தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிதைத் தேன் நூலாசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
2 posters
Page 1 of 1
கவிதைத் தேன் நூலாசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
கவிதைத் தேன்
நூலாசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜுagrphd52@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வானதி பதிப்பகம், 23, தீனதயாளன் தெரு, தி.நகர், சென்னை-17. விலை : ரூ. 120
*****
நூலாசிரியர் முனைவர் அ. கோவிந்தராஜ் அவர்கள் அப்துல்கலாம் அவர்களின் கரங்களால் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். உடலால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்தவர், பண்பாளர், படைப்பாளர். “கவிதைத்தேன்” என்பது நூலின் பெயர் மட்டுமல்ல காரணப் பெயர் என்றே சொல்லலாம். தேன் போன்றகவிதைகளை திகட்டாமல் வழங்கி உள்ளார்கள். பாராட்டுக்கள். வானதி பதிப்பகத்தின் பெருமைமிகு பதிப்பாக வந்துள்ளது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்
மு.பொன்னவைக்கோ, தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் இருவரின் அணிந்துரையும் நூல் என்ற மகுடத்தில் பதித்திட்ட வைரகற்களாக ஒளிர்கின்றன.
பள்ளியில் முதல்வராகப் பணிபுரிந்து வருகிறார். 40 ஆண்டுகள் ஆசிரியப் பணி அனுபவம் இருப்பதால் கல்வி பற்றியும் மாணவர்கள் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் விதமாக மிக எளிமையாகவும், இனிமையாகவும், வலிமையாகவும் கவிதைகள் வடித்து உள்ளார்கள். பாராட்டுக்கள்.
தன்னிடம் பயின்ற மாணவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி இருப்பது நூலாசிரியரின் உயர்குணத்திற்கு சான்றாகும்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதையை நினைவூட்டும் விதமான கவிதை மிக நன்று.
நூலைப்படி
அறியாமை உனக்குள்ளே நூறுபடி
அதைப் போக்க அன்றாடம் நூலைப்படி!
தொடங்கையில் தோன்றுமது வருந்தும்படி
தொடர்ந்துபடி இனிக்கும்படி ஊன்றிப்படி!
கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது உண்மை. கல்வி என்பது மிகப்பெரிய சொத்து. பிறரால் களவாட முடியாத, அசையாத, குறையாத சொத்து. கல்வியின் மேன்மையை மென்மையாக உணர்த்தும் கவிதைகள் நன்று.
உலகம் உனது காலடியில்
அறுதி இட்டுச் சொல்லிடுவேன்
அதனை மனத்தில் பதிவுசெய்
உறுதி படிப்பில் இருந்திட்டால்
உலகம் உனது காலடியில்!
தமிழ்ப்பாட்டி அவ்வை ஆத்திச்சூடி எழுதினார். மகாகவி பாரதியாரும் ஆத்திச்சூடி எழுதினார். நூலாசிரியர் இனியன் அவர்களும் இனிமையாக ஆத்திச்சூடி எழுதி உள்ளார்.
ஆத்திச்சூடி
சுற்றுச் சுழல்
அடர்காடு பெருக்கு
ஆறுகுளம் பேண்
இயற்கையை நேசி
ஈ கொசு எதிரி
உரமிடல் தீது
ஊருணி போற்று
எருவிடல் நன்று
ஏரியை காத்தல் செய்
ஐந்திணை அறிக
ஒருவுக நெகிழி
ஓம்புக ஓசோன்
ஔடதம் நன்னீர்.
மரபுக் கவிதைகள் அதிகம், புதுக்கவிதைகள் கொஞ்சம். இரண்டும் கலந்த கலவை தான் கவிதைத்தேன். தேன் உடலுக்கு நன்மை தரும். நோய் நீக்கும். இந்த கவிதைத்தேன் நூல் படித்தால் மனதிற்கு நன்மை தரும். மன இரும் அகற்றும்.
பதச்சோறாக புதுக்கவிதை ஒன்று.
போதி மரம்
ஓ ....
யூகலிப்டஸ் மரமே
வல்லவனுக்கு வானம் கைக்கெட்டும் தூரந்தான்
என்னும் ஞானோதயம்
என்னுள் பிறந்த்து உன்னால் தான்
எனவே
நீ
எனக்குப் போதி மரம்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை உணர்த்த வந்த உன்னத நோய் எய்ட்சு (ஏமக்குறை நோய்) இன்னும் முழுவதும் குணமாக்கும் மருந்தில்லாத நோய் பற்றி குறள் வெண்பா நடையிலான கவிதை மிக நன்று.
ஏமக்குறை நோய் (AIDS)
முப்பாலை நன்றாக முப்போதும் கற்றவர்க்(கு)
எப்போதும் ஏதுமிலை காண்.
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உணர்த்திட்ட உலகப்பொதுமறை வழி நடந்தால் ஏமக்குறை நோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார்.
காந்தியடிகளின் கொள்கை விளக்கமாக அமைந்த “மூன்று குரங்குப் பொம்மைகள்” தலைப்பிட்டு வடித்த கவிதை இன்றைய நவீன யுகத்தில் கடைபிடிக்க வேண்டிய கவிதை.
மூன்று குரங்குப் பொம்மைகள்
நல்லதை மட்டும் பார்ப்பதற்கு
நமக்கு இரண்டு கண்ணுண்டு
நல்லதை மட்டும் கேட்பதற்கு
நமக்கு இரண்டு காதுண்டு
நல்லதை மட்டும் பேசுவதற்கு
நமக்கு நல்ல நாவுண்டு
நல்லவராக வாழ்வதற்கு
நல்வழி காட்டும் பொம்மையவை.
கெட்டதை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்பதை, நேர்மறையாக சிந்தித்து நல்லதை மட்டும் பார், கேள், பேசு என்று கவிதை வடித்தது மிக நன்று.
வள்ளலார், வேண்டும், வேண்டும் என்று பாடிய நிகழ்வை நினைவூட்டியது.
பள்ளி குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கியது மட்டுமன்றி இலவச மதிய உணவு வழங்கி பசியாற்றிய வள்ளலார் கர்மவீர்ர் காமராசர். மதிய உணவில் சாப்பிட்டு படித்து பல உயர் பதவிகள் அடைந்தவர் பலர். காமராசர் பற்றிய கவிதை மிக நன்று.
படிக்காத மேதை!
படிக்காத மேதை பழம்பெரும் தலைவரைப்
பச்சைக் குழந்தையும் அறியும்! – பசும்
புல்லுக்கும் நன்கு தெரியும்!
சில கவிதைகளில் குட்டிக்கதைகள் சொல்லி நெகிழ வைத்துள்ளார் நூலாசிரியர் கவிஞர் இனியன். தொடர்ந்து எழுத வேண்டும்.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கவிதைத் தேன் நூலாசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» அன்புள்ள அமெரிக்கா ! பயணக் கட்டுரைகள் ! நூல் ஆசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» “மகிழ்ச்சி மந்திரம்” நூலாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» குடிமகனுக்கு ஒரு கடிதம்! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் மரிய தெரசா.. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum