தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

2 posters

Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 1:18 pm

கர்வம்
*************

மகனே,
நான் உன்னை எச்சரிக்கிறேன்.
நீ கர்வியாகி விட வேண்டாம்.
அது என்றைக்காவது உன்னைத் தலை 
கீழாகத் தள்ளிவிடும்.
அறிவுள்ள மனிதனுக்கு கர்வம் அழகன்று.
அறிவற்றவர்களேகர்வம் கொள்வார்கள்.
இயல்பிலே கர்வம் கொண்டவர் எவரோ,
அவர் தலையானது கற்பனைக்கும் அடங்காத
அளவு மீறிய கர்வத்தால் நிரம்பி விடுகிறது.. 
கர்வமே துன்பத்தின் பிறப்பிடம்.
கர்வத்தைப் பற்றி அறிந்திருந்தும் நீ ஏன் அதனை
துரத்திக் கொண்டு செல்ல வேண்டும்?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 1:22 pm

ஷா அதி
பேராசைக்காரன் உலகம் முழுவதையும் பெற ஆசைப் படுகிறான்.திருப்தியுற்ற மனிதன் ஒரு ரொட்டித் துண்டிலே ஆறுதல் பெறுகிறான்.செல்வத்தைக் காட்டிலும் திருப்தியோடு கூடிய  வறுமை சிறந்தது.
**********
ஒருவன் இதயத்தைத் துன்புறுத்தும் செய்தியை நீ அறிந்திருந்தால் மௌனமாக இரு.மற்றவர்கள் அந்த செய்தியைத் தெரிவிக்கட்டும்.வசந்தத்தின் செய்தியை   குயில் தெரிவிக்கட்டும்.மற்றதை ஆந்தையிடம் விட்டுவிடு.
**********
சந்நியாசியைப் பார்த்து அரசன் கேட்டான்,''என்னிடம் வெகுமதி பெரும் நோக்குடன் என்றேனும் என்னை ஞாபகப் படுத்திப் பார்த்ததுண்டா?''  சந்நியாசி சொன்னார்,'ஞாபகம் உண்டு.எப்பொழுது என்றால்  நான் ஆண்டவனை மறந்தபோது.'
**********
வேதனையுடனே இருவர் இருந்தனர்.ஒருவன் செல்வம் இருந்தும் அனுபவிக்காதவன்;மற்றவன் அறிவு இருந்தும் பயன்படுத்தாதவன்.
**********
மரணமே,உனக்குக் கோடி வந்தனம்!
நீ யாருக்கு இரக்கம் காட்டினாலும் அவர்களின் துக்கம் அனைத்தும் ஓடி  விடுகிறது.சுக துக்கம்,மத மாச்சர்யம் இவற்றை  ஒரு நொடியில் ஒரேயடியாய் அழித்து விடுகிறாய்.உலகம் இதைத்தான் பெரும் பயணம் என்கிறது.
ஏ மரணமே,உனக்குக் கோடி வந்தனம்!
**********
பக்திமான் ஒருவர் கண்ட கனவில் அரசன் சொர்க்கத்திலும்,துறவி  நரகத்தில் இருப்பதாகவும் தெரிந்தது.முரண்பட்ட இந்நிலைக்கு அவர் பெரியவர் ஒருவரிடம் விளக்கம் கேட்டார்.
பெரியவர்  சொன்னார்,''துறவியிடம் காட்டிய அன்புக்குப் பரிசாக அரசனுக்கு சொர்க்கம் வழங்கப்பட்டது.அரசனிடம் கொண்டிருந்த தொடர்புக்குத் தண்டனையாக துறவிக்கு நரகம் தரப்பட்டது.''
**********
கோடைக்காலத்தில் பழுத்துக் குலுங்கும் மரம் குளிர் காலத்தில் ஒரு இலை கூட இல்லாமல் ஆகி விடுகிறது.இந்த உண்மையைத் தெரிந்து  கொள்ளாத ஊதாரி,தனக்கு ஒரு கஷ்டம் வரும் என்பதை மறந்து விடுகிறான்.
**********
துறவி ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டார்,''ஆண்டவனே,கொடியவர்கள் மீது கருணை வையுங்கள்.ஏனென்றால் நல்லவர்கள் மீது ஏற்கனவே கருணை காட்டி விட்டீர்கள்.நல்லவர்களாக அவர்களைப் படைத்ததே அந்தக்  கருணையால் தானே!''
**********

நன்றி ;படித்ததில் பிடிப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 1:27 pm

சரியான உதாரணம்

ஒருவன் தினசரி காட்டுக்குச் சென்று கடுமையாக  உழைத்து  விறகு வெட்டி வாழ்ந்து வந்தான்.ஒரு நாள் அவன் ஒரு மரத்தடியில் கால்கள் இரண்டையும் இழந்த ஒரு நரியைக் கண்டான்.இது இந்த நிலையில் எப்படி உயிர் வாழ்கிறது என ஆச்சரியப்பட்டான்.அப்போது ஒரு புலி ஒரு மானை அடித்து அந்த மரத்தடிக்குக் கொண்டு வந்தது.விறகுவெட்டி பயந்து மரத்திலேறி நடந்ததைக் கவனித்தான்.புலி மானை உண்டு சென்ற பின் அது விட்டுச் சென்ற மிச்சத்தை நரி தவழ்ந்து சென்று உண்டது.''இரண்டு கால் இல்லாத நரிக்கே இறைவன் உணவு வழங்கும் போதுநமக்கு உணவு கொடுக்க மாட்டாரா?''என்று எண்ணிய அவன் மறுநாள் முதல் விறகு  வெட்டச் செல்லாது வீட்டிலேயே சோம்பிக் கிடந்தான்.ஆனால் அவன் எதிர் பார்த்தது போல் உணவு கிடைக்க வில்லை.காரணம் கேட்டு இறைவனை வணங்கி வேண்டினான்.இறைவன் கூறினான்,'நீ நரியை உதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.புலியை உதாரணமாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.'

இப்படித்தான் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நமக்கு சாதகமான விசயங்களை மட்டும் தவறாக எடுத்துக் கொள்கிறோம்.

நன்றி ;படித்ததில் பிடிப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 25, 2013 2:23 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 4:32 pm

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 7:14 pm

[You must be registered and logged in to see this link.]

அரேபிய வர்த்தகன் ஒருவன் தன அனுபவத்தைச் சொன்னான்,''பாலை வனத்தில் ஒரு முறை வழிதவறி விட்டேன்.உணவு தீர்ந்து விட்டது.சாகும் நேரம் வந்தது என நினைக்கும் போதுஒரு மூட்டை கண்ணில் பட்டது.அதில் ஏதேனும் உணவு இருக்கும் என நினைத்த போது நெஞ்செல்லாம் மகிழ்ச்சியும் குதூகலமும் வழிந்தன.ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?அழகிய முத்துக்கள்.ஏமாற்றமும் கசப்புமே அப்போர்து தோன்றின.பசித்தவனுக்கு முத்தினால் என்ன பலன்?அவனுக்கு அப்போது விலை மதிக்க முடியாத பொருள் தண்ணீர் தான்.''
_ஷா அதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 7:16 pm

சிறந்த பிரார்த்தனை
கொடுங்கோல் அரசன் துறவியிடம் கேட்டான்,''பிரார்த்தனைகளில் மிகச் சிறந்தது எது?''
துறவி சொன்னார்,''உங்களைப் பொறுத்தவரை உறக்கம் தான் ,''
அரசன் விழித்தான்.துறவி சொன்னார்,''நீங்கள் உறங்கும் 
போதாவது ஜனங்கள் துன்புறுத்தப் படாமல் இருக்கிறார்கள் அல்லவா,அதனால் தான்.''
_ஷா அதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 7:17 pm

துன்பம்

நஷ்டமடைந்த வியாபாரி ஒருவர் ,தன மகனை அழைத்து அது பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று சொல்ல ,மகன் காரணம் கேட்டான்.வியாபாரி சொன்னார்,''இரு துன்பங்களை ஒரே நேரத்தில் அனுபவிக்க நான் விரும்பவில்லை.பொருள் நஷ்டம் ஒன்று;இரண்டாவது ,நமது நஷ்டத்தைக் கேட்டு உறவினர் அடையும் மகிழ்ச்சி.''
---ஷா அதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 7:19 pm

[You must be registered and logged in to see this link.]

கொடைவள்ளல் ஹாத்தீம் தாயிடம் கேட்கப்பட்டது,''தங்களைக் காட்டிலும் உயர்ந்த மனிதரைத் தாங்கள் பார்த்ததுண்டா?''
ஹாத்தீம் தாய் சொன்னார்,''உண்டு.ஒரு நாள் நாற்பது ஒட்டகங்களை அடித்து விருந்து வைத்தேன்.அன்று பாலை வனத்தில் ஒருவன் விற்குச் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவனிடம் விருந்துக்கு வராத காரணம் கேட்டேன்.அவன் சொன்னான்,'எவன் தன சொந்தக் கைகளினால் உழைத்து உண்கிறானோ ,அவன் பிறர் தரும் விருந்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கமாட்டான்.,'அந்த ஏழை தான் என்னைக் காட்டிலும் உயர்ந்தவன்.''
_இஸ்லாமிய ஞானி ஷா அதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 7:19 pm

மதிப்புக்குக்காரணம்


திரைச் சீலையைப் பார்த்து கொடிகேட்டது,''நாம் இருவரும் அரசனுக்குத் தொண்டு செய்பவர்கள்.நான் மலை,காடு,பாலைவனம் என்று புழுதியிலும் ,காற்றிலும் துன்புற்று நீண்ட பயணங்கள் செய்தும் உனக்கிருக்கும் மதிப்பு எனக்கு இல்லையே!உன்னை அழகிகள் அலங்கரிக்கிறார்கள்.வாசனைத் திரவியங்களால் மனம் கமழவைக்கிறார்கள்.இதற்கு என்ன காரணம்?''
திரைச் சீலை அடக்கமாகச் சொன்னது,''என் தலை எப்போதும் தரையைத் தொட்டுக்கொண்டிருக்கிறது.உன் தலையோ அகந்தையுடன் ஆகாயத்தைப் பார்த்தபடி இருக்கிறது.காரணம் இது தான்.''
_ஷா அதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 7:20 pm

[You must be registered and logged in to see this link.]

இரவில் என் தந்தையுடன் உட்கார்ந்து புனித குர் ஆன் படித்துக் கொண்டிருந்தேன். சுற்றி இருந்த எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.ஏக்கத்துடன் நான் சொன்னேன்''ஒருவர் கூட தலையைத் தூக்கிப் பார்ப்பதாக இல்லையே ?பிணம் போலக் கிடக்கிறார்களே!''
''என் தந்தை சொன்னார்,''என் அன்பு மகனே,நீயும் உறங்கப்போ.மற்றவர்களைப் பழித்துப் பேசுவதிலும் அது சிறந்தது.''
_ஷா அதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 7:22 pm

வேதனை
**************
காயம் பட்டறியாதவனுக்குஅதன் வலி தெரியாது.அதன் வேதனையை அனுபவித்தவனிடம் தான் அதன் தன்மையைப் பற்றிச் சொல்லலாம்.உன் நிலை என் நிலையாக மாறும் வரை என் நிலைமை கட்டுக் கதையாகவே தோன்றும்.என் வேதனையை இன்னொருவனின் வேதனையோடு ஒப்பு நோக்க வேண்டாம்.ஏனெனில் அவன் உப்பைக் கையில் வைத்துள்ளான்.நானோ நெஞ்சிலிருக்கும் காயத்தில் வைத்துள்ளேன்.
_ஷா அதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 7:23 pm

பொறுப்பாளிகள்
**************
வேட்டையாடிய மிருகங்களை சமைக்க உப்பு தேவைப் பட்டது.அரசன் உப்பு வாங்க ஒருவனை அனுப்பும் போதுசொன்னான்,''உப்பிற்கான காசைக் கொடுத்து விடு.''கூட இருந்தவர்கள் கேட்டார்கள்,''இது அற்பமான விஷயம்.இதற்கு இவ்வளவு எச்சரிக்கை தேவையா?''அரசன் சொன்னான்,''உலகில் கொடுமைகள் துவக்கத்தில் சிறிய அளவில் தான் இருந்தன.பின்னால் வந்த ஒவ்வொருவரும் அவற்றைப் பெரிய அளவில் வளர்த்துவிட்டதற்குப் பொறுப்பாளிகள்.அரசன் இலவசமாக ஒரு ஆப்பிளை எடுத்தால் ,அவனது ஆட்கள் ஒரு மரத்தையே எடுத்துக் கொள்வார்கள்.''
_ஷா அதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 7:24 pm

தாங்கும் சக்தி
**************

ஒரு ஊரில் ஒரு பயில்வான் இருந்தார்.கனமான இரும்புக்குண்டுகளை அனாயாசமாக த்தூக்குவார .தாங்குவார் .அவர் யாரிடமும் தோற்றது கிடையாது.
ஒரு நாள் பாரசீகக் கவிஞர் ஷா அதி அந்த பயில்வானை பார்க்க வந்தார்.அந்த சமயம் பயில்வான் மிகுந்த கோபத்துடன் காணப்பட்டார்.கவிஞர் அருகில் இருந்தவர்களிடம் காரணம் கேட்க அவர்கள் சொன்னார்கள்''பயில்வானை யாரோ ஏளனமாகப் பேசி விட்டார்களாம்.அதனால் தான்கோபமாக இருக்கிறார்.''
இதைக் கேட்ட கவிஞர் ஷா அதி சொன்னார்''எத்தனையோ கடுமையான எடைகளைத் தாங்கும் இந்த பயில்வான் ,யாரோ கூறிய ஓரிரெண்டு வார்த்தைகளை த்தாங்க முடியாதவராய் இருக்கிறாரே?ஐயோ பாவம்!''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்  Empty Re: ஞானி ஷா அதி.- தத்துவக்கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum