தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !

Go down

என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Empty என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !

Post by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

என்ன பேசுவது! எப்படி பேசுவது!!

நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,

மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !

வெளியீடு : நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்,
41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-50.
போன் : 044 26251968 ; பக்கங்கள் : 816 ; விலை. ரூ.1000

*****

      முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் பேச்சு, எழுத்து என இரண்டு துறையிலும் வெற்றிக்கொடி நாட்டி வருபவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகள், இலட்சத்திற்கும் மேலான மாணவர்கள், இளைஞர்களை சந்தித்து உரையாற்றி, தன்னம்பிக்கை விதைத்து வருபவர். பேச்சுக்கலை பற்றி எத்தனையோ நூல்கள் வந்து இருந்தாலும் இவ்வளவு பிரமாண்டமாக இதுவரை வந்ததே இல்லை.

      மேடைப் பேச்சாளர்களுக்கு வழிகாட்டி - இந்நூல். அவர்களுக்கு மட்டுமல்ல நேர்முகத் தேர்வு சந்திக்கும் இளைஞர்களுக்கு, வளரும் கவிஞர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, குடும்பத்தில் எப்படி உரையாட வேண்டும், அலுவலகத்தில் எப்படி உரையாட வேண்டும், எந்த ஒரு பேச்சும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் நூல். ஆவணம் என்று சொல்ல வேண்டும். படித்துவிட்டு வைத்துவிடும் சராசரி நூல் அல்ல இது.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் மறு வாசிப்பு செய்து நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள, செதுக்கிக் கொள்ள செம்மைப்படுத்திக் கொள்ள உதவிடும் உன்னத நூல் இது. இது ஒரு பிரமாண்ட நூல். ஒரே நேரத்தில் வாசித்து முடித்துவிட முடியாது. ரசித்து, ருசித்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்க வேண்டிய நூல் இது.

      முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் ஒவ்வொரு நூலும் MASTER PIECE என்றே சொல்ல வேண்டும். அவருடைய ஒவ்வொரு நூலையும் அவரே வெல்லும் வகையில் பிரமிக்கத்தக்க வகையில் படைத்து வருகிறார். ‘இலக்கியத்தில் மேலாண்மை’ நூல் வந்தபோது தஞ்சை பல்கலைக்கழகத்தின் முன்னை துணைவேந்தர் திருமலை அவர்கள் குறிப்பிட்டார்கள்,  ‘இப்படி ஒரு நூலை திரு. இறையன்பு அவர்களே நினைத்தாலும் திரும்ப படைக்க முடியாது’ என்று.  அதுபோலவே, ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் வந்தபோது பிரபல மருத்துவர்கள் எல்லாம் படித்துவிட்டு வியந்து போனார்கள். மருத்துவர்களான நாங்கள் அறியாத பல விசயங்கள் இவர் அறிந்து எழுதி பிரமிக்க வைத்துள்ளார் என்று பாராட்டினார்கள். இந்த நூலும் அப்படித்தான். பேசும் கலை பற்றி, இப்படி ஒரு நூலை இனி யாரும் எழுத முடியாது என்று அறுதியிட்டுக் கூறலாம்.

      வாங்கி படித்துப் பாருங்கள், நான் எழுதியவை உண்மை என்பதை உணருவீர்கள். நல்ல தரமான தாள்கள், சிறப்பான அச்சு, பொருத்தமான வண்ணப்படங்கள் என நல்லமுறையில் பதிப்பித்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்குப் பாராட்டுகள்.

      நூலின் உள்ளே தகவல் பரிமாற்ற வரலாறு, உடல்மொழி இலக்கணம், உள்ளடக்கம், மேடையில் கதைகள், மேடையில் சிறக்க, மேடை நகைச்சுவை, மேடைகள் பலவிதம் என 134 தலைப்புகளில் அற்புதமாக எழுதி உள்ளார். பேசும் கலை பற்றி தகவல் தொடர்பு வரலாற்றில் தொடங்கி பேச்சாளர்களின் வகைகள் வரை எடுத்து இயம்பி உள்ளார்.எல்லோருக்கும் நாம் பேசுவதை எல்லோரும் கேட்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும் .ஆனால் பிறர் பேசுவதை கேட்கும் விருப்பம் இருக்காது .கேட்டல் ,கவனித்தல் அவசியத்தை நன்கு விளக்கி உள்ளார் .நல்ல கேட்பாளராக இருந்தால்தான் நல்ல  பேச்சாளர் ஆக முடியும் .என்பதை வலியுறுத்து உள்ளார் .

      முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் பல உரைகளை நேரில் கேட்டு இருக்கிறேன். இணையத்திலும், புலனத்திலும், வலையொளியிலும், தொலைக்காட்சிகளிலும் கேட்டு இருக்கிறேன்.  அவர் தெளிந்த நீரோடை போன்ற நடையில் பேசுவார். கவனச்சிதறல் வராதவண்ணம் யாரும் இடையில் வெளியேறாதவண்ணம் மிகச்சிறப்பாக உரையாற்றுவார்.  ஒருமுறை பேசிய தகவலை, மறுமுறை வராமல் பார்த்துக்கொள்வார்.  ஒவ்வொரு உரையும் புத்தம்புதிதாக இருக்கிறது. என்றும், எப்போதும் கேட்டு ரசிக்கும்வண்ணம் தகவல் சுரங்கமாக சிறுசிறு கதைகள், அயல்நாட்டு அறிஞர்களின் மேற்கோள்கள் என அனைத்தையும் பயன்படுத்துவார். கையில் சிறுகுறிப்பின்றி நினைவாற்றலுடன் பேசும் வல்லமை மிக்கவர். சிறந்த பேச்சாளரின் பேசும் கலை பற்றிய பிரமாண்டமான படைப்பு இந்நூல்.

      ஒரு பிரபல பேச்சாளர் இருந்தார் . அவரைச் சொல்வார்கள், முதல்முறை கேட்டால் டாப்.  இரண்டாம் முறை கேட்டால் டேப் என்பார்கள்.  எங்கும், எப்போதும், எல்லா மேடையும் ஒரே பேச்சு, பேசியதையே பேசுவது, கூறிய நகைச்சுவைகளையே திரும்பக் கூறுவது, இப்படி பேசுபவர் அல்ல இறையன்பு அவர்கள்.  தினந்தோறும் புதுப்புது தகவல்களை வாரி வழங்கும் வள்ளல்.

      நடமாடும் பல்கலைக்கழகம், நடமாடும் என்சைக்ளோபீடியா, நடமாடும் கூகுள் என்றே சொல்லலாம்.  திருக்குறள், கம்ப இராமாயணம் மட்டுமல்ல, மேல்நாட்டு இலக்கியங்களையும் அறிஞர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி, பொருத்தமான மேடையில் பொருத்தமான இடத்தில் மேற்கோள் காட்டி பேசியும், எழுதியும் வருபவர்.  சிலருக்கு நன்றாக எழுத வரும் ; சிலருக்கு நன்றாக பேச வரும்; வெகுசிலருக்கு நன்றாக எழுதவும்,நன்றாக பேசவும் வரும். அப்படிப்பட்ட வெகுசிலரில் சிகரமாக விளங்குபவர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள்.

      முதுமுனைவர் என்பதையோ, இ.ஆ.ப. என்பதையோ கூட எழுதாமல் இறையன்பு என்று மட்டுமே புத்தகத்தில் உள்ளது.  மிகப்பெரிய அறிஞர். அடக்கமாக, எளிமையாக இருப்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.  என்ன பேசுவது எப்படி பேசுவது கேள்விக்குறி போடாமல் ஆச்சரியக்குறியிட்டு படிக்கும் வாசகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ள பிரமாண்டமான படைப்பு. வாழ்த்துகள்.

*****
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நமக்குள் சில கேள்விகள்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
» மூளைக்குள் சுற்றுலா! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் முதன்மைச் செயலர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி.
» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum