தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலையில் உவமை நயம்
2 posters
Page 1 of 1
தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலையில் உவமை நயம்
தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலையில் உவமை நயம்
பாடலின் கருத்தினை தெள்ளத் தெளிவாக உணர்ந்து இன்பம் பெற உவமைகள் பெரிதும் உதவுகின்றன. உவமைகள், உவமிக்கப்படும் பொருளைவிடவும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். மேலும், அவ்வுயர்ந்த உவமையால் மனிதனின் பண்புகளும், ஒழுக்கமும் மேலும் உயர வேண்டும் என்றும் கூறலாம். இதுதான் உவமையின் சிறந்த பயனாக இருக்கமுடியும். அவ்வகையில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலையில் காணப்படும் இலக்கிய நலன்களை இக்கட்டுரை விவரிக்கிறது.
திருமாலையில் உவமைகள்
ஆழ்வார்கள் இயற்கை வளங்களுடன் நிலம், நீர், காற்று, கடல், நெருப்பு, வானம், சுடர்கள், சந்திய சூரியர்கள், கோளங்கள், மலை, ஆறு, காடுகள், வனங்கள், விலங்குகள், பறவைகள் இதர உயிரினங்களுடன் இணைந்து இசைவான ஒரு மனித வாழ்க்கையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்கள். அத்தகைய இயற்கையோடு இணைந்து, வயல்கள், தோப்புகள், சோலைகள், கோவில்கள், குளங்கள், நீர்நிலைகள் குறித்தான உவமைகள் தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாசுரங்களோடு ஒன்றிவரக் காணலாம்.
1. மலை
ஒப்புயர்வற்ற தோற்றத்திற்கும், உறுதியான நிலைக்கும் மலையை உவமையாகப் புலவர்கள் கூறுவர். விலங்கல், குன்று, வரை, வெற்பு, கிரி எனப்பல பெயர்களில் மலை அழைக்கப்படுகின்றது. அழகிய செம்பொன்னாலாகிய மேரு மலையை ஒத்த கோயில் நீலமணி போன்ற எம்பெருமானே என்று தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலைப் புகழ்வார்.
செம்பொன் ஆய அருவரை அனைய கோயில் (21:3)
பச்சை மாமலைபோல் மேனி (2:1)
என வரும் பாசுர அடிகளில் திருமாலுக்குத் தொண்டரடிப்பொடியாழ்வார் மலையை உவமை செய்துள்ளதைக் காணலாம்.
2. நீர்
கடல்நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, மேகமாகத் திரண்டு, மழையாகப்பெய்கிறது என்பது அறிவியல் உண்மை.
பாயுநீர் அரங்கந் தன்னுள் (20:1)
பொங்நீர் பரந்து பாயும் (23:2)
குளித்து மூன்று (25:1)
தரங்க நீர் அடைக்க (27:2)
கலங்கல் நீர்சூழ் (37:1)
சூழ்புனல் அரங்கத்தானே (33:4)
போன்ற பாசுரங்களின் அடிகளில் நீரை உவமையாக்கி உள்ளார். பக்திப் பனுவல்களை ஊடுருவிப்பார்த்தால் நீரின் பெருமையைப் பல்வேறு நிலைகளில் வருணித்திருப்பதைக் காணலாம்.
3. தண்ணீர்
தொண்டரடிப் பொடியாழ்வார் உப்பு நீர் எவர்க்குப் பயன்படாதது போலத் தாமும் உறவினர்களுக்குப் பயன்படாதவனாய் இருப்பதாகக் கூறுகிறார்.
உவர்த்த நீர்போல் என்தனுக்
குற்றவர்க் கொன்று மல்லேன் (31:2)
மக்கள் காட்டிய வழியில் தண்ணீர் செல்வது போல, இறைவனும் மக்கள் செல்லும் வழியில் தானும் செல்லும் தன்மை உடையவர். நீரின் தன்மை போல் கலக்கும் எளியக்குணம் எம்பெருமானுக்கு உண்டு என்பர் பெரியோர்.
4. கடல்
ஆழி, பரவை, வேலை, ஓதம், வெள்ளம், பௌவம் எனப்பலவாறு அழைக்கப்படும் கடல் ஆழ்வார்களின் பாசுரங்களில் உவமையாக வந்துள்ளன.
எறியுநீர் வெறிகொள் வேலை (13:1)
ஓங்கு முந்நீர் அடைத்துல (11:1)
எறியும் தண் பரவை மீதே (18:1)
என வரும் அடிகளில் தொண்டரடிப் பொடியாழ்வார் கடலை உவமைப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளார்.
5. வெள்ளம்
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் அது வெள்ளம் என்று கூறப்படும். கடலுக்கும் வெள்ளம் என்ற பெயருண்டு.
வெள்ள நீர் பரந்த பாயும்
விரிபொழில் அரங்கந் தன்னுள் (24:1)
வெள்ள நீரான காவேரி எங்கும் பரவிப் பாய்வதற்கு இடமானதும், விசாலமானதுமான சோலைகளையுடையது அரங்கம் என்கிற நகரம் என்கிறார்.
மழைக்கன்று விரைமுன் ஏந்தும்
மைந்தனே ! மதுர வாறே ! (36:1)
இந்திரன் ஏவிய மழை ஏழு நாள் விடாமல் பெய்தபோது முன்கூட்டியே மழையைத் தடுப்பதற்காகக் கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய மைந்தனே ! இனிய ஆறு போல் எல்லோர்க்கும் தாகம் தீர்ப்பவனே என்னும் பொருளில் வெள்ளமாக ஓடும் ஆற்றின் சிறப்பையும் பாடுவார் தொண்டரடிப் பொடியாழ்வார்.
6. மேகம்
மேகம், முகில் என்றும் கார் என்றும் அழைக்கப்படும். மேகம் பெய்யும் மழைதான் உயிர்களுக்கு உயிர். எம்பெருமானின் திருமேனி அழகிற்குக் காளமேகத்தை உவமையாக ஆழ்வார்கள் கூறியுள்ளனர்.
கொண்டல்மீது அணவும் சோலை (14:2)
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே ! (32:2)
உருவத்தில் கருமை நிறத்தாலும், தன்மையில் குளிர்ச்சியாலும், பண்பில் கைமாறு கருதாமல் அனைவர்க்கும் காரணமின்றி உதவுவதாலும், தனக்கென்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் பிறர்க்கு வழங்குவதாலும் மேகத்தை எம்பெருமானுக்கு கண்ணனுக்கு உவமையாகச் சொல்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.
7. நவரத்தினங்கள்
இயற்கை அளித்த செல்வங்களில் நவரத்தினங்கள் எனப்படும் மாணிக்கம், முத்து, வைரம், கோமேதகம், வைடூரியம், மரகதம், பவளம், நீலம், புஷ்பராகம் என்ற ஒன்பதும் விலையுயர்ந்ததாக மக்களால் போற்றப்படுகின்றன. இவைகள் நிலத்திலும், கடலிலும் இருந்து கிடைக்கின்றன. இவற்றின் நிறமும், ஒளியும் மனிதர்களைக் கவர்ந்து, அவர்களின் ஆபரணங்களில் திகழ்ந்து, அவர்களுக்கு அழகு சேர்க்கின்றன. நவரத்தினங்களில் மரகதம், பவளம், பொன் பற்றிய உவமைகளைத் தொண்டரடிப்பொடியாழ்வார் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம்.
திருநன் மார்பும் மரகத உருவும் தோளும் (20:2)
துவரிதழ்ப் பவள வாயும் (20:3)
பவளவாய் அரங்க னார்க்கு (21:1)
என வரும் பாசுரங்களின் அடிகளில் மரகதமும், பவளமும் உவமையாக்கப் பட்டுள்ளது. எம்பெருமானையும் நம்மிடமிருந்து பிரிக்க இயலாது. அவனைப் பொன்னுடன் இணைத்து,
அணியினார் செம்பொன் ஆய
அருவரை அனைய கோயில் (ப:3)
என்று ஆழ்வார் அனுபவித்து, அனுபவித்து இன்பம் நுகர்கின்றார்.
8. மலர்கள்
மென்மைத் தன்மைக்கே எடுத்துக்காட்டாகக் கவிஞர்கள் மலர்களைக் கூறுவர். மலர்கள் தம் வாசனையாலும், அழகிய பல வண்ணங்களாலும் மனித மனங்களை ஈர்க்கின்றன. இறைவனுக்கு மலர்கொண்டு பூமாலைத் தொடுத்து வாழ்ந்தவர் தொண்டரடிப்பொடி என்பது இவ்வாழ்வாரின் சிறப்பாகும். “செண்பக மல்லிமை யோடு
செங்கழு நீர்இரு வாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன்
இன்று இவை சூட்டவா வென்று”17
எனும் பாசுர அடிகளால் அறிகிறோம்.
தாமரை
ஆழ்வார்கள் பாசுரங்களில் மலர்கள் சிறப்பாக உவமையாகக் கூறப்பட்டுள்ளது. மலர்களில் மிகச் சிறந்தது தாமரை என்பர். ‘பூவெனப் படுவது பொறிவாழ் பூவே’ என்பது சான்றோர் மொழி. ஈண்டுப் பொறியென்பது திருமகளைக் குறிக்கும். அவள் வசிப்பதால், தாமரை ஏற்றம் பெற்றது. தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலின் கண்களுக்குத் தாமரையை உவமிப்பதைக் காணலாம்.
தூய தாமரைக் கண்களும் (20:3)
தாமரைக் கண்ணன் எம்மான் (18:2)
கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பதால், கண்கள் அதிகமாக வருணிக்கப்படுகின்றன போலும்.
9. மாலை
மலர்களைக் கயிற்றில் கோர்ப்பதால் அவை ஒரு சேர விளங்குவதுடன் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.
தண்துழாய் மாலை மார்பன் (5:3)
பூந்துவள மாலை (13:2)
புனத்துழாய் மாலை யானே (30:3)
தேனுலாம் துளப மாலை (41:2)
என வரும் பாசுர அடிகளால், திருமாலுக்கு மாலை அணிவிக்கும் தொண்டையும், பக்தி நெறியையும் தொண்டரடிப்பொடியாழ்வார் எடுத்துரைப்பார்.
10. உயிரினங்கள்
ஆழ்வார்களின் பாசுரங்களால் உயிரினங்களை உவமையாகக் கையாண்டுள்ளதைப் பார்க்கிறோம்.
திருமாலாகிய யானையை ஆழ்வார் தம் அன்பு எனும் பாசக் கயிற்றால் பிணைத்து, தம் உள்ளமாகிய கோயிலில் கட்டிப்போட்டார் என்பதற்கு,
ஒளியுளார் ஆனைக் காகி (28:1)
ஆனைக்கன்று அருளை ஈந்த (44:3)
வேளமால் யானை கொன்ற (45:2)
என வரும் பாசுரங்களின் அடிகளில் காணப்படும் உவமைகளே சான்றாகி நிற்கின்றது.
நாய்க்கு இடுமின் நீரே (14:4)
குரங்குகள் மலையைத் நூக்க (27:1)
சிலமிலா அணிலும் போலேன் (27:2)
முதலைமேல் சீறி வந்தார் (28:2)
என வரும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலைப் பாசுரஅடிகளில் நாய், குரங்கு, அணில், முதலை போன்ற விலங்குகளும் உவமையாக்கப் பட்டுள்ளன. திருமாலிடம் தன்னைத் தகுதி அற்றவனாகவும், தன்னைத் தாழ்த்திக் கொள்ளவும், திருமாலின் சிறப்பைப் புலப்படுத்தவும் மேற்கண்ட உவமைகள் பயின்று வந்துள்ளன.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலையில் உவமை நயம்
மகிழ்ச்சி நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» திருவள்ளுவரின் சொல் நயம்...
» பாவேந்தர் உவமை
» எடுத்துக்காட்டு உவமை அணி
» மிருக உவமை...! - கவிதை
» நடைக்கு உவமை ஆனாள்...(விடுகதைகள்)
» பாவேந்தர் உவமை
» எடுத்துக்காட்டு உவமை அணி
» மிருக உவமை...! - கவிதை
» நடைக்கு உவமை ஆனாள்...(விடுகதைகள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum