தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மருத்துவத் திற்கான நோபல் பரிசு-2010
Page 1 of 1
மருத்துவத் திற்கான நோபல் பரிசு-2010
பிரிட்டிஷ் மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் 2010-ஆம் ஆண்டுக்கான மருத்துவத் திற்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சோதனைக் குழாய் மூலம் குழந்தை களை பிறக்கச் செய்யும் முறையை மேம்படுத்திய தற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸின் முயற்சியால் 1978 ஜூலை 25-இல் பிரிட்டனில் முதல் முறையாக சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது.
1950-ஆம் ஆண்டுகளுக்கு முன் கருப்பைக்கு வெளியே கருவை உருவாக்கிப் பின்னர் கருப்பைக்குள் செலுத்தும் முறை இருந்தது. இதை ராபர்ட் எட்வர்ட்ஸ், பேட்ரிக் ஸ்டீப்போ என்ற சக விஞ்ஞானியுடன் சேர்ந்து மேம்படுத்தினார்.
அவரது இந்த சிகிச்சை முறைக்கு இன்விட்ரோ ஃபெட்டிலைசேஸன் (ஐவிஎஃப்) என்று பெயர். ராபர்ட்ஸின் பங்களிப்பால் உலகம் முழுவதும் குழந்தை பாக்கியம் இல்லாத லட்சக்கணக்கான தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 40 லட்சம் குழந்தைகள் சோதனைக் குழாய் மூலம் பிறந்துள்ளனர். அவரது முயற்சி நவீன மருத்துவ உலகில் ஒரு மைல்கல் ஆகும்.
ராபர்ட் ஜி.எட்வர்ட்ஸ் 1925-இல் பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் பிறந்தார். ராணுவத்தில் பணியாற்றிய அவர் 2-ஆம் உலகப் போர் முடிவடைந்த பின்னர், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயிரியல் படித்தார். தொடர்ந்து ஸ்காட்லாந்தில் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1955-இல் பி.எச்.டி படிப்பை நிறைவு செய்தார். தொடர்ந்து 1958 முதல் லண்டன் தேசிய மருத்துவ ஆய்வுக் கழகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றினார். 1963-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக்த்தில் பணியில் சேர்ந்து அங்கு பல மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டார். இங்குதான் தனது இன்விட்ரோ ஃபெர்டிலைசேஸன் (ஐவிஎஃப்) (சோதனைக் குழாய் குழந்தை) ஆய்வை மேற்கொண்டார். அங்கு உலகின் முதல் ஐவிஎஃப் ஆய்வு மையமும் அமைக்கப்பட்டது. அங்கு சக விஞ்ஞானி பேட்ரிக் ஸ்டீப்போவுடன் இணைந்து சோதனை குழாய் குழந்தை ஆய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இப்போது 85 வயதான நிலையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்தச் சோதனை குழாய் மூலம் குழந்தைகளை உருவாக்கும் முறை முதலில் விலங்கு களிடம் சோதனை செய்யப்பட்டது. (எ.கா.) கடல் வாழ் உயிரினங்கள். வார்செஸ்டர் அமைப்பைச் சேர்ந்த கிரகரி பின்சால் என்ற அமெரிக்க விஞ்ஞானி 1935-ஆம் ஆண்டு முதல் முதலாக முயல்களை வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டார். மின் ஷீ சாங் என்ற மற்றொரு விஞ்ஞானி 1959-ஆம் ஆண்டு இந்தச் சோதனையை உறுதி செய்தார். 20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் மறு உருவாக்கலை பற்றி ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள், இதை மனிதர்கள் வாயிலாகப் பரிசோதனை செய்ய ஏற்ற சூழ்நிலை குறித்து விவாதித்தனர். இதன் காரணமாக 1960 வரை இந்தச் சோதனை குழாய் குழந்தைமுறை அங்கீகரிக்கப்படவில்லை. இதற்கு நிறைய தொழில்நுட்ப வசதிகளும் அதற்குரிய ஆராய்ச்சிக் கூடங்களும் தேவைப்பட்டன. பிறகு சோதனை முறையில் கருமுட்டைகள் தாயின் கருப்பையில் சேர்க்கப்பட்டன. 1950 களில் லண்டனில் உள்ள நேஷனல் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் பணிபுரிந்த எட்வர்ட்ஸ் இந்த துறையில் விரிவான ஆராய்ச்சிகளை நடத்தியவர். தனது முதல் சோதனையை அவர் 1965-இல் வெற்றிகரமாக செய்து முடித்தார். அவரது அடுத்த கட்ட முயற்சி மிகவும் சவாலானது. பெண்ணின் கருப்பையில் விந்துணுக்கள் செலுத்தப்பட்டால் அவை நீண்ட நாட்கள் தங்குமா என்பது. பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளின் முடிவில் 1969-ஆம் ஆண்டு இதில் வெற்றி கண்டார். டாக்டர் எட்வர்ட்ஸ் மனித அணுக்கள் விட்ரோவினுள் செலுத் தப்பட்டதும் அவை 2-செல் ஸ்டேஜில் சேரவில்லை. இந்த தோல்வியினால் விட்ரோ அணுக்கள் உடம்பின் வெளி பகுதியில் வைத்து சோதனை செய்யப்பட்டது. இந்த புதிய முயற்சியின் மூலம் ஓரளவிற்கு வெற்றி கிடைத்தது. இதில் நிருபிக்கப்பட்டது என்ன வென்றால் கோனாடிராபின்ஸ் (Gonotrophins) மூலம் ஓக்டஸ் கட்டுப்படுத்தப்படும். மேலும் விட்ரோவில் இதை செயல்படுத்த நீண்ட காலமானது. இருந்த போதிலும் டாக்டர் எட்வர்ட்ஸ் அவர் இந்த ஆய்வின்போது புதிய தொழில்நுட்ப ரீதியான பிரச் சிûனையை சந்தித்தார். அவரது புதிய ஆய்வின்படி மனித உடலினுள் ஒக்டஸை செலுத்தினால் குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் அது பயனளிக்கவில்லை. இங்குதான் டாக்டர். பேட்ரிக் சி.ஸ்டெப்போஸின் முறை பயனளித்தது. பிறகு இங்கிலாந்திலேயே லேப்ரஸ்கோப் முறையை உருவாக்கினார். அதன் மூலம் ஓவரிலிருந்து (Ovary) ஒக்டோஸை செலுத்தினார். லேப்ராஸ்கோப் முறையில் கருவுற்ற பெண்களுக்கு வயிற்றின் அடிப்பகுதியில் எண்டாஸ்கோப் என்னும் நவீன மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனே டாக்டர் எட்வர்ட்ஸ் இந்த முறை எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது மேலும் இதன் வாயிலாக மீயாசிஸ் ஒஒவை ஒவரி யிலிருந்து கோனாடிராபின்ஸில் இணைக்கலாம் என முடிவு செய்தார்.
எட்வர்ட்ஸின் இரண்டாம் கட்ட ஆய்வில் இதுவே இறுதியான கண்டுபிடிப்பு ஆகும். முதல் கட்ட ஆய்வில் விட்ரோ முறையில் செலுத்தப்பட்ட விந்துக்கள் எம்பிரயோ முறை மூலம் 2-செல் ஸ்டேஜ்ஜுடன் ஒத்து போனது. இதை தொடர்ந்து 1971-இல் மனித ஒக்டோஸை விட்ரோவுடன் செலுத்தி 16-செல் என்னும் முறையில் பிளாஸ்டோசைட்டை உருவாகச் செய்தார். இந்த ஆராய்ச்சியானது 1969-71 ஒயஎ ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாகும். இது எட்வர்ட்ஸ் அடுத்த கட்ட ஆய்வுக்கு தயாராக அது மிகவும் பயனுள்ள தாக இருந்தது. 1970-இல் சக விஞ்ஞானி பேட்ரிக் ஸ்டீப்போவுடன் இணைந்து (சோதனை குழாய் குழந்தை) ஆய்வை மேற்கொண்டார். இறுதியாக ஹார்மோன்சிகிச்சையில் சில மாறுதல்கள் செய்ததன் மூலம் முதல் கருத்தரிப்பு முறை 1976-ஆம் ஆண்டு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு பிறகு 1978-ஆம் ஆண்டு முதல் சோதனை குழாய் குழந்தைலூயிஸ் ஜாய் பிரவுன் பிறந்ததாக எட்வர்ட்சும், பேட்ரிக்கும் அறிவித்தனர்.
இந்தக் குழந்தை நல்ல உடல் எடை மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் பிறந்ததாகவும் அவர்கள் கூறினர். அவர்கள் தெரிவித்த லூயிஸ் ஜாய் பிரவுன் போல சோதனை குழாய் மூலம் பிறந்த லட்சக்கணக்கான குழந்தைகள் இன்று நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» இலக்கியத்திற்கான நோபல் பரிசு-2010
» இயற்பியல் நோபல் பரிசு -2010
» வேதியியல் துறை நோபல் பரிசு-2010
» இலக்கியத்துக்கான நோபல் பரிசு
» நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்?
» இயற்பியல் நோபல் பரிசு -2010
» வேதியியல் துறை நோபல் பரிசு-2010
» இலக்கியத்துக்கான நோபல் பரிசு
» நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum