தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
4 posters
Page 1 of 1
அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அழகுயரக் கண்ணாடி !
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .thabushankar@yahoo.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
விஜயா பதிப்பகம் .20 ராஜ வீதி கோவை .விலை ரூபாய் 80
.
அழகுயரக் கண்ணாடி நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .ஆள் உயரக் கண்ணாடி கேள்விப்பட்டு இருக்கிறோம் .அழகுயரக் கண்ணாடி இப்போதுதான் கேள்விப்படுகிறோம் .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் புதிய சொல் பயன்படுத்துவதில் வல்லவர் .காதலர்கள் போற்றும் கவிஞராக உள்ளார் ..நூலை பதிப்பித்த விஜயா பதிப்பகம் தப்பு சங்கர் நூல் என்றாலே, கூடுதல் கவனம் எடுத்து நூலிற்கு அழகு கூட்டி விடுகின்றனர் ..இந்த நூலில் கவிதை அழகா?நூல் அழகா ? என்று பட்டிமன்றம் நடத்தினால் நடுவரால் தீர்ப்பு சொல்ல முடியாது .அவ்வளவு வனப்பு .பாராட்டுக்கள் .
முதல் கவிதையிலேயே முத்திரை பதிக்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .
உலகத்தின்
எல்லா மொழிகளிலும்
அன்பான சொல்
அம்மா ...
அழகான சொல்
காதல் ...
முதல் கவிதையில் காதலுக்கு மதிப்பு அளித்து நூல் முழுவதையும் படிக்க வைத்து விடுகிறார் .
நூலை வித்தியாசமாக காணிக்கையாக்கி உள்ளார் பாருங்கள் .
பிள்ளைகளின்
காதலை ஏற்றுக் கொள்ளும்
பெற்றோர்களுக்கு ...
காதலுக்கு சாதி ,மதம் இல்லை என்பதை மெய்பிக்கும் விதமாக எள்ளல் சுவையுடன் .இஸ்லாமியர் கட்டிய தாஜ்மகாலுக்கு இந்து வழக்கப்படி வித்தியாசமாக வேண்டுதல் வைத்துள்ளார் பாருங்கள் .
தாஜ்மகாலுக்கு
காவடி எடுப்பதாக
வேண்டிக் கொண்டிருக்கிறேன்
நீ என்னை காதலித்தால் ...
காதலியை எப்படி? வித்தியாசமாக வர்ணிக்கிறார் . பாருங்கள் .
உனக்கு முன்னே இருப்பவர்கள்
உன்னை வரவேற்கிறார்கள் !
உனக்குப் பின்னே இருப்பவர்கள்
உன்னை வழியனுப்புகிறார்கள் .!
நீ வீதியில் நடந்துபோகும்
ஒவ்வொரு முறையும்
இதுதான் நடக்கிறது !
ஒவ்வொரு கவிதையிலும் ஒரு வித்தியாசம் காட்டி விடுகிறார் .
பாகனைப் பந்து விளையாடும்
மதங் கொண்ட யானையைப் போல
இந்த ஊரை விளையாடுகிறது
திமிர் கொண்ட உன் பேரழகு !
நூல் விமர்சனத்தில் அனைத்து கவிதைகளையும் மேற்கோள் காட்டுவது மரபு அன்று .
ஆனால் தபூ சங்கர் நூலைப் படித்தால் மரபை மீறி அனைத்து கவிதைகளையும் மேற்கோள் காட்டி விடுவோமோ? என்ற அச்சம் பிறக்கும் . எல்லாக் கவிதைகளும் பிடித்தாலும் ,மிகவும் பிடித்த கவிதைகளை மடித்து வைப்போம் என்று முடிவு எடுத்து மடித்து வைத்தால் கடைசியில் எல்லா பக்கமும் மடிக்கப் பட்டு இருக்கும் .
வெப்பமயமாதாலுக்கு பலரும் பல காரணம் சொல்லி வருகின்றனர் .ஆனால் தபூ சங்கர் எள்ளல் சுவையுடன் சொல்லும் காரணம் ரசிக்கும் படி உள்ளது .
உன் அழகைப் பார்க்கின்ற
பெண்கள் விடும்
ஏக்கப் பெருமூச்சில்தான்
இந்த உலகம்
வெப்பமயமாகின்றதோ !
நூலின் தலைப்பை பாடி உள்ள கவிதை இதோ !
ஆளுயரக் கண்ணாடியெல்லாம்
போதாது .
ஓர்
அழகுயரக் கண்ணாடி
வேண்டும்
நீ உன் பேரழகை
சரி பார்த்துக்கொள்ள .
அழகு உயர கண்ணாடி உதவும். ஆனால் அழகுயரக் கண்ணாடி ஒன்று உள்ளது என்பது தபூ சங்கர் மட்டுமே அறிந்த ரகசியம் .
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கலைப் பொக்கிசங்கள் உள்ள கண்காட்சி அமைந்துள்ள இடம் ஆயிரங்கால் மண்டபம் .அது பற்றியும் பாடி உள்ளார் .
ஆயிரங்கால் மண்டபத்தில்
அழகான கால்கள்
அதைக் காண வந்த
உன் கால்களே !
கவிதைக்கு பொய் அழகு என்பது உண்மை .அதிலும் காதல் கவிதைக்கு பொய் அழகோ அழகு என்பதை மெய்பிக்கும் கவிதை ஒன்று .
நீ எட்டிப் பார்த்த கிணற்றில்
உன் பிம்பம் விழுந்த நீரைக்
குடித்த அயிரமீன்கள் எல்லாம்
வைரமீன்களாகிப் போயின தெரியுமா ?
அயிரமீன்கள் வைரமீன்களாகிப் போவது இல்லை ஆனால் இந்தக் கவிதையைப் படிக்கும் காதலி முகம் வைரமாக ஜொலிக்கும் என்பது உண்மை .
முத்தம் பற்றி ஒரு ரசிக்கும் கவிதை இதோ !காதலியிடம் முத்தம் பெற்றவர்கள் எண்ணிப் பார்த்து ரசிக்கும் மிக நல்ல கவிதை .
நான் கொடுத்த முத்தத்தை
என்ன செய்தாய் என்று கேட்கிறாயே ..
உன் முத்தத்தை நான் என்ன செய்ய முடியும் ..
உன் முத்தம்தான்
என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறது
என்னை .
நூல் முழுவதும் இனிய புதுக்கவிதைகளை காதல் ரசம் சொட்டச் சொட்ட வடித்துள்ளார். புதுக்கவிதைகளை புது உத்தியுடன் படைத்து வருகிறார் .கவிஞர் தபூ சங்கர் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நடுநிலை விமர்சனம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நான் கொடுத்த முத்தத்தை
என்ன செய்தாய் என்று கேட்கிறாயே ..
உன் முத்தத்தை நான் என்ன செய்ய முடியும் ..
உன் முத்தம்தான்
என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறது
என்னை .
என்ன செய்தாய் என்று கேட்கிறாயே ..
உன் முத்தத்தை நான் என்ன செய்ய முடியும் ..
உன் முத்தம்தான்
என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறது
என்னை .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» எனது கறுப்புப் பெட்டி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» கொஞ்சல் வழிக் கல்வி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» தேவதைகளின் தேவதை ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» திமிருக்கு அழகென்று பெயர் நூல் ஆசிரியர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» விழியீர்ப்பு விசை . நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர். விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum