக்கும் இலக்கியமும் அடிப்படைப் பண்புகளும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்னும் கருதுகோளை இலக்கிய ஆய்வாளர்கள் முன்னிறுத்தி உலக இலக்கியங்களை ஒப்பிட்டு அறிவியல் அடிப்படையில் ஆராயத் தொடங்கினர். இது அவ்விலக்கிய ஆய்வின் தொடக்கம் என்று கூறலாம்.
தமிழ் மொழியின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம் நாட்டுப்புற இலக்கியத்தின் ஒரு கூறான பழமொழியின் இலக்கணத்தை,
நுண்மையும் சுருக்கமும் ஒளியுமுடைமையும்
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதவிய முதுமொழி யென்ப. (தொல். பொருள், செய். நூ. எ. 479)
இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் நுண்மை விளங்கவும், சுருக்கம் விளங்கவும் ஒளியுடைமை விளங்கவும், மென்மை விளங்கவுமென்று இன்னோரன்ன விளங்கவும் தோன்றிக் கருதின பொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் குறித்தன முதுமொழி என்று விளக்கம் தருகின்றார்.
ஒப்பாய்வு என்றால் என்ன?
ஒன்றை அதனோடுதொடர்புடைய மற்றொன்றனோடு ஒப்பிட்டு அறிவதும் ஒப்பீடு எனப்படுகிறது. அதுபோல் இலக்கிய உலகில் ஓரினத் தொடர்புடைய இலக்கியங்களை மரபு, வடிவம், கருத்து, உத்தி ஆகிய கூறுகளின் அடிப்படையில் ஒத்து நோக்கி அவற்றின் தன்மைகளை எடுத்துரைப்பது ஒப்பியலாய்வு அல்லது ஒப்பாய்வு எனப்படுகிறது. – ச.வே. சுப்பிரமணியன்.
ஒப்பியலாய்வின் தேவை
ஒப்பியல் மாணவர்களுக்கு இலக்கியம் ஒரு சோதனைக்கூடம். சோதனைக் கூடத்தில் எப்படி பொருள்களைத் துல்லியமாக விதிகளின்படி நினைந்து ஆராய்ந்து அதன் பண்புகளை நிறுவுகின்றாரோ அதுபோல இலக்கியப் பண்புகளை அறிவியல் வழி ஆராய்ந்து வெளிக்கொணர வேண்டும். - எச். எச். ரிமேக்.
ஒப்பாய்வில் இலக்கியம்
ஒப்பியல் இலக்கியம் என்னும் தொடர் இலக்கியங்களை ஒன்றோடு ஒன்று ஒப்புநோக்கி ஆயும் ஆய்வுத்துறை என்று பொருள்தருவதாக உணர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. ஒரு மொழி இலக்கியங்களை ஒப்பீடு செய்வது ஒருமொழி ஒப்பீடு என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட பலமொழி இலக்கியங்களை ஒப்பாய்வது பன்மொழி ஒப்பீடு என்றும் உணரப்பட்டு வருகின்றது.
ஒப்பாய்வு - அறிஞர் கருத்துகள்
பல்வேறு இலக்கியங்களை இணைக்கும் உயிருள்ள உறவுநிலைகளைப் பற்றிய ஆய்வு ஒப்பாய்வு – தமிழண்ணல்.
உலகில் என்று மனிதன் எண்ணத் தொடங்கினானோ அன்றே ஒப்பிட்டுநோக்கும்முறையும் உடன் தோன்றியது எனலாம். ஒற்றுமைகளை ஒத்துக்காண்பதும், வேற்றுமைகளை பிரித்தறிவதும் அவன்தன் இயற்கையாயிற்று. –கதிர். மகாதேவன்.
ஒரு புலவன் தன்னுள் ஒப்பு, புலவர்தம்முள் ஒப்பு, ஓர் இலக்கியந்தன்னுள் ஒப்பு, இலக்கியங்கள் தம்முள் ஒப்பு, ஒரு மொழி தன்னுள் ஒப்பு, பலமொழி தம்முள் ஒப்பு, காலங்கள் தன்னுள் ஒப்பு என ஆய்வு பலவாக வந்திருக்கின்றன. – வ.சுப. மாணிக்கம்.
பழமொழி விளக்கம்
பொதுவழக்கில் உள்ள உண்மை, அறிவுரையிலான குறுஞ்சொல் – ஆக்ஸ்ஃபோர்டு கலைக்களஞ்சியம்.
காலத்தால் தனிச்சிறப்புப் பெற்றது, சாதாரண பொது அறிவால் முதிர்ந்த வாக்கியம் எதுகை மோனையால் சிறந்த பண்பட்ட குறுகிய வாக்கியம். நாடுகளைக் கடந்து உலகளாவியதாகப் பரவித் திகழ்ந்திடும் சிறப்புடையது. மக்கள் மனதில் நின்று நிலவி நிலைக்கும் கூற்று. புதிய காக்ஸ்டன் கலைக்களஞ்சியம்.
நீண்ட அனுபவங்களின் அடிப்படையில் அமைகிற குறுகிய வாக்கியமே பழமொழியாகும்.
நாட்டுப்புற மக்களின் பண்பாட்டைப் பிரதிபலித்துக்காட்டும் காலக்கண்ணாடி, வாழ்வியலைச் சித்திரித்துக்காட்டும் எழுத்தோவியம். கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஒலிச்சித்திரம்.
‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்ற பழமொழிக்கேற்ப வடிவில் சிறியதாய் இருப்பினும் கருத்தில், பயன்பாட்டில் பெரிதாய் விளங்குவதே பழமொழியாகும்.
ஒரு நாட்டில் பயன்படுத்தும் பழமொழிகள் அந்நாட்டின் வாழ்க்கை முறையையும், மற்ற நாட்டினைவிட அந்நாட்டின் ஒற்றுமை வேற்றுமையைப் படம் பிடித்துக்காட்டுகின்றன.
பழமொழி - அறிஞர் கருத்து
ஒரு நாட்டின் அறிவுத்திறனின் விவேகத்தையும், உயிர்ப்பையும் பழமொழிகளின் மூலம் கண்டுபிடிக்கலாம் - பிரான்சிஸ் பேகன்.
பழமொழி - தொன்மை
உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் பழமொழிகள் உள்ளன. சுமேரியன் சட்டத்திலும் உரைகளிலும், சூத்திரங்களிலும் பழமொழிகள் சொல்லப்பட்டுள்ளன. பழைய சீனாவில் நீதிபோதனைக்கும், இந்தியாவில் தத்துவ உரைகளுக்கும் வேதங்களிலும் பழமொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பைபிளில் பழைய ஏற்பாட்டில் பழமொழிகளின் நூல் (Book of Proverbs) நீதிமொழிகள் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது.
பழைய எகிப்தியருக்கும், சீரியர்களுக்கும், மொசபடோமியர்களுக்கும் அறிவு இலக்கியமாக பழமொழிகள் விளங்கியது. இந்த அறிவு இலக்கியம் இளைஞர்களுக்கு பொறுப்புகளை ஏற்படுத்துவதே நோக்கமாகும்.
பழமொழியினால் நன்மைகள்
பழமொழிகள் நமது சிந்தனையின் தூண்டுகோல்கள். வாழ்வின் ஊன்றுகோல்கள்.
சில பழமொழிகள் அச்சமூட்டி எச்சரிக்கின்றன.
புத்திமதிகள் கூறப்படுகின்றன.
சில பழமொழிகள் மக்களை நையாண்டி செய்து திருத்துகின்றன.
சிரிக்கவைத்து சிந்தனையூட்டுகின்றன.
வரலாற்றுக் கருத்துகளை அறிய துணைபுரிகின்றன.
பொருளாதாரத்தைப் பற்றி படம் பிடித்துக்காட்டுகின்றன.
சாதிகளைக் குறித்து அறியக் கருத்துகளை விளக்குகின்றன.
சில நாட்டின் பண்பாட்டையும் நாகரீகத்தையும் வெளிப்படுத்துகின்றன.
இவை சிறந்த மொழிச்செல்வமாகும். பண்பட்ட இலக்கியச் செல்வமாகும். பயன்மிக்க அறிவியல் செல்வமாகும்.
எழுதப்படாத சட்டங்களாகப் பயன்படுகின்றன.
மதச் சடங்குகளுக்கும் வழிபாடுகளுக்கும் பழமொழி பயன்படுவதுண்டு.
ஆய்வு மூலம் – தமிழ்
நூல் - பழமொழி நானூறு
ஆசிரியர்: முன்றுரை அரையனார்
காலம்: கி.பி. 5-ஆம் நூற்றாண்டு
ஆய்வு மூலம் – தெலுங்கு
நூல்: தெலுகுலோ சாமெதலு – ஜன ஜீவனம்
ஆசிரியர்: நரசிம்மா ரெட்டி
காலம்: 15-ஆம் நூற்றாண்டு காலம் முதல் பழமொழிகள்
பழமொழி நானூறு- தெலுகுலோ சாமெதலு ஒப்பாய்வு - நோக்கம்
இந்நூலின்கண் அறியப்படும் முப்பத்துநான்கு தலைப்புகளில் - அதாவது, கல்வி முதலாக அறம்செய்தல் ஈறாக இடம்பெற்றுள்ள நானூறு செய்யுட்களில் அறியப்படும் பழமொழிகளோடு, தெலுங்கு மொழி நூலான தெலுகுலோ சாமெதலு-வில் அறியப்படும் பழமொழிகளோடு ஒப்பாய்வு செய்து, இவ்விருமொழியின் ஒற்றுமைப்பண்புகளை அறிவதும், பழமொழி நானூறில் கூறப்பட்டுள்ள பழமொழிகளுக்கு ஒப்பான தெலுங்கு பழமொழிகளைத் தேர்வு செய்து தமிழ்த் தெலுங்கு மொழி இலக்கியங்களுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவரும் தொடர்புகளைக் கண்டறிவது மேலும் இவ்விலக்கியங்களின் வாயிலாக வெளிப்படும் வாழ்வியல் உண்மைகளைப் புலப்படுத்தும் பழமொழிகளை இனங் காண்பது ஆகியன இவ்வாய்வின் முக்கிய நோக்கங்களாகக் காணப்படுகிறது.
தமிழகத்தில் தெலுங்கு பழமொழிகள்
விஜயநகர ஆட்சிக்காலத்திலும் தமிழகத்தில் நாயக்க மன்னர்கள் ஆட்சிபுரிந்தபோதும் தமிழகத்தில் தெலுங்கர் குடியேறினர். அதனால் தெலுங்குமொழி தமிழகத்தில் பரவத் தொடங்கியது. அக்காலக்கட்டத்தில் தோன்றிய பழமொழிகள் சிலவருமாறு.
மரியாதை கெட்டால் மாயவாடு
டில்லிக்கு ராஜாவானாலும் தல்லிக்கு பிட்டா
காதுகாது என்றால் நாதிநாதி என்கிறான்
அவசரக்காரனுக்கு ஆக்குலோ பெட்டு
பேரு பெத்த பேரு தாகுடானிக்கு நீலு லேது
ஒத்தக்கருத்துடைய தமிழ் – தெலுங்கு பழமொழிகள்
• நூலப்போல சேலை தாயப்போல பிள்ளை - தமிழ்
• தல்லி சாலு பொல்லி கோடி - தெலுங்கு
• கழுதை அறியுமோ கற்பூர வாசனை – தமிழ்
• காடிதிகி தெலுசுனா கந்துபொடி வாசனா – தெலுங்கு
• அக்கரைக்கு இக்கரைப் பச்சை – தமிழ்
• அவலிகட்டு ஆவுக்கு ஈவலிகட்டு பச்சனா – தெலுங்கு
• அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் – தமிழ்
• அல்புனிக்கி அஸ்வர்யம் வஸ்தே அர்த்த ராத்திரிலோ கொடுகு பட்ட மன்டாடு
தெலுங்கு
• ஆதாயம் இல்லாத செட்டி ஆத்தில் இறங்க மாட்டான் – தமிழ்
• ஆதாயம் லேனிதே செட்டி வரதபடி போடு – தெலுங்கு
• ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு – தமிழ்
• ஆத்தர கானிக்கி புத்தி மட்டு - தெலுங்கு

Ramajayam- ரோஜா
- Posts : 176
Points : 354
Join date : 01/12/2011
Age : 59
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஜப்பானிய - தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு , நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் பழமொழிகள்
» ENGLISH & தமிழ் பழமொழிகள் (1)
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! கவிஞர் இரா. இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum