தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கருத்து சுவையான சிறுகதைகள்
2 posters
Page 1 of 1
கருத்து சுவையான சிறுகதைகள்
பழிச் சொல்
*****************
குறுஞ்சி என்ற ஊரில் முனுசாமி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான்.
பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின், வீட்டிற்கு வந்த முனுசாமியின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான்.
என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். “துறவியாரே! நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!” என்று கேட்டான்.
துறவி சிறிது யோசித்துவிட்டு, “இன்று இரவு ஐந்து கிலோ இலவம்பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்,” என்று கூறினார்.
முனுசாமியிடம் பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். “துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?” என்று கேட்டான்.
உடனே துறவி, “முனுசாமி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா,” என்று கூறினார்.
முனுசாமி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட முனுசாமி திடுக்கிட்டான். மீண்டும் துறயிடம் ஓடி வந்தான்.
“துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?” என்று கேட்டான்.
துறவி சிரித்துவிட்டு, “முனுசாமி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடும் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்,” என்று கூறினார்.
முனுசாமிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் முனுசாமி.
நன்றி ';மயூரேசன்

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கருத்து சுவையான சிறுகதைகள்
நம்பிக்கை தான் வெற்றி
*************************************
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.
அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.
பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!
அந்தக் காசில் துளையே இல்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ”என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்” என்றாள்.
”இது எப்போது நடந்தது?” என்று கேட்டான். ”அந்தக் காசு கிடைத்த மறுநாளே” என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான்.
…………………………………………………………………………………………………………………………………
‘உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்…!
நன்றி ;மயூரேசன்

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..
*******************************************
கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது
. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது…கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்.
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது.
கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார். இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது. கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார். நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது.
கதவு திறந்து ஒரு ஆள் வந்தார். நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார். கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …??? அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு.
…………………………………………………………………………………………………………………………………
Note : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.

‘உலகைத் துறந்தவன் உயர்ந்தவனா?
**************************
அரசன் ஒருவனுக்கு ஓர் ஐயம் எழுந்தது – ‘உலகைத் துறந்தவன் உயர்ந்தவனா? உலகியல் கடமைகளை ஒழுங்காகச் செய்யும் இல்லறத்தான் உயர்ந்தவனா?’ என்று. இதற்கு விடை தரும்படி துறவி ஒருவரிடம் அரசன் வேண்டினான்.
‘அவரவர் நிலையில் இருவரும் உயர்ந்தவரே’ என்றார் துறவி. ‘இதை நிருபிக்க வேண்டும்’ என்றான் வேந்தன். ‘நிச்சயமாக! என்னோடு வாருங்கள்’ என்றார் துறவி.
வேந்தனும் துறவியும் வேறொரு நாட்டில் நுழைந்தபோது, அங்கே சுயம்வரம் நடப்பதாக அறிந்தனர். சுயம்வர மண்டபத்தை இருவரும் அடைந்தனர். இளவரசி கையில் மணமாலையுடன் நின்றபடி, மண்டபத்தில் வீற்றிருந்த மன்னர்களைப் பார்த்தாள்.
ஒருவரிடமும் அவள் மனம் மயங்கவில்லை. வேடிக்கை பார்த்த இளம் துறவி ஒருவரின் பேரழகு அவளை ஈர்த்தது. ஓடிச்சென்று அவன் கழுத்தில் மாலையிட்டாள்.
இளந்துறவியோ மாலையை வீசியெறிந்து விட்டு விரைவாக வெளியேறினான். மனம் நிறைந்த அவனையே மணாளனாக அடைவது என்ற முடிவுடன் இளவரசியும் பின் தொடர்ந்தாள். எந்த நிலையிலும் தன்னால் அவளை ஏற்க இயலாது என்று மறுத்துவிட்டு, அந்த இளந்துறவி நடந்தார்.
அழுத கண்ணீருடன் இளவரசி இதயம் வருந்த, அங்கேயே நின்றாள். அரசனும் துறவியும் அந்தக் காட்சியைக் கண்டனர். அவர்களது வழிப்பயணம் தொடர்ந்தது.
அடர்ந்த காட்டில் நடந்த இருவரும் ஒரு மரத்தின் அடியில் வந்து நின்றனர். இருவருக்கும் கடுமையாகப் பசித்தது. இரவுக் குளிரில் உடல் நடுங்கியது. மரக்கிளையில் ஒரு குருவி தன் துணையுடனும், மூன்று குஞ்சுகளுடனும் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.
வேந்தனும் துறவியும் கீழே வாடி நிற்பதை பார்த்த குருவி, பறந்து சென்று சுள்ளிகளைச் சுமந்து வந்து தீ வளர்த்து, முதலில் அவர்களது குளிரைப் போக்கியது. விருந்தினரின் பசியாற்ற விரும்பிய குருவி, ‘என் உடலை அவர்களுக்கு உணவாக்குகிறேன்’ என்று பெண் குருவியிடம் சொல்லிவிட்டு நெருப்பில் விழுந்தது.
ஒரு சிறிய குருவியால் எப்படி இருவர் பசி தீரும் என்று சிந்தித்த பெண் குருவி, தன் கணவன் வழியைப் பின்பற்றித் தானும் தீயில் விழுந்தது. ‘நம் பெற்றோருடன், நாமும் வந்த விருந்தினர்க்கு உணவாவோம்’ என்று மூன்று குஞ்சுகளும் நெருப்பில் விழுந்து கரிந்தன.
அரசனும் துறவியும் அந்த அன்பிற் சிறந்த பறவைகளின் பண்பைக் கண்டு வியந்தனர். ‘மன்னா, அவரவர் நிலையில் அவரவர் உயர்ந்து நிற்க முடியும் என்பதை இப்போது உணர்ந்திருப்பாய்.
அழகான பெண்ணையும் பேரரசையும் துரும்பென உதறித் தள்ளிய அந்த இளந்துறவி எப்படி உயர்ந்தவனோ, அப்படித்தான் பிறருக்காகத் தம்மைத் தியாகம் செய்த இந்தப் பறவைகளின் இல்லறமும் உயர்ந்தது. ஏற்றுக் கொண்ட நெறியில் இருந்து எள்ளளவும் பிறழாமல் வாழ்வதுதான் முக்கியம்’ என்று விளக்கினார் துறவி.
நன்றி ஒன்லி தமிழ்

கிட்டாதாயின் வெட்டென மற:
காதலியைப் பிரிந்து போர்க்களத்தில் இருந்த ஒரு ராணுவ வீரனுக்கு அவன் காதலியிடமிருந்து ஒரு கடிதம். ‘நீ சென்ற பிறகு எனக்கு ஒரு BoyFriend கிடைத்தான். அவனைத்தான் நான் மணக்கப் போகிறேன். அதனால், உன்னிடம் உள்ள என் புகைப்படத்தை திருப்பி அனுப்பிவிடு’ என்று அதில் எழுதியிருந்தது.
அவளுக்கு பதிலடி கொடுக்க நினைத்த அவன், சக வீரர்களின் காதலி, தோழிகள் என்று பல பெண்களின் புகைப்படங்களையும் சேகரித்து, அவற்றோடு அந்தக் காதலியின் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பினான். கூடவே, ஒரு கடிதம்… ‘உங்கள் கடிதம் கிடைத்தது. எவ்வளவு யோசித்தும் உங்கள் முகம் எனக்கு ஞாபகம் வரவேயில்லை. அதனால் நான் இதுவரை சந்தித்த எல்லா பெண்களின் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளேன். உங்கள் படத்தை எடுத்துக் கொண்டு, மற்றதை திருப்பி அனுப்பி விடவும்!’’
…………………………………………………………………………………………………………………………………
நம்மைப் புறக்கணிப்பவர்களுக்கு சரியான தண்டனை நாம் அவர்களைப் புறக்கணிப்பதுதான். அவன் நல்லவனோ… கெட்டவனோ, கெட்டவன் என்று நினைத்துக் கொள்வதுதான் நமக்கு நல்லது.

பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ?
***************
உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .
ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.
…………………………………………………………………………………………………………………………………
இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
nnaRi maiyooran

புத்திசாலித்தனம்.
*********************
ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார்.சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார்.மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது.
அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார் .பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது.
கப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான்,அதில்
1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய்.
2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய்
என்று எழுதி இருந்தது.
மண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும்…

“நீதிக்கதை”
ஒரு செல்வந்தர் இருந்தார்.
ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.
ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..
மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.
அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான்.
செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது.
ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப் பட்டான்.
மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான்.
அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான்.
செல்வந்தனுக்குப் புரிந்தது .
அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!
நீதி: இல்லாத ஒருவனுக்கு நீ செய்த உதவே, கடவுளுக்கு செய்த உதவி எனப்படும்…
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கருத்து சுவையான சிறுகதைகள்
விடுதி:
மன்னன் ஒருவன்,ஒரு ஜென் குருவை தன அரண்மனைக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அழைத்தான்.
அதற்கு சம்மதித்த குரு மறுநாள் அரசனை சந்தித்தார்.”சில நாட்கள் உன் விடுதியில் தங்கிப்போக வந்துள்ளேன்,”என்றார் அவர்.மன்னனுக்கோ அதிர்ச்சி.அவன் குருவிடம் வருத்தத்துடன் கேட்டான் ,”குருவே,இது என் அரண்மனை.இதை விடுதி என்று சொல்கிறீர்களே?”
குரு கேட்டார்,”மன்னா ,உனக்கு முன்னாள் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள்?”மன்னன் தன தந்தையார் என்று சொல்ல,அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று குரு கேட்டார்.அரசனும் தன பாட்டனார் என்றான்.குரு,”உன் தந்தை,பாட்டனார் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?”என்று கேட்டார்.மன்னனும்,”அவர்கள் இறந்து மேலோகம் சென்று விட்டார்கள்,”என்று சொன்னான்.அதன் பின் குரு கேட்டார்,”உனக்குப் பிறகு இந்த அரண்மனையில் யார் இருப்பார்கள்?”அரசன் சொன்னான்,”என் மகன்,அதன் பின் என் பேரன்.”குரு,”ஆக,உன் பாட்டனார் சில காலம் இருந்தார்.பிறகு போய் விட்டார்.அதன்பின் உன் தந்தையார் இருந்தார்.பிறகு போய் விட்டார்.இப்போது நீ இருக்கிறாய்.நீயும் ஒரு நாள் மேலுலகம் போய் விடுவாய்.உனக்குப் பின் உன் மகன் இங்கு வாசிப்பான்.அவன் போனபின் உன் பேரன் தங்கியிருப்பான்.யாரும் இங்கே நிரந்தரமாக இருக்கப் போவதில்லை.
இப்படி ஒவ்வொருவரும் சில காலம் மட்டும் தங்கிப் போகும் இடத்தை விடுதி என்று சொன்னதில் என்ன தவறு?”என்று கேட்டார்.
# நாமும் இவ்வாறே, சில காலம் மட்டும் வாழும் இந்த மண்ணில் சொத்து சுகம் என்று சொந்தம் கொண்டாடி பிறரை மதிப்பதில்லை.. இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, நாமே கூட…

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கருத்து சுவையான சிறுகதைகள்
» ஈழத்து சிறுகதைகள்
» சிறுவர்களுக்கான சிறுகதைகள்
» படித்த பிடித்த சிறுகதைகள்
» பீர்பால் வீடு எது?
» ஈழத்து சிறுகதைகள்
» சிறுவர்களுக்கான சிறுகதைகள்
» படித்த பிடித்த சிறுகதைகள்
» பீர்பால் வீடு எது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum