தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பேரறிஞர் அண்ணா- சிறு கதைகளில் பெண்ணியம் - டாக்டர் மா.தியாகராசன்
3 posters
Page 1 of 1
பேரறிஞர் அண்ணா- சிறு கதைகளில் பெண்ணியம் - டாக்டர் மா.தியாகராசன்
பேரறிஞர் அண்ணா- சிறு கதைகளில் பெண்ணியம்
டாக்டர் மா.தியாகராசன்
சிங்கப்பூர் 558286
முன்னுரை:
பேரறிஞர் அண்ணா இருளிலிருந்து தமிழக மக்களுக்கு ஒரு விளக்கென திகழ்ந்தவர். மூச்சின்றி ஒடுங்கிக் கிடந்த மக்களின் இதயத்திற்குத் துடிப்பாய் இருந்தவர். இயலாமையில் இருந்த துளிகளுக்குg; பெரு வெள்ளமாக நீருற்றாகjத் திகழ்ந்தவர். ஒன்றுமில்லாப் பாமர மக்களுக்கு அமுத சுரபியாய் வாழ்ந்தவர். பாலைவனமாய் மாறியிருந்த தமிழகத்தைச் சோலையாக மாற்றியவர்.
பகுத்தறிவை பறைசாற்றி அண்ணா தமிழகத்தின் மெரீனா கடற்கரையில் கண்ணகிக்குச் சிலை வைத்தவர். இப்படிப்பட்டவர் பெண்மையை உணர்த்திப் பேசியதிலும், எழுதியதிலும் வியப்பேதுமில்லை. பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுப்பில் அதாவது பல்வேறு பத்திரிகைகளிலும், நூல்களிலும் வெளிவந்த அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளைத் தொகுத்து முதல் தொகுப்பாக வெளியிட்டுள்ளனர் குயிலோசை பதிப்பகத்தார். இதில் உள்ள முப்பது சிறுகதைகளில் பெண்ணின் உரிமை, உணர்வு, வாழ்வு, அவரின் சமயோசித புத்தி என்று வாழ்வியல் கூறுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சமுதாய மறுமலர்ச்கிக்குப் பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் பெருந்தொண்டு செய்துள்ளன என்பது இச்சிறுகதைகளைப் படிக்கின்றபோதே தெரிகின்றது. இவர் தம் நூல்கள் அனைத்தையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியதில் வியப்பேதுமில்லை. மனிதர்களின் எண்ணங்களைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டு எழுதியதாகத்தான் இவரின் இலக்கியங்கள் அமையப் பெற்றுள்ளன. பைந்தமிழ் பேசும் பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற பேரறிஞர் அண்ணாவின் உணர்வுகளில் சமுதாய அக்கறை அளவுக்கு அதிகமாகவே இருந்தது என்பது உண்மை. "சொல்வன்மை" என்கிற திருக்குறள் அதிகாரத்தின் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்.
மகளிர்நிலை:
பேரறிஞர் அண்ணா பல்வேறு புனைப்பெயர்களில் எழுதிப் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பில் பார்க்கின்றபோது பெண்மைச் சித்தரிப்பு அருமையாக அமைந்திருந்ததை உணர முடிந்தது. பெண்கள் காலம் காலமாகவே அடிமைகளாகவே வாழ்ந்து வந்த நிலை மாறவேண்டும் என்பதற்காகவே ஆணாதிக்கம் வெளியேற வேண்டும் என்றும், பெண்களுக்குரிய எல்லா சமுதாய துன்பங்களையும் போகி தினத்தன்று பழைய குப்பைகளை எரிப்பது போன்று எரிக்கவேண்டும் என்றும் பேரறிஞர் அண்ணா குறிப்பிடுகின்றார்.
சமுதாய முன்னேற்றத்திற்குப் பெண்கள் விடுதலை இன்றியமையாதது என்னும் உண்மையை உணர்ந்த பாரதி 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று சீற்றத்துடன் சொன்ன கருத்தை ஏற்பது போலவே, "அவள் மிகப் பொல்லாதவள்" என்ற சிறுகதையில் சரசா என்ற பெண்ணின் மனத்துணிவைக் காட்டுகிறார். சிறுகதை தலைப்புதான் இப்படி உள்ளதே தவிர அதில் வரும் கதாபாத்திரமான சரசா எத்துணை மனத்துணிவுள்ளவளாக இருக்கிறாள் என்பதும் சரசாவிற்கு அழகு வளர்ந்து கொண்டே வந்தது அறிவு என்றால் அல்லி அரசாணி மாலையும், நல்லதங்காள் புலம்பலும், அந்தணணை மணந்த அற்புத வள்ளியின் கதையும் படிப்பது என்றல்ல பகுத்தறிவு!
அழகும் அறிவும் ஒரு சேரப் பெண்ணுக்கு இருக்கவேண்டும். அறிவு என்றால் எல்லாவற்றையும் பகுத்தறியும் திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்ற அவரின் எண்ணம் இக்கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவரின் சிறுகதைகளில் அரசியல், சமுதாயம், ஆணாதிக்கம், பெண்ணடிமை, சாதிக்கொடுமை, ஏழ்மையின் நிலை, அதைப் போக்குவது எங்ஙனம் என்ற தீர்வைக் கொண்டதாகவே உள்ளது.
ஒப்பிட்டுப் பார்வையில் சமகால எழுத்தாளர்களோடு இந்நெறிகளை இணைத்துப் பார்க்கின்றபோது ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இலக்கியப் படைப்பு பற்றிய இலக்கண வரைவுகளையும் உருவாக்கிக் கொள்ள முடியும். பிறமொழித் திறனாய்வு நெறிகளைத் தமிழுக்குப் பொருத்திப் பார்க்கின்றபொழுது தமிழுக்கே உரிய இலக்கியப் படைப்பாக்க நெறிமைகளைத் தமிழப்¢ படைப்புக்கள் வழியாக உருவாக்கின்ற படைப்புத் திறன்சார் கோட்பாடுகள் பற்றி உயர்நிலை ஆய்வுகள் இன்றைய இலக்கிய காலத் தேவையாகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் படைப்பாளுமைத் திறன், படைப்பு நெறி, படைப்புக் கோட்பாடுகள் ஆகியவற்றைக் காணும்பொழுது பெண்ணியச் சிந்தனைகள், அவர்களின் முன்னேற்றம் குறித்த கருத்துக்கள் அதிகமாக¡ப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.
இதே சிறுகதையில் புரோகிதர் ஒருவரின் மகள் இளம் வயதிலேயே திருமணம் முடிந்து கணவனை இழந்து விதவையாகிறாள். அவளுக்கு சுப்ரமண்யம் என்பவனை மறுமணம் செய்து வைத்து ஊரை விட்டே வெளியேறச் செய்து வேறொரு ஊரில் மகிழ்ச்சியோடு வாழச் செய்கிறாள் சரசா.
இறுதியாகத் தனக்கும் நல்லதொரு மணமகனைத் தேர்வு செய்து கொள்கிறாள். இதில் சமுதாயச் சிந்தனையும், அக்கறையும் தன் வாழ்வின் தானே அமைத்துக் கொள்ளும் தைரியமும் உடைய பெண்ணைகச் சுட்டுகிறார். இச்சிறுகதை 18.6.39ல் குடியரசு இதழில் வெளிவந்தது.
இதே சிறுகதைத் தொகுப்பில் "சிங்களச் சீமாட்டு" என்ற தலைப்பில் மலர்க்கொடி என்ற பெண்ணின் நிலையைக் காட்டுகிறார். சங்கரன் என்ற பெண்ணைக் காதலிக்கின்ற மலர்க்கொடி ஒரு நாடக நடிகையின் மகள். அவர் நாடக நடிகையின் மகள் என்பதை அறிந்ததும் அவளைக் கைவிட்டு விடுகிறான் சங்கரன். ஆனால் மலர்க்கொடியோ சேற்றில் முளைத்த செந்தாமரை. இறுதியாக சங்கரன் பல துன்பங்களை அனுபவித்து விட்டு முடிவாக மலர்க்கொடியுடன் சேருவதுதான் இக்கதை.
"நாம் கொங்கு வேளாளக் குடியில் பிறந்து நாடகக்காரியை மணப்பதா என்ற எண்ணத்தில் என் இன்பத்தை விடுத்தேன்" என்று சங்கரன் புலம்புவதாக வரிகள் வரும். இதில் மலர்க்கொடியை விடுவித்ததால் துன்பம் தன்னை அணுகிற்று என்று சங்கரன் கூறியுள்ளது தெரிகிறது. இறுதியாகச் சங்கரன் மலர்க்கொடியைத் திருமணம் செய்து கொள்கின்றான்.
"மலர்க்கொடி சங்கரனை ஒரே புன்சிரிப்பில் மன்னித்து விட்டாள் - மணம் வெகு எளிய முறையிலே நடந்தது.
முதலில் சங்கரனை விட்டுப் பிரிந்தபோது செவிலியர் படிப்புப் படித்து வாழ்க்கையில் உயர்பவளாகவும், பின்பு இறுதியாகச் சங்கரனின் துன்பங்களைக் கருத்தில் கொண்டு அவனை மன்னித்து மணப்பதாகவும் இச்சிறுகதை அமைந்துள்ளன. இச்சிறுகதை பேரறிஞர் அண்ணா அவர்கள் பரதன் எனும் புனைப் பெயரில் எழுதி 20/8/39, 3/9/39, 10/9/39 ஆகிய தினங்களில் குடியரசு இதழ்களில் வெளிவந்தது.
28/3/43 திராவிட நாடு இதழில் வெளிவந்த வள்ளி திருமணம் என்ற சிறுகதையும், ஒரு ஏழைப் பெண்ணின் திருமணம் சிறப்பாக நடந்தேறுவதைக் காட்டுகிறது. "சொல்லாதது என்ற சிறுகதையில் சுந்தரி என்ற அழகி கனகு என்ற பணக்கார வாலிபனை நம்பி கர்ப்பமாகிறாள். ஆனால் சூழ்நிலை காரணமாக கனகு சுந்தரியை விட்டுப் பிரிகின்றான். ஆனால் இறுதியில் இவற்றை உணர்ந்து எனக்கும் சுந்தரிக்கும் பிறந்த மகனுடனும், சுந்தரியுடனும் இணைகின்றான். இவ்வாறு பெண்கள் தங்களின் உணர்வுகளை அடக்கி வைத்து இறுதியில் வெற்றி பெறுபவர்களாகவே இவரின் சிறுகதைகள் சுட்டுகின்றன. இது 22/10/43 அன்று திராவிட நாடு இதழில் வெளிவந்தது. இவ்வாறு கதிரவன் கண்ணீர், கிருஷ்ணலீலா, சிக்கலான பிரச்சினை, காமக்குரங்கு, பிரசங்க பூஷணம், மதுரைக்கு டிக்கெட் இல்லை, தனபாலச் செட்டியார் கம்பெனி, அன்னதானம், இருபரம்பரைகள், புலிநகம், சுடுமூஞ்சி, வேலை போச்சு, தேடியது வக்கீலை, ஜெபமாலை, கலி தீர்த்த பெருமாள் என 30க்கும் மேற்பட்ட சிறுகதைகளை பல்வேறு இதழ்களில் எழுதியிருந்தாலும் அனைத்திலும் பெண்மைக்கு முதலிடம் கொடுத்து அவர்களின் முன்னேற்றம் குறித்து எழுதியிருப்பது புலனாகின்றது.
முடிவுரை:
"இலக்கியம்" மனிதன் தம் வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டது" என்பர் அட்சன்.
அதுபோலேவே இவரின் சிறுகதைப் படைப்பில் அவர் வாழ்ந்த காலச்சூழல் சமுதாயப் பார்வை, சார்புநிலை, நோக்கம், விருப்பக் கூறுகள் ஆகியவை இச்சிறுகதைகளின் பொருளை வரையறை செய்கின்றன.
சிறுகதைகள் என்பது போதனைக்குரியது மட்டுமல்ல - அது வாழ்க்கைக் களத்தின் போர்வாளாய் விளங்கவேண்டும் என்பதை உணர்ந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
இவ்வாறாகத் தமிழ் இலக்கியத்தளங்கள் அனைத்திலும் தனது தடத்தைப் பதித்த அண்ணா அடுக்குச் சொல் அண்ணா என்றழைக்கப்பட்டார். இவ்வாறான அறிஞர் அண்ணாவின் புகழ் தமிழுக்கு, தமிழனுக்குக் கிடைத்த புகழ் என்பதில் ஐயமில்லை.
கட்டுரை எழுதப் பயன்படுத்திய நூல்கள்
1. பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் / பக்கம் 13 /மு.ப.2005/ மோனார்கிராபிக்ஸ்
2. " பக்கம் 15 மு.ப.2005 "
3. " பக்கம் 33 மு.ப.2005 "
4. " பக்கம் 45 மு.ப.2005 "
5. " பக்கம் 47 மு.ப.2005 "
6. " பக்கம் 55 மு.ப.2005 "
7. William Henry Hudson /An Introduction to the Study of Literature /First
edition /Page 10
@@@@@@@@@@@@@@@@@@முற்றும் @@@@@@@@@@@@@@@@@

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பேரறிஞர் அண்ணா- சிறு கதைகளில் பெண்ணியம் - டாக்டர் மா.தியாகராசன்
அருமையான கட்டுரை...
-
கண்ணகிக்குச் சிலை வைத்து பெண்மையை பெருமைப்
படுத்தியவர்...
-
கண்ணகி சிலை வைத்து பெருமைப்படுத்த வேண்டியள்தானா
என்பது குறித்து ஞானி அவர்களின் கட்டுரையைப் படித்துப்
பாருங்கள்...(பகிர்தலுக்கா) சுட்டி:-
-
http://www.keetru.com/dheemtharikida/jul06/jnani_4.php

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» இன்றைய வாழ்வில் பெண்ணியம் - டாக்டர் மா.தியாகராசன்
» பேரறிஞர் அண்ணா ! கவிஞர் இரா. இரவி, மதுரை
» அக்கா , அரசன் அண்ணா . யூஜின் அண்ணா . ரமேஷ் அண்ணா . ஐயா .டமில் நிலாமதி அக்கா ..கவிதா அக்கா கவிக்கா.. கலைநிலா அண்ணா . தளிர் அண்ணா . பகீ அண்ணா . எல்லோருடனும் கோவம் . நான் தானிய இருக்கான் தோட்டத்தில யாரும் இல்ல
» யுஜின் அண்ணா, ரமேஷ் அண்ணா,தளிர் அண்ணா, கலைநிலா அண்ணா, ராமநாதன் ஐயா, நிலாமதி அவர்கள், கலை அக்கா, அரசன் அண்ணா, கவிக்காதலன் அவர்கள், வினி குட்டி எல்லோரும் எப்படி இருக்கீங்க??
» யூஜின் அண்ணா . கலை அக்கா . ரமேஷ் அண்ணா . ஹிசாலீ அக்கா . நிலாமதி அக்கா பகி அண்ணா . கலைநில அண்ணா . யுவா அக்கா . கார்த்திக் அண்ணா . மற்றும் எல்லா உறவுகளும் எப்படி இருக்கீங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum