தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இந்தியப் பல்கலைக்கழகத்த தமிழசிரியர்கள் கருத்தரங்கில் உரையாற்றிய அறிஞர்களின் உரையிலிருந்து சில துளிகள் - தொகுப்பு - கவிஞர் இரா.இரவி
2 posters
Page 1 of 1
இந்தியப் பல்கலைக்கழகத்த தமிழசிரியர்கள் கருத்தரங்கில் உரையாற்றிய அறிஞர்களின் உரையிலிருந்து சில துளிகள் - தொகுப்பு - கவிஞர் இரா.இரவி
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு.கற்பக குமாரவேல் உரை
ஒரு அமைப்பு நடத்துவது எவ்வளவு சிரமம் என்பதை நன்கு அறிவேன். 40 ஆண்டு காலமாக நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது. பல தரப்பினரிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்;று தொகுத்து நூலாக்கி, கருத்தரங்கில் வெளியிடுதல், கட்டுரை வாசித்தல், மாநாடு போல நடத்துதல் சமுதாயத்திற்கு மலரை காணிக்கையாக்குதல், 492 ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து 4 நூல்களாக வடித்துள்ளனர். தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் முதல் ஆய்வு மாணவர்கள் வரை பலதரப்பட்டுவர்களின் ஆய்வு கட்டுரைகள் உள்ளது. இந்த அமைப்பு 1969ம் ஆண்டு திரு.தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்களால் மதுரை, தியாகராசர் கல்லூரியில் தொடங்கப்பட்டது. அதே தடத்தில் மிகச் சிறப்பாக இன்றைய பொறுப்பாளர்கள் முனைவர்கள், பேராசிரியர் இரா.மோகன் மணிவேல், சேதுப்பாண்டியன் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். பாராட்டுக்கள் தமிழ் கூறும் நல்உலகத்திற்கு பயன்தரும் பங்களிப்பு இந்நூல்கள்.
உயர்கல்வியில் தமிழ் மொழி மூலம் கற்பவர்கள் எண்ணிக்கை மிகச் குறைவாக உள்ளது. புள்ளி விபரம் பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. மிகக் குறைவாக அளவிலேயே தமிழ்வழியில் உயர்கல்வி பயில்கின்றனர். ஏன் இந்த தயக்கம்! இந்த தயக்கம் போக்க வேண்டும். தமிழ்நாட்டில் தான் தாய்மொழிக்குத் தான் முதலிடம் தருகிறார்கள் ஆய்வுக் கட்டுரைகளில் மேற்கோளாகக் காட்டப்படும் நூல்கள் ஆங்கில நூல்களாக இருக்கின்றன. தமிழ்ப்புலமை ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியம். பல்கலைக்கழகத்தில் அறிவு பெருக்கம், அறிவு பரவலாக்கம் வேண்டும். தமிழ்மொழியில் கற்பது தாய்ப்பால், பிற மொழிகளில் கற்பது புட்டிப்பால். இதனை உணர வேண்டும். தமிழ்மொழி ஆட்சிமொழியாக ஆலுவலக மொழியாக உயர வேண்டும். கன்னட அரசாங்கம் கன்னட மொழி வளர்ச்சிக்காக கன்னடத் துறைக்கு ஒரு கோடி ரூபாய் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு வழங்கி உள்ளது.
சிங்கப்ப+ர் போன்ற வெளிநாடுகளில் தமிழ் பல்கலைக்கழகம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதை கண்டு மகிழ்ந்தேன். காலத்திற்கேற்றப்படி பேராசிரியர்கள் தங்களை தொழில்நுட்ப அறிவியல, கணினி அறிவில் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் உரை
நானும், கவிஞர் சிற்பியும் கர்நாடகம் சென்று இருந்த போது அவர்கள், உங்கள் இலக்கியங்களை கன்னடத்தில் மொழிபெயர்த்து வழங்குங்கள் என்று கேட்டார்கள். எனவே, அதற்கு இந்த ஒரு கோடியை பயன்படுத்தலாம். தமிழாசிரியர்கள் பேசுவார்கள். ஆனால் எழுத வேண்டும். அது தான் நிற்கும். இந்த மன்றம் 40 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்ற வருகின்றது. பலரை படிக்க வைக்கின்றது. பலரை எழுத வைக்கின்றது. பலரை ஆய்வு செய்ய வைக்கின்றது. தமிழாசிரியர்கள் ஆங்கிலம், தமிழ் தவிர மற்றொரு மொழி ஒன்று கற்பது அந்த மொழியில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க வேண்டும். தமிழின் பெருமை இந்தியாவில் உள்ள அனைத்து மொழியினரும் அறியும் வண்ணம் பரப்ப வேண்டும். ஆய்வு கட்டுரை எழுதுபவர்கள் மிகவும் கவனமாக நுட்பமாக செய்தல் வேண்டும். சிலர் ஆய்வு என்ற பெயரில் தவறான தகவல்களைத் தந்து விடுகின்றனர்.
தமிழறிஞர் ஆறு அழகப்பன் உரை
தமிழுக்காக பல போராட்டங்கள் நடத்தி பல தோல்விகள் சந்தித்தவன் நான். திரு. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது உண்ணாநோன்பு இருந்து இருக்கிறோம். தமிழ் செம்மொழியானது பெருமை தான். ஆனால் உயர்நீதிமன்ற கிளைகளில் தமிழ் இன்னும் வரவில்லை. இல்லங்களில் நல்ல தமிழ் இல்லை. தமிழன் முகப்பு எழுத்தை தந்தை பெயரை நல்ல தமிழில் எழுத முன் வர வேண்டும். ஆங்கில எழுத்தை முகப்பெழுத்தாக போடும் பழக்கத்தை தமிழர்களிடையே ஏற்படுத்தியவர்கள் நடிகர்கள், உதாரணம் N.ளு.கிருஷ்ணன் ஆ.சு.ராதா, ஆ.பு.சு. இப்படி இவர்கள் தொடங்கி வைத்த தொற்றுநோய் இன்றுவரை தமிழனை விட்டபாடில்லை. தமிழ் எழுத்து எண்களை பயன்படுத்த வேண்டும்.
தமிழ்ச்செம்மல் மணிமொழியன் உரை
40 வருடத்திற்கு முன்பு விதைத்த விதை இன்று கற்பக விருட்சமாக வளர்ந்து உள்ளது. இன்று துணைவேந்தர் கற்பக குமாரவேல் தொடங்கி வைப்பது முற்றிலும் பொருத்தம். ரூ. 1,00,000 (ரூபாய் ஒரு லட்சம்) உதவி விழா சிறக்க வழி வகுத்துள்ளார். தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் உருவாக்கிய மாணவர்கள் பேராசிரியர்களாக வளர்ந்து, உயர்ந்து இந்த மன்றத்தை சிறப்பாக நடத்துகின்றனர். மாற்றம் தன் மாற்றம் இல்லாதது. நிலையாமை தான் நிலையானது. உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர் விளக்கி இருக்கிறார். பல நூல்களைக் கற்றுத் தேர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு பிறகு தான் ஆய்வுக்கட்டுரை எழுத முடியும். பேசுவது காற்றோடு கலந்து, கரைந்து மறைந்து விடும். நூல்கள் எழுத்துக்கள் வரலாற்று ஆவணங்கள். காந்தியடிகள் மகாத்மாவாக உயர்த்தியது நூல். எனவே இன்று வெளியிட்ட இந்த நான்கு மலர்களும் வரலாற்று ஆவணம்.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் உரை
மூன்று வேந்தர்கள் போல இந்த நூலிற்கு மூன்று துணைவேந்தர்கள் அழகு செய்கிறார்கள். மூவேந்தர்கள் இருக்குமிடத்தில் அவ்வை இருக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் சொல்ல முடியாத வேதனையில் துன்பத்தில் துயரத்தில் உள்ளனர். நாம் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம். இனியாவது, ஏதாவது அவர்களுக்காக செய்ய வேண்டும். தமிழாசியர்களுக்கு சுவிட்ச் போட தெரியாது என்று சொன்னார் மந்திரி அவினாசிலிங்கம் என்று குறைபட்டார்கள். ஆனால் அவர் தமிழுக்காக பல நன்மைகள் செய்தார் என்பதை மறுக்க முடியாது. திராவிடச் சான்று என்ற நூல்கள் ஆய்வு எல்லீஸ் என்ற அறிஞர் பற்றி எழுதி உள்ளனர். எல்லீசு நிறைய ஆய்வு செய்து சேகரித்து வைத்து இருந்ததர். அவர் அதனை வெளியிடும் முன்பு உணவில் நஞ்சு கலந்து கொன்றார்கள். தமிழ்ப்பற்றின் காரணமாக எல்லீசு என்ற பெயரை எல்லீசர் என்று மாற்றிக் கொண்டவர். 1812ல் திருவள்ளுவர் சிலை பொறித்த தங்கக்காசு உருவாக்கினார்.
சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்ததாக சிலர் பொய்யான ஆய்வு செய்ததுண்டு. தமிழ் தனிக்குடும்பம், தனிமொழி என்பதை ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். திரு.வெங்கடேசன் எழுதிய சமீபத்தில் வெளிவந்த நாவல் காவல்கோட்டை என்ற நூல். ஆயிரம் பக்கத்தில் உள்ள இந்த நூல் பல அரிய தகவல்களை உள்ளடக்கிய ஆவணமாக உள்ளது. திருமலை நாயக்கர் மன்னனுக்கும் பிறமலைக் கள்ளர்களுக்கும் நடந்த 60 பொன் கொடுக்கும் ஒப்பந்தம் போன்ற பல நிகழ்வுகள் இந்த நாவலில் உள்ளது. பேராசிரியர் தி.சு.நடராசன் எழுதிய தமிழகத்தில் வைதீக சமயம் என்ற நூல் அந்த நூலில் என்னைக் கவர்ந்த வரிகள் வரலாற்று உண்மைகள் எப்போதும் வலிய தன்னைக் காட்டிக் கொள்வதில்லை. தேடுவோரைத் தேடிக் காத்துக் கொண்டிருக்கிறது. - ஒரு நகரமும் ஒரு கிராமும்� என்ற நூல் எழுதியவர் பேராசிரியர் நீலகண்டன். குரூர் நகரம் செட்டிபாளையம் கிராமம், நகரம் வளர வளர கிராமம் எப்படி அழிகிறது. ஆமராவதி என்ற நதி 15 அடி அளவிற்கு மணல் இருந்தது. மணலை கொள்ளையடித்து அழித்தனர். சாயப்பட்டறைகள் பெருகி கழிவு நீரை இணைத்து, குடிக்க முடியாத சாக்கடை அவசியத்தை வலியுறுத்துகிறார். 2 கோடி ஆண்டுகளாக இயற்கை சேகரித்த மணலை, 25 ஆண்டுகளில் மனிதன் கொள்ளையடித்து அழித்த அவலத்தை நன்கு பதிவு செய்துள்ளார். இரண்டு முறை சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி இந்தியத் தமிழாசிரியர்கள் கழக மாநாட்டில் தான் படித்த நல்ல நூல்களை அவைக்கு அறிமுகம் செய்து புதுமையாகப் பேசினார்.
இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர்கள் மன்றத்தின் 40ம் பன்னாட்டு தமிழியல் கருத்தரங்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக நடந்தது. நான்கு மலர்கள் வெளியீடு, கட்டுரை வாசித்தல், தமிழ் மொழியின் வளர்ச்சி, கணினியில் இணைத்தில் நிகழ்ந்ததை நன்கு விளக்கினர் முனைவர் இளங்கோவன், மொத்தத்தில் மன்ற பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பாக தேனீயைப் போல உழைத்து தமிழன்னைக்கு மகுடம் சூட்டினார்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: இந்தியப் பல்கலைக்கழகத்த தமிழசிரியர்கள் கருத்தரங்கில் உரையாற்றிய அறிஞர்களின் உரையிலிருந்து சில துளிகள் - தொகுப்பு - கவிஞர் இரா.இரவி
அரியதோர் தொகுப்பு, நல்லதோர் முயற்சி வாழ்த்துக்கள்
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
NANDRI
வணக்கம். கட்டுரையைப்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» பட்டிமன்ற நடுவர் டாக்டர் வெ.இறையன்பு உரையிலிருந்து –(தொகுப்பு - கவிஞர் இரா.இரவி)
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» இதழ்கள் முகவரிகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» இதழ்கள் முகவரிகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum