தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

2 posters

Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 17, 2013 9:14 pm

மெல்ல மெல்ல...
==========================================ருத்ரா

மெல்ல மெல்ல..
புல் தரை ஸ்பர்சிக்கிறது.
பட்டாம்பூச்சிகள் ஏறி ஏறி வழுக்கி
சருக்கி ஆடுகின்றன.
மேக்னா தீக்குழம்பும் தாண்டி
வெண்டைக்காய் பிஞ்சு விரல்களின்
நகப்பூச்சு
கிலு கிலுப்பையை
குலுக்குகிறது.
அதிலிருந்து ஒரு கள்ளச்சிரிப்பு
வெறுமைக்குள்ளும்
பூவாணம் சிந்துகிறது.
பொட்டு பொட்டு வெளிச்சங்களில்
"சரஸ்வதியின்" காய்ந்த உதடுகள்
ஈரப்படுத்திக்கொள்ளுகின்றன.
நாயுருவிகள் கூட‌
என் மேனி வருடி சப்திக்கின்றன.
காற்றின் அடுக்குகளில்
நுரையீரல் நந்தவனங்களில்
வழு வழுப்பாய் புரள்கின்றேன்.
பட்டம் விடும் சிறுவன் தடவிய‌
கண்ணாடித்தூள் கயிற்றில்
ஏதோ ஒரு தொப்பூள் கொடி
மனித நாற்றத்துடன் ரோஜாவின் கூழ் காய்ச்சி
பூசியிருக்கிறது.
கழுத்து அறுபட்டால்
வானத்துக் கழுத்து நரம்புகள் புடைத்து
ஓசை கிளப்பும்.
ஜாக்கிரதையாய் தழுவுகிறேன்.
சப்பாத்திக்கள்ளியின்
சிவப்பு பூக்குண்டு முள் சிலுப்பி 
முணு முணுக்கிறது.
என் மீது அப்பிக்கொண்ட‌
தட்டான் பூச்சியின் கண்ணாடி சிறகுகள்
என் மகாநிர்வாணத்துக்கு
ஆப்டிக் ஃபைபரில் பிக்கினி உடுத்துகிறது.
சிறு சிறு வெடிப்புகளின்
நீர்க்கூந்தல்களில் நங்கூரம் பாய்ச்சுகிறேன்.

அவள் தம்பி பொடிப்பயலுக்கு
அவள் சுவாசத்தில் இருந்த என் சுவாசத்தையும்
மௌன முத்தங்களால்
ஊதி நிரப்பி விட்ட‌
வண்ணப் பலூனின் பவனி இது.
உடையும் வரை உலவட்டும்.
உடையாமல் அவள்
உதட்டுத்தீவிலேயே இறங்கட்டும்.
உள்ளே ஒரு அண்டம்.
வெளியே வெறும் சோடா மூடி.
இதிலா
என் ஏழுகடல்கள் அலை குளிக்கும்?
உருண்டு கொண்டே இரு.
உருளும் திஹார்க்கூடம்
அவள் கட்டிய கட்டிடம் இது.
விடுதலை 
அவள் மெஹந்திப்பஞ்சு மேகங்களின்
விளிம்புக்கூர்மைகளில்.

பூமிக்குள்ளும் கேட்கும் அவள் லப்..டப்.
வாய்ஸ் சிந்தசைசரில் 
அவள் சொல்கிறாள்
ஐலவ்யூயூயூ..டா.....டா...!

================================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 17, 2013 9:15 pm

அரிசி பரப்பிய தட்டில்...
=======================================ருத்ரா

அரிசி பரப்பிய தட்டில்
ஆனா ஆவன்னா
எழுதிய விரல்கள்
அஹ்ஹன்னா 
(அஃகன்னா)
என்று முடிந்தது.
எல்லா எழுத்துக்களையும்
கூட்டிச்சேர்த்து
ஒற்றுமை காட்டும்
எழுத்து
எப்படி இங்கு
கத்தியும் அம்பும்
என்று 
பொருள் சொன்னது?
ஆயுதம் என்று
சொன்னவர்கள்
ஆரியப்படை 
கடந்தவர்களா?
ஆரியப்படை
ஆனவர்களா?
ஆராய்ந்து சொல்வீர்!
அன்பே உள்விசை
அதனால் தானே
வள்ளூவன் சொன்னான்
"என்பும் உரியர் பிறர்க்கு."
ஆரிய எழுத்து
கூரிய பொருளில்
வந்ததால் தான்
ஆயுதம் இங்கு
அச்சம் தந்தது.
ஆயுத பூசை..வெறும்
அரிவாளுக்கு இல்லை.
ஆட்டோக்கள் எனும்
அன்பின் சக்கரம்
ரோட்டில் உருளும்
அன்றாட பூசை
மக்கள் குரலே
மகேசன் குரலாய்
ஒலிக்கும் மரபு
ஓங்கட்டும்.
கருவி என்ற‌
கருத்தை மாட்டும்..இனி
விதைப்போம்..இந்த‌
விழாக்களிலே.
மானிட நேசம்..எனும்
இதயக்கருவி
என்றும் காப்போம்.
இன்பம் சேர்ப்போம்.

=====================================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 17, 2013 9:17 pm

"யாரும் இல்லாத‌ இடத்துக்கு வா "
===========================================ருத்ரா

யாரும் இல்லாத‌ இடத்துக்கு வா என்றாய்.
அது எந்த இடம்.
இந்த இடமா?
திசைகள் பெயர் வைக்கப்படாத‌
யுகத்தை சேர்ந்த இடமா இது?
கிழக்கு என்பதன் அர்த்தத்தை
சூரியன் இன்னும்
சொல்லிக்கொடுக்க வரவில்லை.
மேற்கு எனும்
தலையணை தேடும்
அவன் யாத்திரையும்
இன்னும் தொடங்க வில்லை.
பெருமாள் நாபியின் தூம்பாக்குழியில்
பிரமனுக்கு இன்னும் 
தாமரை
தண்டு நீட்டவில்லை.
இது எந்த யுகம்?

விடிவின் சிவப்புப்பிழம்பு
மண்ணின் அடிவயிற்றைத் தோண்டிய‌
இடம் இது.
ஆறேழு மாதமாய் அப்படியே
நிற்கிறது.
பூமியின் உச்சிக்குடுமியில்
சிக்கிக்கொண்டேனா?
எல்லாம் அப்படியே நிற்கிறது.
பார்க்கும் இடம் இளஞ்சிவப்பும்
வெளிர் ஊதாவுமாய்
அந்த வானக்கருப்பையிலிருந்து
பிதுங்கி வழிகிறதே.
கடிகாரம் இறந்து கிடக்கிறது.
இராமாயணத்து மராமரம்
இன்னும் முளைக்கவே இல்லை.
பாஞ்ச ஜன்யம்
புடைத்து ஊதும்
கன்னங்களும் இங்கு தோன்றவே இல்லை.
உலக அளவு இராட்சத‌னின் உடல்
வெள்ளை வெள்ளையாய்
பிண்டங்களாய் திரண்டு கிடக்கின்றன.
மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தான்
இதை "பனிக்கண்டம்"
என்று அழைக்கப்போகிறார்கள்
இங்கேயா
பேசிக்கொண்டிருக்க‌
என்னை அழைத்தாய்?

பனிப்பிழம்புக்குள்
கோரைப்பற்களின் வாய் பிளந்திருக்க‌
கண்கள் என்ற பெயரில்
பெரிய்ய்ய்ய்ய கருப்புக்கோளங்கள்
தட்டையாய் நசுங்கி
பனிக்குள் லேமினேட் ஆகியிருக்க‌
பல நூறு அடிகளுக்கு நீண்டு
முட்குஞ்ச வால் துருத்தி
ரம்பநாக்கு நீண்டு
அதே வெட வெடப்பில்
பிசைந்து கிடக்க‌
இந்த இடத்திலா
"ஐ லவ் யூ" சொல்லக்கூப்பிட்டாய் ?
காதலுக்கு
கண் இல்லை.
காலம் இல்லை.
இடம் இல்லை.

காலும் இல்லையோ..

ஐயோ என்று நான் பதறி ஓட‌
பிடறியில்
ஒரே அடி.

காட்சி மாற்றம்.
வானம் வரை நாக்கு நாட்டி
நக்கிக்கொடுக்கும் மரங்கள்.
நிழல் கூட கெட்டித்து
நுழைந்தால் 
மூக்கு உடைந்து போகும்
அடர் காடு.
மனிதக்குடல்களை நீண்டு தொங்கவிட்டாற்போல்
அது வேரா?கிளையா? விழுதா?
அகன்ற அகன்ற இலைகள்.
ஊசிப்பற்களாய்
பூதாகராமாய் விரிந்து விரிந்து
அசையும் பெரணி இலைகள்.
இது என்ன?
ஜுராஸிக்கா?
ட்ரையாசிக்கா?

உறுமல் ஒலிகளைத்தொடர்ந்து
பாறாங்கல் மழை.
மலைப்பள்ளத்தாக்குத் தொட்டிலில்
பெரும்பல்லிகள்.

உன் நினைப்பில்
ஊதிப்படர்ந்தேன்.
எங்கே இருக்கிறாய்.
தெரியவில்லை.
குமிழிகள் ஊதினேன்.
உன் சுவாசமும் என் சுவாசமும்
அயனோஸ்பெரிக் மண்டலமாய்
விம்மியது.

அந்த பெருங்காட்டில்
பூகம்பம் இல்லாமலேயே
பூமி அதிர்ந்தது.
நானும் கூட உதிர்ந்துபோனேன்.
சவ்வுப்படலமாய்
வீசியெறியப்பட்டேன்.
அந்த ஐந்து பெருங்கொம்பன்
கத்தி நுனிகளில்
கழுவேறிக்கிடந்தேன்.
பென்டோசெரோடாப்ஸ்
டைனொசார்
முகக்கொம்புகளில்
அந்த நரசிம்மவதாரம்.
கனவின் ஈரல்கள் ரத்தச்சகதியில்..
சொர்க்க ஊஞ்சல்கள்
பாடின சொதப்பல் ராகங்கள்.
மயில்பீலிகள் போல்
மனத்தில் குட்டிபோட்ட‌
என் மின்னல்கள் கூட
வெட்டி வெட்டி ஒளி உமிழ்ந்ததில்
இருள் கலந்த சதுப்புக்காடுகள்.
கால் வேறு கை வேறு கனவு வேறாய்
ஃப்ராக்டல் ஜாமெட்ரியின்
ஜூலியா நெளிவுகளாய்
இறைந்து கிடந்தேன்.

"யாரும் இல்லாத இடத்துக்கு வா"
குரல்கள்
ஊளையிட்டுக்கொண்டே இருக்கின்றன.
மில்லியன் ஆண்டுகளை
இழையாக்கிய அந்த‌
பூத சிலந்தி பின்னோக்கித்துப்பியதில்
போய் விழுந்து கிடக்கிறேன்.
என்னை சுருட்டி சுருட்டி
அது அல்வா போல 
விழுங்குவதற்குள் சொல்லிவிடு
நீ எங்கே இருக்கிறாய்?

"யாருக்கும் கேட்காத ஒலிப்பிளவுக்குள் வா"
எனக்கு கேட்கிறது.
ஹேரி பாட்டரின் 
"ஒண்ணரை"பிளாட்பாரத்துக்குள்
பிளக்க வேண்டியது தான்
ஒரு தூணை.
ரயிலே..ரயிலே..

படுக்கையில் வீழ்த்தப்பட்டேன்.
காதலின் வலிக்கு
எத்தனை டிகிரி என்று
டாக்டர் கேட்டார்.
பாதரசக்குமிழிகள்
பேந்த பேந்த விழித்தன.

=============================================ருத்ரா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 17, 2013 9:18 pm

கொலு பார்க்கலாம் வாருங்கள்
====================================ருத்ரா

பொம்மைகள் எல்லாம்
பொம்மை வைத்து
விளையாடும் கூத்தே
கொலு வென்பது.

புராணப்பொம்மை
புதுமைப் பொம்மை
அஷ்ட லக்ஷ்மி
பொம்மைகளாம்.

அந்த லக்ஷ்மி
இந்த லக்ஷ்மி ..சரி
அர்த்தம் என்ன‌
லக்ஷ்மிக்கு?

பணம் பணம்
பணம் என்றே
மொழி பெயர்த்து
கொள்ளுங்கள்.

அந்த கறுப்புப்பண‌
லக்ஷ்மி பொம்மை
கண்ணில் காண‌
முடியலே.
 
நரசிம்மப் பொம்மை
கிழித்த குடலில்
ரத்தம் சிந்திக்
காட்டுமாம்.

மாறுபட்டதால்
சூரர் ஆனார்
வதைப்பதற்கே
தெய்வங்களாம்.

எத்தனையோ 
பொம்மைகள்
எத்தனையோ
காட்சிகள்.

புத்தர் அருகே
போதி மரம்.
சரணம் சரணம்
கேட்டிடுமாம்.

இலங்கையின்
போதி மரம்
தமிழர்களுக்கோ
பீதி மரம்.

பட்டாபிஷேகம்
ராமனுக்கு.
தீஅபிஷேகம்
சீதைக்கு.

நம் பொய்மை கண்டு
உறைந்த உண்மை
கொலுவாய் ஆனது
பொ(ய்)ம்மைகளாய்.

பசுக்கள் மட்டும்
மாதாவாம்
எருமைகள் இங்கே
அரக்கன்களாம்

நான்கு எருதுகள்
ஒற்றுமையாய்
சிங்கம் கொன்ற‌
கதையுண்டு.

சிங்கத்தில் ஏறி
சூலம் கொண்டு
எருமை கொன்ற‌
கதை எதற்கு?

நாளை இந்த‌
பொம்மை எல்லாம்
பத்திரமாக‌
பரண் ஏறும்

என்றும் முடியா
கொலு ஒன்று
நம்மிடையே
வீற்றிருக்கும்.

பஞ்சம் பசி
பட்டினி
நோய் நொடிகள்
ஆயிரம்.

லஞ்சம் எனும்
வர்ண வர்ண‌
பொம்மைகளும்
ஆயிரம்.

இவை தின்று
தீர்க்கும் காட்சியே
இந்தியாவின்
சுதந்திரம்.

ஐந்தாண்டு
ஐந்தாண்டாய்
சாவி கொடுத்த‌
பொம்மைகள்.

அறுபது ஆண்டுக்கும்
மேலாக‌
நடக்கும் கொலு
இதுவே தான்.

கொடி ஏற்றி
கொடி இறக்கி
விறைப்பாய்..சல்யூட்
அடிக்கிறோம்.

இன்று வரை
தூக்கத்தில் 
நடக்கும்
வியாதி நமக்கு.

இந்த‌
சோம்னாம்புலிஸம்
இருக்கையிலே
சோசியலிஸம்
நமக்கெதற்கு?

==========================================ருத்ரா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 17, 2013 9:19 pm

இதயம் துடிக்கும்
===================================ருத்ரா

நூறு ரூபாயில்
தெரியும் புன்னகை
சொல்லும் நம்மின்
சுதந்திர மாளிகை.

நான்கு வர்ணம்
தகுமோ என்றான்
தாழ் ஜனம் எல்லாம்
ஹரிஜனம் என்றான்.

வெள்ளையன்
தந்ததை
மூவர்ணம்
ஆக்கினோம்.

அடுத்தவர் மதமும்
நம்மவர் மதம் தான்
மானுடமே உயர்
மதமெனச் சொன்னான்.

ரகுபதி ராகவன்
ஈஸ்வரன் அல்லா
எப்பெயருள்ளும்
ஒலிப்பது அன்பே.

ஒவ்வொரு தோளிலும்
சிலுவைகள் உண்டு.
ஒவ்வொரு கையிலும்
தொழுகைகள் உண்டு.

ஆழ்ந்த தியானம்
உளந்தனை நூற்கும்
குவிந்த சிந்தனை
இமயங்கள் நகர்த்தும்.

கோடிக் கோடி
கைகள் உண்டு.
கிராமத்தொழிலே
நம் செல்வம்.

துப்பாக்கி காட்டி
விலங்குகள் பூட்டியும்
வதைபல செய்தான்
கும்பினியாளன்.

ஒருகுரல் எடுத்து
ஓங்கிச்சொன்னோம்
வந்தேமாதரம்
வந்தேமாதரம்

அணுப்போர் பூதம்
அகிலம் எல்லாம்.
அப்போது எழுப்பியது
புகை மண்டலம்.

அண்ணல் எழுப்பிய‌
அறப்போர் கண்டு
மேலையர் எல்லாம்
கீழோர் ஆனார்.

உப்பை வைத்தொரு
சத்தியாகிரகம்.
குப்பை ஆனது
வெள்ளையன் சட்டம்.

தண்டி யாத்திரை
தர்மத்தின் யாத்திரை.
கடலே அஞ்சிய‌
காவிய சுநாமி.

தேவகுமாரன் 
காட்டச்சொன்ன‌
இன்னொரு கன்னம்
இருந்தது இங்கே.

வெள்ளையன் வெட்கிட‌
இந்தியன் வென்றிட‌
புதிதாய் சரித்திரப்
பக்கம் புரட்டினோம்.

"வெளியேறு" என்றொரு
வேள்வி துவக்கினான்
அன்பின் முனிவன்
அண்ணல் காந்தி.

மக்கள் வெள்ளம்
மக்கள் வெள்ளம்
வெள்ளைச் சேனை
வெல வெலத்ததுவே.

பீரங்கிகள் தீனியாய்
பிய்ந்து விழும்போதும்
நம் சுதந்திர தாகமே
தீப்புயல் ஆனது.

வெற்றி என்ற 
மூன்றெழுத்தின்
நடுவெழுத்து
நகர்ந்து கொண்டது.

வெறி ஒன்று நம்மிடை
வேடம் போட்டது.
சத்தியன் மார்பு
சல்லடை ஆனது.

இன்றும் கேட்கிறோம் 
ரத்தவாடையின்
சத்தம் கேட்கிறோம்.
சத்தம் கேட்கிறோம்.

சரிந்திட மாட்டோம்.
உதிர்ந்திட மாட்டோம்.
மகாத்மா எனும்
மாபெரும் ஆயுதம்
நம்மிடை உண்டு
சாய்ந்திட மாட்டோம்.

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
எல்லா மொழியும்
இதிலே ஒலிக்கும்
மொழிபெயர்த்துக் 
கேட்டாலும்
இந்தியா என்றே
இதயம் துடிக்கும்.

=======================================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 17, 2013 9:19 pm

கிம்பர்லிகளைக் காணவில்லை
==============================================ருத்ரா.

நான் தேடியது அன்று திடீரென்று கிடைத்தது.
நைந்த என் பழைய கால் சட்டை.
வார் (பட்டை) வைத்து தைத்தது.
வால்கள் அறுந்து கிடக்கின்றன.
ஒரு தீபாவளிக்கு அது புது ஆடை.
எண்ணெய்ப்பிசுக்குடன் அதற்குள் இருந்து
அன்று ஊசி வெடி வெடித்தது
இன்னும் ஊசிப்போகவில்லை.
அந்த துணியில் என் சரித்திர வாசனை.
பழுப்பு நிறம் இப்போது வெளிறியிருந்தது.
ஆற்றங்கரைக்கல்லில்
அந்த வாரைப் பிடித்துக்கொண்டு
அடித்து அடித்து துவைத்து
கசக்கி வைத்து விட்டு
சில முக்குளிகள் போட‌
அந்த முட்டளவு ஆழத்தில்
படுத்துக்கிடப்பேன்.
பாய் போல ஆறு கிடப்பதும்
அதில் புரண்டு குளிப்பதும் சுகம் தான்.
மறுபடியும் கசக்கி வைத்திருந்த‌
கால் சட்டை ஞாபகம் வந்துவிடும்.
மறுபடியும் அதை அடி அடியென்று அடித்து
அப்புறம் அலசி பிழிந்து
படிக்கல் மூலையில் அழுக்குப்படாமல்
வைத்து விட்டு
மறுபடியும் ஆற்றில் "விரால்"பாய்வேன்.
இவ்வளவும்
அம்மணத்தில் தான்.
அம்மணத்தின் மணம் தெரியாமலேயே..
பிஞ்சு வாழ்க்கையின் வாசனை அது.

அன்றொரு நாள்
என் சேக்காளியோடு
செப்பு விளையாட்டு.
வண்ண வண்ணமாய் கடைந்த‌
சின்ன சின்ன சட்டிகள்.
ஆப்பைகள்.தட்டுகள்.
அம்மிக்கல் திருவைகள் எல்லாம் தான்.
சமைத்து விட்டாளாம்.
ஆப்பையில் கிண்டினாள்.
நான் குத்தவைத்து உக்காந்திருந்தேன்,
தட்டு வைத்தாள்.
"சாப்பிடலாம் வா.."
குச்சியில் செருகி சின்னஞ்சிறிதாய்
செய்திருந்த ஆப்பையை
சிவப்பும் பச்சையுமாய் செய்திருந்த
அந்த சின்ன சருவச்சட்டியில்
கிளறி கிளறி
என் முன்னே உள்ள‌
இன்னொரு மஞ்சள் வண்ண கடைசலின்
சிறு தட்டில்
சோறு போட்டாள்.
சுடுதா?
பிஞ்சுவிரல்களை
விசிறியாக்கினாள்.
சோறும் இல்லை.பசியும் இல்லை.
அங்கே பாவனை மட்டுமே நிஜம்.
"டேய்..சம்மணம் போட்டு உக்கார்.
எல்லாந்தெரியுது!"
வெடிச்சிரிப்பு செய்தாள்.
குட்டைக்கவுனில்
சில சமயம் அவளும் தான்
அப்படியெல்லாம் உக்காந்திருக்கிறாள்.
எனக்கு ஒண்ணும் வெளங்கல.
இப்படி
நான் சிரிக்கணும்னு கூட தோணல.

சின்னஞ்சிறிசுகளாய்
அந்த சிற்றில் விளையாட்டில் கூட 
அவள் உருவில்
மாயமாய் ஒரு சின்னக்கிருஷ்ணன்
தன் சின்ன கீதையில்
காட்டிய விஸ்வரூபமா அது?

கன்னத்தில் குழிவிழ‌
கண்கள் கருந்திராட்சையின்
ஈர நைப்புடன் சிமிட்டிக்கொள்ள‌
அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்.
சீ சீ என்று சொல்லிக்கொண்டே!
குமுக்கு சிரிப்பு.
ஏன்?
அது கெட்ட வார்த்தையாம்.

கெட்ட வார்த்தைகளிலிருந்து தான்
வாழ்க்கையின் 
நல்ல அர்த்தங்கள் ஆரம்பிக்கின்றன‌
என்று 
இனிப்பாய் இப்படியொரு 
வெடிப்பூ.சிரிப்பா?

அந்த
எட்டு ஒன்பது வயதுக்கு
எட்டுமா "எட்டுத்தொகையின்"
கலிப்பாக்களும் அகப்பாக்களும்?
மின்னல் பூசாத‌
மூளி வானச் சித்திரங்கள் அவை.

"அந்த வினாடிகள்"
பெருங்கடலில் கரைந்து கிடக்கின்றன.
இந்த துளிகளை
வைரமுத்து சொன்னது போல்
எந்தக்கடலில் தேடுவது?

உள்ளத்தின் தூய்மையான‌
அந்த துள்ளல்களை
எங்கே தேடுவது?

துடிப்புகளை மட்டுமே
வாரி வாரிக்குவித்து
சம்பாதித்துக்கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கைக்கு இன்னும்
சுரங்கம் வெட்டிக்கொண்டு தான்
இருக்கிறோம்.

"கிம்பர்லி"களை இன்னும்
காணவில்லை.

============================================ருத்ரா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 17, 2013 9:20 pm

பளிங்கினால் ஒரு ஆலயம்.
==============================================ருத்ரா

ஒன்று 
உதடு குவித்து
ஒன்றே ஒன்று தா
ஒரு சொல் உதிர்த்து....

என்று நான் முடிக்குமுன்னே
ஒன்று தந்தாய் கன்னத்தில்
ஐவிரல்களால்..
பளார் என்று.

நீ என்ன நினைத்தாயோ
அதைத் தந்திருந்தால்
அந்த ஒரு கணம் போதும் என்று
கல்லறைக்குள் போய்
படுத்துக்கொள்வேன்.

நான் நினைத்த‌
"ஆமாம்"
என்ற ஒரு சொல்விதை
ஊன்றியிருந்தால்
மகிழ்ச்சியில்
இந்த பிரபஞ்ச பலூனே
வெடித்து சிதறும் அளவுக்கு
விம்மிப் பரந்த தொரு
விருட்சம் ஆகி யிருப்பேன்.

என்னைக் காதலிக்கிறாயா?
என்ற கேள்வி தானே
நான் கேட்டது.

உன் இதயத்தில்
நான் கேட்ட அறையை
உன் விரல்களில்
நீ கட்டித்தந்திருக்கிறாய்.

பூமி பூஜை என் கன்னத்தில்.
காத்திருக்கிறேன்
பளிங்கினால் கட்டப்போகும்
நம் ஆலயத்துக்கு.

=======================================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 18, 2013 11:10 am

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum