தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



படித்த சிறு கதைகள்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

படித்த சிறு கதைகள்  Empty படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:34 pm

துணிச்சல்
****************
சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் தன நண்பரின் வீட்டில் இருந்தார்.அவரைத் தேடி போலீஸ் நண்பர் வீட்டுக்கு வந்து விட்டனர்.அப்போதுஆசாத் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.போலீசிடம் நண்பர்,ஆசாத்தைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் மனைவி ஆசாத்தைப் பார்த்து,''பண்டிகை தினமும் அதுவுமாய் இப்படி சோம்பேறித்தனமாய்உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே!இனிப்பு பலகாரங்களை எல்லாம்எடுத்துக் கொண்டு போய் நண்பர்கள் வீடுகளில் கொடுக்க வேண்டாமா?''என்று வேலைக்காரனிடம்ஆணையிடுவது போல சொல்ல.புரிந்து கொண்ட ஆசாத்,இனிப்புகளை எடுத்துக் கொண்டு வெளியே சென்று அப்படியே தப்பிச் சென்று விட்டார்.அந்தப் பெண்மணியின் அபார துணிச்சல்,விசுவாசம்,தேசப்பற்று ஆசாத்தை அன்று காப்பாற்றியது.

நன்றி ; இருவர் உள்ளம் தளம் 

படித்த சிறு கதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:35 pm

பரிசின் பொருள்
*********************
வீர சிவாஜி,தன குருவான ராமதாசரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.ஒரு முறை சிவாஜி ராமதாசருக்கு ஏராளமான பொன்னும்,மணியும் பரிசாக அனுப்பினார்.அவற்றைப்  பெற்ற ராமதாசர்,கையளவு மண்,சில கூலாங்கற்கள்,கொஞ்சம் குதிரை சாணம்,ஆகியவற்றை சிவாஜிக்கு பரிசாக அனுப்பினார்.அதைப் பார்த்த அனைவரும் கோபப்பட,சிவாஜி மட்டும் புன் முறுவலோடு சொன்னார்,''என் குரு தீர்க்க தரிசனத்துடன் அனுப்பிய பொருட்கள் இவை.இந்த மண்,முகலாயரின் ஆதிக்கத்திலிருந்து நாடு முழுவதையும் நான் ஜெயிப்பேன்,என்பதைக்  குறிக்கிறது.கூலாங்கற்கள்,எனது நாட்டை வலிமை மிக்க கோட்டைகளால் பாதுகாப்பேன் என்று காட்டுகின்றன. குதிரையின் சாணம்,எண்ணற்ற மாவீரர்கள் அடங்கிய குதிரைப் படையை நான் அமைப்பேன் என்பதை உணர்த்துகிறது.''

நன்றி ; இருவர் உள்ளம் தளம் 
படித்த சிறு கதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:36 pm

வேட்டை நாய்
************
ஒரு வேட்டை நாய் கிராமத்தைக் காவல் காத்து வந்தது.ஒரு நாள் அது தன குட்டியுடன் சென்று கொண்டிருந்தது.அப்போது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய்கள் வேட்டை நாய்களைப் பார்த்து குலைத்தன.வேட்டை நாயோ அதனை கருத்தில் கொள்ளாது தன வழியே சென்று கொண்டிருந்தது. குட்டி நாய்,தாயிடம் கேட்டது,''அவை குலைப்பதை கேட்டுவிட்டு ஒன்றும் செய்யாது வருகிறாயே?அந்த நாய்களைக் கடித்துக் குதற வேண்டாமா?'' வேட்டை நாய் பதில் சொன்னது,''அப்படி செய்யக் கூடாது.தெரு நாய்கள் இருப்பதால் தான் வேட்டை நாய்களான நமக்கு உயர்ந்த மதிப்பு இருக்கிறது.எனவே அவற்றை ஒன்றும் செய்யக்கூடாது.''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:38 pm

இறை வணக்கம்
*****************
நபிகள் நாயகம் மதீனாவில் ஒரு பள்ளி வாசலுக்கு செல்லும் போதெல்லாம்  ஒரு மனிதர் எப்போதும் இறை வணக்கத்தில் ஈடு பட்டிருப்பதைக் கவனித்தார். அவரைப் பற்றி விசாரித்தபோது அவர் சிறந்த பக்திமான் என்றனர்.இரவும் பகலும் இறை வணக்கத்திலேயே அவர் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவர் குடும்ப செலவுக்கு என்ன செய்கிறார் என்று நபிகள்  கேட்டார்.அருகிலிருந்தவர் சொன்னார்,''அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.அவர் விறகு வெட்டி வியாபாரம் செய்கிறார்.அவர் தான் இவருடைய தேவைகளையும் கவனித்துக் கொள்கிறார்.''நபிகள் உடனே சொன்னார்,''இரவும் பகலும் இறைவனை வழி படும் அந்த நண்பரிடம் சொல்லுங்கள்.இவரைக்காட்டிலும் விறகு வெட்டிப் பிழைக்கும் இவரது அண்ணன் ஆயிரம் பங்கு மேலானவர்.குடும்பத்தின் தேவைக்கு நியாயமான வழியில் சம்பாதிப்பது சிறந்த இறை வணக்கம்தான் என்று அவருக்கு எடுத்து சொல்லுங்கள்.''பெருமானாரின் கூற்றை அறிந்த அந்த பக்தர் அன்று முதல் தமது அண்ணனுக்கு உதவியாக விறகு வெட்ட ஆரம்பித்தார்.ஓய்வு கிடைத்தபோதெல்லாம் இறை வணக்கத்தில் ஈடுபடலானார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:39 pm

[You must be registered and logged in to see this link.]

இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.ஒரு கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மக்களில் பத்து பேர் மழைக்காக அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தில் ஒதுங்கினார்கள்.அவர்களில் ஒருவர் ஜோஷ்யர்.அவர் சொன்னார்,''இங்குள்ளவர்களில் ஒருவருக்கு நேரம் சரியில்லை ஆகவே அவர் தலையில் சிறிது நேரத்தில் இடி விழப்போகிறது.''இதைக்கேட்டு அனைவருக்கும் பயமாகிவிட்டது,நேரம் சரியில்லாத ஒருவரால் அவ்வளவு பெரும் பாதிக்கப் படுவதா?அந்த ஆள யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?  இறுதியில் ஒருவர் சொன்னார்,''இந்த வயதான கிழவன் தான் நேரம் சரியில்லாத மனிதன் போலத் தெரிகிறது.எனவே நாம் அவரை இங்கிருந்து வெளியே விரட்டி விடுவோம்.''அனைவரும் ஆமோதித்தனர்.கிழவர் வேறு வழியில்லாது,இருமிக்கொண்டே மெதுவாக அங்கிருந்து வெளியே சென்று  ஒரு மரத்தடியில் நின்று கொண்டார்.அப்போது ஒரு பெரிய இடி இடித்தது. கிழவர் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டார்.சிறிது நேரம் கழித்து கண்ணைத்  திறந்து பார்த்தபோது அந்த பழைய கட்டிடம் இடி விழுந்து தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 30, 2013 5:03 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 30, 2013 6:05 pm

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 30, 2013 6:05 pm

தாயன்பு
******
தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள்.அவள் குழந்தை பக்கத்தில் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது.வேலை மும்மரத்தில் தாய் சிறிதுநேரம் குழந்தையைக் கவனிக்க வில்லை.திடீரென ஞாபகம் வந்து பார்த்தபோது குழந்தை கைபிடியில்லாத ஒரு கிணற்றின் விளிம்பருகே நின்று  கொண்டிருந்ததைக் கவனித்தாள்.அடுத்து ஒரு அடி எடுத்து வைத்தாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும்.கூட இருந்தவர்கள் பதைபதைத்தார்கள்.தாய் சிறிது கூட யோசிக்காமல் கொஞ்ச தூரம் மெதுவாக நடந்துசென்று,குழந்தையைப் பார்த்து,''பாப்பா,அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டேன்.நீ வருகிறாயா,இல்லையா?''என்று சப்தம் போட்டு சொன்னாள்.அடுத்த நிமிடம் குழந்தை திரும்பிதாயைப் பார்த்து ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டது.தாயன்பு தானே அந்த இக்கட்டானநேரத்தில் சமயோசிதமாக சிந்திக்க வைத்தது.

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 30, 2013 6:10 pm

தெரியாதது
************
சாது ஒருவர்  புத்தரைப் பார்க்க வந்தார்.அவர் புத்தரைப் பார்த்து,''உங்களைப் போல ஒரு புத்தரை நான் பார்த்ததில்லை.உங்களைப்போல அறிவிலும் ஞானத்திலும் சிறந்த வேறொருவர் உலகில் இல்லை.''என்று புகழ்ந்தார்.புத்தர் புன்முறுவலுடன்,''நீங்கள் எத்தனை புத்தரைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள்?அவர்கள் என்னளவிற்கு இல்லை என்றீர்கள்.அவர்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.அவர்கள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள்?.''என்று கேட்டார்..சாதுவோ இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை.பதில் சொல்ல  இயலாமல்  தயங்கினார்.புத்தர் சிரித்துக் கொண்டே,''பரவாயில்லை,உங்களுக்குத்தான் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று சொன்னீர்கள் அல்லவா?என்னைப்பற்றியாவது சொல்லுங்கள்.நான் எப்படி வாழ்கிறேன்?''என்று கேட்டார்.அதற்கும் பதில் சொல்லத்தெரியாது அந்த சாது அமைதி காத்தார்.பின் அங்கிருந்து வெளியே சென்றார்.
 தெரியாத விஷயத்தில் மௌனம் காப்பதுதான் சிறந்தது.

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 30, 2013 6:13 pm

துர்நாற்றம்
*****************
சுபி ஞானி ஒருவரிடம் ஒரு விவசாயி வந்தான்.''ஐயா.என் மனைவி வீடு முழுவதும் ஆடு,மாடு,கோழி என்று வளர்க்கிறாள்.அதனால் வீட்டிற்குள் நுழைந்தாலே ஒரே துர்நாற்றமாக இருக்கிறது.இதற்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.''என்று அவன் ஞானியிடம் சொன்னான்.அவன் வீட்டைக் கவனித்த அந்த ஞானி சொன்னார்,''உன் வீட்டில் தான் ஜன்னல்கள் இருக்கின்றனவே?அவற்றை ஏன் மூடி வைத்திருக்கிறாய்?ஜன்னலைத் திறந்து விட்டால் காற்று நன்றாக வரும்.துர்நாற்றமும் போய்விடும்.''உடனே விவசாயி பதற்றத்துடன் ,''ஐயையோ,ஜன்னலைத் திறந்து விட்டால்  என் புறாக்கள்  எல்லாம் பறந்து போய்விடுமே?''என்றான்.
அதிக முக்கியத்துவம் இல்லாத புறாக்களுக்காக ஜன்னலைத் திறக்காமல்  துர் நாற்றத்தை அவன் சகித்துக் கொள்கிறான் அதே போல நாமும் முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை எண்ணிக்கொண்டே நமது அறிவு என்னும் ஜன்னலை திறவாதிருக்கிறோம் அதன் விளைவு தான் மன அழுத்தம்.

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 30, 2013 6:14 pm

பயிற்சி
*******
ஒரு திருடனுக்கு வயதாகி விட்டது.அவன் மகன் ,தனக்கு திருட்டுத் தொழில் செய்ய பயிற்சி கொடுக்குமாறு கேட்டான்.திருடனும் அன்றிரவே மகனை  ஒரு வீட்டிற்குத் திருட அழைத்து சென்றான்.அந்த வீட்டின் ஒரு அறையைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று மகனைப் பார்க்க சொன்னான்.அந்த அறைக்குள் மகன சென்றதுமே அறையை சத்தத்துடன் மூடி வெளியில் தாழ்ப்பாளும் போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டான்.சத்தம்கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் விழித்து விட்டனர்.
மாட்டிக்கொண்ட மகன் பயந்து போனான்.ஒரு நிமிடம் தந்தையின் மீது அவனுக்குக் கோபம் வந்தது.மறு நிமிடம் அங்கிருந்து எப்படி தப்பிச் செல்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.உடனே ஒரு பூனையைப் போல சப்தமிடத் துவங்கினான்.அதைக் கேட்ட,ஒரு வேலைக்காரன்,அறையின் உள்ளே மாட்டிக் கொண்டிருக்கும் பூனையை வெளியே கொண்டுவரக் கதவைத் திறந்து வைத்தான்.கதவு திறந்ததும் திருடனின் மகன் வேலைக்காரனை தள்ளிவிட்டு வெளியே ஓடினான்.எல்லோரும் அவனைத்  துரத்தினர். வீட்டின் சுற்றுச் சுவர் அருகே வந்தவன் அங்கு ஒரு கிணறு இருப்பதைப் பார்த்து அதற்குள் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு இருளில் மறைந்து கொண்டான்.ஓடி வந்தவர்கள் அவன் கிணற்றில் குதித்து விட்டான் என்று கருதி அது பெரிய கிணறு என்பதால் அதில் மூழ்கி இறந்து விடுவான் என்று நம்பி மெதுவாக வீட்டிற்குள் திரும்பினர்.அவர்கள் சென்றதும் அவன்  வீட்டை விட்டு  வெளியேறினான்.தன தந்தையின் செயல் தனக்கு பயிற்சி கொடும்பதர்காகத்தான் என்பதனை உணர்ந்த அவன்,முதல் தேர்விலேயே தான் எப்படி வெற்றி பெற்றோம்என்பதை தந்தையிடம் விளக்க வேண்டும் என்ற ஆசையுடன் வீட்டிற்கு வந்து தந்தையிடம் சொல்ல ஆரம்பித்தான்.தந்தை சொன்னான்,''கதை எல்லாம் எதற்கு?இப்போது நீ இங்கே இருக்கிறாய்.அதுவே போதும்,நீ என் தொழிலைக் கற்றுக் கொண்டு விட்டாய்.எனக்கு மகிழ்ச்சி.''

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 30, 2013 6:17 pm

முறை என்ன?
*********************
ஒருவன் தன நாய்க்குக் குணம் இல்லை என்று மிருக வைத்தியர் ஒருவரை அணுகினான்.அவரும் பரிசோதித்துவிட்டு,''இந்த மருந்தை ஒரு வாரம் கொடுத்து வாருங்கள் சரியாகிவிடும்.இந்த மருந்து இனிப்பாய் இருக்கும்.அதனால் நாய் அதை விரும்பிக் குடிக்கும்,''என்றார்.வீட்டுக்கு  சென்றவுடன்,அவன்நாயை தன முழங்கால்களுக்கு இடையில் அழுத்திப் பிடித்துக் கொண்டு மருந்தை அதன் தொண்டைக்குள் ஊற்ற முயற்சி செய்கையில் அது திமிறி ஓடி விட்டது.மருந்தும் கொட்டிவிட்டது.சிறிது நேரம் கழித்து பார்க்கையில் அந்த நாய் சிந்திய மருந்தை நக்கிக் கொண்டிருந்தது.இப்போதுதான் அவருக்குப் புரிந்தது.நாய் மருந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அதை வம்படியாக ஊற்றிய முறைக்கு தான் எதிர்ப்பாய் இருந்திருக்கிறது.

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 6:02 pm

அண்ணலின் அன்பு
****************
ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் தன நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது ஒரு வயதான பெண்மணி அண்ணலைப் பார்க்க வெகு தூரத்திலிருந்து வந்திருந்தார்.அண்ணலை தரிசித்தபின் தான் கொண்டு வந்திருந்த திராட்சைப் பழத்தை அவரிடம் அன்போடு கொடுத்தார் அந்த மூதாட்டி.அண்ணலும் சிரித்துக் கொண்டு அந்த மூதாட்டி முன்னிலையிலேயே அவர் கொடுத்த பழம் முழுவதையும் சாப்பிட்டு விட்டார்.மூதாட்டி மிகுந்த மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.அவர் சென்றபின் நண்பர்கள் கேட்டனர்,''வழக்கமாக யார் எது கொண்டு வந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து சாப்பிடுவீர்களே?இன்று என்ன பழம் மிக ருசியாக இருந்ததோ?நீங்களே முழுவதும் சாப்பிட்டுவிட்டீர்களே?''அண்ணல் சொன்னார்,''அந்தப் பெண்மணி கொடுத்த பழம் ஒன்றை வாயில் போட்டேன். அது மிகப் புளிப்பாக இருந்தது.உங்களிடம் கொடுத்தால் மிகப் புளிப்பாயிருக்கிறது என்று யாராவது  சொல்லி விடுவீர்கள்.உடனே அந்த மூதாட்டியின் மனம் மிகவும் புண்படும்.அதனால் சிரித்துக் கொண்டே நான் முழுவதையும் சாப்பிட்டேன் அந்த மூதாட்டி முகத்திலே எவ்வளவு மகிழ்ச்சியுடன் சென்றார்கள்?''

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 6:05 pm

திருப்தியற்ற மனம்
****************
இளம் பெண்மணி ஒருத்தி தன குழந்தையுடன் கடற்கரைக்குப் போயிருந்தாள்.கடல் அலைகளிலே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு அலை திடீரென இழுத்துச் சென்று விட்டது.''ஐயையோ,என் குழந்தை போய்விட்டதே,''என்று அந்தப் பெண் கண்ணீர் விட்டு அழுதாள்.அந்தப் பண்ணின் அழுகை உருக்கமானதாக இருந்ததால்,கடல் தெய்வம் குழந்தையை மீண்டும் உயிருடன் கரைக்கு அனுப்பியது.தன குழந்தைக்கு ஏதும் ஆகாதது கண்டு மகிழ்ச்சியில் அவள் திக்குமுக்காடி விட்டாள்.குழந்தையின் கன்னங்களில் மாறிமாறி முத்தமிட்டவள்,எதேச்சையாகக் குழந்தையின் காலைக் கவனித்தாள்.குழந்தையின் ஒரு காலில் தான் செருப்பிருந்தது.இன்னொரு காலில் இருந்த செருப்பைக் காணவில்லை.உடனே அந்தப் பெண்ணின் மகிழ்ச்சி பறந்து விட்டது.''ஐயையோ,செருப்பு போய்விட்டதே,''என்று அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
இப்படித்தான் பல சமயங்களில் முக்கியம் இல்லாத சமாச்சாரங்கள் நம் மகிழ்ச்சியைப் பறித்து விடுகின்றன.எதிலும் திருப்து அடையாதவர்களுக்கு மகிழ்ச்சி ஏது?
----சுவாமி சுகபோதானந்தா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 6:09 pm

இரு நண்பர்கள்
***********************
இரண்டு நண்பர்கள்  ஒரு சாலையின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரில் ஒரு பை கிடந்தது அதை ஒருவன் எடுத்துப் பார்த்ததில் பணம் இருந்தது.மற்றவன் சொன்னான்,''நமக்கு நல்ல யோகம் இன்று எதிர் பாராத  விதமாக நமக்குப் பணம் கிடைத்துள்ளது.''முதல்வன் சொன்னான்,''நமக்கு என்று சொல்லாதே.எனக்கு என்று சொல் நான் தானே பையை எடுத்தேன்.''சிறிது தூரம் சென்றவுடன் ஒருவன் ஒருவன் ஒரு காவலரைக் கூட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான்.அவன் தான் பையின் சொந்தக்காரன் என்பதை அறிந்து கொண்டு,''நமக்கு பிரச்சினை வரும்போல் இருக்கிறதே,''என்றான் பையை எடுத்தவன் நண்பன் சொன்னான்,''நமக்கு என்று சொல்லாதே.உனக்கு என்று சொல்,''
பிறர்க்கு  உதவி  செய்யாதவர்கள் பிறர் உதவியை எதிர் பார்க்க முடியாது.

நன்றி இருவருள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 1:31 pm

ஒரு ஆமை மரத்தில் மிகச் சிரமப்பட்டு ஏறியது..

அங்கிருந்து மறுபடி கீழ்நோக்கி பாய்ந்தது.
பாயும் போது தன் கால்களை
காற்றில் ஆட்டிக்கொண்டே பாய்ந்து வந்தது.
கீழே மண்ணில் விழுந்து
அடிபட்டுக்கொண்டாலும்
மீண்டும் மீண்டும் அந்த முயற்சியை செய்துகொண்டே
இருந்தது.

இதை இரு பறவைகள் மரத்தின் இன்னொரு கிளையில் அமர்ந்தவாறே
பார்த்துக் கொண்டிருந்தன..
பெண் பறவை கடைசியில் ஆண் பறவையிடம் சொல்லியது..

என்னங்க.. பாவம்ங்க... அவன் கிட்டே சொல்லிடலாம்ங்க..

அவன் நம்ம புள்ள இல்லே..

தத்து எடுத்திருக்கோம்ன்னு..

mukanool ;face book
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 1:51 pm

இரயில் பயணத்தில்.......
*************************
ஒரு நாள் தந்தையும் , அவரின் 14 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.

அந்த சிறுவன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து,

"மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினான்.

அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் .

கொஞ்ச நேரம் கழித்து,

" அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார்.

இதை கவனித்து கொண்டிருந்த எதிரில் இருந்த தம்பதியினர்,

"இவனை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா? ... நீங்களும் அவன் சொல்வதை சரி என்று ஒப்புக்கொள்கிறீர்களே .. இது தவறு இல்லையா" என்று கேட்டனர்.

அதற்கு அந்த தந்தை சொன்னார்,

"ஆமாம்! நாங்கள் மருத்தவமனையில் காட்டி விட்டு தான் இப்போது வருகிறோம். அவருக்கு பிறவியில் இருந்து கண் பார்வை கிடையாது அந்த குறைபாடு இப்பொழுது தான் சரி செய்ய பட்டது."

==="ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் ஒரு விதமான கஷ்டம் இருக்கும். நாம் அதை தெரியாமல் விமர்சிக்க கூடாது!!!"

நன்றி ;முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 2:00 pm

குட்டிக்கதை:
********************
ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

நீதி: என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

நன்றி ;முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 3:23 pm

களவு போன கனவு
**************************
காலைச் சூரியன் முகம் மலர, எங்கும் படர்ந்திருந்த மார்கழிப் பனி விலக, கதிரவன் தன் இளங்கதிர்களால் ரமேஷின் தலையை செல்லமாக வருடி வாழ்த்தியது. சூரியனின் ஒளி பட்டு கண்கள் கூச, அதற்கு மேலும் தூங்கிக்கொண்டிருக்கமுடியாமல், படுக்கையைவிட்டு எழுந்தான் ரமேஷ்.

குளித்துவிட்டு, வழக்கத்தைவிட சற்று அதிகநேரம் இன்று இறைவனை வழிபட்டு, சிற்றுண்டி சாப்பிட அமர்ந்தான்.
” ரமேஷ் … மத்தியானத்துக்கு புளிசாதமும், புதினா துவையலும் கட்டி வச்சிருக்கேன் … மிச்சம் வைக்காம சாப்ட்டுடு … போற வழியில கண்டதயும் வாங்கி சாப்பிடாதடா கண்ணா … பத்திரமா போய்ட்டு வா … நீ நெனச்சபடியே எல்லாம் நடக்கும் … ” என்று தன் தாய்ப்பாச மிகுதியில், ரமேஷை ஒரு சிறு குழந்தையாகவே நினைத்து, அவனுக்கு அறிவுரைகள் கூறினாள் ரமேஷின் தாய். உண்மைதானே … !!! பிள்ளைகள் எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும், எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும், பெற்றவர்களுக்கு தன் பிள்ளைகள் இன்னும் குழந்தைகள்தான்.

” ஆல் த பெஸ்ட் ரமேஷ் … ” – இது ரமேஷின் தந்தை.
” பெஸ்ட் ஆஃப் லக் அண்ணா … ” என்ற தங்கையின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டு, ஒரு பெட்டிக்குள் தனக்குத் தேவையான துணிமணிகளுடன், அவனுக்கென்று இதுவரை அவன் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களான, பத்தாம் வகுப்பு, பணிரண்டாம் வகுப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புச் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு இரயில் நிலையத்திற்கு புறப்பட்டான் ரமேஷ்.

ரமேஷ் இதுவரை கிட்டத்தட்ட ஒரு ஐம்பது நிறுவனங்களிலாவது வேலைக்காக வின்னப்பித்திருப்பான். ஆனால் அவற்றுள், ஒரு நிறுவனங்களிடமிருந்து கூட அழைப்பு வராத நிலையில், துவண்டு போய்க்கிடந்த ரமேஷின் வாட்டத்தைப் போக்குமாறு, மும்பையிலிருக்கும் ஒரு முன்னனி நிறுவனம், நேர்காணலுக்காக சென்ற வாரம் அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதற்காகத்தான் இப்போது மும்பைக்குச் செல்ல இரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தான் ரமேஷ்.
ரமேஷின் குடும்பம் சற்று ஏழ்மையான குடும்பம். தந்தையின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்த ரமேஷின் குடும்பத்திற்கு, அவர் ஒரு மாதத்துக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றது மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.

 இனி குடும்பச்சக்கரத்தை எப்படி ஓட்டப்போகிறோம் என்ற கேள்விக்குறி அவர்கள் அனைவரின் மனதிலும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் இரண்டு வருடங்களுக்குள், தன் மகளுக்குத் திருமணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்ற கனவிற்கு நடுவில், ரமேஷை மட்டுமே முழுக்க முழுக்க நம்பியிருந்தனர் அவனது பெற்றோர். எப்படியும் ரமேஷுக்கு, விரைவில் ஒரு நல்ல வேலை கிடைத்து, குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் பனி போல் விலகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களிடம் இருந்தது. இதை ரமேஷும் நன்கு உணர்ந்திருந்தான்.
பெற்றோரின் இந்தக் கனவுகளை மூட்டை கட்டிக்கொண்டு, இரயிலில் ஏறி அமர்ந்தான் ரமேஷ். ரமேஷுக்கு இது முதல் நேர்காணல் என்பதால், மிகுந்த பதட்டம் அவனுக்குள் காணப்பட்டது.

” இந்த வேலை மட்டும் நமக்கு கிடைத்துவிட்டால், நம் குடும்பத்திற்கு ஒரு விடிவுகாலம் பிறந்துவிடும் … தங்கைக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முடியும் … ” என்று தன் மனதுக்குள்ளேயே நினைத்துக்கொண்டு, தான் எடுத்து வந்த பெட்டியை பக்கத்தில் வைத்துவிட்டு, சற்று நேரம் கண்ணயர்ந்தான் ரமேஷ்.

அப்போதுதான் அந்தக் கொடுமை ரமேஷுக்கு இழைக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து விழித்தெழுந்த ரமேஷுக்கு, அவன் எதிர்பார்த்திராத வகையில் அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவன் கண்ட கனவுகளை நோக்கிப் பயணம் செய்வதற்கு, அவனுக்கு ஒரே ஊன்றுகோலாக இருந்த அவனது சான்றிதழ்களை வைத்திருந்த பெட்டி களவாடப்பட்டிருந்தது. வாழ்வில் முன்னேறி சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் வாழ்க்கைப்பயணம் செய்துகொண்டிருந்த ரமேஷின் மனது சுக்கு நூறாகிப் போனது.

அவனது துக்கத்திற்கு அளவே கிடையாது. ” நமக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், நம்மை நம்பி மட்டுமே நம் குடும்பம் அங்கு காத்துக்கொண்டிருக்கிறதே … இனி என்ன செய்யப்போகிறோம் … ” என்ற எண்ணம் ரமேஷின் மனதை பலமாகப் பதம் பார்க்கத் தொடங்கியது. மொழி தெரியாத ஊரில், எங்கு போகப்போகிறோம் என்ற முகவரியுமில்லாமல், தனக்கென வைத்திருந்த சான்றிதழ்களும் பறிபோய் விட, நிராயுதபாணியாக செய்வதறியாமல் திகைத்துப்போய் நின்றான் ரமேஷ். களவுபோனது ரமேஷின் பெட்டி மட்டுமல்ல, அவன் இதுவரை அவனது மனதிற்குள் விதைத்திருந்த கனவுகளும், பெற்றோர் அவன் மீது வைத்திருந்த கனவுகளும் கூடத்தான்.

தன் மீது நம் பெற்றோர் வைத்திருந்த நம்பிக்கையை குலைத்துவிட்டோமே என்ற எண்ணத்தில், இனி நாம் வாழ்வது யாருக்கும் பயனில்லை என்று நினைத்து, தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவெடுத்து, ஓடிக்கொண்டிருந்த இரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான் ரமேஷ்.

பெட்டியை களவாடிச்சென்றவன், அதனை திறந்து பார்க்கையில், அதிலிருந்த முன்னூறு ரூபாய் மட்டுமே அவனது கண்களில் பட்டது. அதிலிருந்த சான்றிதழ்கள் ஒரு காகிதம் என்ற அளவில்தான் அவனுக்கு தென்பட்டது. பெட்டியிலிருந்து, பணத்தையும், ரமேஷுடைய துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவைகளை வீசியெரிந்துவிட்டு, அவ்விடத்திலிருந்து ஓடிச் சென்று அடுத்து வந்த இரயிலில் ஏறி, தனது சேவையைத் தொடர்ந்தான் அந்தக் கள்வன்.

ரமேஷின் இழப்பைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அவனது குடும்பத்துக்கு, ஒரு வாரத்திற்குப் பின்னர், ரமேஷின் சான்றிதழ்களை மீட்டுக் கொடுத்தனர் காவல்துறையினர்.
இப்போது அந்தச் சான்றிதழ்கள் யாருக்குப் பயன்படும் ? அவைகளால் இனி யாருக்குப் பயன் ? அந்தச் சான்றிதழ்களால், ரமேஷை அவன் குடும்பத்தினர் திரும்பப் பெற முடியுமா ?
தான் பல கனவுகளுடன் தன் மகனுக்காக கட்டி வைத்திருந்த மனக்கோட்டை தகர்ந்ததையடுத்து, தன் மகன் மீது, தான் கட்டிய மணல்கோட்டையின் அருகில் நின்று, கண்ணீருடன் அந்தச் சான்றிதழ்களை கிழித்துப் போடுகின்றனர் ரமேஷின் பெற்றோர்.

இது ஒரு கதைதான் என்றாலும், இதில் வருவது போல், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு கொலை, கொள்ளையில் ஈடுபடும் கள்வர்களின் கூட்டம், இந்தச் சுதந்திர இந்தியாவில் இன்னும் சுதந்திரமாய் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பிறருக்குச் சொந்தமான பொருளை அடைய வேண்டும் என்று மனதளவில் ஆசைப்பட்டாலும் கூட அது மகத்தாய பாவமாகும்.
இக்கதையில் நாம் கண்டது போல், கள்வனின் கண்களுக்கு வெறும் வெற்றுக் காகிதங்களாக தோன்றியவை, ரமேஷுக்கு வாழ்க்கையாக அமைந்திருந்தது. அந்தக் கள்வனால் ரமேஷின் வாழ்வும், அவனது பெற்றோரின் கனவுகளும் பறிபோனது. ஆகையால் பிறர் பொருளுக்கு எள்ளளவும் ஆசைப்படாமல் வாழ்வது உலகில் தலையாய பண்பாகும்.

தெய்வப்புலவராம் வள்ளுவப் பெருந்தகை, தமிழ் மறை என்று போற்றப்படும் திருக்குறளில் கூறியதுபோல், பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதே கூடக் குற்றமாகும். குற்றமான செயல்களை மனத்தால் நினைத்தலும் மகத்தாய பாவமாகும்.

நன்றி ;கதை நியூ மன்னர் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 3:26 pm

இறகுகளும் பாறைகளும்
************************************
அருணாவைப் பத்து வருடங்களாக எனக்குத் தெரியும். அதாவது அவள் அப்பா இறந்து போன
தினத்திலிருந்து.


ராத்திரி தூங்கப் போகும் போது அப்பா , அம்மாவுடன்
பேசிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்க்கும் போது உத்தரத்தில்
தொங்கிக்கொண்டிருந்தார். அருணாதான் அதை முதலில் பார்த்தாள் . அப்போது அவளுக்கு
வயது எட்டு.

அவளுடைய போராட்டங்கள் அன்று ஆரம்பித்தன.

அப்பாவிற்கும் அண்ணாவிற்கும் எப்போதும் சண்டை. யாருடைய கட்சி சரியென்று
இப்போதும் தீர்மானமாகச் சொல்வதற்கில்லை. அண்ணா சிகரெட் பிடிப்பான் . காலை ஏழு
மணி , பகல் ஒன்றரை மணி , மாலை மூன்று மணி என்று சொல்லிவைத்த மாதிரி
தெருமுனைக்குச் சென்று திரும்புவான் . திரும்பி வரும் போது அவனிடமிருந்து ஒரு
விநோத  வாசனை வரும். ” என்னடா இது , புகையிலை நாத்தம் ?” என்பார் அப்பா. பதில்
இராது.

சிக்ரெட் பிடிப்பதைத் தாங்கிக்கொள்ளமுடியாத அப்பாவினால் காதலை எப்படி
தாங்கிக்கொள்ள இயலும் ? அண்ணாவின் காதல் கடிதத்தை , பத்மாவின் அப்பா எடுத்துக்
கொண்டு வந்து முகத்தில் வீசிய போது அவசியமில்லாமல் அப்பா குன்றிப் போனார்.
வீட்டிற்குள் நுழையாதே என்று அண்ணாவைப்  பார்த்து உறுமினார்.அண்ணா கெஞ்சுவான்
என்று நினைத்தார் போலும் . அவன் வாசல் நிலையிலேயே நின்று அவரை வைத்த கண்
வாங்காமல் அரை நிமிடம் பார்த்தான் . பின் விடுவிடுவென்று உள்ளே நடந்தான் . தன்
ஆணை தன் கண் முன்னாலேயே பொடிப்பொடியாக நொறுங்குவதை அப்பா உணர்ந்தார் .
அதிர்ச்சியோடு அவன் பின்னாலேயே ஓடி பிடரியில் அறைந்தார். அவன் திடுக்கிட்டுத்
த்ரும்பிய போது முகத்திலும் இரண்டு மூன்று அடிகள் விழுந்தன. தற்காப்பு என்று
நினைத்துச் செய்தானோ , அல்லது கோபம் தானோ – அண்ணா , அப்பாவை ஓர் அறை விட்டான்.
பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான். அன்றைக்கு ராத்திரி அப்பா கயிற்றை
மாட்டிக் கொண்டார்.

அப்பாவின் சாவுக்கு அண்ணா வரவில்லை.பத்மாவை இழுத்துக் கொண்டு போயிருப்பானோ
என்று ஊர் முழுக்கச் சந்தேகம் . உறவுக்காரப் பெரிய மனிதர்கள் பத்மாவின்
வீட்டிற்குச் செல்லத் தயங்கினார்கள் . முகத்தில் கடிதத்தை வீசிய பத்மாவின்
அப்பா , யார் எவர் என்று பாராமல் தணலை வாரிக் கொட்டுவார் என்று எல்லோருக்கும்
பயம் . கட்டாயம் பத்மா வீட்டை விட்டுப் போயிருப்பாள் . அப்படிப் போயிருந்தால்
ஒரு புயல் நிச்சயம் என்று எல்லோரும் பயந்தார்கள் . அருணா ‘ வாருங்கள் மாமா ‘
என்று என்னை அழைத்துக் கொண்டு பத்மாவின் வீட்டிற்குப் போனாள் . வாசற்படியில்
நின்று குரல் கொடுத்தாள் . குரல் கேட்டுக் கதவைத் திறந்தது பத்மாதான்.

அருணாவின் இந்த தீரத்தை நான் பின்னர் அநேகம் தடவைகள் சந்தித்தேன் . உறவினர்
வீட்டில் ஒண்டிக் கொண்டு அவள் வளர்ந்த வருடங்களில் அவமானப் பட நேர்ந்த
போதெல்லாம் கண்ணீர் சிந்தாமல் பல்லைக் கடித்துக் கோண்டு துக்கம் முழுங்கிய
நேரங்களில் ; சமையல் , நீச்சல் , சைக்கிள் மூன்றும் கற்றுக் கொண்டால்,
உலகத்தின் எந்த மூலையில் வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்று நான்
சொன்னதை நம்பி சைக்கிள் கற்றுக் கொண்டதைத் தெருப்பையன்கள் கேலி செய்த போது ;
வேலைக்குப் போய்த் திரும்பிய பின்னர் இரவு ஏழுமணிக்கு மேல் டைப்ரட்டிங்
படிக்கப் போன இடத்தில் , இன்ஸ்ட்ரக்டர் தோள் மீது கை வைக்க , கால் செருப்பைக்
கழற்றிக் காண்பித்த போது .. அப்படிப் பற்பல தருணங்களில் அவளின் தீரத்தைச்
சந்த்தித்தேன்.

சரியோ தவறோ அந்த வீட்டில் எல்லா முடிவுகளையும் அருணாவே எடுத்தாள் . ஒன்பதாம்
வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டு , திருவான்மியூரில் ஒரு பட்ட்றையில் காயில்
சுற்றினாள் . இரண்டு வருடம் கழித்து திருப்பதிக்குப் போய் மெட்ரிக் எழுதினாள் .
மெட்ரிக் முடித்த பின் பெர்சனல் செகரெட்டரி கோர்ஸில் சேர்ந்தாள்.

காயில் சுற்றுகிற வேலை , டைப் அடிக்கிற வேலையாக மாறியது . ஆறு வருடத்தில் பத்து
கம்பெனி மாறினாள் . ” என்ன அருணா இது , தடால் தடால் என்று வேலையை விட்டு
விடுகிறாய் ? ” என்ற கேள்விக்கு , ” வேலையில் தொடர்ந்தால் இருபத்தி ஐந்து
ரூபாய் இன்கிரிமெண்ட் வேலை மாறினால் ஐம்பது ரூபாய் சம்பளம் அதிகம். எது தேவலை ?
” என்று எதிர்க் கேள்வி வீசினாள்.

வாழ்க்கை எப்போதும் வெய்யில் காலமாகவே போய்விடுவதில்லை. வசந்தங்களும்
வருவதுண்டு . அருணாவின் வசந்தத்திற்குச் ஜெயச்சந்திரன் என்று பெயர். வேலை ,
சம்பாத்தியம்,குடும்பம் என்பது ஆண் பிள்ளையைப் போல் ஓடிக்கொண்டிருந்தவளைப்
பெண்ணாக்கி நாணச்செய்தான் அவன்.

தன்னுடைய பெயருக்குக் கடித்தம் வந்திருப்பதை எண்ணி வியந்து கொண்டே கவரை
உடைத்தவள் , அது பிறந்த நாள் வாழ்த்து என்பதை அறிந்து காலண்டரை நிமிர்ந்து
பார்த்தாள் . ஆமாம், அது அவள் பிறந்த தினம் தான் .. பள்ளிக்கூட சர்டிபிகேட் படி
, பதினெட்டு பிறந்த தினங்கள்  வந்து போய் விட்டன. ஆனால் இது வரை யாரும் ‘ மெனி
ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே’ என்று கை குலுக்கியதில்லை . ‘ தீர்க்காயுசா
இரும்மா’ என்று வாழ்த்துச் சொன்னதில்லை. கேக் வெட்டியதில்லை. பாயாசம்
குடித்ததில்லை. புதிது அணிந்ததில்லை.கோயிலில் அவள் பெயரில் அர்ச்சனை
நடந்ததில்லை. பதினெட்டு வருடங்களாக இல்லாமல் இன்று ரோஜாப்பூக்கள் சிரிக்கும்
வெளி நாட்டு கார்டு . யார் ?

மனத்தை கேள்வி பொய்த்தது . யார் என்று அறிந்து கொள்ளாமல் , தலை வெடித்து விடும்
போல் பரபரத்தது. கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவாரம் , பத்து நாள் என்று
அநேகமாக மறந்துவிட்ட போது பக்கத்துஸீட் ஜான்ஸி  , “ம்க்கும் , இதற்கு ஒன்றும்
குறைச்சலில்லை,” என்றபடி குப்பைத் தொட்டியில் வீசியதைப் பார்த்தாள்.

ரோஜாப்பூக்கள் சிரிக்கும் வெளி நாட்டுப் பிறந்த நாள் கார்டு !

” என்ன ஜான்ஸி ?”

இந்த ஆபீஸில் கிராக் ஒண்ணு இருக்குது . யாருக்குப் பிறந்த நாள்ன்னாலும்
வாழ்த்து ஒண்ணு அனுப்பிச்சிடும்.

” யாரு அந்த கிராக் ?”

“ஜெயச்சந்திரன்னு ஒண்ணு வருமே , பார்த்ததில்லே ? உசரமா , கிழவன் மாதிரி ஃபுல்
ஆர்ம் ஷர்ட் போட்டுகிட்டு … “

” ஃபுல் ஆர்ம் ஷர்ட் போட்ட கிறுக்கனைப் பார்க்க ஆவல் இழுத்தது . தண்ணீர்
குடிக்கப் போவது போல் எழுந்து போனாள்.

” தாங்க்ஸ் , ” என்ற குரலுக்கே அவன் திடுக்கிட்டான்.

“எதுக்குங்க ?”

“ரோஜாப்பூக்களுக்கு “

பெண் பிள்ளையைப் போல் நாணினான்.

” பர்த் டேயை எப்படி கண்டு பிடிச்சீங்க ? “

” பெர்சனல் டிபார்ட்மெண்ட் வேலையில் இருந்துகிட்டு இதைக்கூடக் கண்டுபிடிக்க
முடியலைன்னா எப்படி ? “

“இப்படி எல்லோருக்கும் அனுப்புவீங்களா ?”

” எனக்கு இருபத்திரெண்டு வயசாச்சு. இன்னிக்கு வரைக்கும் ஒரு பர்த்டே கார்டு
வந்ததில்லை. வந்ததில்லைன்னு அழுவானேன் ? நாம தான் நாலு பேருக்கு
அனுப்புவோமேன்னு ஆரம்பிச்சேன்.”

அருணாவிற்கு சுரீரென்றது . நமக்கும் தான் இத்தனை நாள் வாழ்த்து வந்ததில்லை.
ஆனால் நாம் வாழ்த்து அனுப்பி வைப்போம் என்று ஏன் தோன்றவில்லை ? சட்டென்று
ஜெயச்சந்திரன் மீது மலைபோல மதிப்பு ஏற்பட்டது. ” நீங்க விர்கோவா ,
சாஜிட்டேரியஸ்ஸா ? “

” அ! அவ்வளவு சுலபமா பர்த்டேயைத் தெரிஞ்சுக்கலாம்னு பாக்காதீங்க . வாழ்த்துச்
சொற சந்தோஷம் போதுமுங்க எனக்கு “

முதல் முறையா அந்த வருடம் அவன் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து வந்தது.

” இது வெறும் அட்மிரேஷனா ? இல்லை , காதல் என்று எடுத்துக் கொள்வதா ? என்று நான்
கேட்ட போது அருணா , சிரித்து முகம் சிவந்தாள் . இத்தனை நாள் பொதி சுமந்த
தோளுக்கு இப்போது மாலை விழுந்த்ததே  என்று என் மனசு சிரித்தது.

அதற்கப்புறம் அருணாவிற்கு என்னைப் பார்க்க அவகாசம் இல்லை . அவ்வப்போது போனில்
பேசினாள் . ஒரு நாள் ஜெயச்சந்திரனை கூட்டி வந்து அறிமுகம் செய்து வை என்று
சொன்னேன். ஆகட்டும் ஆகட்டும் என்று சொல்லிச் சொல்லி நாட்கள் பறந்தன. அல்ல ,
நாட்கள் அல்ல , வருடங்கள் . இரண்டு வருடங்கள்.

அருணாவின் முகமே அவன் மனதைக் காட்டிக் கொடுத்தது. தொட்டால் ஒடிந்து விடுவது போல
நொய்ந்து போன மனம்.

” என்ன அருணா , வழி தெரிந்ததா ? “

” என்னோட வழி எல்லாமே சுவரில் முடிகிறது மாமா . “

” என்னம்மா  ? “

” அவர நல்லவர் தான் . ரொம்ப ரொம்ப நல்லவர். எல்லோருக்கும் நல்லவர் . அதனால்
தான் அவங்க அம்மா கிழிச்ச கோட்டைத் தாண்ட முடியலை.”

சொல்லும் போதே அருணா உடைந்தாள் . கையைப் பிடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி
அழுதாள் . பத்து வருடங்களாக எதற்கும் அழுதிராத அருணா விசும்பி அழுதாள்.

பாளம் பாளமாக எத்தனையோ பாறைகளைச் சுமந்து கொண்டு தீரத்துடன் முன்னேறிய பெண் ஒரு
மயிலறகின் கனம் தாங்க மாட்டாமல் பார்த்து வார்த்தைகள் அற்று ஸ்தம்பித்தேன்

*(குமுதம்)*
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:56 am

ஒரு கட்டுக்கதை
அம்பை
******************
பன்றி என்னுடன் சம்பாஷிக்க வந்தபோது மாலை ஆறரை மணி இருக்கும். ஒரு பதினைந்து இருபது குட்டிகளாவது இருக்கும் தொளதொளத்துத் தொங்கிய அதன் வயிற்றில். சாக்கடையில் புரண்டுவிட்டு வந்திருந்தது. மேல்உடம்பு கன்னங்கரேல் என்று சாக்கடைத் தண்ணீரில் பளபளத்தது. கீழே, வயிறு சதையின் நிறத்தில் கட்டிகட்டியாய்த் தொங்கியது.

''இதோ பார். எனக்குப் பேச வேண்டும்'' என்றது.

''என்னை எப்படித் தேர்ந்தெடுத்தாய்?'' என்றேன்.

''உன் புத்திசாலித்தனமான, தீட்சண்யமான கண்களைக் கண்டு உன்னைத் தேர்ந்தெடுத்தேன் என்றெல்லாம் சொல்வேன் என்று எதிர்பார்க்காதே. பார்க்கப்போனால் அப்படி ஒரு ஒளியும் எனக்குத் தெரியவில்லை. பார், நான் ஒரு பன்றி. எனக்குப் பேச வாய்ப்புக் கொடு. பொழுது போகாமல் திண்டாடும் பன்றி நான்'' என்றது.

அப்படி புகழ்ச்சியில் மயங்கும் நபர் இல்லை நான். இருந்தாலும் இது கொஞ்சம் அத்து மீறிய ஆணவமாய்ப் பட்டது.

''இதோ பார், எனக்கு நேரம் இல்லை'' என்று சூடாகச் சொல்வதற்குள் குட்டிகள் தொங்கும் பகுதியைப் பக்கவாட்டில் தழையவிட்டு அமர்ந்துவிட்டது பன்றி.

''சரி பேசு'' என்றேன்.

''பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்'' என்றது, பெருத்த தலையைக் கீழே சாய்த்தபடி.

''என் காதில் விழவில்லை''

''மெளனமாய்ப் பேசுகிறேன்'' என்றது.

ஆணவப் பன்றிகளுக்கு அடுத்தபடி என்னால் பொறுக்க முடியாதது வேதாந்தப் பன்றிகள். அசுவாரஸ்யமாய்த் தலையைத் திருப்பிக் கொண்டடேன் எதிர்ப்பக்கம்.

''சும்மா தமாஷ். ஜனங்கள் மிருகங்களின் வாயிலிருந்து ஞானம் சொட்டும் சொற்கள் வரும் என்று நினைக்கிறார்கள். நீதிக் கதைகளில் ஓட விடுகிறார்கள். 'சீ, சீ இந்தப் பழம் புளிக்கும்' போன்ற நீதியை உதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குப்பையில் அளைந்து, சோர்ந்து, சலித்துப்போன பன்றி நான். ஞான சம்பந்தமான விஷயங்களில் எனக்கு ஈடுபாடில்லை'' என்றது.

''எதைப் பற்றித்தான் பேச விரும்புகிறாய்?''

''உங்கள் கட்டடத்தின் வாயிற்கதவு பற்றி.''

மாடியும் கீழுமாய் ஆறு வீடுகள் கொண்ட கட்டடம் அது. அடுத்தாற்போல், முள்வேலியால் இரு பக்கமும் அடைக்கப்பட்ட வெற்று மனை. வெற்று மனை என்று சொன்னது பேச்சுக்காத்தான்.குடிசை ஜனங்களின் கட்டணம் இல்லாத கழிப்பிடம் அது. பன்றிகளின் வாசஸ்தலம். மத்தியான வேளைகளில் ஜன்னல் அருகே ட்ரியோ ட்ரியோ என்று கூச்சம் கேட்கும். பன்றிகள் ஓடும். சில சமயம் தெரு ஆரம்பத்திலுள்ள சந்தில் நுழையும் போது க்ஹே க்ஹே என்று ஆரம்பத்திலுள்ள ச்நதில் நுழையும்போது க்ஹே க்ஹே என்று மூச்சு சீறும் கதறல் கேட்கும். நின்றால், ''போயிட்டேயிருங்க. பன்னி அடிக்கிறாங்க'' என்று தள்ளி விடுவார்கள்.

''எதுக்கு, எதுக்குப்பா அடிக்கிறாங்க?''

''எதுக்கு அடிப்பாங்க? சாப்பிடத்தான். நவந்துகிட்டே இருங்க.''

கட்டடத்தின் வாயிற்கதவில் ஒருநாள் நுழையும் சதுர அளவு இடம் இருந்தது. பலமுறை, துரத்தப்பட்ட பன்றிகள் அதில் நுழைந்து ஓடும். அதை மூடிவிடும் யோசனை இருந்தது.

''அந்த நுழைவாயில் எனக்குப் பிடிக்கிறது. அதில் நான் ஆனந்தமாய் நுழைய முடிகிறது. நாலு பக்கமும் முள்வேலி இருக்க, நுழைவதற்கான வாகான இடம். பரபரவென்ற நான் ஓடும்போது சுவர்க்கக் கதவு மாதிரி எனக்குத் திறந்து வழிவிடுகிறது. அதைப்பற்றிப் பேச எனக்குப் பிடிக்கிறது. ஒரு பன்றிக்குத் தேவை, நுழையக் கூடிய கதவுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.''

வோட்ஹவுஸின் புத்தகங்களின் செல்லப் பன்றி நினைவுக்கு வந்தது. பிரபுவின் கொழுத்த ரோஜா வண்ணப் பன்றி. போட்டிகளில் பரிசு பெறும் பன்றி.

அதைப்பற்றிச் சொன்னேன்.

அமெரிக்கப் பன்றிப் பண்ணைகளில் கொழுக்கவைக்கப்பட்டு, வலியில்லாமல் இறக்கும் பன்றிகள்பற்றிச் சொன்னேன். வலியில்லாமல் இறப்பது ஒரு பெரிய சலுகைதான் என்ற. நிறம்பற்றி அவ்வளவு சுவாரஸ்யம் காட்டவில்லை. சாகப்போகிற பன்றி கறுப்பானால் என்ன, ரோஜா வண்ணமானால் என்ன என்றது. மற்றவர்கள் சாப்பிடுவதற்காக இறப்பதுப்பற்றி ஒரு ஆட்சேபனையும் காட்டவில்லை. அதுபற்றிக் கேட்டபோது ஆட்சேபணை காட்டக்கூடிய அதிகாரம் உள்ள நிலையில் தான் இல்லை என்று பேச மறுத்துவிட்டது. சிறிது நேரம் மெளனத்தில் கழிந்தது.

''சாவைப்பற்றி என்ன நினைக்கிறாய்?'' என்றேன்.

''அது ஒரு பெரிய கழி'' என்றது. ''நீளமாய், உருண்டையாய் இருப்பது. இரும்பாலோ, மரத்தாலோ ஆனது. இரும்பானால் ஆசனத்திலிருந்து வாய்வரை செருகப்படும் சாவு. மரமானால் அடிச்சாவு.

''எப்படி அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறாய்?''

''அலட்டிக்கொண்டு ஒன்றம் ஆகப்போவதில்லை. செருகுச் சாவு, அடிச்சாவு, இயந்திரச்சாவு என்று பிரித்துத் தேர்ந்தெடுக்கும் சலுகை வேண்டும் என்று போராடலாம். பன்றிகளிடம் ஒற்றுமை இல்லை.''

''இயற்கையான சாவு பற்றிச் சொல்லமாட்டேன் என்கிறாயே?''

''சாவதில் என்ன இயற்கை இருக்கிறது? வலுக்கட்டாயம்தான்.''

''இல்லையில்லை. மரத்திலிருந்து இலை உதிர்வது மாதிரி மெல்ல இயற்கையோடு கலப்பது...''

''எனக்கு ஒரு உபகாரம் செய்''

''என்ன?''

''தயவுசெய்து இதில் கவிதையைக் கொண்டுவராதே'' என் வாழ்க்கை ஏற்கனவே கெட்டுக்கிடக்கிறது. கவிதையை வேறு என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.''

''நான் சொன்னதில் என்ன கவிதைத்தனம் இருக்கிறது?''

''நீ சாவிலிருந்து ரத்தத்தைப் பிரிக்கிறாய். ரத்தம் சிந்தாத, அழகான இலையுதிர்ச் சாவு பற்றிச் சொல்கிறாய். ஆனால் ரத்தம் சேர்ந்தது சாவு. வெளியில் கொட்டினாலும் உள்ளே உறைந்து போனாலும் ரத்தமில்லாமல் சாவு இல்லை. நீ சாவை அழகாக்கப் பார்க்கிறாய்.''

குற்றச்சாட்டு.

சாவைப்பற்றி முதலில் எண்ணியது பன்னிரண்டு வயதில். கால்கள் அந்தரத்தில் மிதக்க, ஒரு பந்தை எம்பிப் பிடித்துக் கொண்டிருந்தபோது, தலையை மேலே வீசிப் பந்தைப் பார்த்த கணத்தில், வலியுடன் கூடிய மின்னலாய் அந்த எண்ணம் தாக்கியது. நாம் சாகிறோம். உள்ளே ஓடிவந்து முட்டியில் முகம் கவித்துப் பயந்தேன். கை, கால், முகம், உடம்பு எல்லாம் அந்நியமாகப்பட்டது. மாட்டிவிட்ட ஒன்றாய்த் தோன்றியது. இதனுள்ளே நான், நான், நான் என்று புகுந்து பார்த்தேன். பீதி கவ்வியது. செவிக் குழியிலா, கண்ணினுள்ளா, பல்லிடுக்கிலா, அக்குள் பள்ளத்திலா எதில் நான் இருக்கிறேன் என்று தேடினேன். பயத்தில் வியர்த்துப்போனேன்.

அதன்பின் சில சலுகைகளை நானே எனக்குத் தந்துகொண்டேன். சில வகைகளில் நான் சாக விரும்பவில்லை. விபத்தில் சாக விரும்பவில்லை. உடல் சிதைய, திடீர்த் தாக்குதலில் சாவு, விபத்துச் சாவு. எனக்கு வேண்டாம். வலியுடன் துடித்துச் சாவு - அதுவும் வேண்டாம். இரண்டாம் உலகப்போர்பற்றிப் படித்தபின் யூதர்களைப் போல் விஷப் புகைக்கூண்டுகளில் சாக நான் விரும்பவில்லை. அணு ஆயுதத்தால் ஆன ஹிரோஷிமாச் சாவும் வேண்டாம். வியட்நாமிற்குப்பின் நபாம் போன்ற இரசாயனக் குண்டுகளால் ஆன சாவையும் ஒதுக்கினேன். ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைக் கண்டுகொண்டபின், பஞ்சசாவு, வெள்ளச் சாவு, பூகம்பச் சாவு, சிறையில் சாவு, தூக்குக் கயிற்றுச் சாவு, துப்பாக்கிச் சாவு என்று ஒவ்வொன்றாய் விலக்கிக்கொண்டே வந்தேன். எஞ்சியது அழகுச் சாவு. வெளியுடன் கலக்கும் கவிதைச் சாவு. வலியில்லை. ரணமில்ல. குருதியில்லை.

பன்றியின் கோபம் எனக்குப் புரிந்தது.

சில நாட்களுக்குப் பின் ஒரு விடிகாலைப் பொழுது க்ஹரே... என்று அலறல் கேட்டது. நாலு பேர் கழியுடன் பன்றியைத் துரத்தினார்கள். அது விரைந்து வாயிற்கதவை நோக்கி ஓடியது. அதன் உடம்பு இன்னமும் பெருத்துவிட்டதை அது மறந்துவிட்டது. அந்தச் சதுர இடைவெளியில் சிக்கிக்கொண்டது. நான் ஓடிவரும் முன் ரத்தம் பீறிட்டு, பொம்மைகள் மாதிரிப் பன்றிக் குட்டிகள் வெளியில் விழுந்தன.அருகில் போனதும் பன்றி என்னை அடையாளம் கண்டுகொண்டது. சிவப்பேறிய கண்களைத் திறந்து சொல்லியது.

''தயவுசெய்து சாவைப்பற்றிய ஏதாவது அரிய உண்மையைச் சொல்லிவிட்டுப் போவேன் என்று எதிர்பார்க்காதே. ஒன்றுதான் என்னால் சொல்ல முடியும். நாம் சாகிறோம்.''

நீண்ட கழிகள் நெருங்கி வந்தன.

நன்றி : வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:59 am

இரை
************
இன்றைய விடியலில் வானம் சற்றுத் தெளிவாய் இருப்பதுபோலத் தோன்றியது. பூமியைக் குளிரவைத்து திருப்திப் பட்டதோ என்னவோ கொட்டும் மழை நின்று மெல்லிய தூறல்கள் மட்டும் ஆங்காங்கே நனைந்துபோன பூமி குளிர்காயவென சூரியன் முகிற்போர்வையை விலக்கத் தொடங்கியிருந்தது. நான் மெதுவாக எனது வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கின்றேன்.

வானமும் பூமியும் புதிதாகப் பிறந்ததுபோல் இருந்தது. நான் வாழும் இந்த வனாந்தரம் அழுக்குகள் நீங்கக் குளித்திருந்தது. 'ஓ என்னை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே. நான்தான் நாதன்' பாம்புகள் இனத்தைச் சேர்ந்தவன். கடந்த நான்கு நாட்களாகப் பெய்த அடைமழை என்னை வீட்டோடு கட்டிப்போட்டிருந்தது. இப்போது பசி என் வயிற்றைக் கிள்ளுகின்றது. மழை மறுபடி தொடங்குமோ, என்னவோ நான் அதற்கிடையில் என் வயிற்றை நிரப்பியாக வேண்டும். என் புற்றிலிருந்து வெளியே வருகின்றேன். அப்பப்பா, இந்தத் தரை எப்படி ஜில்லென்றிருக்கிறது! குளிர்ந்த காற்று என் முகத்தில் உரச, என்னைப் புது உற்சாகம் தொற்றிக்கொள்ளுகின்றது. விரைவாக ஊர்ந்து என் இரையைத் தேடிப்போய்க் கொண்டிருக்கிறேன்.

இளங்காலை சூரியன் மெதுவாக என் இமைகளைத் தட்டியபோதுதான் விடிந்தது எனக்குப் புரிந்தது. அடடே இன்று வானம் சற்று வெளிறி இருக்கிறதே. நான் மெதுவாக எழுந்து சோம்பல் முறித்துக்கொள்கின்றேன். ஒருதடவை என் உடம்பை உலுப்பி உதறும்போது உரோமங்கள் சில்லிட்டு மீண்டும் அடங்குகின்றது. ஒட்டிப்போன எனது வயிற்றைப் பார்க்கிறேன். சே. சரியாகச் சாப்பிட்டு நான்கு நாட்களாகிறது. எப்படியும் வயிற்றை நிரப்பியாகவேண்டும். நான் வழக்கமாகச் சாப்பிடும் சாப்பாட்டுக் கடைப்பக்கம் போகிறேன். ம் கூம் யாரையும் அங்கு காணவில்லை. மெதுவாகக் குரலை உயர்த்தி 'வள் வள்.' என சத்தமிடுகிறேன். இனி யாராவது சாப்பிட வந்து அவர்கள் போடும் எச்சில் இலை விழும்வரை என் வயிற்றுக்குப் பொறுமையில்லை. ஊர்மனைக்குச் செல்வோம் எனத் தீர்மானித்தபடி செல்கிறேன். என்னைப்பற்றிய விபரத்திலிருந்து என்னைப் புரிந்துகொள்வீர்கள்தானே.

ம்.. ஆம்.. ஆ எனது கடைசிக் குழந்தையின் வீரிட்டு அழுத குரல்கேட்டு விழித்து எழுகிறேன். என்னருகில் வாடிய முகத்துடன் என் மனைவி. அவள் மடியில் எனது கடைக்குட்டி. அவனது அழுகையை நிறுத்த முயன்று கொண்டிருந்தாள் அவள். பாவம் அவளுடைய சமாதானம் ஒன்றும் எடுபடவில்லை. பசியால் அழும் குழந்தைக்கு என்ன சமாதானம் சொன்னால் கேட்கும்? அவள் இயலாமையுடன் என்னைப்பார்க்க கசிந்த என் கண்களை வேறு ஓர் பக்கம் திருப்பிக்கொள்கிறேன். எனது ஆறு வயது மகனும், நான்கு வயது மகளும் குளிருக்கு அடக்கமாக, பழைய சேலையைப் போர்த்தி அதே பாயில் சுருண்டிருந்தார்கள். தூங்கும் அவர்களது முகத்திலும் அப்பட்டமாகப் பசிக்களை. சொந்த மண்ணைவிட்டு நீங்கிய கணத்திலிருந்து பசிக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால், இந்தப் பிஞ்சுகள். சோர்வுடன் எழுந்து நிற்கிறேன். எனது உடம்பிலும் தளர்ச்சி, முற்றத்திலிருந்த பானையிலிருந்து நீரைமொண்டு எனது முகத்தை அலம்பிக் கொள்கிறேன். உள்ளே வந்து மேற்சட்டை போட்டுக்கொண்டு எனது விறகு கட்டும் சைக்கிளை எடுக்கிறேன். 'கொஞ்சம் இடைவெளிவிட்டிருக்கு இதற்கிடையில் போய் ஏதேனும் விறகு கட்டி வித்திட்டு வாறன் என்ன' என்று கூறி மனைவியிடம் விடைபெறுகிறேன். அவள் என் கண்களை ஆழமாகப் பார்த்தவாறே 'கவனம் நீங்களும் இரண்டு நாளாய் வடிவாய் சாப்பிடேல' என்றாள். அவள் குரல் கம்மியது, விழியில் நீர் திரையிட்டது. 'அட நாங்கள் அனுபவிக்காததே, நீ கவலைப்படாதே' அவளைச் சமாதானப்படுத்திவிட்டு சைக்கிளில் ஏறுகிறேன்.

நானும் ஊர்ந்து ஊர்ந்து இரைக்காக அலைந்து களைத்துவிட்டேன். ம். ஒரு சிறு புழுக்கூட என் கண்களில் அகப்படவில்லை. பசியால் என் கண்கள் பஞ்சடைகின்றது. இனி ஏதாவது இரை என்னைத்தேடி வரும்வரை இந்த மரத்தில் இருந்தபடியே ஒரு குட்டித்தூக்கம் போடுவோம் என்று நினைத்தபடியே பாதையோரமாக உள்ள இந்த மரத்தில் படுத்திருக்கிறேன். தூக்கமும்வரவில்லை. என் பாம்புச் செவியை நீட்டியபடியே ஒரு இரையின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.

ஊர்மனையாவும் குளிரிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக இப்போதுதான் மனிதத் தலைகள் தெரிகின்றது. எந்த வீட்டிலிருந்தாவது புகைவராதா என்று ஏக்கத்துடன் அலைகிறேன். கடவுளே என் வயிறு கொதித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், என் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்தும் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறேன், இடையிடையே குலைத்தவாறு.

என்னால் சைக்கிள் மிதிக்க முடியவில்லை, என்றுமில்லாதவாறு ஒரு பலவீனம் என்னை ஆட்கொண்டிருக்கிறது. இருப்பினும் பசியால் வாடும் என் குழந்தைகளின் முகமே என் சிந்தையில் இருந்தபடியால் எனது சோர்வைப் பொருட்படுத்தாது விரைகிறேன். பின்னாலுள்ள கத்தி, கோடரி, கயிறு என்பன இப்போது எனக்குப் பலத்த சுமையாக இருக்கிறது. கடவுளே! எப்படித்தான் விறகு கட்டப்போகிறேனோலு} ஒருவாறு காட்டை அடைந்துவிட்டேன். சைக்கிளைவிட்டு இறங்கி காட்டிற்குள் செல்லும் ஒற்றையடிப்பாதையில் விரைந்து கொண்டிருக்கிறேன். பாதையோரமாக சற்றுத்தள்ளி இருந்த ஒரு காய்ந்த மரம் என் கண்களில் படுகிறது. அதனருகே சென்று வெட்டத் தொடங்குகிறேன். காய்ந்த மரம்தான் இருப்பினும் தண்ணீர் ஊறி இருப்பதால் வெட்டக் கஸ்டப்படுகிறேன். இப்போதைக்கு இது போதும் வெட்டிய விறகுக் கட்டைகளை சைக்கிளில் ஏற்றிக் கட்டுகிறேன். சுமையுடன் சைக்கிளை உருட்டுவது மிகக் கஸ்டமாக இருக்கிறது. என் உடலிலிருந்து இந்தக் குளிரிலும் வியர்வை ஆறாகப்பெருக்கெடுக்கிறது. ஆழமான மூச்சுகள் எடுத்தவாறே வீதிக்கு வருகிறேன். மனதில் ஒரு திருப்தி மெதுவாக வீதியில் சைக்கிளை மிதிக்கிறேன்.

உர்.. ஊ ல். அட கடவுளே! வானத்தில் ஒரு பெரிய இயந்திரக் கழுகு சுற்றத் தொடங்கியிருந்தது. எனக்கு ஒருபுறம் கோபமும், ஒருபுறம் வேதனையாகவும் இருந்தது. மழைவிட்ட சிறிது நேரத்தில்கூட வந்துவிட்டானே பாவி என்று மனதிற்குள் சபித்தவாறே சைக்கிளை பாதையோரமாக இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் தேடி விரைகிறேன்.

இரைக்காக நான் காத்திருந்தபோது, விண்ணில் ஒரு சத்தம். அட மனிதர்களைக் கொல்லும் இயந்திரக் கழுகு வந்துவிட்டதுபோல் இருக்கிறது. ஒரு விறகு வெட்டி பயத்துடனே தனது சைக்கிளை நான் இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் நோக்கி விரைய, நான் அலுப்புடன் கண்களை நாலாபுறமும் சுழற்றியபோது அது எனது கண்களில் படுகிறது. அட, எனக்குச் சற்று அதிஸ்டம் இருக்கிறது போலிருக்கிறதோ! விறுவிறுவென மரத்திலிருந்து இறங்கி அங்கு விரைகிறேன்; ஆம் அந்த விறகுவெட்டியின் சைக்கிளில் இருந்த விறகின் பட்டையில் சில தவளைகள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவை பொய்க்கோலம் பூண்டிருந்தாலும், எனது இரையை நான் அறியமாட்டேனா என்ன? ஆவலுடன் விறகுக்கட்டில் புகுந்து ஆவலுடன் அவற்றை வேட்டையாடத் தொடங்குகிறேன்.

எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. உடல் தளர்ந்து கண்கள் இருட்டத் தொடங்கியிருந்தது. வானத்தில் இப்போது திட்டுத்திட்டாக நீலம். பறவைகள் ஆரவாரித்தபடியே பறந்து கொண்டிருந்தது. பூக்கள் எல்லாம் குளித்து முடிந்து காற்றில் தலை துவட்டிக்கொண்டிருந்தது. ஆனால் நான் இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை. வயிற்றுக்கு விருந்து இல்லாதபோது புலனுக்கு விருந்து இருந்தென்ன? விட்டென்ன? தெருவில் மூலையில் கிடக்கும் குப்பை மேடுகளை ஆராய்ந்தபடியே ஓடிக்கொண்டிருக்கிறேன்.

அப்பாடா எனக்கு இப்போதுதான் மூச்சு வந்தது. மிகத்தூரத்தில் எங்கோ குண்டுகளை உமிழ்ந்துவிட்டு அந்த விண் அரக்கன் போய்விட்டான். நான் எனது மறைவிடத்தைவிட்டு வெளியே வருகிறேன். மீண்டும் எனது குழந்தைகளின் முகம் என் நினைவில் வரவே, புதுவேகத்துடன் சைக்கிளை எடுத்து மிதிக்கத் தொடங்குகின்றேன். சற்று நேரத்திற்கெல்லாம் விறகுச் சிராய் போலும் என் முதுகில் குத்தியது. சீ. என்ன இது என்று முதுகை நெளித்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் சைக்கிளை மிதிக்கிறேன். சிறிது தூரம் பயணித்த பின்னர் மீண்டும் அதே சிராய் குத்தியது. எனக்கு எரிச்சலாக வந்தது. நான் சைக்கிளைச் சாத்திவிட்டு, மறைவிடத்தில் ஒதுங்கியபோது கட்டுத் தளர்ந்துவிட்டது போலும் திரும்பவும் நிறுத்தி இறுக்கிக் கட்டலாம் என்று யோசித்தேன்.

இன்னும் கொஞ்சத்தூரம்தானே அதற் கிடையில் என்ன நடந்துவிடப்போகிறது என்று தொடர்ந்தும் போய்க்கொண்டு இருக்கிறேன். சற்றைக்கெல்லாம் அதே சிராய் மீண்டும் சற்று வேகத்துடன் குத்தியது. சரி இனியும் தாங்காது இறங்கி யோசித்தபோது, கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு பெண் என்னைக் கைகாட்டி அழைப்பது தெரிந்தது. ஒருவாறு சமாளித்தபடியே சைக்கிளை அவளருகே கொண்டு செல்கிறேன். என்ன விலை என்று விறகைப் பார்த்துக் கேட்கிறாள். எழுபத்தைந்து ரூபாய் என்றேன். ஐம்பது ரூபாய்தான் தருவேன் சரியா எனக் கேட்டாள். நான் இப்போது அவளுடன் பேரம் பேசும் நிலையில் இல்லை. அத்துடன், இந்த மழைநேரம் அதிக தூரம் போகவும் முடியாது; சரி என்று சொல்லிவிட்டு விறகைப் பறித்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டேன்.

அப்பாடா. இப்போதுதான் என் வயிறு குளிர்ந்தது. நான் தவளை வேட்டை நடத்தி முடிக்கும் கணத்தில் அந்த விறகுவெட்டி மீண்டும் சைக்களை எடுத்து ஓடத் தொடங்கினான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறிது நேரம் விறகுக்கட்டின்மேலும் கீழுமாக ஓடித்திரிந்தேன். எனக்கு உடனடியாக கீழே இறங்கவேண்டும் போல் இருந்தது. வயிறு நிரம்பியிருந்ததால் மேலிருந்து கீழே குதிக்கவும் விரும்பவில்லை. அந்த விறகுவெட்டி சைக்கிளை நிறுத்துவான் எனக் காத்திருந்தேன். ம் கூம் அவன் நிறுத்தவில்லை. என் பொறுமை எல்லை கடந்தது. மெதுவாக என் நாக்கால் அவனைத் தீண்டினேன். ஆனால், அவனோ என்னை சட்டை செய்யாது தொடர்ந்தும் ஓடிக்கொண்டு இருந்தான். இது என் கோபத்தை அதிகரித்தது. எனவே மீண்டும் சற்று தீண்டினேன். அவன் இந்த முறை மெதுவாக திரும்பிப் பார்த்துவிட்டு ஒருகையால் சரிந்திருந்த விறகுக்கட்டை சரிசெய்துவிட்டு, மீண்டும் ஏதோ வெறிபிடித்தவன் போல் ஓடத்தொடங்கினான். என்கோபம் உச்சத்திற்கு ஏறியது. எனது பலமெல்லாம் திரட்டி வேகமாக தீண்டினேன். இந்தமுறை அவன் இறங்க உத்தேசித்திருக்க வேண்டும். சைக்கிளின் வேகத்தை குறைத்தான். ஆனால், அதேநேரம் ஒரு பெண் அவனை மறித்ததால் அவ விடம் சென்றபின்னரேயே நிறுத்தினான். நான் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன். அப்பாடா சைக்கிள் ஒருமாதிரி நின்றது. அவன் அந்தப் பெண்ணுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தபோதே நான் வேகமாக நழுவி விடுகிறேன்.

நாய் அலைச்சல் என்று இதைத்தான் சொல்வார்களோ..! இதுபோல எந்த ஒரு நாளும் நான் அலைந்ததில்லை. என் கால்கள் நிற்கச் சொல்லிக் கெஞ்சியது. என் வயிறு ஓடச்சொல்லி மன்றாடியது. நான் இரண்டிற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டு இருந்தேன். நான் தளர்ந்துபோய் அலைந்து கொண்டு இருந்தேன். அட அப்போதுதான் அது என் கண்களில் பட்டது. பாதையோரமாக விழுந்து கிடந்தது. ஆம் அது ஒரு பாண்பொதி ஆவலுடன் அதைத் தின்று என் வயிற்றை நிரப்பிக்கொள்கிறேன். வயிறு நிரம்பிய களிப்பில் நான் வந்த வழியே திரும்பி ஓடுகிறேன்.

அந்தப் பெண்ணிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மிகவேகமாக விரைகிறேன். எனக்கு இப்போது நன்றாகத் தலை சுற்றியது. புதுத் தளர்ச்சி என் உடலில் எங்கும் வேகமாகப் பரவியது. ஒரு கடையில் நிறுத்தி பாண் வாங்கிக்கொள்கிறேன். என் கண்மணிகளின் பசியால் வாடிய முகம் வரவர என் நினைவை கூடுதலாக வியாபிக்கத் தொடங்கியது. ஐயோ இது என்ன என்னால் எதையும் பார்க்கமுடியவில்லையே. கண்கள் இருண்டுவிட்டது. உடல் மிகவும் தளர்ந்து போகிறது. கடவுளே என் சைக்கிள் என் கையைவிட்டு நழுவி எங்கோ விழுகிறது. நான் தூக்கி எறியப்படுவது மட்டும் எனக்கு இப்போது புரிந்தது. வெளி ஒலிகள் ஏதும் எனக்கு இப்போது கேட்கவில்லை. நான் எங்கோ இருட்டான பாழும் கிணற்றில் மிக ஆழமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். ஐயோ கடவுளே! என் குழந்தைகளின் பசியை எப்படித் தீர்ப்பேன் என் குழந்தைகளினதும், மனைவியினதும் பசியால் வாடிய முகங்கள் எனது நினைவில் இறுதியாக மங்கலாகத் தெரிந்தது. என் கடைக்குட்டி வீரிட்டு அழும் ஒலி என் காதில் கடைசியாக ஒலித்துக்கொண்டிருந்தது.

- நன்றி ;செம்பருத்தி -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 06, 2013 4:53 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 4:55 pm

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 5:38 pm

'பச்சோந்தி'க் கல்
******************************
நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. 

அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. "என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!"

தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. "நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!"

கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். "ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்"

ஒரு ஜன்னல் கண்ணாடியில் 'டண்' என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது "போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. 

என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!"
வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். "இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!" என்று நினைத்துக் கொண்டது.

ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.

அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் "சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். 

பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்" என்றது.


சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!" என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.

 ந. உதயகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த சிறு கதைகள்  Empty Re: படித்த சிறு கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum