தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

3 posters

Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Nov 06, 2012 9:51 pm

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!

கவிஞர் இரா .இரவி .

உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் !
உலகம் முழுவதும் பரவியுள்ள
மொழி தமிழ் !

[b]உலகின் முதல்மொழி தமிழ்மொழி என்பதை
உரைத்தார் அன்றே பன்மொழி அறிஞர் பாவாணர் !

பன்னாட்டு ஆட்சிமொழியான
[/b][b][b]மொழி [/b][/b][b][b]தமிழ் !
பண்டைக் காலம் முதல் ஆளுமை மொழி தமிழ் !

[/b][/b]
இணையத்தில் வாகை சூடிய மொழி தமிழ் !
இதயத்தில் இடம் பிடித்த மொழி தமிழ் !

மூவேந்தர்கள் போற்றி வளர்த்த மொழி தமிழ் !
மூத்த புலவர்கள் கட்டிக் கா
த்த மொழி தமிழ் !

[b][b][b]எழுத்து பேச்சு இரண்டிலும் வாழும் மொழி தமிழ் !
இணையில்லா திருக்குறளை
[/b][/b][/b][b][b][b][b][b][b][b]ஈ[/b][/b]ந்த[/b][/b][/b][/b][/b][b][b][b][b][b][b][b][b]மொழி[/b][/b][/b] தமிழ் !

[/b]மொழி அறியாதவர்களும் ரசிக்கும் மொழி தமிழ்
மொழியின் பால் ஈர்ப்பு சக்தி உள்ள மொழி தமிழ் !

[/b][/b][/b][/b]செம்மொழி நம் மொழி உணர்வாய் தமிழா !
செம்மையைக் காத்திட முயல்வாய் தமிழா !

கலப்பு தாவரத்தில் நன்மை தரலாம் !

கலப்பு மொழிக்கு தீமையே தந்திடும் !

கலப்படம் உணவில் தண்டனைக்குரிய குற்றம் !
கலப்படம் மொழியில்புரிவதும் குற்றமே !

இலக்கண இலக்கியம் நிறைந்த மொழி தமிழ் !

எண்ணிலடங்கா சொற்கள் மிகுந்த மொழி தமிழ் !

இயல் இசை நாடகம் நிறைந்த மொழி தமிழ் !
இனிய முத்தமிழில் இனிய மொழி தமிழ் !

[b][b][b]தமி[b]ங்கிலப் பேச்சிற்கு முடிவுரை எழுதுங்கள் !

தமிழை தமி
ழாகவேப் பேசிட முயலுங்கள் !

ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
அழகு தமிழுக்கு எந்த மொழியும் ஈடாகாது

[/b][/b][/b][/b]தமிழன் பெருமையை நெஞ்சில் நிறுத்து !
தமிழோடு பிற மொழி கலப்பதை நிறுத்து !

இல்லாதவன் பிச்சை எடுத்தல் நியாயம் !
இருப்பவன் பிச்சை எடுத்ல் நியாயம் !

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 07, 2012 8:19 am

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!
--

தமிழ் மொழியில் வாழ்வியல் உள்பட அனைத்தும் இருக்கிறது. தமிழில் கல்வி கற்றால் வேலைதான் நிறைய கிடைக்க மாட்டேன் என்கிறது. தமிழைத் தவிர பிற பாடங்கள் படித்தால் உடனே நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. எடுத்துக்காட்டுக்கு... நாங்களே (தமிழ் துறையில் படித்தவர்களே) சாட்சி.

யாண்டா தமிழைப் படிச்சோமுன்னே ஆயிடுச்சி...

இன்று கல்வி என்பது சம்பாதியத்துக்கே தான்... அந்த சம்பாதியத்தை தமிழ் மொழி தரவில்லை... தர முடியாது என்பது என் கருத்து.

பேச்சுக்கு வேண்டுமானால் தமிழ் தமிழ் என்று பேசலாம்... வேலைக்கும் வாழ்க்கைக்கும் தமிழ் உதவாது. அரசியல்வாதிகள் இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனில் அடுத்த தலைமுறையினர் தமிழ் கற்பதை விட்டுவிட்டு ஆங்கிலத்துக்கே சென்று விடுவார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Wed Nov 07, 2012 4:09 pm

வேலைக்கும் வாழ்க்கைக்கும் தமிழ் உதவாது..
இது ஒரு கசப்பான உண்மையே
-
எனது தம்பி கணிதம் (M.Sc) முடித்தவுடன், அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் 1972 ல் லெக்சரர் ஆக பணியில்
சேர்ந்தார். (செலவு ஏதுமின்றி..)
-
அவருடன் பள்ளி இறுதி வரை படித்த நண்பர், தமிழில்
புலவர் பட்டம் பெற்று பத்தாண்டுகள் வேலை வாய்ப்பில்லாமல்
தவித்தார். இது அப்போதைய நிலை
-
அது இன்றும் தொடர்கிறது...
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Nov 07, 2012 7:11 pm

தமிழ் படித்து விட்டு ஏன் வேலைக்கு போக வேண்டும் .பலருக்கு வேலை கொடுங்கள் .தமிழில் படித்தவர்தான் அப்துல் கலாம் .தமிழில் படித்தவர்தான் மயில்சாமி அண்ணாதுரை தமிழில் படித்தவர்தான் சாலமன் பாப்பையா ,தமிழில்
படித்தவர்தான் கு .ஞானசம்பந்தம் தமிழில் படித்தவர்கள் தான் திரைப்படத்
துறையில் முத்திரை பதித்த இயக்குனர்கள் ,இசை அமைப்பாளர்கள் ,நடிகர்கள் .எனவே தமிழை தமிழர்களே குறைத்து ப் பேசாதீர்கள் .இந்தி
படித்தால் வேலை கிடைக்கும் என்பது மாயைவட மாநிலகளில் இந்தி
தெரிந்தவர்களுக்கு வேலை இன்றி தமிழகதிற்கு வேலை தேடி வந்த வண்ணம் உள்ளனர் ..ஆங்கிலம் உலக மொழி என்கின்றனர் .ஆங்கிலம் அறிந்து அமெரிக்காவில் வேலையின்றி
வாடுகின்றனர் பலர் .தமிழில் படித்தால் பண்பாடு வரும் ஒழுக்கம் வரும் நல்ல
சிந்தனை வரும் வாழ்வில் முன்னேற்றம் வரும் ."தமிழ் படித்தால் வேலை
கிடைக்காது என்பது பழைய புலம்பல்" தமிழ் படித்தால் மனிதன் மனிதானாக வாழலாம் .
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Wed Nov 07, 2012 7:45 pm

தொலைக்காட்சியினர் மாற வேண்டும்
-
தொலைக்காட்சிகளில் ஷோ டைம்,
டாப்டக்கர்,
ஸ்டார்ஸ் ஸ்டைல்,
சூப்பர் ஹிட் படம்,
கிளைமாக்ஸ்,
சூப்பர் டூப்பர்,
சூப்பர் காமெடி,
சூப்பர் டாப்டென், என்றெல்லாம் சொல்லப்படுகின்றன.

தொலைக்-காட்சிகளில் எல்லாம் தமிழ் முழுக்க வரவேண்டும்.
அதற்கு தொலைக்காட்சி நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Wed Nov 07, 2012 7:51 pm

தமிழக்கல்வியின் இன்றைய நிலை
------------------------
தமிழகத்தில் உள்ள 96 பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவ,
மாணவியருக்கு திறனறி தேர்வு நடத்தப்பட்டது. அதில்
மாணவர்கள் தமிழில் பிழையி்ன்றி எழுதவும், தடையின்றி
வாசிக்கவும் சிரமப்படுவது கண்டறியப்பட்டது.

தமிழ் மொழியை வாசிக்க திணறும், .மற்ற பாடங்களை
படிப்பது கடினமாகும்.
-

[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 07, 2012 7:57 pm

தொலைக்காட்சி சேனல்கள் லாப நோக்கத்திற்காகச் செயல்படுவது. அது எப்படியாவது நடந்துகொண்டு போகட்டும்...

தமிழக அரசு... தமிழில் படித்தவர்களுக்கும் தமிழில் கல்வியல் பட்டம் பெற்றவர்களுக்கும் கூட வேலைவாய்ப்பில் குறைவான இடத்தைத்தான் நிரப்புகின்றன...

என்னுடன் தமிழில் படித்து கல்வியல் பட்டம் பெற்றவர்கள் அரசு வேலையில் சேர்ந்துவிட்டார்கள்... அப்படிச் சேராதவர்கள் கூட தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளில் சேர்ந்து பத்தாயிரத்துக்கும் மேலாகச் சம்பளம் பெறுகிறார்கள்... தமிழில் பயின்றவர்கள் 3500 முதல் 6000 ரூபாய்க்குத்தான் வேலைக்குப் போகிறார்கள்... கல்லூரியில் அதைவிட கொடுமை... தமிழில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் 5000 முதல் 8000 வரை கூட கொடுக்க யோசிக்கிறார்கள்...

தமிழ்தானே என்ற மெத்தன போக்கே காரணம்...

தமிழ் வாழ்வியலை கொடுக்கிறது. வாழ்க்கைக்கு - வேலைக்கு கை கொடுப்பது இல்லை...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 07, 2012 8:02 pm

eraeravi wrote:இந்தி
படித்தால் வேலை கிடைக்கும் என்பது மாயைவட மாநிலகளில் இந்தி
தெரிந்தவர்களுக்கு வேலை இன்றி தமிழகதிற்கு வேலை தேடி வந்த வண்ணம் உள்ளனர் ..ஆங்கிலம் உலக மொழி என்கின்றனர் .ஆங்கிலம் அறிந்து அமெரிக்காவில் வேலையின்றி
வாடுகின்றனர் பலர் .தமிழில் படித்தால் பண்பாடு வரும் ஒழுக்கம் வரும் நல்ல
சிந்தனை வரும் வாழ்வில் முன்னேற்றம் வரும் ."தமிழ் படித்தால் வேலை
கிடைக்காது என்பது பழைய புலம்பல்" தமிழ் படித்தால் மனிதன் மனிதானாக வாழலாம் .

தமிழில் படித்து தமிழாலே வாழ்பவனே சொல்கிறேன்... தமிழால் (தமிழ் பயின்றவர்கள்) 10 க்கும் குறைவான சதவிதத்தினர்தான் நன்றாக வாழ முடிகிறது. மற்ற... துறையினர் 90 சதவீதம் நன்றாக செல்வாக்குடன் - வேலைவாய்ப்புடன் வாழ வைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Nov 07, 2012 9:50 pm

தமிழ் படித்து விட்டு எந்த முயற்சியும் இன்றி அரசு வேலைக்காக
காத்திருந்து வருந்துபவர்10 சவிகிதம் பேர் தான் ..தமிழ் படித்து விட்டு மற்ற
90சவிகிதம் பேர் வாழ்வில் சாதனை புரிந்து வருகின்றனர் .ஆங்கிலத்தில் பொறியியல் படித்து விட்டு வேலையின்றி பாடுபவர்களும் இருக்கிறர்கள் என்பதை உணருங்கள்
.தமிழையும், தமிழ் படிப்பையும் குறை சொல்வதை தமிழ் மாணவரான நீங்கள் செய்யாதீர்கள் .
உங்கள் கேள்விகளுக்கு விடை பதிலில் உள்ளது .
தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா நேர்முகம் கண்டு மகிழுங்கள் .

[You must be registered and logged in to see this link.]
--
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Wed Nov 07, 2012 10:09 pm

தமிழில் போதிய (அறிவியல் / சமூக அறிவியல்) நூல்கள் இல்லாத
காரணத்தால்தான் அனைத்து நிலையிலும் தமிழ்வழிக் கல்வியை
நடைமுறைப்படுத்த முடியாமல் நொண்டிக் கொண்டிருக்கிறோம்.

மேனிலைப் பள்ளிப் படிப்புவரை தமிழ்வழி பயின்றுவிட்டுக்
கல்லூரிக்குச் செல்கையில் ஆங்கிலவழியிலேயே மிகப்பெரும்பாலும்
கற்கவேண்டியுள்ளது என்பதால், பள்ளியிலேயே ஆங்கிலவழி
பயின்றவர்களுக்கு அது பெரும் வசதியாகிவிடுகிறது.

எனவே, பொருட் செலவையும் பொருட்படுத்தாது தங்கள் பிள்ளைகளை
ஆங்கிலவழிக் கல்வியில் சேர்த்து விடும் பெற்றோருடைய
மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்வழிக் கற்றோருக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம்கூட வேண்டாம்.
முன்னுரிமையாவது தரப்படுகிறதா என்றால், அதுவும் இல்லை,

அவ்வளவு ஏன், ஆட்சியின் தலைமையிடமான தலைமைச் செயலகத்தில்
குறைந்த பட்சம் தமிழ் பேசத் தெரியாதவர்களுக்கு இடமில்லை என்று
சட்டமியற்ற முடியுமா?

இப்படியொரு கேள்வியைக் கேட்ட உடனே தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு
பீறிட்டுக் கிளம்பிவிடும்.

1978லேயே அரசு ஊழியர்கள் தமிழில் ஒப்பமிட வேண்டும் என அரசாணை
பிறப்பிக்கப்பட்டுவிட்ட போதிலும், அதை மீறுபவர்களை எதுவும் செய்ய
இயலா நிலையிலேயே இன்றுவரை அரசு உள்ளது.

-
============================================
(முனைவர் ச. ராஜநாயகம், லயோலா கல்லூரி)
(கட்டுரையிலிருந்து)
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Nov 07, 2012 10:22 pm

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆயவு நடத்தி அறிவுரை வழங்கி தமிழக அரசுப் பணியாளர்கள் அனைவரும் தமிழில்தான் ஊதியத்திற்கு கையொப்பம் இட்டு வருகின்றனர் .

என் இணையத்தில் நான் எழுதிய கட்டுரைதமிழ் ஆட்சி மொழி
[You must be registered and logged in to see this link.] படித்துப் பாருங்கள்
.
தமிழை உயர்த்தி தமிழ் நாட்டில் தமிழ் இணையத்தில் ஒரு கவிதை எழுதியதற்கு தமிழர்களின் விமர்சனம் பாருங்கள்
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum