தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
படித்த ஞான கதைகள்
3 posters
Page 1 of 1
படித்த ஞான கதைகள்
உணர்வு
************
மகா பாரதத்தை எழுதியதோடு வேதங்களைத் தொகுத்தவர் வியாச முனிவர் அவருடைய மகன் சுகர்.பிரம்ம ஞானி.ஆடைகளையே சுமை என்று கருதி அவற்றைத் தவிர்த்தவர்.ஒரு நாள் அவர் ஆற்றங்கரையோரம் சென்று கொண்டிருந்தார்.ஆற்றில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.இதைக் கவனித்த வியாசர் தன மகன் உடையின்றி செல்வதால் இளம் பெண்கள் சங்கடப் படுவார்களே என்று எண்ணி மகனை வேறு பாதைக்குத் திருப்ப விரைந்து சென்றார்.ஆனால் சுகர் பெண்களைக் கடந்து செல்லும்போது பெண்கள் பகுதியில் எந்த வித சலசலப்பும் இல்லை.ஆனால் வியாசர் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது பெண்கள் சட்டென்று உடைகளை இழுத்துப் போர்த்துக் கொண்டு நின்றனர்.வியாசருக்கு ஆச்சரியம்.தன மகன் உடையில்லாமல் போவதைப் பொருட்படுத்தாத பெண்கள் தான் முனிவர் என்பது தெரிந்தும் பெண்களிடையே ஒரு பதற்றம் ஏன் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.அப்பெண்களிடம் அவர் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள்,''தங்கள் மகனைப் பார்க்கும்போது அவர் மனதில் தான் ஒரு ஆண் என்ற உணர்வு கூட இருப்பதாகத் தெரியவில்லை.எனவே எங்களுக்கு அவரைக் கண்டபோது மனதில் எந்த சஞ்சலமும் இல்லை.எங்களுக்கும் நாங்கள் பெண்கள் என்ற உணர்வு அந்நேரம் இல்லை.உங்கள் மனதில் நீங்கள் ஒரு ஆண் என்ற உணர்வு அழுத்தமாக இருக்கிறது.அதனால் எங்களுக்கும் உங்களைப் பார்த்த உடன் நாங்கள் பெண்கள் என்ற உணர்வு வந்து விட்டதால் எங்களுக்குள் ஒரு பதட்டம் ஏற்பட்டு நாங்கள் உடைகளை சரி செய்தோம்.''தன மகன் தன்னையே மிஞ்சி விட்டார் என்பதை வியாசர் புரிந்து கொண்டார்.
நன்றி ;இருவருள்லம் தளம்

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: படித்த ஞான கதைகள்
அபார நம்பிக்கை
*************************
ராமானுஜர்,தனது குருவான திருக்கோட்டியூர் நம்பியை அணுகி தனக்கு அஷ்டாச்சற மந்திரத்தை சொல்லிக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டார் .நம்பி உடனடியாக சொல்லிக் கொடுக்காமல் அவருடைய உண்மையான ஆர்வத்தை தெரிந்து கொள்ள அவரை பதினெட்டு முறை அலைய விட்டு அதன் பின் அவர் காதில் ரகசியமாக ஓதினார் இம்மந்திரத்தின் சிறப்பு என்னவென்றால் இதைத் தொடர்ந்து ஓதுபவன் பிறவித் தளையிலிருந்து விடுபடுவான் என்பதாகும் .நம்பி இதை உபதேசிக்கும்போதே வேறு யாருக்கும் இதை ராமானுஜர் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றும்,அதை மீறிச் சொன்னால் நரகம் கிட்டும் என்றும் சொன்னார்.மந்திரத்தை கவனித்து கேட்டுக் கொண்ட ராமானுஜர்,உடனே ஊரின் மையத்தில் இருந்த கோபுரத்தில் ஏறிக் கொண்டு மக்கள் அனைவரையும் கூவி அழைத்தார் .அனைவருக்கும் மந்திரத்தை சொல்லிக் கொடுத்து அதன் பயன்களையும் விவரித்தார்.இதைக் கேள்விப்பட்ட நம்பி,ராமானுஜரை அழைத்து கோபத்துடன் தன சொல்லை மீறியதன் காரணம் கேட்டார்.ராமானுஜர் பய பக்தியுடன் அவரிடம் சொன்னார்,''இந்த மந்திரத்தை சொன்னால் முக்தி கிடைக்கும் என்றும் பிறரிடம் சொன்னால் நரகம் கிட்டும் என்று சொன்னீர்கள் .நான் ஒருவன் மட்டும் முக்தி அடைவதற்குப் பதிலாக ,நான் நரகம் சென்றாலும் ஆயிரக்கணக்கானோர் முக்தி அடைவார்கள் அல்லவா ?'' 'ராமானுஜரின் பெருந்தன்மையைக் கண்டு கண்ணீர் மல்க நம்பி,ராமானுஜரை கட்டிப் பிடித்துக் கொண்டார்.
நன்றி இருவர் உள்ளம் தளம்

எனக்குத்தெரியாது
*****************************
ரஷ்யாவில் ஒரு யூத மத குரு வசித்து வந்தார்.இருபது வருடங்களாக அவர் தினமும் காலை குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சதுக்கம் வழியாக யூதத் திருக் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.இதை தினமும், யூதர்களை வெறுத்து வந்த காவலன் ஒருவன் கவனித்து வந்தான்.ஒரு நாள் அவன் அந்த மத குருவை வழி மறித்து,''எங்கே செல்கிறாய்,''என்று அதிகாரமாகக் கேட்டான்.அதற்கு அவர்,''எனக்குத் தெரியாது,''என்று பதிலுரைத்தார்.உடனே காவலன் கோபமுடன்,''நீ தினமும் யூதர் கோவிலுக்கு இவ்வழியே செல்வதை நான் கவனித்து வருகிறேன்.ஆனால் இப்போது எங்கே செல்கிறாய் என்று கேட்டால் தெரியாது என்று சொல்கிறாய்.உனக்கு நான் ஒரு பாடம் கற்பிக்கிறேன்,''என்று சொல்லியபடி அவன் அவரை இழுத்துக் கொண்டுபோய் சிறையில் தள்ளினான்.யூத மதகுரு அப்போது அவனைப் பார்த்து சொன்னார்,''நான் திருக்கோவிலுக்கு செல்லத்தான் வந்தேன்.ஆனால் ஆண்டவனின் திரு உள்ளம் எப்படி என்று எனக்குத்தெரியாது அதனால் தான் எனக்குத் தெரியாது என்று சொன்னேன்.இப்படி சிறைக்குவருவேன் என்று எனக்குத் தெரியாது.அதனால் நான் எங்கே போகிறேன் என்று எனக்குத்தெரியாது என்று சொன்னதன் பொருள் இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.''.
நன்றி ;இருவருள்ளம் தளம்

முழு திருப்தி
********************
ஒரு பணக்காரர்,தன வீட்டிற்கு அருகில் இருந்த தனக்கு சொந்தமான காலி மனையில்,''இந்த நிலம்,வாழ்வில் முழுமையான திருப்தி அடைந்தவர்களுக்கு கொடுக்கப்படும்.''என்று எழுதி வைத்தார்.அந்தப் பக்கம் வந்த ஒருவர்,அவரை அணுகி,''அய்யா,என்னிடம் எல்லா செல்வங்களும் தேவைக்கு இருக்கின்றன.அதனால் நீங்கள் சொன்ன தகுதி எனக்கு உள்ளது.எனவே இந்த நிலத்தை எனக்கே தாருங்கள்,''என்றார்.செல்வந்தர் கேட்டார்,''உண்மையிலேயே நீங்கள் வாழ்வில் திருப்தியுடன் இருக்கிறீர்களா?"'உடனே வந்தவர்,''உண்மையிலேயே நான் திருப்தியுடன் இருக்கிறேன்.எனக்குத் தேவையானது அனைத்தும் இருப்பதால் எனக்கு வாழ்வில் முழு திருப்தியே,''என்றார்.செல்வந்தர் சொன்னார்,''நண்பரே,நீங்கள் உண்மையிலேயே முழு திருப்தியுடன் இருந்தால் இந்தக் காலி மனையை அடைய ஏன் ஆசைப்படுகிறீர்கள்?'' வந்தவர் தலை குனிந்து அங்கிருந்து சென்றார் .

தூய அன்பு
****************
சுவாமி ராமதீர்த்தர் அமெரிக்கா சென்றார்.உடன் வந்த பயணிகள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர்.சுவாமி எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.தனியாக நின்ற அவரைக் கண்ட ஒரு அமெரிக்கர்,அவரிடம் வந்து,''நீங்கள் எங்கே போகவேண்டும்?உங்கள் உடமைகள் எங்கே?அறிமுகக் கடிதம் ஏதேனும் உள்ளதா?''என்று கேட்டார்.சுவாமி சொன்னார்,''எனக்கு உடமைகள் எதுவும் கிடையாது.என்னிடம் பணமும் எதுவுமில்லை.அறிமுகக் கடிதம் எதுவும் கிடையாது.''ஆச்சரியமுற்ற அந்த அமெரிக்கர்,''அப்படியானால் நீங்கள் இங்கு எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?இங்கு நண்பர்கள் யாரேனும் உள்ளனரா?'' என்று கேட்டார். ராமதீர்த்தர் புன்னகையுடன் அமெரிக்கரின் தோளில் கையை வைத்து,''எனக்கு ஒரு நண்பர் இங்கே உள்ளார்,''என்றார்.அவரும்,''அவர் எங்கேயிருக்கிறார்?''என்று கேட்க சுவாமி சொன்னார்,''அவர் நீங்கள்தான்.'' இதைக் கேட்ட அந்த அமெரிக்கர் நெகிழ்ந்து போய்விட்டார்.பின் அவரே அவருக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார்.
நன்றி 'இருவர் உள்ளம் தளம்

மெய்யழகு
*********
ஜனகரின் அரசவைக்கு அஷ்டவக்கிரர் என்ற தத்துவ மேதை வந்தார்,அவர் உடல் எட்டு கோணலாகத் திருகியிருந்ததால் அவருக்கு அந்தப் பெயர்.அவைக்குள் அவர் வந்ததும் அங்கு கூடியிருந்தோர் அவருடைய அவலட்சணத்தைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.அஷ்டவக்கிரர் நிதானமாகச் சொன்னார்,''ஜனகரே,இது தத்துவ ஞானிகள் நிறைந்த சபை என்று நான் எண்ணித்தான் இங்கு வந்தேன்.கசாப்புக் கடைக்காரர்களும்,செருப்பு தைப்பவர்களும் நிறைந்த இந்த சபைக்கு தவறுதலாக வந்து விட்டேன்.''இதைக்கேட்ட அறிஞர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.மன்னர் அவரிடம் விளக்கம் கேட்டார்.அதற்கு அவர்,''இங்குள்ளவர்கள் என்னைத் தோலாகவும் சதையாகவும், எலும்பாகவுமே பார்த்தனர்.சதையையும் எலும்பையும் விற்பவர் கசாப்புக் கடைக்காரர்.தோலைப் பயன்படுத்துபவர் செருப்புத் தைப்பவர்.ஒரு உன்னதமான தத்துவ ஞானி,மனிதனின் ஆன்மாவையே பார்க்கிறார்.அதையே அங்கீகரிக்கிறார்.அது அனைவருக்கும் ஒன்றே,''என்று பதிலளித்தார்.

காப்பாற்றுவது யார்?
****************
முஹம்மது நபி அவர்கள் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியே சென்ற ஒரு யூத வீரன் அவரை அடையாளம் கண்டு அவர் மீது இருந்த வெறுப்பினால் அவரைக் கொன்று விட முடிவு செய்து,வாளை உருவிக்கொண்டு அவர் அருகில் சென்றான்.சப்தம் கேட்டு விழித்தார் நபிகள்.அந்த யூதன்,''முகம்மதுவே,இப்போது யார் உன்னைக் காப்பாற்றுவார்கள்?''என்று அவரிடம் கேட்டான்.நபிகள்,''இறைவன் தான் என்னைக் காப்பான்,''என்று உரக்கக் கூறினார்.அந்தக் குரல் தந்த அதிர்ச்சியில் யூதன்கையிலிருந்து வாள் நழுவியது.நபிகள் உடனே அந்த வாளை எடுத்துக் கொண்டு அவனிடம் கேட்டார்,''இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்கள்?'' அவன்,''என்னைக் காப்பாற்ற யாருமே இல்லை,''என்று கதறினான்.நபிகள் புன்முறுவலுடன் அவனிடன் சொன்னார்,''இல்லை நண்பரே,உம்மையும் அந்த இறைவன் தான் காப்பாற்றுவான்,''பின் அந்த வாளை அவனிடமே திரும்பக் கொடுத்தார்.அந்த வீரன் தன செயல் குறித்து வெட்கி தலை குனிந்தான்.

வினோதமான கேள்வி
**********************************
சீன ஞானி கன்பூசியசிடம் ஒரு சீடர்,''ஆனந்தமாயிருக்க ஒரு வழி சொல்லுங்கள்,குருவே,''என்று கேட்டுக் கொண்டான்.அதற்கு கன்பூசியஸ் ''உன் கேள்வியே விநோதமாக இருக்கிறது.எந்த ரோஜாவும்,தான் ரோஜாவாக என்ன வழி என்று கேட்பதில்லை.''என்றார்.உங்களுக்குள் ஆனந்தம் எப்போதும் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது.ஆனால் மனிதன் தன அறியாமையினால் தன்னுள் பொங்கும் ஆனந்தத்தை தடுத்துக் கொண்டிருக்கிறான்.அவ்வாறு தடுக்காமலிருக்கக் கற்றுக் கொண்டால் ஆனந்தம் பொங்கிக்கொண்டே இருக்கும்.

மன நிம்மதி
*****************
ஒரு பெரிய பணக்காரன்.அவனுக்கோ மனதில் திருப்தியும் அமைதியும் இல்லை.பணத்தால் அடையக்கூடிய சுகமெல்லாம் அடைந்த பின்னும் அவனுக்குள் ஒரு வெற்றிடம்.தன் செல்வமனைத்தையும் ஒரு பெட்டியில் வைத்து அங்கு வந்த ஒரு ஞானியைப் போய்ப் பார்த்தான்.அவரிடம்,''சுவாமி,இந்த என்னுடைய சொத்து முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள்.எனக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தாருங்கள். ஞானி சிரித்தார்.அடுத்த கணம் அந்தப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.செல்வந்தனுக்கோ பயங்கர அதிர்ச்சி.வாழ் நாள் முழுவதும் தேடிய சொத்தை ஒரு போலிச் சாமியாரிடம் கொடுத்து ஏமாந்து போய் விட்டோமே என்ற கவலையுடன் அவரைப் பின் தொடர்ந்து ஓடினான். ஞானி எங்கெங்கோ சுற்றி ஓடி விட்டு மீண்டும் முதலில் இருந்த இடத்துக்கே திரும்ப வந்தார்.பணக்காரனும் மூச்சிரைக்க பின்னாலேய அங்கு வந்து சேர்ந்தான்.ஞானி அந்தப் பெட்டியை அவனிடமே திரும்பக் கொடுத்தார்.அவனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.பணம் திரும்பக் கிடைத்ததில் நிம்மதி.இப்போது ஞானி அவனிடம் சொன்னார்,''இங்கே நீ வருமுன் இந்த பெட்டி உன்னிடம் தான் இருந்தது.அப்போது அதிலிருந்த செல்வத்தால் உனக்கு மகிழ்ச்சி இல்லை.அதே பெட்டி தான் உன்னிடம் இப்போது இருக்கிறது.ஆனால் உன் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி:நிம்மதி.மகிழ்ச்சியும் நிம்மதியும் வெளியில் இல்லை நம்மிடம் தான் உள்ளது.''
நன்றி ;இருவர் உள்ளம் தளம்

கமால்
****************
ஒரு முறை கபீர்,தன மகனிடம்,மாடுகளுக்குத் தீனி வைக்கப் புல் வெட்டிக் கொண்டுவரப் பணித்தார்.போனவன் வெகு நேரமாகியும் திரும்ப வராததால் தேடிச்சென்றார்.புல் வெளி நடுவே அவர் மகன்ஆடிக் கொண்டிருந்தார்.அங்கே சிலு சிலுவெனக் காற்று வீசிக் கொண்டிருக்க புற்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன.அவற்றுக்கு இணையாக அவர் மகனும் அசைந்தாடிக் கொண்டிருந்தார்.கபீர்,''என்ன செய்து கொண்டிருக்கிறாய்,இங்கே?''என்று வினவ அவரது மகன்,''நான் இங்கே வந்தபோது இந்தப் புற்கள் ஏகாந்தமாக ஆடிக் கொண்டிருந்தன.சட்டென்று ஒரு ஆனந்தம்என்னையும் தொற்றிக் கொண்டது.நானும் அவற்றுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்து விட்டேன்.ஆஹா,என்ன ஆனந்தம் அது!''என்றார்.கபீர்,''புல்லை வெட்டி எடுத்து வரச் சொன்னேனே?''என்று கேட்க,''என்னது?புல்லை வெட்டுவதா?என்னால் ஒருபோதும் முடியாது.ஆனந்தம் எனக்களித்த இவற்றுடன் எனக்கு நெருங்கிய உறவு ஏற்பட்டு விட்டது.என்னால் இவற்றைக் கிள்ளக் கூட முடியாது.''என்றார் மகன்.பிரமித்துப்போன கபீர்,மிகுந்த மகிழ்ச்சியில்,''கமால்''என்றார்.கமால் என்றால் அற்புதம் என்று பொருள்.அதன்பின் அவர் கமால் என்றே அழைக்கப்பட்டார்.

மனநிலை
***************
ஞானி ஒருவர்தொந்தரவு செய்து கொண்டிருந்த ஒரு சீடனிடம் ஒரு கல்லைக் கொடுத்து காய்கறி சந்தைக்குப் போய் விற்பது போல நடித்து மக்களின் நிலையைத் தெரிந்து வரச் சொன்னார்.சீடனும் சந்தைக்கு சென்று கல்லின் அருமை பெருமைகள் பலவற்றைக் கூறினான்.ஆனால் ஒரு சிலரே அதுவும் மிகக் குறைந்த விலைக்கு கேட்டார்கள்.சீடன் குருவிடம் வந்து,விபரம் கூறி அங்கு கல்லை பத்து பைசாவிற்கு மேல் விற்க முடியாது என்று கூறினான்.குரு அடுத்து அதே கல்லை தங்க நகைகள் விற்கும் கடை வீதிக்கு எடுத்து சென்று அதேபோலக் கவனிக்க சொன்னார்.சீடன் கடை வீதிக்கு சென்று,திரும்பிவந்து ''இங்கு பரவாயில்லை.கல்லை ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள்,''என்றான்.பின்னர் குரு அவனை அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வைர வியாபாரம் நடக்கும் இடத்திற்கு எடுத்து சென்று அதே முயற்சியை செய்ய சொன்னார்.அங்கு போய்வந்த சீடன்,''இங்கு இந்தக் கல்லை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்கலாம்,''என்றான்.குரு சொன்னார்,''நீ விற்கவில்லை என்றதும் எப்படி விலை கூடியது?இது கல்லை விட உன்னைப் பொறுத்த விஷயம் ஆகி விட்டது.காய்கறி சந்தையில் இருக்கும்போது நீயும் அதன் மதிப்பு பத்து பைசாதான் என்று நினைத்தாய்.இப்போது ஆன்மீகத்தில் நீ காய்கறி சந்தையில் தான் இருக்கிறாய்.அதாவது உன் மனநிலையின் மதிப்பு பத்து பைசா தான்.அதை வைரம் விற்கும் கடையைப்போல உயர்த்து.பிறகு என்னிடம் வா,''

அசுத்தம்
**********/****
முகம்மது நபிகள் ஒரு நாள் காலை ,பிரார்த்தனை செய்ய ஒரு வாலிபனையும் அழைத்து சென்றார்.அவன் இதுவரை மசூதிக்கு சென்றதில்லை.திரும்பி வரும்போது,தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் குறிப்பிட்டு,''நாயகமே,இந்த பாவிகளைப் பாருங்கள்.இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இது பிரார்த்தனைக்கு செல்ல வேண்டிய நேரம் இல்லையா?''என்றான்.உடனே முகம்மது ஆகாயத்தை நோக்கி ,''மிகவும் வருத்தப்படுகிறேன்,''என்றார்.அவர் யாரிடம் வருத்தம் தெரிவித்தார் என்று அந்த இளைஞன் கேட்டான்.அதற்கு நபிகள்,''இன்று ஒரு நாள் பிரார்த்தனை பண்ணி விட்டதால் உன்னையே ஒரு ஞானி போலவும் மற்றவர்களெல்லாம் பாவிகள் எனவும் கருதிக் கொண்டு விட்டாய்.உன்னை என்னோடு அழைத்து சென்றதால் என் பிரார்த்தனை அசுத்தமாகி விட்டது.ஆகவே நான் அதற்காக கடவுளிடம் வருத்தம் தெரிவித்தேன்.நான் மறுபடியும் மசூதிக்கு செல்ல வேண்டும்.என்னுடன் நீ வராதே,''என்றார்.

வியாபாரம்
*****************
ஒரு கப்பல் புயலில் மாட்டிக் கொண்டபோது,அதில் பயணித்த அனைவரும் இறைவனை வழிபட தொடங்கினர்.ஒரு ஞானி மாத்திரம் ஏதும் செய்யாது இருந்தார்.அவரை அனைவரும்பைத்தியம் என்று கேலி பேசினர்.அந்த ஞானி சொன்னார்,''எனக்குக் கடவுளிடம் எந்தவியாபாரமும் இல்லை.நம்மைக் காப்பாற்ற வேண்டுமா,மூழ்கடிக்க வேண்டுமா என்பது இறைவன் கவலைப்பட வேண்டிய ஒன்று.அது என்னுடைய கவலை இல்லை.நான் பிறப்பதற்கு அவரிடம் கேட்கவில்லை.திடீரென இந்த பூமிக்கு நான் வந்தேன்.ஆகவே,மரணத்தைப் பற்றியும் நான் கேட்க முடியாது.எப்போது பிறப்பு என் கையில் இல்லையோ,மரணத்தைப்பற்றி மட்டும் எப்படிஎன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும்?''

பாவம்
***********
ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்கப்போன ஒருவர் அவரிடம் தான் காசிக்கு செல்லவிருப்பதாகக் கூறினார்.எதற்கு என்று பரமஹம்சர் கேட்டதற்கு ,காசிக்கு சென்று கங்கையில் குளித்தால் பாவம் தீரும் என்று கூறப்படுவதால் அங்கு செல்லவிருப்பதாகக் கூறினார்.
பரமஹம்சர் :கல்கத்தாவிலும் கங்கை நதி வருகிறதே,பின் ஏன் காசி செல்லவேண்டும் என்கிறாய்?
பக்தர் :காசி புனிதமான இடம் என்பதால்தான்.
ப.ஹ.:காசியில் கங்கையின் கரையில் மரங்கள் இருக்கிறது தெரியுமா?நீ குளித்தவுடன் உன்பாவங்கள் உன்னைவிட்டு நீங்கி அந்த மரத்தில் போய் ஏறிக்கொள்ளும்.நீ குளித்து கரையில்உடை மாற்றியபின் அவை மீண்டும் உன்னிடம்வந்து ஒட்டிக் கொள்ளும்.அதனால் தான் நான் காசி செல்வதில்லை.மேலும் அம்மரங்களில் குளித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களின் பாவங்களும் இருக்கும்.அவற்றில் எதுக்கேனும் உன்னைப் பிடித்திருந்தால் அவையும் உன்னிடம் வந்து ஒட்டிக் கொள்ளும்.
பக்தர்.ஐயையோ.என்னை மிகவும் குழப்பி விட்டேர்களே.என் பாவம் தீர நான் காசி செல்ல நினைத்தால்,நீங்களோ என் பாவத்தோடு மற்றவர் பாவங்களும் என்னுடன் வந்து ஒட்டிக் கொள்ளலாம் என்கிறீர்களே.
அதன் பின் அந்த பக்தருக்கு காசி போக பைத்தியமா பிடித்திருக்கிறது?
சொர்க்கம் என்பது மேலே எங்கேயோ இல்லை அது நம்மிடம் தான் இருக்கிறது.இதைப் புரிந்து கொண்டால் வேறு எங்கும் செல்லவேண்டியதில்லை.

இருக்கலாம்
******************
ஒரு ஏழையான சீனக் குடியானவன்,ஒரு அழகான கறுப்புக் குதிரை வைத்திருந்தான்.ஊராருக்கு அந்தக் குதிரையின் மீது வியப்பு.அந்த ஊர் மன்னர் அந்தக் குதிரையைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தக் குதிரைக்காக நிறையப் பணம் தருவதாகவும்,அந்தக் குதிரையை தனக்கு விற்று விடுமாறும் அவனிடம் கேட்டார்.அனால் அவன் சம்மதிக்கவில்லை.ஊர்க்காரர்கள்,'மன்னர் பெருந்தொகை கொடுக்க முன் வந்து நீஏற்கவில்லையே,நீ ஒரு முட்டாள்,'' என்று விமரிசித்தனர்.அதற்கு அவன்,'இருக்கலாம்,'என்று சுருக்கமாகப் பதில் சொன்னான்.சில நாளில் அக்குதிரை காணவில்லை.ஊர்க்காரகளவனிடம்,''நீ பெருந்தொகையை இழந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இப்போதாவது உணர்கிறாயா?''என்று கேட்டனர்.அப்போதும் அவன்,'இருக்கலாம்,'என்றே பதில் கூறினான்.
சில நாட்களுக்குப்பிறகு,அந்தக் குதிரை மேலும் இருபது அழகிய கறுப்புக் குதிரைகளைக் காட்டிலிருந்து அழைத்து வந்தது.மக்கள்,''உன் குதிரையை விற்காதது உன் புத்திசாலித்தனம்,''என்று பாராட்டினர்.இதற்கும் குடியானவன்,'இருக்கலாம்,'என்று கூறினான்.அவனுடைய பையன் குதிரைகளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும்போது குதிரையிலிருந்து கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்.மக்கள்,''உன் பையனுக்கு அவ்வளவு விபரம் பத்தாது,''என்றனர்.குடியானவன் வழக்கம்போலவே,'இருக்கலாம்,'என்றான்.
அப்போது சீனாவில் போர் வந்தது அதற்கு இளைஞர்களை ராணுவத்தில் சேரச் சொல்லிக் கட்டாயப் படுத்தினர்.குடியானவன் மகன் மட்டும் கால் ஒடிந்திருந்தால் போருக்கு ஏற்றவனல்ல என்று விடப்பட்டான்.மக்கள் குடியானவனிடம் சொல்லினர்,''நீ மிகவும் அதிர்ஷ்டசாலி.உன் பிள்ளை ராணுவத்தில் சேராமல் தப்பி விட்டான்.''என்றனர் இப்போதும் அவன் சொன்னான்,'இருக்கலாம்.'
இவை எல்லாமே ஒப்பீடான சார்பு நிலைகளே.நன்கு உணர்ந்த எவரும்,எதனையும் முற்றிலும் சரியானது என்று கூற மாட்டார்கள்.

Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
Re: படித்த ஞான கதைகள்
அருமையான பகிர்வு தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: படித்த ஞான கதைகள்
[You must be registered and logged in to see this image.]
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: படித்த ஞான கதைகள்
மருந்து
*************
ஒரு துறவியிடம் வந்து ஒரு பெண் சொன்னாள்,''என் மாமியாரிடம் நான் படும் துன்பம் தாங்க முடியவில்லை.என் வாழ்வை நரகமாக்குகிறாள்.அவளை சாகடிக்க ஏதாவது மருந்து கொடுக்க முடியுமா?''துறவி அவளுக்கு ஒரு மருந்தை எடுத்துக் கொடுத்துவிட்டு சொன்னார்,''இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமானால் ஒரு நிபந்தனை இருக்கிறது.இந்த மருந்தை அன்புடனும் கருணையுடனும் கொடுத்தால் தான் அது வேலை செய்யும்.மேலும் அப்படிச் செய்யும்போது உன் மீதும் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள்.இரண்டு மாதத்தில் உன் மாமியார் இறந்து விடுவார்.''ஒரு மாதத்திற்குப்பின் அந்தப் பெண் துறவியிடம் மீண்டும் வந்தாள். அவள் சொன்னாள்.''அய்யா,இப்போது என் மாமியார் என்னிடம் மிக அன்பாக இருக்கிறார்.அவர் சாகக்கூடாது.வேறு எதேனும் மருந்து கொடுங்கள்.'' துறவி சொன்னார்,''வேறு மருந்து தேவையில்லை அம்மா,உன் அன்பும் கருணையுமே சிறந்தமருந்து.''

பொறுப்பு
***************
துறவு ஹபீப் ஆஷ்மி ஒரு நாள் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.அங்கே தன உடைகளைத் தரையில் கழற்றி வைத்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது அங்கே வந்த ஒருவன் உடைகளைக் கண்டு யார் குளிப்பது எனப் பார்த்தான்.ஆஷ்மி குளித்தஇடம் மறைவாக இருந்ததால் யாரோ கவனமில்லாது வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்று எண்ணி அங்கேயே காவலுக்கு நின்றான்.ஆஷ்மி வெகு நேரம் நீராடிய பின் கரைக்கு வந்தபோது அவன்,'இப்படிப் பாதுகாப்பின்றி உடைகளை விட்டுச் செல்லலாமா?யாரேனும் களவாடிச் சென்றால் உங்கள் கதி என்ன?'என்று கேட்டான்.ஆஷ்மி சிரித்துக் கொண்டே சொன்னார்,''ஓஹோ,நான் உடைகளை,'அவன்'பொறுப்பில் விட்டுச் சென்றிருந்தேன்.'அவன்;அந்தப் பொறுப்பை உன்னிடம் கொடுத்துவிட்டான் போலும்.''
---சூபி கதை.

கட்டிப்போடு
*******************
ஞானி ஒருவர் பாலைவனச் சோலை ஒன்றில் சிறிய கூடாரம் ஒன்றில் தங்கி இருந்தார்.நெடுந்தொலைவிலிருந்து அவரைக் காண ஒருவன் ஒட்டகத்தில் வந்தான்.கூடாரத்தினுள் வந்ததும் ,
பயணி: உங்களைக் காண வெகு தொலைவிலிருந்து வந்துள்ளோம்.
ஞானி: எப்படி வந்தாய்?
பயணி: ஒட்டகத்தில்
ஞானி: ஒட்டகம் எங்கே?
பயணி: வெளியில் நிறுத்தி உள்ளேன்.
ஞானி: அதனைக் கட்டிப் போட்டு வைத்தாயா?
பயணி: இல்லை.எனக்கு இறைவனிடம் முழு நம்பிக்கை உண்டு.அவர் பார்த்துக் கொள்வார்.
ஞானி:முட்டாள்,போ,போய் உன் ஒட்டகத்தைக் கட்டிப்போடு.கடவுளுக்கு நிறைய வேலைகள் உண்டு.உன் ஒட்டகத்தைப் பாதுகாக்க அவருக்கு நேரம் இல்லை.
இக்கதை பின்னர் உலகப் புகழ் பெற்ற பொன்மொழி ஆனது.''அல்லாவிடம் பூரண நம்பிக்கை வையுங்கள்;ஆனால் ஒட்டகத்தைக் கட்டிப்போட மறவாதீர்.''
நன்றி --சூபி கதை

பக்திமான்
**************/*
நாரதருக்கு தான்தான் பகவானின் சிறந்த பக்திமான் என்ற கர்வம் ஏற்பட்டது.பகவானிடம் பேச்சுவாக்கில் இதை சொன்னபோது அவர் சொன்னார் ,''நாரதா ,பூலோகத்தில் இருக்கும் ஒரு குடியானவன் தான் என் பக்தர்களிலே சிறந்தவன்,''நாரதருக்கு வருத்தம் ஏற்பட்டது தன்னைக் காட்டிலும் எந்த விதத்தில் சிறந்த பக்திமானாக அவன் இருக்கக்கூடும் என்பதை அறிய ஆவல் கொண்டு அந்தக் குடியானவன் இருக்கும் இடம் சென்று அவன் அறியாமல் அவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்தார்.அவன் காலையில் எழுந்ததும்,'கிருஷ்ணா,'என்று பகவானை ஒரு நிமிடம் நினைத்துக் கொண்டு,பின் தன் ஏரை எடுத்துக் கொண்டு வயலுக்கு சென்று அந்தி சாயும் வரை கடுமையாக உழைத்தான்.பின் வீடு திரும்பி,குளித்துவிட்டு,வீட்டு வேலைகளைச் செய்து,சாப்பிட்டுவிட்டு படுக்கும் முன் ஒரு முறை,'கிருஷ்ணா,'என்று ஒரு நிமிடம் நினைத்துவிட்டு படுத்து உறங்கிவிட்டான்.நாரதர்,கிருஷ்ணரிடம் சென்று ,'ஒரு நாளில் இரண்டு தடவை மட்டும் உங்களை நினைக்கும் குடியானவன்,சதாசர்வகாலமும் உங்களையே துதித்துக் கொண்டிருக்கும் என்னைவிட எப்படி சிறந்த பக்தன் ஆவான்?'எனக் கேட்டார்.கிருஷ்ணர் சொன்னார்,''அது இருக்கட்டும்,முதலில் இதோ , இந்த எண்ணெய் நிரம்பிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டு இந்த நகரை ஒரு முறை சுற்றி வா.ஒரே ஒரு நிபந்தனை;எண்ணெய் ஒரு சொட்டுக்கூட கீழே சிந்தக்கூடாது '' நாரதரும் மிகுந்த கவனத்துடன் ஒரு துளி கூடச் சிந்தாது,எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு நகர் வலம் முடித்து கிருஷ்ணரிடம் சாதித்த பெருமையுடன் வந்தார்.கிருஷ்ணர் கேட்டார்,''நாரதா,இந்தகிண்ணத்துடன் நகர் வலம் வந்தபோது என்னை எத்தனை முறை நினைத்தாய்?''நாரதர்செயலில் கவனமாய் இருந்ததால் அவரை நினைக்கவில்லை என்றார்.கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே சொன்னார்,''ஒரு சிறு வேலை செய்யும்போதே நீ என்னை மறந்துவிட்டாய்.நாள் முழுவதும் கடுமையாய் உழைத்த பின்னும் இரண்டு முறை என்னை துதிக்கும் குடியானவன் சிறந்த பக்தன் தானே?''நாரதர் கர்வம் அடங்கி தலை குனிந்தார்.
ராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

பிரார்த்தனையின் பலன்
************************************
ஒரு ஞானி ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருக்கையிலே ஒரு பெண் ஓடி வந்து,தன குழந்தை உடல் நலமின்றி இருப்பதாகவும் ஞானி வந்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். ஞானியும் அவளது வீட்டிற்கு வந்து குழந்தையைக் குணப்படுத்த பிரார்த்தனையில் ஈடுபட்டார்.உடனே அங்கு ஒரு கூட்டம் கூடி விட்டது.ஒருவன் ஞானியிடம் கேட்டான்,'மருந்தால் குணமாகாத குழந்தை உன் பிரார்த்தனையால் குணமாகி விடுமா?'ஞானி அவனிடம்,''உனக்கு ஒன்றும் தெரியாது. நீ ஒரு முட்டாள்.'' என்றார்.அவன் அந்த ஊரில் ஒரு பெரியஆள்.எல்லோருக்கும் முன்னால் ஞானி முட்டாள் என்று சொன்னவுடன் அவனுக்கு அவமானமாகப் போய்விட்டது.அவன் கோபத்துடன் திட்டிக் கொண்டே ஞானியை அடிக்கப் போனான்.ஞானி பொறுமையுடன் அவனை நோக்கி வந்து,''அப்பா,நான் சொன்ன சொல் உனக்குக் கோபத்தைவரவழைக்க முடியும் என்றால்,ஏன் என் பிரார்த்தனை இக்குழந்தையைக் காப்பாற்றக் கூடாது?''என்று கேட்டார்.அவன் முகத்தைத் தொங்க விட்டவாறு வெளியேறினான்.

பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» படித்த சிறு கதைகள்
» படித்த நீதி கதைகள்
» படித்த நகைசுவை கதைகள்
» படித்த எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்
» படித்த பிடித்த சிறுகதைகள்
» படித்த நீதி கதைகள்
» படித்த நகைசுவை கதைகள்
» படித்த எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்
» படித்த பிடித்த சிறுகதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum