தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை .தொகுப்பு : கவிஞர் இரா.இரவி
2 posters
Page 1 of 1
சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை .தொகுப்பு : கவிஞர் இரா.இரவி
மதுரை 4-வது புத்தகத் திருவிழாவில் - தொகுப்பு : கவிஞர் இரா.இரவி
சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை
தொழில் எல்லாத் தொழில்களும் ஒன்று தான். இதில் பெரிய தொழில் என்று எதுவும் இல்லை. உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒன்று தான். இதில் மேல் சாதி, கீழ் சாதி என்று இல்லை. எல்லோருக்கும் ஆளுமைப் பண்பு உள்ளது. ஆனால் பயன்படுத்துவதில்லை. நான் யார் தெரியுமா ? என்று தனக்கு கீழ் உள்ளவர்களைப் பார்த்து மிரட்டுவார்கள். இது தவறு. எழுத்தாளன,கவிஞன் என எல்லோரும் தலைகுனிந்து நிற்கும் இடத்தில் நிமிர்ந்து நிற்பான். துணிந்து மனதில் பட்டதை உரைக்கும,எழுதும் ஆளுமைப் பண்பு மிகவும் அவசியம்.
புரட்சிக் கவிஞர் பாரிதிதாசனிடம் அந்த ஆளமைப் பண்பு இருந்தது. அஞ்சாத மனிதர்.தனபால் என்ற தனது நண்பரை, ஓவியரை, புதுவை முதல்வரைப் போய் பார்க்கச் சொன்னார் பார்த்து விட்டு அந்த நண்பர் தனபாலிடம், புரட்சிக்கவிஞர் கேட்டார். உங்களை அவர் மரியாதையாக நடத்தினாரா ? என்று, தனக்கு மட்டுமல்ல, தன்னைச் சார்ந்த நண்பர்களுக்கும் உரிய் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதில் கண்டிப்பானவர்.
புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் ஆர்.கே.நாரயணன் தமிழகத்தில் உள்ள ராசிபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இந்திராகாந்தி அவரை எம்.பி.ஆக்கினார், ஒருமுறை ஆர்.கே.நாராயணன்,இந்திரா காந்தியைப் பார்க்கச் சென்ற போது இந்திராகாந்தி எழுந்து நின்று வரவேற்ற, நான் உங்கள் வாசகி உங்கள் நாவல்களை விருப்பி படிப்பேன். என்ன தேவை என்றாலும் எப்போது வேண்டுமானலும் என்னை வந்து சந்திக்கலாம் என்று கூறினார். அவரிடம் நான் கேட்டேன், பின்பு எத்தனை முறை அவர்களை சந்தித்தீர்கள் என்று, அவர் சொன்ன பதில், ழுதலும, கடைசியுமாக அந்த ஒரு முறை மட்டுமே சந்தித்தேன் என்றார் அவருடைய ஆளுமைக்கு எடுத்துக்காட்டு இது.
காந்தியடிகளைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்க பல கஷ்டங்களைச் சந்தித்தவர் திரு.எ.கே.செட்டியார். அவரிடம் காந்தி படம் எடுப்பது பற்றி காந்தியிடம் பேசினீர்களா ? என்று கேட்டதற்கு, காந்தி திரைப்படத்தை வெறுப்பவா, திரைப்படம் ஒழுக்கமற்றது, நமது பண்பாட்டைச் சிதைப்பது என்று கருத்து உடையவர். எனவே அவரிடம் அனுமதி கேட்டால் தர மாட்டார். ஒரு நாள் மரத்திற்கு பின்புறம் ஒளிப்பதிவாளரை நிற்கச் செய்து அவர் நடந்து வரும் போது நான் சென்று வணக்கம் சொல்வேன். அதனைப் படம் பிடிக்கத் திட்டமிட்டோம். காந்தி நடந்து வந்தார். வணக்கம் சொன்னார் நான் வணக்கம் சொன்னது மறைந்து விட்டது. ழுதலில் வணக்கம் சொல்பவர்களே சிறந்த மனிதர்கள் என்பதை உணர்ந்தேன். இது தான் காந்தியடிகளின் ஆளுமை.
இன்றைக்கு பெரும்பாலான பெறறோர்கள் தங்கள் குழந்தை மருத்துவராக வேண்டும் அல்லது பொறியளராக வேண்டும் என்று வெறி பிடித்து அலைகின்றனர். தங்கள் கருந்தை குழந்தைகளின் மீது திணிக்கின்றனர். இது தவறு. குழந்தைகளுக்கு தன்னபிக்கையும் தைரியமும் ஊட்ட வேண்டும். அவர்கள் விரும்பும் கல்வியை படிக்க சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும். இன்றைய கல்வி முறை ஆளுமையை சிதைக்கின்றது.
திரு.ஜீவா அவர்கள் பொதுவுடமைக் கட்சியில் சேரும் முன், மிகுந்த தனித்தமிழ்ப் பற்றாளராக இருந்தார். ஒரு முறை அவர் மறைமலை அடிகளை காலை 11மணி அளவில் சந்திக்கச் சென்றார். அய்யா, என்று வாயிலில் இருந்து அழைத்தார். உள்ளே இருந்த மறைமலை அடிகள், போஸ்ட்மேனா ! என்று கேட்டதும், அதிர்ந்து போனார். தமிழறிஞர் ஆங்கிலச் சொல்லை பயன்படுத்துவதா என வேதனைப்பட்டார் ஜீவா.
கவிஞர் கோபலா கிருஷ்ண பாரதி, மனிதர்கள் யாரையும் பாடுவதில்லை என்ற முடிவோடு இருந்தார். மிகப்பெரிய பஞ்சம் வந்த போது, மிகச்சிறப்பாக மக்களுக்கு உதவிய கிறிஸ்தவரை, நீயே புருஷன் என்று பாடினார்.
இன்றைய கல்வி, மனிதனை கோழையாக்குகின்றது. புத்தர் படிக்கவில்லை, 29 வயதில் காட்டுக்குப் போனவர், 39 வயதில் ஞானம் பெற்றார். சித்தார்த்தன் புத்தனாக மாறினார். புத்தர் இறக்கும் போது சொன்ன வாசகம்- எப்போதும், எதிலும் விழிப்பாக இருங்கள். புத்தரிடம் இருந்த சீடர்கள் அனைவரும் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு வெளியே சென்று விடுவார்கள். ஆனந்தன் என்ற சீடர் மட்டும் உடன் இருந்தார். அவரிடம் புத்தர் இலை பறித்து வரச் சொன்னார். அவரும் பறித்து வந்தார். நான் கற்று தந்தது இலை அளவு, உன் கைகளில் உள்ளது, நீ கற்க வேண்டிய அளவு மரத்தில் உள்ளது என்றார்.
உலகத்தரமான கவிதைகள் வழங்கிய அவ்வையார், வெள்ளிவீதியார் ஆகியோர், அதிகம் படித்தவர்கள் இல்லை. எனவே கல்வி என்பது அறிவு வளர்க்க வேண்டும், பண்பை வளர்க்க வேண்டும், ஆளுமைத் திறனை வளர்க்க வேண்டும், தைரியத்தை வளர்க்க வேண்டும், பயனுள்ள கல்வியாக மாற்றியமைக்க வேண்டும். பலரின் ஆளுமைத் திறனை அறிந்து எல்லோரும் ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை .தொகுப்பு : கவிஞர் இரா.இரவி
வாழ்வில் பல சாதனைகள் புரிந்திட அளுமை திறன் மிகவும் அவசியாமான ஒன்று. அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள்
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
NANDRI
வணக்கம். கட்டுரையைப்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
» ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை . தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நீங்காத நினைவுகள் ! நூல் ஆசிரியர் :எழுத்தாளர் திரு. ஐ.தி. சம்பந்தன் !இலண்டன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
» தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரை தலைப்பு : நூல் தொகுப்பு : கவிஞர் இரா. இரவி நாள் : 26-04-2015 விழா ஏற்பாடு; திரு. வரதராசன், புரட்சிக்கவிஞர் மன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum