தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முதியோர் குறைவாக சாப்பிடுவது நல்லதா

2 posters

Go down

   முதியோர் குறைவாக சாப்பிடுவது நல்லதா Empty முதியோர் குறைவாக சாப்பிடுவது நல்லதா

Post by கணபதி Thu Feb 14, 2013 1:54 pm

முதியோர் குறைவாக சாப்பிடுவது நல்லதா


பொதுவாக வயது ஏற ஏறக் குறைவாகத் தான் முதியோர்கள் உணவு உண்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? இது சரியா? வயது அதிகரிக்க அதிகரிக்க நாவில் உள்ள சுவை உணரும் திறன் குறைகின்றது. நாசியில் உள்ள மணம் அறியும் திறன் குறைகின்றது. உடலின் அனைத்து இயக்கங்களும் குறைகின்றது. முதன்மையாக ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகள் குறைகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக மனரீதியாக பலப்பல பிரச்சனைகளாக அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

உதாரணமாக தனிமை, மனச்சோர்வு, மனஅழுத்தம், ஓய்வு போன்றவை.
முதியோர்கள் தங்களது ஜீரண சக்திக்கு ஏற்ப குறைவான உணவுகளை எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. முதியோர்களுக்கு என தனியான சிறப்பு உணவு முறை எதுவும் அவசியமில்லை அவர்கள் இது நாள் வரை எடுத்துக் கொண்டு வந்த உணவுகளையே எடுத்துக் கொள்ளலாம், இருப்பினும் சிற்சில சிறிய மாற்றங்களை அவர்கள் கடைபிடித்தார்களானால் அவர்களுக்கு உணவினால் எந்த ஒரு உடல் உபாதையும் ஏற்படாது.

திடீரென உணவு முறையில் முதியவர்கள் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது. இது நாள் வரை உட்கொண்ட உணவையும் முறையையும் கடைபிடிப்பது மிகவும் நல்லது இருப்பினும் குறைவாக உணவு உட்கொள்ளும் காரணத்தால் சத்தான உணவுகளை உட்கொள்வது மிக மிக அவசியம்.
குறைவான உணவு அளவுகளில் போதுமான சத்துக்கள் கிடைக்கும் வண்ணம் சில சிறிய கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். உடனடியாக மாற்றங்கள் செய்யக்கூடாது. என்பதனை அனைத்து முதியவர்களும் உணர வேண்டும்.
தானியங்கள்

அரிசி உணவையும் அரிசியால் தயாரிக்கப்பட்ட பிற உணவுகளைக் குறைத்துக் கொண்டு நார்ச்சத்து நிறைந்த பிற தானிய உணவுகளான கோதுமை ராகி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

புரதம்
புரத உணவுகள் முதியோருக்கு இன்றியமையாத உணவுகளாகும். பால், முட்டை, பீன்ஸ், பட்டாணி, பயறுகள், கொட்டைகள், தானியங்கள், மீன், கோழி, இறைச்சி போன்றவற்றை அவரவரது ஜீரண சக்திக்கு ஏற்ப அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.

கால்ஷியம்

முதியவர்களின் கால்ஷியத் தேவை அதிகமாக இருக்கும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் தேவையான கால்ஷியம் சத்தை மீன், நண்டு, பால், ராகி, கீரைகள் போன்றவற்றிலிருந்து பெறலாம்.

இரும்பு
முதியோருக்கு புதிய இரத்த செல்களை உற்பத்தி செய்திட இரும்புச்சத்து தேவைப்படும். அதனைப் பெற்றிட அவர்கள், வெல்லம், தேள், கீரைகள், கோதுமை, பேரீச்சம்பழம், ஈரல், போன்றவற்றை உட்கொள்ளலாம்.

வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ்
உடலின் சீரான இயக்கத்திற்கும் இயல்பான செயல்பாட்டிற்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் தேவை இவற்றை முதியவர்கள் காய்கறி, பழங்கள், தானியங்கள், கொட்டைகள், கீரைகள், மீன், பால் மற்றும் பால் பொருட்களிலிருந்து எளிதாகப் பெற்றிடலாம்.

வயது முதிர்ந்தவர்கள் குறைவாக உணவு உண்பது மிக மிக அவசியம். அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சயில் எலிகளுக்கு குறைவான உணவு கொடுப்பதால் அவை அதிக நாட்கள் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. எனவே முதியோர்கள் அரை வயிறு உணவு உண்பது மிகவும் நல்லது என உறுதி செய்யப்பட்டது. கலோரி அளவுகள் குறைவாக உள்ள உணவுகளை அரை வயிறும், கால் வயிறும் தண்ணீரும் கால் வயிறு காலியாக வைத்துக் கொள்வதும் வாழ்நானை நீடிப்பதோடு மட்டுமல்லாமல் வேறு எந்த உடல் உபாதைகள் வருவதையும் தடுத்து விடும்.
பலரும் அசைவ உணவுகளை விட்டு விட்டு சைவ உணவிற்கு மாறிவிடுகின்றனர். இதற்கு தனியான ஒரு காரணமே கிடையாது. அவர்கள் அவ்வாறு மாறிக் கொள்வதற்கு கீழ்க்கண்டவைகள் காரணமாக அமையலாம்.

அசைவ உணவை விட எளிதாக சைவ உணவை மென்று சாப்பிடலாம் – பற்கள் வலுவில்லாமல் இருக்கலாம்.

அசைவ உணவுகளை ஜீரணிப்பதற்குத் தேவையான சக்தியை விட சைவ உணவுகளை ஜீரணிக்க குறைவான சக்தி தேவைப்படலாம் – ஜீரண சக்தி குறைவால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படலாம்.

அசைவ உணவில் அதிகமான கொழுப்புச் சத்து, புரதம் போன்றவற்வையும்,
காய்கறி, மற்றும் பழங்களில் போதுமான அளவு நார்ச்சத்தும் நுண்ணுட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.
சைவமோ அசைவமோ எதுவாக இருந்தாலும் அவரவர்கள் பழக்கத்திற்கு ஏற்ப, ஜீரண சக்திக்கு ஏற்ப அனைத்து சத்துக்களும் சமச்சீராக அடங்கிய உணவினை உட்கொண்டு வந்தால் முதியோர் எளிதாக தங்கள் முதுமைய
ை வெல்லலாம்.
   முதியோர் குறைவாக சாப்பிடுவது நல்லதா 3826701390
கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

   முதியோர் குறைவாக சாப்பிடுவது நல்லதா Empty Re: முதியோர் குறைவாக சாப்பிடுவது நல்லதா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 15, 2013 4:14 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum