தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிரியமானவளே... (புவனா கோவிந்த்)

Go down

பிரியமானவளே...  (புவனா கோவிந்த்) Empty பிரியமானவளே... (புவனா கோவிந்த்)

Post by udhayam72 Fri May 10, 2013 5:13 pm

பிரியமானவளே...
(புவனா கோவிந்த்)



"காயத்ரி...காயத்ரி...காயத்ரி..."

"டீ...காயத்ரி காஞ்சனா மாமி கூப்டுண்டே இருக்கா பாரு. போய் என்னனு கேட்டுண்டு வா" என்றாள் கோகிலா தன் மகளிடம்

"சரிம்மா. தோ வரேன் மாமி"

"மாமி கூப்டேளா" ஈரத்தலையை துவட்டியவாறே பக்கத்து வீட்டுக்கு சென்றாள்

"நாலு அடிக்கு அந்த பக்கம் இருந்து உன்னைய வரவெக்க நான் நாப்பது தரம் கூப்பிடவேண்டினா இருக்கு"

"ஆஹா...நாலு தரம் கூட கூப்பிடல. உங்க சீமந்தப்புத்ரனவிட அதிகமா பொய் சொல்வீங்க போல இருக்கே"

"கொழுப்பாடி நோக்கு. நான் சிவனேன்னு இருக்கேன். என்னை ஏண்டி வம்பிழுக்கற" என்றான் காஞ்சனா மாமியின் மகன் கார்த்தி என்கிற கார்த்திகேயன்

"நீ சிவனேன்னு இருக்கியோ...ஷிவானிஏன்னு இருக்கியோ..." அதே தெருவில் கடைசி வீட்டில் இருக்கும் கோமதி மாமியின் மகள் ஷிவானியிடம் கார்த்தி வழிய போய் பேசுவதை சமயம் பார்த்து கேலி செய்தாள் காயத்ரி

"ஏய்...." என்று பார்வையாலேயே அவளை அடக்கினான் கார்த்தி

பத்து வயது முதல் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் கார்த்தியும் காயத்ரியும் வம்பு பேசுவது புதிதல்ல என்பதால் காஞ்சனா அதை கண்டு கொள்ளவில்லை

"உங்க ரகளைல உன்ன எதுக்கு கூப்டேனோ அத விட்டுட்டு என்னமோ பேசிண்டு இருக்கேன்"

"எதுக்கு மாமி கூப்டேள்"

"இந்தாடி..இத வாங்கிக்கோ"

"என்னதிது..."

"உனக்கு இன்னிக்கி பிறந்தநாள்னு ஒரு பொடவை வாங்கினேன்...பிரிச்சு தான் பாரேன்"

"வாவ்...அழகா இருக்கு மாமி. எதுக்கு மாமி இதெல்லாம்... "

"ம்...தலைல வெச்சுக்க" என்றான் கார்த்தி கேலியாக

"போடா நீ.." என்றவள் அப்போது தான் பூஜை அறையில் இருந்து வெளியே வந்த கார்த்தியின் தந்தை ரங்கராஜனிடம் "வாங்கோ மாமா, இப்படி மாமியோட சேந்து நில்லுங்கோ. சேவிச்சுகறேன்"

"தீர்க்க ஆயுசா, தீர்க்க சுமங்கலியா, எல்லா செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க" என்று தம்பதியாய் வாழ்த்தினர்

இது ஒரு ஒரு வருடமும் நடக்கும் விஷயம் தான். தனக்கு பெண்கள் இல்லை என்ற குறை காஞ்சனாவுக்கு எப்போதும் உண்டு. அதை இப்படி தீர்த்து கொள்வாள்

"சரி இப்படி வா என்னோட கால்லயும் விழு. அப்போதான் என்னோட gift தருவேன்" என்றான் கார்த்தி

"அஸ்கு புஸ்கு...அதுக்கு வேற ஆளப்பாரு...போடா உன் கால்ல எல்லாம் விழ முடியாது"

"சரி பர்த்டே அன்னைக்கி பொழைச்சு போ" என்றவாறே தான் வாங்கிய பரிசை அளித்தான்

காயத்ரியை விட கார்த்தி சில மாதங்கள் மட்டுமே பெரியவன். கார்த்தி இன்ஜினியரிங் மூன்றாம் வருடமும் காயத்ரி BSC chemistry மூன்றாம் வருடமும் படித்து வந்தனர். கடந்த சில வருடங்களாக இருவரும் பரிசுகள் பரிமாறி கொள்வது வழக்கமானது தான்

"காயத்ரி...டீ...காயத்ரி...உங்க அக்கா போன்ல இருக்கா. வந்து பேசிட்டு போ" அம்மா கோகிலாவின் குரல் கேட்க "சரி மாமி நான் அப்புறம் வரேன்" என கிளம்பினாள்

"நம்மாத்துலையும் இப்படி ஒரு பெண் கொழந்தை இருந்தா வீடே நெறைஞ்சு இருக்கும் இல்லையாண்ணா" என்றாள் காஞ்சனா கணவனிடம்

"காலம் கடந்த யோசனை காஞ்சு" என்றார் ரங்கராஜன் கேலியாக

"ச்சே...தோளுக்கு மேல வளந்த புள்ளைய பக்கத்துல வெச்சுட்டு பேச்சை பாரு..." என்று பொய் கோபம் காட்டினாள்

"அம்மா நீ ஒண்ணும் டென்ஷன் ஆகாதே..அதுக்கு ஒரு சுலபமான வழி நான் சொல்றேன்" என்றான் கார்த்தி

"அது என்னடா சுலபமான வழி"

"காஞ்சு...நான் என்ன சொல்றேன்னா..." என்று கார்த்தி தன் தந்தையின் குரலில் பேச

"டேய்...அம்மாவ காஞ்சுனு பேரா சொல்ற...ஒதைப்பேன்" என்றாள் காஞ்சனா

"உன் ஆத்துகாரர் சொன்னா மட்டும் "ஏன்னா...கூப்டேளா..." னு கொஞ்சற...பெத்த மகன் நான் சொன்னா tension ஆ"

"போட்டேன்னா ஒண்ணு வாய் மேல...பேச்சு மட்டும் அப்படியே உங்க அப்பன கொண்டிருக்க..."

"அம்மா மகன் சண்டைல என்னை ஏண்டி இழுக்கற" என்றார் தினசரியை படித்தபடி "அதுசரி...அது என்னடா சுலபமான வழி...அதை சொல்லு மொதல்ல" என்றார் ரங்கராஜன்

"அது ஒண்ணுமில்லப்பா...very simple ...எனக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டா நம்மாத்துக்கு ஒரு பொண்ணு வந்துடுவாளோனோ...அது தான் சொன்னேன்"

"இன்னும் இருபது முடியல...உங்க புள்ளைண்டானுக்கு கல்யாணம் கேக்குது கேட்டேளாண்ணா..."

"கேட்டேன் கேட்டேன்...கலி முத்திடுச்சு காஞ்சு..வேற என்ன?"

"இது நல்ல கதையா இருக்கே...ஏன்பா..நீங்க அம்மாவ கல்யாணம் பண்ணினப்ப உங்க வயசு பத்தொன்பது தான...நாங்க சொன்னா மட்டும் கலி முத்திடுச்சுனு dialogue "

"அது அந்த காலம்டா"

"இந்த சாக்கு எல்லாம் வேண்டாம்"

"இப்ப என்ன? நோக்கு கல்யாணம் பண்ணிக்கணும் அதானே...டீ காஞ்சு உன் தம்பி வரதனோட பொண்ணு வத்சலாவ பாக்கலாமா" என வேண்டுமென்றே எட்டாவது கூட தாண்டாத கார்த்தியின் மாமன் மகளை பற்றி பேச

"ஐயோ சாமி ஆள விடுங்கோ..." என்று சிதறி ஓடினான் கார்த்தி

கார்த்தி வெளியே வரவும் காயத்ரி பூக்கூடையுடன் கோவிலுக்கு செல்ல வீட்டை விட்டு வெளியே வரவும் சரியாய் இருந்தது

"எங்க...? மகாராணி அதுக்குள்ள நகர்வலம் கெளம்பியாச்சா?" என்றான் கேலியாக

"ம்...வெட்டி ராஜாக்களே கெளம்பறப்ப நாங்க கெளம்பினா என்னவாம்?"

"உடம்பு பூரா கொழுப்ப தவிர ஆண்டவன் வேற ஒண்ணும் வெக்கலடி நோக்கு"

"ஆஹா...ஐயா நீங்க தெனமும் வடிச்சு கொட்டறேளேன்னோ...கொழுப்பு நேக்கு"

"வாயடி உன்கிட்ட பேசி ஜெய்க்க முடியுமா? அது சரி...எங்க கெளம்பிட்ட"

"இந்த கேலி தான வேண்டாங்கறது...பூக்கூடை எடுத்துட்டு காலேஜ்ஆ போவா? கோவிலுக்கு தான்"

திடீரென நினைவு வந்தவனாய் "ஏண்டி காத்தால ஒரு நிமிஷம் அம்மாகிட்ட என்ன மாட்டி விட்டுருப்ப...எப்ப என்ன பேசறதுன்னு இல்லையா நோக்கு"

"என்ன சொல்ற..." என்றாள் புரியாமல்

"ம்...ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காத...அம்மா முன்னாடி எதுக்கு ஷிவானி பத்தி பேசின "

"ஹா ஹா ஹா...நல்லா சிக்கினயா...இன்னும் கூட சொல்லி இருப்பேன்...போனா போறதுனு விட்டேன்"

"பெரிய மனசு தான்..."

"அடடா...இதுக்கு பேரு தான் டெலிபதியா..."

"என்ன?" என்றான் கார்த்தி புரியாமல்

"அங்க பாரு ஷிவானிய பத்தி பேசினா அவளே எதுக்க வர்றா"

"வாவ்..."

"என்ன வாவ்..."

"ஒண்ணும் இல்ல...நீ சொன்னா மாதிரி டெலிபதினு நெனச்சேன்"

"யாருக்கு தெரியும். அவள வர சொல்லிட்டு தான் நீ ஆத்த விட்டு கிளம்பினயோ என்னமோ"

"அடிப்பாவி...இன்னும் அந்த அளவுக்கு எல்லாம் போகல"

"ஒஹோ.....ஆனா போற எண்ணம் இருக்கு போல"

"கொஞ்சம் பேசாம இரு காயத்ரி, அவ பக்கத்துல வந்துட்டா"

"ஹாய் ஷிவானி" என்றாள் காயத்ரி கார்த்தியை முந்திக்கொண்டு வேண்டுமென்றே

"ஹாய் காயத்ரி..என்ன ரெண்டு பேரும் ஜோடியா கிளம்பிடீங்க போல"

"அதெல்லாம் இல்ல ஷிவானி. காயத்ரி கோவில் போறா. நான் சும்மா இன்னிக்கி சனிக்கிழமை லீவ் தானேனு என் friend வீட்டுக்கு போறேன்" என்றான் அவசரமாக

"ஒ அப்படியா.."

"காயத்ரி நீ சீக்கரமா ஆரத்திகுள்ள கோவில் போகணும்னு சொன்னியோன்னோ. நீ வேணும்னா போய்க்கோ" என்றான் ஷிவானியுடன் தனியே பேசும் ஆசையுடன்

அதை புரிந்து கொண்ட காயத்ரி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் "ரெம்ப வழியாதடா" என்று விட்டு ஷிவானியிடம் "எங்க அக்கா புக்காத்துல இருந்து வர்றேன்னா, அதுக்குள்ள கோவிலுக்கு போயிட்டு ஆத்துக்கு போணும். சரி ஷிவானி அப்புறம் பாக்கலாம். Bye "

"Bye காயத்ரி..பாக்கலாம்...எனக்கும் கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு டைம் ஆச்சு கெளம்பறேன்" என்று விடை பெற்று செல்ல பாவமாய் நின்றான் கார்த்தி

உன்னிடம் பேசும்போது மட்டும்
உலகம் வேகமாய் சுத்துகிறதோ
பத்துமணி நேரம் கூட
பத்து நொடியாய் கரைகிறதே...

பார்க்கும்வரை பலவும் பேசிட
பலநாள் ஒத்திகைபார்க்கிறேன்
உனைப்பார்த்ததும் உலகமேமறந்து
ஊமையாகிறேனே என்னவளே...

என்னமாயம் செய்தாய்
எனையேநான் மறக்க - உன்நினைவில்
பிழைகள் தினம்செயும்
பித்தனாக்கினாயே பிரியமானவளே...

"அடடே...வாங்க வாங்க...என் செல்லம் வாங்க" கணவன் வீட்டில் இருந்து வந்த மூத்த மகள் கௌரியின் கையில் இருந்து ஒரு வயது பேத்தியை வாங்கினாள் கோகிலா

அதற்குள் "பாட்டி நானு" என்று இரண்டு கைகளையும் உயர்த்தினான் நான்கு வயதான கௌரியின் முதல் பிள்ளை

"பாட்டி ரெண்டு பேரையும் தூக்க முடியுமா...செத்த நாழி பேசாம இரு" என்று பிள்ளையை அதட்டினாள் கௌரி

"சும்மா இரு கௌரி. கொளந்தைய ஏன் முகம் வாட வெக்கற. நீ வாடா செல்லம்" என்று அவனை இன்னொரு பக்கம் அமர்த்திக்கொண்டாள்

"எங்கம்மா காயத்ரிய காணோம்"

"அவளா...இதோ இருக்கற கோவிலுக்கு போயிட்டு வர இத்தன நாழி. கேட்டா உங்க அப்பாவும் சேந்துண்டு என்னை கேலி பண்றது தான் நடந்துண்ட்ருக்கு. போற எடத்துல என்னத்தான் கோச்சுக்கபோறா பொண்ண வளத்தின அழகுக்கு" என்றாள் பெற்றவளுக்கே உரிய கவலையுடன்

"சும்மா ஏம்மா அவள திட்ற. எல்லாம் நாளானா சரியாய்டும்"

"ஆனா சரி தான்...தோ வந்துட்டா மகாராணி" என்றாள் காயத்ரியின் தலை கண்டதும்

"ஹேய் கௌரி" என்று ஓடி வந்து தமக்கையை கட்டிக்கொண்டாள்

"என் செல்லமே...happy birthday Gayu " என்று மனம்நிறைய அன்புடன் தங்கையின் கன்னத்தில் இதழ் பதித்தாள் கௌரி

தான் பெற்ற பிள்ளைகள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பை கண்டு ஆனந்தத்தில் கண் நிறைந்தது கோகிலாவிற்கு

இதே பெண்கள் இருவரும் கௌரியின் திருமணத்திற்கு முன் பாம்பும் கீரியுமாய் இருந்ததும் நினைவு வந்தது

ஆனால் கௌரி திருமணம் முடிந்து மறுவீடு சென்ற போது காயத்ரி அழுதது போல் வேறு எப்போதும் அவள் அழுது கண்டதில்லை கோகிலா. பார்த்தவர்களெல்லாம் கண் கலங்கிய தருணம் அது

"சரியா தான் சொல்லி இருக்கா அந்த காலத்துல. அண்ணன் தம்பினா கல்யாணம் கட்ற வரை உறவாளி கல்யாணம் ஆனா பங்காளி. அக்கா தங்கைனா கல்யாணம் கட்ற வரை பங்காளி கல்யாணம் பின்னாடி உறவாளினு" என்று நினைத்து கொண்டாள் கோகிலா

"ஏய் செல்ல குட்டி... சித்தி கிட்ட வா..." என்று அக்கா மகளை கொஞ்சினாள் காயத்ரி

"காயத்ரி. இந்தா இது உனக்கு என்னோட பர்த்டே gift " என்று ஒரு அழகிய கம்மல் பரிசளித்தாள் கௌரி

"வாவ்...அழகா இருக்கு கௌரி"

"எதுக்கு கௌரி இதெல்லாம்" என்று கடிந்து கொண்டாள் கோகிலா

"ஏம்மா என் காயத்ரிக்கு நான் வாங்க கூடாதா"

"அதில்லடீ...ஏதோ ஒரு சேலை துணினா சரி...தங்கம் விக்கற வெலைல மாப்பிளைக்கு எதுக்கு செலவு வெக்கற"

"அடடா...உன் மாப்பிள்ளை ஒண்ணும் ஒட்டியாணம் வாங்கி தரல...ஒரு 3 கிராம் தங்கம்...இதுக்கு என்னமோ...போம்மா நீ"

"அம்மாவுக்கு பொறாம கௌரி. நீ கண்டுக்காத" என்றாள் காயத்ரி வேண்டுமென்ற பேச்சை மாற்றும் பொருட்டு

"ஆமாண்டி...பொறாம...உன்ன" என்று அடிப்பது போல் கை தூக்க தப்பி ஓடினாள் காயத்ரி

"அது சரி....இந்த வருஷம் கார்த்தி gift என்ன? அதை காட்டு மொதல்ல" என்றாள் கௌரி

ஒவ்வொரு வருடமும் மிகவும் மெனக்கெட்டு தேடி தேடி வித்தியாசமான பரிசு வாங்குவதில் கார்த்திக்கு நிகர் யாரும் இல்லையென்றே கூறலாம். என்ன பரிசு இந்த வருடமென எதிர்பார்ப்பை கிளப்பும்படி இருக்கும் அவனுடைய அக்கறையான அணுகுமுறை

"இதோ இங்க பாரேன். வாட்ச் ரெம்ப அழகா இருக்கல்ல கௌரி. அதுவும் இந்த strap , dial எல்லா கலர்லயும் குடுத்து இருக்கான். Dressக்கு ஏத்தாப்புல மாத்தி போட்டுக்கலாம்"

"நன்னா இருக்குடி.எப்பவும் போல இந்த வருசமும் கார்த்தி gift தான் first class " என்றாள் கௌரி தங்கையை அணைத்தபடி

"பாசமலர்கள் கொஞ்சலுக்கு நடுவுல உள்ள வரலாமா" என்றவாறே வந்தான் கார்த்தி

"வா கார்த்தி...அட இப்ப தான் உன்னைய பத்தி பேசிட்டு இருந்தோம் நீ வந்துட்ட. நூறு ஆய்சு நோக்கு" என்றாள் கௌரி

கௌரியின் எதிர்பார்ப்பில்லா அன்பில் எப்போதும் போல் நெகிழ்ந்தான் கார்த்தி. தனக்கு இப்படி ஒரு தமக்கை இல்லையே என்று பலமுறை எண்ணியதுண்டு

"கௌரி அதுக்கு வேற ஒண்ணும் சொல்லலாம்" என்றாள் அவளுக்கே உரிய குறும்பான பார்வையுடன் காயத்ரி

"என்ன?" என கௌரி கேட்கவும்

"அது...அது..." எழுந்து ஓட தயாராய் நின்றபடி "Think of the Devil there it is னு சொல்வாங்கல்ல" என்று அவள் சொல்லி முடிக்கும் முன் ஓட சந்தர்ப்பம் தராமல் அவள் பின்னலை பிடித்து கொண்டான் கார்த்தி

"கொழுப்பு பாத்தியா கௌரி இவளுக்கு. நான் Devil ஆ நோக்கு" என்று பின்னலை இறுக்க

"விடுடா பாவி...தலை எல்லாம் கலையுது...ஐயோ கோவில்ல குடுத்த பூ எல்லாம் போச்சு" என அவள் சிணுங்கவும் விட்டான்

சண்டையிட்டு கொண்டாலும் அவனை கண்டதும் தங்கையின் முகத்தில் தெரிந்த ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி கௌரிக்கு ஏதோ புரிவது போல் தோன்றியது

காலமும் அலையும் தான் யாருக்கும் நிற்பதில்லையே. நாலு மாதம் நாலு நிமிசமாய் போனது

"மாமி...மாமி.... கார்த்தி எழுந்துட்டானா" என்றபடியே வீட்டுக்குள் சென்றாள் காயத்ரி

"வா காயத்ரி" என்றாள் காஞ்சனா சமையல் அறையில் இருந்தபடி

"உன்னைய மாதிரி என்ன சோம்பேறின்னு நெனச்சுண்டயா. நான் எல்லாம் எப்பவோ எழுந்தாச்சு" என்றபடி பூஜை அறையில் இருந்து வந்தான் கார்த்தி

"யாரு நானா சோம்பேறி. ஏன் சொல்ல மாட்ட. நோக்கு பொறந்தநாள்னு இந்த மார்கழி குளிர்லயும் அஞ்சு மணிக்கி எழுந்து குளிச்சு கோவில் போய் உன்பேர்ல அர்ச்சனை பண்ணிண்டு நோக்கு பிடிச்ச பொங்கல் பிரசாதம் கொண்டு வந்தா என்னைவே சோம்பேறிங்கற" என்றாள் நிஜமான ஆதங்கத்துடன்

அவள் அபிநயத்துடன் கூறிய விதமும், தனக்காக அவள் எடுத்த சிரத்தையும் நெகிழச்செய்ய பேச்சை மாற்றும் விதமாய் "அத விடு. சங்கரன் பட்டர் பொங்கல்னதும் நாக்குல ஜலம் ஊர்றது...குடு" என்று கை நீட்ட

"சோம்பேறி குடுக்கற பிரசாதம் மட்டும் நோக்கு எதுக்கு" என்றாள் வேண்டுமென்றே

"ஏய் இப்ப குடுக்கப்போறியா இல்லையா" என அவள் பதிலுக்கு காத்திராமல் பிரசாத தட்டை பிடுங்கினான்

"டேய் டேய் பொங்கல் முழுசா சாப்டாதே...நான் கஷ்டப்பட்டு சமைச்சுண்டு இருக்கேன் உனக்கு பிடிச்சதெல்லாம்" என்றாள் காஞ்சனா

"இன்ன பொழுது ஒரு நாள் உன் சமையல்ல இருந்து நேக்கு விமோசனம் இல்லையா மா" என்று அன்னையை வம்பிக்கிழுத்தான்

"ஏண்டா பேசமாட்ட...உன் ஆத்துக்காரி வந்து இடிச்சுண்டே சமைச்சு தற்ரச்சே பெத்தவள நெனச்சுப்ப அன்னிக்கி" என்று காஞ்சனா கூற

"சரியா சொன்னீங்க மாமி...அதுவும் நல்ல அடங்கா பிடாரியா பூரி கட்டைலையே போட்ரவளா பாத்து மாட்டி விடணும்" இதுதான் சமயமென வாரினாள் காயத்ரி

"உன்ன மாதிரி பிடாரியவே இத்தனை வருஷம் சமாளிச்சேனாமா. இதையும் விடவா ஒரு பஜாரி லோகத்துல இருப்பா?"

"பாருங்க மாமி இவன...நான் போறேன்" என்று நகர

"ஏய் ஏய் இரு கேசரி வாசம் பிடிச்சுட்டு தான வந்த...அதை சாப்டாம போனா எப்படி?"

"Birthday னு பாக்கறேன். இல்லேன்னா..."

"இல்லேன்னா...என்ன பண்ணுவ?"

"ஏண்டா அவளோட காத்தாலேயே வம்பு பண்ற" என்று காஞ்சனா பரிந்து கொண்டு வர

"இந்த வருஷம் என்னோட gift உனக்கு தர மாட்டேன் போ" என்று காயத்ரி நிஜமாகவே கோபமாய் கூற

"லூசே...எதுக்கு எடுத்தாலும் கோவம்...சும்மா தான...நீ மட்டும் என்னை சொல்றதில்லையா? நான் கோவிச்சுகறனா?"

"இரு gift எடுத்துட்டு வரேன்" என்று வீட்டுக்கு ஓடினாள் காயத்ரி

அழகாக பரிசு காகிதம் சுற்றப்பட்ட ஒரு பெட்டியை நீட்டினாள்

"இப்டி மூஞ்ச உம்முன்னு வெச்சுண்டு குடுக்கறதுன்னா நேக்கு வேண்டாம்"

"ஈ ஈ ...போதுமா?" என்றாள் பல்லை காட்டி

"இதுக்கு நான் சும்மாவே இருந்து இருக்கலாம்"

"Shirt பிடிச்சுருக்கா?" எதிர்பார்ப்புடனும் கேட்டாள்

"வாவ்...சூப்பர்...ரெம்ப நன்னா இருக்கு காயத்ரி...என்கிட்டே இந்த மெருன் கலர்ல இந்த checked டிசைன்ல இல்ல. அழகா இருக்கு"

"போட்டு காட்டு" என்றாள் ஆசையுடனும்

"ம்....நன்னா இருக்கா?"

"வாவ்...super ஆ இருக்குடா இந்த வேஷ்டி சட்டை costume உனக்கு. அப்படியே பொண்ணு பாக்க போலாம். இல்லையா மாமி?" என்றாள் காயத்ரி

"ரெம்ப நன்னா இருக்கு காயத்ரி. நீ சொன்னாப்ல பொண்ணு பாக்கவே போலாம்"

"ரெண்டு பேரும் சேந்து வேணும்னே சதி பண்றேளா" என்றான் கார்த்தி

"நாங்க என்னடா பண்ணினோம்" என்றாள் அப்பாவியாய் காயத்ரி

"ம்...உங்க அத்திம்பேர் கௌரிய பொண்ணு பாக்க வந்தப்ப வேஷ்டி சட்டை போட்டுட்டு வந்ததுக்கு எப்படி எல்லாம் கேலி பண்ணின நீ. என்னையும் அந்த மாதிரி சிக்க வெக்க பாக்கறயா"

"அப்ப நான் சின்ன பொண்ணு. விவரம் தெரியாம பேசினேன்"

"இப்ப ரெம்ப விவரம் வந்துடுச்சோ?"

"போடா நேக்கு காலேஜ்க்கு நேரம் ஆச்சு...நான் வரேன் மாமி" என்று கிளம்பினாள்

அவள் சென்ற பின்னும் "super ஆ இருக்குடா இந்த வேஷ்டி சட்டை costume நோக்கு" என்று அவள் சொன்னது காதில் ஒலித்து கொண்டே இருந்தது. கள்ளமில்லாத அவளுடைய அன்பு மனதிற்கு நிறைவாய் இருந்தது

அதே சட்டையை அணிந்து கொண்டான் கல்லூரிக்கு. பொருத்தமான Pant போடவும் மிகவும் நன்றாக பொருந்தியது அவனுக்கு

சட்டை அளவெடுத்த மாதிரி இவ்ளவு சரியா வாங்கி இருக்காளே great தான் என்று நினைத்துக்கொண்டான்

_______

அவன் கிளம்பிய அதே நேரத்தில் காயத்ரியும் கல்லூரிக்கு செல்ல கிளம்பினாள்

அவனை கண்டதும் "கார்த்தி..நீயே நெஜமா சொல்லு...இந்த Shirt நோக்கு நன்னா இருக்கு தான"

"சூப்பர்ஆ இருக்கு Gayu "என்றான். முதல் முறையாய் அவன் Gayu என்று அழைத்தது வித்தியாசமாய் இருந்தது

"ஏய் இந்த saree எங்கம்மா உனக்கு பர்த்டேக்கு குடுத்தது தான"

"ஆமா...இதெல்லாம் கூட ஞாபகம் இருக்கா"

"உனக்கு எப்பவும் ரெட் கலர் நல்லா suite ஆகும் காயத்ரி"

"தேங்க்ஸ் கார்த்தி"

இப்படியே பேசிட்டே போனாங்க ரெண்டு பேரும்


ப்ரியசகி...
சிந்தனை மழுங்கச்செயும் சிரிப்பும்
சிரிக்கவே மறக்கசெய்யும் கோபமும்
என்னையே இழக்கசெய்யும் அபிநயமும்
எந்த தேவதையிடம் கற்றாய்
கெஞ்சிகேட்கிறேன் சொல்லிவிடு
கொஞ்சமேனும் தூங்கவிடு...

கண்பேசும் வார்த்தைகள் மட்டுமல்ல
கனிவாய்பேசும் வார்த்தைகள்கூட
புரியத்தான் இல்லைஎனக்கு
புரியாத புதிரே
புத்தனாய் இருந்தஎன்னை
புதுமை பித்தனாக்கினாயே...
"கௌரி உடனே நம்மாத்துக்கு வர்றயா?"

"என்னாச்சு காயத்ரி?"

"நீ நேர்ல வா"

"காயத்ரி உன் கொரலே சரியா இல்ல, சொல்லேண்டி, நேக்கு ரெம்ப பதட்டமா இருக்கு"

"நீ வருவியா மாட்டியா?"

"அம்மாகிட்ட கொஞ்சம் போன்அ குடு"

"அதான் ஆத்துக்கு வரேல்ல. அம்மா அப்பா எல்லாரோடையும் அப்ப பேசிக்கோ"

"ஏண்டி இப்படி பிடிவாதம் பண்ற. சரி வரேன் போன்அ வெய்யி"

தான் நினைத்தது போல் ஏதேனும் காதல் விவகாரமோ என மனம் பதறியது கௌரிக்கு

சிறிது நேரத்தில் பதட்டமாக வந்த பெரிய மகளை கண்டதும்

"என்ன கௌரி. ஏன் இப்படி பதட்டமா வர்ற. கொழந்தைங்க எங்க?"

"அம்மா காயத்ரி போன் பண்ணினா. என்னமோ போல பேசினா. என்னமா ஆச்சு. அவளுக்கு உடம்புக்கு ஏதும் சரி இல்லையா?"

"அதுக்குள்ள உனக்கு போன் பண்ணினாளா? எங்க பிராணன வாங்கறது போறாதுன்னு உன்னையும் நிம்மதி இல்லாம செய்யனும்னு பாக்கறாளா?"

"ஏம்மா எப்பவும் அவள திண்டிண்டே இருக்க. இப்ப எங்க அவ?"

"கௌரி..." என்றபடி ஓடி வந்த காயத்ரி கௌரியின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்

"என்னடி ஆச்சு...ஏன் இப்படி அழற" என்று கௌரி பதற

அதே சமயம் வீட்டுக்குள் நுழைந்தார் கௌரி காயத்ரியின் தந்தை கோபால்

"ஏண்ணா...ஏன் ஆபீஸ்ல இருந்து சீக்கரமே வந்துட்டேள்" என்று பதட்டமாய் விசாரித்தாள் கோகிலா

"கௌரி பஸ் விட்டு எறங்கி நடந்து போறான்னு பியூன் வந்து சொன்னான். அதான் என்னமோன்னு வந்தேன்" என்றார் கோபால். அவருடைய அலுவலகம் வீட்டில் இருந்து நடக்கும் தூரத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகில் தான்

"எல்லாம் உங்க செல்ல மக வேல தான். வேற என்ன" என்று பெருமினாள் கோகிலா

"காயத்ரி என்னடி ஆச்சு? யாராச்சும் சொல்லுங்கோளேன்" என்றாள் கௌரி

காயத்ரி எதுவும் பேசாமல் அழுது கொண்டே இருக்க கோகிலா தொடர்ந்தாள்

"இருடி நான் சொல்றேன். ஒரு நல்ல வரன் வந்து இருக்கு கௌரி. இவ வேண்டாம்கறா"

"அவ இஷ்டம் தானேமா முக்கியம். வேற வரன் பாக்க வேண்டியது தானே" என தங்கைக்கு பரிந்தாள் கௌரி

"இந்த வரன பத்தி சொல்றேன். என்ன கொறகண்டானு நீயே கேப்ப"

"சொல்லும்மா"

"மெட்ராஸ்ல கலெக்டர் ஆபீஸ்ல வேல...." காயத்ரி இடை புகுந்தாள்

"கலெக்டர் ஆபீஸ்ல தான் வேல. கலெக்டர் இல்ல..."

கோகிலா: "நோக்கு கலெக்டர் மாப்பிள்ளை வேற கேக்குதோ?"

கௌரி: "இரு காயு அம்மா சொல்லட்டும். நீ சொல்லுமா"

கோகிலா: "ஒரே மூத்த அண்ணா கூட பிறந்தவா வேற பெண்கள் யாரும் இல்ல. அண்ணாவும் மன்னியும் சொந்த ஊர்ல அம்மா அப்பாவோட இருக்கா. எந்த பிக்கல் பிடுங்கலும் இல்ல. கலெக்டர் ஆபீஸ்ல Survery Engineer ஆ இருக்கார். மாசாமானா சொளையா இருபதாயிரம் சம்பளம். இதுக்கு மேல என்னடி வேணும்"

காயத்ரி: "அதுக்கு மேல நான் சம்பாதிப்பேன். நேக்கு இந்த வரன் வேண்டாம்"

கோகிலா: "கேட்டியா கௌரி.எதுக்கு இந்த விதண்டா வாதம். என்ன கொறனு நீயே கேளு"

கௌரி: "என்ன காயத்ரி? ஏன் வேண்டாங்கறேனு சொல்லு"

கோகிலா: " நானே சொல்றேன். இந்த ஊற விட்டு போமாட்டாளாம். மேல படிக்கணுமாம். வேலைக்கு போகணுமாம். பெரிய லட்சியம்..."

காயத்ரி: "ஆமா லட்சியம் தான். நான் அத்தனை தூரம் எல்லாம் வாக்கப்பட்டு போமாட்டேன். இதே ஊர்ல தான் இருப்பேன்"

கோகிலா: "ஏன் வீட்டோட மாபிள்ள பாத்துடுவோமா...?" என்றாள் கோவக்குரலில்

காயத்ரி: "வீட்டோடயா? ஐயோ சாமி உன்னோட காலமெல்லாம் நேக்கு குப்ப கொட்ட முடியாது. அதுக்கு கொடுமைக்கார மாமியாரே மேல்" என்றாள் கோபத்தில்

கோகிலா: "கேட்டியா கௌரி. பெத்த தாய்க்கு கொடுமைக்கார மாமியார் மேல்னு சொல்ற அளவுக்கு நான் என்னடி இவளுக்கு கொடுமை பண்ணினேன்" என்று அழத்தொடங்கினாள் கோகிலா

கௌரி: " அவ சும்மாவாச்சும் உன்ன வம்பு பண்றா விடேம்மா" என்று தாயை சமாதனம் செய்துவிட்டு "காயத்ரி ரெம்ப நல்ல வரனா தோன்றதுடீ...யோசி"

காயத்ரி: "நீ கூட என்பக்கம் பேச மாட்டியா கௌரி. மேல படிக்கணும். வேலைக்கு போகணும்னு எத்தனை ஆசை வெச்சிருக்கேன் தெரியுமா?"

இதுவரை பேசாத அவளுடைய அப்பா வாய் திறந்தார்

"காயத்ரிமா கல்யாணத்துக்கு அப்புறம் கூட படிக்கலாம்மா. நான் வேணா அதை பத்தி அவா கிட்ட பேசிடறேன்"

"ஏன்பா நீங்க கூட என்னை புரிஞ்சுக்க மாட்டேளா. என்னை ஊரை விட்டு வெரட்டரதுலையே குறியா இருக்கீங்க. நான் அத்தனை பாரமா போய்டேனா?" என்று அழத்தொடங்க செல்ல மகளின் அழுகை காண பொறுக்காமல்

"அப்படி இல்லமா. பெத்த பொண்ண பாரமா நெனைக்கறவன் நான் இல்ல. நல்ல வரனா இருக்கேன்னு தான்...."

"அவ கிட்ட எதுக்கு நீங்க கெஞ்சிண்டு இருக்கேள். போங்கோண்ணா. அவாள இந்த வார கடசில பொண்ணு பாக்க வரச்சொல்லுங்கோ" என்று கோகிலா கூற உடனே காயத்ரி பெரும் குரல் எடுத்து அழத்துவங்க

கௌரி: "விடும்மா.நான் தான் பத்தொன்பதுலையே வாக்கப்பட்டு போனேன். அவளாச்சும் மேல படிக்கட்டும். விடு"

கோகிலா: "சீக்கரம் கல்யாணம் பண்ணி என்ன கெட்டு போச்சு இப்ப நோக்கு. மணிமணியா ரெண்டு பிள்ளைங்க. ராணி மாதிரி வெச்சு தாங்கற மாபிள்ள. மனுசாளும் தங்கம் தான்.வேற என்ன?"

கௌரி: "ஆமா நீ தான் மெச்சிக்கணும். என்னமோ சொல்லுவாளே "ராஜ்யம் இல்லா ராஜானு" அந்த கதை தான்" என்றாள் பேச்சை திசை திருப்பும் பொருட்டு

கோகிலா: "அந்த பேச்செல்லாம் விடு. ஏண்ணா...அவாளுக்கு போன் பண்ணி சொல்லிடுங்கோ வரச்சொல்லி"

மகளின் அழுத முகம் மனதை பிசைய "காயத்ரிமா கடசியா ஒரு வாட்டி நல்லா யோசனை பண்ணி சொல்லு. பின்னாடி தப்பு பண்ணிட்டோமேன்னு நெனைகராப்ல இருக்க கூடாது"

ஏதோ பேச வாய் எடுத்த மனைவியை கை உயர்த்தி அமர்த்தினார்

"நல்லா யோசிச்சுட்டேன்பா. நேக்கு இஷ்டம் இல்ல" என்றாள் காயத்ரி தீர்மானமாக

"சரிம்மா. வேண்டாம்னு சொல்லிடலாம். முகம் கழுவிட்டு போய் தட்டு எடுத்து வெய். எல்லாரும் சாப்பிடலாம். நீ நேத்திக்கி ராத்திரில இருந்து ஒண்ணும் சாபிடல இல்ல போ"

"என்னணா இது. அவ சொல்றத கேட்டுடுண்டு....." என்ற மனைவியிடம்

"இங்க பாரு கோகி, நம்ம காலம் மாதிரி இல்ல இப்ப. பிள்ளைக இஷ்டத்துக்கு மேல நேக்கு எதுவும் பெருசு இல்ல. இதோட விடு"

"எப்படியோ போங்கோ...நீங்களாச்சு உங்க மகளாச்சு...இப்படியே செல்லம் குடுத்து குடுத்து எங்க போய் முடிய போறதோ" என்று புலம்பியபடி உள்புறம் சென்றாள் கோகிலா

"சரிம்மா நான் கிளம்பறேன்"

"ஏன் கௌரி. சாப்ட்ட கையோட போகாட்டா என்ன.செத்த நாழி இருந்து போயேன்"

"இல்லமா. சின்னது இப்பவே மாமிய என்ன பாடு படுத்துறதோ தெரியல. பெரியவன் ஸ்கூல்ல இருந்து வர்ரச்சே நான் இல்லன்னா ஆத்த ரெண்டு பண்ணிடுவான்"

"சரி பாத்து போ. கொடை இந்தா. நல்ல வெயில் நேரம்"

"சரிம்மா. காயத்ரி பஸ் ஸ்டாண்ட் வர என்னோட வாயேன்" ஏதோ பேசவே அழைக்கிறாள் என்று உணர்ந்து அவளும் கிளம்பினாள்

வீட்டை விட்டு சற்று தூரம் சென்றதும் "காயத்ரி உன்னிட்ட கொஞ்சம் பேசணும். நான் கேக்கறதுக்கு மறைக்காம சொல்லுவயா?"

"கேளு கௌரி. உன்கிட்ட நான் எப்போ என்ன சொல்லாம இருந்துருக்கேன்"

"அது...அது வந்து...நீ யாரையாச்சும் மனசுல நெனச்சுண்டு இருக்கயா?" தமக்கையின் கேள்வியில் உடல் அதிர

"ச்சே ச்சே...அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல" என்றாள் அவசரமாக

"அதனால தான் இந்த வரன வேண்டாங்கறயோனு...."

"எதை வெச்சு இப்படி ஒரு சந்தேகம்..." என்றாள் கேலி குரலில்

"இல்லடி...நீயும் கார்த்தியும் பழகறத பாத்து....."என்று தயங்கியபடி இழுத்தாள்

"அதெல்லாம் இல்ல....." என்றவளுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்றே தெரியவில்லை

ஆனால் கௌரி அப்படி கூறியதற்கு கோபத்திற்கு பதில் சந்தோஷம் தோன்றியது ஏன் என்று புரியாமல் விழித்தாள்

அதற்குள் கௌரி செல்ல வேண்டிய பஸ் வர அவள் புறப்பட்டாள்

காயத்ரிக்கு எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்றே புரியவில்லை. தன்னிலை இழந்து இதயம் வெளிய விழுந்து விடுமோ என அஞ்சும் படி துடித்தது

இனி என்ன என கேள்விக்குறியாய் நின்றாள்



இனியவனே...
பேசிய வார்த்தைக்கெல்லாம்
புதுஅர்த்தம் தோன்றுவதேன்
பேசாத வார்த்தைகூட
பலஅர்த்தம் சொல்லுவதேன்

அருகில் நீவேண்டுமென
ஆதங்கம்எனை கொல்வதேன்
ஆயுள்எல்லாம் உனக்கேஎன
ஆசைமனம் சொல்வதேன்

வீட்டிற்குள் வந்ததும் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்

பழைய சினிமால எல்லாம் வர்ற மாதிரி அவளுக்கும் அவ மனசாட்சிக்கும் (White Dress Costume ல) ஒரு பெரிய வாக்குவாதமே நடந்தது

காயத்ரி: "ஏன் இப்படி இருக்கு. ச்சே இது தப்பில்லையா"

மனசாட்சி: "என்ன தப்பு?"

காயத்ரி: "சின்னதுல இருந்து ஒண்ணா இருக்கற நண்பன இப்படி வேற மாதிரி நெனக்கறது தப்பில்லையா"

மனசாட்சி: "நண்பன் நல்ல கணவனா இருக்க கூடாதா என்ன?"

காயத்ரி: "ஆனா அவன் மனசுல அப்படி இல்லேன்னா"

மனசாட்சி: "இல்லாமயா ஒரு ஒரு பிறந்த நாளுக்கும் பாத்து பாத்து செய்யறான். உனக்கு ஒண்ணுனா மொதல் ஆளா நிக்கறான்"

காயத்ரி: "அது சும்மா ஒரு அன்புல இருக்கலாம் இல்ல"

மனசாட்சி: "வெறும் அன்புன்னா நோக்கு செகப்பு கலர் நன்னா இருக்குனு கூடவா சொல்லுவான்"

காயத்ரி: "அது சும்மா எல்லாரும் சொல்றது தான"

மனசாட்சி: "உன்ன மாதிரி பிடாரியவே சமாளிக்கலயானு அன்னிக்கி மறைமுகமா சொன்னது கூடவா நோக்கு ஏறல"

காயத்ரி: "எப்பவும் பேசற கேலி தான"

மனசாட்சி: "நீ நிச்சியம் அசடு தான் போ"

காயத்ரி: "ஆனா அவன் ஷிவானிய நெனச்சுண்டு இருந்தானே"

மனசாட்சி: "அதே ஷிவானி ரெண்டு மாசம் முந்தி அவ மாமாவ கட்டிக்க போறான்னு தெரிஞ்சப்ப ரெண்டு நாள் தான் சோகம். அப்புறம் பழைய படி சிரிக்கலையா கார்த்தி"

காயத்ரி: "அது...."

மனசாட்சி: "அதுவே நீ போன லீவுக்கு உங்க அக்கா ஆத்துல போய் சேந்தாப்புல பத்து நாள் இருக்கவும் உன்னைய தேடிண்டு உங்க அக்கா ஆத்துக்கு வந்தானே. ஞாபகமில்லையா"

காயத்ரி: "அவன் எப்பவும் எங்க அக்கா ஆத்துக்கு போறது தானே"

மனசாட்சி: "எப்பவும்னா நீ அங்க போய் இருகறச்ச தான ஒரு ஒரு வாட்டியும் அவன் அங்க வந்தான்"

காயத்ரி: "அதுவும் உண்மை தான்...ஆனா..." என அவள் இழுக்க

மனசாட்சி: "இப்படி நீ இழுந்துண்டே இரு. இன்னொரு ஷிவானியோ இல்ல பவானியோ கொத்திக்க போறா"

காயத்ரி: "ஐயோ..,...இல்ல...." என நிகழ் உலகிற்கு வந்தாள். மனசாட்சி ஓடி ஒளிந்து கொண்டது

மிகவும் குழம்பித்தான் போனாள். எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ திடீரென

"அதான் அழுது அழுது சாதிச்சுண்டாச்சே. போதும் உன் நாடகம். மணி ஆறாச்சு வெளிய வா" என்ற தன் அம்மா கோகிலாவின் பேச்சு எரிச்சலை கிளப்ப

"எதுக்குமா இப்ப கத்திண்டுருக்க" என்றபடி கதவை திறந்தாள்

"ஆமாடி நான் வீதில போற கழுத பாரு. கத்திண்டுருக்கேன்"

"உன்னிட்ட பேச நேக்கு தெம்பில்ல" என்று சலிப்புடன் கூறி விட்டு அங்கிருந்து சென்றால் போதுமென அவசரமாய் முகம் கழுவி கோவிலுக்கு கிளம்பினாள்

காயத்ரியின் நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ சரியாய் கார்த்தியும் வீட்டை விட்டு வெளியே வந்தான்

"ஹாய் காயத்ரி நானே உன்னைய பாக்கலாம்னு தான் வந்துண்டுருந்தேன். வா நடந்துண்டே பேசலாம்"

அவனை எதிர்பாராததால் என்ன பேசுவதென்றே தோணாமல் அமைதியாய் நடந்தாள்

"என்ன காயத்ரி? ஏன் எதுவும் பேசாம இருக்க?"

"ஒண்ணும் இல்ல" என்றாள் அவளுக்கே கேட்காத நடுங்கிய குரலில்

"இத்தன வருசமா பாக்கற கார்த்தி தானே. இன்று ஏன் இப்படி என் குரல் நடுங்குகிறது. அவனை பார்க்கவும் கூசுகிறதே. அவன் எப்போதும் போல் தான் இருக்கிறான். ச்சே சும்மா இருந்த சங்கை இந்த கௌரி ஊதி கெடுத்துடாளே" என மனதிற்குள் புலம்பினாள்

"என்ன ஆச்சு காயத்ரி? ஆத்துல ரெம்ப திட்டிட்டாளா"

"இவனுக்கு எப்படி? என்ன தெரியும்?" என குழப்பத்துடன் "நோக்கு எப்படி....?"

"அம்மா சொன்னா. மாமி வந்து ஒரே பொலம்பல்னு"

"....."

"ஏன் காயத்ரி? நல்ல வரன் தானே. ஏன் வேண்டாம்னே"

"கடவுளே இவனுமா..." என அழும் நிலைக்கு தயாரானாள்

"சொல்லுமா. ஏன் மாப்பிளைய பிடிக்கலையா?"

"இல்ல...நேக்கு மேல படிக்கணும்"

"அதுக்கு என்ன. கல்யாணம் பண்ணிண்டு படி. யாரு வேண்டாம்னா"

"ப்ளீஸ் கார்த்தி...நீயும் சேந்து என்ன கொல்லாத" என்றாள் அழுகையுடன்

"ஏய் என்ன காயத்ரி இது, இதுக்கு போய் அழற? சும்மா நான் கேக்க கூடாதா?"

"நீதாண்டா கேக்க கூடாது பாவி" என்றாள் மனதினுள்

"சாரி காயத்ரி. ஒகே நான் எதுவும் கேக்கல ஓகே வா" என்றான் சமாதானமாக

"ம்..." என்றாள்.

அதற்கு மேல் இருவரும் எதுவும் பேசவில்லை

காயத்ரிக்கு தான் தூக்கம் காணாமல் போனது அன்று முதல்

"அவன் மனசுல நான் இருந்தா "கல்யாணம் பண்ணிண்டு படி. யாரு வேண்டாம்னா" னு எப்படி சொல்லுவான். ஒருவேள ஆழம் பாக்கறானோ" என்று தனக்குள் பலவாறு குழம்பினாள் காயத்ரி

அடுத்த ஒரு வாரம் கார்த்தி கண்ணில் படுவதையே வேண்டுமென்றே தவிர்த்தாள் காயத்ரி

பரீட்சை எல்லாம் முடிந்து வீட்டில் இருந்ததால் நேரத்தை கொல்வது சிரமமாய் இருந்தது

அன்று தோழிகள் வந்து வற்புறுத்தி அழைக்க சினிமாவுக்கு கிளம்பினாள்

டிக்கெட் பெற்று கொண்டு தோழிகளுடன் அரட்டை அடித்து கொண்டு இருக்க, திடீரென யாரோ தோள் தொட திரும்பியவள் "ஹேய் காயத்ரி...நீ எங்க இங்க?" கண்களும் சிரிக்க நின்றவனை கண்டதும் தன்னிலை இழந்தாள்

ஒரு வாரமாய் காணாமல் கண்டதாலோ என்னவோ அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொள்ள தோன்றியது. செய்வதறியாமல் நின்றாள்

"ஏய்...என்னாச்சு.காயத்ரி..நான் கூப்டுண்டே இருக்கேன்...நீ பேசாம இருக்க?. இவங்கெல்லாம் யாரு உன் friends ஆ"

"ம்...ஆ...ஆமா..."

"எனக்கு introduce பண்ண மாட்டியா..." என்று அவள் மட்டும் காணும் விதமாய் கண் சிமிட்டி கேட்க மொத்தமாய் கரைந்தே போனாள் அந்த பார்வையில்

முன் போல் என்றால் "போதும் வழியாத" என்று அவனை வம்பிழுத்து கொண்டிருப்பாள்

இப்போது எதுவும் தோன்றாமல் "ம்...இவ சித்ரா, இவ ப்ரியா...இது சத்யா.."

"ஏய்...இவர் யாருன்னு எங்களுக்கு சொல்லுடி" என்று
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

பிரியமானவளே...  (புவனா கோவிந்த்) Empty Re: பிரியமானவளே... (புவனா கோவிந்த்)

Post by udhayam72 Fri May 10, 2013 5:15 pm

எல்லாவற்றிக்கும் மேலாய் "படம் முடிஞ்சு வெயிட் பண்ணு. நான் நேரா வீட்டுக்கு தான் போறேன்னு" கார்த்தி சொல்லி சென்றதும்

"ஆஹா இங்க பாடற கச்சேரி போதாதுன்னு இனி தனி ஆவர்த்தனம் வேறயா" என தன் பங்குக்கு ப்ரியா ஏற்றி விட "சும்மா இருங்கடி" என தோழிகளை பொய்யாய் அடக்கிய காயத்ரி தன் மனதை அடக்க முடியாமல் திணறினாள், இதனால் நடக்க போகும் விபரீதத்தை உணராமல்...

சினிமா முடிந்து கூட்டம் கிளம்ப தொடங்கியது. "கெளம்பலாமா காயத்ரி" என்றபடி கார்த்தி வர "கெளம்புங்க மேடம் கெளம்புங்க" என்று தோழிகள் கலாய்க்க இரு பக்க நண்பர் நண்பிகளிடம் விடை பெற்று சென்றனர்

இதற்கு முன் பலமுறை கார்த்தியுடன் பைக்கில் காயத்ரி சென்றவள் தான் என்ற போதும் இன்று ஏனோ மிகவும் வித்தியாசமாய் உணர்ந்தாள். உடல் குறுக்கி ஓரமாய் அமர்ந்தாள்

"காயத்ரி போலாமா, நல்லா பிடிச்சு உக்காரு. கீழ விழறாப்ல ஓரத்துல உக்காந்துண்ட்ருக்க...." என்றான் கேலியாய்

எப்போதும் பேசும் கேலிக்கும் கூட புது அர்த்தம் தோன்றியது காயத்ரிக்கு, காதல் கொண்ட மனதின் பலவீனமாய்

காயத்ரி பதில் எதுவும் பேசாமல் இருக்க "ஏய் காயத்ரி.... என்ன எதுவும் பதிலே காணோம்.... என்னாச்சு நோக்கு? போலாமா?"

"ம்....போலாம்...." என்றாள்

"என்னமோ ஆய்டுச்சு...." என்றான் சிரிப்புடன்

"பண்றதெல்லாம் பண்ணிட்டு என்னமோ ஆய்டுச்சுன்னு வேற சொல்றயா.... பாவி" என மனதிற்குள் புலம்பினாள்

கார்த்தி அவள் இதோ சஞ்சலத்தில் இருக்கிறாள் என உணர்ந்து சற்று மனநிலைஐ மாற்றும் எண்ணத்துடன் "காயத்ரி... ஐஸ்கிரீம் பார்லர் போயிட்டு அப்புறம் ஆத்துக்கு போலாமா..." எனவும் "ம்..." என்றாள்

ஐஸ்கிரீம் பார்லரில் அந்த பின் மதிய நேரத்தில் கூட்டம் அத்தனை இருக்கவில்லை. சற்று ஓரத்தில் தனியாய் இருந்த ஒரு மேஜையில் சென்று அமர்ந்தனர்

பணியாள் வந்து "என்ன சாப்பிடறீங்க சார்?" எனவும்

"ம்...உன்னோட favourite கசாட்டா தானே காயத்ரி " என்றவன் அவள் பதிலை கூட எதிர்பாராமல் "ரெண்டு கசாட்டா கொண்டு வாங்க" என கார்த்தியே ஆர்டர் செய்தான்

தனக்கு மிகவும் பிடித்த ஒன்றை அவனே தேர்ந்தெடுத்து சொன்னது காயத்ரிக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது

பணியாள் சென்றதும் "வேற எதாச்சும் மில்க் சேக் சொல்லட்டுமா காயத்ரி..." என கேட்க

"வேண்டாம்..." என்றாள்

"என்ன மேடம்...? இன்னிக்கி எல்லாம் ஒன் வோர்ட் answer தானா?" என கண்கள் சிரிக்க புருவத்தை யுயர்த்தி கேட்க அந்த அழகில் அப்படியே மயங்கினாள் காயத்ரி

பதில் எதுவும் பேசமால் தலை தாழ்த்தி இருந்தவளின் வாடிய முகம் வேதனை தர அவளை சிரிக்க வைக்க முயன்றான் கார்த்தி

"என்னமோ காத்து கருப்புன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி எதாச்சும் ஆய்டுச்சா? ஒரு நல்ல மந்திரவாதியா பாக்கலாமா காயத்ரி" என கேலி போல் கேட்க

"மந்திரம் மொத்தமா உன்னோட கண்ல வெச்சுகிட்டு எந்த மந்திரவாதிய பாக்கறது" என தனக்கே கேட்காத குரலில் முனுமுனுத்தாள் காயத்ரி

"என்ன? என்ன சொன்ன? சத்தமா சொல்லு" எனவும்

"ஒண்ணும் இல்ல..." என மழுப்பினாள்

"ஏய்...என்னமோ சொன்ன நீ? சரி அத விடு...உன் friend ப்ரியா வீடு எங்க?" என வேண்டுமென்றே வம்பிழுத்தான்

நிஜமாகவே கோபம் தலை எடுக்க அவனை முறைத்தாள். வேண்டுமென்ற தன்னை தூண்டுகிறானோ என மனம் நொந்தாள்

"சரி சரி டென்ஷன் ஆகாத காயு....சும்மா... சும்மா தான் கேட்டேன்" என்றான். எப்போதும் இந்த மாதிரி பேச்சுக்களில் சகஜ நிலைக்கி வந்து விடும் காயத்ரி இன்று மேலும் இறுகுவதை கண்டதும் கார்த்தி ஏதேனும் பெரிய பிரச்சனையோ என குழம்பினான்

அதற்குள் பணியாள் ஐஸ்கிரீம் கொண்டு வர உண்ண தொடங்கினர்

எதுவும் பேசாமல் சற்று நேரம் அமைதியாய் கழிந்தது

காயத்ரியின் அந்த அமைதி கார்த்திக்கு மிகவும் புதியதாயும் வருத்தமாகவும் இருந்தது

அது அவனுள் பல காரணங்களையும் கற்பனை செய்தது

"காயத்ரி...ஏன் இப்படி டல்லா இருக்க? எதாச்சும் பிரச்சனயா?"

"ஒண்ணும் இல்ல..."என்றாள் மிகவும் பலவீனமான குரலில்

உடல் நிலை சரி இல்லையோ என தோன்ற "உடம்புக்கு எதுனா சரி இல்லையா?" என நெற்றியில் கை வைத்து பார்க்க அவன் தொடுகையில் கொஞ்சம் நஞ்சம் இருந்த உறுதியையும் இழந்தாள்

உணர்ச்சி மயமாய் தாங்க இயலாமல் உடல் அதிர கீழே விழப்போனாள்

"ஏய் என்னாச்சு..."என பதறி அவள் தோளை இறுக பற்றி நிறுத்தினான் "காயத்ரி சம்திங் இஸ் ராங். டாக்டர்கிட்ட போலாம் நட..."என கார்த்தி பதற

"ஒண்ணும் இல்ல...வேண்டாம்" என தடுத்தாள். "இத்தனை அக்கறை இருக்கறவனுக்கு மனசுல இருக்கற தவிப்பு புரியலையா.... இல்ல வேணும்னே நானே சொல்லனும்னு வம்பிழுக்கரானோ...." என மனதிற்குள் புழுங்கினாள்
ஏதோ தோன்ற "காயத்ரி நான் ஒண்ணு கேட்டா நீ தப்பா எடுத்துக்க மாட்டியே..."என இழுக்க

என்ன என்பது போல் விழியுயர்த்தி பார்க்க "Are you in Love?" என குறும்பாய் கேட்டான்

ஒரு நிமிடம் இதயம் துடிக்க மறந்தது போல் சிலையானாள்

அவனுடைய அந்த குறும்பு பார்வை ஆயிரம் அர்த்தம் சொல்ல பேசா மடந்தை ஆனாள்

"அப்போ மௌனம் சம்மதம்...இல்லையா காயத்ரி..." என மேலும் கேலியாய் கேட்க பலவித உணர்ச்சி குவியலில் திண்டாடினாள்

அழவும் தோன்றியது சிரிக்கவும் தோன்றியது. இதைத்தான் காதல் பைத்தியம் என்பார்களா என தனக்குள் மௌனமாய் சிரித்தாள்

"ஏய்....காயத்ரி...என்ன மேடம்? இப்படி ஒரு அமைதி...கமான்...ஸ்பிக் அவுட் " என்றான்

"என்ன பேசறது..." என்றாள் நடுங்கிய குரலில் தலை தாழ்த்தி

"அடே அப்பா.... உனக்கு வெக்க பட கூட தெரியுமா? தமிழ் சினிமா ஹீரோயின் தோத்தா போ உன்னிட்ட..." என்ற கேலிக்கு உரிமையுடன் பொய் கோபம் காட்டினாள் கண்களில்

அதையும் ரசித்தவன் "அது சரி... யாரு அந்த unlucky guy னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என சிரிப்புடன் கேட்க "பாவி என்னை தவிக்க வெச்சு பாக்கறதுல என்ன சுகமோ... என் வாயாலேயே சொல்லி கேக்கனும்னு ஆசையோ..." என மனதிற்குள் நெகிழ்ந்தாள்

"சொல்லு காயு.... ப்ளீஸ்..." என அவன் கண்களை சுருக்கி கெஞ்ச, அந்த பார்வையில் சொக்கியவள் "I Love You Kaarthi" என்றாள் நேசம் நிறைந்த குரலில்

அதன் பின் வெட்கம் ஆட்கொள்ள தலை குனிந்தாள்

கார்த்தி எதுவும் பேசாதது உறுத்த இமை உயர்த்தி பார்த்தவள்....அப்படியே....



மனதில் கள்ளம் புகுந்ததும்
மற்றதெல்லாம் துச்சமடி
உன்கண்ணில் காதல் கண்டதும்
உலகம் மொத்தம் உறைந்ததடி!!!
சிரிக்கும் உன் கண்களில்
சிறைவைத்தாயே என்னை
விடுதலை என்றுமே விரும்பாத
வித்தியாசமான கைதி நான்!!!
எண்ணம் பொருள் காட்சி
எல்லாம் நீயே ஆனாய்
என்னதவம் செய்தனை
எனது வரமாய் நீகிடைக்க!!!
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

பிரியமானவளே...  (புவனா கோவிந்த்) Empty Re: பிரியமானவளே... (புவனா கோவிந்த்)

Post by udhayam72 Fri May 10, 2013 5:17 pm

"சொல்லு காயு.... ப்ளீஸ்..." என அவன் கண்களை சுருக்கி கெஞ்ச, அந்த பார்வையில் சொக்கியவள் "I Love You Kaarthi" என்றாள் நேசம் நிறைந்த குரலில்

அதன் பின் வெட்கம் ஆட்கொள்ள தலை குனிந்தாள்

கார்த்தி எதுவும் பேசாதது உறுத்த இமை உயர்த்தி பார்த்தவள்....அப்படியே உறைந்தாள்

கார்த்தியின் நிலை அதை விட மோசமாக இருந்தது. இவள் தன்னிடம் விளையாடுகிராளோ என ஒரு கணம் நினைத்தவன் அவள் கண்களில் தெரிந்த வலியில் இது விளையாட்டல்ல என்பதை உணர்ந்தான்

கார்த்தியின் உணர்ச்சியற்ற குழம்பிய பார்வை மனதில் கிலியூட்ட செய்வதறியாது திகைத்தாள்

இருவரும் வார்த்தை தேடி தவிக்க மௌனம் மௌனமாய் ஆட்சி செய்து கொண்டிருந்தது அந்த கணத்தை

இருவரின் மனமும் நிலைகொள்ளாமல் தவித்தது. யார் மௌனத்தை கலைப்பது என்ற போரில் கார்த்தி தன் வாள் எடுத்தான்

"காயத்ரி....நான்...வந்து...." என தயங்க அதுவே தன் எல்லா கேள்விகளுக்கும் விடை தந்துவிட அவன் வார்த்தையில் நிராகரிப்பை கேட்கும் பலம் இன்றி கண்களில் பெருகிய நீரை அப்படியே விழுங்கியவள் "வேண்டாம்.... ஒண்ணும் சொல்ல வேண்டாம்... ப்ளீஸ்... போலாம்...." என எழுந்து நின்றாள்

இந்த நிலையில் பேசும் வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளே நலம் பயக்கும் என தோன்ற எதுவும் சொல்லாமல் அவளை பின் தொடர்ந்தான் கார்த்தி

வெளியே வந்ததும் காயத்ரி அங்கு சென்று கொண்டிருந்த ஆட்டோவை கை தட்டி அழைத்தாள்

"காயத்ரி.... என்ன பண்ற?..." என அவளை தடுக்க முயல

"ப்ளீஸ்......" என்றாள் கண்ணில் பெருகிய நீருடன்

அவளது கண்ணீர் தன்னை செயலற்றவனாக்க திகைத்து நின்றான் கார்த்தி

ஆட்டோவில் ஏறிய காயத்ரி "இந்த நிமிடம் இப்படியே பூமி பிளந்து தன்னை உள்வாங்கி கொள்ளாதா" என மனம் வெதும்பினாள்

"எங்கம்மா போகணும்...?" என்ற ஆட்டோ ஓட்டுனரின் குரல் சிந்தனையை கலைக்க முகவரி சொன்னாள்

வீட்டிற்குள் சென்றவள் தன் தாய் "எத்தன நேரம் காயத்ரி சினிமா போயிட்டு வர..." என கேட்டது காதில் கூட கேளாதவள் போல தன் அறைக்குள் சென்று சாற்றி கொண்டாள்

படுக்கையில் விழுந்தவள் சத்தமின்றி அழ வெகு பிரயத்தனப்பட்டாள். கண்களில் நீர் வற்றும் வரை அழுதவள் அப்படியே சோர்ந்து உறங்கி போனாள்

"காயத்ரி....காயத்ரி....எத்தன நாழியா உன்ன கூப்டுண்டே இருக்கறது" என்ற அன்னையின் குரல் உலுக்க கண் திறந்தவள் மதியம் நடந்ததெல்லாம் கண்முன் காட்சியாய் தோன்ற "எல்லாம் வெறும் கனவு தான் என்று யாரேனும் சொல்ல மாட்டார்களா" என தேம்பினாள்

அதற்குள் மறுபடியும் அன்னை அழைக்க "வரேன்மா...." என்றபடி எழுந்து சென்றவள் "எதுக்கும்மா கூப்ட..." என கேட்க

அடுப்படியில் ஏதோ வேலையாய் இருந்த கோகிலா மகளை திரும்பி கூட பாராமல் "எதுக்கா....? நல்லா கேக்கறடி கேள்வி? மால நேரம்...இன்னொரு ஆத்துக்கு போ போற பொண்ணு இப்படி தூங்கிண்டுருந்தா பாக்கறவா கை கொட்டி சிரிப்பா...போனா போன எடம் வந்தா வந்த எடம்னு என்ன பழக்கம் இது.... காத்தால சினிமா போறேன்னு போனவ மூணு மணிக்கி வந்த...வந்தவ கேட்ட கேள்விக்கி கூட பதில் சொல்லாம போய் கதவ அடைசுண்டுட்ட....கேப்பார் இல்லன்னு நெனப்பா....எல்லாம் அந்த பிராமணணன் குடுக்கற எடம்..." என்று கணவனையும் சாடினாள்

ஒரு சொல் சொல்லும் முன் வார்த்தைக்கு வார்த்தை வாயாடும் மகள் எதுவும் பேசாமல் நிற்கவும் என்னவென திரும்பி பார்த்தவள் மகள் கண்களில் நீர் வழிய நின்றதை கண்டதும் பதறி எழுந்தாள்

"ஏய்...காயத்ரி...என்னடி ஆச்சு நோக்கு...அம்மா நான் உன்ன எதுவும் சொல்ல கூடாதா. இப்படி வயசுக்கேத்த பொறுப்பில்லாம இருக்கியேன்னு ரெண்டு வார்த்தை பேசிட்டேன். தப்பு கேட்டுக்கறேன். அம்மா மேல கோபமா" என பரிவுடன் தோளில் சாய்த்து கொள்ள

தான் அழும் காரணம் புரியாத தாயின் பதட்டம் நெகிழ செய்ய மௌனமாய் அழுதாள்

"காயத்ரி...நீ இப்படி சட்டுன அழரவ இல்லையேடி....என்னாச்சு நோக்கு..." என பெற்ற மனம் பதறியது

"ஒண்ணும் இல்லமா.... கொஞ்சம் தல இடியா இருக்கு... சாப்பிட எதாச்சும் இருக்கா? பசிக்கறது..." என்றாள் அன்னையின் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு

அவள் நினைத்தது போலவே, மகள் பசி என்றதும் மற்றதெல்லாம் மறந்து "த்தோ... ரெண்டே நிமிஷம்டா செல்லம்... தோச வார்த்து தரேன்" என கோகிலா பரபரவென செய்தாள்

சாப்பிடும் மகளின் தலையை வாஞ்சையுடன் தடவியபடி "காயத்ரி... நெஜமா சொல்லு... தலை இடினு தான் அழுதாயா... வேற ஏதும் இல்லியே... " என பாவமாய் கேட்டாள் கோகிலா

"எதுவும் இல்லமா... உன்கிட்ட சொல்ல மாட்டேனா...?" என சமாளித்தாள்

"அப்புறம் சொல்ல மறந்துட்டனே... கார்த்தி வந்திருந்தான் கொஞ்ச நேரம் முன்ன உன்ன தேடிண்டு.... எழுப்பறேன்னேன்... வேண்டா மாமி அப்புறம் வரேன்னுட்டான்"

அவன் பெயரை கேட்டதும் மீண்டும் மனம் துவள "ம்.." என்றாள் ஒற்றை வார்த்தையாய்

அதன் பின் அவனை தனியே சந்திக்கும் வாய்ப்பை வலிந்து தவிர்த்தாள். கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் வதை படுவது போல் உணர்ந்தாள்

அவனை காணாத வரை சற்று தைரியமாய் இருக்கும் மனம் கண்டதும் மொத்தமாய் துவண்டு போனது

நாளானால் சரி ஆகும் என நினைத்தாள், ஆனால் அதற்கு மாறாய் இன்னும் வேதனையும் காதலும் போட்டி போட்டு கொண்டு வளர்ந்தன

எல்லாவற்றிக்கும் மேலாய் இவள் படும் வேதனைக்கான காரணம் புரியாமல் அவளை பெற்றவர்களும் "என்ன ஆச்சு என்ன ஆச்சு" என மருகியது இன்னும் வேதனை அளித்தது

வேறு வழி எதுவும் தோணாமல் ஒரு முடிவுக்கு வந்தாள்

கார்த்தியின் நிலை தான் கொடுமையாய் இருந்தது

உற்ற தோழி இது போல் பாரா முகமாய் இருப்பது வேதனை அளித்தது. மனதில் இல்லாத ஒன்றை எப்படி ஒப்பு கொள்ள முடியும் என தவித்தான்

அவளுக்கு இப்படி ஒரு நெனைப்பு வர தன் மீது என்ன தவறு என மருகினான்

எல்லாவற்றிக்கும் மேலாய் அந்த இடி போன்ற செய்தி அவனை மிகவும் பாதித்தது
________________________

காயத்ரியின் வீட்டில் ஒரு பெரிய வாக்குவாதமே நடந்து கொண்டு இருந்தது

"ஏண்டி... நோக்கு என்ன பைத்தியமா? என்னத்துக்கு இப்போ கோயம்புத்தூர் காலேஜ்ல MSC படிக்கணும்னு வீம்பு பிடிக்கற. ஏண்ணா... என் பொண்ணு என் பொண்ணு தூக்கி வெச்சுப்பீளே... கேளுங்கோ நீங்களே.... உங்க செல்ல மகள..." என கோகிலா பெரும

"நானும் கொஞ்ச நாளா உன்ன பாத்துட்டு தான் இருக்கேன்.... என்னமோ போல இருக்க... கேட்டா ஒண்ணுமில்லன்னு மழுப்பற... இப்போ திடீர்னு இப்படி ஒரு முடிவு. பிரச்சனை எதுனாலும் சொல்லுமா... அவசரத்துல எதுக்கற முடிவு எப்பவும் சரியா இருக்காது" என அவள் அப்பா பரிவுடன் பேச

"எனக்கு என்னப்பா பிரச்சன? எதுவும் இல்ல....நான் இது எப்பவோ யோசிச்ச விசயம் தான். நான் போகணும்பா" என்றாள் பிடிவாதமாய்

அவளது காரணமற்ற பிடிவாதம் கோபமூட்ட "என்ன காயத்ரி பிடிவாதம் இது?" என்றார் சற்றே கோபமாய்

எப்போதும் அம்மாடி, செல்லம், கண்ணம்மா என்றே அழைக்கும் தந்தை இன்று யாரோ போல் பெயர் சொல்லி அழைத்ததும் கோப முகம் காட்டியதும் காயத்ரிக்கு வேதனை அளித்த போதும் மௌனம் காத்தாள்

"ஏண்டி... அப்பா கேக்கறது காதுல விழறதா இல்லையா?"

காயத்ரி: "இங்க பாருங்க அம்மா அப்பா... என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல"

அப்பா: "நீ பேசறது சரி இல்ல கண்ணம்மா"

காயத்ரி: "ப்ளீஸ் பா... நீங்களாச்சும் என்ன புரிஞ்சுகோங்களேன்..."

அப்பா: "காரணத்த சொல்லு... புரிஞ்சுகறேன்... எப்பவும் காரணம் இல்லாம எதையும் என் புள்ளைங்க மேல நான் தினிச்சதில்ல.. அதே போல காரணம் இல்லாம ஒத்துண்டதும் இல்ல.... சொல்லும்மா இப்ப ஏன் hostel ல தங்கி படிக்கனும்கற"

காயத்ரி: "இங்கேயே இருந்தா எதுவும் கத்துக்க முடியாதுப்பா.... நாலு எடம் போய் நாலு விசயம் கத்துக்கணும்னு நீங்க தானே சொல்லுவேள்"

அம்மா: "மெட்ராஸ் மாப்பிள்ளை வந்தப்ப மட்டும் இதே ஊர்ல தான் இருப்பேன்னு பிடிவாதம் பண்ணினது என்ன? இப்ப பேசறது என்ன? நீ என்ன சொன்னாலும் கேட்டுபோங்கற திமிர்ல ஆடற நீ"

காயத்ரி: "நீ என்ன வேணுன்மா பேசுமா... நான் போகத்தான் போறேன்"

அப்பா: "காயத்ரி... மறுபடியும் சொல்றேன்... காரணம் இல்லாம நான் ஒப்புக்க போறதில்ல.... என்ன மீறி போகணும்னு நெனச்சா நீ போகலாம்" என்றார் தீர்மானமாக

காயத்ரி: "அப்பா...நீங்க சொல்றத சொல்லிட்டேள்.... நானும் சொல்லிடறேன்... நான் உயிரோட இருக்கணும்னா அனுப்பி வெயிங்கோ.... இங்கேயே இருந்து சாகட்டும்னு நெனச்சா அப்படியே ஆகட்டும்" என தன் கடைசி அஸ்திரத்தை ப்ரயோகித்தாள்

"ஐயோ...." என்று அலறினாள் அன்னை

"உன்னோட மெரட்டளுக்கு பயந்து ஒத்துக்கல காயத்ரி... எப்போ நீ இப்படி மெரட்டி பணியவெக்கனுங்கர அளவுக்கு துணிஞ்சயோ... இனி உன்னோட நான் பேச பிரியப்படல..."

"அப்பா...."

"இனிமே அப்படி கூப்டாதே ... என் பொண்ணு இப்படி பேச மாட்டா... நீ எப்ப கிளம்பனுமோ போய்க்கோ.... கோகிலா அவள தடுக்காத... பணம் எத்தனை வேணும்னு கேளு... ஏற்பாடு பண்றேன்... பெத்த கடமைய நான் சரியா செய்யறவன்..."

"எண்னனா இது... அவ தான் இதோ புரியாம பேசறானா எடுத்து சொல்றது விட்டுட்டு... அவளுக்கு சரியா நீங்களும் கோபபட்றேள்..."

"கோகிலா... சொன்னது காதுல விழலயா... இதை பத்தி இனி யாரும் பேச கூடாது... மீறி பேசினா நீயும் என்னோட பேசாதே..." என்று விட்டு இனி பேச எதுவும் இல்லை என்பது போல் அந்த இடத்தை விட்டு சென்றார்

தந்தையின் பேச்சு உயிர் வரை வலித்த போதும் இங்கு அவர்கள் கண்முன் இருந்து கொஞ்சம் கொஞ்சம் அழ வைப்பதை விட செல்வதே மேல் என முடிவு செய்தாள் காயத்ரி
இந்த செய்தி கார்த்தியின் வீட்டிலும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது

"ஏண்டா நீயாச்சும் காயத்ரிகிட்ட என்ன ஏதுன்னு கேக்கபடாதா" என காஞ்சனா தன் மகனிடம் கேட்க

"என்ன" என்றான் சாதரணமாய் இருக்க முயன்றபடி

"என்னடா இப்படி கேக்கற... அவ என்னமோ கோயம்புத்தூர் காலேஜ்ல hostel ல போய் தங்கி படிக்க போறேன்னு ஒத்த கால்ல நிக்கராளாம்... வேற வழி இல்லாம அவ அப்பாவும் ஒத்துண்டாராம்"

"என்னமா சொல்ற...?" என பாதி சாப்பாட்டில் அதிர்ச்சியுடன் எழுந்தான்

"ஆமாண்டா... மாமி வந்து சொல்லிட்டு ரெம்ப வருத்தபட்டா... மாமா காயத்ரியோட முகம் குடுத்து பேசரதில்லயாம்... யாரு கிட்டயும் சொல்லாம காலேஜ்க்கு application எல்லாம் அனுப்பி admission கார்டு வந்தப்புறம் சொல்லி இருக்கா... என்ன அழுத்தம் பாரேன்" என அங்கலாய்தாள்

ஏற்கனவே குற்ற உணர்வில் இருந்தவனுக்கு இது பெரும் இடியாய் இருந்தது. அவளிடம் பேசியே தீர வேண்டுமென தீர்மானித்தான்

____________

"வா கார்த்தி" என்றாள் கோகிலா சுரத்தின்றி

"வரேன் மாமி... காயத்ரி எங்க?" என கேட்டு கொண்டிருக்கும் போதே வீட்டுக்குள் நுழைந்தாள்

வந்தவள் எதுவும் பேசாமல் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள்

"என்ன காயத்ரி இதெல்லாம்... இப்ப எதுக்கு வெளியூர் போகனுங்கற" என்றவனை எதுவும் தெரியாத மாதிரி கேக்கறையா என்பது போல் பார்த்தாள்

"விடு கார்த்தி... அவ கிட்டயெல்லாம் பேசறதுல எந்த பயனும் இல்ல.... மார்ல வெச்சு தாங்கின அந்த மனுசனையே தூக்கி வீசி பேசிட்டா... இத்தன வருஷ வாழ்க்கைல அவர் கண்கலங்கி நான் பாத்ததில்ல... இவ அந்த கொறைய தீத்துட்டா..." என அழத்துவங்க

"அம்மா..... இப்போ என்னத்துக்கு அழுந்துன்டருக்க... வேற வேலை எதுனா இருந்தா பாரு" கார்த்திக்கும் சேர்ந்தே இந்த பதில் என்பது போல் அவனையும் ஒரு கண்ணால் பார்த்தே கூறினாள்

"பாக்கறேண்டியம்மா... பாக்கறேன்...." என்றபடி கோகிலா "பால் வாங்கிட்டு வந்துடறேன் கார்த்தி" என்றபடி வெளியே சென்றாள்

கோகிலாவின் தலை மறைந்ததும் "காயு ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளு"

"கார்த்தி... தயவு செஞ்சு இனிமே என்னை காயுனு கூப்டாதே... ப்ளீஸ்"

"என்மேல கோவம்னா ஆத்திரம் தீர திட்டிக்கோ... இப்படி ஏன் எல்லார் மனசையும் கஷ்டபடுத்தற"

"அப்போ... எல்லார் மனசும் கஷ்டபட்றத பத்தி தான் உனக்கு அக்கற... என் மனச பத்தி யாருக்கும் கவலை இல்ல இல்லையா"

"ஐயோ.... அப்படி இல்லமா... நீயா எதையோ கற்பனை பண்ணிண்டு..." அவன் முடிக்கும் முன்

தன் மனம் நிறைந்த காதலை கற்பனை என்றது தாங்கமாட்டாமல்

"போதும்.... இதுக்கு மேல எதுவும் பேசாத.... ஆமா நான் கற்பனைதான் பண்ணிண்டு இருக்கேன். அப்படியே இருந்துட்டு போறேன். நீ நேக்கு எதுனா உதவி செய்யனும்னு நெனச்சா... தயவு செஞ்சு இனிமே என்னிட்ட பேசாத...ப்ளீஸ்" என்றாள் வந்து விடுவேன் என்று பயம் காட்டிய அழுகையை அடக்கியபடி

"காயத்ரி... நான்...அப்படி சொல்லல..."

அவன் பேசியதை காதில் வாங்காமல் தன் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள்

செய்வதறியாது திகைத்து நின்றான் கார்த்தி.....

நம்நட்புக்கு ஈடாய்
நான் எதையும்ஏற்றதில்லை
எதையும்நீ கேட்டநொடி
எப்படியேனும் பெற்றுதருவேன் - இன்று
என்நட்பையே கேட்கிறாயே
எப்படிதருவேன் சொல்லடி!!!
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

பிரியமானவளே...  (புவனா கோவிந்த்) Empty Re: பிரியமானவளே... (புவனா கோவிந்த்)

Post by udhayam72 Fri May 10, 2013 5:19 pm

அதன்பின் கார்த்தி பலமுறை முயன்றும் காயத்ரி அவனுடன் பேச தயாராய் இல்லை

அந்த நாளும் வந்தது, காயத்ரி கிளம்பும் நாள்

ரயில் நிலையத்தில் ஒருவர் முகம் ஒருவர் பார்த்தபடி ரயிலுக்கு காத்திருந்தனர்

"செல்போன் எடுத்துண்டயா காயத்ரி. hostel அட்ரஸ் எல்லாம் எடுத்துண்டயா" என அவள் அக்கா கௌரி கேட்க

"ம்... எடுத்துண்டேன்..." என்றாள் காயத்ரி

"போனதும் போன் பண்ணுடி, பத்திரமா இரு என்ன"

"ம்..."

"இப்பவும் ஒண்ணும் கேட்டு போய்டலடி காயத்ரி... காலேஜ்க்கு கட்டின காசு போனா போறது. மனச மாத்திக்கோடி தங்கமே" என கண்ணை துடைத்தபடி கோகிலா கெஞ்ச பதில் பேசாமல் நின்றாள் காயத்ரி

"கோகிலா..... என்ன சொன்னேன் உன்னிட்டே.... என்னத்துக்கு இப்போ தேவ இல்லாம பேசிண்டுருக்க" என கணவன் கோபமுகம் காட்ட கோகிலா மௌனமானாள்

கார்த்தி செய்வது தெரியாமல் மௌனம் காத்தான். வாடிய முகத்துடன் அவளை வழி அனுப்ப மனமின்றி தனியே அவளிடம் ஏதேனும் பேசியேனும் சற்று இலகுவாக்கும் எண்ணத்துடன் "காயத்ரி வாட்டர் பாட்டில் வேணுமா? வாங்கிட்டு வரலாம் வா" என அழைக்க

"இல்ல கார்த்தி ஆத்துலேயே எடுத்துண்டோம்" என கோகிலா பதில் கூறினாள்

சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன் "ட்ரெயின்ல படிக்க புக்ஸ் வாங்கிக்க காயத்ரி. அங்க ஒரு கடை இருக்கு வா வாங்கிண்டு வரலாம்"

"இல்ல..... வேண்டாம்... புக்ஸ் இருக்கு" என தவிர்த்தாள், அவனுடன் பேசினால் தன் உறுதி தளர்ந்து விடும் என உணர்ந்தவளாய்.

ரயில் வந்ததும் ஏறி அமர்ந்து விட்டாள்

பெட்டிகளை உள்ளே எடுத்து வைக்க ஏறிய கார்த்தி "இன்னும் டைம் இருக்கே காயத்ரி, இப்பவே ஏறணுமா" என கேட்க

"எப்படி இருந்தாலும் போய் தானே ஆகணும்....?" என்றாள் அழுத்தமாய் அவனுக்கு மட்டும் கேட்கும்படி, எல்லாம் உன்னால் தான் என குற்றம் சாட்டுவது போல

அவன் ஏதோ சொல்ல முயல அதற்குள் கோகிலா அருகில் வரவும் எதுவும் பேசாமல் அகன்றான்

ரயில் நகரத்துவங்க கோகிலா அழலானாள். என்ன தான் கோபம் இருந்த போதும் அவள் தந்தைக்கு செல்ல மகளை பிரிவது மிகுந்த வேதனையை அளித்தது

காயத்ரி அழுகயை கட்டுப்படுத்த முகம் திருப்பினாள்

கார்த்திக்கோ வேதனை கொன்றது. கண்கள் பனிக்க குற்ற உணர்வில் தவித்தான்

எல்லோரின் மனத்திலும் கனத்தை ஏற்றி விட்டு அந்த ரயில் வேகமெடுத்து கிளம்பியது

________________

மறுநாள் பலமுறை அவள் கைபேசிக்கி அழைத்தும் காயத்ரி எடுக்கவில்லை. வேண்டுமென்றே தவிர்க்கிறாள் என அறிந்து வேதனை அடைந்தான் கார்த்தி

உற்ற தோழியின் பிரிவு மனதை வருத்தியது. அவள் பிரிவு தன்னை இந்த அளவு பாதிக்குமென அவன் நினைக்கவில்லை

ஒரு வாரம் பொறுத்தவன் தன் கைபேசியில் இருந்து அழைத்தால் எடுக்கமாட்டாள் என பொது தொலைபேசியில் இருந்து அழைத்தான்

"ஹலோ..."

"காயத்ரி.... நான் கார்த்தி பேசறேன்"

"......." அவன் குரல் கேட்டதும் உடல் நடுங்க சரிந்து அமர்ந்தாள்

"என்னாச்சு காயத்ரி..." என அவள் அறைத்தோழி கேட்க

"ஒண்ணும் இல்ல..." என்றாள் தனக்கே கேட்காத குரலில்

"காயத்ரி.... என்ன ஆச்சு?" என பதறினான் கார்த்தி

"......." மொத்த தைரியமும் வடிய மௌனமானாள்

"காயத்ரி நான் லைப்ரரி போயிட்டு அப்படியே க்ளாஸ்க்கு வரேன்... நீ பின்னாடி வா" என்று விட்டு அறை தோழி கிளம்ப அது தான் சாக்கென

"நான் போணும் டைம் ஆச்சு...." என்றாள் காயத்ரி

"காயத்ரி... ப்ளீஸ் போன் வெச்சுடாத.. ப்ளீஸ்மா" என்ற கெஞ்சலில் கரைந்தாள்

"......"

"காயத்ரி... ஏன் பேசமாட்டேன்கர....?"

"என்ன பேசணும்?"

"பேச எதுவும் இல்லையா?"

"நான் பேசவேண்டியதெல்லாம் பேசியாச்சு... இனி என்ன இருக்கு" என்றாள் விரக்தியாய்

"காயத்ரி நான் உன்ன ரெம்ப மிஸ் பண்றேன்... ஒரு வாரமா உன்னோட பேசாம எதையோ இழந்த மாதிரி இருக்கு"

"இப்படி எல்லாம் பேசி தானே என் மனச கெடுத்த கார்த்தி.. ஏன் இப்படி சித்ரவதை பண்ற என்னை?"

"என்ன பேசற காயத்ரி? என்னோட பெஸ்ட் friend ஐ நான் மிஸ் பண்ண கூடாதா? தப்பர்த்தம் பண்ணிண்டது நீ, தண்டனை நேக்கா? என்ன ஞாயம் காயத்ரி இது" என்றான் வேதனையாய்

"ஆமா... எல்லா தப்பும் என்னுது தான்...போதுமா.... வெச்சுடறேன்" என அழுகையுடன் பேசியை துண்டித்தாள்

அதன் பின் அவன் அழைப்புகளை அவள் நிராகரித்தாள்
இப்படியே இரு மாதங்கள் தவிப்பும் ஊடலுமாய் ஓடின

அன்று....

"வா கார்த்தி... என்ன உன்ன ஆத்து பக்கமே காணோம்? காயத்ரி இல்லாம வெறிச்சோன்னு இருக்கு. கௌரி போலேயே நீயும் காயத்ரி இல்லாம இங்க சரியா வர்றதில்ல" என அங்கலாய்த்தாள் கோகிலா

"இல்ல மாமி... அப்படி எல்லாம் இல்ல... final year ங்கறதால கொஞ்சம் வேலையா இருந்துட்டேன். ரெண்டு வாரம் Hyderabad Industrial Trip முடிஞ்சு நேத்திக்கி தான் வந்தேன்"

"ம்....காஞ்சனா சொன்னா..."

"மாமி, நீங்க அடுத்த வாரம் காயத்ரி பர்த்டேக்கு hostel க்கு அவள பாக்க போறேள்னு அம்மா சொன்னா. நான் ஹைதராபாத்ல ஒரு முத்து செட் அவளுக்கு வாங்கினேன் பர்த்டேக்கு. குடுத்துடறேளா..?" எனவும் போன இடத்தில் கூட நினைவாய் வாங்கி இருக்கிறானே என நெகிழ்ந்தாள் கோகிலா

"குடுத்துடறேன் கார்த்தி. அவள வாடின்னேன். நேக்கு வேல இருக்கு, வேணும்னா நீ வந்துட்டு போம்மானுட்டா... அவ பிடிவாதம் தான் நோக்கு தெரியுமே"

அவள் தன்னால் தான் வீட்டுக்கு வருவதை கூட தவிர்க்கிறாள் என்பது மனதை உறுத்த

"சரி மாமி... நான் அப்புறம் வரேன்... அவள கேட்டதா சொல்லுங்கோ"

"சொல்றேன் கார்த்தி..."

__________

அவள் பிறந்த நாள் அன்று பல முறை முயன்றும் அவள் பேசவில்லை. Hostel தொலைபெசிக்கி அழைத்தும் கூட ஹலோ என்றதும் துண்டித்து விட்டாள்

முடிவில் கார்த்திக்கு அவள் மீது இருந்த பரிதாபம் போய் கோபம் மேலோங்கியது

"அவளுக்கே என்னோட பர்த்டே wishes வேணும்னு இல்ல... நான் ஏன் தேவ இல்லாம அலட்டிக்கணும்" என ஒதுக்க முயன்றான்... அது அத்தனை சுலபமாய் இருக்கவில்லை அவன் எண்ணியது போல்

___________

காயத்ரியின் நிலையோ இன்னும் பரிதாபமாய் இருந்தது

அவள் அம்மா காலையே வந்து புத்தாடை கொடுத்து கோவிலுக்கு அழைத்து சென்று செல்லமாய் தாங்கிய போதும் மனம் எதிலும் லயிக்கவில்லை. எப்போதும் போன்ற சந்தோசமான பிறந்த நாளாக அது இருக்கவில்லை அவளுக்கு

கார்த்தி பரிசளித்த முத்துமாலையை கண்டதும் அழாமல் இருக்க மிக பிரயத்தனப்பட்டாள்

மணமாலை கேட்பவளுக்கு முத்துமாலை பரிசா என மனம் பரிகாசம் செய்தது

"நீ காலேஜ் சேந்ததுல இருந்து ஆத்துக்கே வர்லடீ காயத்ரி.... அப்பா உன் நெனப்பாவே இருக்கார்.... ஒரு தரம் வந்துட்டு போயேன்" என கோகிலா கெஞ்ச

"வரேன்மா... நேக்கும் அப்பாவ பாக்கணும்னு தான் இருக்கு... இன்னும் அப்பா என்மேல கோவமா இருக்காராமா?"

"எல்லாம் ஒரே ரெத்தம் தானே.... நோக்கும் அப்பாவுக்கும் எப்பவும் இந்த பிடிவாதம் இருக்கறது தானே... ஆனா... சில சமயம் மறதியா எப்பவும் போல கண்ணம்மானு உன்ன கூப்ட்டுட்டு பின்ன கண்ண தொடச்சுப்பார்... கண்ல பாக்கவே கஷ்டமா இருக்குடி காயு..... நீ இல்லாம ஆத்துல இருக்கவே பிடிக்கலடீ"

பெருகிய கண்ணீரை துடைத்தவள் "வரேம்மா... தீபாவளிக்கு ஊருக்கு வரேன்..." என்றாள் சமாதானம் செய்யும் எண்ணத்துடன்

________________

ஆனால் தீபாவளிக்கும் கூட ஏதோ சாக்கு சொல்லி வீட்டுக்கு வருவதை தவிர்த்தாள்

கார்த்திகேனும் காரணம் புரிந்து மருகினான், அவள் பெற்றவர்களுக்கோ என்னவென்றே புரியாமல் மகளை பிரிந்து வேதனையில் தவித்தனர்

அன்று நாள் விடியாமலே போனால் நல்லது என எண்ணினான் கார்த்தி. போன வருடம் இதே நாள் அதிகாலையிலேயே அர்ச்சனை பிரசாதத்துடன் "ஹாப்பி பர்த்டே கார்த்தி" என காயத்ரி சொன்னதே கண் முன் நின்றது

அவளை கண்ணால் கண்டே ஆறு மாதம் ஆகிவிட்டது. Hostel லில் சென்று பார்க்க ஏதோ அவனை தடுத்தது

குரலை கேட்டும் கூட பல நாள் ஆனது என்று நினைத்த நொடி அப்போதே அவளிடம் பேச வேண்டும் போல் மனம் ஏங்கியது

கை பேசியை எடுத்து hostel எண்ணுக்கு அழைத்தான்

"ஹலோ.."

"ஹலோ... காயத்ரி இருக்காங்களா... ரூம் நம்பர் 43 " என்றான்

"நீங்க... யாரு?" என்ற மிரட்டலாய் கேட்டது ஒரு குரல்

"நான் அவ friend " என்றான் பணிவாய் யாரேனும் ஆசிரியர்களோ என எண்ணி

"உங்க பேரு...."

"கார்த்தி"

"Friend னா? எப்படி friend ? என்ன friend ?" என குறும்பாய் கேட்க அது ஆசிரியை அல்ல, யாரோ ஒரு விஷமத்தனமான பெண் என உணர்ந்து

"ஹலோ.... காயத்ரியை இப்ப கூப்பிட முடியுமா முடியாதா?" என்றான் வேண்டுமென்றே குரலில் கோபம் காட்டி

"அம்மாடி... பயங்கர டென்ஷன் பார்ட்டியா இருப்பீங்க போல. கொஞ்சம் கடலை போடலாம்னு பாத்தா ரெம்பத்தான் அலட்டிகறீங்க... ஹும்....இருங்க உங்க friend ஐ கூப்பிடறேன்....ஏய்... காயத்ரி.. உனக்கு போன்" என்றாள்

"யாரு சுதா லைன்ல?" என்றபடியே வந்தாள் காயத்ரி

"யாரோ உன் friend , கார்த்தினு சொன்னார்" எனவும் இல்லைன்னு சொல்லு என ஜாடை காட்டினாள் காயத்ரி

"அது...." என தயங்கிய சுதா "ஏன்?" என சன்ன குரலில் கேட்டாள் "அப்புறம் சொல்றேன்" என செய்கையிலேயே சொன்னாள் காயத்ரி

அதற்குள் பொறுமை இழந்த கார்த்தி "ஹலோ... காயத்ரி... காயத்ரி... " என அழைக்க

"ஹலோ மிஸ்டர் டென்ஷன் பார்ட்டி, காயத்ரி வெளிய போய் இருக்கா. அப்புறம் பேசுங்க" என சுதா சமாளிக்க முயல கார்த்தி கோபமாய்

"பொய் சொல்லகூட ஒரு தனி திறமை வேணும், அது உங்ககிட்ட இல்ல. அவ பக்கத்துல தான் இருக்கானு எனக்கு தெரியும். போன்ஐ அவ கிட்ட குடுங்க ப்ளீஸ்..."

"நீ பக்கத்துல தான் இருக்கேன்னு அவர் கண்டுபிடிச்சுட்டார்" என்று விட்டு பேசியை அவள் கையில் திணித்து விட்டு போனாள் சுதா

"ஐயோ... " என தலையில் அடித்து கொண்டு "ஹலோ... "என்றாள் காயத்ரி

"ஏன் காயத்ரி இப்படி பண்ற? என்னோட பர்த்டேக்கு உன்னிட்ட ஒரு வார்த்த பேசணும்னு கூப்டா அதுக்கு கூட நோக்கு மனசில்ல இல்லையா?" என்றான் ஆதங்கத்துடன்

"....." அவனது ஏங்கிய குரல் மனதை பிசைய பேச முடியாமல் தவித்தாள்

"நான் உன்கிட்ட எதுவும் பேசல.... ஜஸ்ட் ஒரு விஷ் பண்ணு போதும்... நான் போன் வெச்சுடறேன்... ப்ளீஸ்" என்றான் பாவமாய்

"......" கல்லும் கரையும் வண்ணம் அவன் பேச கண்களில் நீர் வழிய நின்றாள் காயத்ரி

அதை அவள் பேச விருப்பமில்லாமல் தவிர்க்கிறாள் என தவறாக எடுத்து கொண்ட கார்த்தி

"சரி காயத்ரி.... நான் வெச்சுடறேன்... நீ என்ன இந்த அளவுக்கு வெறுத்துருபனு நான் நெனக்கல" என விரக்தியுடன் பேச அதற்கு மேல் தாங்க முடியாமல்

"ஐயோ...அப்படி இல்ல கார்த்தி..."

"உன்னோட வாய்ஸ் மட்டுமாச்சும் கேக்கனும்னு எத்தன வாட்டி உன்னோட செல் போன்க்கு கூப்டுருப்பேன். நோக்கு என்னோட பேசணும்னு தோணாதா காயத்ரி?" என வேதனையுடன் கேட்க

"கார்த்தி நீ புரிஞ்சு தான் பேசறயா?"

"அத நான் கேக்கணும்"

"கார்த்தி... உன்னோட பேசினா நான் இன்னும் பலவீனமாய்டறேன். நீ என்ன நெனைக்கறத விட ஆயிரம் மடங்கு அதிகம் நான் உன்ன நெனைக்கிறேன்.... " என்றவள் அதற்கு மேல் தாங்காமல் hostel தொலைபேசி என்பதையும் மறந்து அழ தொடங்கினாள்

சுற்றி இருந்த தோழிகள் எல்லாம் "என்ன என்ன?" என விசாரிக்க தொடங்க தொலைபேசியை துண்டித்து விட்டு அறைக்குள் தஞ்சம் புகுந்தாள்

அவளது வார்த்தைகளும் அழுகையும் கார்த்தியை வதம் செய்தன

ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவள் கைபேசிக்கி அழைத்தான்

"ஹலோ..." என்றாள் அழுகையுடன்

"நாம கல்யாணம் பண்ணிக்கலாம் காயத்ரி... இன்னைக்கே எங்க அம்மாவ மாமி கிட்ட பேச சொல்றேன்" என்றான் கார்த்தி தீர்மானமாய் ................

ப்ரியமானவேளே,
உன்கண்ணீருக்கு முன்
உடைந்துபோனது என்தவம்
உன்அருகாமையற்ற வாழ்வில்
உயிர்இருந்தும் நான்சவம்!!!

உனைகாணா நாட்கள்
உலகில் வாழாநாட்கள்
உன்குரல் கேளாகணங்கள்
உயிர்வதை க்ஷணங்கள்!!!

ஊன்உறக்கம் வேண்டேன்
உலகில் மற்றெதுவும்வேண்டேன்
உன்புன்னகை போதுமடி
உயிர்வாழ்வேன் நான்!!!


udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

பிரியமானவளே...  (புவனா கோவிந்த்) Empty Re: பிரியமானவளே... (புவனா கோவிந்த்)

Post by udhayam72 Fri May 10, 2013 5:20 pm

"......"

"காயத்ரி...ஏன் எதுவும் பேசாம இருக்க?"

"என்ன சொன்ன கார்த்தி?"

"கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன்"

"ஹும்.... ஆனா காதலிக்கறேன்னு சொல்லல"

"காயத்ரி...அது..."

"பரிதாபத்துல.... கல்யாணமா?"

"அப்படி இல்ல காயத்ரி...."

"நேக்கு அழறதா சந்தோசபட்றாதானு தெரியல"

"என்ன சொல்ற காயத்ரி?"

"என்னோட காதல் தோத்து போச்சுன்னு அழறதா... இல்ல என்னோட நட்பு சாகர வரை வேணும்கறதுக்காக கல்யாணம் பண்ணிகறேன்னு சொன்ன உன்னோட ஆழமான நட்ப நெனச்சு சந்தோசபட்ரதானு புரியல"

"இல்ல காயத்ரி... உன் விருப்பபடி நான் முன்னியே சொன்ன மாதிரி நாம கல்யாணம் பண்ணிக்கலாம்"

"இதோ... உன் வாயாலேயே சொல்லிட்ட... என்னோட விருப்பபடின்னு... உன்னோட விருப்பம் என்ன?"

"எனக்கும் சம்மதம் தான்"

"சம்மதம் வேற விருப்பம் வேற கார்த்தி"

"காயத்ரி எதுக்கு இந்த வேண்டாத வாதம்... நாம கல்யாணம் பண்ணிக்கறோம்... அவ்வளவு தான்... end of the story " என்றான் ஒரே முடிவாய்

"ஹும்... கல்யாணம்கறது end of the story இல்ல கார்த்தி... beginning of the life"

"இப்ப முடிவா என்ன சொல்ற? கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டியா?"

"ஒரு பிரச்சனைய தீக்கறதா நெனச்சுண்டு அதை விட பெரிய பிரச்சனைய கொண்டு வர்ற. எதுவும் வேண்டாம் கார்த்தி. நாம நண்பர்களா மட்டுமே இருக்கணும்கறது கடவுள் விதிச்சது... அதை நாம மாத்த வேண்டாம்... மாத்தவும் முடியாது"

"ஆனா...."

"நீ என்ன சொல்ல போறேன்னு நேக்கு தெரியும்.... பழையபடி நாம இருக்கணும்னு சொல்லுவ...நான் ஒரு சாதாரண மனுசி கார்த்தி... என்னோட உணர்வுகள அத்தனை சீக்கரம் சாகடிக்கற சக்தி நேக்கு இல்ல..." என்றாள் அழுகையை வென்று

"காயத்ரி...." என்றான் தாங்காமல்

"இரு நான் பேசி முடிச்சுடறேன்.... out of sight, out of mind னு சொல்லுவா... நானும் அதை நம்பறேன்... நேக்கு நீ எதுனா நல்லது செய்யனும்னு நெனச்சா... என்னை பாக்கவோ பேசவோ முயற்சி செய்ய வேண்டாம்... " என்றாள் மனதை கல்லாக்கி

"இது அநியாயம் காயத்ரி..." என்றான் தவிப்புடன்

"ஞாயம் அநியாயம் பத்தி நேக்கு தெரியாது... நம்ம ரெண்டு பேரு வாழ்க்கைக்கும் இது தான் நல்லது... அது மட்டும் நன்னா புரியறது" என்றாள் தீர்மானமாய்

"என்னை பாக்காம இருக்கறது தான் நோக்கு சந்தோசம்னா அப்படியே இருக்கட்டும்" என்றான் கோபமாய்

"கோபப்பட்ரா மாதிரி காட்டி என் மனசை மாத்த முயற்சி செய்யறது வீண் கார்த்தி... அந்த நிலை எல்லாம் நான் தாண்டியாச்சு... என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல" என்றாள் பிடிவாத குரலில்

"நேக்கு என்ன சொல்றதுன்னு தெரியல காயத்ரி... ஆனா உன்ன பாக்காம பேசாம இருக்கறது மட்டும் ரெம்ப கொடுமையா இருக்கும்னு நன்னா தெரியும்" என்றான் ஏக்கத்துடன்

இந்த ஒரு நிமிட நெகிழ்வு இருவரின் வாழ்கையையும் புரட்டி போட்டு விடும் என உணர்ந்தவளாய் அழுகையை கடிவாளம் இட்டு நிறுத்தினாள் காயத்ரி...

"வேற வழி இல்ல கார்த்தி... bye " என்றாள்

"காயத்ரி...." என்று இதோ சொல்ல நினைத்தவன் எதுவும் பயனில்லை என உணர்ந்து "ஒகே bye " என்றான்

"ஒரு நிமிஷம் கார்த்தி...ஒரே ஒரு கேள்விக்கி மட்டும் உண்மையான பதில் சொல்லமுடியுமா?"

"நான் எப்பவும் உன்னிட்ட பொய் சொன்னதா ஞாபகம் இல்ல காயத்ரி" என்றான் அழுத்தமாய்

ஒரு நிமிடம் மௌனம் ஆட்கொள்ள "நீ இன்னும் அந்த ஷிவானிய மனசுல நெனச்சுண்டுருக்கையா?" என கேட்டாள் தயக்கமாய்

"இன்னொருத்தன் மனைவி ஆனவளை நெனைக்கற அளவுக்கு என்னை கேவலமானவனா நீ நெனைக்கறையா? இது தான் நீ என்னை புரிஞ்சுண்டதா?" என்றான் வேதனையாய்

"இல்ல கார்த்தி... அது" என தவிப்புடன் திணற

"போதும் காயத்ரி... பேசாத பாக்காதன்னு பாதி உயிர எடுத்துட்ட... இப்ப... ஹும்... இன்னும் என்ன பேசணுமோ பேசு... கேட்டுக்கறேன்...." என்றான் பெருமூச்சுடன்

இருவரும் எதுவும் பேசவில்லை

மௌனம் இத்தனை கொடுமையானதா என இருவருமே தவித்தனர்

இறுதியாக "ஒகே காயத்ரி bye " என்று விட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் பேசியை துண்டித்தான் கார்த்தி

ஐயோ....இறுதியில் கோபமாய் சென்று விட்டானே... மன்னிப்பு கேட்போம் என தோன்றிய மனதை கட்டுப்படுத்தினாள்

குழந்தை அழுதாலும் குணமாக வேண்டி கசப்பு மருந்து கொடுப்பது போல் இந்த கோபமே நிரந்தர பிரிவுக்கான அச்சாரமாய் இருக்கட்டுமென மௌனம் காத்தாள்

அதன் பின் இருவரும் பேசிகொள்ளவேயில்லை. கார்த்தி campus interview வில் தேர்வு பெற்று சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கி சேர்ந்து விட்டான் என காயத்ரி அவள் அன்னை மூலம் அறிந்தாள்

_________________

காலமும் அலையும் தான் யாருக்கும் எவருக்கும் காத்திருப்பதில்லையே (Time and Tide waits for none)

காலங்கள் மாறின காட்சிகள் மாறின...

அன்று.....

"ஏய்... அது என்னோட Ball .... குடுடா" என நந்தினி பிடிவாதம் செய்ய

"போடி... அது என்னோடது...." என ராகவ் கத்தினான்

"குடுக்க போறியா இல்லையா இப்ப?" என நந்தினி அவனை அடிக்க போனாள்

"ஏய்.... நந்தினி எதுக்குடி அவன அடிக்கற?" என காயத்ரி தடுக்க வர

"பாரு மம்மி.... என்னோட Ball தானே இது...குடுக்க சொல்லு" என சிபாரிசு தேட

"என்னத்துக்கு இப்ப பிடிவாதம் பண்ற நந்து... ராகவ் கொஞ்ச நேரம் விளையாடட்டும்" என்றாள் காயத்ரி அதட்டலாய்

"ஏன் காயத்ரி நந்துவ மெரட்டற... எல்லாம் இந்த ராகவ் பண்றது தான்" என கார்த்தி பரிந்து பேச

"போ டாடி... நீ எப்பவும் நந்தினிக்கு தான் சப்போர்ட் பண்ணுவ" என ராகவ் முகம் திருப்பினான்

"எல்லாம் நீ குடுக்கற செல்லம் தான்... இந்த நந்தினி கெட்டு போறா" என காயத்ரி கார்த்தியின் மேல் பழி போட

"அவங்கள சண்டை போடவேண்டாம்னு சொல்லிட்டு நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கேளா?" என கேலியாய் கேட்டபடியே வந்தாள் மைதிலி, கார்த்தியின் மனைவி !!!!!!

"ஆமாம் மைதிலி.... காயத்ரிக்கு ஆத்துகாரர் ஊர்ல இல்லாததால பொழுது போகாம வழில போறாவா கூட எல்லாம் வம்பு இழுந்துண்டுருக்கா" என கார்த்தி கேலி செய்தான்

காயத்ரி எதுவும் பேசாமல் மௌனமாய் சிரித்தாள்

அவர்களை பார்த்தபடியே திண்ணையில் அமர்ந்திருந்த கார்த்தியின் அன்னை காஞ்சனா

"இன்னிக்கி நேத்து இல்ல மைதிலி... பத்து வயசுல இருந்தே காயத்ரியும் கார்த்தியும் எலியும் பூனையும் தான்... ஆனா கொஞ்ச நேரத்துல friends ஆயுடுவா...அவா புள்ளங்க கூட அப்படி தான் இருப்பாங்க போல எப்பவும்" என்றாள் பெருமையாய்

உடனே காயத்ரி "அவங்க நட்பாவது கடைசி வரை எந்த களங்கமில்லாம இப்படியே நட்பாய் தொடரணும்" என மனதில் பிராத்தித்தாள்

அதையே கார்த்தியும் அதே கணத்தில் நினைத்தான்

ஒரு நொடிக்கும் குறைவான நேரம் அவர்கள் இருவரின் பார்வை சந்தித்து மீண்டது... அதற்கு அந்த நொடி வீசிய தென்றல் காற்று மட்டுமே சாட்சி...

என்வாழ்வெனும் புத்தகத்தில்
எங்கும் நிறைந்தவள்நீ
என்மனமெனும் பெட்டகத்தில்
எங்கும் உறைந்தவள்நீ
என்நட்பெனும் தோட்டத்தில்
எல்லாம் நீயேஆனாய்
பிரியமானவளே.....
ப்ரிய சகியே....



முற்றும்
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

பிரியமானவளே...  (புவனா கோவிந்த்) Empty Re: பிரியமானவளே... (புவனா கோவிந்த்)

Post by udhayam72 Fri May 10, 2013 5:21 pm

அதன் பின் இருவரும் பேசிகொள்ளவேயில்லை. கார்த்தி campus interview வில் தேர்வு பெற்று சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டான் என காயத்ரி அவள் அன்னை மூலம் அறிந்தாள்

இது வரை போன பகுதில படிச்சு இருப்பீங்க... இனி...

_________________________________

இருமுறை நடுவில் ஊருக்கு கார்த்தி வந்த போதும் காயத்ரியை காணும் வாய்ப்பு அமையவில்லை

வேலையில் சேர்ந்த மூன்று மாதத்தில் அவனுக்கு வேலை விசியமாய் ஒரு வருடம் அமெரிக்கா செல்ல வேண்டிய தருணம் வந்தது

அதற்கு முன் ஒரு முறை அவளுடன் பேச வேண்டும் என மனம் தவித்தபோதும் அவள் பேசிய கடைசி வார்த்தைகள் மனதை வருத்த பேசாமல் தவிர்த்தான்

ஒரு வருடம் மிக வேகமாய் ஓடியது...

காயத்ரிக்கும் கல்லூரி முடிந்தது. அவள் அங்கேயே ஏதேனும் வேலை தேடும் முயற்சியில் இருந்தாள்

____________________________________

"ஹலோ...."

"ஹலோ, அம்மா நான் கார்த்தி பேசறேன்"

"கார்த்தி... கண்ணா... நன்னா இருக்கியாடா?" என காஞ்சனா மகன் குரல் கேட்டதும் உருகினாள்

"இருக்கேம்மா...அப்பா, நீ எல்லாரும் எப்படி இருக்கேள்?"

"நன்னா இருக்கோண்டா...அங்க இன்னும் நல்ல குளிராப்பா?"

"இப்போ தேவலமா. அங்க நல்ல வெயில்னு சொன்ன. இப்ப எப்படி?"

"அப்படியே தான் இருக்கு கார்த்தி. எப்போடா ஊருக்கு வர்ற?"

"வரேம்மா... இன்னும் ப்ராஜெக்ட் முடியலியே"

"கண்ணுலேயே இருக்கடா... இனிமே இந்த ப்ராஜெக்ட் எல்லாம் வேண்டாம். இங்கயே இருக்கறாப்ல எதுனா வேலை பாரு"

"ம்... " என்றான் யோசனையை

ஒரு ஒரு முறையும் காயத்ரி பற்றி கேட்க நினைத்து தவிர்த்து வந்தான். இன்று ஏனோ அவள் நினைவு துரத்தியது

மகனின் மனதை படித்தது போல் காஞ்சனா "கார்த்தி, நேரம் கெடைக்கரச்ச காயத்ரி ஆத்துக்கு ஒரு போன் பண்ணிடு"

"என்னமா ஆச்சு... ?"என பதறினான். ஒரு கணத்திற்குள் மனம் என்ன என்னவோ கற்பனை செய்து தவித்தது

"மாமிக்கு கொஞ்சம் ஒடம்புக்கு முடியல கண்ணா. Uterus ல ஏதோ பிரச்சனைன்னு ஆபரேஷன் பண்ணி இருக்கா. காயத்ரி கூட இங்கியே வந்துட்டா" எனவும் இப்போதே அவளை காண மனம் வேண்டியது

"சரிம்மா. நான் பேசறேன். அப்பாவ கேட்டேன்னு சொல்லுமா. வெச்சுடவா?"

"சரிப்பா. ஒடம்ப பாத்துக்கோடா"

ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனே காயத்ரியின் வீட்டிற்கு அழைத்தான்

"ஹலோ......" என காயத்ரி சொல்ல, வெகு நாட்கள் கழித்து அவள் குரல் கேட்டதும் கண்ணில் நீர் கோர்த்து கார்த்திக்கு

"ஹலோ... யாரு பேசறீங்க? ஹலோ..."

"காயத்ரி...நான் கார்த்தி பேசறேன்...."

"........" அவன் குரல் கேட்டதும் பேச்சே வரவில்லை அவளுக்கு

"காயத்ரி... லைன்ல இருக்கியா? ஹலோ..."

"ம்...." என்றாள்

என்ன பேசுவது என புரியாமல் "மாமிக்கு நன்னா இல்லைன்னு அம்மா சொன்னா... அதான் பேசலான்னு...." என்றான் பட்டும் படாமல்

"அப்போ என்னோட பேசணும்னு கூப்பிடலையா" என மனதில் தோன்ற துக்கம் அடைத்தது காயத்ரிக்கு. மனம் நினைத்ததை வாய் விட்டு கேட்க இயலவில்லை

"ஒரு நிமிஷம்...அம்மா கிட்ட தரேன்..."

"காயத்ரி... ஒரு நிமிஷம்... உன்னிட்ட...." என்பதற்குள்

"ஹலோ... கார்த்தி...நன்னா இருக்கியாப்பா?" என கோகிலாவின் குரல் கேட்டது

கோகிலாவிடம் ஷேமம் எல்லாம் விசாரித்து விட்டு காயத்ரியை பேச சொல்லி கேட்க

"அவ ஏதோ சாமான் வாங்கணும்னு சொல்லிண்டுருந்தா. கடைக்கு போய்ட்டா போல இருக்கு கார்த்தி" எனவும் கார்த்தியின் மனம் சோர்வுற்றது. தன்னிடம் பேசுவதை தவிர்க்கவே வெளியே சென்று விட்டாள் என புரிய "இன்னுமா என்னிடம் கோபம்" என வேதனை வாட்டியது

காயத்ரிக்கோ மனம் நிலை கொள்ளவில்லை. Out of sight, out of mind என்று நினைத்ததெல்லாம் சுக்குநூறாகியது. இத்தனை நாட்களுக்கு பின் கேட்ட அவனுடைய குரல் தன்னை இத்தனை பாதிக்குமென அவள் நினைக்கவில்லை. அன்று இரவு இருவருக்கும் தூக்கம் தொலைந்தது

அதற்கு பின் ஒரு ஒரு நாளும் ஒரு யுகமாய் கழிந்தது

இரண்டு மாத ப்ராஜெக்ட் வேலையை இரவும் பகலும் செய்து ஒரு மாதத்தில் முடித்து விட்டு ஊருக்கு கிளம்பினான் கார்த்தி

பெற்றவளிடம் கூட வருவதை பற்றி கூறவில்லை

அவனை கண்டதும் காஞ்சனாவிற்கு மகிழ்ச்சி நிலை கொள்ளவில்லை. இப்படி ஆச்சிர்யப்படுத்தவே சொல்லாமல் வந்ததாக கூசாமல் பொய் சொன்னான்

வந்த சிறிது நேரத்திலயே காயத்ரியை காண சென்றான்

"அடடே... கார்த்தியா....? என்னப்பா உங்கம்மா நீ அடுத்த மாசம் தான் வருவேன்னு சொல்லிண்டுருந்தா?" என கோகிலா கேட்க

"ஆமாம் மாமி... அப்படி தான் இருந்தது.... திடீர்னு வேலை முடிஞ்சுது. கிளம்பிட்டேன். உங்க health எல்லாம் நன்னா இருக்கா மாமி?" என்றவனின் கண்கள் காயத்ரியை தேடியது

அதற்குள் பின் கட்டில் இருந்து வந்த காயத்ரி அவனை கண்டதும் ஒரு கணம் சிலையானாள்

கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு பின் எதிர்பாராத இந்த சந்திப்பின் அதிர்ச்சியில் உறைந்தாள். கீழே விழாமல் இருக்க அங்கிருந்த தூணில் சாய்ந்து நின்றாள்

உடல் மெலிந்து சிரிப்பு மறந்த கண்களுடன் அவளை காண என்னவோ போல் இருந்தது கார்த்திக்கு

குளிர் பிரதேசத்தின் வாசம் கார்த்தியை மெருகேற்றி இருந்தது. அவன் கண்களை நேரே சந்திக்க இயலாமல் வேறு எங்கோ பார்வை பதித்தாள்

"என்ன காயத்ரி? யாரையோ புதுசா பாக்கராப்ல முழிக்கற? கார்த்தி கேக்கறதுக்கு பதில் சொல்லாம நிக்கற?" என கோகிலா கேட்க சுய நினைவுக்கு வந்தாள்

"நன்னா இருக்கியா காயத்ரி?"

"ம்..." என்றாள் வார்த்தை தொண்டையில் அடைக்க

"ஏன் இப்படி எளைச்சுட்ட....?" என நிஜமான அக்கறையுடன் கார்த்தி கேட்க

"நானும் இதே தான் தெனமும் சொல்றேன் கார்த்தி. சாப்பிடறதே என்னமோ கொரிக்கராப்ல தான். முன்னி இருந்த அந்த காயத்ரியே இல்ல இப்ப. இதுல நான் வேற முடியாம படுத்துக்கவும், ஆத்துலயும் எல்லா வேலையும் செய்யறாளா, பாவம் ஆளே உருமாறி போயிட்டா" என கோகிலா புலம்ப

"எதுக்கும்மா இப்ப பொலம்பற... நான் காபி போடறேன்" என இருவருக்கும் பொதுவாய் கூறி அங்கிருந்து நழுவ முயல

"காபி வேண்டாம் காயத்ரி. இப்போ தான் அம்மா குடுத்தா. நான் பெருமாள் சன்னதிக்கி போறேன். வாயேன் நீயும்... "என்றான் அவளுடன் தனியே பேசும் ஆவலில்

வேறு வினையே வேண்டாம் என தோன்ற காயத்ரி "இந்த நேரத்துல ஆரத்தி எல்லாம் கூட ஆய்ருக்குமே. உச்சிக்கு நடை சாத்தற நேரம்" என தவிர்க்க முயன்றாள்

"பரவால்ல...சும்மா போயிட்டு வரலாம் வா..." எனவும்

"இல்ல...நேக்கு ஆத்துல கொஞ்சம் வேல இருக்கு" என தவிர்த்தாள்

"வேல கெடக்கு போ காயத்ரி. எத்தன நாள் கழிச்சு கார்த்தி வந்திருக்கான்... நீயும் நாள் பூரா ஆத்துலேயே பழியா இருக்க... சன்னதிக்கி போயிட்டு வா" என கோகிலா வற்புறுத்த, மறுக்க முயன்று தோற்று வேறு வழியன்றி உடன் சென்றாள்

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை

"ரெம்ப எளைச்சுட்ட காயத்ரி. மாமி சொல்றாப்ல சரியா சாப்பிடறதில்லையா?"

"இல்ல... அதெல்லாம் இல்ல" என்றாள் அவனை நேரே காண்பதை தவிர்த்து

அவளது அந்த செய்கை மனதை வருத்த "இன்னும் எம்மேல கோவமாதான் இருக்கியா?" என தவிப்புடன் கேட்க அழுது விடாமல் இருக்க பெரிதும் முயன்றாள்

"சொல்லு காயத்ரி... இன்னும் கோவம் தீரலியா?"

அதற்குள் கார்த்தியை கண்டதும் தெருவில் சிலர் நலம் விசாரிக்க வர பேச்சு தடைபட்டது

கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு அங்கிருந்த சிலரின் விசாரிப்புகளுக்கு எல்லாம் பதில் உரைத்து விட்டு கோவிலுக்கு பின் புறம் இருந்த ஒரு பெரிய மரத்தின் திட்டில் சென்று அமர்ந்தனர்

கார்த்தி எதுவும் பேசாமல் காயத்ரியயே பார்த்தான். வாய்க்கு வாய் வாயாடி சிரிப்பும் விளையாட்டுமாய் தான் கண்ட காயத்ரி தொலைந்து போனதை உணர்ந்தான். அதற்கு தானே காரணம் என மருகினான்

காயத்ரிக்கு தனியே சென்று ஒரு பாடு அழுது தீர்க்க வேண்டும் போல் தோன்றியது

"சொல்லு காயத்ரி... இன்னும் கோவம் தீரலியா?" என விட்ட இடத்தில் இருந்து பேச்சை தொடர்ந்தான் கார்த்தி

"......." எதுவும் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்

"ப்ளீஸ் காயத்ரி... இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்க போறோம் சொல்லு"

"ப்ளீஸ் கார்த்தி. என்னை எதுவும் கேக்காத"

"காயத்ரி நான் என்ன தப்பு பண்ணினேன். நேக்கு தோணாத ஒண்ணை சும்மாவாச்சும் ஆமான்னு ஒத்துண்டா என்னை நல்லவன்னு ஏத்துபயா"

"என்னை அழ வெச்சு பாக்கணும்னு தான் இங்க வந்தியா கார்த்தி"

"இல்ல... எப்பவும் நீ அழறது நேக்கு இஷ்டம் இல்ல காயத்ரி. நேக்கு என் தோழி காயத்ரி வேணும்"

"அவ செத்துட்டா" என்றாள் வெறுப்பாய்
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

பிரியமானவளே...  (புவனா கோவிந்த்) Empty Re: பிரியமானவளே... (புவனா கோவிந்த்)

Post by udhayam72 Fri May 10, 2013 5:23 pm

"என்ன பேச்சு இது காயத்ரி" என கடுமையாய் சற்று உரக்கக்கேட்டான்

அந்த மதிய நேரத்தில் உச்சி பூஜை முடிந்து எல்லாரும் சென்று விட்டு இருந்தனர். எனவே அவர்கள் பேச்சுக்கு எந்த தடையும் இருக்கவில்லை

"அந்த ஷிவானி கிட்ட தோணின உணர்வு கூட என்னிட்ட தோணாத அளவுக்கு நான் மோசமா இருக்கேனா? அவள விட தான் எதுல கொறஞ்சு போயிட்டேன். சொல்லு கார்த்தி" என இத்தனை நாள் மனதில் கொந்தளித்து கொண்டிருந்ததையெல்லாம் கேள்வியாய் கொட்டினாள் அழுகையுடன்

"பைத்தியக்காரத்தனமான comparision காயத்ரி. ஷிவானி ஒரு.... சின்ன.... அந்த வயசு crush . ஆனா நீ என்னோட வாழ்நாள் தோழி" என்றான் கோபமும் சமாதானமுமாய்

"இந்த நழுவற வார்த்தைகள் எல்லாம் வேண்டாம் கார்த்தி"

"அப்படி எல்லாம் இல்ல காயத்ரி. உன்கிட்ட எந்த கொறையும் இல்ல. இருந்தாலும் என் கண்ணுக்கு அது கொறையா தெரியாது. ஏன்னா நீ என்னோட உயிர் தோழி"

"Just stop it கார்த்தி. தோழி தோழினு என்னை கொன்னது போதும்" என அழுது கொண்டே எழுந்தாள்

திட்டில் இருந்து கீழே இறங்க முயன்றவள் கண்களில் கண்ணீர் மறைக்க ஒரு படி தவறி கீழே கால் வைக்க அப்படியே மறுபுறம் சரிந்தாள். கார்த்தி எழுந்து பிடிக்கும் முன் அவள் தலை அங்கு இருந்த ஒரு கல்லில் மோதியது

"கார்த்தி...." என கத்தியவாறே சரிந்தாள்

கார்த்திக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. பதறி அவளை தான் மடியில் இருத்த முயன்றான். தன்னையும் அறியாமல் கண்ணில் நீர் வழிந்தது

"காயத்ரி... காயத்ரி...ப்ளீஸ் இங்க பாரு...ஒண்ணும் இல்ல... ப்ளீஸ் என்னை பாரு" என அவள் கன்னத்தில் தட்டினான்

மெல்ல கண்ணை திறந்தவள் ஏதோ சொல்ல முயன்று பேச இயலாமல் தோற்றாள்

அதற்குள் கார்த்தியின் சட்டை முழுதும் அவள் ரத்தத்தால் சிவந்தது

"ஐயோ...என்ன இது. யாராச்சும் வாங்கோளேன். ப்ளீஸ்... ஹெல்ப்" என கத்தினான்

அவன் கத்தலில் மெல்ல மீண்டும் கண் திறந்த காயத்ரி காதல் நிறைந்த கண்களுடன் "கார்த்தி.." என அழைக்க

"காயு....ஒண்ணும் ஆகாது... சீக்கரம் hospital போய்டலாம்...சரியா" என தனக்கே தைரியம் சொல்லி கொண்டான்

"கா....ர்...த்தி...." என திக்கியவள் அவன் கைகளை இறுக பற்றி "I... love....you....I love you கார்த்தி...." என மொத்த உயிரின் பலத்தையும் தேக்கி உரைத்து விட்டு கண்களை மூடினாள்

ஒரு கணம் அப்படியே உறைந்தான் கார்த்தி. தன் உயிரே காற்றோடு கலந்து விட்டது போல் மூச்சு விட மறந்தான்

அதற்குள் அவன் உதவி கேட்டு கத்தியதை கேட்டு கோவிலுக்கு முன் புறம் கடையில் இருந்த சிலர் ஓடி வந்தனர்

அவசரமாய் டாக்ஸி வரவழைத்து மருத்துவமனைக்கு விரைந்தனர்

"காயத்ரி....காயத்ரி...." என கார்த்தி அரற்றி கொண்டே வந்தான்

"கால் எல்லாம் சில்லிட்டு போச்சு....எனகென்னமோ நம்பிக்கை இல்ல" என காரின் முன் புறம் அமர்ந்திருந்த இருவர் அவர்களுக்குள் மெல்லிய குரலில் பேச கார்த்தியின் கண்களில் கட்டுபாடின்றி நீர் பிரவாகம் ஆனது. ஒரு நொடியில் உலகின் கடவுள்கள் எல்லாரையும் வேண்டினான்

______________________

"என்ன நடந்தது?" என டாக்டர் கேட்க

"அது....கோவில்...கல்லு...தலை பட்டு....ரத்தம்....கண்ணு எல்லாம்....." என கோர்வையாய் சொல்ல முடியாமல் கார்த்தி தடுமாற உடன் வந்தவர்கள் நடந்ததை விவரிக்க சிகிச்சை ஆரம்பமானது

அதற்குள் விசயம் கேட்டு காயத்ரியின் பெற்றோர், அக்கா, கார்த்தியின் பெற்றோர் எல்லோரும் வந்து சேர பதட்டம் மேலும் கூடியது

எல்லோரும் கார்த்தியிடம் என்னவென விசாரிக்க முயல "எல்லாம் என்னால தான்....எல்லாம் என்னால தான்...." என்பதை தவிர அவன் எதுவும் பேசவில்லை. அதிரிச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தான்

அழுகை கூட வர மறந்தது போல் உறைந்து போனான்

கோகிலாவை சமாதானம் செய்வதே எல்லோருக்கும் பெரும் பாடானது

நேரம் ஓடி கொண்டே இருந்தது

கிட்டதட்ட இரவு நெருங்கிய வேளையில் டாக்டர் அழைப்பதாய் நர்ஸ் வந்து சொல்ல என்ன சொல்வாரோ என பயந்து யார் உள்ளே செல்வது என புரியாமல் தடுமாற கௌரியும் கார்த்தியும் சென்றனர்

"நீங்க patient யோட husband ஆ" என கார்த்தியின் தவிப்பை பார்த்து கேட்டார் டாக்டர்

கார்த்தி எதுவும் பேச இயலாமல் தடுமாற "இல்ல அவர் காயத்ரியோட friend கார்த்தி. நான் அவளோட சிஸ்டர் கௌரி" என்றாள் கௌரி

"ஒகே கௌரி. உங்க சிஸ்டர்க்கு பின் மண்டைல பலமா அடிபட்டதுல ஒரு blood vessel rupture ஆகி இருக்கு. அதை surgery பண்ணனும். அதுவும் சீக்கரம் பண்ணனும். இன்டெர்னல் ப்ளீடிங் ரெம்ப ரிஸ்க் ஆய்டும் லேட் பண்ணினா"

"அவ உயிருக்கு எதுவும்...." என கார்த்தி மொத்த பலத்தையும் திரட்டி கேட்டான்

"100 % எதுவும் சொல்ல முடியாது மிஸ்டர் கார்த்தி. ஹெட் இஞ்சுரி எல்லாம் சர்ஜரி முடியற வரை சொல்ல முடியாது. Probability வேணா ஒரு அளவு சொல்லலாம். காயத்ரி கேஸ் Brain ல டைரக்ட்ஆ அடி இல்லைங்கரதால 60 % சான்ஸ் இருக்குனு சொல்லுவேன். எங்கள பொறுத்தவரை 50 % க்கு மேல இருக்கற எல்லாமே high probability " என டாக்டர் கூற கார்த்தியும் கௌரியும் ஒருவரை ஒருவர் ஆறுதலுடன் பார்த்து கொண்டனர்

"சர்ஜரி எப்ப பண்ணனும் டாக்டர்" என கௌரி கேட்க

"Earlier the better Mrs . கௌரி. நாளைக்கி மார்னிங் chief ப்ரீயா இருக்கார். அவரும் இருந்து செய்றது பெட்டர்னு நான் பீல் பண்றேன். மத்த billing details எல்லாம் reception ல கேட்டு கட்டிடுங்க" என்றார் டாக்டர் அவ்வளவு தான் என்பது போல

வெளியே வந்ததும் எல்லாரும் சூழ்ந்து கொண்டு கேள்வி கணை தொடுக்க கௌரியே எல்லாருக்கும் பதில் கூறினாள்

அப்போதே ஒரு லட்சம் கட்ட வேண்டுமென reception இல் கூறினார். அந்த இரவு நேரத்தில் பேங்க் கூட இருக்காதே என யோசித்து கௌரியின் கணவர் தன் நண்பர் ஒருவரிடம் கேட்பதாக சொல்ல கார்த்தி அதை மறுத்து தானே பொறுப்பேற்றான்

"அம்மா சாவி குடு. ATM கார்டு ஆத்துல இருக்கு. நான் போயிட்டு வந்துடறேன்" என கார்த்தி கேட்க

"இரு கார்த்தி நானும் ஆத்துக்கு வந்து எல்லாரும் சாப்பிட எதுனா செஞ்சுட்டு வந்துடறேன்" என காஞ்சனாவும் கிளம்பினாள்

"கார்த்தி நீ இப்ப வண்டி ஓட்ட வேண்டாம். நானே கார் எடுத்துட்டு வரேன்" என அவன் தந்தையும் உடன் சென்றார்

_________________

காயத்ரியின் வீட்டை கடந்து சென்ற போது கார்த்தி மேலும் பலவீனமானான். தன் அறைக்குள் நுழைந்ததும் அந்த தனிமை துக்கத்துக்கு தூபம் போட்டது

சிறுவயதில் கார்த்தியும் காயத்ரியும் கை கோர்த்து வழியும் சிரிப்பை மறைக்க முயன்று தோற்றபடி நின்றிருந்த அவன் அறையின் சுவரில் இருந்த பழைய புகைப்படம் அவனை முற்றிலும் நிதானம் இழக்க செய்தது

அதற்கு மேல் தாங்க இயலாமல் கதறி அழுதான்

காஞ்சனா அவசரமாய் கலந்த சாதம் தயார் செய்து கொண்டிருக்க மகனின் கதறல் கேட்டு ஓடி வந்தாள் அவன் தந்தையும் போட்டது போட்டபடி வந்தார்

"கார்த்தி...என்னடா இது... எங்களுக்கெல்லாம் தைரியம் சொல்றவன் நீ. இப்படி ஒடஞ்சு போனா எப்படி" என இருவரும் சமாதானம் செய்ய முயல

"ஐயோ....அம்மா... என்னால முடியலையே.... நான் வந்தே இருக்க கூடாது. நான் US லையே இருந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன்.... எல்லாமே என்னால தான்....என்னால தான்... " என கதறினான்

வளர்ந்த பிள்ளை அழுது கண்டிராத காஞ்சனா தாங்க மாட்டாமல் "என்ன கார்த்தி இது? ஏன் இப்படி எல்லாம் சொல்ற. அவ நேரம் அப்படி நடக்கனும்னு இருக்கு... அதுக்கு நீ என்ன செய்வ"

"இல்லமா... அவளுக்கு எதாச்சும் ஆய்ட்டா....நான்....." அதுக்கு மேல் அவனால் பேச இயலவில்லை

"எதுவும் ஆகாது கார்த்தி. இப்படி தைரியம் இழந்துட்டா அதுவே நெகடிவ் energy ஆய்டும்னு சொல்லுவா" என அவன் தந்தை அவன் அழுகையை நிறுத்த முயன்றார்

__________________

அன்று இரவு ஒருவரும் உறங்கவில்லை. கார்த்தி பத்து நிமிடத்துக்கு ஒரு முறை ICU கண்ணாடி வழியே சென்று காயத்ரியை பார்த்து கொண்டே இருந்தான், பார்க்காமல் விட்டால் அவள் விட்டு சென்று விடுவாளோ என பயந்தது போல்

___________________

ஆபரேஷன் ஆரம்பித்ததும் கார்த்தி மருத்துவமனையின் பின் புறம் இருந்த பிள்ளையார் கோவில் முன் சென்று அமர்ந்தவன் நான்கு மணி நேரம் கண் திறக்காமல் ப்ராதித்தான்......


உயிர்போன வலியை
உயிரோடே உணர்ந்தேனடி
காலம் முழுமைக்கும்
கண்மணிஇது போதுமடி

காலன்தனை வென்று
கண்மலர்ந்திடு தேவதையே
கண்ணீரேஇனி வேண்டாமென
கண்ணீரில் கரைகிறேனடி

விரைந்துஎன்னிடம் வந்துவிடு
விதியைநீயும் வென்றுவிடு !!!

தோள் மீது ஸ்பரிசம் உணர்ந்து கண் திறந்தான். கௌரி கண்களில் நீர் வழிய நின்றிருக்க இவன் இதயம் வேகமாய் அடித்து கொண்டது. இனி அழக்கூட தெம்பில்லை என்பது போல் கண்கள் வற்றியிருந்தது

அவன் தவிப்பை உணர்ந்த கௌரி "உன்னோட பிரார்த்தனை வீண் போகல கார்த்தி, ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சதுன்னு டாக்டர் சொன்னார்" எனவும் ஆனந்தத்தில் கண்கள் பனித்தது

உடனே அவளை காணவேண்டுமென மனம் தவிக்க "நீ பாத்தியா கௌரி. எப்படி இருக்கா? நான் போய் பாக்கறேன்" என எழுந்தவனை கை அமர்த்தினாள் கௌரி

"இல்ல கார்த்தி. சர்ஜரி தலைலைங்கரதால 72 hours போஸ்ட்-ஆப்பரேடிவ் வார்டுல தான் வெச்சிருப்பாங்கலாம். யாரும் பாக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்" என்று கௌரி கூற சற்று முன் மலர்ந்த முகம் சோர்ந்து போனது

____________

வாழ்வின் மிக நீளமான 72 மணி நேரமாய் அது தோன்றியது கார்த்திக்கு

அதன் பின்னும் அவளைக்காண அனுமதிக்கவில்லை

"கொஞ்ச நேரம் முன்னாடி காயத்ரிக்கு கான்சியஸ் வந்தது. பட் பல்சும் பிரசரும் கண்ட்ரோல்ல இல்ல. இன்னும் ரெண்டு நாள் sedation ல வெச்சுருக்கறது தான் பெட்டர்" என டாக்டர் கூறி செல்ல உடைந்து போனான்

அவள் அபாயகட்டத்தை தாண்டி விட்டாள் என டாக்டர் கூறியதை கூட மனம் நம்ப மறுத்தது

"எதுவும் பிரச்சனை இல்லேன்னா ஏன் பாக்க கூட விட மாடேங்கரா..." என கௌரியிடம் புலம்பி தீர்த்தான்

மேலும் மூன்று நாட்களுக்கு பின் பார்க்க அனுமதித்தனர். ஆனால் டாக்டர் அப்போது சொன்ன எச்சரிக்கை கார்த்தியை உள்ளே செல்ல விடாமல் தடுத்தது

"காயத்ரி அபாயகட்டத்த தாண்டி இருந்தாலும் இன்னும் ரெம்ப பத்திரமா இருக்கணும். ஒரு ஒருத்தரா போய் பாருங்க. ரெம்ப நேரம் பேச வேண்டாம். முக்கியமா அவங்க உணர்ச்சிவசபடக்கூடாது. இன்னும் full ரெகவரி ஆகல. சோ, பிரஷர் அதிகமானா மறுபடியும் rupture ஆகற சான்ஸ் இருக்கு.By God's grace head injury ஆகியும் கூட கை கால் இயக்கத்துல எந்த பிரச்சனையும் இல்ல. But as I said, be very careful" என எச்சரிக்கை செய்ய கார்த்தி பின் வாங்கினான்

காயத்ரியின் அம்மாவும் அப்பாவும் பார்த்து விட்டு வந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்

கௌரி உள்ளே செல்லும் முன் கார்த்தியை அழைக்க "இல்ல.... நீ போயிட்டு வா" என்று விலகினான்

அவள் எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள்

____________

"பாக்கணும் பாக்கணும்னு துடிச்ச.... பாக்க கூப்ட்டா வர்ல... இப்போ தனியா பிள்ளையார் முன்னாடி உக்காந்து அழுந்துண்டுருக்க. என்னாச்சு கார்த்தி நோக்கு?" என கௌரி கேட்க அவளை அங்கே எதிர்பாராதவன் அவசரமாய் கண்ணீரை மறைக்க முயன்று "இல்ல... ஒண்ணும் இல்ல..." என மழுப்பினான்

"ஏன் உள்ள வரலேன்ன?" என விடாமல் கேட்க

"......" பதில் கூறாமல் வேறு எங்கோ பார்த்தான்

"உன்ன பாத்தா உணர்ச்சி வசப்படுவான்னு பயமா? சொல்லு கார்த்தி" என நேரடியாய் தாக்க அதை எதிர்பாராத கார்த்தி மௌனமானான்

அவனது தவிப்பு மனதை நெகிழச்செய்ய "இத்தன ஆசைய மனசுல வெச்சுண்டு ஏன் அவ காதல மறுத்த கார்த்தி" என முகத்திற்கு நேராய் கேட்க அதிர்ச்சியில் உறைந்தான்

"சொல்லு கார்த்தி. எதுக்கு இந்த நாடகம்?" நாடகம் என்றதும் தாங்க முடியாமல்

"நாடகம் இல்ல கௌரி. அப்போ என் மனசுல.... அப்படி எதுவும்....." என வார்த்தை வராமல் தடுமாறினான்

"அப்போ இல்லேன்னா...?? என்ன அர்த்தம் இதுக்கு??" என கௌரி விடாமல் கேட்க

"கீழ விழுந்ததும் அம்மானு கூட சொல்ல மறந்து கார்த்தினு கத்தினாளே... உள்ளுக்குள்ள என்னமோ பண்ணிடுச்சு கௌரி... ரெண்டு க்ஷ்ணம் மூச்சு விட மிச்சம் இருந்த உயிர் மொத்தத்தையும் கண்ணுல தேக்கி I Love you கார்த்தினப்ப.... அவ கண்ல தெரிஞ்ச அந்த ஏக்கம்.... வலி.... காதல்.... என்னை மொத்தமா புரட்டி போட்டுடுச்சு. அவ மொத்தமா என்னை விட்டு போயடுவாளோன்னு நின்னப்ப தான்.... அவ இல்லாத வாழ்க்கை எனக்கு இல்லைன்னு உணர்ந்தேன் கௌரி....இப்போ.... ரெம்ப பயமா இருக்கு... " என்றவன் அதற்கு மேல் பேச இயலாமல் முழங்காலில் முகம் புதைத்தான்

சற்று நேரம் அழுது ஓயட்டும் என பொறுத்தவள் "அழாத கார்த்தி. அதான் இப்போ எல்லாம் சரி ஆய்டுத்தே" என ஆறுதல் படுத்த முயன்றாள்

''இல்ல கௌரி... அவள ரெம்பவே கஷ்டபடித்திட்டேன் .....நோக்கு தெரியாது....ரெண்டு வருஷமா..." என அங்கலாய்க்க

"தெரியும்..." என்றாள் கௌரி மெதுவாய்

"நோக்கு எப்படி? காயத்ரி எதுனா...."

"இல்ல கார்த்தி அவ எதுவும் சொல்லல. ஒரு நா அவ ரூம்ல பழைய certificate ஏதோ தேடினப்போ அவ டைரி கண்ணுல பட்டது. கொஞ்ச நாளாவே அவ சரி இல்லைன்னு அம்மா பொலம்பினது ஞாபகம் வர என்னனு தெரிஞ்சா வழி பண்ணலாம்னு தான் படிச்சு பாத்தேன். ஆனா பிரச்சனைய தீக்க வழி தெரியாததால அவ கிட்ட தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல" எனவும்

"ரெம்ப வருத்தப்பட்டு எழுதி இருந்தாளா?" என வேதனையாய் கேட்டான்

ஆமாம் என்று சொல்ல மனமின்றி "இப்போ தான் எல்லாம் சரி ஆயாச்சே... இனி எதுக்கு பழைய கதை எல்லாம்" என மழுப்பினாள்

"அவளுக்கு சீக்கரம் குணம் ஆய்டும் தானே கௌரி" என எதிர்பார்ப்புடன் கேட்க

"ம்... அடுத்த வாரத்துக்கு கல்யாண சத்திரம் புக் பண்ணிடலாம்.... சரி தானே மாப்பிள்ளை சார்" என கேலி பேசி இலகுவாக்க முயன்றாள்

அவள் முயன்றது வீண் போகாமல் அவனும் கல்யாணம் என்றதும் சிந்தனை மாற சற்று நெகிழ்ந்தான்

"என்னோட மனமாற்றம் தெரிஞ்சா காயு ரெம்ப சந்தோசப்படுவா இல்ல கௌரி" என அந்த கற்பனை காட்சியாய் கண் முன் விரிய மகிழ்வுடன் கேட்டான்

"ஆமாம் கார்த்தி...அதை விட பெரிய சந்தோஷம் அவளுக்கு இந்த உலகத்துல எதுவும் இருக்க போறதில்ல" என்றாள் அவன் மகிழ்ச்சியில் தானும் கலந்து

"அதனால தான் இப்போ அவள பாக்க நேக்கு ரெம்ப பயமா இருக்கு கௌரி. அவள பாத்தா எந்த அளவுக்கு என்னை கட்டுபடுத்திக்க முடியும்னு நேக்கு தெரியல" காதல் கொண்ட மனதின் வெளிப்பாடாய் உரைத்தான்

"வாஸ்தவம் தான் கார்த்தி. ஆனா டாக்டர் இன்னொரு விசயம் கூட சொன்னார் இல்லையா. அவ குணமாகறது எங்க மருந்து மாத்திரைல மட்டும் இல்ல, அவ மனசுலயும் நம்பிக்கை வரணும்னு. உன்ன பாத்தா நிச்சியம் அவ நம்பிக்கை ஆய்டுவா. நீ பாக்காமயே இருந்தா அதுவும் அவளை பாதிக்கும். அதிகம் பேசாம பாத்துட்டு வந்துடு. நானும் உன்னோட வரேன்" என்றாள் தன் தங்கையின் மனதை படித்தவள் போல
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

பிரியமானவளே...  (புவனா கோவிந்த்) Empty Re: பிரியமானவளே... (புவனா கோவிந்த்)

Post by udhayam72 Fri May 10, 2013 5:25 pm

"காயத்ரி...யாரு வந்திருக்கா பாரு? கார்த்திய பாரு" என கௌரி பேச வெகு ப்ராயதனப்பட்டு கண்களை திறந்தாள்

கார்த்தியை பார்த்ததும் பேச முயன்று அதற்கு உடல் ஒத்துழைக்காமல் போக கண்ணீரால் பேசினாள்

"ஏன் காயு? ரெம்ப வலிக்கறதா?" என்றான் கார்த்தி அவள் அழுவதை காண சகியாமல்

"இல்லை" என்பது போல் மெதுவாய் தலை அசைத்தாள்

அவளது ஏக்க பார்வை மனதை அறுக்க தன் மனமாற்றத்தை சொல்லவும் இயலாத நிலை கார்த்தியை கொன்றது

ஆதுரமாய் அவள் கைகளை பற்றினான். அதுவே பல விசியங்களை பேசாமல் பேசியது

சொற்கள் நூறு
சொல்ல இயலாததை
சொல்லாமல் சொன்னது
செல்லமேஉன் ஸ்பரிசமொன்று

அவன் தொடுகையில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள் காயத்ரி. உடல் மொத்தமும் புது ரத்தம் பாய்ந்தது போல் உணர்ச்சி குவியலானாள்

திடீரென அருகில் இருந்த கருவி "பீப் பீப்..." என ஒலி எழுப்ப காயத்ரி மூச்சி திணற அவன் கைகளை இறுக்க "கௌரி டாக்டரை கூப்டேன்....ஐயோ...." என பதறினான்

அதற்குள் அங்கு வந்த நர்ஸ் "என்ன நீங்க? patient ஐ எதுக்கு டென்ஷன் ஆக வெக்கறீங்க.... போங்க எல்லாரும் வெளிய... டாக்டர் வந்து என்னை தான் திட்டுவார்" என கத்தினாள்

விரைந்து வந்த டாக்டர் பரிசோதித்துவிட்டு "பிரஷர் அதிகம் ஆகி இருக்கு" என அதற்கான மருந்தை செலுத்த பணித்தார்

"என்ன மிசெஸ் கௌரி நான் எத்தனை முறை சொன்னேன் உங்க கிட்ட. she is still not 100% out of danger. Luckily, pressure ரெம்ப shootup ஆகல, அதுக்குள்ள பாத்துட்டோம். ப்ளீஸ் இனிமே யாரும் பாக்க போக வேண்டாம்" என கடிந்து கொண்டார்

அவள் மனதில் எத்தனை காதல் இருந்தால் தன் சிறு தொடுகை அவளை இத்தனை பாதிக்குமென கார்த்தி உறைந்து போனான். முடிந்தவரை அவளை காணாமல் இருப்பதே அவளுக்கு நலம் பயக்கும் என உணர்ந்தான். அது எந்த அளவுக்கு தனக்கு சாத்தியம் என புரியவில்லை அவனுக்கு

காதலை உணராத போதே தோழியாய் அவளை காணாமல் தவித்தவன் இப்போது சகலமும் அவளே என மனம் பதிந்த பின் ஒரு கணம் கூட அவளை விட்டு விலக மனம் ஒப்பவில்லை

_________________________

பத்து நாள் விடுமுறை காலம் முடிய அன்று அலுவலகத்துக்கு செல்ல மனம் இல்லாமல் சென்றான் கார்த்தி

திரும்பவும் வேறு ஒரு பணிக்காக அமெரிக்கா செல்ல வேண்டுமென அவன் மேலாளர் பணிக்க "தன்னால் செல்ல இயலாது லோக்கல் ப்ராஜெக்ட் வேண்டும்" என்றான்

அதனால் அவன் சம்பளம் கணிசமாய் குறையும் என்றதை அவன் சிறிதும் பொருட்படுத்தவில்லை

"வேலையே போகும் என்றாலும் நிச்சியம் தன்னால் இயலாது" என்று மறுத்தான்

அந்த ஊரிலேயே வேறு ஒரு ப்ராஜெக்ட்க்கு அமர்த்தப்பட்டான்

அதன் பின் கிட்டதட்ட ஒரு மாதம் காயத்ரி மருத்துவமனையில் இருந்தாள்

ஒரு வாரத்திற்கு பின் ICU வில் இருந்து அறைக்கு மாற்றினர்

ஆனாலும் பத்திரமாய் இருக்கணுமேன டாக்டர் எச்சரித்தார்

அதன் பின் தினமும் அலுவலகம் செல்லும் முன் தன் அம்மா தயார் செய்து வைத்து இருக்கும் உணவை எடுத்து கொண்டு மருத்துவமனை சென்று காயத்ரியை பார்த்து விட்டு மீண்டும் மாலை அலுவலகம் முடிந்து நேரே மருத்துவமனை சென்று பார்த்து விட்டு வருவது தினசரி வாடிக்கை ஆனது கார்த்திக்கு

அவனை கண்டதும் செந்தாமரையாய் மலரும் அந்த முகத்தை காண நாள் முழுதும் அதே நினைவில் தவித்தான். முடிந்த வரை அவளை கண்ணோடு கண் நேரே பார்ப்பதை இருந்தான். தன்னையும் அறியாமல் தன் காதல் தன்னை இனம் காட்டி விடுமோஎன பயந்தான்

இந்த நாட்களில் இருவரும் பழைய தினங்கள் போல் இயல்பாய் பேச முயன்றனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்

மருத்துவமனை விட்டு கிளம்பிய அன்று டாக்டர் கூறியது கார்த்தியின் தவிப்பை மேலும் கூட்டியது

"காயத்ரி இப்போதைக்கி ஒகே தான். ஆனா இன்னும் பத்திரமாத்தான் இருக்கணும். மெடிக்கல் டெர்ம்ஸ்ல சொன்னா போஸ்ட் சர்ஜெரி ஸ்டேஜ். ஹெட் இஞ்சுரிக்கு இந்த போஸ்ட் சர்ஜெரி ஸ்டேஜ் ஒன் இயர் நாங்க பிக்ஸ் பண்றது. சிலர் சீக்கரமும் சரி ஆகலாம். But to be on a safer side every month செக் up வாங்க ஒன் இயர்க்கு

அப்புறம் எதுவும் problem வர சான்ஸ் இல்லை. ஆனா இந்த ஒரு வருசத்துக்குள்ள எதுனா injury or relapse ஆனா ரெம்ப ரிஸ்க். So, be careful and take complete care of her" என டாக்டர் சொல்லி முடிக்க

"ஒகே டாக்டர் நீங்க சொன்னா மாதிரி நாங்க கேர்புல்லா இருக்கோம்" என்றார் காயத்ரியின் அப்பா

கார்த்தியின் நிலை தான் கவலைக்கிடமானது

அன்று தனது ஒரு சிறு ஸ்பரிசம் அவளை பாதித்தது கண் முன் வர இன்னும் ஒரு வருடம் தன் மனதை காட்டாமல் இருப்பதே உத்தமம் என முடிவு செய்தான், அது எத்தனை கடினம் என்பது தெளிவாய் உணர்ந்தே

இரண்டு வருடங்கள்
இரும்புமனம் காட்டினேனே
எப்படி தவித்தாயோ
என்செல்லமே நீயும்
இரண்டு நிமிடம்கூட
இயலவில்லை எனக்கு
காதல் கொண்டமனதை
கட்டுப்படுத்த கரைகிறேனடி

_______________

வீட்டுக்கு சென்ற மறுநாள் காயத்ரியின் பிறந்த நாளாய் அமைந்தது எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சி ஆனது, புனர் ஜென்மத்தின் முதல் பிறந்தநாள் அல்லவா அது

"ஹே காயு. ஹாப்பி பர்த்டே டா" என கௌரி முதல் வாழ்த்தை சொல்ல

"தேங்க்ஸ் கௌரி" என புன்னகையுடன் கண் விழித்தாள் காயத்ரி

"கார்த்தி ரெம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கான்... இரு வர சொல்றேன்" எனவும்

"ம்...." என ஆர்வமாய் வாயிலை நோக்கினாள்

"ஹாய் காயத்ரி... ஹாப்பி பர்த்டே" என கார்த்தியின் குரல் கேட்க மகிழ்ச்சி ததும்பியது மனதில்

"Wishes இருக்கட்டும்....என்னோட கிப்ட் எங்க?" என்றாள் உரிமையாய்

பழைய நாட்களை போல் உரிமையாய் அவள் பேச "என் மனதையே உனக்கு தந்தேனடி" என கவிதையாய் சொல்ல தோன்றிய மனதை கடிவாளம் இட்டு நிறுத்தினான் கார்த்தி

மனதின் உணர்வை மறைக்க முயன்று அவளை நேரே பார்க்க இயலாமல் பரிசு பொருளை எடுக்கும் சாக்கில் குனிந்தான்

"இதோ... கிபிட்" என கையில் கொடுக்க போனவன் "வெயிட் வெயிட்...என்னனு guess பண்ணு அப்போ தான் தருவேன்" என குறும்பாய் கூற, அதை ரசித்தவள்

"ம்... patient க்கு என்ன தருவாங்க? horlicks , bournvita வா" என அதே குறும்புடன் உரைக்க அந்த குறும்பு சிரிப்பில் தன்னை முற்றிலும் இழந்தான் கார்த்தி

அவளை அணைத்துகொள்ள துடித்த கையை இறுக பற்றி நிறுத்தினான்

அதற்கு மேல் அவள் அருகில் இருப்பது ஆபத்து என தோன்ற "நீயே பிரிச்சு பாரு" என பேச்சை மாற்றினான்

பிரித்து பார்த்தவள் மிகவும் சந்தோசமானாள்

கால் கொலுசுகள் என்றால் அவளுக்கு மிகவும் விருப்பம். எத்தனை செட் வைத்து இருந்த போதும் மீண்டும் மீண்டும் வாங்குவாள்

சில வருடங்களுக்கு முன் ஒரு முறை எல்லோரும் தீபாவளி ஜவுளி வாங்க சென்ற போது ஐம்பொன் கொலுசு வேண்டுமென அவள் பிடிவாதம் செய்ய அவள் அன்னை ஐம்பொன் கூடாது என மறுத்து விட்டாள். அன்று முழுதும் அவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருந்தாள்

அதை நினைவு வைத்து அவன் வாங்கியது மனதிற்கு மிகவும் சந்தோஷம் அளித்தது காயத்ரிக்கு

"வாவ்...ரெம்ப நல்லா இருக்கு கார்த்தி. உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கா, நான் எப்பவோ கேட்டது?" என குதூகலித்தாள்

புன்னகையுடன் அவள் சந்தோசத்தை ரசித்தான் கார்த்தி

இன்னும் ஏதேதோ வாங்கவேண்டும் என ஆசை உந்திய போதும் அது தன் மனதை காட்டி விடுமோ என பயந்து சிறியதாய் அதே நேரம் அவளுக்கு பிடித்ததாயும் வாங்கி இருந்தான்

இப்படியே மகிழ்வும் சிரிப்புமாய் நாட்கள் ஓடின

தினமும் காலையும் மாலையும் அவளை காண்பதே வாழ்வின் அர்த்தமாய் தோன்றியது கார்த்திக்கு. ஏன் தான் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி இருக்கிறதோ என கோபமாய் வந்தது. நாள் முழுதும் அவள் அருகிலேயே இருக்க தோன்றியது

காயத்ரியும் மற்ற நேரம் எல்லாம் அந்த சில மணி நேரங்களுக்காகவே காத்திருந்தாள்

ஒரு நாள் அலுவலகத்தில் சற்று நேரமாகி விட வாசலிலேயே காத்திருந்தாள்

"ஏன் கார்த்தி இத்தனை நேரம்? நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்"

"சாரி காயு. கெளம்பற நேரத்துல ஒரு வேலை. அப்படியே இழுத்துடுத்து" என்றான் அவள் தவிப்பில் உருகி

"உன்னோட செல்போன்க்கு கூட நெறைய வாட்டி ட்ரை பண்ணினேன். போன்ஏ எடுக்கல" என உரிமையாய் கோபித்தாள்

அவள் முகம் கோணியது காண பொறுக்காமல் "சாரி டா. போன் பாட்டரி ஏதோ problem . என்னோட friend கடைல குடுத்துட்டு வந்தேன். morning தான் வாங்கணும்" என சமாதானம் செய்தான்

இப்படி தவிப்பும் காதலுமாய் நாட்கள் சென்றன

தினமும் மாலை நெருங்கும் முன்னே தன்னை தயார் செய்து கொண்டு காயத்ரி காத்திருந்ததும் கார்த்தியை கண்டதும் அவளது மலர்ந்த முகமும் அவன் விடை பெற்று சென்றதும் முகம் வாடுவதும் காயத்ரியின் பெற்றோருக்கும் அவள் மனதை உணர்த்தியது

ஆனாலும் அவளாக சொல்லும் வரை பொறுமை காக்க நினைத்தனர். கார்த்தியின் வீட்டிலும் அதே நிலை தான்

அடுத்த சில மாதங்கள் பரிசோதனைக்கு சென்ற போது நல்ல முன்னேற்றம் இருப்பதாக டாக்டர் கூறியது எல்லோர் மனத்திலும் நிம்மதியை தோற்றுவித்தது

அன்று அலுவலகம் விட்டு வந்த போது காயத்ரியின் வீடு பூட்டி இருக்க மனம் பதறியது கார்த்திக்கு

ஒரு நொடிக்குள் மனம் ஆயிரம் காரணங்களை கற்பனை செய்து துடித்தது

விரைந்து தன் வீட்டை அடைந்தவன் முன்னறையில் தன் அன்னையும் காயத்ரியும் பேசிகொண்டிருப்பதை கண்டு போன உயிர் திரும்பி வந்தது போல் நிம்மதி அடைந்தான்

"வா கார்த்தி" என்றாள் காயத்ரி உற்சாகமாய் அவனை கண்டதும்

"என்னாச்சு காயத்ரி? ஏன் ஆத்துல பூட்டு போட்டிருக்கு"

"ஏன்? ஒரு நா உங்க ஆத்துல நான் இருக்க கூடாதோ"

"காலம் பூரா இங்கேயே இருக்கணும்னு தானடி தவிக்கிறேன்" என வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கினான்

"அது இல்ல.... மாமி உன்னை ஆத்தை விட்டு படி எறங்க கூட விடமாட்டாங்களே. அதான் கேட்டேன்" எனவும்

"ஆமாம் கார்த்தி. மாமிக்கு விட்டுட்டு போகவே மனசில்ல. ஆனா மாமியோட நாத்தனார் ஆத்துகாரர் தவறிட்டார். போகவும் வேணும் காயத்ரிய அழைச்சுண்டு போக இஷ்டமில்ல. நான் தான் ஒரு நா இங்க இருக்கட்டும்னு பிடிவாதம் பண்ணி அனுப்பி வெச்சேன்" எனவும்

"ஆஹா...இன்று முழுதும் இங்கயே இருக்க போறாளா" என கார்த்தியின் மனம் சந்தோசத்தில் துள்ளியது

"சரிடா... நீ போய் மொகம் அலம்பிண்டு வா... நான் காபி போடறேன். காயு நோக்கும் காபி சரிதானே" என கேட்க அவள் பதில் சொல்லும் முன் கார்த்தி முந்தினான்

"ஐயோ...என்னமா நீ? cafeine எல்லாம் நல்லது இல்லைன்னு டாக்டர் போன வாட்டியே சொன்னார். அவளுக்கு பால் இல்லைனா பூஸ்ட் குடு" என அவசரமாய் சொல்ல

"ஒரு நேரம் காபி குடிச்சா ஒண்ணும் ஆய்டாது கார்த்தி....நானே காபி போடறேன் இருங்க மாமி" என அவள் எழ

"இரு காயத்ரி நீ கார்த்தியோட பேசிண்டிரு. நான் போடறேன். அவன் சொன்னாப்ல நோக்கு பூஸ்ட்ஏ தரேன்" என அவர்களுக்கு தனிமை தந்து விலகினாள்

கதிரவன் மறைந்து நிலவு தலை காட்டிய நேரத்தில் மின்சாரம் தடைபட

"கார்த்தி உள்ளே ஒரே புழுக்கமா இருக்கு. பின்கட்டுல chair போட்டு உக்காருங்கோ நீயும் காயத்ரியும். வேப்ப மர காத்து நன்னா இருக்கும். நானும் அப்பாவும் ஒரு நடை போயிட்டு வரோம்" என கிளம்பினாள் காஞ்சனா

"Chair வேண்டாம் கார்த்தி. பின்கட்டு செவத்துல சாய்ஞ்சு அப்படியே உக்காரலாம் வா. நல்ல மேடா தானே இருக்கு" என்றாள் காயத்ரி

"தரை சில்லுனு இருக்கும் காயு" எனவும்

"இல்ல கார்த்தி. ரெம்ப நாள் ஆச்சு அப்படி ப்ரீயா இருந்து. ப்ளீஸ்" என கெஞ்ச அதற்கு மேல் மறுக்க இயலவில்லை அவனுக்கு

"ரெம்ப நல்லா இருக்கில்ல கார்த்தி"

"என்ன?" என்றான் வேண்டுமென்றே புரியாதது போல்

"ம்....இந்த இதமான வேப்பமர காத்து. சில்லுனு தரை. பௌர்ணமி நிலா.... எல்லாமே அழகா இருக்கில்ல" என உணர்ச்சி பூர்வமாய் காயத்ரி சிலாகிக்க அந்த முழுநிலவு ஒளிக்கு போட்டியாய் ஜொலித்த அவள் முகம் கார்த்தியை கவிஞன் ஆக்கியது

ஒரு கணம் சுற்றுப்புறம் மறந்தான். ஏன்? தன்னையே மறந்தான்

"இதை எல்லாத்தையும் விட நீ ரெம்ப அழகா இருக்க காயு" என்றான் காதலுடன்

காற்றின் வேகத்தில் முன் நெற்றியில் அவள் சிகை சிறிது விழ பூர்ணசந்திரனாய் ஒளிவீசும் அவள் முகத்தை ரசிக்க அது தடை செய்வதாய் தோன்ற தனிச்சையாய் தன் ஒற்றை விரலால் ஒதுக்கினான் கார்த்தி

அவன் தொடுகை தந்த அதிர்வில் உடல் சிலிர்க்க அவன் காதல் மொழியும் மனம் சிலிர்க்க செய்ய மனம் தறிகெட்டு ஓடியது காயத்ரி

ஒருநிலவுதான் பிரபஞ்சத்தில்என
ஒன்றாம்வகுப்பில் படித்தது
பொய்யானது இப்போது
பெண்ணே உனைகண்டதும்

அவன் மன மாற்றம் ஓரளவு புரிந்த போதும் அவனே வாய் விட்டு சொல்லும் வரை எதுவும் கேட்க பயமாய் இருந்தது அவளுக்கு. சூடு பட்ட பூனையாய் ஒரு முறை அனுபவித்த நிராகரிப்பே பேச தடை செய்தது

இன்னும் நூறு சதம் அப்படி தானா எனவும் அவளால் முடிவுக்கு வர இயலவில்லை. ஒரு வேளை குற்ற உணர்வில் அன்பை பொழிகிறானோ. தனக்கு தான் அது காதல் போல தோன்றுகிறதோ என பல சிந்தனையில் மனம் அலைபாய்ந்தது

ஏதேனும் பேசி இப்போது உள்ள இந்த சந்தோசத்தையும் இழந்து விடுவோமே என அஞ்சினாள். எனவே மௌனம் காத்தாள்

அவள் சிலிர்த்ததும் கார்த்திக்கு அன்று மருத்துவமனையில் நடந்தது நினைவுவந்து பயம் தோன்ற இனியும் அவள் அருகில் தனிமையில் இருப்பது உகந்ததல்ல என

"காயு... இங்க ரெம்ப சில்லுன்னு இருக்கு. அம்மா திட்டுவாங்க. வா முன்னாடி திண்ணைல போய் உக்காரலாம்" என்றான்

அவளும் மறுப்பேதும் சொல்லாமல் பின் சென்றாள்

இந்த நிகழ்வு கார்த்தியின் மனதில் காத்திருத்தலை வெறுக்க செய்தது. டாக்டர் சொன்ன ஒரு வருட கெடு முடிய மூன்று மாதம் இருந்தது அவனை பொறுமை இழக்க செய்தது

ஆனாலும் அவசரப்பட்டு பாதகம் தேடிக்கொள்ள மனம் ஒப்பவில்லை

_____________________________

கார்த்திக்கு அடுத்து வந்த மூன்று மாதம் மூன்று வருடம் போல் கழிந்தது எனலாம்

"காயத்ரி எல்லா செக்கப்பும் செஞ்சாச்சு. நான் சொன்ன ஒரு வருசமும் முடிஞ்சுது. You're perfectly alright. You can lead a normal life" என டாக்டர் கூற சுற்றி இருந்த எல்லோர் முகத்திலும் நிம்மதி பரவியது

மருத்துவமனையில் இருந்து காயத்ரி பெற்றோருடன் வீட்டிற்கு செல்ல கௌரியை தானே அவள் வீட்டில் விட்டு விடுவதாய் அழைத்து சென்றான் கார்த்தி

"நான் ஆட்டோல போய்க்கறேன் கார்த்தி. நீ இனி அது வரைக்கும் வந்துட்டு திரும்ப வரணும் வீணா" என சொன்னதை ஏற்காமல் அழைத்து சென்றான்

"என்ன கார்த்தி? உங்க லவ் ஸ்டோரி எப்படி போயிட்டு இருக்கு?" என்றாள் செல்லும் வழியில்

"அது....அதுக்கு தான் உன்னிட்ட ஒரு ஹெல்ப் கேக்கனும்னு நெனச்சேன் கௌரி"

"என்ன மாப்பிள்ளை சார்? எங்க அம்மா அப்பா கிட்ட தூது போணுமா"

"இல்ல.... ஆமா..."

"இல்லையா...ஆமாவா... தெளிவா சொல்லு" என கேலி செய்தாள்

"அது.....நாளைக்கி காயு பர்த்டே இல்லையா. அவள நான் வெளிய அழைச்சுட்டு போக நீ தான் உங்க ஆத்துல permission வாங்கி தரணும்" என தயக்கமாய் சொல்ல

"ஓ...ஹோ... இதுக்கு தான் அக்கறையா என்னை ஆத்துல விடறதா சொல்லி அழைச்சுண்டு வந்தியா? அப்பவோ நெனச்சேன்....சோழியும் குடுமியும் சும்மா ஆடுமானு..." என வேண்டுமென்றே சீண்டினாள் கௌரி

"ச்சே..... அப்படி எல்லாம் இல்ல கௌரி" என்றான் பாவமாய்

"சரி சரி... போனா போறது.... எங்காத்துல சொல்றேன்...உங்க காதல் சமாச்சாரத்தையும் சேத்து" என்றாள் சிரிப்புடன்

பச்சை வண்ண பட்டு சேலையில் தேவதையாய் நின்றாள் காயத்ரி

"என் கண்ணே பட்டுடும்டீ செல்லமே" என மகளுக்கு நெட்டி முறித்தாள் கோகிலா

"ஆமாம் கோகிலா.... இன்னிக்கி சாயங்காலமா திருஷ்டி கழிக்கணும் மறக்காம" என்றாள் காஞ்சனா

எதுவும் பேசாமல் கண்களாலேயே அவளை விழுங்குவது போல் பார்த்து நின்றான் கார்த்தி

இருவரும் ஜோடியாய் புறப்பட இருவரின் பெற்றோரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்த புன்னகை பூத்தனர்

முதலில் கோவிலுக்கு சென்றனர். காயத்ரியின் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் பெற்று கொண்டு காரில் அமரும் வரை இருவரும் அதிகம் எதுவும் பேசவில்லை. கார் கிளம்பியதும்

"இப்போ எங்க போறோம்னு தெரியுமா?" என கார்த்தி கேட்க காயத்ரி பதிலே பேசவில்லை

முகத்தை கடுகடுவென வைத்து இருந்தாள்

"ஏய்...காயு....என்னாச்சு..." என கவலையானான் கார்த்தி

அவள் எதுவும் பேசாமல் மௌனம் சாதிக்க காரை ஓரத்தில் நிறுத்தி "காயு....ப்ளீஸ் என்னாச்சுனு சொல்லு"

"ஒண்ணும் இல்ல...." என முகம் திருப்பினாள் கோபமாய்

அவள் கோபத்தின் அர்த்தம் புரியாமல் கார்த்தி குழம்பினான்

"ப்ளீஸ் காயு சொல்லு....என்ன கோவம் இப்போ?" என பாவமாய் கேட்க

"அது என்ன... என்னை வெளிய அழைச்சுண்டு போக கௌரி மூலமா permission கேக்கறது... என்னை கேக்கறதுக்கு என்ன"

"இது தான் இப்போ கோவமா? நான் என்னமோன்னு பயந்துட்டேன்"

"அப்போ.... இன்னும் வேற நெறய தப்பு செஞ்சிருக்கயா நேக்கு தெரியாம"

"ம்....ஆமா....நெறய தப்பு... செஞ்சு தான் இருக்கேன்... இன்னும் கொஞ்ச நாழில அது எல்லாம் என்னனு ஒப்பிச்சு ஒண்ணா மன்னிப்பு கேட்டுக்கறேன், சரிதானா மேடம்" என கேலி செய்ய அவன் கேலி சிரிப்பை வரவழைத்த போதும் வேண்டுமென்றே கோப முகம் காட்ட முயன்றாள் காயத்ரி

"இப்போ நாம எங்க போறோம்னு தெரியுமா?" என அவன் மறுபடியும் கேட்க

"ம்... நேக்கு ஜோசியம் எதுவும் தெரியும்னு உன்னிட்ட எப்பவாச்சும் சொல்லி இருக்கனா என்ன?" என அவளும் கேலி செய்ய இப்படியே கேலியும் சீண்டலுமாய் ஒரு மணி நேர பயணத்திற்கு பின் ஊருக்கு சற்று ஒதுக்குபுறத்தில் இருந்த கார்த்தியின் அப்பா வழி சொத்தான அவர்களின் பூர்வீக தோட்ட வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்

"வாவ்.... இங்க வந்து ரெம்ப நாள் ஆச்சில்ல கார்த்தி... இன்னும் அதே அழகோட இருக்கு" என சிலாகித்தாள் காயத்ரி

சிறுவயதில் எல்லாம் கார்த்தியின் தாத்தா பாட்டி இருந்த வரை ஒரு ஒரு வாரமும் குடும்பமாய் வந்து செல்வது வழக்கம். பலமுறை காயத்ரியும் இங்கு வந்து தங்கியதுண்டு

கார்த்தி பிறந்தது கூட இந்த வீட்டில் தான் என அவன் பாட்டி சொன்னதுண்டு

அதன் காரணமாய் தன் காதலை கூட அவளிடம் இங்கு வைத்து சொல்லணும் என அழைத்து வந்தான் கார்த்தி. தனிமை வேண்டுமென தோட்டத்தை பராமரித்து வந்த பணியாளை கூட விடுப்பு கொடுத்து அனுப்பி இருந்தான்

"இப்ப ஏன் இங்க வந்தோம்?" என காயத்ரி கேட்க

"ம்.... அது... உன்னிட்ட நான் ஒரு விசயம் சொல்லணும். அதுக்கு முன்னாடி... வா .... உனக்கு ரெம்ப பிடிச்ச தோப்புக்கு நடுவுல இருக்கற பவளமல்லி கிட்ட போவோம்" என அவள் கை பற்றி அழைத்து சென்றான்

பவளமல்லி மரத்தின் கீழ் திண்ணை போல் அமைக்கப்பட்டு இருந்தது. தோப்பின் நடுவில் அமர்ந்து மேற்பார்வை செய்ய வசதியாய் அவன் தாத்தா கட்டிய திண்ணை அது, இன்று பேரனின் காதலுக்கு சாட்சியாக நின்றது

"காயு.....உன்னிட்ட ஒரு விசயம் சொல்லணும்...." என தயக்கமாய் அவளை ஏறிட்டான்

காயத்ரியின் மனம் தடதடக்க அதேநேரம் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் என்ன என்பது போல் பார்த்தாள்

"அது....வந்து...." என அவள் கையை தன் கையில் சிறை பிடித்தான். சட்டை பையில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்தான்

காயத்ரிக்கு இதயம் படுவேகமாக துடித்தது. என்ன நடக்கிறதென சுதாரிக்கும் முன்னே அதை அவள் விரலில் அணிவித்தான்

"காயு.... ஐ லவ் யு டா" என அவள் பட்டு விரல்களில் இதழ் பதிக்க காயத்ரி அப்படியே கண்கள் சொருக கீழே சரிந்தாள்

கீழே விழாமல் அவளை அணைத்து பிடித்தவன் "காயு....காயு....ப்ளீஸ் கண்ணை தெற... காயு ப்ளீஸ்....ஐயோ கடவுளே....என்ன நடக்க கூடாதுன்னு ஒரு வருஷம் தவிச்சேனோ... அதே நடந்துடும் போல இருக்கே....ஐயோ செல்போன் டவர் கூட இல்லையே இங்க... என்ன செய்வேன்....காயு" என அவன் கண்ணீர் துளி அவள் முகத்தில் பட

"ரெம்ப பயந்துட்டயா கார்த்தி" என சிரித்தாள் காயத்ரி

தன் தவிப்பு புரியாமல் சிறுபிள்ளைதனமாய் அவள் வேண்டுமென்றே நினைவிழந்தது போல் நடித்தது புரிய, கோபமாய் அவளை விட்டு அகன்றான்

அவன் கோபம் அவனை மேலும் சீண்டி பார்க்க அவளை தூண்ட

"என்ன கார்த்தி கோபமா? ஒரு வருஷம் காத்தியே.... ஒரு நிமிஷம் முடியலையா" என சிரித்து கொண்டே கேட்க அவன் முகம் பாறையாய் இறுக பெரிய மூச்சுகள் எடுத்து நின்றான்

இன்னும் அவன் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது புரிய அதற்கு மேல் பொறுக்க இயலாமல்

"சாரி கார்த்தி....சும்மா விளையாட்டுக்கு தான்...இப்படி எதுனா ஆய்டுமோனு பயந்து தானே என்னை ஒரு வருசமா தவிக்க வெச்சேன்னு... சும்மா....விளையாட்டா... சாரி....கோபமா இன்னும்" என கெஞ்ச அதற்கு மேலும் கோபத்தை பிடித்து வைக்க இயலவில்லை அவனுக்கு

இருந்தாலும் மனம் ஆற்றாமையால் அவளை விலக்கி நிறுத்தியவன் அவளை தலை முதல் கால் ஆராய்ந்தான். அவளுக்கு நிச்சியமாய் எதுவும் ஆகவில்லை என உறுதி செய்து கொண்டதும் "ஒரு நிமிஷம் உயிரே போய்டுச்சு காயு..." என கண்கள் பனிக்க கூற

"சாரி சாரி சாரி கார்த்தி...சும்மா விளையாட்டா....தெரியாம... சாரி ப்ளீஸ் சாரி" என கெஞ்சினாள்

"காயு.... இனி விளையாட்டுக்கு கூட எப்பவும் இப்படி செஞ்சுடாதே... வாழ்நாள் மொத்ததுக்குமான தவிப்பை நான் அந்த ஒரு நாளுலேயே அனுபவிச்சுட்டேன் கண்மணி" என உணர்ச்சிவசப்பட்டான்
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

பிரியமானவளே...  (புவனா கோவிந்த்) Empty Re: பிரியமானவளே... (புவனா கோவிந்த்)

Post by udhayam72 Fri May 10, 2013 5:27 pm

"சாரி கார்த்தி. இனி எப்பவும் இப்படி செய்ய மாட்டேன். promise ...." என அவன் கைகளில் கை பதித்தாள்

அவன் முகம் இன்னும் இறுக்கமாகவே இருக்க "ப்ளீஸ் கார்த்தி....எனக்கு என்ன தண்டனை வேணா குடு. இப்படி இருக்காதே" என தவிப்புடன் சொல்ல அப்படியே கரைந்தான் கார்த்தி

"ம்....என்ன தண்டனை வேணா தரலாமா?" என குறும்பாய் கேட்க

"ம்.....ம்...." என்றாள் அவளும் அவன் சிரிப்பை ரசித்து மகிழ்வுடன்

"ம்..... ஒகே அப்படினா.... உடனே ஆயுள் தண்டனை விதிக்கிறேன் உனக்கு" என தேவதூதன் போல் கை தூக்கி ஆசிர்வாதம் போல் காட்ட

"ஆயுள் தண்டனையா..." என பொய்யாய் பயந்தது போல் கேட்க

"ஆமாம் கண்மணி.... ஆயுள் முழுதும் என் இதய சிறையில் கைதியாய் உன்னை சிறை வைக்கிறேன்" என சொல்ல

"ஹா ஹா ஹா ... எந்த சினிமா டயலாக் காப்பி அடிச்சே" என கலகலவென காயத்ரி நகைக்க

"ஏய் கொழுப்பா நோக்கு....? நான் கஷ்டப்பட்டு சிந்திச்சு கவிதையா பேசினா நோக்கு காப்பி மாதிரி தோணுதா" என பொய்யாய் கோபம் காட்ட

"ஆமா... நீ தெனமும் சமைச்சு போட்டு கொழுப்பு தான் நேக்கு"

"ம்....சமைச்சு வேற போடணுமா.... ஆஹா... அப்போ என்னை முழு நேர சமையல்காரன் ஆக்கிடுவ போல...கஷ்டம் தான் கல்யாணத்துக்கு அப்புறம்....ம்..." என பெருமையாய் சலித்தான்

அவன் சலிப்பை ரசித்தவள் எதுவும் பேசாமல் அவன் மார்பில் முகம் புதைத்தாள்

அவர்களின் காதலுக்கு சாட்சியாய் நின்ற அந்த கணத்தின் அமைதியை இருவரும் ரசித்து அனுபவித்தனர்

"காயு...."

"ம்...."

"ஏன்...எதுவும் பேச மாட்டேன்ற?"

"ம்..... இன்னும் இது நிஜம்னு நம்ப முடியல கார்த்தி.... கண்ணு தெறந்ததும் கனவு கலைஞ்சுடுமோன்னு..... நெறய வாட்டி இந்த மாதிரி கனவு கண்டு..." என்றவள் அதற்கு பேச இயலாமல் தேம்பினாள் அதே போல் கலைந்த கனவுகளின் நினைவில்

அவள் தேம்பல் பொறுக்கமாட்டாமல் "சாரிடா செல்லமே.... உன்ன ரெம்பவே தவிக்க வெச்சுட்டேன் காயு மா. அப்பா... ரெண்டு வருஷம்... எப்படி தவிச்சுருப்ப இல்ல. எனக்கு மனசுல இப்படித்தான்னு புரிஞ்ச அந்த நிமிசமே உன்னிட்ட சொல்லிடணும்னு எப்படி துடிச்சேன் தெரியுமா?"

"சொல்லேன் கார்த்தி...எப்போ அப்படின்னு தோணிச்சுன்னு...கேக்கனும்னு இருக்கு"

"கண்ணு மூடற நிமிஷம் போற உயிர பிடிச்சு வெச்சுட்டு ஐ லவ் யு கார்த்தினு சொன்னியே....என்னமோ பண்ணிடுச்சுடா நேக்கு... உயிர் போற மாதிரி ஒரு வலி...இப்ப நெனச்சா கூட பயமா இருக்குடா"

"நீ சர்ஜரி முடிஞ்சு பாக்க வந்தியே அப்பவே நேக்கு சந்தேகம் தான் கார்த்தி"

"நோக்கு சந்தேகம் வந்துட கூடாதுன்னு நான் எத்தனை கட்டுபடுத்திண்டேன் தெரியுமா....அப்படியும் பிரஷர் அதிகமாகி அப்பாப்பா என்ன டென்ஷன்"

"அதனால தான் ஒரு வருசமா சொல்லலியா"

"ம்....அன்னைக்கி பௌர்ணமிய ரசிச்சுட்டு இருந்தப்ப ஒரு நிமிஷம் நான் வசம் இழந்தது நிஜம்... எப்படியோ கட்டுபடித்திண்டேன்"

"ஆமா... அன்னிக்கி தான் நேக்கு ரெம்பவே நம்பிக்கை வந்தது கார்த்தி. ஆனாலும் என்னமோ ஒரு பயம்...மொதல் முறை நீ மறுத்ததே தோணி...."

"சாரிடா...எப்படி வேதனை பட்டு இருப்பே இல்ல.... மன்னிச்சுடு கண்மணி" என அவன் குற்றஉணர்வில் தவிக்க அது பொறுக்காமல் பேச்சை மாற்றும் எண்ணமாய்

"அது சரி... கௌரிக்கு தெரியுமா? ஏன் அவகிட்ட permission கேக்க சொன்ன இன்னிக்கி வெளிய வர"

"கௌரிக்கு நீ hospital ல இருந்தப்பவே எல்லாம் தெரியும்..."

"அடிப்பாவி.... மூச்சு விடல பாவி"

"தப்பு அவ மேல இல்ல காயு... நேக்கு தான் ரெம்ப பயமா இருந்தது.... டாக்டர் வேற அநியாயத்துக்கு பயப்படுத்தி வெச்சிருந்தார். என்ன செய்ய?"

"இன்னும் நம்பவே முடியல....என்ன சொல்றதுன்னு தெரியல கார்த்தி"

"ம்.... இன்னும் நம்ப முடியலையா.... இது கனவு இல்ல நிஜம்னு புரியவெக்க என்னிட்ட வேற ஒரு புது வைத்தியம் இருக்கு. அதை செய்யவா" என அப்பாவியாய் கேட்டான்

"என்ன....வைத்தியமா....?" என புரியாமல் விழிக்க அவன் அவள் காதில் ஏதோ சொல்ல அவள் முகம் குங்குமமாய் சிவந்தது

வெட்கத்தை மறைக்க அவன் மார்பில் முகம் மறைத்தாள்

அவள் நாணத்தை கண்டு தானும் நாணி சூரியன் கூட மேகத்தில் மறைந்தது

நமக்கும் தான் இனி என்ன வேலை இங்கே...

பிரியாவரம் வேண்டி
பிறவிபல காத்திருந்தேன்
பிரியமான உனைவேண்டி
பிறவிநூறு தவம்செய்தேன்
வரம்தந்த தேவதையே
வாழ்க்கைநீயே என்னவளே
பிரியமானவளே....

முற்றும்
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

பிரியமானவளே...  (புவனா கோவிந்த்) Empty Re: பிரியமானவளே... (புவனா கோவிந்த்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum