தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
2 posters
Page 1 of 1
வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
டாக்டர் மா.தியாகராசன் துணைப்பேராசிரியர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தேசியக் கல்விக்கழகம், சிங்கப்பூர்
முன்னுரை
‘உலகப் பொதுமறை’ என்னும் தமிழ் மறையை வாழ்வாங்கு வாழும் வையத்திற்கு வழங்கியவர், ‘செந்நாப்போதார்’ என்று சிறப்புடன் அழைக்கப்படும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்பது உலகறிந்த உண்மை! இவர் பல்வேறு அதிகாரங்களில் பல்வேறு செய்திகளைப்பற்றிக் கூறியுள்ளார் அதிலும் குறிப்பாக ‘மக்கட்டேறு’ என்ற அதிகாரத்தில் குடும்பக்கட்டுப்பாட்டை மறைமுகமாக விளக்கிச் சென்றுள்ளார். அது எப்படி என்பதை இனிக் காண்போம்.
இரண்டு மழலைச் செல்வங்கள்
‘மக்கட்பேறு’ என்னும் அதிகாரத்தில் இடம்பெறும் குறட்பா இது!
‘குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்’’ (குறள் 66)
மழலைச்செல்வத்தின் மயக்கும் தன்மையை விளக்கிச் செல்கின்றார் வள்ளுவர். இக்குறட்பாவின் அறிவுக்குகந்த ஆழ்ந்த கருத்தாவது
‘தம் மக்களின் மழலைச் செல்வத்தின் சொல்லைக்கேட்டு அதன் இனிமையை நுகராதவரே, குழலின் இசை இனியது. யாழின் இசை இனியது என்று கூறுவர்’ என்பதாம் இக் ‘கரு’ தான், என் உள்ளத்தில் உருக்கொண்டு வேறொரு உட்கருத்தை வெளிப்படுத்துகின்றது.
இசைக்கருவிகள் என்று எடுத்துக்கொண்டால், அவற்றைத் ‘தோற்கருவி’ நரம்புக்கருவி’, ‘காற்றினால் ஒலி எழுப்பும் கருவி’ என்று வகைப்படுத்தலாம் இன்னும் விரிவாகச் சொல்லப்போனால், சங்கு, பறை, கிடுமுட்டி, உருமி, மேளம், நாதசுவரம், குழல், யாழ் என்று பலவாக அடுக்கிக் கொண்டே போகலாம். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், எத்தனை இசைக்கருவிகள் உள்ளன என்பதைப் பற்றியும், மறைந்த பல இசைக்கருவிகளைப் பற்றியும் கூறுகின்றார். இவ்வாறு இசைக்கருவிகள் இன்ன அளவின என்று கூறமுடியாது இப்படி இருக்கும்பொழுது, இசைக் கருவிகளிலேயே தேர்ந்தெடுத்த இரண்டை மட்டும் ‘குழல்,யாழ்’ என்பதை மட்டும் குறிப்பிடுகின்றார், பொய்யாமொழியார்! ‘குழல் போன்ற இனிமையும், யாழ் போன்ற இனிமையும் உள்ள இரண்டு மழலைச் செல்வங்கள்’ என்பதை மறைமுகமாகக் கூறுகின்றார் எனலாம்! அதுவும் குறிப்பாக ‘மக்கட்பேறு’ என்னும் அதிகாரத்தில் கூறுவதும் எண்ணத்தக்கது!
குடும்பக் கட்டுப்பாடு
இசைக்கருவிகளில், இன்பம் பயப்பன குழலும், யாழும் என்பது உலகறிந்த உண்மை! ஆகவே, இரண்டு மழலைச் செல்வத்தைப் பெற்றிருந்தால் தான் அவர்கள் குழலும் யாழும் போல் இனிமை பயப்பர்! அப்படியில்லாவிடில் இன்பத்திற்கு எதிர்விளைவுகள்தான் ஏற்படும் என்று செப்புகின்றார் வள்ளுவர்! அதிலும் ஓர் உண்மை இருக்கிறது அனைத்து இசைக்கருவிகளும் ஒன்றாக இசைப்பின் ஓர் இனிமை தோன்றாது; அஃது இயல்பு! ஆகவே, ‘’குழலும் யாழும் போன்று இன்பம் பயக்கும் மக்களைப் பெற்று நல்வாழ்வு வாழவேண்டும் ‘’ என்ற கருத்தை வெளிப்படையாகச் சொல்லி ‘ நிறையப் பிள்ளைகள் வேண்டாம்’ எனும் கருத்தை மறைமுகமாகப் பெறவைக்கின்றார் வள்ளுவர்! ஆகவே குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்த, ‘இரண்டேபெற்றுக்கொள்’ என்று கூறுகின்றார் ஈரடியால் உலகளந்த வள்ளுவப்பெருமான்!
முடிவுரை
துள்ளுநடையில், தெள்ளுத் தமிழில்,நெஞ்சை அள்ளும் வண்ணம் கூறியிருப்பது நினைந்து நினைந்து இன்புறத் தக்கதன்றோ?
குறிப்பு
‘குழல்’ இசைப்போர், பெரும்பாலும் ஆடவரே!’ ‘யாழ்’ மீட்டுவோர் பெரும்பாலும் பெண்டிரே! எனவே ‘குழல்’ என்பது ஆண்மகவையும் ‘யாழ்’ என்பது பெண்மகவையும் குறிக்கும் எனினும் அமையும்!

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
இலக்கிய பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» குறுங்கவிதைகள் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நெஞ்சு பொறுக்குதில்லையே! -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» ஆசிரியர் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» குறுங்கவிதைகள் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நெஞ்சு பொறுக்குதில்லையே! -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» ஆசிரியர் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum