தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உலகினில் உயர்ந்த கணித மாமேதை ராமனுஜன்

Go down

உலகினில் உயர்ந்த கணித மாமேதை ராமனுஜன் Empty உலகினில் உயர்ந்த கணித மாமேதை ராமனுஜன்

Post by கணபதி Fri Mar 15, 2013 6:10 pm

எண்ணில் அடங்காத எண்களின் தோழன் கணித சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி,

கணித உலகின் ஓர் ஒப்பற்ற ஒளிவிளக்கு, கணித சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, எண்களின் இராணுவத் தளபதி, எண்ணில் அடங்காத எண்களின் தோழன். ஆம்! உலகம் போற்றும் கணிதத் தலைவன் ராமனுஜன்.

தமிழகத்தில் பிறந்து உலகினில் உயர்ந்த கணித மாமேதை. இவரின் பிறந்த நாளை முன்னிட்டு நம் பாரத பிரதமர் வரும் புத்தாண்டை (2012) கணித ஆண்டாக அறிவித்தார். இது ராமானுஜரால் கணிதத்திற்கு கிடைத்த பெருமை.

கணிதத் துறையில் அவரைப் போன்று சாதனைப் படைக்க இன்றைய மாணவர்கள் முன்வர வேண்டும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த கணித மகன் வாழ்க்கைத் தடைகளில் கணிதப் படிகளில் முன்னேறி வந்தவர். கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கிய அம்மேதை ஆங்கிலப் பாடத்தில் மூன்று மதிப்பெண்கள் போதவில்லை என்பதால் மூன்று முறை தொடர்ச்சியாக தோல்வி கண்டு பட்டம் பெற இயலாமல் போனதால் ஆங்கிலத்தையே தாய்மொழியாகக் கொண்ட நாட்டில், "தேர்வே எழுதவேண்டாம். அவரின் கணிதப்புலத்தைக் கண்டு அக்கணித மேதையைப் பாராட்டி ‘பி.ஏ’ பட்டமளிக்கிறோம்” என்று கௌரவித்தது. முன்னேறுவதற்கும் சாதனைப் படைப்பதற்கும் மொழி ஒரு தடையல்ல என்பது இதிலிருந்து தெளிவு.

லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் மற்றும் உலக கணித மேதைகளில் ஒருவருமான பேராசிரியர்.ஜி.எச்.ஹார்டி அவர்கள் ஆங்கில சஞ்சிகை ஒன்றில் கணிதப்புதிர் ஒன்றை வெளியிட்டு இருந்தார். உலகெங்குமிருந்தும் விடையினை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். பேராசிரியர் ஜி.எச்.ஹார்டியின் கணிதப்புதிருக்கு விடை எழுதி அனுப்பினார் இராமானுஜன். அத்தோடு சில கணிதத் தேற்றங்களையும் இணைத்து அனுப்பினார்.

ராமானுஜன் அனுப்பிய கணிதப் புதிருக்கான விடை பேராசிரியர் ஜி.எச். ஹார்டிக்கு பெரும் வியப்பையளித்தது. விடையை கச்சிதமாக எழுதிய ராமானுஜன் ஒரு கணிதப் பேராசிரியராகத்தான் இருக்க வேண்டும் என்று முதலில் நினைத்த ஜி.எச். ஹார்டிக்கு, ராமானுஜன் தன்னை அறிமுகம் செய்து எழுதியிருந்த கடிதத்தைப் பார்த்தவுடன் அதிர்ந்து விட்டார்.

அவர் ராமானுஜரைப் பாராட்டி, “ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 ! பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.” என்று கூறினார்.

கணித மேதை ராமானுஜரைப் பற்றி சில சுவையான தகவல்கள் :

1) வரலாற்று ஆசிரியர் ராபர்ட் கனிகல் (Robert Kanigel) என்பவர் கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை 'அறிய இயலாத இறுதி எண்ணை அறிந்த மனிதன் (The man who knew infinity)' என்று நூலாக எழுதினார். இசைக்கு ஒரு மொசார்ட் (Mozart) போல, பௌதீகத்திற்கு ஒரு ஐன்ஸ்டைன் (Einstein) போல, கணிதத்திற்கு ஒரு ராமானுஜன் என்கிறது இந்நூல்.

2) 1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே.

3) 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.

4) சென்னைத் துறைமுக [Madras Port Trust ] நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டிஷ் இஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள். அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார்! அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.

5) கணித உலகிற்கு இராமானுஜன் விட்டுச்சென்றது :
(i) மூன்று குறிப்பேடுகள்
(ii) சென்னைப் பல்கலைக்கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913 – 1914)
(iii) 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போனக் குறிப்பேடு.
(iv) கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக் கட்டுரைகள்.

6) இராமானுஜன் ஆய்வுகளில் “ Theory Of Equation” , “ Theory Of Numbers” , “ Definite Integrals” , “Theory Of Patricians” , “Elliptic Functions and Continued Fractions” எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

7) இராமனுஜருக்குப் பிறகு இவரது ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

8) இவருடைய “Mock Theta Functions” எனும் அராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும்.

9) இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000 க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

10) ஹார்டி சொல்கிறார் – “நான் அவருக்கு சொல்லிக் கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை விட நான் அவரிடமிருந்து கற்றதுதான் அதிகம்.

muthuthamil.blogspot.com/2011/08/55.html
கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum