தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இனிய நண்பர் ,ஹைக்கூ முன்னோடி ,கவிஞர் மு .முருகேஷ் அவர்கள் ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு எழுதியுள்ள விமர்சனம் .
2 posters
Page 1 of 1

.

.மனக் கிரீடத்திலொரு மலர்க்கிரீடம்
[ltr]
”எமக்குத் தொழில் கவிதை” என்று நெஞ்சு நிமிர்த்திப் பாடிய மகாகவி பாரதியின் வழி வந்த தமிழ்க் கவிதையில் பரப்பில், இன்று ஆயிரம் ஆயிரமாய்க் கவிதைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன, கவிதை மணம் பரப்புகின்றன.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணிலிருந்து கவிதைக் கரம் நீட்டி,என்னோடு நட்புக் கொணடவர்களில் நண்பர் இரா.இரவி முக்கியமானவர் மட்டுமல்ல, முதன்மையானவருங்கூட.
தமிழ்க் கவிதைப் பரப்பில் அவ்வப்போது நிகழும், குடுமிப் பிடி சண்டைகள் பற்றி கவலை கொள்ளாமல் தன்போக்கில் எழுதிவரும் அன்புக் கவிஞர் இரா.இரவியின் எளிமை நிறைந்த, வாசித்ததும் மனதைச் சுருக்கெனத் தைக்கும் தமிழ் ஹைக்கூ கவிதைகளை தமிழகத்திலிருந்து வெளியாகும் அனைத்து இதழ்களும் வாஞ்சையோடு தமது பக்கங்களில் பதிவு செய்துள்ளன.
இதுவரை ஏழு ஹைக்கூத் தொகுப்புகளும், ஒரு ஹைக்கூ நூல்கள் பற்றிய விமர்சனத் தொகுப்புமாக, தனது தொடர் பயணத்தைக் கவிப் பயணமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் கவிஞர் இரா.இரவியின் மனக் கிரீடத்தில் ஒரு மலர்க்கிரீடமாய் மலர்ந்திருக்கிறது...கவிஞரின் ஆயிரம் ஹைக்கூ கவிதைகளால் கோர்க்கப்பட்டிருக்கும் “ ஆயிரம் ஹைக்கூ” நூல்.
தமிழில் பேரியக்கமாய் பரந்து விரிந்திருக்கும் ஹைக்கூ கவிதை இயக்கத்தில், பல்லாண்டுகளுக்கு முன்னே ஆயிரம் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கும் முயற்சிக்கு அடியெடுத்துத் தர முன்வந்தார் அன்புக் கவிஞர் செய்யாறு மகா.மதிவாணன். ஏனோ காலம் அவரைத் திருடிக் கொள்ள, அம்முயற்சி கனியாமலேயே போனது.
தமிழில் கவிஞர் அக்கா முனைவர் மித்ரா அவர்களைத் தொடர்ந்து, இரண்டாவது கவிஞராக ஆயிரம் பாமாலைச் சூடி வருகிறார் கவிஞர் இரா.இரவி.
முன்பே படித்து, ரசித்து, ருசித்த- பகிர்ந்து கொண்ட பல நூறு கவிதைகளோடு, சில நூறு புதிய பூக்களும் நறுமணம் வீசி நம்மை ஈர்க்கின்றன.
ஹைக்கூப் பூக்களை அப்படியே அள்ளிக் குவிக்காமல், 20 தலைப்புகளின் கீழ்த் தொகுத்திருப்பது நல்ல முயற்சி. அதுவும், பலருக்கும் வாய்க்காத பேருள்ளம் கொண்ட எங்கள் கவிவிளக்கு அய்யா.முனைவர் இரா.மோகன் அவர்களின் தேர்ந்த வாசிப்பில் தலைப்பூச் சூடி, தேர்வு செய்யப்பட்ட கவிதைகளல்லவா... மோதிரக் கைகளால் அல்ல, கவி அன்னையின் அன்புக் கரங்களால் முன்மொழியப்பட்ட கவிமுத்துக்கள் வாசிப்பாளனின் மனசையும் வசப்படுத்தி விடுகின்றன.
“ தமிழ் வாழ்கிறது
அடையாளமாய்
புலம் பெயர்ந்த தமிழர்கள்.”
-எவ்வளவு பெரிய சமூக உண்மையை மூன்றே வரிகளில் சொல்லிப் போகிறார்.
“ ஏங்கியது குழந்தை
கதை கேட்க...
முதியோர் இல்லத்தில் பாட்டி.”
- மனசை ஈரங் கசிய வைத்த வரிகள்.
நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரணமான காட்சியும் இரவியின் கவிப் பார்வையில் அழகான ஓவியமாகிறது.
சாலையெங்கும் தண்ணீரை வீணாய்க் கொட்டிக் கொண்டு போகும் தண்ணீர் லாரிகளைக் கண்டு நாம் வெறுமனே திட்டியிருக்கின்றோம். இதோ... அதையே அழகான கவிதையாக இரவி தீட்டியிருக்கிறார்.
“ கோலமிட்டுச் சென்றது
வறண்ட சாலையில்
தண்ணீர் லாரி.”
- ‘நீர்த் தெளித்துச் சென்றது’ என்றிருக்கலாமோ... ஆனாலும், லாரி தெளித்துச் செல்லும் நீர்க்கோலம் கூட நவீன ஓவியமாய்த் தானே தெரிகிறது.ஓவியந்தானே கோலம், கோலம்தானே அழகான ஓவியம்.
ஆயிரங்கால் மண்டபத்தில் எந்தக் கால் அழகு என்று யாராவது சொல்ல முடியுமா...? “ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்கிற சொலவடையை விடுத்து, இனி இப்படிச் சொல்லலாம்... “ஆயிரம் ஹைக்கூவிற்கு மூன்று முத்துக்கள் பதம்” என்று.
அழகான அட்டையை வடிவமைத்த மதுரை அரிமாமுத்து, நூலழகுக்கு வடம் பிடித்த கவிஞர் கன்னிக்கோயில் இராஜா,184 பக்கங்கள் கொண்ட நூலை ரூ.100-க்கே மலிவாய்த் தந்திருக்கும் வானதி பதிப்பகம் என அனைவரையும் பாராட்டணும்.
இளைய படைப்பாளர்களின் புதிய கவிக் குஞ்சுகளை, வாஞ்சையோடு வாரியணைத்து தான் பேசும், எழுதும் எல்லாத் திசைகளிலும் கொண்டு போய் பெருமைப்படுத்துகிற என் பாசத்திற்கினிய அய்யா முனைவர் இரா.மோகன் அவர்கள், ”கணினி யுகத்திற்கான கற்கண்டுக் கவிதைகள்” என முன்மொழிந்துள்ளார், அய்யாவின் அடியொற்றி வழிமொழிவதில் நானும் பெருமை கொள்கிறேன்.
இத்தொகுப்பின் வ்ழியே பல பெருமைகளும், பரிசுகளும் கவிஞர் இரா.இரவியின் வாசலுக்கு வரவாக, என் வசந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
- என்றும் உங்கள் தோழன்...
மு.முருகேஷ்,
வந்தவாசி- 604 408.
[/ltr]
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: இனிய நண்பர் ,ஹைக்கூ முன்னோடி ,கவிஞர் மு .முருகேஷ் அவர்கள் ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு எழுதியுள்ள விமர்சனம் .
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இனிய நண்பர் ,ஹைக்கூ முன்னோடி ,கவிஞர் மு .முருகேஷ் அவர்கள் ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு எழுதியுள்ள விமர்சனம் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum