தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு பக்க கதைகள்

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 14, 2013 8:44 pm

First topic message reminder :

டூப் டூப் – ஒரு பக்க கதை
**************************************


ரைஸிங் ஸ்டார் பிரேம்குமாரிடம் டைரக்டர் அமர் கேட்டான்
”பிரேம் சார், இந்த பைக் ஹம்ப் நீங்களே பண்றீங்காளா?”
-
இல்லை, அமர், டூப்பை வச்சு பண்ணிடுங்க, என்றவாறே
கேரவனுக்குள் சென்றான் பிரேம்குமார்.
-
டைரக்டர், தன் உதவியாளரிடம் கூறினான், ‘இவன் ஒரு
காலத்தில் ஃபைட்டரா கூலிக்கு மாரடிச்சவன்தான், இப்ப ஒரு
சின்ன பைக் ஜம்புக்கு இவனுக்கு டூப் போட வேண்டியிருக்கு’
என்று அலுத்துக் கொண்டான் அமர்.
-
கேரவனிலிருந்து வந்து டச்சப் செய்து கொண்டிருந்த
பிரேம்குராரிடம் அஸிஸ்டென்ட் டைரக்டர் கணேஷ்
கேட்டான்.
-
”சார் ஒரு சின்ன பைக் ஜம்புக்கு டூப் போடச் சொன்னதுக்கு
டைரக்டர் உங்க மேல ஆதங்கப்பட்டார். நீங்க நல்லா
அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போற கேரக்டர். நீங்க டூப் போடச்
சொன்னதுக்கு ஏதாவது காரணம் இருக்குமே?
-


கணேஷ், ஒரு காலத்திலே நானும் ஃபைட்டரா டூப்
போட்டவன்தான். ஒரு தடவை பைக் ஹம்ப் பண்ணினா எனக்கு
ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும். இப்ப அதை நான் பண்ணினா ஒரு
டூப் போடற ஸ்டண்ட் நடிகரோட வயிற்றிலே அடிச்ச மாதிரி ஆயிடும்..!
அதனால்தான் நான் முடியாதுன்னேன்! நான் செஞ்சது சரிதானே?
-
நூறுசதவீதம் சரி சார்! என்று சந்தோஷப்பட்டான் கணேஷ்
-
—————————–
>வி.சகிதாமுருகன்


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 1:00 pm; edited 6 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 20, 2013 10:24 pm

மாஸ்டர் - ஒரு பக்க கதை
**************************************
''என் டீக்கடையில எந்த சரக்கு மாஸ்டர் வந்தாலும் ரெண்டு
மூணு நாள்ல போயிடறாங்கப்பா. அதனால வியாபாரமே 
படுத்திடுச்சு'' நண்பர் கேசவனிடம் சொல்லி வருத்தப்பட்டார
சண்முகம்
-
''னக்குத் தெரிஞ்ச ஒரு மாஸ்டர் இருக்கார், பஜஜி, வடை
பக்கோடா எல்லாமே நல்லா போடுவார். அவர் கை 
மணத்துக்காகவே கூட்டம் கூடும் பாரு''என்று சொல்லி, 
அடுத்த நாளே அவரை அழைத்து வந்தார் கேசவன்.
-
ஏற்கனவே இருந்தவருக்குக் கொடுத்ததைவிட அவருக்குக் 
கூடுதல் சம்பளம் கொடுத்து வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.
-
ஆனால் அவரும் மூன்றே நாட்களில் சொல்லாமல் கொள்ளாமல்
வேலையை விட்டு நின்றுவிட்டார்.
-
கேசவனுக்குக் காரணம் புரிந்துவிட்டது. அடுத்த நாள் கட்டு
மஸ்தான பாடியோடு ஒரு ஸ்டண்ட் மாஸ்டரை கடைக்கு 
அழைத்து வந்தார்.
புரியாமல் விழித்தார் சண்முகம்.
-
'சண்முகா, உன் கடைக்கு எதிரே டாஸ்மாக் இருக்கு. அங்க 
குடிச்சுட்டு உன் கடையில வந்து பலர் சண்டை போடுறாங்க. 
அந்த அடிதடிக்கு பயந்துக்கிட்டுதான் எந்த மாஸ்டரும் உன் 
கடையில நிலைக்கிறதில்ல. இவரைப் பார்த்த பிறகு யாரும் 
உன் கடையில சண்டை போடமாட்டாங்க. இவருக்கு 
சண்டை போடவரும். பஜ்ஜி, பக்கோடா போட நீ சொல்லிக் 
கொடு!'' என்றார் கேசவன்.
-
பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்ததில் சந்தோஷம் 
காட்டியது சண்முகம் முகம்
-
=====================
>மா.கமலவேலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 21, 2013 3:26 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 21, 2013 6:30 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 21, 2013 7:00 pm

லிஃப்ட்! - ஒரு பக்கக் கதை
**************************************

மார்த்தாண்டத்திலிருந்து களியக்காவிளை நோக்கி தனது 
இரு சக்கர வாகனத்தில் வேகமாய் போய்க் கொண்டிருந்தான் 
விமல்.
-
வழியில் குழித்துறை ஸ்டாப்பில் பஸ்ஸுக்கு காத்துநின்ற 
ஒருவன் லிஃப்ட் கேட்டு வழி மறித்தான். விமலின் கால்கள் 
பிரேக்கை தொடாமலேயே அவனைக் கடந்து போனது.
-
வீட்டில் வந்ததும் தனது மனைவியிடம் நடந்த நிகழ்வுகளை 
பட்டியலிட்டபோது வழியில் லிஃப்ட் கேட்ட விஷயமும் 
சேர்ந்து கொண்டது.
-
“ஏங்க... அவருக்கு லிஃப்ட் குடுத்திருக்கலாமில்ல... இதெல்லாம் 
ஒரு மனிதாபிமானம் தானே... இத ஏன் செய்ய மாட்டேங்கறீங்க...?’ 
செல்லமாய் கடிந்து கொண்டாள் அவனது மனைவி.
-
“மனிதாபிமானம் இல்லாம இல்ல.. அவன் லிஃப்ட் கேட்டு நின்ற 
இடம் ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு பஸ் வந்து போற இடம், 
இதுவே ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் வர்ற இடமா இருந்தா
நிச்சயம் லிஃப்ட் கொடுத்திருப்பேன். டிக்கெட் செலவ 
மிச்சப்படுத்துறதுக்காக லிஃப்ட் கேட்கிறவங்களுக்கு உதவறதுக்கு 
பேரு மனிதாபிமானம் இல்ல...!’
-
தனது கணவர் சொல்வதும் சரிதான் என்று மௌனமாகவே 
விழி தாழ்ந்தாள் அவரது மனைவி.
-
------------------------------

- ஐரேனிபுரம் பால்ராசய்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 21, 2013 7:02 pm

மரியாதை – ஒரு பக்க கதை
*******************************************
தன் முதலாளியை நினைத்து ஏமாற்றமாக இருந்தது
குமாருக்கு. போட்டிக்கு பல சூப்பர் மார்க்கெட்டுகள்
வந்துவிட்ட ஏரியாவில் அவர்களுடையது ஒரு பலசரக்கு
கடை.
-
கல்லாவில் உட்கார்ந்து கடைக்கு வருபவர்களிடம்
சிரித்தமுகத்துடன் பேசி மரியாதையாக நடத்துவார்
முதலாளி.

அப்படிப்பட்டவர் தன் மகளுக்குத் திருமணம் நடத்தும்
இந்த சமயத்தில், வாடிக்கையார்களில் ஒருவருக்கு கூட
பத்திரிகை வைக்கவில்லை.

அவர் தரும் மரியாதை வெற்று நடிப்புதான் என்பதை
நினைக்கும்போதே அவனுக்கு வெறுப்பாக வந்தது.
-
குமாரு…இந்த பார்சல்ல நிறைய எவர்சில்வர் தட்டு
இருக்கு. அடிபடாம பத்திரமா எடுத்து வை.

கல்யாணம் முடிஞ்சதும் நம்ம கஸ்டமர்கள்
எல்லோருக்கும் மறக்காம கொடுக்கணும் என்றார்
முதலாளி.
-
என்ன இவர்…யாருக்கும் பத்திரிகை கொடுக்காமல்
அன்பளிப்பு மட்டும் கொடுக்கிறாரே…என்று குழப்பமாக
பாத்தான் குமார்.
-
அது ஒண்ணுமில்லடா..அவசரத்தில் நாம யருக்காவது
பத்திரிகை கொடுக்காம விட்டுப் போகலாம்.
அதனால அவங்க தப்பா நினைச்சுக்கிட்டு கடைக்கு
வராம போகலாம்.

பத்திரிகை கொடுத்தும் கல்யாணத்துக்கு வர முடியாம
போனவங்க அதுக்கு அப்புறம் நம் முகத்தைப் பார்க்க
வருத்தப்பட்டு பக்கத்துக் கடைக்குப்போயிடலாம்.
இதெல்லாம் எதுக்கு?
-
கல்யாணம் ஊர்ல நடந்தது…இந்தாங்க அன்பளிப்பு’ன்னு
கொடுத்துட்டா அவங்களுக்கும்
இழப்பில்ல…நமக்கும் இழப்பில்ல..என்றார் முதலாளி!
-
நம்ம முதலாளியை அடிச்சுக்க ஆளில்லை என்று
முடிவெடுத்தான் குமார்.
-
————————————-
- நிகில்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 21, 2013 7:06 pm

அசல் தாதா - ஒரு பக்க கதை
******************************************
தரண் கதாநாயகனாக நடித்து வெளிவந்த மூன்று தாதா
படங்களும் சில்வர் ஜூப்ளி கொண்டாடின. 

இதோ, இன்று தனது அடுத்த படமான 'அசல் தாதா' பற்றி 
அறிவிக்கப் போகிறான்...
-
நிருபர்கள் கூட்டத்தில் தரண் சொன்னான்: 
-
''இந்தப் படத்தின் தயாரிப்பாளர் டெல்லியில் மிகப் பெரிய 
மனிதர். அவருடைய மகன்தான் இதில் கதாநாயகனாக 
அறிமுகமாகிறார். 
-
நான் கதாநாயகனின் அடியாட்களில் ஒருவனாக நடிக்கிறேன்...
புதுக் கதாநாயகன் நிச்சயம் நம்பர் ஒன் நடிகரா வருவார்!....
-
அவ்வளவுதான், ரசிகர்கள் கொதித்தார்கள். 'என்ன இது 
அக்கிரமம்? எவனோ ஒரு புதுமுகம் கதாநாயகனாக நடிக்க நம்ம
தலைவர் கேவலம் ஒரு அடியாளாக நடிப்பதா?
-
வீட்டில் தரணின் மனைவியும் கடாசினாள்: ''உங்களுக்கு
புத்தி கித்தி கெட்டுப் போச்சா? நம்பர் ஒன் ஹீரோவான நீங்க 
எவனோ ஒரு சுண்டைக்காய் பையன் ஹீரோவா நடிக்கிற 
படத்தில அவனோட அடியாளாவா நடிக்கணும்?'
-
''உஷ்!'' என அவளை அடக்கினான் தரண். ''அசல் தாதா
படத்தோட தயாரிப்பாளர் யார்னு தெரியாமப் பேசாதே...
தீர்த்துப்புடுவார் தீர்த்து! டெல்லியில் ஐநூறு அடியாள்களை
வைச்சு ஒரு பயங்கர சாம்ராஜ்யத்தையே நடத்திக்கிட்டிருக்கிற 
'ஒரிஜினல் தாதா' அவர்!
-
--------------------------------------------------------
>சுபமி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 22, 2013 1:04 pm

அப்பா- ஒரு பக்க கதை
******************************
”ஏய்யா சந்துரு…பத்து நாளைக்கு பெங்களூரு போயிட்டு வராலாமுன்னு
நினைக்கிறேன்.”
-
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஜெராக்ஸ், பிரவுஸிங்
சென்டர் என்று தொடங்கி, யாருடைய தலையீடும், எதிர்பார்ப்பும்
இல்லாமல் இருப்பவர் அப்பா.
-
ஓய்வு என்ற வார்த்தைக்கே ஓய்வு கொடுக்கணுமின்னு சொல்பவர்
அப்பா. அவரா ஓய்வு தேடி? ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தான் சந்துரு.
-
ரயிலில் அப்பாவுக்கு விருப்பமான சன்னலோர இருக்கை கிடைத்ததில்
கூடுதல் மகிழ்ச்சி அவருக்கு. ரயில் கிளம்ப இன்னும் சற்று நேரம்
இருந்தது.
-
‘’ல்லிதா மகால்..கெம்போர்ட்…கப்பன் பார்க்..சாமுன்டீஸ்வரி அம்மன்
கோவில்..ஊருக்குள்ளே இருக்கும் இஸ்கான்…அத்தனை பெரிதாய்
பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவன் கோவில்..முடிஞ்சா
இதையெல்லாம் பாருங்க…’’
-
சந்துரு சொன்னதும், புன்னகைத்துக் கொண்ட சிவராமன சொன்னார்.
-
‘’இது ஓய்வுக்கானபயணம் இல்ல, டிஜிட்டல் சிட்டிங்கிறாங்களே…
அங்கேயிருந்து ஒரு நல்ல செய்தியைத் தெரிஞ்சுகிட்டு வந்தா,
இங்கெ இருக்கிற இளைஞர்கள் ஒரு நாலு பேருக்காவது வேலை
வாய்ப்பு கொடுக்க முடியுந்தானே? அதுக்கானத் தேடல்…”
-
இந்த வயசுலேயும் நாலு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைத்
தரணுமின்னு தேடல் பார்வையோடு பயணிக்கும் தன் அப்பா முன்,
-
சனியும் ஞாயிறும் வீட்டில் விழுந்து கிடக்க நினைக்கும் தன்னை
நினைத்து தலை குனிந்து நின்றான் சந்துரு.
-
===================================
>ந.ஜெயபாலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 22, 2013 1:07 pm

உலகம் – ஒரு பக்க கதை
**************************************
லேடீஸ் கிளப்பிலிருந்து கொண்டு வந்திருந்த மேகஸினை
ரம்யா சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருக்கையில் அவளது
பத்து வயது மகன் ராகுல் சதா பேச்சுக் கொடுத்தவாறே இருந்தான்.
-
அவன் வாயை மூட எண்ணியவள், மேகஸினிலிருந்து உலகப் படம்
ஒன்றைக் கிழித்தெடுத்து, கத்திரியால் அதைப் பல துண்டுகளாக
வெட்டி, அவனிடம் கொடுத்து ஒட்டச் சொன்னாள். அவன் அதைச்
சரியாக ஒட்ட ஒரு மணி நேரமாவது ஆகுமென்று யோசித்தவாறு
அவள் மீண்டும் படிக்கத் துவங்க, ஐந்தே நிமிடங்களில் வெற்றியுடன்
திரும்ப வந்தான் ராகுல்.
-
‘ எப்படிடா இவ்வளவு சீக்கிர்ம ஒட்டினே? என்றாள் ஆச்சரியத்துடன்.
-
என்னோட ஃபேவரிட் நடிகை ஹன்சிகாவோட போட்டோ பின்பக்கம்
இருந்தது, அதைப் பார்த்து சுலபமா ஒட்டிட்டேம்மா’ என்றான்
அவன் அமைதியாக.
-
‘எந்தப் பிரச்னைக்கும் மறுபக்கம் உண்டு’ என்பதை உணர்ந்தாள் சம்பா.
-

==========================
>ஷேக் சிந்தா மதார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 22, 2013 1:10 pm

கடமை – ஒரு பக்க கதை
**************************************
தலைவிரி கோலமாய் கண்ணீரும் அழுகையுமாக் கிடந்தாள்
சுகந்தி
-
தீர்ந்து போகிற சோகமா, அவளுக்கு நேர்ந்திருக்கிறது?
-
ஈடு செய்கிற இழப்பா, அவள் இழப்பு?
-
கைக்குழந்தையோடு அவளைது தவிக்கவிட்டு, ஒரு சிறு வபத்தில்
பெரிய துன்பத்தைத் தந்துவிட்டுப் போய்விட்டானே அவள் கணவன்.
-
‘’இனி இருந்து என்ன செய்யப் போகிறோம்? தானாகப் போகாத உயிரை
தற்கொலையாய் மாய்த்துக் கொள்ள வேண்டியதுதான்.!’’
-
எண்ணி எண்ணிக் குமைந்தாள் சுகந்தி.
-
எதிரில் மாமனார் சந்திரசேகரன் வந்து நின்றார்.
-
‘’சுகந்திர இப்படியே பட்டினி கெடந்தா எப்படிம்மா? எழுந்து சாப்பிடம்மா
உம் பிள்ளை முகத்தைப் பாரும்மா!’’
-
கலங்கி கண்ணீர்விட்டபடியே தொடர்ந்தார்..!
-
‘’உன் ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்கணும், உன் மாமி சிறுசாவே
போனதும் உன் புருஷனை நானே எவ்வளவோ கஷ்டப்பட்டு வளர்த்தேன்.
கொடுத்து வைக்கலை? இனிமே நீதானே எல்லாம்!
நீ இல்லாட்டி உன் பிளை மட்டுமல்ல, நான் – கிழவன் – உன் மாமனாரும்
அனாதைதானே? நானும் குழந்தைதானே! ரெண்டு குழந்தைகளைக்
காப்பாற்ற வேண்டிய கடமை உனக்கு!’’

உடனே எழுந்தாள் சுகந்தி.
எழுப்பி விட்டது கடமை!
-
——————————————– -
>அ.சி.மணியன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 22, 2013 1:12 pm

காலண்டர் – ஒரு பக்கக் கதை
********************************************
கோபத்துடன் எரிச்சலும் சேர்ந்தே வந்தது மாலதிக்கு.
-
எப்பொழுதும் மாதத்தின் முதல் வாரத்தில் வீட்டுக்குத்
தேவையான அனைத்துப் பொருட்களையும் குமார்
ஸ்டோர்லயே வாங்கிவிடுவார்.

இப்ப மட்டும் ஏன் இப்படி ஒவ்வொரு பொருளுக்கும்
ஒவ்வொரு கடையா ஏறி இறங்குறாரு? மாலதிக்கு
ஒன்றும் புரியவில்லை. கணவனை பின் தொடர்ந்தாள்.
-
இன்னும் முடிந்தபாடில்லை. “அவ்வளவுதானா, புதுசா
கடை ஏதாவது இருக்கா…?’ கேட்டே விட்டாள்.
-
“கோபப்படாத மாலு… இத்தனை கடை ஏறி இறங்கியதுல
எத்தனை காலண்டர் இலவசமா கிடைச்சிருக்க பாரு.’
-
“நீங்க என்ன காலண்டர் பைத்தியமா… ஏற்கெனவே
நம்ம வீட்டுல ஏழெட்டு காலண்டர் கிடக்குது.
எல்லாத்தையும் உங்க கழுத்துலதான் மாட்டிக்கிட்டுத்
திரியணும்…’ படபடத்தாள் மாலதி.
-
“அப்படிச் சொல்லாதே மாலு. நாம நகரத்துல இருக்கோம்.
ஏதோ ஒரு கடையில காலண்டர் சும்மா கிடைச்சுடுது.
ஆனா நம்ம கிராமத்த நினைச்சுப் பாத்தியா. ஒரு
காலண்டர் வாங்கணும்னா நாற்பது ஐம்பது ரூபா
ஆகும். நாம் இப்படி வாங்கிட்டுப் போயி, கிராமத்துக்குப்
போறப்ப மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா, அக்கம்
பக்கம்னு ஆளுக்கு ஒண்ணா கொடுத்தோம்னா, அவங்க
மனசு எவ்வளவு சந்தோஷப்படும்…’ என்ற கணவனை
வாஞ்சையோடு பார்த்தாள் மாலதி.
-
——————————
>பட்டவர்த்தி ஆதி. சௌந்தரராஜன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 22, 2013 1:13 pm

பாசம் - ஒரு பக்க கதை
**************************************
அஞ்சலை வீட்டுக்குள் நுழையும்போதே ‘வெற்றிலை
வாங்கிட்டியா, கொண்டா’ என்று மாமியார் கிழவி
கையை நீட்டினாள்.
-
‘இப்ப என்னா, ஒரு நாள் வெற்றிலை இல்லைன்னா
உசிரா போயிடும்?’
-
ஆமாண்டியம்மா, உன் கிட்ட சிக்க வச்சுட்டு, பாவிப்பய
புள்ள போய்ச் சேர்ந்துட்டான் பாரு. எனக்கு நல்லா வேணும். 
நான் இனி ஒரு நிமிஷம் கூட இங்கிருக்க
மாட்டேன்’. தடியை ஊன்றிக்கொண்டு வெளியேறினாள்.
-
களைப்புத் தீர படுத்து எழுந்த அஞ்சலை வேலை செய்த
வீட்டம்மா கொடுத்த பலகாரப் பொட்டலாத்தைப் பிரித்தாள்.
நெய் வாசம் மணக்கும் அதிரசங்கள். பசங்கள் இருவருக்கும்
ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள். மீதி இருந்த ஒன்றை
வாயில் போடப்போகும் போது மாமியார் ஞாபகம் வர
அப்படியே எடுத்து வைத்தாள்.
‘ஏலே பசங்களா, காளி கோயிலில் பாட்டி இருப்பாங்க. போய் 
கூட்டி வாங்கடா.
-
கோயிலில் கிழவியும் வருந்தினாள். பாவம் மருமகள்.
புருஷன்காரனை விபத்தில் பலிகொடுத்தவள்.
குழந்தைகளோடு என்னையும் சேர்த்து கஷ்டப்பட்டு
உழைச்சுக் காப்பாத்தறாளே! நான் அவளை அனுசரிச்சு
நடக்க வேண்டாமா? நான் இப்படி தொட்டதுக்கெல்லாம் 
கோவிச்சுக்க கூடாது இனிமேல். 
வழக்கம் போல்
பேரப்பசங்க வாராங்களான்னு எட்டி எட்டிப் பார்த்தாள்.
-
=====================================
>பாமதி நாராயணன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 23, 2013 5:46 pm

காரணம் – ஒரு பக்க கதை
******************************************
‘’பக்கத்து வீட்டு சுதா டீச்சர்கிட்டே நீ அதிகம் வச்சுக்கிறதில்லை
மாதிரி இருக்கே… ஏன்?’’ ரம்யா கேட்க…
-
‘’அவ சாதாரண எலிமெண்டரி ஸ்கூல் டீச்சர், நான் ஹையர்
செகண்டரி ஸ்கூல்ல பி.ஜி.அஸிஸ்டென்ட். அப்படியிருகிறப்ப
அவகிட்டே போய் நான் ஏன் வச்சிக்கிறேன்’’ என்றாள் ஆர்த்தி
கர்வத்துடன்.
-
ஒரு மாதம் ஓடி விட்டது.
-
துவைத்த துணிகளை எடுத்து வர வீட்டின் பின்பக்கம் சென்றாள்
ஆர்த்தி.
-
சுவருக்கு அந்தப்புறம் சுதா யாருடனோ பேசிக்கொண்டிருப்பது
மெதுவாக கேட்டது.
-

என்ன பேசுகிறார்கள்? யாதார்த்தமாக கவனித்தாள்.
-
பக்கத்து வீட்டு ஆர்த்தி டீச்சர்கிட்ட, நீ அதிகம் வச்சுக்கிறதிலிலை
மாதிரி இருக்கே..ஏன்?
-
‘என் பெர்சனாலிட்டி என்ன..அவ பெர்சனாலிட்டி என்ன…சினிமா
நடிகை மாதிரி இருக்கிற நான் எங்கே…வத்தலும் தொத்தலுமா
கரிக்கட்டை மாதிரி இருக்கிற அவ எங்கே..அப்படியிருக்கிறப்ப
அவகிட்டே போய் நான் ஏன் வச்சிக்கிறேன்…’’
-
அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் ஆர்த்தி!
-
===========================================
>இரா.வசந்தராசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 23, 2013 5:49 pm

கோடரி – ஒரு பக்க கதை
****************************************
சார் ஒரு ஆள் இப்பத்தான் இருபது கோடரி செய்து வாங்கிட்டுப்
போறான். வழக்கம் போல அவன் அசந்த நேரம் அவனை
செல்போன்ல படம் எடுத்து வச்சிருக்கிறேன். என் பையன்கிட்டே
குடுத்து
எம்எம்எஸ்.சுல அவன் போட்டோவை அனுப்புறேன். ஆளை அமுக்கி
விசாரிங்க’ என்றார் அந்தக் கொல்லுப்பட்டறை ஓனர் சிவலிங்கம்.
-
அவர் மகன் சங்கர் தந்தையைக் கேட்டான். ‘ஏம்பா நமக்குத்
தொழில் தர்ற ஆளை போலீஸ்ல மாட்டி விடுகிறீங்களே உங்களுக்கே
இது நல்லா இருக்குதாப்பா? கேட்ட மகனுக்கு பதில் கூறினார்
சிவலிங்கம்.
-
‘சங்கர் ஒரு கோடரி அடிச்சிட்டுப் போறவங்க வெறகு வெட்டிப்
பொழைக்கிறவங்க. இப்படி பத்து, இருபது கோடரி அடிக்கிறவங்கள்ல
நிறைய பேர் கூலிக்கு ஆளை வச்சு காட்டு மரங்களை வெட்டிக்
கடத்துறவங்காளாத்தான் இருக்கறாங்க.
தன் சுயநலத்துக்காக இயற்கையை அழிக்கிறவங்களை பார்த்திட்டு
என்னால சும்மா இருக்க முடியலை. அதனாலதான் இந்த மாதிரி
ஆட்களை போலிஸூக்குக் காட்டிக் குடுக்கறேன்.
இது தப்பா?’’ என்று கேட்ட தந்தையை பெருமை பொங்கப் பார்த்த
சங்கர் கூறினான். ‘’இது தேசத் தொண்டுப்பா’’ என்று
-
===========================================
>தூத்துக்குடி வி.சகிதா முருகன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 24, 2013 1:44 pm

மாற்றி யோசி..! – ஒரு பக்க கதை
**************************************************
கண்ணனின் மெழுகுவர்த்தி வியாபாரம் படுத்து விட்டது.
வெறும் வெள்ளை மெழுவர்த்திதான் பண்ணுகிறான்.
மார்க்கெட்டில் விதவிதமான கலர்களில்தான் மெழுகுவர்த்தி
அதிகம் விற்பனை ஆனது. ஆனால் அதற்கு அதிக செலவு
ஆகும்.
-
தன் நண்பன் ராமுவிடம் புலம்பினான் கண்ணன். ராமு
உடனே இருபதாயிரம் மெழுகுவர்த்திகளை ஒரு
மைதானத்திற்கு கொண்டு வருமாறு சொன்னான்.
-
கண்ணனுக்கு ஒரே ஆச்சரியம். எனினும் அத்தனை
மெழுகுவர்த்திகளையும் எடுத்துக்கொண்டு மைதானத்திற்கு
விரைந்தான்.
சில நிமிடங்களிலிலேயே அத்தனையும் விற்பனை ஆனது.
-
ராமு சொன்னான். ‘ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது
ஒரு விஷயம் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

முதலில் லஞ்சம். இப்ப பாலியல் பலாத்காரம். நாளை
என்னவோ!

பொது மக்கள் வெள்ளை மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து
தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இனி உன் வியாபாரம் ஓகோ என்று பறக்கும்.

ஊடகத்தில் பணி புரியும் ராமுவை நன்றியுடன் பார்த்தான்
கண்ணன்.
-
=======================================
>மன்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 24, 2013 1:53 pm

மாற்றான் – ஒரு பக்கக் கதை
*******************************************
“பிள்ளை வீட்டுக்காரங்க, நாம எதிர்பார்த்ததைவிட அதிக
வசதியானவங்களா இருப்பாங்கன்னு அவுங்க பேச்சிலிருந்து
புரிந்தது.

பையனோட அப்பா, இருபது கார் வச்சுக்கிட்டு, நல்லா டிராவல்
பிஸினஸ் சைடில் ஓடிக்கிட்டு இருக்கு. ஒன்றுக்கு நாலுவீடு
வச்சிருக்காங்க. ஒரே பிள்ளையானதால், அப்பாவின் சம்பாத்தியம்
முழுவதும் பையனுக்குத்தான்.

அவங்க வசதிகளைப் பார்க்கும்போது நாம எங்கேயோ தள்ளி
நிற்கிறோம். அவ்வளவு சொத்தை கொடுக்கவில்லையானாலும்,
ஆண்டவன் உனக்கு அழகைக் கொடுத்திருக்கறதனால,
அவங்களுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சு போச்சு. நீ என்னம்மா
சொல்றாய்…’மகள் ரதியிடம் ரேவதி ஆவலோடு கேட்டாள்.
-
“அவங்க தங்களைப் பற்றி பெருமையா பேசியதை அலசி,
ஆராய்ந்து முடிவு பண்ணலாம்!’ சஸ்பென்ஸ் கொடுத்து
நிறுத்தினாள் ரதி.
-
“நீயே அதைச் செய்… நான் கேட்டுக்கறேன்…’என்றாள் ரேவதி.
-
“பத்தாயிரம் கிலோ மீட்டர் ஓடக்கூடிய கார் டயரை ஐயாயிரம்
கிலோ மீட்டரிலேயே மாத்தி, புதுசு போடுவாங்க.
கையில் நல்லா வருமானம் வரக்கூடிய பிஸினஸ் இருந்தாலும்,
சைடில் இன்னொன்று, ஒரே வீட்டில் இருந்தா போரடிச்சுரும்னு,
வருடத்திற்கு ஒருமுறை வீடு மாத்துவாங்க.
சொந்தவீடு இருந்தாக்கூட, வாடகை வீட்டுக்கும் போவாங்க.
எதிலும் அவுங்களுக்கு ஒன்றுக்கு மேல தேவைப்படுகிறது.
பழசை அடிக்கடி மாற்றி, புதுசுக்குப் போற பழக்கமிருக்கிற
டும்பத்தில், என்னையும் ஒரு வருடத்தில் மாற்ற மாட்டாங்கங்கற
உத்தரவாதம் அவுங்க பேச்சுல தெரிஞ்சா சொல்லுங்க… அப்புறம்
முடிவு பண்ணலாம்.’
மகளின் அலசலைக் கேட்டு, பவர் கட்டிலும் ஷாக்காகி
உட்கார்ந்தாள் ரேவதி.
-
===========================

- எஸ். ராமன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 24, 2013 1:56 pm

பூக்காரி – ஒரு பக்க கதை
**************************************

”அண்ணா, பூ வாங்கிட்டுப் போண்ணா…ரெண்டு முழம் பத்து
ரூபாதான்…”அலுவலகத்தின் அருகே இருக்கும் பூக்காரி
தினமும் கூப்பிடுவாள்.
-
இந்த மாதம் என் மனைவி பத்து நாட்கள் அம்மா வீட்டுக்குப் போய்
விட்டாள். நான் அலுவலகத்திற்கு வந்து கொண்டுதான் இருந்தேன்.
ஆனால், ஒரு நாளும் பூக்காரி என்னைக் கூப்பிடவேயில்லை.
-
சரியாக பதினொன்றாம் நாள்! என் மனைவி வந்த அன்று மாலை
பூக்காரி ”வாண்ணே, பூ வாங்கிட்டுப் போ, அட வாங்கண்ணே…”
என்று கூப்பிட்டாள்
-
”என்ன…பத்து நாளா கூப்பிடவேயில்லை. இன்னிக்கு கரெக்டா
கூப்பிடுறே..?”’ கேட்டேன்.
-
”இத்தனை நாளும் வெறுங்கையை வீசிட்டு வந்தே…உன் கையில
சாப்பாட்டுப் பை இல்லையே….அக்கா ஊருக்கு போயிருக்குன்னு
நினைச்சுக்கிட்டேன்…இன்னைக்கு பாரு, பை கொண்டு வந்திருக்கே…
அதான் கூப்பிட்டேன்…எத்தனை முழம் குடுக்கட்டும்…?- பூக்காரி
கேட்டாள்.
-
பூக்காரியின் புத்திக்கூர்மையை எண்ணி வியந்தபடியே,
அஞ்சு முழம் கொடு…”என்றேன்.
-
=====================================
>டேவி.சாம் ஆசீர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 24, 2013 1:59 pm

பார்க்காமலே – ஒரு பக்க கதை
*************************************************
மாலினிக்கு சாட்டிங்கில் பழக்கமானான் தியானேஷ்.
சாட்டிங் பழக்கம் அவர்களை ஒருவரை ஒருவர் காதலிக்கும்
நிலைக்கு கொண்டு விட்டிருந்தது. மாலினியின் தோழி கீதா
அவளை எச்சரித்தாள்.
-
படு கிழங்கள்கூட இப்படி சாட்டிங்கில் ஏதாவது இளைஞன்
படத்தைப் போட்டு இளம்பெண்களிடம் ஜொள்விட்டு பேசுவதாக
-
ஆனால் மாலினி நம்புவதாக இல்லை. ”வெப் கேமராவில்
உன் தியானேஷை வரச் சொல்லுடி” என்றதற்கு
அவன் ‘நாம் பார்க்காமலேயே லவ் பண்ணுவோம், இறுதியில்
சந்திப்போம்” என்று கூறவும் மாலினிக்கும் சந்தேகம் தட்டியது.
கீதாவிடம் ஐடியா கேட்டாள்.
-
கீதா ஒரு ஐடியா கூறினாள். கம்ப்யூட்டரில் இல்லாமல்
உங்கள் கைப்பட ஒரு கடிதம் அனுப்புங்கள் என்று மெசேஜ்
தட்டச் சொன்னாள். அவனும் அனுப்புவதாகச் சொல்லி மெசேஜ்
அனுப்பினான்.
-
இரண்டு நாளில் காதல் ரசம் சொட்டச் சொட்ட கடிதம் வந்தது.
கடிதத்தைப் படித்த கீதா சொன்னாள்.
”அடியேய் உன் ஆளூ ஆதாம் ஏவாளுக்குப் பொறந்த மூத்த
பையன்டி, வயசு எப்படியும் அறுபதுக்கு மேலிருக்கும்”
-
எப்படிச் சொல்றே?
-
தமிழ் எழுத்தை உன் ஆளு எப்படி எழுதியிருக்கிறார் பாரு.
எழுத்துச் சீர்திருத்தம் வர்றதுக்கு முன்னாடி வர்ற முறையில
இதை பயன்படுத்திருக்கிறார். நம்ம ஏஜ் பசங்க இப்படி எழுதவே
மாட்டாங்க”
என்று கீதா விளக்கவும் , கம்ப்யூட்டரில் அமர்ந்து அந்த ஜொள்
‘கிழவனுக்கு’ கெட்ட கெட்ட வார்த்தையில் மெயிலை தட்ட
ஆரம்பித்தாள் மாலினி
-
===================================
>வி.சகிதா முருகன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 24, 2013 2:02 pm

அழகான பெண் -ஒருபக்க கதை 
*******************************
‘சார்..மாடம்பாக்கத்துக்கு எந்த பஸ்ல போகணும்’
-கேட்டவர் ஒரு முதியவர்.
‘டைம் கீப்பர் ஆபிஸ்ல போய்க்கேளுங்க பெரியவரே…’
சொல்லிவிட்டு தான் பொறுப்பேற்றிருந்த வண்டி
ரிவர்ஸ் வருவதற்காக விசில் கொடுத்துக் கொண்டிருந்தார்
கண்டக்டர் சையது.
-
‘சார்…பைவ் பி எங்கே வரும்?’ – கல்லூரி மாணவன்
கேட்டான்.
-
‘படிக்கத் தெரியும் இல்லே..மேல இருக்கற போர்டைப்பாரு!’
சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறப்போனார்
-
‘’சார்..இது ராயப்பேட்டை போகுமா?’’ – இந்த முறை
கேட்டது ஓர் அழகான இளம்பெண்.
-
இந்த வண்டி போகாது, ட்வெண்டி ஒன்ல போங்க
அதோ அந்த ஃபிளாட்பார்ம்ல வந்து நிக்கும். ரங்கராஜூ…
இந்தப் பெண்ணுக்கு ட்வெண்டி ஒன் நிக்கற இடத்தைக்
காட்டுப்பா ‘’ – கீழே நின்ற கண்டக்டர் ஒருவரிடம்
சிரத்தையாகச் சொல்லிவிட்டு விசில் கொடுத்தார் சையது.
-
‘அது என்னப்பா…பொண்ணுங்க கேட்டா மட்டும் பொறுமையா
வழி சொல்றே?’’ – ஓட்டுநர் நக்கலாகக் கேட்டார்.
-
‘’என்ன பண்றது?’’ நானும் ஒரு பொண்ணைப் பெத்தவன்.
தனியா நிக்கற எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் காணாம
போன எம் மகள் ஃபாத்திமா ஞாபகம் வரும்!’’- சையது
கண்கலங்கச் சொன்னார்.
-
டிரைவரின் கற்பனையும் கிண்டலும் சடன் பிரேக்
பிடித்தன.
-
================================
>விசாகப்பிரயன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 26, 2013 12:02 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 9:48 am

ரூஸ்ஸ் – ஒரு பக்க கதை
**************************************
‘ஐயோ அப்பா!’ – ஹோம் ஒர்க் முடிக்காததற்காக
செளந்தர்யா டீச்சர் பிரம்பால் அடித்தபோது, இப்படித்தான்
அலறி விட்டாள எட்டாம் வகுப்பு மாணவி அபிதா.
-
அந்த தனியார் மெட்ரிக் பள்ளி வளகத்துக்குள்
ப்ரீ கே.ஜி.யில் சேர்ந்த நாள் முதலே ஆங்கிலத்தில்தான்
பேச வேண்டும். யாரும் தமிழில் பேசக்கூடாது.
அனிதா அலறிவிட்டாள். இப்போது என்ன செய்ய?
-
அனிதா, ஆஸ் பர் அவர் ஸ்கூல் ரூல்ஸ், நோபடி ஷூட்
ஸ்பீக் இன் டமில். ஐ திங்க் யூ நோ த பனிஷ்மென்ட்
ஃபார் தட்!
-
யெஸ் மேடம்…ஹண்ட்ரெட் ருபீஸ் ஃபைன்…
ஒகே…மேம்…என்ற அபிதா உட்கார்ந்தாள்.
-
விதிகளை மீறி யாராவது தமிழில் பேசினால் இப்படித்தான்
அந்தப்பள்ளியில் நூறு ரூபாய் ஃபைன் பிடுங்குவார்கள்.
-
அபிதாவிடம் பேசிவிட்டு தன் இருக்கைக்குப் போக
வேகமாகத் திரும்பினாள் செளந்தர்யா டீச்சர்.
-
வழியில் இருந்த பெஞ்சின் கால்பகுதி நீண்டிருக்க..அதில்
இடித்துக் கொண்டவள், வலி தாங்காமல், தன்னையும் அறியாமல்
கத்தினாள்….”ஐயோ, அம்மா!”
-
==============
>கே.ஆனந்தன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 9:51 am

தீர்ப்பு – ஒரு பக்க கதை
***********************************
திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ஒத்துவராது என
முடிவுக்கு வந்த சுனிதாவும் சுந்தரும் ஏனோதானோவென
வாழ்ந்து இப்போது ஆறு வருடம் கழித்து விவாகரத்து
தீர்ப்பிற்காய் மகள் தீபாவோடு கோர்ட்டில் காத்திருந்தனர்.

குழந்தையை யார் பங்கு போட்டுக்கொள்வது என்ற
பிரச்னையில் இருவரும் உரிமை கொண்டாட
குழம்பிப்போன நீதிபதி குழந்தை தீபாவிடமே தீர்ப்பை
கேட்டார்.

அங்கிள் ரெண்டு பேருமே ஏன் பிரியறாங்க..? என்ற
எதிர்பாராத தீபாவின் கேள்வியில் ஆடிப்போனார் நீதிபதி.

அது… வந்து… அம்மா பேசறது அப்பாவிற்கும் அப்பா
பேசறது அம்மாவுக்கும் புரியலையாம். அதான் பாப்பா
அவங்க பிரியறாங்க… என சமாளித்தார்.

அங்கிள் ரெண்டு பேருமே பெரியவங்க. அவங்க பேசறதே
அவங்களுக்கு புரியலைன்னா, நான் இன்னும் சின்னப்
பொண்ணு. நான் பேசறதை அவங்களால எப்படி புரிஞ்சுக்க
முடியும்? அதனால என் பேச்சை கேட்டு, புரிஞ்சு எனக்கு
எல்லாம் செய்யற வேலைக்காரப் பாட்டி வீட்டிற்கே
போயிடறேன். என்ற தீபாவின் பேச்சைக் கேட்ட
நீதிபதியின் பேனா தானாகவே உடைந்தது.
-
——————————
- கோவை நா.கி.பிரசாத்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 9:53 am

[You must be registered and logged in to see this link.]
 


[You must be registered and logged in to see this image.]


டேய், மத நல்லிணக்கத்துக்கு ஒரு வாழும் உதாரணம் நம்ம
முதலாளி தாண்டா! தன் நண்பன் சுந்தரிடம், ஷேக்முகம்மது
கூறினான்.

எதை வச்சுடா அப்படிச் சொல்லுற? நண்பனிடம் எதிர்க்கேள்வி
கேட்டான் சுந்தர்.

பின்ன என்னடா நம்ம கம்பெனியில கிட்டத்தட்ட நூறு பேர்
வேலை பார்க்கிறாங்க. ஒரு இந்துவா இருக்கிற முதலாளி
எண்பது சதவீதம் தொழிலாளிகளை கிறிஸ்துவர்களாகவும்,
முஸ்லிம்களாகவும் வச்சிருந்தா அதுக்கு காரணம் மத
நல்லிணக்கம் தானே?

டேய் ஷேக் நீ நம்ம முதலாளியை பற்றிசரியா புரிஞ்சுக்காம
பேசுற. அவருக்கு 365 நாளும் கம்பெனியை இயக்கனும்.
இந்துக்களுக்கு ஏகப்பட்ட விடுமுறை வரும். அதுவும் இல்லாம
கோயில் கொடை அது இதுன்னு ஏகப்பட்ட லீவு வேற எடுப்பாங்க.
ஆனா, முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு லிமிட்டாத்தான்
பண்டிகைகள் வரும். லீவும் கம்மியாத்தான் எடுப்பாங்க.
இப்ப புரியுதா, நம்ம முதலாளியோட மத நல்லிணக்கம்?

சோழியன் குடுமி சும்ம ஆடலைனு சொல்லு. என்று
நண்பனிடம் கூறினான் ஷேக்முகம்மது.

=======================================
வி.சகிதா முருகன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 10:00 am

திமிர் – ஒரு பக்க கதை
***********************************
ஆபிஸர் கோபாலுக்கு, தனது செக்‌ஷனிலேயே கார்த்திக்கை
மட்டும் பிடிக்காது. திமிர் பிடித்தவன்…வயசுக்கு மரியாதை
தர மாட்டான்’ என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருப்பார்.
-
புதியதாக வந்த ஜி.எம்.ரவுண்ட்ஸ் போய் எல்லோரையும்
அறிமுகம் செய்து கொண்டு, அறைக்குள் வந்து உட்கார்ந்ததுமே
அவரிடம் போட்டுக் கொடுக்கும் தன் பணியைத் துவக்கி
விட்டார் கோபால்.
-
‘நீங்க ஃப்ளோர் விசிட் போனப்ப, மற்ற உழியர்கள் எல்லாரும்
உங்க பின்னாடியே பவ்யமா வந்து வெல்கம் பண்ணி
பேசிட்டிருந்தாங்க., கை கொடுத்தாங்க.
ஆனா, இந்த கார்த்திக் மட்டும் சீட்டை விட்டு எழுந்திருக்கவே
இல்லை.ஜஸ்ட் வணக்கம் சொன்னதோட முடிச்சிக்கிட்டான்
பார்த்தீங்களா. ஒரு மரியாதைக்காகக் கூட உங்க்கிட்டே நாலு
வாரத்தை பேசலை..அவ்ளோ திமிர பிடிச்சவன் சார் அவன்!
-
”ரொம்ப கரெக்ட்…எனக்குப் பின்னால வந்தவங்க்ள்ல நாலு
பேரை இன்டர்காம்ல கூப்பிடுங்க…ஸ்பெஷலா நன்றி சொல்வோம்!”
என்றார் ஜி.எம்
-
கோபால் இனடர்காமில் அழத்த போது, மறுமுனையிலிருந்து
பதில் வந்தது
-.
”நீங்க கேட்கிற அந்த நாலு பேரும் கேன்டீன்ல இருக்காங்க சார்…
கார்த்திக் மட்டும்தான் சீட்ல இருக்கார். அவரை அனுப்பவா?”
-
ஜி.எம் பலமாகச் சிரிக்கத் தொடங்குவதற்குள் வெளியே நழுவினார்
கோபால்
-
==================================

>.பம்மல்நாகராஜன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 10:04 am

தடயம் – ஒரு பக்க கதை
****************************************
லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகை சித்தாராதேவி
செத்துக் கிடந்தாள். அவள் அருகில் தூக்க மாத்திரைகள் சிதறிக்
கிடந்தன. அவள் கையருகில் இருந்த கடிதத்தை பிரித்துப் படித்தார்
இன்ஸ்பெக்டர் பாண்டுரெங்கன
-
“என் சாவுக்கு நானே காரணம். இது தற்கொலைதான்.
மானேஜர் காரணம் அல்ல. வேலையாட்கள் காரணம் அல்ல…
-
சித்திராதேவியின் கடிதத்தை ஊன்றிப் படித்தபின், இன்ஸ்பெக்டர்
பார்வை மானேஜரின் பக்கம் திரும்பியது.

“சித்திராதேவியை ஏன் கொலை செய்தாய்? உண்மையை ஒப்புக்
கொள்ளாவிட்டால் ஸ்டேஷனுக்கு கூட்டிப்போய் தலைகீழாக கட்டி
வைத்து அடித்து உண்மையை சொல்ல வேண்டிய நிலை உனக்கு
ஏற்படும்.
-
பயந்து போன மானேஜர், மிரட்டி அவளிடம் இந்த கடிதத்தை எழுதி
வாங்கி வலுக்கட்டாயமாக தூக்க மாத்திரை விழுங்க செய்து சாகடித்த
உண்மையை ஒப்புக்கொண்டார்.
-
ஏட்டு கண்ணையன் ஆச்சரியத்துடன் கேட்டார். கடிதத்தில் ஒன்றுமே
தடயமே இல்லையே… எப்படி சார் மானேஜர் தான் கொலை செய்தார்
என்ற உண்மையை கண்டுபிடித்தீர்கள்?
-
இன்ஸ்பெக்டர் கடிதத்தை ஏட்டிடம் கொடுத்து விட்டு கூறினார்.
படித்து பார். இது தற்கொலை தான் என்று எழுதியிருப்பதில் இது
கொலைதான் என்பதை மற்ற எழுத்துக்களை விட அழுத்தி
எழுதியிருக்கிறாள். அதைப்போல் மானேஜர் காரணம் அல்ல என்று
எழுதியிருப்பதில் மாஜேனர் காரணம் என்பதை மற்ற எழுத்துக்களை
விட அழுத்தி எழுதியிருக்கிறாள். அழுத்தப்பட்ட எழுத்துக்களை மட்டும்
சேர்த்துப்படி இது கொலை தான்… மானேஜர் காரணம்.
-
==============================================
நன்றி: குமுதம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 01, 2014 12:12 pm

வாழைமரம் – ஒரு பக்க கதை
*****************************************
குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை
உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும்
வேளையில், “அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம்,
சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து
விட்டீர்களே’ என்றான்.
-
வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச்
சொன்னார் தந்தை.
-
“தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா
இதன் சரித்திரம் என்ன, தெரியுமா? இது தன்னுடைய
வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய
எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது.
-
இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான்.
இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய
வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள்
மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக
வைத்தார்கள்.
-
தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம்.
அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும்
ன்னுடைய தந்தைக்கும் பெருமை.
இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ,
துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை.


- கே. கணேசமூர்த்தி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum