தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்றைய வாழ்வில் பெண்ணியம் - டாக்டர் மா.தியாகராசன்

2 posters

Go down

இன்றைய வாழ்வில் பெண்ணியம் - டாக்டர் மா.தியாகராசன் Empty இன்றைய வாழ்வில் பெண்ணியம் - டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Tue Jan 22, 2013 10:39 am

இன்றைய வாழ்வில் பெண்ணியம்
டாக்டர் மா.தியாகராசன்
சிங்கப்பூர் 558286

இலக்கியம் என்பது சமுதாயத்தின் பிரதிபலிப்பாகும். இந்தியா பழமையானது. இந்நாட்டிற்கென பழைய கலாச்சாரமும் பண்பாடும் நெடுநாட்களாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. குடும்பம் என்பது சமூகத்தின் ஓர் அங்கமாகும். இதில் தலைவனை முதலிடத்திலும், தலைவியை இரண்டாமிடத்திலும் வைக்கும் மரபை இந்திய நாட்டில் நெடுங்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்தியப் பெண்களை அதிகமாக மரபுகள் பாதித்துள்ளன. ஆனால் இம்மரபுகளே பெண்களை அடிமைகளாக்கி அவர்களை கட்டுப்படுத்தியுள்ளது. அப்படி மரபைக் காப்பாற்றாத பெண்களை இச்சமுதாயம் இழித்துப் பேசும். கடிந்துரைக்கும். கிராமங்களில் வாழும் பெண்கள் பெரும்பாலும் இம்மரபுகளை கட்டிகாத்து வருகின்றனர். நகரங்களில் வாழும் பெண்கள் மரபுகளை மீறி தற்போது வெளியில் வந்து கொண்டிருக்கின்றனர். மரபினை மீறினாலும் நன்னை பயப்பனவாக இருப்பதையே பின்பற்றுகின்றனர். இருப்பினும் வெளி உலகில் அவர்களுக்கு ஏராளமான சிக்கல்கள் ஏற்படுகின்றன.
உலகம் ஆண் பெண் இருவராலும் ஆக்க்பட்டது. ஆண் பெண் சேர்ந்த ஒன்றே உலகம் ஆகும். இவ்வுலகில் பெண்ணுரிமை என்பது ஆணுடன் போர் புரிவதன்று. ஆணுடன் வாழ்ந்து அன்பை வளர்ப்பது ஆகும். எந்த நாட்டில் பெண்மைக்கு மதிப்பும் பெருமையும் இருக்கின்றதோ அந்த நாடு முன்னேற்றம்ம பெற்ற நாடாகும். ‘பெண்களின் நிலை உயரும் போது தான் ஆண்களின் நிலை உயரும் இவ்விருவரின் நிலையும் உயரும் போது தான் மனித சமுதாயத்தின் நிலையே உயர்ந்த விடும் ’ எனக் காந்தியடிகள் பெண்களின் உயர்வு நிலையும் சமுதாய நிலையின் உயர்வுகுக்கம் காரணம் என்று கூறுகின்றார்.

பெண்ணியம் என்ற சொல்லின் விளக்கம்
பெண்ணியம் என்றால் என்ன? என்பதற்கு என்சைக்குளோபிடியா பிரிட்டானியாக் கலைக்களஞ்சியம் ‘ ’ண்ணியம் என்ற சொல் மிக அண்மைக்காலத்தில் தோன்றி அவளர்ந்து வருகிறது. அது பெண்களின் எரிமைக்காகப் போராடும் ஒரு புதிய இயக்கமாகும். அதோடு பெண்ணின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும், அவள் ஆணுக்கச் சமமானவள் எனும் உயர் நெறியை நிலைநாட்டம் நோக்கத்தைக் கருவாகக் கொண்டு இயங்ககிறது ’என விளக்கம் கூறுகிறது.
தமிழ்ச் சிறுகதைகளில் பெண்கள் பிரச்சினைகள் என்ற நூலின் ஆசிரியர் ‘ சமூகத்திலும் வேலைத்தளத்திலும், குடம்பத்திலும் நிலவும் பெண் ஒழுங்குமுறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்மையின் உணர்வுகளும் இந்நிலையை மாற்றுவதற்குப் பெண்களும் ஆண்களம் எடுக்கும் உணர்வு பூர்வமான நடவடிக்கையாகும் ’ என விளக்கம் அளிக்கிறார்.
பெண்ணியம் - அணுகுமுறைகள் என்ற நூலில் இரா.பிரேமா அவர்கள், ‘ஆங்கிலத்தில் Feminisim என்று வழங்கும் கலைச் சொல்லையே தமிழில் பெண்ணியம் என்று அழைக்கிறோம், இந்த ஆங்கிலச் சொல், பெண்ணைக் குறிக்கம் Femina என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. பெண் என்னம் சொல் பெண்களக்குரிய இயல்புகளை உடையவள்’ என்று பொருள்படும் பெண்ணியம் என்ற இச்சொல், 1890 இல் இருந்து பாலின சமத்துவக் கோட்பாடுகளையும், பெண்ணுரிமைகளைப் பெறச் செயற்படும் இயக்கங்களையும் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது. எனினும் இருபதாம் நூற்றாண்டிலேயே இச்சொல் பெருவழக்கில் வந்தது. தமிழில் பெண்ணியம், பெண்நிவைதம், பெண்ணுரிமை ஏற்பு என்ற சொற்கள் இதற்குரிய சொற்களாக வழங்கி வருகின்றன, ’என்று கூறுகிறார்., அதோடு மட்டுமல்லாமல் Feminism என்ற சொல்லுக்க நேர் தமிழ்ச் சொல்லாகப் பெண் வுடுதலை இயக்கங்கள் பெண்நிலை வாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகின்றன, இச்சொல் சமூவியல் நோக்கில் எடுத்தமாளப்பட்ட சொல்லாகும். இதனையே கல்வியாளர்கள் பெண்ணியம் என்ற சொல்லால் குறிக்கினற்னர். பெண்நிலை வாதம் என்ற சொல் பெண்களை விவாத நோக்கில் பார்க்கிறது. பெண்ணியம் என்ற சொல் அவர்களை ஆய்வு நோக்கில் பார்க்கிறது என்றும் ‘பெண்ணியம் என்ற கோட்பாடு பெண்களை நவின மயமாக்கும் சிந்தனையின் எழுச்சி’ என்றும் குறிப்பிடுகிறார்.

பெண்களின் உரிமையற்ற நிலை
சமூகத்தின் ஆண், பெண் வாழ்வியலில் அவைகளுள் , சரிபாதியாக பெண்களின் இருத்தலைப் பற்றி எடுத்தியம்புவது பெண்ணியம். இரு ஒரு சமூக அக்கறையின் வெளிப்பாடு என்பதால் பெண்ணியம் பற்றிய ஆய்வுகள் உலகம் முழுவதும் பெருகி வரும் காலமாக உள்ளது. இதுபோலவே இலக்கியத் துறையிலும் பெண் மொழியின் பற்றி ஆராய்வது பெருகி வருகிறது.

பெண் என்ற நிலையில் சிந்திக்கத் தொடங்கிய வளர்ச்சி சமுதாயம் சார்ந்த நிறுவனங்கள் நெறிப்படுத்தும் கருத்துக்களை மறுபரிசீலனை செய்யுமளவுக்கு ஆங்காங்கு வலிமை பெறுகின்றன.
கல்வியும் பொருளாதார சுயசார்பும் உடைய பெண் வெளி உலகின் நடப்புகளை அன்றாடம் சந்திப்பதால் சுயநலத்திலும் புரிந்து கொள்ளலிலும் விரிந்த மனப்போக்கும் உடையவளாக இருக்கிறாள்.

தேர் இழுக்க ஆண், பெண் என்று இருபாலரும் தேவை என அறிந்திருந்தாலும் பெண்ணைத் தனக்கு அடிமையாக ஆண் நினைக்கின்றான். சமூகம் இம்மானுடமுரணை அனுமதிக்கிறது. ஒத்த நிலையில் உள்ள இருவரிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கும் இவ்வழக்கம் ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து சமூகத்தில் காணப்படுகிறது. திருமணமான பெண், வேலைக்குப்போகாத பெண், மகள், தாய், வேலைக்கு போகும் பெண் என எவ்வகை வேறுபாடுமின்றி பெண்களின் உரிமையற்ற நிலை நீடிக்கிறது.

சமூகக் கட்டமைப்பு
சமூக கட்டமைப்புகள் பெண்களுக்குப் பாதகமாக வந்தால்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் உரிமைகளுக்குக்காக போராடுகின்ற பெண்களை குறிக்கக்கூடிய சொல்லாக பெமினிசம் என்னும் சொல் வந்தது. பெண் உரிமைக்காக போராடுகின்ற ஆண்களையும் feminist என்று குறித்தார்கள்.

நடைமுறையில் feminist என்ற சொல் பெண்களுக்கு சமுதாய பொருளாதர மற்றும் ஏனைய துறைகளிலெல்லாம் இழைக்கப்படும், கொடுமைக்கு எதிராக செயல்படும் பெண்களையும், ஆண்களையும் சுட்டப் பயன்படுகிறது. பெண்ணியத்தாரில் தீவிரவாதிகள் உண்டு. அவர்களைக் குறிக்க தீவிரப் பெண்ணியம் என்னும் தொடர் பயன்படுத்தப் பெறுகிறது.
பெண்கள் நிலை
குடும்ப தளத்தில் பெண்களின் விருப்பு வெறுப்புகள் மதிக்கப்படுதல், பெண்களின் ஆளுமை வெளிப்பாடு, அவளின் சுயம், அல்லது சுயத்தை நிலை நாட்ட அவளின் போராட்டம், தாய், மனைவி என்ற பங்கு நிலைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துதல் ஆகியவற்றில் பெண்களின் நிலை என்ன?

கவிஞர் மு.மேத்தா அவர்கள் வருகிறார்கள் கவிதைத் தொகுப்பில் கால்களால் நடந்த கதை என்ற தலைப்பில் புதிய சிலப்பதிகாரத்தைச் சுட்டுகிறார். இங்கேயும் ஒவ்வொரு பெண்ணும் சிலம்பை உடைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். காலிலிருந்தல்ல கண்களிலிருந்து உடைந்த பரள்களின் தெளிப்பு கண்ணீர் மணிகள் போல் நீங்கள் கண்டதில்லையா? என்று கேட்கிறார்.

‘எச்சரிக்கை இவர்களில் யாராவது கண்ணகியாக இருக்கலாம். இன்னொரு கண்ணகி எழுந்து வந்தால் உடையப்போவது சிலம்பு மட்டுமல்ல, எரியப்போவது மதுரை மட்டுமல்ல.’ என்று கூறிவிட்டு அப்போது எழுதப்படுவது சிலப்பதிகாரமாக இருக்காது. சிவப்பதிகாரமா இருக்கும் என்று புரட்சிப் பெண்களைக் காண்பிக்கிறார்.

பெண்களின் இன்றைய நிலை
பல காலமாக ஆண்களின் ஆதிக்கத்தில் வீழ்ந்து கிடந்த பெண்கள் மறுமலர்ச்சிக் காலத்தில் விழித் தெழத் தொடங்கினர். ஆண்களில் இல்லத் தலைமைக்குப் போட்டியாக வேலைக்குப் போகும் பெண்களின் கூட்டம் அதிகரிக்கிறது. பெண்கள் தேசிய மாணவர் படையில் சேர்ந்து பரிசு வாங்குகிறார்கள். பாராசூட்டிலிருந்து குதிக்கிறார்கள். ஆட்சித்லைவர்கள் பணியும் அமைச்சர் பொறுப்பினையும் ஏற்கிறார்கள். இத்தகைய மாசக்தி வாய்ந்த பெண்கள் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கனவைச் சூடிய நட்சத்திரம் என்ற நாவலில் ஜான்சி என்ற பெண்ணின் வாழ்வில் ஏற்படும் இன்னல்களையும், அதனை அவள் எதிர்நோக்கி வாழ்வை ஜெயித்து காட்டுவதையும் சுட்டியுள்ளார் திலகவதி I.P.S. அவர்கள்.

‘அரங்கம் நிரம்பி வழிந்தது. ஜான்சியின் விடிவை நோக்கி என்கிற படம் ஐந்து விருதுகளைப் பெற்றிருந்தன’ (2) என்ற வரிகளின் மூலம் ஜான்சியின் வாழ்க்கையில் திரைப்படம் எடுக்க முயன்று தோற்றுப்போனாலும் மனந்தளராமல் போராடி திரைப்படத்தை எடுத்து முடிப்பதாகவும் அந்தத் திரைப்படம் ஐந்து விருதுகளைப் பெறுவதாகவும் சுட்டுகிறார் ஆசிரியர் திலகவதி.
இவ்வாறு பெண்களின் வாழ்வியல் முறைகள் முன்னேற்றத்தைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அதற்கேற்ற தனித்தன்மையை ஒவ்வோரு பெண்ணும் வளர்த்துக்கொள்ளல் வேண்டும்.

பெண்களின் தகுதிநிலை உயர்வு
குடும்பத்திலும், சமூக நிறுவனங்களிலும் பெண்ணிற்குள்ள தேர்வு அதிகாரத்தையும் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் குறிப்பது பெண்ணின் தனிநிலைத்தகுதி எனப்படும்.
அடுத்தப் பெண்ணின் மறு உற்பத்தி அதிகாரத்தையும், தனித்து இயங்கும் துணிவையும், குறிப்பிடலாம். இதனால் பெண்கள் சுயமரியாதையும், முன்னுரிமையும் பெறுபவர்களாகிறார்கள் என்பது குழுநிலைத் தகுதியாகிறது.
பெண் பெறுகின்ற கல்வி, தொழில், பொருளாதாரத் தகுதிநிலை அரசியல் ஆகியவற்றின் மூலம் பெறும் சுதந்திரத்தைப் பொதுநிலைத் தகுதியாகக் கூறலாம்.

இவற்றினடிப்படையில் பெண்கள் இல்லதிலும், சமூகத்திலும், பொருளாதாரம், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் முன்னுரிமை பெற வேண்டும். இதன் மூலம் பெண்களின் தகுதிநிலை உயர்வு பெறும்.

வாழ்க்கை எனும் கம்பி விளையாட்டில் நடக்கும் பெண்கள் மனம் பதட்டபடாமலும், வழுக்கி விடாமலும், அவசரப்பட்டு குதித்து விடாமலும் உறுதியான மனத்தோடு நிமிர்ந்த நடையும் வெற்றி வீராங்கனைகளாக இறங்கி வரவேண்டும் ஆண்களோடு -ந.,பண்களும் எவ்வித துன்பமும் இன்றி வாழுகின்ற ஒரு நிலைமை உருவாக வேண்டும்.

பெண்கள் திருமணத்திற்கு முன்பு பெற்றோரையும், திருமணம் முடிந்த பின்பு கணவனையும், வயதான காலத்தில் மகனையும் சார்ந்து வாழவேண்டும் என்ற சமூக அமைப்பை உடைத்தெறியப் பெண்கள் முற்படவேண்டும் என்பதையே பெண்ணியம் வலியுறுத்துகிறது. வானை தொடுகின்ற அளவுக்கு தன்னப்பிக்கை ஊற்று ஒவ்வொரு பெண்ணிடத்திலும் உருவாக வேண்டும். இன்றைய பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு உயர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது முடிவாக்க் கருதப்படுகிறது.

அடிக்குறிப்பு
(1) அவர்கள் வருகிறார்கள் மு.மேத்தா மு.ப.1980 - ப.20
(2) கனவைச் சூடிய நட்சத்திரம் திலகவதி I.P.S. மு.ப.2001- ப191
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

இன்றைய வாழ்வில் பெண்ணியம் - டாக்டர் மா.தியாகராசன் Empty Re: இன்றைய வாழ்வில் பெண்ணியம் - டாக்டர் மா.தியாகராசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 22, 2013 1:23 pm

இன்றைய வாழ்வில் பெண்ணியம் - டாக்டர் மா.தியாகராசன் 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum