தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
விழியீர்ப்பு விசை . நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர். விமர்சனம் கவிஞர் இரா .இரவி
4 posters
Page 1 of 1
விழியீர்ப்பு விசை . நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர். விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விழியீர்ப்பு விசை
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்
விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விஜயா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 35
கவிஞர் தபூ சங்கர் தனது கவிதை நூல்கள் மூலம் காதலர்களையும் ,காதலையும் வளர்த்து வருபவர் .விழியீர்ப்பு விசை காதல் கவிதை நூல் இது . கவிஞர் தபூ சங்கர் காதல் கவிதைகள் மூலம் தனக்கென தனி இடம்
பிடித்தவர் .காதலர்களுக்குப் பிடித்த கவிஞர் தபூ சங்கர். இவரது நூலைத்தான் காதலர்கள் பலர் பரிசு நூலாகப் பரிமாறிக் கொள்கிறார்கள் . காதலர்கள் காதலைப் போலவே காதல் கவிதைகளையும் நேசிக்கின்றனர் .அதனால்தான் பல பதிப்புகளில் நூல் வந்துக் கொண்டே இருக்கின்றது. கவிஞர்கள் அறிவுமதி ,பழனி பாரதி இருவரின் அணிந்துரையும் நூலிற்கு உரம் சேர்க்கும் விதமாக உள்ளது .
புவி யீர்ப்பு விசை கண்டுபிடிக்கும் காலத்திற்கு முன்பே ,ஆதாம் ஏவாள் காலத்திலேயே உருவானது விழியீர்ப்பு விசை.கவிதைக்குப் பொய் அழகு என்பதை மெய்பிக்கும் கவிதை இந்நூலின் பின் அட்டையில் உள்ளது .
உனது ஆடையையும் எனது ஆடையையும்
அருகருகே காய வைத்திருக்கிறாயே !
இரண்டும் காய்வதை விட்டு விட்டு
விளையாடிக் கொண்டிருப்பதைப் பார் !
காற்றில் ஆடைகள் ஆடுவதை கவிஞர் விளையாடுவதாகக் கற்பனை செய்து கவிதை எழுதி உள்ளார் .நூலின் அட்டைப் படத்தில் உள்ள அழகி அழகா ? மயில் இறகு அழகா ? பட்டிமன்றமே நடத்தலாம் .
மொழிப்போர் தியாகி கேள்விப்பட்டு இருக்கிறோம் .விழிப்போர் தியாகிகளுக்கு
நூலை காணிக்கை ஆக்கி உள்ளார் .வித்தியாசமாக சிந்தித்து கவிதை எழுதுவதால்
வெற்றிப் பெறுகின்றார் .
சற்றுமுன் நீ நடந்து போன தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கின்றது வீதி ,எனினும்
கடந்து போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது என் இதயம் .
இதயத்தின் அதிர்வலைகளை கவிதையில் நன்குப் பதிவு செய்துள்ளார் .
சூரியன் வந்த பிறகுதான் நீ வருகிறாய்
என்றாலும் நீ வரும் போதுதான் விழிக்கிறது இந்த வீதி !
கவிஞர் தபூ சங்கரின் கவிதைகளுக்கு விளக்கவுரையோ, தெளிவுரையோ
தேவை இல்லை .எளிமை இனிமை புதுமை கலந்த கலவை .படிக்கும் வாசகர்
அனைவருக்கும் மிக எளிதாக விளங்கும் .சில கவிஞர்கள் இருக்கிறார்கள் எழுதிய
என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துக் கொள்ள முடியாது என்ற ரகத்தில் எழுதி
வருகின்றனர் .அவர்கள் திருந்த வேண்டும் .
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது
உண்மையெனில்
உனக்குத் தெரிகிறதா என் முகத்தில் உன் அழகு ?
கவிஞர் தபூ சங்கர் கவிதை உண்மைதான் .பல இளைஞர்கள் காதல் வயப்படதும்
அழகாகி விடுகின்றனர் .காதலனை அழகாக்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு .தாடி
வளர்த்து ,தற்கொலை வரை அழைத்துச் செல்லும் எதிர்மறை வினை காதலுக்கு இல்லாமல் இருக்க
வேண்டும் என்பதே என் விருப்பம் .
கண்களைக் கட்டிக் கொண்டுதானே
கண்ணா மூச்சி ஆட்டம் ஆட வேண்டும் ...
நீ கண்களாலேயே ஆடுகிறாயே !
காதல் வயப்படுவதில் முதல் இடம் கண்களுக்குத்தான் என காதலித்த
காதலர்களுக்கு நன்கு விளங்கும் .இந்த நூலில் உள்ள கவிதைகள் படிக்கும்
வாசகர்களுக்கு அவரவர் காதலை உறுதியாக நினைவூட்டும் என்று அறுதியிட்டு கூறலாம். நினைவூட்டத் தவறினால் நூலின் விலை திருப்பித் தரப்படும் என்று கூட விளம்பரம் செய்யலாம் .இந்தக் கவிதையை காதல் வயப்படும் ஒவ்வொரு இளைஞர்களும் கவனத்தில் கொண்டு
கடைப்பிடிக்க வேண்டும் .இனி ஒரு விதி செய்வோம். காதல் தற்கொலைகள் இனி இல்லை
என்று ஆக்குவோம் .அல்ல அல்ல இனி தற்கொலைகளே இல்லை என்று ஆக்குவோம். விலைமதிப்பற்ற மனித உயிரை மாய்க்கும் மடமையை ஒழிப்போம் .
உனக்காக எதை வேண்டுமானாலும் தருவேன்
என் உயிரைத் தவிர
அதை உன்னோடு வாழ்வதற்காக வைத்திருக்கிறேன் .
தொலைபேசியில் முத்தம் தா ! என்றுதான் காதலன் கேட்பான் .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் வித்தியாசமாக தொலைபேசியில் முத்தம் தராதே ! என்கிறார் .
தொலைபேசியில் எல்லாம் நீ எனக்கு முத்தம் தராதே
அது உன் முத்தத்தை எடுத்துக் கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே எனக்குத் தருகிறது .
காதலியின் அழகை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .பாருங்கள் .எள்ளல் சுவையுடன் .
எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக் கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம் உன்னை ரசித்துக் கொண்டிருந்தன .
மகிழ்ச்சியான கவிதைகள் மட்டுமல்ல மிகவும் நெகிழ்ச்சியான கவிதையும் உள்ளது .
நீ அன்பின் மிகுதியால் எனக்களித்த முத்தங்களை விட
ஒரு முறை அழுத போது என் மீது விழுந்து விட்ட
உன் கண்ணீர் துளிதான்
நான் சாகும் வரை சுமந்திருப்பேன் !
விழியீர்ப்பு விசை காதர்களை ஈர்க்கும் விசை .பாராட்டுக்கள் .காதல் கவிதைகளாக எழுதிக் குவிக்கும் கவிஞர் தபூ சங்கர் அவர்களிடமிருந்து சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

Last edited by eraeravi on Fri Apr 20, 2012 11:16 am; edited 1 time in total
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
Re: விழியீர்ப்பு விசை . நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர். விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தொலைபேசியில் எல்லாம் நீ எனக்கு முத்தம் மதம் தராதே
அது உன் முத்தத்தை எடுத்துக் கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே எனக்குத் தருகிறது .
நிஜமான கருத்தும் அழகான கவிதையும் படிக்கும் போது இனிக்கிறது.
நன்றிகள் நண்பரே
அது உன் முத்தத்தை எடுத்துக் கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே எனக்குத் தருகிறது .
நிஜமான கருத்தும் அழகான கவிதையும் படிக்கும் போது இனிக்கிறது.
நன்றிகள் நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: விழியீர்ப்பு விசை . நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர். விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: விழியீர்ப்பு விசை . நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர். விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
Similar topics
» எனது கறுப்புப் பெட்டி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» கொஞ்சல் வழிக் கல்வி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தேவதைகளின் தேவதை ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» திமிருக்கு அழகென்று பெயர் நூல் ஆசிரியர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|