தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
4 posters
Page 1 of 1
ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
ஹைகூ வானம்
நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் 93.சி .வி .ஆர் .தெரு ,சின்ன காஞ்சிபுரம் .631501 செல் 9894809812.
விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அன்னை ராஜேஷ்வரி பதிப்பகம் ,41.கல்யாண சுந்தரம் தெரு ,பெரம்பூர் ,சென்னை .11 விலை ரூபாய் 60
நூலின் அட்டைபடமே நூலை வாங்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் மிக நேர்த்தியாக உள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர்
வீ .தங்கராஜ் அவர்களின் இரண்டாவது நூல் இது .முதல்
நூலான குறிஞ்சிப்பூக்கள் நூலின் மூலம் பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட,பாராட்டப்பட்ட கவிஞர் .முதல் நூலில் ஹைக்கூ ,புதுக் கவிதை ,மரபுக் கவிதை மூன்றும்
இருந்தது .இந்த நூலில் ஹைக்கூ கவிதைகள் மட்டும் இடம் பெற்றுள்ளது .தள்ளாத
வயதிலும் தளராத தேனீ இவர் .இவரது ஹைக்கூ வராத சிற்றிதழே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி .குறுந்தகவல் இதழ்கள் பல இயங்கி வருகின்றன .அவற்றிலும் ஹைக்கூ கவிதைகள் பங்களிப்பு செய்து வருபவர் . ஒய்வு அறியாத உன்னத படைப்பாளி .
இந்நூலை ஹைக்கூ அன்னை முனைவர் தி .லீலாவதி அவர்களுக்கு சமர்ப்பணம்
செய்துள்ளார். கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் ,பேராசிரியர் மித்ரா , 55
வருடங்கள் நன்பர் கவிஞர் பழனி எழில்மாறன் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு
வரவேற்பு தோரணங்களாக உள்ளது .ஹைக்கூ கவிதை ரசிகர்களுக்கும் ,
ஆய்வாளர்களுக்கும் ஹைக்கூ விருந்தாக உள்ளது .இந்நூலிற்கு பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கும் தகுதி உள்ளது.
அணுவுக்குள் அண்டம்
மூவடிக்குள் ...
ஹைகூ வானம் !
என்ற முதல் ஹைக்கூ கவிதையே நூலின் சிறப்பை பறை சாற்றுவதாக உள்ளது .பாராட்டுக்கள் .
இயற்கையைப் பற்றி ஹைக்கூ கவிதை எழுதுவதில் ஜப்பானிய கவிஞர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல தமிழ்க்கவிஞர்கள் என சவால் விடும் வண்ணம் ஹைக்கூ வடித்துள்ளார் .இயற்கையை உற்று நோக்கி ,ரசித்து ,ருசித்து ,ஒன்றி ஹைக்கூ படைத்துள்ளார் .நூலில் உள்ள அத்தனை ஹைக்கூவும் பிடித்தாலும், பதச்சோறாக சில மட்டும் தங்கள் ரசனைக்கு மேற்கோள் காட்டி உள்ளேன் .
நகராத சூரியன்
கிழக்கிலும் மேற்கிலும்
நகர்த்தும் பூமி !
சூரியன் நகர் வில்லை பூமிதான் சுற்றுகிறது என்ற அறிவியல் செய்தியை ஹைக்கூவில் உணர்த்துகின்றார் .
நிலாவை பாடாத கவிஞரே இல்லை .இவரும் பாடி உள்ளார் .ஆனால் இவரது பார்வை மிகவும் வித்தியாசமானது .பாருங்கள் .
மீனுக்கு இரையாகாமல்
மிதக்கிறது அப்பம்
குளத்தில் நிலா !
இந்த ஹைக்கூவை திருபவும் ரசித்துப் படித்தேன் .நம் கண் முன் இயற்கையை காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .
நாம் மலையில் இருந்து கிழே பார்த்தால் கிழே உள்ளவை மிகவும் சிறிதாகவே
தோன்றும் .ஹைக்கூ என்பது ஒரு உணர்வு படைப்பாளி தான் உணர்ந்ததை
வாசகருக்கும் உணர்த்துதல் .
மலை ஏற ..ஏற
தெருவெல்லாம்
தீப்பெட்டி வீடுகள் !
மனிதர்கள்
கவிதை எழுதுவார்கள் படித்து இருக்கிறோம். நூல் ஆசிரியர் கவிஞர் வீ
.தங்கராஜ் அவர்களின் கற்பனையில் மேகமும் கவிதை எழுதுகின்றது பாருங்கள் .
மேகம் எழுதிய
இருவரிக் கவிதை
இடி மின்னல் !
சோகத்திற்கு வருந்தாதீர்கள் என்று இயற்கையின் மூலம் தன்னம்பிக்கை உணர்த்தும் ஹைக்கூ இதோ !
விதையின் வாழ்க்கை
மரணத்தில் தொடக்கம்
உயிர்[b]த்தெழும் அற்புதம் ![/b]
தன் உழைப்பில் வாழாமல் பிறர் உழைப்பில் வாழும் சோம்பேறிகளுக்கு அறிவுரை கூறும் வண்ணம் ஒரு ஹைக்கூ .
காக்கை கூடு கட்டுகிறது
குயிலுக்குக் கொண்டாட்டம்
முட்டையிடலாமே !
வாழ்க்கை வாழ்வதற்கே ! விரக்தி சோகம் கவலை வேண்டாம் என்று உணர்த்திடும் ஹைக்கூ .
வாழ்க்கை
அகல் விளக்கு அல்ல
அற்புத விளக்கு !
மலர்களையும் வண்ணத்துப்பூச்சியையும் ரசிப்பது சுகமோ சுகம் .நூல் ஆசிரியர் அவர் ரசித்த காட்சியை நமக்கும் உணர்த்துகின்றார் .
வண்ணப் பூவில்
வண்ணத்துப் பூச்சி
அழகுக்கு அழகு !
சுற்றுச்சுழல் விழிப்புணர்வும் விதைக்கின்றார் .நமது நாட்டில் உள்ள
ஆறுகள் எல்லாம் பாழாகி வருகின்றது .நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு
மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடி உள்ளது .ஆனால் இன்று குட்டை
போல சாக்கடை தண்ணீரே தேங்கி உள்ளது .பார்க்க நெஞ்சம் பொறுக்க வில்லை .இப்படி பல்வேறு சிந்தனைகளை மலர்வித்தது இந்த ஹைக்கூ .
ஓடிய ஆறு
முடமானது
சாக்கடைக் கலப்பு !
நாட்டில் திட்டங்கள் திட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள் .ஆனால் வறுமை
மட்டும் ஒழிந்த பாடில்லை .ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் அவர்கள் வறுமையை
ஒழித்து ,அவர்களது பல தலைமுறைக்கும் பயன்படும் வண்ணம் சொத்துக்களை குவித்து விடுகின்றனர் .நாட்டின் வறுமையை உணர்த்தும் ஹைக்கூ .
குப்பையைக் கிளறுவது
கோழியல்ல
கோணியுடன் சிறுவன் !
தங்கம் விலை ஏற ஏற நாட்டில் கொலை, கொள்ளை குற்றங்கள் பெருகிக் கொண்டே
போகின்றது .ஏழைகளின் வாழ்வில் தங்கம் பெரிய தலைவலியாக உள்ளது .தங்க ஆசை
பெருகப் பெருக ஏழைகளுக்கு திண்டாட்டம் .ஏழையின் மகளுக்கு திருமணம்
என்றாலே நொந்து நூலாகி விடுகின்றனர் .
பொட்டுத் தங்கமில்லை
"ஆளானாள் " மகள்
ஆடிப்போனது வீடு !
எந்த மதமும் வன்முறை போதிக்க வில்லை .வன்முறை போதித்தால் அது மதமே இல்லை
.மதம் என்பதே விலங்கில் இருந்து வந்த மனிதனை நெறிப் படுத்த , அன்பு செலுத்த
மனிதனால் தோற்றுவிக்கப்பட்டதுதான் .ஆனால் இது புரியாமல் , பகுத்தறிவை
பயன்படுத்தாமல் மதத்தின் பெயரால் மோதி விலங்காக மாறி வரும் முட்டாள்களுக்கு
புத்தி புகட்டும் ஹைக்கூ .
நாவில் நாமாவளி
கையில் ஆயுதம்
மனத்தில் மதம் !
இன்று
மின் வெட்டு பெரிய பிரச்சனையாக உள்ளது .பொது மக்கள் யாவரும் மிக
மிக கோபத்தில் உள்ளனர் .உடனடியாக மின் வெட்டை நீக்க வேண்டும் .
மின்சாரம் என்பது அடிப்படை தேவையாகி விட்டது .இதனை பூர்த்தி செய்ய
வேண்டியது மத்தியிலும் , மாநிலத்திலும் ஆள்வோரின் தலையாய கடமை .அது விடுத்து
மாறி மாறி குற்றம் சொல்வது ,புள்ளி விபரங்கள் தருவது ,காரணங்கள்
சொல்வது ,இவற்றை கேட்கும்போது பொதுமக்களுக்கு எரிச்சல் வருகின்றது .மின்
வெட்டு பற்றியும் ஒரு ஹைக்கூ எழுதி உள்ளார் .
வாடும் பயிர்
வரப்பில் உழவன்
மின்வெட்டு !
மாதா
பிதா குரு தெய்வம் என்றார்கள் .ஆசிரியர் பற்றி அவர்களது தியாக
உணர்வு பற்றி மிக சிக்கனமான சொற்களில் மிக நேர்த்தியாக ஒரு ஹைக்கூ
படைத்துள்ளார் .
பல தீபங்கள் ஒளிர
ஒரு மெழுகுவர்த்தி எரிகிறது
நல்லாசிரியர் !
இன்று
ஒரு சில ஆசிரியர்கள் மிக உயர்வான ஆசிரியர் பணியை புனிதமாக நினைக்காமல்
தவறு செய்த காரணத்தால் மிக கவனமாக ஆசிரியர் என்று எழுதாமல் நல்லாசிரியர் என்று எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .மிக சிறந்த ஹைக்கூ நூல் .அனைவரும் வாங்கி படியுங்கள் .
வயது வேறுபாடு இன்றி எல்லோரோடும் அன்பாகப் பழகும் மிகச் சிறந்த மனிதரின்
மிகச் சிறந்த படைப்பு .தொடர்ந்து எழுதுங்கள் .தங்கள் இலக்கியப் பனி சிறக்க
வாழ்த்துக்கள் .மிக நேர்த்தியாக வடிவமைத்து அச்சிட்ட அன்னை ராஜேஷ்வரி பதிப்பகதாருக்கும் பாராட்டுக்கள்
--

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் வீ .தங்கராஜ்
» புள்ளிகள் நிறைந்த வானம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் ப. மதியழகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பூ பூக்கும் வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum