தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
2 posters
Page 1 of 1
ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
மதுரையில் திருக்குறள் ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப . முதன்மைச் செயலர் ,ஒரிசா மாநிலம் .
நாள் 18.5.2013 இடம் ; கல்லூரி விடுதி மதுரை .
தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
தலைப்பு ; தீதின்றி வந்த பொருள் !
தேர் ஊர் சுற்றினாலும் நிலைக்கு வந்தால்தான் நிம்மதி வரும் .மதுரை வந்தால்தான் எனக்கு நிம்மதி .மதுரையில் என் கால் படாத வீதிகள் இல்லை .வடக்காடி வீதியில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறள் பற்றிப் பேசிப் பரிசுபெற்றேன் .
இன்று திருக்குறள் தலைப்பில் பேசுகிறேன் .எனது ஆசிரியர் புலவர் மு .சோமன் அழைத்ததும் இந்த விழாவிற்கு வந்தேன் .எனது திருமணம் 1986 நடந்தது .மூன்று நாட்களுக்கு முன்புதான் நேரில் வந்து திருமண அழைப்பிதழ் தந்தேன் .ஆசிரியர் புலவர் மு .சோமன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்தினார்கள் .
அன்புள்ள அம்மா என்று நூல் எழுதினேன் .அடுத்த நூலில் "ஈதலை இயல்பாகக் கொண்ட ஆசிரியர் புலவர் மு .சோமன் அவர்களுக்கு நன்றி " என்று குறிப்பிட்டேன் .நன்னூலில் நல்ல ஆசிரியருக்கு இலக்கணம் உள்ளது .ஆசிரியர் ஈதலை இயல்பாகக் கொண்டவர் .சங்க இலக்கியத்தில் நக்கீரர் "செல்வத்தின் பயன் ஈதல் " என்பார் .ஆசிரியர் கற்றுக் கொடுப்பது இயல்பு .மாணவன் கற்றுக் கொள்ள தொழில் நுட்பம் வேண்டும் .டெல்லியில் தேர்தல் ஆணையரகத்தின் துணை ஆணையராக இருந்தபோது டெல்லி தமிழ்ச் சங்கத்தினர் பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்க அழைத்தனர் .யோசித்தேன் .பட்டிமன்ற நடுவர் புலவர் மு .சோமன் என்றார்கள் .உடன் சம்மதித்தேன் .விழாவில் கலந்து கொண்டேன் .சந்தித்து உரையாடி நெகிழ்ந்தேன் .ஆசிரியர் மாணவர் உறவு செம்மையாக இருந்தது .
.
இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் நான் வெற்றி பெறக் காரணம் என் பேச்சுத் திறமைதான் .2002 ஆண்டு ஒரிசாவில் பேரிடர் மேலாண்மை அதிகாரி .வறட்சியை பார்வையிட துணை பிரதமர் வருவதாக இருந்தது .அப்போது மழை பெய்தது .விமானம் இறங்க முடியாமல் மழை பெய்தது .துணை பிரதமர் வேறு விழாவிற்கு செல்ல இருப்பதால் 20 நிமிடங்களில் பேசி விடுங்கள் என்றார்கள் .முதல்வர் நான் ஒரு நிமிடம் பேசுகிறேன் என்றார் .தலைமைச் செயலர் நான் ஒரு நிமிடம் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு பால கிருஷ்ணன் 18 நிமிடங்கள் பேசுவார் .என்றார் .துணை பிரதமர் வந்தார் நான் பேசினேன் "மழை இப்போது பெய்கிறது .இந்த மழை நிலம் பசுமையாகி மாடுகளுக்கு உதவலாம் .தானியம் விளைய உதவாது மனிதனுக்கு உதவாது .ஜூலையில் பெய வேண்டிய மலையில் செப்டம்பரில் பெய்துள்ளது ." என்று சொல்லி வறட்சி நிவாரணம் வேண்டினேன் ..துணை பிரதமர் விமானத்தில் செல்லும்போது முதல்வரிடம் "பேசிய அதிகாரி என்று கேட்டு விட்டு நன்றாக பேசினார் .பேச்சுப் போட்டியில் பரிசு பெற்றவராக இருப்பார்".என்று பாராட்டி விட்டு .300 கோடி நிவாரண நிதி வழங்கினார் .
( திருக்குறள் 754 )
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் .
ஊரை அடித்து உலையில் போட்டு வந்த பொருள் அல்ல .தேடிய பொருள் அல்ல .தீதின்றி வந்த பொருள் .
ஒரு வாரத்தில் மட்டும் செய்திதாளில் படித்த செய்திகள் .
சென்னையில் ரயிலைக் கடக்கும் போது அடிபட்டு ஒரு பெண் இறந்து விடுகிறாள் .காவலர் கள் வரும்போது அந்த பெண்ணிடமிருந்து ஒருவன் ஓடுகிறான் .காவலர் கள் விரட்டிப் பிடிக்கின்றனர் .செத்தப் பிணத்திலிருந்து தங்கச் சங்கிலியைத் திருடி இருக்கிறான் .
உ .பி .லக்னோ குட்கா தொழிற்சாலையில் குற்றப் பிரிவு காவலர்கள் சோதனைக்கு செல்கின்றனர் .பிடிபடுகின்றது 20 லட்சம் தந்தால் வழக்கின்றி முடித்து விடுவோம் என்கின்றனர் .10 லட்சம் தருவதாக சொல்கிறார்கள் .படிய வில்லை .சில நாளில் கொள்ளை நடக்கின்றது .முகமூடி கொள்ளையர்கள் .பிடித்து முகம் விலக்கிப் பார்த்தால் அன்று சோதனைக்கு வந்த காவலர்கள் .கொள்ளையை விசாரிக்கும் காவலர்களே கொள்ளை அடித்த கொடுமை .
கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் 8 கோடி 10 கோடி ஏலத்தில் எடுக்கிறார்கள் .விளம்பரத்தில் பணம் .சூதாட்டம் பணம் பெற்று வீர்கள் கைது .குழந்தைகளின் நம்பிக்கை தகர்க்க ப்பட்டது ..
எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் வந்து விட்டதே காரணம் .
இந்த பூமியில் அன்று காந்தி அடிகள் கேட்டதும் தங்க நகைகளைத் தந்து மகிழ்ந்த பெண்கள் .பூமி தான இயக்கத்திற்கு சொந்த பூமியை தானமாக வழங்கிய பூமி .
பழைய காலத்து நடு கல் போல இன்று எங்கு பார்த்தாலும் பிளக்ஸ் போர்டுகள் .ஒன்றும் இல்லாதவனைக் கூட பெரிதாக்கி விடும் பொருள் .
செல்வம் .வருவது வரவு .செல்வது செலவு .செல்வது எப்படி செல்வம் .மதிப்பு இருந்தால் செல்வாக்கு .மதிப்பு இல்லாவிட்டால் செல்லாக் காசு .செல்லுபடி ஆவதில் இருக்கிறது .செல்வத்தின் பயனே ஈதல் .வண்டு மலருக்கு வலிக்காமல் தேன் எடுப்பதுப் போல பொருள் தேடிக் கொள் என்கிறார் .புத்தர்
ஆனால் ஒரு படி மேலே சென்று திருவள்ளுவர் பிறருக்கு தீங்கு செய்யாமல் பொருள் தேடு என்கிறார் .
நண்பர்கள் சிலரை திருமண வீடுகளில் சந்திக்கும் போது குரல் வைத்தே அவரது செல்வ வளத்தை தெரிந்து கொள்ளலாம் .கடை நன்றாக நடந்தால் நடை நன்றாக இருக்கும் .
கோழிகள் மனிதர்களுக்கு இரையானது அன்று .
மனிதர்கள் கோழிகளுக்கு இரையானார்கள் இன்று
ஈமுக் கோழிகளில் ஏமாந்தார்கள் .
சீட்டுக் கட்டி ஏமாந்து வருகின்றனர் .சீட்டு என்றாலே "சீட்டிங் ".திறன் அறிந்து தகுதி அறிந்து சேமித்தல் .யாருக்கும் தீதின்றி சம்பாதித்தல் .அவன், மகன் ,பேரன் யாரும் செலவழிக்க முடியாத பணத்தை தவறான வழியில் ஏன் ? சேர்க்க வேண்டும் .தனக்கு தீது தரும் பணம் எதற்கு ?
ஆற்று மணல் கொள்ளை ,.மலைகளை வெட்டி கொள்ளை ,சுற்றுச்சுழல் மாசுபடுத்தி கொள்ளை .
பிறரை அழ வைத்து பணம் ஈட்டினால் அது உன்னை அழ வைத்து சென்று விடும் .திருடிய பொருள் இருபதுபோல் இருக்கும் போவது தெரியாது .
கண்ணகி அழுதாள் மதுரையே எரிந்தது .
திருக்குறள் யுத்தி உச்சபட்ச நிலை சென்று உரைத்தல் .
நல்லவன் தப்பு என்று சொல்லும் செயலை செய்யாதே !
எப்பவுமே செய்யாதே !
( திருக்குறள் 656 )
ஈன்றாள் பசிகான்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பலிக்கும் வினை .
அம்மா பசியோடு இறந்தாலும் தப்பு செய்யாதே .
செல்வம் எப்படி வந்தது என்பது முக்கியம் .திருக்குறள் அன்றும் இன்றும் என்றும் எல்லா காலத்திலும் பொருந்தும் எல்லா இடங்களிலும் பொருந்தும் .அதனால்தான் உலகப் பொது மறை என்ற தகுதி பெற்றது .சங்க இலக்கியத்தில் .கோட்டை ஆளும் அரசன் .வேட்டை செல்லும் வேட்டைக்காரன் இருவருக்கும் பொது உண்பது நாழி உடுப்பது இரண்டு .வாழ்வியல் அறக் கோட்பாடு ..
29 ஆண்டுகளாகப் பணி புரிகிறான் .45 நாடுகள் தேர்தல் பார்வையாளராக சென்று இருக்கிறேன் .புவியியல் மைய கோட்பாடு படித்து இருக்கிறோம் .உலக பெண் கவிஞர்களில் எனக்கு மிகவும் பிடித்தவள் அவ்வை .அவள்தான் மனித மைய கோட்பாடு வடித்தவள் .
நிலமே ஒரு இடத்தில மேடாக இருக்கிறாய் .ஒரு இடத்தில பள்ளமாக இருக்கிறாய் .மேடாக ,காடாக இருக்கிறாய் ..மனிதன் நல்லவனாக இருந்தால் நீயும் நல்லதாக இருக்கிறாய் ..
எழுத்தாளர் ஜெய மோகன் எழுதிய அறம் என்னும் நூலில் படித்தேன் .கேராளாவில் 1970 ஆண்டில் ஒருவர் உணவு விடுதி நடத்தி வந்தார் .மீன் ,கோழி ,கறி எல்லாம் கிடைக்கும் .அவரே வாங்கி வந்து சமைத்து அவரே பரிமாறுவார் சாப்பிட்டவர்கள் .தேர்தல் பூத்தில் இருப்பதுபோல மறைவக்க உள்ள பெட்டியில் பணம் போட்டு விட்டு போவார்கள் .பணம் போடாமலும் சிலர் போவது உண்டு .கல்லாப்
பெட்டியின் மீது என்றுமே இவர் கவனம் சென்றது இல்லை .ஆனால் எல்லோருக்கும் அன்பாக பரிமாறுவார் .இங்கு அடிக்கடி பணம் போடாமல் சாப்பிட்டு சென்ற ஒருவன் நிலம் வாங்க வைத்து இருந்த 17000
பணத்தை போட்டான் .அந்த விடுதி நொடித்துபோக வில்லை .அறம் வாழ்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு அந்த விடுதி .அந்த மனிதர்
அற வலைப் பின்னல் இன்றும் இருந்துக் கொண்டே இருக்கின்றது .
கேரளா திருச்சூர் அருகே மாளா என்ற ஊரில் சுரேஷ் பெட்டிக் கடை நடத்தி வந்தார் .இரண்டு குழந்தை உண்டு .அரசு வழங்கிய இலவச வீட்டில் வாழ்ந்து வருபவர் .லாட்டரி ச் சீட்டு விற்று வந்தார் .ஒருவர் வந்து 5 சீட்டு கேட்டார் .எடுத்துக் கொடுத்தார் .வாங்க வந்தவர் பணத் தைப் பார்த்தார் .இல்லை .அப்படியே வைத்து இருங்கள் .நாளை மறுநாள் இந்தபக்கம் வரும் பொது 50 ரூபாய் தருகிறேன் என்றார் .உடன் சுரேஷ் அப்படியே அந்த சீட்டுகளை தனியாக எடுத்து வைத்து விட்டார் .மறுநாள் குலுக்களில் எடுத்து வைத்த சீட்டில் ஒன்றுக்கு ஒரு கோடி பரிசு விழுந்தது .சுரேஷ் நினைத்து இருந்தால் அந்த சீட்டை மாற்றி இருக்கலாம் .ஆனால் அவ்வாறு செய்யாமல் .பரிசுக்கு உரியவரை வரவழைத்து சீட்டுகளைக் கொடுத்தார் .அவர் வாங்க மறுத்தார் .பணமே தரவில்லையே அது எப்படி என் சீட்டாகும் என்றார் .இடையில் வந்தவர்கள் ஒரு கோடியில் இருவரும் பாதி பாதி வைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள் .ஆனால் சுரேஷ் ஒரு வேளை பரிசு விழுகவில்லை என்றால் அதனால் பாதி பணம் தருவேன் என்று சொன்னால் நான் பாதி பணம் வாங்கி இருக்க மாட்டேன் .எனக்கு சீட் களுக்கு உரிய 50ரூபாய் மட்டும் தந்தால் போதும் என்று 50 ரூபாய் மட்டும் பெற்றார் .என் மனைவி குழந்தைகள் என்னைப் புரிந்து கொள்வார்கள் என்று சுரேஷ் சொன்னார் இந்த செய்தியை நான் பேசும் எல்லா மேடைகளிலும் சொல்லி வருகிறேன் .,எழுதும் கட்டுரைகளிலும் எழுதி உள்ளேன் .சுரேஷ் போன்றவர்களை பாராளு மன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று பரிந்துரை செய்வேன் .
.சுரேஷை பாராட்டி கவிதை எழுதி உள்ளேன் .
பொருள் , பணம் மகிழ்ச்சி இல்லை இந்த உலகில் எது
நெகிழ்ச்சி தருகிறதோ அதுதான் மகிழ்ச்சி .
காவலர்க்கு பயந்து ,சட்டத் திற்கு பயந்து ,தண்டனைக்கு பயந்து நல்லவனாக வாழ்வது பெரிதல்ல .மனசாட்சிக்கு பயந்து நல்லவனாக வாழ்வதே அறம் .
இன்றும் அறத்துடன் நல்லவனாக வாழும் மனிதர்கள் சிலர் இருக்கிறர்கள் .
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Re: ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை . தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை .தொகுப்பு : கவிஞர் இரா.இரவி
» தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரை தலைப்பு : நூல் தொகுப்பு : கவிஞர் இரா. இரவி நாள் : 26-04-2015 விழா ஏற்பாடு; திரு. வரதராசன், புரட்சிக்கவிஞர் மன்றம்
» வானம் என் வாசலில் ! கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சுவடுகள் நெய்த பாதை ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum