தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



"வாழ்க்கை ஒரு முறைதான்"

4 posters

Go down

"வாழ்க்கை  ஒரு  முறைதான்" Empty "வாழ்க்கை ஒரு முறைதான்"

Post by kishore1490 Mon Oct 15, 2012 4:49 pm




அன்று சனி கிழமை சாயந்திரம் 6 மணி இருக்கும் , marina beachla எங்க பாத்தாலும் மக்கள் கூட்டம். வயசு வித்யாசம் இல்லாமல் அங்க இருந்த மக்கள் அனைவரின் முகத்திலும் உண்மையான சந்தோஷம் .சனி கிழமை சாயந்திரம் எப்பவுமே எல்லார் மனசுக்குள்ளயும் ஒரு சின்ன சந்தோஷத வரவைக்கும் . அந்த குடும்பம் ஒவ்வொரு வாரமும் அந்த பீச்சுக்கு வருவாங்க .சென்னைல வாழ்ற ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் .. அந்த குடும்ப தலைவர் மெட்ராஸ் universityla தமிழ் lectureraa இருகாரு .. அவருக்கு ஒரு மகன் ஒரு மகள் .. அவரோட பைய்யன் வினோத் 10th படிக்கிறான் அந்த வயதுக்கு உண்டான அணைத்து விதமான கனவுகளையும் மனதிற்குள் கொண்டவன் .. ஒவ்வொரு வாரமும் அங்க வரனால இந்த பீச் அவனுக்கு ரொம்பவும் போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சு அதுக்கு காரணம் அவனோட அப்பாதான் அவர் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஸ்ட்ரிக்ட் .. அவனோட அம்மா அவனோட அப்பா அளவுக்கு ஸ்ட்ரிக்ட் இல்ல , ஆனா அவர எதிர்த்து பேச அவங்களுக்கும் தெய்ரியம் இல்ல .. அவனோட தங்கச்சி ரொம்பவே சந்தோஷமா அங்க இருந்த பலூன் ஷூடிங்க பாத்துகிட்டு இருந்தா .அப்பா பல்லூன் ஷூடிங்க்னு கேட்டா சரின்னு சொல்லி அவரும் permission குடுத்தாரு ,5 புல்லேட்ல ரெண்டு தரவ மட்டும்தான் பல்லூன சுட்டா .வினோத் நீயும் சுட்ரியானு கேட்டார் .அவன் எதுவும் பேசாமல் கோவத்துடன் அமைதியாக வேறு பக்கம் நடந்து சென்றான் .இப்ப எதுக்கு அவன் அப்படி போறான் என்று தன்னுடைய மனைவிய எரிச்சலுடன் கேட்டார் .அவன் 10th படிக்கிறாங்க அவன போய் பல்லூன் சுட்ரியானு கேட்டா அவனுக்கு கோவம் வராதா . அதற்குள் அப்பா ஐஸ் கிரீம் என்று அவருடைய மகள் கேட்க , சரி அங்க போய் உட்காருங்க நா வந்தப்புறம்தான் தண்ணி கிட்ட போகணும் நா போய் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் ..

இரண்டு ஐஸ் கிரீம் வாங்கி கொண்டு ஒன்றை வினோத்திடம் நீட்டினார் அவனும் வாங்கிகொண்டு அமைதியாக சாப்பிட தொடங்கினான் . இன்னொன்றை அவருடைய மகள் பாய்ந்து பிடுங்கி சாப்பிட தொடங்கினால் .. சாபிட்டு முடித்த உடன் நான்கு பெரும் எழுந்து கடலை நோக்கி நடந்தனர் .. ஒரு கையில் மகனையும் இன்னொரு கையில் மகளையும் பிடித்துகொண்டு அலை வருவதற்காக நின்று காத்து கொண்டிருந்தனர் .. கைய விடுப்பா அலைதான் வரலையே , நாம நிக்கிற இடத்துக்கு தண்ணி முட்டி அளவுக்கு கூட வராது அங்க பாருங்க சின்ன பசங்கலாம் எவ்ளோவ் தூரம் போறாங்கப்பா , எல்லாரும் என்ன பாது சிரிகிராங்கபா என்று வினோத் அவனுடைய அப்பாவிடம் கூறி கையை அவர் பிடியில் இருந்து விடுவிதுகொண்டான் .. டை அவங்களுக்கு நீச்சல் தெரியும் உனக்கு தெரியுமா ?. கடல் எவ்ளோவ் ஆபத்துன்னு உனக்கு புரியல என்று அவர் தினமும் கல்லூரியில் நடத்துவது போல் இங்கும் பாடம் நடத்த ஆரம்பித்தார் .அலை கிட்ட வந்ததும் மறுபடியும் தன்னுடைய மகனின் கையை பிடித்து கொண்டார் .சிறிது நேரம் கழித்து போதும் கெளம்பலாம்னு சொன்னதும் அவருடைய மகள் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்னு அடம் பிடித்தால் .சிறிது நேரம் இருந்துவிட்டு பீச்சில் இருந்து கிளம்பினர் .அங்கு நாலாபக்கமும் ஓடி கொண்டிருந்த குதிரைகளை பார்த்து விட்டு அதில் போக வேண்டும் என்று கேட்டால் .வினோத் சிரிப்புடன் அவளிடம் அதுகெல்லாம் வாய்ப்பே இல்ல இதனை வருஷமா எத்தன வாட்டி நா கேட்டிருப்பேன் அப்பாக்கு குதிரைனா பயம் , ஒழுங்கா வாயமூடிகிட்டு வா என்று சொல்லிவிட்டு சிரித்தான் அதை கேட்ட அவனுடைய அம்மாவும் சிரித்துவிட்டார் . இதை கேட்ட அவனுடைய அப்பா சீக்கிரம் நடங்க லடே ஆக ஆக பஸ் கூடமைடும் பேசாம நடங்க என்று அவர்களை பார்த்து கூறிவிட்டு தன்னுடைய மகளை தூக்கி கொண்டு வேகமாக நடக்க தொடங்கினார் .

பிறகு ஒரு நாள் ரோட்டில் வினோத்தும் செல்வாவும் ஷட்டல் கார்க் விளையாடி கொண்டிருந்தனர் .. செல்வா வினோத்தின் நெருங்கிய நண்பன் வினோத் வீட்டிற்கு பக்கத்துக்கு வீடுதான் செல்வாவின் வீடு .. சிறு வயதில் இருந்து ஒன்றாகவே வளந்தார்கள் .. அப்ப அப்ப சண்ட போட்டுக்குவாங்க அப்றம் கொஞ்ச நாள்ல மறுபடியும் அவங்களே ஒன்னு செந்துகுவாங்க .. டே 10thla 80% மேல வாங்குனா எங்க அப்பா பைக் வாங்கி தரேன்னு சொல்லி இருக்காருடா நீ உங்க வீட்ல கேட்டியா என்று ஷட்டல் விளையாடி கொண்டே செல்வா வினோத்திடம் கேட்டான் .. இல்ல டா இனிமேல்தான் கேட்கணும் ஆனா அவரு எப்டியும் வாங்கி தர மாட்டாரு என்றான் வினோத் .. ம்ம்ம் டேய் ப்ரியா வாராடா டக்குனு திரும்பி பாக்காத என்றான் செல்வா .. சரி சரி நீ கார்க எனக்கு பின்னாடி தூரமா அடிடா என்றான் வினோத் .. செல்வாவும் அதே போல் வினோத்திற்கு பின்னால் தூரமாக அடிதான் கார்கை எடுப்பது போல் திரும்பி வினோத்தும் அவளை பார்த்தான் .. செல்வாவை பார்த்து சிறிது விட்டு கார்கை செல்வா விடம் அடிதான் வினோத் .. அவள் கிட்ட வந்தவுடன் மச்சான் நல்லா இருக்கியா என்று சத்தமாக வினோத்திடம் கேட்பது போல் சத்தமாக கேட்டான் செல்வா .. செமையா இருக்கேன் மச்சி பாத்தா தெரியலையா நீ எப்டி இருக்க மச்சி என்று வினோத்தும் சத்தமாக செல்வாவிடம் கேட்டான் .. ப்ரியா இவர்குலடந்தான் ஸ்கூலில் படிக்கிறாள் , அவளை பார்க்கும் போதெல்லாம் இப்படி இவர்கள் ஜாடை பேசுவது வழக்கமான ஒன்று அதற்காக சில முறை தங்களுடைய அப்பாகளிடமும் ச்சூளிலும் அடிகளும் வாங்கி யுள்ளனர் .. இவர்கள் பேசுவது கேட்காததுபோல் அவளும் நடந்து சென்றால் .. அவள் அந்த தெரு முனையை தாண்டும் வரை ஜாடை பேசி கொண்டே இருந்தனர் .. சிறிது நேரம் விளையாடி விட்டு தெரு கடைசியில் இருந்த சூப் கடைக்கு சூப் குடிக்க சென்றனர் ...

பிறகு ஒரு நாள் வினோத் அவன் வீட்டின் பக்கத்துக்கு தெருவில் இருந்த முடி வெட்டும் கடையில் முடி வெட்ட சென்றான் . உள்ளே சென்றதும் அந்த முடி வெட்டுபவர் வா பா உட்காரு இவருக்கு ஷேவிங் தான் முடுச்சுட்டு வந்துடறேன் என்றார் .சரினா என்று சொல்லி விட்டு அங்கிருந்த தின தந்திய எடுத்து புரட்டினான் .. அப்பா எப்படிப்பா இருகாரு பாத்து ரொம்ப நாளாச்சு என்று வினோத்தை பார்த்து கேட்டபடி ஷேவிங் செய்து கொண்டிருந்தார் .. ம்ம்ம் நல்லா இருக்கார்னா என்றான் வினோத் .. கிருதா நல்லா ஷார்ப்பா கத்தி மாதிரி விட்ருங்க என்று முடி வெட்டி கொண்டிருந்த சிறுவன் கூறியதை கேட்டு வினோத் ஆச்சர்யத்துடன் அவனை பார்த்தான் .என்ன விட சின்ன பயன் அவன்லாம் funku விடறான் கிருதா இவ்ளோவ் கீழ வக்கிறான் நா இன்னும் ஓட்ட முடி வெட்டிக்கிட்டு இருக்கேன் .அந்த சிறுவனுக்கு முடி வெட்டி முடித்ததும் வினோத் சென்று அமர்ந்தான் .எதுவும் கேட்காமல் அந்த கடைகாரரும் முடி வெட்ட தொடங்கினார் .வினோத் அவனுடைய 5 வயதிலிருந்து இந்த கடையில்தான் முடி வெட்டி கொண்டிருக்கிறான் , அதனால் அவர் எதுவும் கேட்காமல் வழக்கம்போல் முடி வெட்ட தொடங்கினார் .வினோத் சிறு தயக்கத்துடன் முன்னாடி மட்டும் கொஞ்சம் முடி அதிகமா விற்றுங்கனா பின்னாடிலாம் எப்பவும் போல பண்ணிடுங்கனா என்றான் .அந்த கடை காரர் சிறிய புன்னகையுடன் சரிபா என்று சொன்னார் .. இப்ப நீ 10thla?.. ஆமா என்று தலை அசைத்தேன் .. அடுத்து கிருதாவை சரி செய்ய ப்ளேடை பொருத்தினார் .. அண்ணா கிருதா கொஞ்சம் சார்பா கீழ இறங்குற மாதிரி விடுங்கனா என்றான் வினோத் .. சிறு வயதில் ப்ளேடை பொருத்தி கிருதாவை சரி செய்ய வரும்போது வேணாம் என்று அழுது ஓடியவன் இப்பொழுது இப்படி பேசுவதை கேட்டு அவருக்கு சிரிப்புதான் வந்தது .பசங்க ரொம்ப சீக்கிரம் வளந்துடுறாங்க என்று மனதிற்குள் நினைத்தார் .முடிவெட்டி முடித்தவுடன் 50rubaai தந்தான் .சரிபா அப்பாவ கேட்டேன்னு சொல்லு .சரினா என்று கூறிவிட்டு சென்றான் .

வினோத்தின் தந்தை ஹாலில் உட்காந்து tv பார்த்து கொண்டிருந்தார் .. வினோத் தலையை குனிந்து கொண்டு அம்மா துண்டு எங்க இருக்கு என்றான் .. ஹால்ல cupboardla இருக்கு பாரு என்று அவனுடைய அம்மா கிட்செனில் இருந்து சொன்னார் .. தலையை குனிந்து கொண்டே துண்டை எடுக்க கப் போர்டை திறந்தான் .. கப்போர்ட்ல இல்லேமா என்று கத்தினான் .. டேய் இந்தா துண்டு என்று தன்னுடைய தோளில் இருந்த துண்டை நீட்டினார் வினோத்தின் தந்தை ..ச்ச செத்தேன் என்று நினைத்து கொண்டு தலையை குனிந்து கொண்டே அவரிடம் துண்டை வாங்க சென்றான் வினோத் .. டை என்னடா முன்னாடி இவ்ளோவ் முடி விட்டுருக்க எந்த கடைக்கு முடி வெட்ட போன ? தலைய நிமிந்து பாரு டா என்று கத்தினார் .. வினோத் துண்டை வாங்கி கொண்டு தலையை நிமிர்த்தாமல் மொட்டையே அடுச்சுட்டு வந்தாலும் உங்களுக்கு முடி அதிகமா இருக்க மாதிரிதான் உனக்கு தெரியும்பா என்று பாத் ரூமை நோக்கி நடந்து கொண்டே சொன்னான் வினோத் .. அவன் வைத்திருந்த கிருதாவை பார்த்த உடன் அவருக்கு இன்னும் கோபம் வந்து விட்டது .. படிக்கிற புள்ள மாதிரியா இருக்கான் ரவுடி மாதிரி கிருதா விட்டிருக்கான் .. அவர் சொல்வது கேட்காததுபோல் பத்ரூம்குள் குளிக்க சென்றான் வினோத் .. அவன் வெளியே வந்ததும் அந்த கிருதாவை சரி செய்யாமல் விட மாட்டேன் என்று தன்னுடைய ஷேவிங் சேட்டை எடுத்து மாடி கொண்டிருந்தார் வினோத்தின் தந்தை .. இவனுக்கே இவ்ளோவ் திமிர் இருந்த எனக்கெல்லாம் எவ்ளோவ் இருக்கும் என்று கதிகொண்டிருகும்போதே வீட்டின் calling bell சத்தம் கேட்டது .. வினோத்தின் தந்தை கதவை திறந்தார் .. வினோத்தின் பெரியப்பா வந்திருந்தார் .. வாங்கணா என்று உள்ளே அழைத்தார் வினோத்தின் தந்தை .. கிட்செனில் இருந்து வெளியே வந்து வினோத்தின் அம்மாவும் வரவேற்றார் .. தான் வாங்கி வந்த பழங்களை குடுத்து விட்டு சோபாவில் அமர்ந்தார் வினோத்தின் பெரியப்பா ..

என்னடா ஆச்சு சத்தம் தெரு முனைக்கு வரைக்கும் கேக்குது ?.. அதெல்லாம் ஒண்ணுமில்லணா சும்மாதான் என்றார் வினோத்தின் தந்தை .. எப்பவும் போலதான் வினோத்தோட சண்ட போடலேன இவருக்கு தூக்கம் வராது என்றார் வினோத்தின் அம்மா .. வினோத் சரியாக பாத்ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் .. பெரியப்பாவை பார்த்து ஆச்சர்யம் கலந்த சிரிப்புடன் பெரியம்மா அக்காலாம் வரலயான்னு ? கேட்டான் .. அவளுக்கு உடம்பு சரி இல்ல அக்காக்கு எக்ஸாம் என்று கூறி விட்டு பாக்கெட்டிலிருந்து இரண்டு 5 star சாச்க்ளடை எடுத்து குடுத்தார் .. ரம்யா எங்க என்று கேட்டார் ? அவ இன்னும் தூங்கிடுதன் இருக்கா என்றான் வினோத் .. வினோத்தின் அப்பாவும் பெரியப்பாவும் பூர்வீக நிலத்தை பற்றி பேச தொடங்கினர் .. வினோத் அந்த சாச்க்ளடை பிரித்து கொண்டே ,நல்லவேள பெரியப்பா வந்து நம்மள காபாதிடாறு என்று நினைத்து கொண்டு உள்ளே சென்றான் ..

அடுத்த நாள் ஸ்கூல்ல history period நடந்து கிட்டு இருந்தது .. Louis 14 பற்றி நடத்திக்கிட்டு இருந்தாங்க .. கிளாசில் ஒரு மயான அமைதி பாதி பேரு அரை தூக்கத்தில் பகல் கனவு கண்டு கொண்டு இருந்தாங்க , மீதி இருந்த சிலர் கவனிப்பது போல் நடித்து கொண்டிருந்தனர் .. Teachera பாத்துகிட்டே , வீட்ல பைக்க பத்தி கேட்டியாட என்றான் செல்வா .. இல்லடா நா இப்டி கிருதா விட்டதுகே அவரு சாமியாடிடாறு பைகேல்லாம் கேட்டா என்ன வீட்ட விட்டே தொரதிடுவாறுடா .. சரி ஒரு வாட்டி கேட்டு பாரு என்னதான் சொல்றாருன்னு பாப்போம் என்றான் செல்வா .. ம்ம்ம் அதுவும் கரெக்ட்தான் கேட்டு பாக்குறேன்டா என்று அவன் சொல்லி முடித்த அடுத்த நொடி chock piece வினோத்தின் நெற்றியில் பட்டது .. செல்வாவும் வினோத்தும் teacherai பார்த்தனர் .. செல்வா வினோத் "both get out of my class for one week ".. Sorry miss என்றார்கள் வினோத்தும் செல்வாவும் .. வெளிய போறிங்களா இல்ல பிரின்சிபால பாகுரின்களா ? என்றார் history டீச்சர் ..

செல்வாவும் வினோத்தும் பேசாமல் எழுந்து வெளியே சென்று நின்றனர் .. டேய் நாயே missa பாதுகிடேதாண்ட பேச சொன்னேன் உன்னால பாரு இப்ப அந்த ஒட்டகம் நம்மள வெளிய அமுசிடா என்றான் செல்வா .. சரி சரி விடு இதுக்கு முன்னாடி நீ வெளிய நின்னதே இல்லையாகும் என்றான் வினோத் .. சரி சரி ஒட்டகம் பாக்குது கம்முனு இரு என்றான் செல்வா ..

அன்று இரவு ஹாலில் உட்காந்து அனைவரும் tv பார்த்து கொண்டிருந்தனர் .. அப்பா 10thla 80%ku மேல எடுத்தா செல்வாவோட அப்பா அவனுக்கு பைக் வாங்கி தரதா சொல்லி இருகாரு என்று அவன் சொல்லி முடிக்கும் முன் நா இப்ப உனக்கு பைக் வாங்கி தருவேன்னு கனவுல கூட நெனச்சு பாதுராத என்றார் வினோத்தின் தந்தை .. வினோத் கோவத்துடன் எழுந்து உள்ளே சென்றான் .. உனக்கு எப்ப பைக் வாங்கி தரணும்னு எனக்கு தெரியும் 15 வயசுல பைக் கேக்குதா .. உன்னோட அம்மாவ ஐஸ் வச்சு பைக் வாங்கிடலாம்னு கனவுல கூட நெனச்சுராத .. நீ காலேஜ் முடுச்சபுரம்தான் பைக்லாம் .. இவர் சொல்வதை கேட்டு வினோத் போர்வையை போத்தி கொண்டு கோவத்துடன் படுத்திருந்தான் ..

அடுத்த நாள் பள்ளியில் நேத்து nightu பைக் வேணும்னு கேட்டுட போல இருக்கே ? என்றான் செல்வா .. ஆமா ஆமா உனக்கு எப்டி தெரியும் என்றான் வினோத் .. உங்கப்பா கத்துன காத்துதான் தெருவுக்கே கேட்டுதே .. என்ன பண்றது டா உங்க வீட்ல எவ்ளவோ பரவா இல்லடா எங்க வீட்ல சாவடிகிறாங்க என்றான் .. ம்ம் விட்ரா பாத்துக்கலாம் திட்டு மட்டும்தான இல்ல பெல்ட் ஏதும் எடுத்து விலாசுனார என்று சிறிது கொண்டே கேட்டான் செல்வா .. நாதாரி மூட்றா என்று வினோத் சொல்வதற்கும் chock piece அவனோட நெத்தில அடிகரதுகும் சரியா இருந்துச்சு .. வெளிய நிக்கும்போதும் பேசுறிங்களா நாளைக்கு வரப்ப இந்த questiona 10 வாட்டி எழுதிட்டு வரணும் .இதுக்குமேலயும் பெசுநிங்கனா 50vaati எழுத வைப்பேன் என்றார் history டீச்சர் .. அது எப்டி டா உன்ன மட்டும் கரெக்டா குறி பாத்து நெத்தில அடிக்கிறாங்க ? என்று நக்கலாக கேட்டான் செல்வா . . வாய மூட்றா சனியனே எல்லாம் உன்னாலதான் என்று சொல்லி விட்டு தள்ளி நின்றான் வினோத் ..

நாட்கள் நகர்ந்தன .. 10th public examum முடிந்தது .. 10th ரிசல்ட் வருவதற்கு முன்னாடி நாள் இரவு .. வினோத் அவனது அப்பாவிடம் பைக் வாங்கித்தாங்க என்றான் .. அவனது அப்பா அவனை ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு எதுவும் பேசாமல் tv பார்த்து கொண்டிருந்தார் .. அவன் கடுப்பில் மனசுக்குள்ள அவனோட அப்பாவ திட்டி கொண்டே பெட்டில் பொய் படுத்தான் .. அடுத்த நாள் 10th ரிசல்ட் வந்தது இருவரும் சென்று ஸ்கூலில் ரிசுல்டை பார்த்தனர் .. வினோத் 82% செல்வா 87% வாங்கி இருந்தார்கள் .. சாயந்திரம் பைக் வாங்கிடுவேன் ரெடியா இரு மச்சான் ரெண்டு பெரும் வெளிய போறோம் என்றான் செல்வா .. சரி டா என்று சிறிய புன்னகயுடம் சொன்னான் வினோத் .. வினோத்தின் அம்மா அவனுக்கு ஸ்வீட் செய்து கொடுத்தால் ஆனால் அவனுக்கு அதில் சந்தோஷமில்லை .. யாரிடமும் பேசாமல் அமைதியாக படுத்திருந்தான் .. மாலை 5 மணியளவில் horn சத்தம் கேட்டு கொண்டே இருந்தது .. வினோத் வெளியே வந்து பார்த்தான் hero honda splenderil செல்வா முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் சீக்கிரம் வாடா வெளிய போயிடு வரலாம் .. வினோத்தும் அவனுடன் பைக்கில் ஏறி கொண்டான் .. இருவரும் பைக்கில் அங்கிருந்த தெருக்களை சுற்றி சுற்றி வந்தனர் .. வண்டி எவ்ளோவ் டா என்றான் வினோத் .. Second handdhaanda ஆனா வாங்கி ஒரு வருஷந்தான் ஆகுது , நல்ல கொந்டிதிஒந்ல இருக்கு 20000 என்றான் செல்வா .. Oh நல்லா இருக்குடா second hand மாதிரியே தெரியலடா என்றான் வினோத் ..

வண்டியை நிறுத்தி விட்டு இந்தாடா நீ ஓட்டி பாரு என்று செல்வா இறங்கி வினோத்திடம் வண்டியை குடுத்து விட்டு பின் சீட்டில் அமர்ந்தான் செல்வா .. வினோத் வண்டியை வேகமாக ஓட்டினேன் எதிர் காற்று அவர்கள் இருவர் முகத்தையும் உரசி கொண்டு போனது .. வினோத்திற்கு வண்டி ஓட்டுவதற்கு ரொம்பவும் பிடித்திருந்தது .. இருவரும் ஓஒஹ் என்று கத்தி கொண்டே அந்த தெருக்களில் வேகமாக சென்றனர் .. பிறகு இருவரும் வீட்டுக்கு சென்றனர் .. நாளைக்கு பைக்ல பீச்சுக்கு போலாம்டா என்றான் செல்வா .. ம்ம்ம் போலாம்டா என்று சொல்லிவிட்டு வினோத் அவனுடைய வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்றான் .. வினோத் சந்தோஷமாக வீட்டிற்குள் நுழைந்தான் .. அவனுடைய அப்பா ஹாலில் உட்காந்து tv பார்த்து கொண்டிருந்தார் , எங்கடா போய் சுத்திட்டு வர .? என்றார் .. செல்வா வீட்ல அவனுக்கு 10thla 83% எடுத்ததுக்கு பைக் வாங்கி குடுத்திருக்காங்க அதான் அவன்கூட பைக்ல போயிடு வந்தேன்னு சொன்னான் .. வினோத்தின் தந்தை எதுவும் பேசாமல் tv பார்த்து கொண்டே இருந்தார் .. அவங்க வீட்ல நம்ம வீடு மாதிரி இல்ல என்றான் வினோத் .. கொவமடைந்த வினோத்தின் தந்தை என்னடா வாய் நீளுது , இப்ப என்ன உனக்கும் பைக் வேணுமா ?.. உனக்கு எப்ப என்ன வாங்கி தரணும்னு எனக்கு தெரியும் இன்னிக்கு நல்ல மூட்ல இருக்கேன் அடி வாங்காம போய்டு என்றார் .. இந்த வயசுல பைக் வாங்காம வேற எந்த வயசுல வாங்கிதருவிங்க என்னோட எல்லா friend வீட்லயும் வாங்கி தந்துடாங்க ? என்று அவன் சொல்லி முடிக்கும் முன் பளார் என்று அவன் கன்னத்தில் அரை விழுந்தது ,என்னடா நானும் பாத்துகிட்டே இருக்கேன் ஓவரா பேசுற வெட்டி போற்றுவேன் போடா உள்ள என்றார் .. கிட்செனில் இருந்து வந்த வினோத்தின் அம்மா டை வினோத் அப்பா உனக்காக கம்ப்யூட்டர் வாங்கி வசிருகாருடா பொய் உள்ள ரூம்ல பாரு என்றால் ..

வினோத் அழுது கொண்டே எல்லாத்தயும் நீங்களே வச்சுகங்க எனக்கு ஒரு மண்ணும் வேணாம் எல்லாத்தையும் நீங்களே வச்சுக்கங்க என்று கூறி விட்டு போய் பெட்டில் படுத்தான் .. இன்று அவன் பைக் ஓட்டும்போது அவனுக்குள் ஏற்பட்ட அந்த சந்தோஷம் அவனை எப்படியாச்சு பைக் வாங்கியே ஆகணும் என்று தூண்டியது .. அடுத்து இரண்டு நாட்கள் அவன் அந்த கம்பியுடரை தொடவில்லை .. அவனுடைய தங்கை அடிகடி கம்ப்யூட்டர் கேம் விளையாடினால் .. அதை பார்க்கும்போது அவனுக்கும் ஆசை வந்தது ஆனால் இருந்தாலும் தன்னுடைய அப்பாவை பழி வாங்க வேண்டும் என்பதற்காக கம்பியுடரை தொடாமல் இருந்தான் .. இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய அப்பா இல்லாதபோது கம்பியுடேரை போட்டு விளையாடினான் .. பிறகு தினமும் அவனுடைய அப்பா ஆபீஸ் போனதும் கம்பியுட்டரில் விளையாடுவான் .. இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் வினோத்தின் தங்கை கம்பியுடேரை on செய்து கேம் போட்டு தரும்படி தன்னுடைய தந்தையிடம் கேட்டால் .. டேய் வினோத் அந்த கம்ப்யூட்டர் கேம் இவளுக்கு வச்சு குடு என்றார் வினோத்தின் அப்பா .. நா அந்த கம்பியுடேரை இந்த ஜென்மத்துல தொட மாட்டேன் என்றான் வினோத் .. நா ஆபீஸ் போனப்புறம் நீ கம்பியுடேர்ல விளையாடுறேன்னு உங்கம்மா என்கிட்டே எப்பயோ சொல்லிட்டா போ போய் on பண்ணி குடு என்றார் .. வினோத் தலை குனிந்தபடி அமைதியாக எழுந்து போய் கம்பியுடேரை on செய்தான் .. அதற்கு பிறகு வினோத் அவனுடைய அப்பா இருக்கும்போதும் கம்பியுட்டரில் விளையாட தொடங்கினான் .. விடுமுறை முடிந்தது செல்வாவும் வினோத்தும் ஒரே பள்ளியில் சேர்ந்தனர் .. வினோத்தின் மனதிற்குள் பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்து கொண்டே இருந்தது .. அடிகடி பைக் வாங்கி தர சொல்லி வீட்ல கேட்டு திட்டு வாங்கி கொண்டிருந்தான் வினோத் .. படிப்பில் கவனம் குறைய ஆரம்பித்தது .. quarterly exaamla mathsil பெயில் ஆகினான் ..

இந்த மாதம் வினோத்தின் பிறந்த நாள் 16 வயசு முடிந்து 17 ஆரம்பிகிறது .. வினோத் அவனது அப்பாவிடம் இந்த birthdayku பைக் வாங்கி தாங்கப்பா என்றான் .. வினோத்தின் அப்பா அவன் சொல்வது கேட்காதது போல் tv பார்த்து கொண்டே இருந்தார் .. அப்பா govermente 18 வயசுல லைசென்ஸ் எடுக்கலாம்னு சொல்றாங்க , நீங்க இப்ப வாங்கி குடுதிங்கனாதான் நல்லா ஓட்ட பழகிபேன், அடுத்த வருஷம் லைசென்ஸ் எடுகரத்துக்கு கரெக்டா இருக்கும் என்றான் .. இந்த பேச்செல்லாம் நல்லா வக்கனையா பேசு படிப்புல ஒண்ணுத்தையும் காணோம் வேற ஏதாவது பேசுனா பேசு பைக் பத்தி இன்னொருவாட்டி பேசுன்னு பாரு என்ன நடக்குதுன்னு , போய் இந்த வாட்டியாச்சு mathsla பாஸ் ஆகுற வழிய பாரு என்றார் வினோத்தின் தந்தை .. வினோத் கோபத்துடன் வீட்டின் கதவை வேகமாக சாத்திவிட்டு வெளியே சென்றான் ...

பிறகு ஒரு நாள் மாலை செல்வாவும் வினோத்தும் தெரு முனையில் இருந்த சூப் கடையில் நின்று சூப் குடித்து கொண்டிருந்தனர் .. நேத்து just missu daa, கடைக்கு போயிடு வரேன் traffic constable பைக்க நிறுத்த சொல்லி கை காட்னான் என்றான் செல்வா .. அபாரம் எப்படிடா தப்புச்ச ? என்றான் வினோத் .. வண்டிய slow பண்ற மாதிரி indicator போட்டு அவன் கிட்ட போனேன் அவன் கொஞ்சம் அசால்டா நின்னான் டக்குனு acclerator குடுத்து கட் அடுச்சு வேகமா வந்துட்டேன்டா என்றான் செல்வா .. Oh கெத்து போ வண்டில pick up சரி இல்லையே எப்படிடா ? என்றான் வினோத் .. வண்டிய first gearku கொண்டு வந்து டக்குனு ரிசே பண்ணேன்டா , அங்க பாரு மச்சி ப்ரியா வரா எப்டி தப்புசென்னு நேராவே காட்டுறேன் வா என்றான் செல்வா .. இருவரும் வண்டியில் ஏறி உட்கான்தனர் .. அவள் இவர்கள் பைக்கில் வருவதை பார்த்து விட்டு பார்க்காததுபோல் ஓரமாக நடந்து வந்தால் .. செல்வா வேகமாக அவளை நோக்கி வண்டியை ஓட்டினான் ..

அவர்கள் வேகமாக அவளை நோக்கி வருவதை கவனித்து அங்கேயே நின்றால் .. அவள் அருகில் இடிப்பது போல் சென்று கட் அடித்து வேறு பக்கம் சென்றனர் .. பயத்தில் ப்ரியா அம்மா என்று அலறினாள் .. செல்வாவும் வினோத்தும் ஓஹ் என்று கத்திகொண்டே அவளை திரும்பி பார்த்து சிரித்து விட்டு வேகமாக சென்றனர் .. அடுத்தநாள் வினோத்தும் செல்வாவும் சூப் கடைக்கு சென்றனர் இருவர் முகமும் வீங்கி இருந்தது .. அந்த சனியன் புடிச்சவ எங்க வீட்ல வந்து சொல்லிடாட என்றான் வினோத் .. தெரியும்டா எங்க வீட்ல சொல்லிட்டுதான் உங்க வீட்டுக்கு போனாளாம் என்றான் செல்வா .. உங்க வீட்ல என்ன மச்சி பெல்டா தொடபகட்டையா ? என்றான் வினோத் .. வழக்கம்போல தொடபகட்டதான் உங்க வீட்ல ?.. எங்கப்பா பெல்டுடா என்றான் வினோத் .. அடுத்தவாட்டி அவல பாதா வண்டில கடலாம் அடிக்க கூடாதுடா நேரா ஏத்திரனும் என்றான் வினோத் .. ம்ம்ம் கவலைபடாத மச்சான் சீக்கிரமே ஏதிரலாம் என்று சிரித்து கொண்டே சொன்னான் செல்வா ..

ஒரு வாரம் கழித்து ஒரு நாள் செல்வா வினோத்தின் வீட்டுக்கு வந்தான் .. இருவரும் வினோத் வீட்டின் மாடிக்கு சென்றனர் .. செல்வா தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஒரு புத்தம் புதிய samsung போனை எடுத்து காட்டினான் .. டேய் எப்டிடா உங்க வீட்ல வாங்கி தந்தாங்களா ? எவ்ளோவ் ருபாய் என்று கேட்டு கொண்டே அந்த mobilai வாங்கி பார்த்தான் வினோத் .. எங்க வீட்ல கிழிச்சாங்க ஏற்கனவே ஏன் பைக்க வாங்கி தந்தோம்ணு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க , என்னோட cousin ஒருத்தன் பைக் race பத்தி சொன்னான்னு சொல்லி இருந்தேன்ல , நேத்து அந்த பைக் racela 3rd வந்தேன் மச்சி 5000 கேடசுசு அதுலதான் வாங்குனேன் என்றான் .. ஓஹ் செமையா இருக்குடா என்றான் வினோத் .. இருவரும் மாறி மாறி போனில் போட்டோ எடுத்து கொண்டனர் .. போன்ல songs ஏதலையா என்றான் வினோத் .. இல்லடா என்றான் செல்வா .. சரி வா என்னோட கம்பியுடேர்ல இருக்க பாட்டுங்கள போனுக்கு copy பண்ணி கேட்டு பாக்கலாம் என்று கூறி செல்வாவை அழைத்து கொண்டு சென்றான் வினோத் ..

அன்று இரவு வினோத் ரொம்ப நேரம் தூங்காம யோசித்து கொண்டே இருந்தான் .. எப்படியாச்சு பைக் வாங்கணும் அதா வாங்கிட்டா போன்லாம் நானே வாங்கிடலாம் என்று நினைத்தான் , நாளைக்கு கடைசியாக ஒரு முறை அப்பாவிடம் வாங்கி தருவிங்களா மாடிங்கலானு கேட்கணும் என்று முடிவு செய்தான் .. அடுத்த நாள் சனி கிழமை மாலை வினோத் குடும்பத்துடன் பீச்சுக்கு வந்திருந்தான் .. அலை வருவதற்காக நான்குபேரும் நின்று கொண்டே இருந்தனர் .. அலை வந்ததும் தன்னுடைய மகனின் கையை இருக்க பிடித்து கொண்டார் .. வினோத் அவனுடைய அப்பாவை பார்த்தான் அவர் சந்தோஷமாக அடுத்த அலைகாக காத்து கொண்டிருந்தார் .. அப்பா கடைசியா கேக்குறேன் எனக்கு எப்ப பைக் வாங்கி தருவிங்க என்று கேட்டான் .. எப்பனு எனக்கு தெர்யும நீ கவலைபடாத என்றார் வினோத்தின் தந்தை .. எனக்கு இந்த birthdayku வேணும் வாங்கித்தாங்க என்றான் வினோத் .. வந்த இடத்துல உத வாங்காம வாய மூடிகிட்டு இரு என்றார் வினோத்தின் தந்தை .. அதெல்லாம் எனக்கு தெரியாதுபா எனக்கு இந்த birthdayku வாங்கி தருவிங்களா மாடிங்களா சொல்லுங்க என்று கோபத்துடன் கேட்டான் வினோத் .. இப்ப எதுக்குடா பைக் ரோட்ல போற வர பொண்ணுங்கள இடிகிரதுகா என்றார் .. வினோத் எதுவும் பேசாமல் நின்றான் .. நீ சொல்றதுகுலாம் நா ஆட முடியாது எனக்கு எப்ப வாங்கி தரணும்னு தெரியும் ஒழுங்கா நில்லு என்றார் , அலை அவர்கள் மீது பாய்ந்தது வினோத்தின் தந்தை வினோத்தின் கையை பிடித்து கொண்டார் ..

வினோத் கோபத்துடன் கையை உதறிவிட்டு அழுது கொண்டே திரும்பி கரையை நோக்கி நடக்க தொடங்கினான் .. அவனுடைய அம்மா டேய் வினோத் இங்க வாடா என்று கத்தினால் ஆனால் வினோத் கோவத்துடன் அழுது கொண்டே கரைய நோக்கி நடந்து சென்றான் .. அன்று இரவு அவன் எதுவும் சாப்பிடவில்லை , அவனோட அப்பா பேசினால் காது கேட்காததுபோல் அவன் வேலையே பார்த்து கொண்டிருந்தான் .. ரெண்டு நாள் ஆனா சரியாகிடுவான் என்று வினோத்தின் தந்தையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை ..

அடுத்தநாள் ஸ்கூலில் maths period நடந்தது .. என்னாச்சு மச்சான் சரியா பேச மாடிகிர உங்கப்பா பெல்ட் எடுத்து விளயாடிடாரா ? என்றான் செல்வா .. இல்லடா நா என்னோட அப்பா கிட்ட பேசுறதில்லடா , எத்தனவாட்டி கேட்டாலும் பைக் வாங்கியே தர மாடிகிராறு மச்சி அதான் கடுப்பா இருக்கு .. தம்பி சாப்டாம இருக்குறது , பேசாம இருகுரதுலாம் m.g.r. காலத்து style இப்பலாம் நீ இப்டி பண்ணா சாப்பாடு மிச்சம்னு நெனச்சு விட்ருவாங்க எதுவும் வாங்கி தரமாட்டாங்க மச்சி என்றான் செல்வா .. நானே வேறுபுல இருக்கேன் மச்சான் கடுபெதாதடா என்றான் வினோத் .. அவனை இப்படி பார்பதற்கு செல்வாவுக்கு கஷ்டமாக இருந்தது .. இப்ப என்னடா உனக்கு பைக்தாண்டா வாங்கணும் இன்னும் கொஞ்ச நாள்ல பைக் race வரும் first வரவனுக்கு 15000 செகண்ட் வரவனுக்கு 10000 da.. entryku 1000 கட்டனும் அத நா பாத்துக்குறேன் நீ கவலைபடாத ,என்னோட மாமா வண்டிய ஒரு நாளைக்கு வாங்கிக்கலாம் நம்ம ரெண்டு பெரும் first ரெண்டு prize வாங்கிடோம்னு வச்சுக்கோ 25000 கிடைக்கும் ,நா எப்பவும் வண்டிய serviceku விடுவனே அவர்கிட்ட ஒரு பல்சர் saleku இருக்கு மச்சி அத வாங்கிடலாம் என்றான் செல்வா .. இதை கேட்ட வினோத் முகம் முழுக்க மகிழ்ச்சி easy ya ஜெய்ச்சிடலாமா மச்சான் ? என்றான் வினோத் ..

கொஞ்சம் கஷ்டம்தான் மச்சி , வா பாத்துக்கலாம் எவ்ளோவோ பண்றோம் இத பண்ண மாட்டோமா என்றான் செல்வா .. வினோத் சத்தமாக சிறிது விட்டான் .. வினோத் tell the next step? என்றார் maths சார் .. வினோத் அப்போலோதுதான் போர்டையே பார்த்தான் .. Get out of the class என்றார் maths சார் .. வினோத் சந்தோஷமாக வெளியே சென்று நின்றான் ..

இரண்டு வாரங்கள் கடந்தன ஆனால் வினோத் அவனுடைய அப்பாவிடம் மட்டும் பேசாமலே இருந்தான் .. ஏதோ இரண்டு நாளில் சரியாகிடுவானு நெனச்சேன் ஆனா இப்ப ரெண்டு வாரமாச்சு ஆனா அவன் ஏன் என் கூட பேசவே மாடிகிறானே என்று நினைத்தார் வினோத்தின் தந்தை ..

மச்சி நாளைக்கு raceடா evening 5 மணிக்கு ரெடியா இரு என்றான் செல்வா .. ம்ம்ம் ok da என்றான் வினோத் .. அன்று இரவு வினோத்தின் தந்தைக்கு வெகு நேரம் தூக்கம் வரவே இல்லை .. இவன் நல்லதுக்குதான பண்றோம் அதா ஏன் இவன் புருஞ்சுகவே மாடிகிறான் .. ஏற்கனவே இவனுக்கு படிப்புல கவனம் கொறஞ்சு போச்சு இதுல பைக் வேற வாங்கி குடுத்தா அவன் வாழ்க்கையே வீனாகிடுமே .. தன்னுடைய மகன் வாழ்நாள் முழுவதும் தன்னோடு பேசாமையே போயிடுவானோ என்று நினைத்தார் .. என்ன பண்றதுன்னு புரியாம இரவு முழுவதும் fanai பார்த்து யோசித்து கொண்டே இருந்தார் ..

நாளைக்கு race என்று நினைத்து சந்தோஷத்தில் வினோத்துக்கு தூக்கமே வரவில்லை .. எப்படியாச்சு first prize வாங்கணும் , வண்டிய செம வேகமா ஓட்டனும் படத்துல வர மாதிரி பைக்கில் பறக்க வேண்டும் என்றெல்லாம் மனதிற்குள் நினைத்து பார்த்து கொண்டே இருந்தான் .. அடுத்தநாள் மாலை செல்வா வினோத்தை கூடி கொண்டு தன்னுடைய மாமாவின் பைக்கை கடன் வாங்க சென்றனர் .. மாமாவின் பைக்கை வாங்கிகொண்டு வினோத்தும் செல்வாவும் சென்றனர் ..
எப்டியாச்சு win பண்றோம் மச்சான் .. நாளைக்கு உன்னோட birthdayla. அந்த பல்சர் பைகேதான் மச்சான் உனக்கு என்னோட gift என்றான் செல்வா .. மனம் முழுக்க சந்தோஷத்துடன் Thanks da என்றான் வினோத் .. அந்த raceku இருபது பேருக்கு மேல் வந்திருந்தனர் .. செல்வா அவர்களை பார்த்து விட்டு போன வாடி first prize வாங்குனவன் வரலடா நாம easyyaa வின் பண்ணலாம் நீ முன்னாடி faastaa போ நா உனக்கு பின்னாடியே நம்மள யாரும் முந்தரதுகு வழி விடாம வரேன் என்றான் செல்வா .. ம்ம் சரிடா என்றான் வினோத் .. அனைவரும் போட்டிக்கு தயாராக நின்றனர் .. செல்வா தன்னுடைய போனில் பாட்டை on செய்து வண்டியின் தனக் சீட் கவரில் வைத்தான் .. இது எதுக்குடா என்றான் வினோத் .. பாட்டு கேட்டுகிட்டே ஒட்டுனாதான்டா நா faastaa ஓட்டுவேன் என்றான் செல்வா .. போட்டி ஆரம்பித்தது வினோத் வேகமாக முன்னாடி போயகொண்டிருந்தான் . செல்வா அவனை பின் தொடர்ந்து வந்தான் .. Traffic constable vinothai பார்த்து நிற்கும்படி கை அசைத்தார் .. வினோத் வண்டிய slow செய்தான் traffic constable கிட்ட போன உடனே வண்டியை வேகமா ஓட்டிட்டு போனான் வினோத் .. அந்த traffic constable அவனை சில கேட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டு இதெல்லாம் போற வேகத்துக்கு எங்கயாச்சு அடிபட்டு அல்பாயிசுல போக போகுது அப்பவும் எங்களுக்குதான் தலைவலி என்றார் traffic constable.. செல்வா traffic constabulai பார்த்ததும் இடது பக்கம் இருந்த சந்துக்குள் போய் அடுத்த சந்தில் மறுபடியும் மெயின் ரோட்கு வந்திடலாம் என்று நினைத்து சந்துக்குள் திரும்பினான் .. வினோத் பின்னாடி திரும்பி பார்த்தான் பின்னாடி போட்டில கலந்துகிட்ட யாருமே வரல .. எப்படியும் நாமதான் firstu என்
kishore1490
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 34
Location : ambathur

Back to top Go down

"வாழ்க்கை  ஒரு  முறைதான்" Empty Re: "வாழ்க்கை ஒரு முறைதான்"

Post by pakee Tue Oct 16, 2012 5:53 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

"வாழ்க்கை  ஒரு  முறைதான்" Empty Re: "வாழ்க்கை ஒரு முறைதான்"

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 17, 2012 12:46 pm

அருமையான கதை பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

"வாழ்க்கை  ஒரு  முறைதான்" Empty Re: "வாழ்க்கை ஒரு முறைதான்"

Post by அ.இராமநாதன் Wed Oct 17, 2012 2:14 pm

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

"வாழ்க்கை  ஒரு  முறைதான்" Empty Re: "வாழ்க்கை ஒரு முறைதான்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum