தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இலக்கியத்திற்கான நோபல் பரிசு-2010

Go down

இலக்கியத்திற்கான நோபல் பரிசு-2010 Empty இலக்கியத்திற்கான நோபல் பரிசு-2010

Post by RAJABTHEEN Sun Dec 05, 2010 2:30 am

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெரு நாட்டினை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் மரியோ வர்கஸ் லோசோவுக்கு (ஃகோர்கே மரியோ பெட்ரோ வர்கஸ் லேசோ) அறிவிக்கப்பட்டுள்ளது. லோசே ஒரு சிறந்த நாவலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர். அவரின் பேனாமுனையானது அரசியலையும் கலாச்சாரத்தையும் சீரமைத்து எழுதும். 74 வயதாகும் லோசோ ஸ்பானிஷ் பேசும் உலகில் முக்கியமானதொரு எழுத்தாளர்.

லோசோ பெருநாட்டில் அரிகுய்பா (Ariequipa) என்ற இடத்தில் 1936-இல் பிறந்தார். 1950-இல் சான் மர்கோஸ் பல்கலைக்கழகத்தில் (University of San Marco’s) இல் சட்டம் மற்றும் இலக்கியம் பயின்றார். படிப்பை முடித்த பின்னர் பல செய்தித் தாள்களில் எழுதினார். வெளிநாடுகளிலும் குறிப்பாக, லண்டன், பாரீஸ், மேட்ரிட் நகரங்களில் தங்கி பத்திரிகைகளில் எழுதி வந்தார். அந்த காலக்கட்டத்தில் தான் நாவல் எழுதத் தொடங்கினார்.

ஸ்பானிய மொழியில் எழுதும் லோசோ 1960-களில் நாய்களின் நகரம் எனப் பொருள்படும் ஸ்பானிய மொழிப் புதினம் La ciudad y los perros (ல சியுடாடு இ லொசு பெர்ரொசு) என்பதை 1963-இல் எழுதினார். இது ஆங்கிலத்தில் தி டைம் ஆஃப் தி ஹீரோ (The time of the Hero) என்ற நாவல் மூலம் உலகளவில் வாசகர்களை ஈர்த்தது. அந்த நாவல் பெருவின் ராணுவ அகாடமி பற்றியது. அதனால் தனது தாய்நாட்டிலேயே எதிர்ப்பை சம்பாதித்தார். 1980-ஆம் ஆண்டுகளில் உலகளவில் சிறந்த விற்பனையை தரும் இலத்தீன் அமெரிக்கா (தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க) எழுத்தாளராக உயர்ந்தார்.

அவற்றில் முக்கியமாக Green House. Conversation in the Cathedral, Aunt Julia and the Scripwriter மற்றும் பலவற்றை எழுதினார். பெரு நாட்டின் சர்வதிகார இமானுவேல் ஏ ஓதிரியா என்பவரின் ஆட்சியை அடிப்படை யாக கொண்டு 1969-இல் கான்வர்சேசியோன் இன் கத்தேடரல் நாவலை எழுதினார்.

நகைச்சுவை புதினங்கள், துப்பறியும் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், பரபரப்பூட்டும் அரசியல் புதினங்கள் என பலவகைப்பட்ட புனைவுப் படைப்பு களை எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப் பட்டுள்ளன.

இவருடைய Aunt Julia and the Scripwriter என்ற நாவல், அவருக் கும் ஆண்ட் ஜூலியாவுக்கும் இடையி லான உறவைப் பற்றிப் பேசுகிறது. இந்த நாவல் அப்போது இலத்தீன் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல அவருடைய The Feast of the Goat என்ற நாவல் தென் அமெரிக்க நாடான டொமினிகன் ரிபப்ளிக்கில் அமெரிக்காவின் கைக்கூலியாக இருந்த ஓர் அதிபரைப் பற்றியது.

அவர் ஒரு சர்வதிகாரி. பெண் பித்தர். அவருடைய பட்டப்பெயர் வெள்ளாடு (கோட்). அவரை பற்றியது “விருந்தான வெள்ளாடு’ என்ற அந்த நாவல். அதிகாரம் என்பது அதைத் தக்க வைத்துக் கொண்டு இருப்பவர் களையும், அதற்குக் கீழே இருக்கும் மக்கள் கூட்டத்தை யும் எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இந்த நாவல் ஒரு சிறந்த உதாரணம்.

1990-இல் ஜனாதிபதி தேர்தலில் நின்று ஃபுஜிமோரியிடம் தோற்றுப் போனார். அதற்கு பிறகு லோசோ பெரும்பாலும் அரசியல் கட்டுரைகளையே எழுதி வருகிறார். சுமாராக 30 நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

1982-இல் நோபல் பரிசு பெற்ற கேபிரிலா கார்சியா மார்குவாஷ் (Gabriela Garcia Marquez) அடுத்து இலத்தீன் அமெரிக்காவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறுபவர் லோசோதான்.

தற்சமயம் அமெரிக்க நாட்டில் பிரின்ஸ்டோன் பல்கலைக் கழகத்தில் (Princeton University) இலத்தீன் அமெரிக்காவை பற்றியப் பாடத்தை கற்பித்து வருகிறார்.இலக்கியத்திற்கான நோபல் பரிசு-2010 Perus-mario-vargas-llosa-wins-nobel-literature-prize-2010-10-07_l
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum