தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பழரசமும் இரண்டு நண்பர்களும் - யூமா வாசுகி
2 posters
Page 1 of 1
பழரசமும் இரண்டு நண்பர்களும் - யூமா வாசுகி
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள்.
ஒருவன் பெயர் பெரல். இன்னொருவன் ஷோலம்.
அவர்கள் இருவரும் மிகவும் ஏழை. வாழ்க்கையில்
பணக்காரராக வேண்டும் என்று இருவருக்கும்
லட்சியம்.
ஏதாவது தொழில் செய்து பணம் சம்பாதிக்க
இருவரும் திட்டம் போட்டார்கள். அப்போது
கோடைக் காலம். எனவே பழரசம் தயாரித்து
விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று
எண்ணினார்கள். அதன்படியே ஒரு பீப்பாய்
நிறைய பழரசம் தயாரித்து சந்தைக்கு
எடுத்துச் சென்றார்கள்.
அங்கே ஒரு இடத்தில் விளம்பரமும் எழுதி
வைத்தார்கள்.
“இங்கு மிகவும் அருமையான பழரசம் கிடைக்கும்.
ஒரு முறை குடித்துப் பார்த்தால் ஆயுள் முழுதும்
மறக்க மாட்டீர்கள்!” என விளம்பரப்படுத்தினர்.
அந்த விளம்பரத்தையும், அவர்கள் இருவரையும்
போவோர் வருவோரெல்லாம் பார்த்துச் சென்றனர்.
அப்போது ஷோலம் தன் நண்பனிடம் சொன்னான்.
“பெரல், நாம் மிகவும் திறமையாக வியாபாரம்
செய்ய வேண்டும். அப்போதுதான் நம்மால் விரைவில்
பணக்காரர் களாக முடியும்.”
“ஆமாம். திறமையாக வியாபாரம் செய்தால்
நிறைய காசு சம்பாதிக்கலாம்” என்றான் பெரல்.
“ நாம் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது.
கடன் கொடுத்தால் நஷ்டம் ஏற்படும். நாம் காசுக்கு
மட்டும்தான் விற்க வேண்டும்” என்று ஷோலம்
அடுத்த யோசனையை கூறினான்.
“ஆமாம், உனக்கு அனுபவம் அதிகம். நீ சொன்னால்
சரியாகத் தான் இருக்கும். யாராக இருந்தாலும்
நாம் பணம் வாங்கிக்கொண்டுதான் பழரசம் கொடுக்க
வேண்டும். நம்மை ஏமாற்ற யாராலும் முடியாது!”
இருவரும் வாடிக்கையாளர்களுக்காகக்
காத்திருந்தார்கள். மக்கள் அவர் களை வேடிக்கை
பார்த்துச் சென்றார்களே தவிர, யாரும் பக்கத்தில்கூட
வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் யாரும் வராததால்,
பெரலுக்கு ஒரே சலிப்பு.
“ஷோலம், என்னிடம் ஐந்து ரூபாய் இருக்கிறது.
எனக்கு ஒரு குவளை பழரசம் கொடு. பணம் வாங்கிக்
கொண்டு கொடுத்தால் போதும்!” என்றான்.
“ஓ, அப்படியா? சரி உன் விருப்பம்” என்றான்
ஷோலம்.
ஷோலமிடம் ஐந்து ரூபாய் கொடுத்து ஒரு குவளை
பழரசம் வாங்கிக் குடித்தான் பெரல்.
சிறிது நேரம் கழிந்தது. அந்த ஐந்து ரூபாயை பெரலிடம்
கொடுத்தான் ஷோலம்.
“இப்போது நீ எனக்கு ஒரு குவளை பழரசம் கொடு
பெரல்! கடனுக்குத் தர வேண்டாம். இந்தா பணம்!”
இன்னும் சிறிது நேரம் கழித்து பெரல் அதே ஐந்து
ரூபாயை ஷோலமிடம் கொடுத்தான்.
“நாம் கண்டிப்பாக இருக்க வேண்டும். எக்காரணம்
கொண்டும் கடன் கிடையாது. இந்தா, ஐந்து ரூபாய்
இருக்கிறது. ஒரு குவளை பழரசம் கொடு!” என்றான்
பெரல்.
மீண்டும் மீண்டும் அவர்களே அந்த ஐந்து ரூபாயைக்
கொடுத்து பழரசம் வாங்கிக் குடித்துக் கொண்டார்கள்.
மாலைக்குள் பீப்பாயில் இருந்த பழரசம் தீர்ந்து
விட்டது.
காலிப் பீப்பாயுடன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த
போது, “பார் ஷோலம், நாம் பழரசம் முழுவதையும்
விற்றுவிட்டோமே! சிறப்பான காரியம் செய்திருக்கிறோம்
அல்லவா?” என்றான் பெரல்.
“ஆமாம், ஆமாம்! சரியாகச் சொன்னாய். அதுவும் நாம்
கடனுக்கு விற்கவில்லை, ரொக்கப் பணத்திற்கு
விற்றோம்! இதற்காக நாம் பெருமை கொள்ளலாம்!”
என்றான் ஷோலம்.
-
------------------------------
(இஸ்ரேல் நாடோடிக் கதை)
நன்றி: தி இந்து நாளிதழ்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வேட்டை- யூமா வாசுகி
» இரண்டு கிழக்குகளுக்கும் - இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் இறைவன் என்று குர்ஆனில்
» கவிக்காவும் நண்பர்களும்.....
» நம்ம கவிக்காதலனும் அவரது நண்பர்களும்
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum