தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு பக்க கதைகள்

2 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 14, 2013 8:44 pm

First topic message reminder :

டூப் டூப் – ஒரு பக்க கதை
**************************************


ரைஸிங் ஸ்டார் பிரேம்குமாரிடம் டைரக்டர் அமர் கேட்டான்
”பிரேம் சார், இந்த பைக் ஹம்ப் நீங்களே பண்றீங்காளா?”
-
இல்லை, அமர், டூப்பை வச்சு பண்ணிடுங்க, என்றவாறே
கேரவனுக்குள் சென்றான் பிரேம்குமார்.
-
டைரக்டர், தன் உதவியாளரிடம் கூறினான், ‘இவன் ஒரு
காலத்தில் ஃபைட்டரா கூலிக்கு மாரடிச்சவன்தான், இப்ப ஒரு
சின்ன பைக் ஜம்புக்கு இவனுக்கு டூப் போட வேண்டியிருக்கு’
என்று அலுத்துக் கொண்டான் அமர்.
-
கேரவனிலிருந்து வந்து டச்சப் செய்து கொண்டிருந்த
பிரேம்குராரிடம் அஸிஸ்டென்ட் டைரக்டர் கணேஷ்
கேட்டான்.
-
”சார் ஒரு சின்ன பைக் ஜம்புக்கு டூப் போடச் சொன்னதுக்கு
டைரக்டர் உங்க மேல ஆதங்கப்பட்டார். நீங்க நல்லா
அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போற கேரக்டர். நீங்க டூப் போடச்
சொன்னதுக்கு ஏதாவது காரணம் இருக்குமே?
-


கணேஷ், ஒரு காலத்திலே நானும் ஃபைட்டரா டூப்
போட்டவன்தான். ஒரு தடவை பைக் ஹம்ப் பண்ணினா எனக்கு
ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும். இப்ப அதை நான் பண்ணினா ஒரு
டூப் போடற ஸ்டண்ட் நடிகரோட வயிற்றிலே அடிச்ச மாதிரி ஆயிடும்..!
அதனால்தான் நான் முடியாதுன்னேன்! நான் செஞ்சது சரிதானே?
-
நூறுசதவீதம் சரி சார்! என்று சந்தோஷப்பட்டான் கணேஷ்
-
—————————–
>வி.சகிதாமுருகன்


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 1:00 pm; edited 6 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 01, 2014 12:14 pm

புருஷ லட்சணம் – ஒரு பக்க கதை
**************************************************
பால்ய நண்பன் செல்வராஜைப் பார்த்து ஐந்து வருடமிருக்கும்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கல்லூரியில் எனக்கு
ரொம்ப நெருக்கம்.எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவன்
-
முகவரிச் சீட்டைக் காட்டி ஒருவரிடம் விசாரித்தேன். பக்கத்துச்
சந்தைக் காட்டினார்.நல்ல வேளை செல்வராஜ் வீட்டில் இருந்தான்.
ஆர்வத்தோடு வந்து கைகளைப் பற்றிக் கொண்டான். மிகவும்
இளைத்திருந்தான்.
அந்தக் காலத்தில், ஹீரோ மாதிரி கம்பீரமாக இருப்பான்.
-
ஏண்டா இப்படி இளைத்துப் போய் விட்டாய்! – என்று வேதனையோடு
கேட்டேன்.
-
தண்ணி அடிச்சு…அடிச்சு…உடம்பைக் கெடுத்துக்கிட்டார்…! தண்ணி
அடிச்சாலே நெஞ்சு வலி வருது. இருந்தாலும் கேட்க மாட்டேன்
என்கிறார்…”
அவன் மனைவி வருத்தத்தோடு சொன்னாள்.
-
”செல்வராஜ், ஏண்டா இப்படி மாறிட்டே? கேட்கவே வருத்தமா
இருக்கு…தயவு செய்து இனிமேலாவது தண்ணி அடிப்பதை
நிறுத்திடு…!”
-
”நான் தண்ணி அடிக்காம, பின் யார் அடிப்பது…? உன் வீடு மாதிரி
இங்கு மோட்டாரா வச்சிருக்கு…பட்டனை அழுத்தினா தண்ணி
கொட்டுதற்கு? அவ ஹார்ட் பேஷண்ட்…குழாயைப் பிடிச்சு இரண்டு
அடி அடிச்சாலே, நெஞ்சைப் பிடிச்சுப்பா…அதனாலேதான் நானே
அடிக்கிறேன்…

நீ விஷயம் புரியாம, அட்வைஸ் பண்ணாதே…!!
-
வெட்கமாகப் போய் விட்டது…!
-
=========================================
>போளூர் ரகுபதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 01, 2014 12:21 pm

காயப்படுத்தி கொள்ளுகிறார்கள் 
**********************************************
ஒரு நாள் இரவு உணவு வேட்டையை முன்னிட்டு பாம்பு ஒன்று, மரத்தச்சரின் கூடத்தில் நுழைந்தது. அடர்ந்த இருட்டு. "ஏதேனும் எலி கிடைக்குமா?", என ஏங்கிய பாம்பு தச்சுக்கூடத்தைச் சுற்றி வந்தது.

மரவேலை செய்யும் தச்சர் தனது உபகரணங்களை ஓரிடத்தில் வைக்காமல் கண்டபடி போட்டிருந்தார். உளி, சுத்தியல், ரம்பம் ஆகியவை ஆங்காங்கே தரையில் கிடந்தன.

காரிருள் வேளையில் கூடத்தைச் சுற்றிய பாம்பு, ரம்பத்தின் மேலே ஊர்ந்தது. ரம்பப்பற்கள் கூர்மையாக இருந்ததால், பாம்பின் உடலில் காயமும், வலிவேதனையும் உண்டானது.

யாரோ எதிரி தன்னைத் தாக்குவதாக கற்பனை செய்துகொண்ட பாம்பு ரம்பப் பற்களை எதிரியாகப் பாவித்து, அதைக் கொத்த ஆரம்பித்தது. ஆனால் கொத்தியபோது கூரான ரம்பப்பற்கள் பாம்பின் வாயிலும் காயத்தை உண்டாக்கி மிகுந்த வலியை ஏற்படுத்தின. வாய் முழுவதும் இரத்தம் பெருகி வழிந்தது.


இது அந்தப் பாம்புக்கு மிகப்பெரிய கோபத்தை அளித்தது. மரணவலியுடன் போராடிய பாம்பு இறுதியாக பலம் கொண்ட மட்டும் ஓங்கி ஒரே கொத்தாகக் கொத்திவிடுவதென தீர்மாணித்து பலம் அனைத்தையும் திரட்டி ஒரே போடாக ரம்பத்தில் கொத்தியது.

அத்துடன் பாம்பு உயிரிழந்தது. அடுத்த நாள் தனது கூடத்தினுள் நுழைந்த தச்சருக்கு ஒரே ஆச்சரியம் - "இரத்த வெள்ளத்தில் மிதந்த பாம்பைக் கண்டு".

#நீதி : அடுத்தவரைக் காயப்படுத்துபவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள்.

நன்றி சேனைத்தமிழ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 01, 2014 12:24 pm

வல்லவர் யார்.!?
***************************
கல்லில் சிலை வடிக்கும் சிற்பி ஒருவன் ஒரு தேவதையின் சிலையை வடித்துக் கொண்டிருந்தான். அற்புதமாக தத்ரூபமாகத் தோற்றமளித்த அந்தச் சிலை வடித்து முடித்த கணம் ஒரு மின்னல் நேரத்தில் உயிர் பெற்றது. தேவதை மகிழ்ச்சியுடன் சிற்பியின் கலைத் திறனைப் பாராட்டி வேண்டிய வரம் ஒன்று கேட்குமாறு சொன்னது.

சிற்பிக்கு வல்லவர்களுக்கு வல்லவனாக வேண்டும் என்ற வெகுநாள் ஆசை. அவன் அதை தேவதையிடம் சொன்னான். தேவதை அன்புடன் சிரித்துக் கொண்டே "சிற்பியே! நன்கு சிந்தித்துத்தான் கேட்கிறாயா?" என்று கேட்டது. சிற்பியும் மிகுந்த ஆவலுடன் "ஆம்!" என்றான்.

தேவதை "சரி! அடுத்த இரண்டு நாட்களுக்கு நீ யாரை அல்லது எதை வல்லவன் என்று நினைக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுவாய்" என்று வரம் அளித்து விட்டு அதே மின்னல் வேகத்தில் மறுபடியும் சிலை வடிவிற்குப் போய் விட்டது,

சிற்பி திடீரென்று நிகழ்ந்த இந்த நிகழ்வைப் பற்றி நம்புவதா வேண்டாமா என்று தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தான்.

சூரியன் உச்சிக்கு வந்து தகித்துக் கொண்டிருந்தது. சிலை வடிக்கும் கருங்கற்பாறை கொதித்தது. கல்லைக் கொத்தும் உளி கொதித்தது. சிற்பியின் உடலெல்லாம் வியர்த்து வழிந்தது. சிற்பி "இந்த சூரியன் மிகச் சக்தி படைத்தவனாக இருக்கிறானே. எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறானே! இவன்தான் மிக வல்லவனாக இருக்க வேண்டும்" என்று நினைத்தான். என்ன ஆச்சரியம்! உடனே அவன் தேவதை கொடுத்த வரத்தின் சக்தியால் சூரியனாகவே மாறிவிட்டான்.

சிறிது நேரம் உலகைச் சுற்றி வந்து தனது சக்தியால் ஆனந்தமாக கண்ணில் பட்ட எல்லாவற்றையும் தகிக்கச் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு இடத்தில் மேகங்கள் சூழ்ந்திருந்தன. அவை சூரியனின் கதிர்களை மறைத்தன. ஆகவே அவை மறைத்த இடங்களை சூரியக் கதிர்கள் சென்றடைய முடியவில்லை. சூரியனாக இருந்த சிற்பி, தன் மிக உக்கிரமான கதிர்களை அந்த மேகங்கள் மேல் செலுத்திப் பார்த்தான். அந்தக் கருமேகக் கூட்டங்கள் அசைவதாக இல்லை. "என்ன... இந்த மேகக் கூட்டங்கள் சூரியனின் சக்திமிக்க கதிர்களையே மறைக்கும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றனவே" என்று நினைத்தவுடன் அவன் அந்தக் கருமேகங்களாக மாறிவிட்டான்.

சிறிது நேரம் மகிழ்ச்சியாக சூரியக் கதிர்களை மறைத்துக் கொண்டு ஆனந்தப் பட்டுக் கொண்டிருந்தான். அப்போது பலமாகக் காற்றடித்தது. அந்தக் காற்று மேகக் கூட்டங்களை இப்படியும் அப்படியுமாக அலைக்கழித்தது. சிற்பி எவ்வளவு முயன்றும் காற்றின் வேகத்திற்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை. "சூரியனின் கதிர்களை மறைக்கும் மேகத்தையே செலுத்தும் காற்று எவ்வளவு வல்லமை படைத்ததாக இருக்க வேண்டும்" என்று நினைத்தான். அந்தக் கணமே அவன் காற்றாக மாறிவிட்டான்.

காற்று வடிவில் சிற்பி தென்றலாகவும், புயலாகவும் எண்ணப் படி மாறி மாறி உலகைக் கலக்கிக் கொண்டிருந்தான். மிகவும் வல்லமை படைத்தவனாகத் தன்னைப் பற்றி எண்ணி எண்ணி நினைத்த இடத்திற்கெல்லாம் சடுதியில் சென்று மகிச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு முறை அப்படிக் கடும் புயலாக மாறிச் சென்று கொண்டிருந்த வழியை மறித்துக் கொண்டு ஒரு நெடிதுயர்ந்த மலை நின்று கொண்டிருந்தது. எவ்வளவோ உக்கிரமாக முட்டி மோதிப் பார்த்தும் கடும் புயலாய் வடிவெடுத்திருந்த சிற்பியால் அந்த மலையைக் கடந்து செல்ல முடியவில்லை. "அட.. இந்த மலைக்குக் கடும் புயலையும் மிஞ்சும் சக்தி இருப்பது முன்னமேயே நமக்குத் தெரியாமல் போய் விட்டதே!" என்று நினைத்த மாத்திரம் அவன் ஒரு மலையாக மாறிவிட்டான்.

அப்போது மற்றொரு சிற்பி அந்த மலை மேல் மெதுவாக ஏறி வந்தான். அவன் ஒரு இடத்தில் உள்ள மலையின் பாறைகளைத் தேர்ந்தெடுத்து தன் உளியையும் சுத்தியலையும் கொண்டு பாறையைப் பிளந்து சிலை வடிக்க ஆரம்பித்தான். மலை வடிவில் இருந்த சிற்பி "சக்தி வாய்ந்த மலையின் பாறைகளையே பிளக்கும் சிற்பிதான் மலையை விட வல்லவன்" என்று நினைத்தான்.

தேவதையின் வரம் பாக்கியிருக்கிறதே! அதனால் அப்படி நினைத்த மாத்திரத்தில் பழைய படி அவன் தன் சுய உருவை அடைந்து விட்டான்.

சுய உருவிற்கே திடீரென்று திரும்பி விட்ட அவனுக்கு இப்போது மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது போல் இருந்தது. நிதானமாக அமர்ந்து, தன் அனுபவங்களை நினைத்துப் பார்த்தான்.

ஒவ்வோருவருக்கும் ஒரு தனித்துவமும் அதைச் சார்ந்து வல்லமைகளும் இருப்பதை அறிந்து கொண்டான். அனைவருக்கும் வல்லவனாக் விளங்க வேண்டும் என்ற நினைப்பைக் கை விட்டான். தன் வல்லமைகளைப் முடிந்த வரை பெருக்கிக் கொண்டு அவற்றின் மூலம் உலகிற்கு உப்பாக விளங்குவதே சிறந்தது என்று நினைக்க ஆரம்பித்தான்.

தேவதை அவன் முன் திரும்பவும் தோன்றி அவனுக்கு நிறையப் பரிசுகளை மிக மகிழ்ச்சியுடன் வழங்கியது...

நன்றி ; சேனைத்தமிழ் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 01, 2014 12:27 pm

வேர்பாய்ந்த விழுதுகள்.
************************************
பரந்தன் முல்லைத்தீவு வீதி நீளம் இடம்பெயர்ந்து ஓடுபவர்களால் நிறைந்து இருந்தது. கண் கூசியபடி எழும் சூரியக் கதிர்கள் அன்றைய தினத்தை மழையின்றிய தினமாகப் பிரகடனம் செய்தது. வீதிக்கு வருவதும் வாகனத்தைக் கண்டதும் இறங்கி நடப்பதுமாக அந்த வயோதிபரைப் பார்க்க முடிந்தது. கையில் ஒரு தூக்குப்பை வைத்திருந்தார்.

ஒருசில துணிமணிகள் அதற்குள் இருக்கும் என நினைக்கிறேன். நடந்து கொள்ளும் பொழுது கையோடு இணைபிரியாமல் ஆடுகின்ற கைப்பையில் உடுப்புக்கள் மட்டும்தான் இருக்கிறது என்பதைப் பறைசாற்றியது. காலின் செருப்பு மட்டும் பாதங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. வயது கூடிய தோற்றம். ஆனாலும் கூனலில்லாமல் அவரைப் பாதுகாத்தது தேகம்.

பின்னால் நடந்து கொண்டிருக்கும் என்னைக்கூட துணைக்கு அழைக்காமல் நடந்து செல்லும் அவரது துணிவு கொஞ்சம் பிரமிக்கத்தான் செய்தது. ஒரு உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டியில் சிகரம் மாதிரி மக்கள் நிறைந்து கடந்து செல்வதை பிரமித்தபடி நின்றார் அவர். நெல்லு மூடைகள், உழவுக்கான இயந்திரப் பகுதிகள் நிறைந்து இருக்க அதன் மேலேயே இருந்தவர்களும் வாகனமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததே என்பது சொல்லாமலே தெரிந்தது. இழுவைப் பெட்டியின் பின்பகுதியில் இருக்கும் அந்தச் சிறுவன் தனது செல்லப்பிராணியான அந்த நாயை மட்டும் அதன் கயிற்றைப் பிடித்தபடி இருந்தான். வாகனத்துக்குப் பின்னாலேயே பொடிநடையில் நாயும் நடந்து கொண்டிருந்தது.

எங்கே போகிறோம் என்று தெரியாத சில வீட்டு நாய்களும் அந்த நாயைப் பார்த்ததும் அதன் பின்னாலே தாமும் நடக்கவென நினைத்து ஓடிவந்தன. அனாதரவாக தன் எசமானர்களைப் பிரிந்துவிட்ட அல்லது இழந்துவிட்ட பொழுது அவைகளும் ஏதிலிகளாக இருப்பதைப் பார்த்து ஒரு பெருமூச்சு நீண்டு அடிவயிற்றில் இருந்து அவருக்கு வந்திருக்க வேண்டும். நின்று நினைத்து கண்களில் காதோரம் வழியாக சூடாய்க் கொட்டிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் அவர்.

"பின்னால் சென்று கொண்டிருக்கும் அந்த நாய்களைப் போலவா நானும் .." அவர் பெருமூச்சு அதைத்தான் சொல்லிற்றுப் போலும். நின்று நிலைத்து கொஞ்சம் புத்துணர்ச்சியோடு மீண்டும் வேகமாக நடக்கத் தொடங்கினார் அவர். துவிச்சக்கர வண்டியில் போவோரும், வீதியில் நடப்போருமாக விடுகின்ற சுவாசம் வெப்பக் காற்றாக மாறியிருப்பதை உணர்ந்தார் அவர். பின்னால் திரும்பிக் குரல் கொடுத்தார் அவர்.

"தம்பி.. தருமபுரம் எத்தனை மைற்கற்கள் இன்னும் இருக்கும்.." "ஏனையா..? இன்னும் நான்கு மைல் இருக்கும்”என உரைத்தேன்.

அந்தநேரம் பார்த்து இன்னொரு உழவு யந்திரம் இழுவைப் பெட்டியுடன் வந்து நின்றது.

அதில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள்.

"தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கிறார்கள். அவர்களோடு வீதியோரம் நடப்பவர்களையும் கொண்டு செல்ல உதவி செய்கிறோம்..நீங்களும் வரலாம்.." என்றார்கள் இளைஞர்கள்.

"நீங்கள் யார்..?" என்றார் பெரியவர்.

"நாங்கள் தொண்டர் சபையில் வேலைசெய்கிறோம்.. தேசியத் தலைவர் நேற்று புதுக்குடியிருப்பு மற்றும் சில இடங்களுக்கு வந்து..இடம் பெயர்ந்தவர்களுக்கு உடனடி உதவிகளைச் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார்.. ஐயா.."என்றான் இளைஞரில் ஒருவன்.

எந்தவித உணர்ச்சியுமற்று நின்ற பெரியவர் இழுவைப் பெட்டியில் ஏறினார் .

அவரைத் தொடர்ந்து நானும் ஏறினேன்.

பெரியவரின் கோபப் புயலை இல்லைச் சோகப் பிடியை உடைத்தெறிய எண்ணிய நான் "ஏனையா உங்கள் குடும்பம் இங்கே இல்லையா..?"என்றேன்.

கண்களில் உதிரும் நீரை ஒருவிரல் துடைக்க..ஒருசில நிமிடங்களைக் கையிலெடுத்தார் பெரியவர்.

"உங்களின் துன்பதைக் கொஞ்சம் உடைத்து விட்டிருக்கிறேன் போலிருக்கிறது.."என்றேன் யான்.

"இல்லை.." என்ற பெரியவர் "..நீ எங்கிருந்து வருகிறாய்.."என்றபடி தொடர்ந்தார்.

"ஐயா திருக்கேதீஸ்வரப் பகுதியில் ஒரு கடையில் வேலைசெய்தேன் யான்..இராணுவம் வந்ததைத் தொடர்ந்து ஆறாவது இடமாக இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறேன்...."

"அப்படியானால் என்னைப் போல என்று..சொல்லு "என்று சொன்னார் பெரியவர். பெரியவரின் துயரத்தை உடைத்துச் சுயத்தைக் கிளறிவிட்ட துடிப்பு என்னுள் பெருகியது.

"எங்கிருந்து வருகிறீர்கள் ஐயா.."என கொஞ்சம் உருக்கமாகக் கேட்டேன்.

"உனக்கு யாழ்ப்பாண இடப்பெயர்வு தெரிந்திருக்குமென நினைக்கிறேன்..பார்க்கிற சாடைக்கு அப்பொழுது நீ. ஒரு ஒன்பது வயதுக்கும் குறைவாக இருந்திருப்பாய் என நினைக்கிறேன்.."என்றார் பெரியவர். பெரியவரின் பூர்வீகம் தெரிந்துகொள்ளுகிற உந்தல் என்னுள் உடைத்து எழுந்தது.

அன்றைக்கு அடிபட்டவன் தொடர்புகள் அற்றுத் துண்டிக்கப்பட்டிருக்கிறேன்.."என்றார் பெரியவர்.

கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது ஐயா..பாம்புகள் நெளியும் நீர்நிலைகளின் ஊடே மக்கள் தலையில் முடிச்சும், சிறியவர்களைக் கையில் கோர்த்தபடியும் நடந்து கைதடி நீரேரியைக் கடந்து சாவகச்சேரி நோக்கி வந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது.."என்றபோது கொஞ்சம் உற்றுப் பார்த்தார் பெரியவர்.

"உன் காந்தப் பார்வையை எங்கோ கண்டமாதிரி இருக்கிறது.."என்றார் பெரியவர். அவரின் குடும்பத்து உறவை அறிந்து கொள்ள அவரது இந்தப் பதில் என் வேகத்தை அதிகரித்தது."உங்கள் குடும்பம் எங்கே..என்னானார்கள் பெரியவரே.." என்றேன்.

“நான் இப்பொழுது வன்னேரிக்குளத்தில் தனியேதான் ஒரு மாட்டுமாலில் பல வருடங்களாக இருந்தேன். ..இலுப்பைக் கடவை..நாச்சிக்குடா..வன்னேரி..அக்கராயன் குளம் எங்கும் அறுவான் வந்து குண்டு போடத் தொடங்கியதும் வெளிக்கிட்டனான்தான் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறேன்..”என்றார்.

"நீங்கள் இருந்த வீட்டுக்காரர்.."

"அவர்கள் புறப்பட முன் நான் வெளிக்கிட்டு விட்டேள். அங்கே எல்லாம் குண்டு போட்டு பல வீடுகள் சிதறிவிட்டதென அறிந்தேன்..நாச்சிக்குடா, வன்னேரி, அக்கராயன் குளம் எல்லாம் பிடித்து விட்டதாக அரசு அறிவிப்பு வந்ததாக ஒரு செய்தி இணையத்தில் கிடப்பதாக ஒரு தம்பி முருகண்டியில் சொன்னவன்..இப்பொழுது கேள்விப்பட்டன் இன்னும் சண்டை அங்கே நடப்பதாக..நான் இருந்த வீட்டுக்காரரும் வெளிக்கிட்டுத்தான் இருப்பார்..இடிவிழுந்தான் எறியும் குண்டுகளில்..யார்தான் அங்கு இருக்க முடியும் என்றார்..."அவர்.

"அப்படியானால் உங்கள் சொந்தக் குடும்பம் எங்கே.."

"யாழ்ப்பாண இடப்பெயர்வு சொன்னேன் தானே..இலட்சக் கணக்கான மக்கள் கால்மேல் கால்நெரிக்க நடந்து.. ஒருவர்மேல் ஒருவர் விழுந்து..அல்லோலகல்லோலப் பட்டு நடந்து வருகையின் எனது மகளும் பேரப்பிள்ளைகளும் என்னைக் கைவிட்டு விட்டார்கள்..."

"அப்படியென்றால்.."

"காலில் மிதிபட்டு நடக்க இயலாமல் வழிமாறி, பின்னர் கிளாலிக் கடல் ஊடாக கிளிநொச்சி வந்தபோதும், தமிழீழ காவற்துறையில் பதிந்தபோதும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை..தனிமையாக வாழ்ந்து இப்பொழுது கரைதெரியா ஓடம்போலே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..பின்னர் சிலரின் செய்தியின்படி மகளும் மருமகனும் திருச்சியில் ஒரு அகதிமுகாமில் இருப்பதாகக் கேள்விப்படுகின்றேன்.."

"உங்கள் சொந்த இடம் எது ஐயா?"

"அளவெட்டி..என்பெயர் கந்தப்பு.. கந்தர் கந்தர் எனச் சொல்வார்கள்.."

"உங்கள் மகளின்பெயர் கமலம் தானே.."

"ஆமாம் தம்பி, கமலம் என்மகள். அவளைத் தெரிகிறது உனக்கு.."

“நான்தான் உங்கள் பேரன்..மாறன் தாத்தா.. இலட்சக்கணக்கான மக்களின் இடம்பெயர்வில் அம்மா, அப்பா அனைவரையும் தொடர்பின்றி நடந்தனான் திருக்கேதீஸ்வரைக்குச் சென்றேன்...உங்கள் முகத்தைக் கூட இப்பொழுது என்னால் அடையாளம் காணமுடியவில்லை...பெயர் மட்டும்தான் காதில் ஒலித்த வண்ணமிருந்தது..தாத்தா.."

"விடுபட்டுப் போனவர்கள் எடுபட்டுப் போகவில்லை பார்த்தாயா..காந்தம் என்பார்களே அது சொந்தத்திற்கும் உண்டு பேரா.."அவர் சொல்லி முடிப்பதற்குள்..

"பெரியவர்.." என்று ஏககாலத்தில் அந்த இளைஞர்கள் கூப்பிட்டார்கள். "என்ன பெரியவரே இந்தப் போர் உங்களை என்ன மாதிரியெல்லாம் அலைக்கிறது என்ற வேதனை உங்களிடம் தெரிகிறது..என்ன செய்கிறது..?"

"இல்லையில்லை..சுதந்திரம் என்பது சுமையில் இருந்து வரும் ஒரு பிரசவம் தம்பி.."

"தாத்தா.. "ஆரத் தழுவிக் கொண்டேன். இறுகப் பற்றியபடி என்னை அணைத்துக் கொண்டிருந்தார் தாத்தா..

"வேர் பாய்ந்த விழுதுகள்" என்ற அந்த இளைஞர்களின் குரல் எங்கள் காதுகளில் விழுந்து கொண்டேயிருந்தது

நன்றி  *சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 12:09 pm

சிறகொடிந்த பறவைகள்!!!
***************************************
"பேச்சுக்குப் பேச்சு வழக்காடாதே. இந்தச் சந்தர்ப்பத்தையும் கோட்டை விடாமல் படித்து உருப்படுவதைக் கவனி"

"எனக்குத் தெரியும். அதையே சொல்லிச் சொல்லி வெறுப்பேத்த வேண்டாம்."

"தெண்டம் அழுவுவது நாந்தானே". 

"அது உங்கள் கடமை. என் திறமை இவ்வளவுதான். அதை மழுங்க அடித்து விட வேண்டாம்".

"திறமை இருக்கு, திமிரும் இருக்கு. அதனால்தான் சொல்வது காதில் ஏறமாட்டேங்குது". டைனிங் டேபிளில் முதலில் கடுவன் பூனையாக இருந்த இருவரையும் ருசி மிக்க உணவு மாற்றி விட்டது. அவரைக்காய்க் கூட்டை ஒரு கை பார்ப்பவள், விரலால் கிண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தவர் கண்கலங்கி விட்டார். அதை ஓரக் கண்ணால் பார்த்தவள் அழுதே விட்டாள்.

"சரி, சரி பாசம் பொத்துக்கிட்டது போதும். எலியும் பூனையுமா இருக்கிறது, அப்புறம் அழுது வடியறது" வித்யாவின் அம்மா சகுந்தலா

இருவரும் மனம் விட்டுச் சிரிக்க மன அழுத்தம் குறைந்தது. "வித்யா! வேதாசலத்தைப் பார்க்கணும்டா. நீ என்ன செய்யப்போறே?" கோபால்

"நுழைவுத் தேர்வுக்கு குரூப் ஸ்டடி இருக்குப்பா".

அகமும், முகமும் மலர டைனிங் டேபிளுக்கு விடை கொடுத்தார்கள்.

வேதாச்சலம், மனோதத்துவ டாக்டர். இருவரும் மேல் நிலைப் பள்ளி வரை இணை பிரியா நண்பர்கள். கோபால் கூத்தும் கும்மாளமுமாக மாணவப் பருவத்தை அனுபவித்ததால் மதிப்பெண் குறைந்து பி.காமில் சேர வேண்டியதாயிற்று. புத்திசாலியும், திறமையும் உள்ள மகனை டாக்டராக்கிப் பார்க்கும் அவரது பெற்றோரத் கனவு நனவாகவில்லை. கோபால் சார்ட்டட் அக்கௌண்டண்ட் ஆனார். சாகும் வரை அப்பாவின் குமுறலைக் கேட்க வேண்டியதாயிற்று.

காலம் இப்போது அதே நிழ்ச்சியை மகள் மூலம் திருப்பி விட்டு விட்டது. நண்பன் வேதாசலத்தைப் போல மகள் வர ஆசைப்பட்டார். நுழைவுத் தேர்வு மதிப்பெண்தான் கனவை நனவாக்க வேண்டும். முப்பது, நாற்பது லட்சம் கொடுத்து சீட் வாங்க முடியாது.

"என்னடா மைனர் செயின்லே டாலர் மாதிரிக் கோத்துப் போட்டிருக்கே."

"இது லேட்டஸ்ட் மாடல் செல்போன்டா. செயின் 5 பவுன். அதாவது 40 கிராம் வெயிட். போன் 5 கிராம்தான். வாட்டர் ப்ரூஃப். கழட்ட வேண்டிய அவசியமே இல்ல. இந்த பட்டனை அமுக்கினா 4 மடங்கு பெரிசாயிடும். ரொம்ப லேட்டஸ்ட்டாம்". 

"தாலி செயின் போல இருக்கு. புதுசு எது வந்தாலும் கண்டுபிடிச்சு வாங்கிடறே".

"ஒரு சூப்பர் டென்ஷன் கேஸ் வந்தது. அந்த பார்ட்டி கொடுத்த கிஃப்ட்பா இந்த செல்லும், செயினும்".

"விவரமா சொல்லேன்".

"வீனஸ் குரூப் ஆஃப் ஹாஸ்பிடல்ஸ் அதிபர் டாக்டர் துக்காராமின் மகன் மனோஜ். அப்பா அம்மா டார்ச்சர் தாங்காம போதை மருந்துக்கு ஆளாயிட்டான். அவனைத் திருத்த ட்ரீட்மென்ட் கொடுக்கிறேன். அவன்தான் இதைக் கொடுத்தான்".

ஒரே பையனைத் தங்கள் காலத்திற்குப் பின் டாக்டராக்கி நிறுவனத்தை ஒப்படைக்கத் தணியாத வெறி துக்காராமுக்கும் அவர் மனைவிக்கும். பையனுக்கோ மருந்து டப்பாவின் வாடையே பிடிக்காமல் சரித்திரம் படிக்க ஆர்வம். முரண்பாடுகள் முற்றி ரகளைகள் ஏற்பட்டு பையன் கெட்ட சிநேகிதங்களால் போதை மருந்துக்கு அடிமை ஆகிவிட்டான். இப்போது சித்திரம் வேண்டாம், சுவர் இருந்தால் போதும் என்றாகி விட்டது. பணத்தைக் கொட்டி மனத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.."

"அப்போ, நன்றாகப் படிச்சு நல்ல நிலைமைக்கு நம்ம குழந்தைகள் வரணும்னு எதிர்பார்ப்பது தப்பா?". 

"அவர்களுக்கு உடன்பாடு இருந்தால் சரி. இல்லாதவர்களை நிர்பந்தம் செய்தால் இப்படித்தான். வெறுப்பின் அளவு ஆளுக்கு ஆள் வேறுபடும். அளவுக்கு மேல் வெறுப்பவர்களை அமுக்கினால் மனோஜ் கதைதான். நானே ஒரு சிறகொடிந்த பறவைதான்."

"என்னப்பா சொல்கிறாய்? இந்தப் பட்டணத்தில் நீதானப்பா லீடிங் மனோதத்துவ டாக்டர்".

"வெளி உலகத்துக்கு அப்படி. என் அப்பா கட்டாயத்தால் டாக்டரானேன். ஆனால் என் ஆர்வம் இன்ஜினியர் ஆகவேண்டும் என்பதுதான். மனதிருப்தி இல்லாமல் கடமையாக இந்தச் தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் விரும்பிய துறை கிடைத்திருந்தால் என் வளர்ச்சி இதைவிடப் பன்மடங்கு இருந்திருக்கலாம். பெரிய பிஸினெஸ் மாக்னெட்டாக வாலிப வயதில் கனவு கண்டேன். இப்பொழுது ஆத்ம திருப்தி இல்லாமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்".

வீட்டில் நுழைந்தவருக்கு ஓர் அதிர்ச்சி. மகளின் வலது கையில் பேண்டேஜ் இருக்கப் பதறிப் போனார். ஸ்கூட்டர் விபத்தில் அடிபட்டுக் கைக்கட்டுடன் தந்தையைக் கண்டவுடன் அழ ஆரம்பித்தாள்.

"நுழைவுத் தேர்வு எழுத முடியாமல் போச்சுப்பா. குரூப் ஸ்டடி முடிந்து வரும் போது வேன் மோதிடுச்சு. எழும்பு முறிவு இல்லை, ஆனால் ஒரு மாதம் கட்டை அவுக்கக் கூடாதாம்".

"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு விடு. நீ ஆசைப்பட்ட படியே லா படி. வியாதியஸ்தர்களையே பார்த்துப் பார்த்து உன் வாழ்நாள் கழிய வேண்டாம்".

மகளைப் பாசத்துடன் அணைத்துக் கொண்டார். 

வித்யாவிற்குக் கை வலியும், கோபாலுக்கு மன வலியும் மாயமாய் மறைந்தன.

நன்றி ; சேனை  தமிழ் உலா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 12:14 pm

கருவண்டு..
*************************
“தேன் வேட்டைக்கு படைகள் தயாரா?" ஸ்பஷ்டமாக என் காதுபடும்படியாகவே தளபதியைக் கேட்டான் அரசிளங்குமரி கேள்வியோடு என் திசையில் ஒரு நமசட்டுச் சிரிப்பு. அந்தச் சிரிப்பு என்னையே பின் தொடர்வது போல ஒரு பிரமை. பிரமை என்று எனக்கே உறுதியோடு கூறுவது தான் எனது சமத்தை நான் காப்பாற்ற ஆட்கொண்ட பக்தி படைத்தலைவன் என் சலனத்தை உணர்ந்திருக்க வேண்டும். 

"நேரே பற, மலரைத் திற, தேனைப் பெற" கூட்டுக் கோஷத்தை எழுப்பினான். வேட்டைப் படை உடனே பின் தொடர்ந்து, நேரே பற, மலரைத் திற...

அம்சிரைத் தும்பி, பேரன் என்ற பட்டப் பெயருடன் தான் நான் கூட்டுப் பள்ளஇயில் நுழைந்தேன். ஒரு பெருமையின் கூறாக இருந்த சொற்கி‌ரீடத்தில் விரைவில் இளக்காரக் கறை படியத் துவங்கி‌யது. பள்ளியில் முதல் நாளிலே, என் பாட்டானாரிடம் சிவபெருமான் பெண்கள் கூந்தல் மணம் குறித்து சந்தேகம் தீர்த்ததாக ஒரு கதை பரவலாகப் பேசப்பட்டது. 

பாட்டனுக்கு தெய்வக்குரல் கேட்டதோ இல்லையோ எனக்கு வயிற்றுக்கும் சிறகுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு உருளைத் தலை வந்து வாய்த்திருக்கி‌ந்தது. பள்ளியில் தயங்கி‌த் தயங்கி‌ச் சேர்க்கப்படும் வரையில் நான் பொத்தி தான் வளர்க்கப்பட்டேன். பொத்தி வளர்த்தது பெருமைக்காக அல்ல பாதுகாப்பிற்காக என்று உடன் படிப்பவர்கள் உணர்த்தவுடன் புறம்பேசும் குரல்களில் பொறாமை மறைந்து ஏளனம் அதிகரித்தது. 

எனக்கும் அந்த ஏளனம் அடிப்படையற்றது என்று தோன்றவே இல்லை. அந்த இராட்சசத் தலை காரணமாக எனது சக வயது வண்டுகளஇல் சிறகுகளை சரியாக பயன்படுத்த கற்றுக்கொணஅடவர்களில் கடை மாணவன் நான். கொடுக்கை சரிவர உபயோகி‌க்கவும் மற்றவர்களைக் காட்டிலும் வெகுவாக முயற்சிக்க வேண்டியிருந்தது. மீதமிருந்த குலப் பெருமையில் மட்டுமே ென்னை தேன் ரேட்டைக் குழுவில் சேர்த்திருக்க வேண்டும்.

தேர்ச்சி பெற்ற எந்த வண்டும் தேன் வேட்டைக்குச் செல்லாமல் இருப்பது கடினம். பெரும்பாலும் தேன் கி‌ண்ணத்தையோ, சிறகையோ இழந்து வண்டுகள் மட்டுமே விதிவிலக்குகள். அதிலும் சிறகி‌ழந்த மற்றும் அனைத்து கால்களையும் இழந்து வண்டுகள் மற்ற எந்த பயணிக்கும் சேர்க்கப்பட முடியாது. மொத்தம் கூடும் ஒரு பாரமாகவே அவவ்களைக் கருதியது.

இதனாலேயே, தேன் வேட்டை பயிற்சியின் முக்கி‌ய பாகம் மனிதர்களை எவ்வாறு சமாளிப்பது? என்பது தான். முதல் அறிவுரை தான் மிகவும் முக்கி‌யம் -

`விலகி‌யிருப்பதே வெற்றி'. இதுதான் அந்த சுற்றுப்புறச் சூழல் அறியாத தாந்தோநிகளை கையாள கற்றுக்கொடுக்கப்படும் முக்கி‌ய வழி. உயிரி பிரிவது, சந்தேகமற்ற நிலையில் மட்டுமே கொடுக்கை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், பயன்படுத்தியவுடன் உயிர் பிரிவது நிச்சயம். கடை நிலைத் தேன் கூட்டாளியாக தேர்ச்சி பெற நான்பட்ட பாடு எனக்கும், எனது இப்போதைய படைத் தலைவருக்கும் தான் தெரியும். 

"பாட்டன் பெயரை காப்பாற்ற வேண்டும்" என்று மந்திரம் ஓதி, மந்திரம் ஓதியே சொல்லிக் கொடுப்பார். எனக்கோ, பாட்டன் மீதிருந்த வெறுப்பு படைத் தலைவர் மீதிருந்த மரியாதையை விட குறைந்தது. அந்த மரியாதையின் பொருட்டே பயிற்சி செய்தேன். ஏதோ மாய தந்திரத்தால் அரசிளங்குமாரியின் தளபதியாரின் முன் சாகசம் செய்து தேர்ச்சியும் பெற்றேன். 

படைத் தலைவர் சந்தோஷப்பட்டார். தளபதியாரின் தேர்ச்சிப் பரிந்துரைக்குப் பின் அவரது சிறகு எவ்வளவு இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை.

முதல் தேன் வேட்டைக்குச் செல்ல மனம் இடம் கொடுக்கவே இல்லை. நீ சிபாரிசில் தேர்ச்சிப் பெற்றவன் தானே என்று சகப் படையாளிகளின் குமுறல்கள் கேட்பது போல் பிரம்மை. ஆனால், போகாமலும் இருக்க முடியாது. காரணம் தேடும் வேளையில் தான் படைத் தலைவர் தனிமையில் ஒரு கருத்து சொன்னார். "நீ முதல் முறையாக கூடு விட்டு வெளியேறுகி‌றாய். உன் பாட்டனார் பெருமையை விட கூட்டிற்குள் தேன் சேர்ப்பதே பெருமை. 

உன் பெயரும் புகழும் அதனின்றே பிறக்கட்டும்" என்று வாழ்த்தினார். நேற்று இரவு மனம் அவர் சொன்னதையே அசை போட்டது. ஒரு வேளை என் பாட்டனின் குரல் கேட்கும் சொத்து எனக்கி‌ருந்தால்? நான் தேன் சேர்த்து பெருமை பெறுவது இந்தப் பிறப்பில் நடைபெறாது. அப்பொழுதுதான் தீர்மானித்தேன், பயிற்சி அனைவற்றையும் நிராகரிக்க.

... தேனைப் பெற நானும் கோஷத்தை முடித்துக் கொண்டே படையுடன் கூட்டினின்று வெளியேறினேன். ஒளி, மனம் அனைத்தும் பிரவாகமாகப் பெருக, படை தோட்டம் ஒன்றை நெருங்கி‌யது. நான் மெல்ல படை அமைப்பிநின்று என்னை அப்புறப்படுத்திக் கொண்டேன். பல நேரம் பறந்தேன், தலைகனம் தாக்கத் துவங்கி‌யது. சோர்வடையும் நேரத்திலே தோட்டத்தின் நடுவே மரமொன்று தென்பட்டது. 

மரத்தடியில் இரு மனிதர்கள் - ஒரு வாலிபன், ஒரு வயோதிகன். என்னை பாதை இறுதி கண்ட பயணாளியின் புதுத் தெம்பு தாக்கி‌யது. வயோதிகள் வாலிபனின் மடியில் தலை சாய்த்து நித்திரையில் இருந்தது போல் அசையாமல் படுத்திருக்க, வாலிபன் அமர்ந்தபடியே கண் மூடியிருந்தான்.

நான் அருகே சென்றேன். ஒன்றும் கேட்கவில்லை. ஒரு வேளை முகமருகே சென்றால் தான் குரல் கேட்குமோ என்று காதருகே பறந்தேன். ஒன்றும் கேட்கவில்லை. வாயருகே பறந்தேன். ஒன்றும் கேட்கவில்லை. அந்த வாலிபன் நகர்வது போலவும் இல்லை. பாட்டன் தற்புகழ்ச்சிக்கு சொன்ன பொய்யை எண்ணி கோபம் வந்தது. 

சிவபெருமான் மனித உருவில் பேசினாராம். அவர் பதில் கூறினாராம்! பொங்கி‌ய ஆத்திரத்தில் கொடுக்கு வெளியேறியதும் வாலிபனைக் கொத்தியதும் எனையறியாமலே நடந்தன. உயிர் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தது. எங்கேயோ தூரத்து இடி முழக்கம் போல் ஒரு குரல் "இராதேயா நீ க்ஷத்ரியன் தானே?..."

- தீபக்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 12:17 pm

ஓட்டைப் பாத்திரம் 
*******************************
‘என்ன மூத்தம்மா? எப்பிடி சுகம்? என்ன கறி இன்டைக்கி எடுத்தது? இருந்தத்த விடவும் இளச்சிப் போயிட்டீங்களே’ என்று மூச்சு விடாமல் கேட்டவரை தீர்க்கமாய்ப் பாக்கிறேன்.

கொஞ்சங்கூட பெருமையே இல்லாம இந்த ஊத்தை பிடித்த குசினிக்குள்ளே வந்து இந்தப் பிள்ள கேட்ட கேள்வியிலேய உச்சி குளிர்ந்து பரவசமாகியது.

‘நா நல்லந்தான் மன. பாழாப்போன கால் கடுப்பும் இருமலுந்தான் என்னப் போட்டுப் படாத பாடு படுத்துது.’
மேலமேல எதுவும் பேச எனக்கு வாய் வரல்ல. சிரிச்சு மழுப்புறன். பக்கத்தில கறிச் சட்டியத் துறந்து மோந்து பாத்திட்டு அந்தப் புள்ளைக்கு நாக்குல வாயூறுது. பாராட்டும் கிடைக்குது. எனக்கு பெருமையாவும் இரிக்கி.

நா அவசரமா கேத்தல்ல தண்ணிய வெச்சி தேத்தண்ணிய ஊத்துறன். போன கிழம வருத்தமா கிடந்த அவுகள பாக்க வந்தாக்கள் கொண்டு வந்த உப்பு பிஸ்கத்தையும் கூட வெச்சுக் குடுக்கன். கட்டில்லயும், மெத்தையிலும் படுத்து, புரியாணி சாப்பிட்டு வளந்தது, என்ட ஊட்டுச் சாக்குக் கட்டில்ல இருந்திட்டு தேத் தண்ணி குடிக்கிறத்த என்னால நம்பயேலாம இருக்கு.

நா முக்காட்ட ஒழுங்காப் போட்டுட்டு வெங்காயம் உரிச்சிட்டு இருந்தப்போ, ஒரு வெங்காயத்த எடுத்து அந்தப் புள்ளையும் உரிக்குது.

‘மூத்தம்மா… நா இந்த முற எலக்ஷன்ல வெல்ல நீங்க ஓட்டுப் போடுங்க..’என்றதும் எனக்கு சரியான சந்தோஷம்.

‘யாரென்ன சொன்னாலும் சரி மன, நா உனக்குத்தான் ஓட்டுப் போடுவன்.’

அந்தப் புள்ளட முகத்துல எவளவு சந்தோஷம் பாருங்கோ, பெரியவகள மதிக்காத இந்தக் காலத்துல இப்படியும் ஒரு மகனா? இவரப்போலதான் எல்லாப் பிள்ளயளயும் வளக்கணும். இந்த மண் இப்படி ஒரு பிள்ளையப் பெத்திருக்கிறது எவளவு பெருமையான விஷயம்… ரெண்டு மூணு நாள் இந்த விஷயம் மனசுக்குள்ள இனிச்சிக்கிட்டே இரிந்திச்சி.

என்ட பக்கத்து வீட்டுக்காரணுக்கு அந்தப்பிள்ள.. அதுதான் ஸாலிஹ் ஹாஜியார் என்டா சரியான கோவம். ஆனா ஸாலிஹ் ஹாஜியாருக்கு முன்னால அதக் காட்டிக்கிறதில்ல. ஸாலிஹ் ஹாஜியாருக்கு கைகால் புடிச்சுடாத குறையா நடந்துக்கிறது. ஆனா நா இப்படி நயவஞ்சகத்தனம் வெச்சிக்கிறது இல்ல. எல்லாரோடையும் நல்லா இரிப்பன். ஆனா மனமுட்டா சொத்தயப் பாக்கயும் மாட்டன்.

ஸாலிஹ் ஹாஜியார் பேசுறதயெல்லாம் கேப்பன். அவர யாராச்சும் ஏசிப் பேசினா என்னால தாங்கயேலா. அவுக எல்லாரையும் திட்டிட்டே இரிப்பன். இலக்ஷன்ல ஸாலிஹ் ஹாஜியார் வெண்டாத்தான் எனக்கு சோறும் இறங்கும். தோத்துட்டாரென்டா மையத்து ஊடுதான். ஒவ்வொரு முறையும் நடக்கிறது இதுதான்.

இன்டக்கி எல்லாம் சரியான வேல எனக்கு. வாற மனிசர கவனிக்கிறத்திலேயே நேரம் போயிட்டு. அவரு சும்மாதான் நல்லா இருந்தவரு. இந்த வயசிலையும் கண்ணாடி போடாம பேப்பர் வாசிப்பாரு. ரெண்டு தரம் நெஞ்சு நோவென்டு நெஞ்சப் பிடிச்சிட்டு கீழே உழுந் துட்டாரு. வாட்டுல வச்சி பிறகு கொழும்புக்கு ஏத்தி…. மிஞ்சியிருந்த என்ட ரெண்டு சோடிக் காப்பையும் வித்துச் செலவழிச்சன். அப்பயும் காசி காணாமத்தான் கிடக்கு. ஊடு வளக ஈட்டுக்கு வைப்பம் என்டாலும் மனம் வருகுது இல்ல. கடைசி காலத்தில நானுங் கெடக்க ஒரு குடிலெண்டாலும் வேணுமே…

எங்கெயோ இருந்து திடீரென்டு ஸாலிஹ் ஹாஜியார்ர ஞாபகம் வந்திச்சி. எதயும் யோசிக்கல்ல. ஓடிப்போன கால் அமைதியாகி அடங்கினது அவர்ர ஒப்பீசுக்குள்ள போனத்துக்குப் பொறவுதான். ஒவ்வொருத்தராத்தான் அவர பாக்கலாமாம் என்டாங்க. நானும் லைன்ல நின்டன். என்ட முறயும் வந்திச்சி. உள்ள போய் அவர்ர வருத்தத்தயும் என்ட நிலமயயும் சென்னன்.

எனக்குத் தெரிஞ்ச ஸாலிஹ் ஹாஜியார் அமைதியானவர், நல்லவர், ஏழ பாழக்கி உதவி செய்யிறவரு. எல்லாத்தயும் அமைதியாக் கேட்டிட்டு ஒரு சின்னக் கூடு ஒண்ட என்ட கைக்க வெச்சாரு. எனக்கு சரியான சந்தோஷம்.

ஊட்ட வந்து ஸாலிஹ் ஹாஜியார் தந்ததா அவரிட்ட கொடுத்தன். கூட்ட அவரே விரிச்சி காச எடுக்கயும் எனக்கு சப்பென்டு பெய்த்து. குறஞ்சது ஒரு மயில் (ஆயிரம் ரூபா) என்டாலும் இரிக்கும் என்டு பாத்தன். ஆனா இருந்தது வெறும் நூத்தியம்பது ரூபாதான். ஏதோ அரசியல்வாதி என்டா அப்படித்தான்டு விளங்கிட்டன். நான் வேகா வெயிலுக்க லைன்ல நின்டது எல்லாம் அநியாயம்.

என்ட நிலமயப் பார்க்கயேலாம யாரோ ஒரு ஆளுவந்து அவர படம் புடிச்சி, அவர்ர படத்த பேப்பர்ல போட்டு பேங்கில கணக்கும் துறந்து குடுத்துட்டுப் போனாரு. பேப்பர்ல பாத்தவங்க எல்லாரும் காசி போட்டிருந் தாங்க. அரவாசி சேந்திட்டு. மிச்சக் காச நான் வளகில பாதிய வித்து அதே பேங்கிலேயே போட்டன். ஒப்ரேஷ னுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னால தான் அது நடந்தது

அவருக்கு வருத்தம் உரம். ஒப்ரேஷன் பண்ண காசு எடுக்க பேங்குக்குப் போனா காசி எடுக்கயேலாது என்டாங்க. புறகுதான் தெரிஞ்சது. நாசமாப்போன பேங்க மூடிட்டாங்களாம். இதுக்குக் காரணம் ஸாலிஹ் ஹாஜியாரும் இன்னும் யரோவெல்லாமாம். எல்லாரிட்டயும் போய் கெஞ்சினன். யாரும் உதவி செய்ய முன்னாகல்ல. நாள் போனதால அவருக்கு வருத்தம் கூடிட்டு. என்ட கண்ணுக்கு முன்னாலயே அவரு வருத்தத்தில துடிதுடிச்சி மூச்சிடயேலாம மௌத்தாப் போயிட்டாரு.

நாலு மாசமும் பத்து நாளும் ஒரு வேளச் சாப்பாட்டோட போயிட்டு. இப்ப நான் தனி மரம். என்னதான் கிழவியும் கிழவனுமென்டாலும் நாங்க புருஷன் பொண்டாட்டி இல்லயா..? இந்நேரம் அவரு மண்ணோட மண்ணாப் போயிருக்கலாம். ஆனா என்ட மனசில முதல் முதலாக் கண்ட மாப்பிள்ள கோலத்திலேயே அவரு இரிக்காரு. மௌத்துட நாட்டம் அள்ளாட தான். ஆனா அவர்ர மௌத்துக்கு காரணம் ஸாலிஹ் ஹாஜியார் என்னும்போது மனம் விரக்தியாகுது

எங்கேயோ தூரத்தில ஸாலிஹ் ஹாஜியார் அவர்ர அடியாட்களோட வந்துக்கிட்டு இருக்கிற சத்தம் கேக்குது. காதக் குடுத்துக் கேட்டுப் பாக்கன். பக்கத்து வாசல்ல குந்திக்கிட்டு இருந்து மீனறுத்துக் கழுவிக்கிட்டு இருக்கிற என்னய மாதிரி ஒரு கிணத்துத் தவளைக்கு உதவியா சுத்தி இருக்கிற காகங்களை எல்லாம் அவர்ர கையால விரசி உர்ராரு ஸாலிஹ் ஹாஜியார்.

‘ஏழக்கி உதவி செய்யிற என்டு காட்டுறான். ஓட்டு வேணுமென்டா கைகாலும் புடிச்சி உடுவானுகள்’

எனக்குள்ளேயே திட்டிக் கொண்டேன். கொஞ்ச நேரமா ஒன்னுமெ விளங்கல்ல. என்ட ஊட்டுப் பக்கமா வாறது விளங்குது. அவசரமா குசினிக்குள்ள ஓடினன்.

‘என்ன மூத்தம்மா.. பாத்து ஊத்துறல்லயா..?’ கடமைக்கான மரியாதை அவன்ட குரல்ல தெரியுது.

எனக்குள்ள இருந்த ஆவேசம் கொஞ்சம் அடங்குது. அப்பதான் மீன் கழுவி மடு வெட்டிப் புதைக்க இருந்த தண்ணிக் கோப்பயப் பாக்கன். கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்திச்சி. என்னக் கேக்காமலேயே கிணத்தடிப் பக்கம் போய் கழுவுற சத்தங் கேக்குது. நா ஒன்டும் பேசல்ல.

இஷ்டம்போல உள்ள வரப்போனவனப் பாத்து ‘யாரு நீங்க?’ என்டு கேட்டன். அவளவுதான். ‘மூத்தவாப்பா மௌத்தானதுக்கும் வரக் கிடைக்கல்ல… சரியான வேல..’ என்டான். இன்னும் ஏதேதோ பேசிக் கொண்டே போனான் அவன்.

என்னால கோவத்த அடக்க ஏலாமப் போயிட்டு. ‘ஓ.. ஓ..! நீங்க தந்த நூத்திச் சொச்சம் போதுமே அவரோட ஒப்பரேஷனுக்கு. போதததுக்கு பேங்கில கிடந்த அவருட காசயுமெலவா நீங்க எடுத்துக்கிட்டு அவர அள்ளாகிட்ட அனுப்பிட்டீங்க. கொலகாரன்.. கொள்ளக்காரன்.. பிச்சக்காரன்.. என்ட கண்ணுக்கு முன்னால நிக்காம கெதியாப் பேத்திடு நீ..’ என்டவாறு ரெண்டு கையாலயும் வாசல்ல கிடந்த மண்ண அள்ளி வீசுறன்.

ஸாலிஹ் ஹாஜியார் ஒன்டுமே பேசல்ல. குனிஞ்சிக் கிட்டே போறது தெரியுது. பக்கத்தில போன ஒருத்தனுக்கிட்ட ‘கிழவிக்கு பைத்தியம் புடிச்சிட்டு’ என்டு ஏசிக்கிட்டுப் போறது என்ட காதிலயும் கேட்டிச்சி.

எனக்கு நல்லாவே விளங்குது.. இவனுங்க எல்லாம் ஓட்டைப் பாத்திரம் என்டு. ஏனென்டா.. என்னையே உருக்கி ஊத்தினாலும் அவன் நன்றியால் நிறையப் போவது இல்லையே!!! 

(யாவும் கற்பனையல்ல)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 12:21 pm

ஆரம்பிக்கப்படாத வாழ்வு
*************************************
சூரியன் தன் உடல் கிழித்து வெப்பத்தைச் சிந்திக்கொண்டிருந்தான்.அவள் கூரையின் ஓட்டை வழி வந்த வெளிச்சத்தை தன் முகத்தில் ஏந்திக்கொண்டிருந்தாள்.

துர்நாற்றமும் புழுக்களும் ஈக்களுமாய் தன்னைச் சுற்றுவதைத் தவிர்க்க ஏதோ ஒரு வாசனைத் திரவியத்தைத் தெளித்துவிட்டு மீண்டும் யன்னல் வழி தன் பார்வையைச் சுழலவிட்டாள்.வியர்வையில்கூட துர்நாற்றம் உரசிப்போகிறது.

குழந்தைகளின் சிரிப்பொலி பூக்களைச் சுற்றும் வண்டுகள் பக்கத்து வீட்டை அலசும் பெண்கள் பழைய கனவுகளை மீட்டெடுக்கும் முதியவர்கள் என்று அன்றாட இயல்போடு அன்றைய நாள்.அறை மூலையில் ஒரு எலி தன் குஞ்சுக்கு இரை தேடிக்கொண்டிருந்தது.

முன்று நாட்களாகக் கிழிக்கப்படாத கலண்டர் சுவரில் காற்றில் அடிபட்டுக்கொண்டிருக்க எலி பயந்து ஓடத்தொடங்கியது.தேநீர் குடிக்க மனம் உந்தியது.ஆனாலும் இருப்பு ஒட்டிக்கிடக்கிறது எழும்ப இயலாமல்.

மெல்ல இருளை வரவேற்று மாலை வெயில் மறைந்திகொண்டிருக்க மெல்லிய கீறலாய் நிலவு வெளிப்பட்டது ஆனாலும் வெளிச்சம் தாராளமாய் இல்லை.இன்னும் யன்னலோடு ஒட்டியபடிதான்.எழுதி வைத்த கடிதம் அடிக்கடி தன்னைத் திரும்பிப் பார்க்கவென்று படபடத்துக்கொண்டேயிருக்கிறது.

மெல்ல இருள் விலகத்தொடங்கியிருந்தது.பறவைகள் இரை தேடவும் பசுக்கள் தன் கன்றுகளுக்குப் பால் கொடுக்கவும் தயாராகின்றன.பூக்களின் வாசனை அறையின் துர்நாற்றத்தையும் தாண்டி மனதை இதமாக்குக்கிறது.தூரத்தே ஒரு வீட்டில் ஒரு குழந்தை பள்ளி போக அடம் பிடித்து அழுவதும் கேட்கிறது.

தேநீர் தரவோ கேட்கவோ ஆடகள் இன்றி தாகத்தோடேயே மீண்டும் அதே யன்னல் கம்பிகளூடே ரசிப்பின் நாயகியாய்.இனிமையான காலை நேரப் பாடல்களும் பாடசாலை மாணவர்களுமாய் சாலை கொஞ்சம் நிரம்பியபடி.யாரும் அவள் பக்கம் திரும்பாமலே தங்கள் குறும்புகளோடு சிநேகித முகங்களோடு.

இவளுக்குப் பொறாமையாய்கூட.ஏன் இவள் மட்டும் தனிமையில் கவனிப்பாரற்று.

கண்ணீர் யன்னலோரத்துப் புற்களை ஈரமாக்க தன் கைகளை இன்னும் இறுக்கி சூரியனின் வருகையையும் அடுத்த நாளின் ஆரம்பத்தையும் வரவேற்றபடி அவள்.

கதவுகள் எதுவும் திறக்கபடாததால் அறைக்குள் ஒரு இறுக்கம்.சூன்யம்போல அமைதி. ஒருமுறை அறை முழுதும் அலைந்து திரும்பவும் யன்னல் கம்பிகளை இறுக்கிக் கொண்டபடி. வெறுமையான சுவரும் கடைசியாகப் பார்த்த அப்பா அம்மாவின் அல்பமும் இன்னும் விரித்தபடி கிடக்கிறது.

அவளின் இளமைக்கால நிழலும் எவ்வளவு சந்தோஷமாக அதற்குள். யார் இத்தனை சந்தோஷங்களையும் விழுங்கிக் கொண்டது.

ஏன் எல்லாம் அவள் அறையில் அசைவற்றுக் கிடக்கின்றன.சமையல் பாத்திரங்கள் கழுவப்படவில்லை.தொலைபேசி அலறவில்லை.தண்ணீரின் சலசலப்போ வானொலிச் சத்தமோ இல்லை.குளியல் அறையில் மாத்திரம் ஒரு துளி நீர் சொட்டும் சத்தம்.

ஓ...அது இறுக்கப் பூட்டப்படாத குழாயின் கூப்பிடு குரல்.

ம்....மெல்லக் கதவு திறந்து மூடுகிறது.யாரோ அறை உடைத்து முன்னேறப் பார்க்கிறார்கள். உறவின் இரைச்சல்கள் அழுகையாய் ஆர்ப்பாட்டமாய் இரக்கமாய் அருகே கேட்கிறது.

இவர்கள் அவள் அறை துழாவத் தொடங்கிவிட்டார்கள்.அவள் இருப்பின் அடையாளங்கள் ஒவ்வொரு துகளிலும் இங்கு கிடக்கப் புறப்படுகிறது காற்றாய் அவள் கைகளும் கால்களும்.

உடல் அது உடல் அல்ல.வெறும் காற்றாய் அந்தர ஊஞ்சலாய்.கதவுகள் திறக்கப்பட்டதால் சுலபமாய் வெளியேற யன்னல் கமபிகளின் வியர்வைப் பிடியிலிருந்து மெதுவாய் வெளியே மெல்ல.சுலபமாய் இருக்கிறதே இப்போ உள்நுழையவும் வெளியேறவும்.

இப்போ அந்த யன்னலின் பின்பக்கமாய் அவள்.இன்னும் யார் யாரோ உள்நுழைய விம்மல் சத்தங்களினூடே அதட்டல் குரல்களும்.

இரன்டு நாட்களுக்கு முதல் தனிமையின் விரட்டல் அதிகரிக்க தலை தடவவோ கைகளை இறுக்கிப் பற்றவோ எவருமின்றி, உதிர உறவுகளை செய்திகள் வெளியேற்ற உச்சி வெயில் வெப்பியெழ இவளும் பைத்தியமானாள்.

கச்சிதமாகத் தனக்குப் பிடித்த உடையணிந்து அலங்கரித்தபடியே படுத்திருந்தாள்.
அவஸ்தையான வாழ்வு,தனிமை,சிறுவர்களின் பசிக் குரல்கள்,பிடிக்காத செய்திகள்.தன்னைத் தானே சூறையாடிய அந்த மயக்க மருந்துகள்.

சொக்கிப் போகும் நிமிஷத்திலும் தான் விளையாடிய அந்த முற்றம்,மண்திண்ணை,ஒற்றைப்பனை.மயங்கிவிட்டாள்.மிஞ்சிக் கிடக்கும் உடலைத்தான் பார்த்து அழுகிறார்கள்.எங்கே போனார்கள் இத்தனை நாளும் இவர்கள்!

உடல் புரட்டி உடை தளர்த்தினாலும் கேள்விகளும் பதில்களும் நிரம்பி வழ்ந்தன.

ஏன் என்ன நடந்தது ? !!!

பரீட்சையில் தோல்வியோ...இல்லையே இப்போ பரீட்சைக் காலமில்லையே இரண்டு நாளைக்கும் முன்னமும் பார்த்தேனே தொலைபேசியோடு.நானும் கண்டேனே அடுத்த தெருப் பையனோடு யாரோ ஒருத்தியும் இங்க அடிக்கடி வருவாளே.அவளை இப்போதைக்குக் காணாவில்லை நான்.

என்னதான் எழுதியிருக்காம் அதில.காட்டவே மாட்டார்களாம்.படிக்கவோ வேலைக்கோதானே இங்க தங்கியிருக்கிறாள்.

அதில்கூட அவர்களுக்கு முழுமையான விபரம் இல்லை.ஏன் எதற்கு யார் எங்கே எதுவுமே தெரியாது.ஆனாலும் வாய் அவிழ்ந்து புழுவாய்ப் பொய்த்துக் கொட்டுகிறது.அந்த நாற்றத்தைத் தாண்டி அவர்களின் பேச்சு காற்றோடு கலக்கிறது.தனிமையும் உறவுகளின் பிரிவும்தான் அவள் மனதை இறுக்கியது என்று.

எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத வெறுமை. தொலைபேசியோடான சிநேகம்,கணணியோடான அளவலாவல், அத்தனைக்கும் தூரமான அவள் தேசம்.

அகற்றப்பட்ட அல்பமும் கடிதமும் கலண்டரும்.இப்போ நாற்றம் இல்லை.அத்தனை கதவுகளும் யன்னலும் திறக்கப்பட்டு மாலையும் காலையும் வெளிச்சம் உள்நுழைந்து வெளியேறிக்கொண்டிருந்தது.இயல்பு வாழ்வு இயல்பாபகவே நகர்கிறது.குழந்தைகளும் பூக்களும் அப்படியேதான்.

சில சமயங்களில் மாத்திரம் சூன்யமாய் வெறித்த பார்வையோடு சிலர் அந்த அறையையைப் பார்க்கிறார்கள்.வாழ்வேண்டிய வாழ்வைச் சூறையாடிய சந்தோஷத்தில் அந்தத் தினம்.நகர்வுகள் இயல்பானானாலும் பாரம் சுமந்த சில மனங்கள். அவளின் உடல் இல்லாமல் போய் ஒரு வாரமாகியிருந்தது.அந்தச் சுற்றாடலில் எல்லோரும் அவளை - அந்தச் சம்பவத்தை மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கியிருந்தார்கள்.


ஹேமா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 12:25 pm

நம்பிக்கை மோசம்
******************************
ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித்தராது ஏமாற்றிக்கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி. அவன் முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை வாங்கி அவரையும் ஏமாற்றத் திட்டமிட்டான். நிச்சையமாக முல்லாவை ஏமாற்றி ஒரு பெருந்தொகையினை கடனாக வாங்கி வருவதாக பலரிடம் மார்தட்டிக்கொண்ட அவன். முல்லாவிடம் சாமத்தியமாக செயற்படத் திட்டமிட்டான்.


முல்லா தன்னை நம்பி பெருந்தொகையினைக் கொடுக்க மாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும். அதனால் தன்மீது நம்பிக்கை ஏற்படுவதற்காக ஒரு நாடகம் நடிக்க எண்ணினான். ஒருநாள் அவன் முல்லாவிடம்ட சென்றான் “முல்லா அவர்களே எனக்கு ஒரே ஒரு காசு கடனாகத் தர முடியுமா?” என்று கேட்டான். “நம்பிக்கை மோசம் செய்யாத யாருக்கும் நான் எவ்வளவு தொகைவேண்டுமானாலும் கடனாகத் தருவதற்குத் தயங்கமாட்டேன்.


நீ ஒரு காசுதானே கேடகிறாய் இதிலே நீ நம்பிக்கை மோசம் செய்யவில்லை என்றால் நான் உனக்கு பத்தாயிரம் காசுகள் கேட்டாலும் கொடுப்பேன்.” என்று கூறி டம்பனுக்கு ஒரு காசினைக் கடனாகக் கொடுத்தார் முல்லா. டம்பன் நாலு ஐந்து நாட்கள் கழித்து முல்லா கொடுத்த ஒரு காசினை எடுத்தக்கொண்டு முல்லாவிடம் வந்தான். “முல்லா அவர்களே தாங்கள் கொடுத்தது அற்ப பொருள்தான் என்றாலும் மிகுந்த நாணயத்துடன் அதைத் திருப்பித்தருவது என்று வந்திருக்கிறேன். பணவிடயத்தில் நான் மிகவும் நேர்மையானவன்




என்பதை தாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்” என்று கூறியவாறு டம்பன் அந்த ஒரு காசினை முல்லாவிடம் கொடுத்தான்.



முகத்தில் மலர்ச்சி இல்லாமல் ஏதோ உபத்தைப்படுபவர் போல் அதனை வாங்கிக்கொண்டார் முல்லா. டம்பன் அந்த இடத்தை விட்டு அகலாமல் தலையினைச் சொறிந்துகொண்டு நின்றான். “என்ன சமாச்சாரம்…?” என்று கேட்டார் முல்லா. “ஒன்றுமில்லை ஒரு ஐயாயிரம் பொற்காசுகள் தேவைப்படுகின்றது கொடுத்தீர்கள் என்றால் இதைத் திருப்பிக் கொடுத்தது போல் அதனையும் நாணயமாகத் திருப்பித்தருவேன்.” என்றான் டம்பன்.

உனக்கு இனி நான் ஒரு காசுகூடக் கடனாகக் கொடுக்க முடியாது” என்று கோபமாகக் சொன்னார் முல்லா.

“முதலில் நான் வாங்கிய ஒரகாசைத்தான் திருப்பித் தந்துவிட்டேனே” என்று ஒன்றும் விளங்காமல் கேட்டான் டம்டபன். “நீ ஒரு காசு வாங்கிய விடையத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாய்” என்றார் முல்லா. டம்பன் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தவனாய் ” முல்லா அவர்களே நான் வாங்கிய தொகையினைத் திருப்பிக்கொடுத்திருக்கின்ற போது எவ்வாறு நான் நம்பிக்கைத் துரோகம் செய்ததாகக் கூறுகின்றீர்கள்” என்றான்.

” நம்பிக்ககைத் துரோகம் தான் செய்துவிட்டாய் நான் கொடுத்த ஒருகாசை நீ திருப்பிக்கொடுக்கமாட்டாய் எனக நம்பினேன். நீயோ திருப்பிக் கொடுத்துவிட்டாய். ஆகவே நீ நம்பிக்கைத் துரோகம் தான் செய்து விட்டாய். உனக்கு ஒருகாசும் இனித் தர முடியாது” என்று கூறியவாறே முல்லா எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். டம்பன் அதிர்ச்சியுடன் வெளியேறினான்.

நன்றி சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 12:32 pm

முடிச்சு....!
*******************
ஒரு தார்ச்சாலையும், கொளுத்தும் உச்சிவெயிலும், இறுகக் கட்டிய கழுத்து டையும் வெறுமையான எதிர்காலமும் எப்போதும் வெறுப்பாய் பார்க்கும் மனிதர்களும்...டார்கெட் நோக்கி துரத்தும் படியளக்கும் முதலாளிகளும் எப்போதும் அறிந்ததில்லை திருமணத்திற்காக காத்திருக்கும் என் அக்காவையும் கடந்த மாதம் ரிட்டயர்ட் ஆன என் அப்பாவையும், எட்டாம் வகுப்பு படிக்கும் என் தம்பியையும்.....

கல்லூரிக்கு அனுப்பியதே மிகப்பெரிய சாதனையாகவும் பெற்ற பி.காம்., பட்டமே மிகப்பெரிய அங்கீகாரமாகவும் நினைத்த என் குடும்பத்தினரின் ஒரே நம்பிக்கை நான். நான் பெற்ற பட்டம் முன் அனுபவம் இல்லை என்பதால் நிராகரித்த
மிகைப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களும் சரி....இன்னும் அடி மாட்டு விலைக்கு வேலைக்கு கூப்பிட்டு ஓரிரு மாதங்கள் சென்று சம்பளம் கொடுக்காமால் ஏமாற்றிய உள்நாட்டு முதலாளிகளும் சரி....

என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள்....அவர்களின் வேலை கொடுப்பதற்கான அளவீடு என்ன என்பதும் அறிந்து கொள்ள நான் முயலவில்லை காரணம் என் வீட்டின் பசி.

ரிட்டயர்மெண்ட் ஆன அப்பாவின் பணம் வீடுகட்ட வாங்கிய கடனுக்கு போதுமானதாக இருந்தது. நான் கூட கேட்டேன்.. கடன் வாங்கி அப்படி என்னத்த வீடு கட்டணும்னு....? பதிலாக அக்காவின் திருமணம் என்ற ஒன்றை சொன்னார்கள். ஆமாம் சொந்த வீடு இருந்தால்தான் மாப்பிள்ளை கொடுப்பார்களாமே....? சேலையூர் தாண்டி காமராஜபுரம் பக்கத்தில் எப்போதோ அப்பா கூட்டாக பணம் போட்டு வாங்கிய இடத்தில் ஒரு குருவிக் கூடு எங்களுக்கு சொந்தமாவதற்கு மேற்கொள்ளப்பட்ட சிரமங்களை சொல்லி மாளாது....

ஒரு வாட்டர் ப்யூரிஃபையர் விற்கும் கம்பெனி மாத டார்கெட் இவ்வளவு என்றும் ரூபாய். 4,000 சம்பளத்துக்குதான் உன் பி.காம் டிகிரி வொர்த் என்றும்.. அக்கவுண்ஸ்ல வேலை வேணும்ன அக்கவுண்ட்ஸ் பத்தி முன் அனுபவம் வேணும்னு சொல்லிடுச்சி.... நான் எங்க போறது முன் அனுபவத்துக்கு? 6 மாசம் முன்னால டிகிரி முடிச்சவனுக்கு எப்படி கிடைக்கும் முன் அனுபவம்?

கிண்டி பிரிட்ஜ்ல ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன்.... சென்னை வெயில் கொளுத்தியது....அக்னி நட்சத்திரமா இருக்கட்டும் இல்லா ஏதாவதா இருக்கட்டும் என்னைய மாதிரி ஒரு வேலை செய்றவங்க நிலைமையெல்லாம் ரொம்ப கஷ்டம்டா சாமி....!

தூசும் புகையும், ஆட்டோகாரர்களின் அலட்சியமும் , பேருந்துகளின் சீற்றமும், பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்த எனக்கு பைக்கின் முன்னால் ஒரு குழந்தையும் பின்னால் அவரது மனைவியும் அவரது கையில் ஒரு குழந்தையும் வைத்துக் கொண்டு கிண்டி பிரிட்ஜ் இறக்கத்துல தத்தளித்துக் கொண்டிருந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரை பார்க்க நேர்ந்தது.

எல்லோருக்கும் பழகிப் போய்ட்விட்டது எப்போதும் அட்ஜஸ்ட் பண்ண முடியாத வாழ்க்கை என்று எதுவுமில்லை. எல்லாம் பழக்கத்தின் அடிப்படையில் உண்டாவது.
என்னால் இப்படி இருக்க முடியாது.... அப்படி இருக்க முடியாது என்று சொல்வது எல்லாம் ஒரு வசதிக்காக....!

கால் நீட்ட இடம் இருக்கிற வரைக்கும் நீட்டலாம்... இடிச்சா மடக்கிங்க வேண்டியதுதான்.....உச்சி நேரம் நெருங்கி பசி வயித்த கிள்ளுது சார்.. நான் சைதாப்பேட்டை அடையாறு பக்கம் போய் சுத்தணும்... வீடு வீடா கதவ தட்டி காலிங் பெல் அமுக்கி.....ரொம்ப கஷ்டம் சார்......பிச்சைகாரங்க கூட ஒரு வேளை சாப்பாடு இல்லண்ணா ஒரு எட்டணா போட்டு அனுப்புறாங்க.....

நாம போய் பெல்ல அடிச்சாலே....சில பேருக்கு வருது பாருங்க கோவம்.....! ஆமா சார் லாஸ்ட் வீக்... அண்ணா நகர்ல ஒரு நாய அவுத்து விட்டாங்க சார்...நல்ல வேளை நான் கேட்டுக்கு வெளில நின்னேன்...அது அவுங்க பிரைவேட் டைம்ங்களாம்....ரெஸ்ட் எடுக்குற நேரமாம்....

என்னா சார் பண்றது... அவுங்க ஓய்வு எடுக்குற நேரத்துல ஏதாச்சும் வாங்கணும்னு முடிவு பண்ணி வாங்கினாதானே சார்....நாம ஒரு 5 மணி நேரமாச்சும் நாம நிம்மதியா தூங்க முடியும்.....! சார்ந்து வாழ்ற வாழ்க்கைனு படிக்கிறாங்க.... சொல்றாங்க...ஆனா.....அது எல்லாம் வசதிக்கு ஏத்தாப்லதான் ....துட்டு இருக்குறா ஆள துட்டு இருக்கவன் ஃபிரண்ட் ஆக்கிக்குவான்....ஹக்கூம்......

காலைல இருந்து எதுவும் சாப்டல...ஒரு டீயும் வடையும் துன்ன போறேன்....உங்களுக்கு வேணுமா சார்....? வாணாமா.... சரிங்க சார்...

ஜஸ்ட் இந்த வாட்டர் ப்யூரிஃபையர் வேணுமானு பாருங்க.....அட வாங்க வாணாம் சார்...! ஜஸ்ட் ஃப்ரவுசர்தானுங்களே....வச்சுக்கோங்க....வேணும்னா இந்த செல்லுல கூப்பிடுங்க.....சரிங்களா?

அப்புறம் மறக்காம வீட்டம்மாகிட்ட எல்லாம் சொல்லுங்க சார்... வாணாம்னா "டபார்"னு கதவை அடைக்காம....கொஞ்சம் அப்பால போனதுக் கோசரம் அடைக்க சொல்லுங்க சார்....!

ஒவ்வொரு நாளும் கழுத்துல " டை " கட்றப்ப போடுற முடிச்சு வெறும் முடிச்சு இல்ல சார்...வாழ்க்கை போட்டு இருக்க முடிச்சு.....வெளில பாக்கிறப்ப அலங்காரமா தெரியலாம்..அதுக்கு பின்னால இருக்குற வேதனைகள் யாருக்கும் தெரியாது சார்...!

அப்போ பாக்கலாம் சார்.... ..மறக்காம கால் பண்ணுங்க..உங்களுக்கு மெட்டிரியல் தேவைப்பட்டா......

(ஒரு டீக்கடையில் ஒதுங்கி கொண்டது இந்தியாவின் வருங்காலம்...)


நன்றி தமிழ் சேனை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 12:36 pm

பாபு 
********* 
விடிந்து விட்டது....என்பதை உணர்ந்த பாபு ஏன் விடிந்தது என்று கவலையாய் எண்ணத் தொடங்கியிருந்த மனோ நிலைக்கு காரணம் இருக்கிறது. கல்லூரி படிப்பு முடித்து விட்டு ...அடுத்து என்ன? என்ற கேள்விக்குறிக்கு பின்னால் என்ன என்று தெரியாமல்....வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு யோசனையை சொல்லி... வேதியல் பட்டதாரியான அவனை கொத்தி.. குதறிக் கொண்டிருந்தார்கள்......!

சந்தோசமாய் கழிந்த கல்லூரி நாட்கள் போய்விட்டதே என்ற மிரட்சியில் இருந்து மீண்டு வரமுடியாத பாபுவின் முன்னால் பக்கது வீட்டுக்காரர்களும், எதிர் வீட்டுக்காரர்களும் கூடிக் கலந்து இருக்கும் இந்த சமுதாயம் ரொம்பவே பயமுறுத்தியது...பற்றாக்குறைக்கு ஒரு ஓரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கல்லூரி காதல் வேறு ரொம்பவே அவனை தொந்திரவு படுத்தியது.


துரை… என்ன இன்னும் தூக்கமா...காலையில எழுந்து ஏதாச்சும் உருப்படியா செய்றானா பாரு... நேரத்திலேயே எழுந்து செய்ய வேண்டிய வேலைகளை செய்யணும் வேலை இருக்கோ இல்லையோ.....காலையில எழுந்துடனும்...அலுவலம் செல்ல தயாரகிக்கொண்டிருந்த அப்பாவின் வசவுகள்...பழகிப் போன ஒன்றுதான்...!

படுக்கையில் காபி கொண்டு வந்து கொடுத்த அம்மா சொன்னாள்… எழுந்து குளிச்சுட்டு வாப்பா...சீக்கிரம் என்று சொல்லி விட்டு அடுக்களைக்கு பறந்தாள்......காபி டம்ளர் காலியானவுடன்..... என்னசெய்வது அடுத்து ....ம்ம்ம்ம்ம்...இரண்டு நாளில் சென்னைக்கு செல்லவேண்டும் அங்கு இருக்கும் நண்பனின் அண்ணன் ரூமில் தங்கி வேலை தேடவேண்டும்....


ஆமாம்...என்ன வேலை தேடுவது....? நான் படித்த கல்லூரியில்...வேதியல் ப்ராக்டிகல் வகுப்பில் கூட எல்லா மாணவர்களையும் வைத்துக் கொண்டு விரிவுரையாளரே...பென்சாயிக் ஆசிட் ப்ரிபேரசன் செய்து விடுவார்...எங்களுக்கு நோட்ஸ் வைத்துதான் படிக்க சொல்வார். சால்ட் அனாலிஸிஸ் மற்றும் டைட்ரேசன் செய்வது இது இரண்டு மட்டும்தான் நாங்கள் செய்யும் ப்ராக்டிகல்.

வேதியல் படித்து அதில் முதல் வகுப்பில் பாஸ் பண்ணியிருந்தாலும்...கணக்கும் பிசிக்சும் ஆன்சிலரியாய் இருந்தாலும்...எல்லாமே... எங்களைப் பொறுத்த வரைக்கும்...பரிட்சைதான்...மார்க்தான்..! +2 வரைக்கும் தமிழ் மீடியம் படித்து விட்டு....கல்லூரியில் ஆங்கிலம் என்பது...புரபசர் கொடுக்கும் நோட்ஸ்தான்...அந்த நோட்சே எழுத முடியாமல் நிறைய பேர்....

பாடம் நடத்தும் விரிவுரையாளரும்...தமிழில்தான் நடத்தி நோட்ஸ் கொடுப்பார். விளங்கி படிப்பவர்கள்... +2 வரைக்கும் ஆங்கில வழி கற்றவர்கள்தான்...எங்களுக்கு அது மனப்பாடம் செய்யவேண்டிய நிலைதான்....தெர்மோடனமிக்ஸும், ஆர்கானிக், இன் ஆர்கானிக் எல்லாம் எனக்கு எப்படி வாழ்க்கையை போதிக்க போகிறது....ம்ம்ம்ம் சேல்ஸ் ரெப் ஆகலாம்..

ஆனால் ஆங்கிலம் சரளமாக பேச வேண்டும்.... நான் சரளமாக பேசமுடியாமல் போனதற்கு என் சூழலும் ஒரு காரணம்...கல்லூரி வந்துதான் ஆங்கிலத்தை ஒரு சப்ஜக்டாக பார்க்த நாங்கள் ஒரு புது விலங்கை போல தொட்டு தொட்டு பார்ப்பது போல பார்த்து ஆச்சர்யமாய் ஆங்கிலம் பேசுபவர்களோடு பழக ஆரம்பித்தோம்...

கெமிஸ்ட்ரி படித்து பர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணியாச்சு....? அடுத்து என்ன செய்வது? வேலை தேடு.....இதுதான் பதில்....கிராமப்புற மாணவனுக்கு நகரத்து மாணவனுக்கு கிடைக்கும் விசய ஞானம் கிடைப்பது இல்லை...பெரும்பாலும் ஆளுக்கொரு யோசனை சொல்லி குழப்பத்தில் தள்ளி விட்டு...கல்லூரியில் படிக்கும் போது இருந்த திமிர் அடித்து நுரைத்து கரையும் நேரங்களில்....பெரும்பாலும் கண்ணீரோடு...ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு...என்ன வாழ்க்கை இது என்று எண்ணும் தருணங்களில்....எல்லாமே விரக்தியாய்.......


படிக்க வைத்த பெற்றோருக்கு மார்க் வாங்கும் வரை கல்வி கற்க உதவி செய்யத் தெரியும்...சமுதாயத்திற்கு குறை சொல்லவே மட்டுமே தெரியும்.... வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு முன் அனுபவம் இருக்கானு கேட்க மட்டும் தெரியும்..?
….
…..
……
சென்னை செல்லும் பேருந்தில் அமர்ந்து விட்ட பாபுவிற்கு கண்ணீர் மல்க விடை கொடுத்த அப்பா தைரியமா வேலை தேடு.... கிடைச்சுடும்...போனவுடனே கம்ப்யூட்டர் க்ளாஸ் சேந்துடு என்று யாரோ சொன்ன அறிவுரையை ஏற்றுக் கொண்டு நாங்கள் எடுத்த முடிவையும் வலியுறுத்தினார்! அம்மாவின் அழுகை இரணப்படுத்தியது....அவளின் முந்தானைக்குள்ளேயே வளர்ந்தவன்... வாழ்க்கையின் அவசியம் விரட்டும் விரட்டலில் யார்தான் நிற்க முடியும்...ஓடிக்கொண்டேதான் இருக்கமுடியும் என்று அறியாத பாபு...கண்ணீரோடு....கையசைக்க பேருந்து ஓடத் தொடங்கியிருந்தது...


வேதியல் படித்து விட்டு....இனி கம்ப்யூட்டர் க்ளாசில் சேர்ந்து கொண்டே..வேலை தேட வேண்டும்....மிரட்சியில்....இருந்தான் பாபு.....அம்மா..அப்பாவை நினைக்கும் போது.... நெஞ்சு ஒரு பக்கம் அடைத்தது.... அம்மா அணைத்தும் அப்பா பிடித்து தள்ளி தனியே நிற்க சொல்லியும் வாழ்க்கையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்...

அரை குறை ஆங்கிலமும், பெட்டியில் இருக்கும் பட்டமும் என் சொத்து....வாழ்க்கை எப்போதும் தட்டில் இலை போட்டு எல்லாவற்றையும் உன் காலடியில் கொண்டு வந்து வைக்காது...உன் உணவிற்கும் வாழ்க்கைக்கும் நீ போராடித்தான் ஆக வேண்டும்.....அப்பா அடிக்கடி சொல்வார்....!

சும்மா எதுவும் கிடைத்தால்....அது நிலைக்காது அல்லது அதன் உயர்வு உனக்கு தெரியாது.......அடித்து பிடித்து.....ஓடு.... உன் இலக்கை அடைந்த பின் உனக்கு மமதை வராது.....அம்மா சொன்னது......

எது எப்படி இருந்தாலும் சரி..என் வழி முறைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்..... எனக்கு எது வேண்டும் எனக்கு தெரியும்...அதை எப்படி கொண்டு வருகிறேன் என்ற வழிமுறை என்ன்னைச் சார்ந்தது....ம்ம்ம்... நான் பார்த்துக் கொள்கிறேன்....! பாபுவுக்குள் இருந்த திமிர் வேறு வடிவம் எடுத்தது....எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை இருந்தால் எனக்கான வாழ்வு என்று ஒன்று இருக்காதா....என்னை பற்றி நானே தீர்மானிக்கிறேன்.... கன்ணாமூச்சி ஆடும் என் வாழ்க்கையை நானே கண்டு பிடிக்கிறேன்....

சமுதாயமும், கல்வி முறையும், வழிகாட்டுதல் இல்லாமையும்....குறைகளாக இருக்கட்டும் அதை சொல்லி சொல்லி சொறிந்து புண்ணை பெரிதாக்காமல்................ நான் நிறைவானவன் இந்த குறைகள் என்னை ஒன்றும் செய்து விடாது....திமிர்...தன்னம்பிக்கை என்ற வேசம் கட்டியிருந்தது...பாபுவிற்குள்....


சைதாப்பேட்டை எல்லாம் இறங்கு....கண்டக்டரின் குரல் உறங்கியவர்களை எழுப்பியது....விழித்திருந்த...பாபு... தாவி இறங்கினான்........சூட்கேசோடு மெல்ல நடக்க ஆரம்பித்தான்......அவனுக்கான அற்புத வாழ்க்கைகையும்....எதிர்காலத்தையும் ஒளித்து வைத்துக் கொண்டு...மெளனமாய் ஒரு புன் முறுவலோடு விடியத் தொடங்கியிருந்தது சென்னை......

" பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி! "


பின் குறிப்பு: கல்லூரி முடித்து வேலை தேடும், முரண்பாடுகளில் சூழலில் இருக்கும் எல்லா தம்பிகளுக்கும் இது சமர்ப்பணம்....

நன்றி ;தமிழ் சேனை உலா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 12:39 pm

”எலிப்பொறி”
************************
ஒரு விவசாயி வீட்ல ஒரு எலி வாழ்ந்து வந்துச்சாம்.ஒரு நாள் விவசாயி ஒரு பெட்டியை வீட்டுக்கு எடுத்து வந்தாராம்.அந்த பெட்டிக்குள்ள நமக்கு சாப்பிட ஏதாவது இருக்குமான்னு எலி ஓட்டைக்குள்ள இருந்தப்படியே பார்த்துகிட்டு இருந்ததாம்.விவசாயி ,அந்தபெட்டிகுள்ள இருப்பதை வெளியே எடுத்தார்,அது ஒரு எலி பொறி அதை பார்த்துவுடன் அந்த எலி அதிர்ச்சி அடைந்ததாம்.

எலி ஓடி போய் கோழியிடம் விவசாயி எலிப்பொறி வாங்கி வந்து இருக்கார் நான் என்ன செய்வது என்று கேட்டது.இது உன்னுடைய பிரச்சனை என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய் என்று சொல்லிவிட்டு சென்றது.

எலி, பக்கத்தில் இருந்த ஆட்டிடம் விவரத்தை சொன்னது.ஆடும் உனக்காக நான் வேண்டிக்கிறேன் ,என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு போய் விட்டது.

அடுத்து எலி ஓடி போய் மாட்டிடம் தன் பிரச்சனையை சொன்னது.மாடும் உன் பிரச்சனையை நீ தான் பார்த்துக்கனும் என்று சொல்லிவிட்டு போய்விட்டது.

எலி கவலையுடன் வீட்டுக்குள் சென்றது, நாம தான் ஜாக்கிரதையா இருக்கனும் என்று மனசை தேத்திக்கொண்டது.

அன்று இரவு எலிப்பொறியில் ’டமால்’ என்ற சத்தம் கேட்டது.விவசாயி மனைவி இருட்டில் ஆர்வமாக ஓடி வந்து பார்த்தாள்.பாம்பி ் வால் எலிப்பொறியில் மாட்டியுள்ளது,அது தெரியாமல் விவசாயி மனைவி கையை வைக்க போக அவள் கையை பாம்பு கொத்திவிட்டது.

விவசாயி தன் மனைவியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.பிறகு ஓரளவு குணமாகி ஜுரத்துடன் வீட்டுக்கு வந்தார்.பக்கத்து வீட்டில் இருப்பவர் கோழி சூப் கொடுத்தால் குணமாகும் என்றார்.

விவசாயி வீட்டில் இருந்த கோழியை அறுத்து சூப் வைத்து மனைவிக்கு கொடுத்தார்.அப்போதும் குணமாகவில்லை.அவர் மனைவியை பார்க்க நிறைய உறவினர்கள் வந்தனர்.

விவசாயி தன் வீட்டில் இருந்த ஆட்டை அறுத்து கறி சமைத்து அவர்களுக்கு உணவளித்தார்.ஒரு மாதமாகியும் குணமாகவில்லை ஒரு நாள் காலை விவசாயின் மனைவி இறந்து போய்விட்டாள்.

துக்கம் விசாரிக்க நிறைய பேர் வந்து விட்டதால் வேறு வழி இல்லாமல் அவர் வளர்த்த மாட்டையும் அறுத்து கறி சமைக்க வேண்டியதாயிற்று.இந்த எல்லா நிகழ்வுகளையும் எலி அதன் பொந்தில் உட்கார்ந்து மிகுந்த கவலையுடன் பார்த்து கொண்டு இருந்தது.

இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா ஒருத்தவங்களுக்கு ஆபத்துனா நமக்கு என்ன என்று இல்லாம முடிஞ்ச உதவி பண்ணுங்க!

- கலைவாணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 12:43 pm

புரிந்தேன் 
**************
ஒரு வீட்டில் ஜன்னல் அருகே தந்தையும் மகனும் அமர்ந்திருந்தனர். சற்றுத் தொலைவில் ஒரு காகம் வந்தமர்ந்தது.
‘அது என்ன மகனே?’ என்று கேட்டார் தந்தை.
‘அப்பா, அது காகம்’ என்றான் மகன்.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை ‘அது என்ன?’ என்றார்.
‘அது காகம்’ என்றான் மகன்.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை ‘அது என்ன?’ என்றார்.

மகனுக்கு கொஞ்சம் எரிச்சல். ‘காகம்!’ என்றான்.

நான்காவது முறையாக மீண்டும் தந்தை மகனிடம் `அது என்ன மகனே?’ என்று கேட்டார்.

மகனின் கோபம் எல்லை கடந்தது. ‘காகம்… காகம்… காகம்… வயசாச்சுன்னா சும்மா இருக்க வேண்டியதுதானே’ என்று கோபத்தில் எரிந்து விழுந்தான்.

தந்தையின் கண்கள் பனித்தன. எதுவும் பேசவில்லை. மெதுவாக எழுந்து உள்ளே போனார். ஒரு பழைய டைரியை எடுத்து வந்தார். அதில் ஒரு பக்கத்தைப் புரட்டி மகனிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.
‘இன்று என் செல்ல மகன் என்னிடம் ஜன்னலில் வந்தமர்ந்த ஒரு பறவையைக் காட்டி அது என்ன? என்று கேட்டான்.

காகம் என்று புன்னகையுடன் சொன்னேன்.

அவனுக்குப் புரியவில்லை போல! மீண்டும் மீண்டுமாய் இருபத்து மூன்று முறை என்னிடம் அது என்ன என்று கேட்டுக் கொண்டே இருந்தான். நான் ஒவ்வொரு முறையும் அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டே அது காகம் என்று சொன்னேன்.

இன்று நான் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தேன்’ என்று எழுதி யிருந்தது.

மகனின் கண்களில் கண்ணீர் வடிந்தது. இருபத்து மூன்று முறை தன் கேள்விக்கு அன்புடன் பதில் சொன்ன தந்தையையா நான்காவது முறை கோபத்தில் திட்டினேன் என மனம் வருந்தி தந்தையின் கரம் பிடித்தான்.

நன்றி ;ரிளைக்ஸ் பிளீஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 09, 2014 2:50 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jan 24, 2014 11:54 am

அம்மா
----------

ஆஃபீஸில் ஒரு பிஸியான நேரத்தில் சுதா ஃபோன் செய்தாள்.

“ஏங்க.. எத்தனை மணிக்கு வருவீங்க?”

“எங்கே?” வேலையில் கவனமாக, அசுவாரஸ்யமாகக் கேட்டான் ரகு.

“என்ன கேள்வி… வீட்டுக்குத்தான்”

“வழக்கம் போலத்தான்… என்ன விஷயம்?”

“இன்னிக்கி பெர்மிஷன் போட்டுட்டுக் கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்..”

“என்ன விஷயம்?”

“இன்னிக்கி ‘மதர்ஸ் டே’. சாயங்காலம் அம்மாவைப் பார்க்கப் போலாம்னுதான்”

செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு கொஞ்ச நேரம் மௌனமாயிருந்தான் ரகு. ஃபோனை வைத்துக் கொண்டு இவன் வெறிப்பதை கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்த PA ஜமுனா தனது நாற்காலியிலிருந்து பாதி எழுந்து ‘கூப்பிடறீங்களா என்ன?’ என்பது போலப் பார்த்தாள்.

பதிலொன்றும் சொல்லாமல் பார்வையை மாற்றிய ரகு, “என்ன சத்தத்தையே காணோம்… ஹலோ…” என்ற சுதாவின் குரலைக் கேட்டு

“ம்…. யோசிக்கறேன்…” என்றான்.

“யோசிக்க என்ன இருக்கு… நேரா டவுன் ஹால் ரோட் வந்துடுங்க… அங்க ஜாயின் செய்துக்குவோம்” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தாள்.

அப்புறம் வேலையில் பாதி கவனம்தான் இருந்தது.

‘அம்மா இந்நேரம் என்ன செய்வாள்? ஒரு மூக்குக் கண்ணாடி அணிந்து ஒன்று ஏதாவது தைத்துக் கொண்டிருப்பாள். இல்லை என்றால் ஏதாவது மேகசீன், அல்லது பழைய பைண்டிங் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பாள்.’

டவுன் ஹால் ரோட்டில் அவள் சொன்ன இடம் வந்து சேர்ந்தபோது சுதா ஏற்கெனவே அங்கு நின்றிருந்தாள். தூரத்திலிருந்து பார்த்தபோதே வாட்ச்சை வாட்சைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள் உருவம் தென்பட்டு விட்டது.

அருகில் சென்றதும் புன்னகைத்தாள். “வாங்க..உள்ளே போவோம்” என்று காதியைக் காட்டினாள். உள்ளே சென்றனர். ஒரு சந்தன மாலை மற்றும் ஒரு தேன் பாட்டில் வாங்கிக் கொண்டாள். அங்கே மட்டுமே கிடைக்கும் ஒரு இருமல் மருந்து வாங்கிக் கொண்டாள்.

“இப்பல்லாம் சாப்பாடே பிடிக்கலைடா ரகு… வாய்க்கு ஒண்ணுமே பிடிக்க மாட்டேங்கறது…’

”…………………….’

‘மோருஞ்சாதம் போரும்…யதேஷ்டம்… கொஞ்சம் நாரத்தை இலைப்பொடி போரும், இல்லேன்னா மாகாளி… தேவாமிர்தம்’

‘சும்மா இரேம்மா… தொணதொணன்னு… வேலை செய்ய விடாம…’

சுதா அடுத்த கடைக்குள் நுழைந்து நாரத்தை இலைப் பொடி வாங்கிக் கொண்டாள். தேவாங்க சத்திரத்தில் நுழைந்து அலசி (எதை வாங்கினாலும் ஏற்கெனவே இருப்பது போலவே இருக்கும்… ஆனா இதுதான் அம்மாவுக்குப் பிடிக்கும்…ஹூம்”) ஒரு சுங்கடிப் புடைவை எடுத்துக் கொண்டாள்.

பக்கத்து மெடிகல் ஷாப்பில் நுழைந்து ஒரு ‘வாலினி ஸ்ப்ரே’ வாங்கிக் கொண்டாள்.

‘அம்மாடி.. படியேற முடியலைடா ரகு… முட்டி எல்லாம் வலிக்கறது… இழுக்கறது…’

‘உன்னை யாரும்மா மேல வரச் சொன்னா…சுதா கிட்டயோ முரளி கிட்டயோ கொடுத்து விட வேண்டியதுதானே…’

‘ஏண்டா சள்ளுனு விழறே… ரகு நீ ரொம்ப மாறிப் போயிட்டேடா…’

‘என்னம்மா மாறிப் போயிட்டேன்? தொணதொணன்னு ஒரே புலம்பலா நீதான் மாறிட்டே… தொல்லைம்மா’

“இன்னும் என்னங்க வாங்கலாம்?” சுதாவின் குரல் கலைத்தது.

“போறும் சுதா… அவ்வளவுதான். எனக்கு ஒண்ணும் தோணலை”

“எங்க யோசனை… டல்லா இருக்கீங்க…”

“ஒண்ணுமில்லே சுதா… லேசா தலை வலிக்கறா மாதிரி இருக்கு…”

“வலிக்கும்… வலிக்கும்..”

‘இன்னிக்கி என்ன கிழமை? வியாழன். அம்மா சாயங்காலம் ராகவேந்திரா கோவில் போவாள். “கொஞ்சம் சீக்கிரம் வந்தியான்னா என்னை அங்க விட்டுட்டுக் கூப்பிட்டு வருவியாம்” என்பாள்….’

“சரி, வாங்க… லைட்டா டிஃபன் சாப்பிட்டுவிட்டுப் போவோம்” – சுதா.

கௌரி ஷங்கரில் சாப்பிடும்போது தனது ‘ஹாட் பாக்ஸை’ வெந்நீர் விட்டுக் கழுவி, சுத்தமாகத் துடைத்து விட்டு அதில் அம்மாவுக்குப் பிடித்த பூரி உருளைக் கிழங்கு வாங்கிக் கொண்டாள்.

பைக்கை எடுத்துக் கொண்டு இருவருமாய் பழங்கானத்தத்தம் வந்து சேர்ந்தபோது மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.

அந்த வீட்டின் வாசலில் இருந்த போர்டை நிமிர்ந்து பார்த்தான் ரகு. ‘ஜானகி முதியோர் இல்லம்’

தயங்கி வெளியே நின்றவனைத் திரும்பிப் பார்த்தாள் சுதா.

“வாங்க… அம்மாவைப் பார்த்து நாளாச்சு… எப்பப் பாரு சள்ளு சள்ளுனு விழுந்து அவங்க மனசைக் காயப்படுத்தி, ஒரு பெரிய சண்டைல சொல்லாம கொள்ளாம அவங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துட்டீங்க… எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பாங்க… நினைச்சுப் பார்த்தா எனக்குக் கண்ணுல்லாம் கலங்கிடும் ரகு… நானாவது வாரா வாரம் வந்து பார்க்கறேன்… நீங்க அம்மாவைப் பார்த்து மூணு மாசமாச்சு… அம்மாவும் கேட்கறதே இல்லை தெரியுமோ… வைராக்கியம்! அவங்க மனசு வெறுத்துப் போகக் கூடாது ரகு… இப்பக் கூட ஒண்ணுமில்ல.. அப்படியே அம்மாவ வீட்டுக்குக் கூப்பிட்டுப் போகலாம்னா எனக்கும் சந்தோஷமா இருக்கும்… இன்னிக்காவது நல்ல முடிவு எடுங்க…பாவங்க… ஆனா, கூப்பிட்டாக் கூட அம்மா வருவாளோ என்னவோ…நாளக்கி உங்களையும் என்னையும் இப்படித்தான் முரளி பண்ணப் போறான் பாருங்க …”

அவன் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் சுதா.

***
thanks அதீதம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jan 24, 2014 11:58 am

சாமியாட்டம் 
********************

“ராஜா வந்தாரே இயேசு ராஜா வந்தாரே..எல்லோரும் கொண்டாடுவோமே”திடீரென்று தபலாக்கள் கொட்டி, ஹார்மோனியப் பெட்டி முழங்க இந்தப் பாடல் என்னை உலுக்கி எழுப்பியது.    இரயிலில் போகும் போது பாட்டுப் பாடிக் கொண்டு வருபவர்களுக்கு காசு போடும் வழக்கம் உண்டு. 

அந்தப் பழக்கத் தோஷத்தில் கை சட்டைப் பையை   வெற்று பனியனில் கை நுழைத்துத் தேடும் போது தான் தபலாக்கள் ஹார்மோனியப் பெட்டி சகிதமாய் வரமாட்டார்களே ரயிலில் பிச்சை எடுக்க என்று  யோசித்தேன். அப்போது தான் நான்  நாளை மாமாவின் பேத்திக்கு மொட்டையடித்துக் காது குத்தும் விழாவிற்கு வந்திருப்பதும், இது பக்கத்து வீட்டில் இருந்து வரும் பாடல் என்றும் உறைத்தது.
சரி எழுந்தாகிவிட்டது. நேரத்துக்குக் கிளம்பினால் தான் வள்ளிமலைக்குப் போக முடியும் என்று நேரம் பார்த்தால் அப்போது தான் விடியற்காலை, தவறு நள்ளிரவு  இரண்டு முப்பதுக்கு சற்று கூடுதலாக ஆகி இருந்தது அவ்வளவே.

” எல்லாம் ஏசுவே… எனக்கெல்லாம் ஏசுவே ”

அடுத்தப் பாடல் தொடங்கி இருந்தது அதற்குள்.  தலையில் மடேர் என்று இரண்டு அடி அடித்துக் கொண்டு இழுத்துப் போர்த்திக் கொண்டேன். நல்ல வேளையாக மூன்று பாடல்களுக்குள் கச்சேரி முடிந்து போயிருந்தது.

” அப்பா… அப்பா, வண்டி கிளம்ப இன்னும் பத்தே நிமிஷம் தான்”

அண்ணனின் மகள் என்னை அப்பா என்று தான் அழைப்பாள். எங்கள் வீட்டு வழக்கம் அது. நானும் என் சித்தப்பாவகட்டும் பெரியப்பாவாகட்டும், அப்பா என்றே அழைத்துக் கொண்டிருக்கிறேன்.

“  தோ.. வண்டேண்டா… டூ மினிட்ஸ் ஓடிவந்துடறேன் ”

அவசர அவசரமாக குளித்து விட்டுக் கிளம்பிவிட்டேன். அம்மா வருவார்களா தெரியவில்லை இந்த விழாவிற்கு.  அம்மாவுக்கும் மாமாவிற்கு மனக்கசப்பாகி பேச்சு வார்த்தையே நின்று போயிருந்தது. இத்தனைக்கும் வீட்டில்  அடிக்கடி  அப்பாவழிப் பாட்டி அடிக்கடி கொடுமைப் படுத்தும் என்று சொல்வார்.

 அப்போதெல்லாம் ஏதும் பிரச்சினை என்றால் அவர் தம்பி தான் எல்லாரையும் எதிர்த்து நின்று சண்டை போடுவார் என்றும் அடிக்கடி அம்மா சொல்லுவார்.

பெரிதாக ஒன்றுமில்லை. வாய்வார்த்தையாக பேசிக்கொண்டிருக்கையில் சின்ன வயசுல இருந்து அக்காவா  நீ என்ன பெருசா பண்ணிட்ட எனக்கு அப்படிங்கற மாதிரி மாமா பேசிட்டார்.

 அதான் பிரச்சினை. சிறு பேச்சு வளர்ந்து வளர்ந்து பேச்சு வார்த்தை நின்று போகும் அளவுக்கு  வளந்து போனது  வேடிக்கை. மாமா அடிக்கடி வீட்டுக்கு வந்தாலும், அம்மாவிடம் அவ்வப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அம்மாவின் பிடிவாதம் குறைந்தாற் போல இல்லை.

“என்னா பேச்சு பேசிட்டாண்டா என்னப் பத்தி..  சின்ன வயசுல புள்ள மாதிரி வளத்தேனே ” அவ்வப்போது  அம்மா புலம்பிக் கொண்டே இருப்பார்.

” நேத்து வண்டி ஓட்டவே முடியல சார். அவ்ளோ பனிமூட்டம் ரோட்ல.. அப்படியே பொக மாதிரி சார். ”

சிந்தனையைக் கலைத்த டிரைவர் தன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே வண்டி ஓட்டினார். காரின் வெளியே டிசம்பர் குளிரில் நனைந்து கிடக்கும் மலைகள் பனிப் புகை மூட்டமாக  இருந்தது.
  
மனிதர்களால் கொலை செய்யப்பட்டு, கற்கள் நடப்பட்டு  விலை நிலங்களாக இறந்துக்  கிடக்கும்  இரண்டு பக்கமும்  ஏதோ  ஒரு கடவுளின் பெயர் அல்லது தேசத்தலைவரின் பெயரில் ஆரம்பித்து நகர் என்று முடிந்து போயிருந்தது.

“இதோ இந்தப்பக்கமாப் போகனும்.  கொஞ்ச தூரம் போனதும் வயக்காட்டுல நடந்துத் தான் போகனும் ”

கூடவே வந்த  மாமா எங்களுக்கு  வழி காட்ட வயல் காட்டுக்குள் கார் நுழைந்தது. கார் நின்றதும் இறங்கினேன். ஆழ்ந்து வெளிக்காற்றை சுவாசத்தில் நிரப்பினேன்.  

 கொஞ்சம் வயக்காட்டில் இறங்கி நடந்ததும் ஒற்றைப் புளிய மரமொன்று அந்த  வனாந்திரப் பிரதேசத்தில் தலைவிரித்துக் கொண்டு  வா வா உன்னை விழுங்கப் போகிறேன் பார்  என்று காத்துக் கொண்டிருப்பதைப் போல நின்று கொண்டிருந்தது.

” இந்த மரத்துக் கீழத்தான் வழக்கமா எங்க குடும்பத்துல மொட்டை அடிச்சுக் காது குத்துவோம்.” என்று ஆரம்பித்து ஊரின் அத்தனை வரலாற்றையும் மாமாவின் சம்பந்தி பேசிக் கொண்டே வந்தார்.  மனம் எதிலும் நாடாமல் இங்கும் அங்கும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்தது பசி தலைக் காட்ட ஆரம்பித்தது.

” தம்பி கொஞ்சம் மோர்த்தண்ணி குடிச்சுக்கோ  ”

அமைதியான முகம். நடுவகிடெடுத்து இழுத்துக் கட்டியப் பின்னல். நாற்பதுக்கு மேல் மதிக்கத்தக்கப் பெண்மணி.

” நன்றிங்கம்மா ” குவளை மோருக்கு ஐந்து ரூபாய் கொடுத்து நன்றி   சொல்லிவிட்டு மோர் குடிக்க ஆரம்பித்தேன். அம்மா சரியாக அந்த நேரத்தில் வந்தார்.

” வாக்கா வாக்கா .. ”

மாமா வாஞ்சையோடு அழைத்தும் அம்மா பிகுவோடுத்தான் நின்றாள்.  நான் எதிர் பார்க்கவே இல்லை. அம்மா வருவார்கள் என்று.  மாமாவும்  வேறு யாரையோ அழைத்து அம்மாவைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பூசைக்குப் போனார்.

” முத்துப் பத்திரகாளியடி…”

என்று பம்பைக்காரர் பாட ஆரம்பிக்க, பக்கத்தில் இருந்த அவரது சிலம்புக்காரர் சிலம்பை அசைத்து அசைத்து “ஓஓஓ” என்று  ஓசையுடன் பாடியது  பழைய நினைவுகளைக் கிளறியதால் அவற்றை ஊன்றி கவனிக்க ஆரம்பித்தேன்.  ” எங்க பூசாரி  வெண்ணிக்க ( வர்ணிக்க ) ஆரம்பிச்சா எப்படியாப் பட்ட சாமியும் வந்து நின்னு அருள் வாக்குச் சொல்லாம போக முடியாதுன்னேன் ” பூசாரியின் அடிப்பொடிகள் சொல்லிக்  கொண்டிருந்தார்கள்.

வழக்கமாக இது போன்ற வேளைகளில் என் அம்மாவின்  மீது தான் திடீரென்று சாமி வந்து ஆடும்.  அப்பா இறந்த பின்பு குறைந்திருந்தது. இல்லை நின்று போனது என்றே கூட சொல்லலாம்.  இது போன்ற பூஜைகளில் கலந்துக் கொள்வது குறைவு என்பதும் காரணமாய் இருக்கலாம். எங்கே திடீரென்று ஆட ஆரம்பிப்பாரோ என்று மனசுக்குள்  பகீரென்றது. 

இந்த வயதில் அவர்களுக்கு சாமிவந்து ஆடி உடம்புக்கு ஏதும் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு அவரை கவனிக்க ஆரம்பித்தேன். அவர் பக்கத்திலேயே மோர் கொடுத்தப் பெண்மணியும் உக்கார்ந்திருந்தார்.  இன்று ஏனோ அம்மாவின் முகத்தில் ஏதும் சலனங்கள் இன்று பூஜையைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

” என்ன சாமி நேரமாகிட்டேப் போகுதே இன்னும் சாமி வரலையே  யார் மேலயும் ”

கூட்டத்தில் ஒரு பெரியவர் குரல் கொடுக்க பூசாரி தன் குரலை உயர்த்தி உச்சஸ்த்தாயியில் பாட ஆரம்பித்தார்

” எமனோட வாசலிலே… எருமகெடா காவுகொண்டாய்..”

” ஓ ஓ ”

நான் அம்மாவின் பக்கம் சென்று அமர்ந்து கொண்டேன். மோர்க்காரப் பெண்மணிக் கண்களில் கண்ணீர் புரண்டோடியது.

” கல்லோடி உன்மனது.. கரையலையோ எள்ளளவும் ”

“ஓ ஓ”

” இரும்போடி உன் மனது… இளகிலையோ இன்னமும் தான் ”

“ஓ ஓ ”

அம்மாவிடம் எந்த சலனமும் இல்லை.   மாமாவின்   குழந்தையை இழுத்து தன் மடிமீது அமர்த்திக் கொண்டு குழந்தையிடம் பேசிக் கொண்டிருக்க… எனக்கு இயற்கை உபாதை முட்டிக் கொண்டு வந்தது. ஏதோ ஒரு செடியோரம் ஒதுங்கலாம் என்று எழுந்து இரண்டடி நடந்திருப்பேன்.

” கோவிந்தா… ”

என்று ஆக்ரோஷமாகக் குரல் அடிவயிற்றைக் கலங்கடிக்கும் அளவு  பெருத்த ஓசையுடன் ஓங்கி ஒலித்தது.  நான் அவசர அவசரமாய் திரும்பி கவலையுடன்  அம்மாவைப் பார்க்க, அம்மா சாந்தமாய் அமர்ந்திருந்தார். மோர்க்காரப் பெண்மணி தன் மேல் முந்தானை நழுவ ஆட்டமும் கைத்தட்டலுமாய் ஓடினார்.

” கோவிந்தா… ”

” யாரு தாயி வந்திருக்கிறது .. ” பூசாரி தன் வெண்ணிப்பு பலிதமான மகிழ்ச்சியில் கேள்விகளை ஆரம்பித்தார்.

” நான் அங்காள பரமேஸ்வரி  வந்திருக்கேண்டா ..”

” ஏந்தாயி எங்க பூசேல என்ன கொற கண்டே, ஏன் தாயி  சீக்கிரமா வரல ”

” இங்க ஒருத்தன் பாவம் பண்ணி வந்திருக்காண்டா அவன இழுத்துட்டு வாங்கடா ”

” யாருன்னு அடையாளம் சொல்லு தாயே.. எங்களுக்கு என்ன தெரியும் ”

” செவப்புல சட்டப் போட்டிருப்பான். நீளமா தாடி வளத்திருப்பான்.. ”

ஆத்தா சொன்ன அடையாளங்களைக் கொண்ட ஒருவரை கொண்டுபோய் முன்னாடி நிறுத்தினார்கள்.

பக்கத்தில் இருந்த பெண்கூட்டத்தில் இருந்து  சலசலப்புத் தோன்றியது. ஒரு பெண் கொஞ்சம் உரத்தே சொன்னாள்.

” அடப்பாவமே இது அந்தம்மாவோட புருஷனாச்சே.. என்ன பாவம் பண்ணுச்சோ தெரியலையே ” அம்மாவைப் பார்த்தேன். அவர் முகத்தில் அசாதாரணமாய் ஒரு சிரிப்பு இருந்தது.

“ஏம்மா…  கொஞ்சம் மோரு குடிக்கிறியா ” அம்மாவைக் கேட்டேன்.

” வேணாண்டா ”

அம்மா அந்த மோர்க்கார அம்மாவையே நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
” என்னம்மா அந்தப் பொம்பள அவ்ளோ அமைதியா இருந்துச்சு.. கோவிந்தான்னு கத்துன கத்துல எனக்கே பயமாய்டுச்சும்மா “அம்மா  என்னைக் கொஞ்சம் உற்று நோக்கினாள்.” அவங்க வீட்டுல இவளுக்கு என்ன கொடுமை நடக்குதோ. ஆத்தா ஆங்காரமா வெளி வந்திருக்கா ”
கேட்டும் கேட்காத குரலில் சொல்லிக் கொண்டே தன் பார்வையை என் மீதிருந்து விலக்கி, குழந்தையை கீழே இறக்கி விட்டாள்.  மனதில் என்னமோ தைத்தது. யோசித்துப் பார்க்க வீட்டில் ஏதும் அம்மாவிற்கு அதிகம் மன அழுத்தம் ஏற்படும் நிகழ்வு ஏற்படும் போதெல்லாம் உடனுக்குடன் இல்லாவிட்டாலும் அன்றோ அல்லது மறுநாளோ அம்மாவிற்கு சாமி வந்திருப்பதாக மனதில் பட்டது. அப்படி சாமி வரும்போதெல்லாம் கேசட்டில்  எல்.ஆர் ஈஸ்வரியின் அம்மன் பாடல்கள் ஒலித்திருப்பதும் நினைவுக்கு வந்தது.   அம்மாவின் முகத்தில்  அசாத்திய நிம்மதியும் லேசான புன்முறுவலும் மோர்க்காரி மீதான வாஞ்சை பார்வையும் நிலைத்திருந்தது.

நண்பகல் சூரியன்  ஒளியோ  எல்லாரையும் சுட்டெரித்துக் கொண்டிருக்க, மோர்க்காரம்மா அந்த சிகப்புச் சட்டையை வேப்பிலையால் துரத்தித் துரத்தி அடித்துக் கொண்டிருந்தார்.

நன்றி ; ஐயப்பன் கிருஷ்ணன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 25, 2014 2:24 pm

மிக்க மகிழ்ச்சிமிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jan 31, 2014 9:36 am

மனித மனமே விசித்திரம் தான்!
----------------------------------

கோவில். கிராமத்து இளைஞன் ஒருவன் தன் ஐந்து வயதுக் குழந்தையுடன் பிரகாரம் சுற்றி வருகிறான். இடையில் குழந்தை சேட்டை செய்யவே, எதையும் யோசிக்காமல் அவன் 'சுளீர்' என்று ஒரு அடி வைக்கக, குழந்தை 'வீல்' என அலறுகிறது. இவையனைற்றையும் முதிர்ந்த பேராசிரியர் ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். குழந்தையின் அழுகையைத் தாங்காத அவர், எழுந்து போய் ஒரு பழத்தை அந்தக் குழந்தையிடம் கொடுத்துவிட்டு 'சமர்த்துக் குழந்தை' என்று தலையைக் கோதி விட்டுச் செல்கிறார். அப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்னடா இது? நம் குழந்தையை அந்தப் பேராசிரியரே வந்து தட்டிக் கொடுத்து விட்டுச் செல்கிறாரே?" என்று ஒரு இனம் புரியாத பெருமிதம். குழந்தையைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு மீதி பிரகாரத்தை முடிக்கிறான்.

முதல் பாதி பிரகாரத்தில் குழந்தை என்று கூடப் பாராமல் அடித்த அதே மனித சிந்தனை, இரண்டாம் பாதியில் தலையில் தூக்கிக் கொண்டாடுகிறது! இது மனித மனதின் குரங்குத் தன்மைக்கு ஒரு சிறிய எடுத்துக் காட்டு. நாம் அனைவரும் இது போல் பல நிகழ்வுகளைக் கடந்து தான் வந்திருப்போம்.

இதற்கு என்ன காரணம் ?

மனித சிந்தனை என்பது நம் கதையில் கண்டது போல இரண்டு பாகங்களைக் கொண்டது. முதல் பாகம் ஐந்து வயதுக்  குழந்தை. இரண்டாம் பாகம் முதிர்ந்த பேராசிரியர்.

ஒரு மலரைப் பார்த்ததும் "அடடடே! என்ன அழகு!!" எனச் சொல்வது குழந்தை. "இந்த மலர் நாம் சென்ற வாரம் தொலைக்காட்சியில் பார்த்ததாயிற்றே!" எனச் சொல்பவர் பேராசிரியர். 

"இன்னும் ஐந்து நாட்கள் தான் இருக்கின்றது அண்ணா யுனிவர்சிட்டி பரீட்சைக்கு!" என்று  எச்சரிப்பவர் பேராசிரியர். "அட!! ஐந்ந்ந்ந்ந்து நாட்கள் இருகின்றது. பார்த்துக் கொள்ளலாம்" என பதில் சொல்வது குழந்தை.

ஒவ்வொரு மனிதனின் சிந்தனையையும் இவர்கள்  இருவரும் இணைந்து தான் தீர்மாநிக்கிறார்கள் . வித்தியாசம் என்னவென்று பார்த்தால், இவர்கள் இருவரில் யாருடைய பங்களிப்பு உங்கள் சிந்தனையை அதிகம் தாக்குகிறது என்பது தான். சிறுவனுடையாத? பேரசிரியருடையாத?

நம் கதையில் வரும் அப்பாவுக்கு சிறுவனின் சிந்தனைத் தாக்கம் ஜாஸ்தி! சேட்டை செய்தால் உடனே அடித்தான்; பாராட்டினால் உடனே குஷியானான்! நாமும் பல தருணங்களில் இவ்வாறே நடந்திருக்கிறோம். 'பேராசிரியர் தாக்கம் இருந்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்று  நினைத்திருக்கிறோம் !

அனால், இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயமே, ஒருவரை விட்டு மற்றொருவரால் தனித்து செயல்பட இயலாது. ஒருவர் தான் தேவை; மற்றொருவர் தேவையில்லை என்று வரையறுக்கவும் முடியாது!

எப்படி?

உங்கள் உடம்பு பசியில் வாடும் பொழுது, குழந்தை பேராசிரியரை நிம்மதியாக யோசிக்க விட மாட்டான். வையிற்றுக்க்காகச் சண்டை போட்டுக் கொண்டிருப்பான்!

பல வேலைகள் ஒன்றாகக் கொடுத்தால், எளிதாக மன அழுத்தம் எடுத்துக் கொண்டு, பேராசிரியரை அவர் போக்கில் சிந்திக்க விட மாட்டான். வம்பு செய்வான்!

உங்கள் வீட்டு ஹாலில் கிரிக்கெட் கமெண்ட்ரி லேசாகக் கேட்டால் கூட, அங்கே சென்று ஸ்கோர் பார்க்க நச்சரிப்பான். பேராசிரியரின் வேலைக்கு இடையுறு செய்வான்!

என்ன தான் செய்வது?

முடிவாக, ஒரு சுலபமான வழி - "பேராசிரியர் திறம்படச் செயல்பட, குழந்தையை என்றும் மகிழ்ச்சியாகவே வைத்திருங்கள்!". எடுத்துக்காட்டாக, மேலே பார்த்த மூன்று சூழ்நிலைகளுக்கு   - ஆரோக்கியமாக உடலைப் பார்த்துக்கொண்டு, மன அழுத்தம் அதிகம் எடுத்துக் கொள்ளாமல், சிதறல் ஏதும் இல்லாத இடத்தில் வேலை செய்தால் குழந்தையும் குஷியாக இருப்பான்; பேராசிரியரும் பிரச்சனையின்றித் தன் பணியைச் செய்வார்!!





சிந்தனை தான் மனிதனின் போக்கைத் தீர்மானிக்கின்றது என்றால், அந்தச் சிந்தனையின் போக்கை மனிதன் சிறிதளவாவது தன் வசப்படுத்த  முடியுமா?

nanri sethu
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 05, 2014 11:18 pm

[You must be registered and logged in to see this image.]  [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Feb 06, 2014 10:08 am

நன்றி  நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க கதைகள்  - Page 3 Empty Re: ஒரு பக்க கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum