தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் !
2 posters
Page 1 of 1
'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் !
'ஆயிரம் ஹைக்கூ'
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
அணிந்துரை [size=13]: தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் [/size]
கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , [size=13]முனைவர் இரா. மோகன் ![/size]
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
கணினி யுகத்திற்கான கற்கண்டுக் கவிதைகள்
*****
இலக்கிய வழக்கிலும் உலக வழக்கிலும் ஆயிரம் என்ற எண்ணுக்குத் தனி ஈர்ப்பு உண்டு; மிகுந்த செல்வாக்கு உண்டு. போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற மாவீரனுக்குப் பாடப் பெறுவது பரணி இலக்கியம்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்தது மிந்நாடே – அதன்
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து
முடிந்தது மிந்நாடே – அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்த்து மிந்நாடே.
எனத் தாய்நாட்டின் வந்தனை கூறி மனதில் இருத்தி வாயுற வாழ்த்திப் பாடுவார் கவியரசர் பாரதியார். காவியக் கவிஞர் வாலியும், கவிஞர் வைரமுத்துவும் தத்தம் ஆயிரம் திரையிசைப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டு உள்ளனர். மூத்த ஹைகூ கவிஞர் மித்ரா, மு.முருகேஷ் ஆகிய இருவரும் தங்கள் ஆயிரம் ஹைகூ கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
இவ்வரிசையில் அண்மையில் சேர்ந்துள்ளார் கெழுதகை நண்பர் இரா. இரவி. “கவிதைச் சாரல்" என்னும் தொகுப்பின் வாயிலாக 1992-ஆம் ஆண்டில் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தவர் அவர். இப்போது அவரது கவிப்பயணத்தில் குறிஞ்சி மலராக “ஆயிரம் ஹைக்கூ’" என்னும் இத்தொகுப்பு அமைகின்றது. “நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் உனை நினையாது ஒருபோதும் இருந்தறியேன்” என்றாற் போல் இரா. இரவி தமது நெஞ்சினைத் தமிழுக்கே இடமாக வைத்தார்; தமிழை நினையாது ஒருபோதும் இருந்தறியாதவர். இன்னமும் கூர்மைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால், ஹைகூ கவிதை அவருக்குச் செல்லப் பிள்ளை; ஹைகூ கவிதையின் செல்லப் பிள்ளை இரவி என்றும் கூறலாம்.
இரவியின் படைப்பாளுமையை அவரது இளமைக்காலம் முதற்கொண்டு செதுக்கிய பெருமக்களாக மூவரைச் சுட்டலாம். ஒருவர், “பகுத்தறிவுப் பகலவன்’" எனத் தமிழ் கூறு நல்லுலகம் மதிப்போடும் மரியாதையோடும் அழைத்து மகிழும் தந்தை பெரியார். இன்னொருவர், பாரத மணித்திருநாட்டின் முன்னைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜே. அப்துல் கலாம்; இரவியை விழித்துக் கொண்டே கனவு காணவும்’, கனவு காண்பதோடு நின்று விடாமல் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடும் சாய்ப்பதற்கான காரியங்களை ஆற்றவும் கற்றுத் தந்த ஆற்றல்சால் ஆளுமையாளர் அவர். மூன்றாமவர், இந்திய ஆட்சிப் பணியோடு இலக்கியப் பணியையும் இரு கண்ணெனப் போற்றி வாழ்ந்து வரும் முனைவர் வெ. இறையன்பு ; இரவி என்நேரமும் – எப்போதும் – இயங்கிக் கொண்டிருப்பதற்கான தூண்டுகோல் அவர். இம்மூன்று பெருமக்களது தாக்கத்தினை இரவியின் வாழ்விலும் வாக்கிலும் – எண்ணத்திலும் எழுத்திலும் – அங்கிங்கு எனாதபடி எங்கும் நீக்கமறக் காண முடிகின்றது.
ஒரு கவிஞர் என்ற முறையில் இரா. இரவியிடம் தூக்கலாகக் காணப்படும் ஆளுமைக் கூறுகளாக பின்வருவனவற்றைச் சுட்டலாம்.
- ஆழ்ந்த தமிழுணர்வு
- அயலகத் தமிழர்பால் – குறிப்பாக, ஈழத்தமிழர் மீது மிகுந்த பரிவு.
- கண்மூடிப் பழக்கவழக்கங்களுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான முற்போக்குச் சிந்தனை.
- மனிதநேயம்
- வாழ்வியல் விழுமியங்களுக்கு முதன்மை தருதல்
- தந்தை, தாய், மனைவி, மக்கள் முதலான குடும்ப உறவுகளைப் போற்றல்.
- இயற்கை மீதான ஈடுபாடு.
- திருக்குறள் பற்று
- தன்னம்பிக்கைச் சிந்தனை
- மெல்லிய நகைச்சுவை உணர்வு
அடிப்படையான இந்தப் பத்து ஆளுமைப் பண்புகளின் – புனைவுக் கூறுகளின் அழகிய பதிவுகளாகவே இரவியின் ஹைகூ கவிதைகள் விளங்குகின்றன.
தமிழன் என்று சொல்லடாதலைநிமிர்ந்து நில்லடா
ஆங்கிலக் கையொப்பம் ஏனடா?
என்பது தமிழனின் ஆங்கில மோகத்திற்கு எதிராகக் கவிஞர் சொடுக்கும் சாட்டையடி!
சாகவில்லை வாழ்கிறதுசெம்மொழி தமிழ்மொழி
ஈழத்தமிழர் நாவில்.
என்பது ஈழத்தமிழருக்கு ஹைகூ வடிவில் இரவி சூட்டியுள்ள புகழாரம்.
படிப்பு எதற்குஅடுப்பூதும் பெண்களுக்கு?
செருப்பாலடி சொல்பவனை.
கவிஞரின் முற்போக்குச் சிந்தைக்குப் பதச்சோறு இக்கவிதை!
செடி வளர்த்தோம்
கொடி வளர்த்தோம்
மனித நேயம் ?
என்பது மனித நேயத்தினை வலியுறுத்திக் கவிஞர் படைத்துள்ள ஹைகூ.
படித்தவன் பாட்டை
எழுதியவன் ஏட்டை
அரசியல்வாதி நாட்டை !
என்பது இரவியின் கூரிய அரசியல் சாடல்.
உருகிடும் மெழுகு
உறைந்திடும் அழகு
அம்மா.
என்பது அன்னையைப் பற்றிய கவிஞரின் உணர்ச்சிமிகு பதிவு.
தின்ன முடியவில்லை
உயரத்தில் பஞ்சுமிட்டாய்
வான்மேகம்.
என்பது இரவி தீட்டும் அழகிய இயற்கை ஓவியம்.
அழைத்ததும் ஓடிவரும்
அன்பு மனைவியைப் பெற்றவர்
திருவள்ளுவர்.
வாசுகியின் கணவரான திருவள்ளுவரை “வாசகர்களின் கண் அவர்” என்கிறார் கவிஞர்.
மூச்சு உள்ளவரை முயற்சிமுயற்சி உள்ளவரை மூச்சு
வெற்றி உறுதி.
என்பது கவிஞர் இரவி காட்டும் வெற்றிக்கான வழி; தன்னம்பிக்கை னெறி.
சுனாமி வருவதாய்
மருமகள்கள் பேச்சு
மாமியார் வருகை.
இரவியின் மெல்லிய நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறும் ஹைகூ இது.
“கணினி யுகத்தின் கற்கண்டு’”", “மூன்று வரி முத்தாய்ப்பு”", “தற்கால இலக்கியத்தின் தகதகப்பு", “உருவத்தில் கடுகு; உணர்வில் இமயம்”", “படித்தால் பரவசம்; உணர்ந்தால் பழரசம்" எனத் தாம் வகுத்த வரிவிலக்கணத்திற்கு ஏற்ப கவிதைகளைப் படைத்திட்ட அன்பு இளவல் இரவிக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அழகிய வடிவில் நூலினை வெளியிட்டுள்ள வானதி பதிப்பகத்தார்க்கு என் வணக்கங்களை உரித்தாக்குகின்றேன்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
» கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! கனிச்சுவைக்கு நிகரானது இரவியின் கவிச்சுவை! அணிந்துரை ! ‘தமிழாகரர்’ தமிழ்த் தேனீ முனைவர் இரா.மோகன் முன்னைத் தகைசால் பேராசிரியர்
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
» கவிதைச்சுடர் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! கனிச்சுவைக்கு நிகரானது இரவியின் கவிச்சுவை! அணிந்துரை ! ‘தமிழாகரர்’ தமிழ்த் தேனீ முனைவர் இரா.மோகன் முன்னைத் தகைசால் பேராசிரியர்
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
» கவிதைச்சுடர் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum