தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாய் பேசும் ஓவியம்!

2 posters

Go down

வாய் பேசும் ஓவியம்! Empty வாய் பேசும் ஓவியம்!

Post by அ.இராமநாதன் Thu Jul 17, 2014 8:36 am

வாய் பேசும் ஓவியம்! E_1405414942
--


தூரிகையைப் பற்களால் கடித்தபடி முழுமையான
உத்வேகத்துடன் வரையத் தொடங்குகிறார். தனது
உதவியாளரிடம் அடுத்தடுத்த வண்ணங்களைச்
சொல்ல, அவர் வண்ணம் நனைத்த தூரிகையை
இளங்காவின் உதடுகளில் மாற்றி மாற்றி வைத்துக்
கொண்டிருக்கிறார்.
-
ஒரு மணி நேரத்தில் மாயா ஜாலம் போல அற்புதமான
ஓவியத்தை வரைந்து விடுகிறார்.

-
இந்திய விமானப்படையில் பணியாற்றிக் கொண்டு
இருக்கும்போது ஒரு விபத்தில் தண்டுவட எலும்பில்
பலத்த அடிபட்டு கைகள் இரண்டும் செயலிழந்து
விட்டன. உதவியாளருடனே காலத்தைத் தள்ளி
முடங்கிவிடாமல் தனக்கு விருப்பமான ஓவியத்தைக்
கற்று அதில் முத்திரைப் பதித்து வருகிறார் மிலிட்ரி
இளங்கோவன்.
-
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தில் ஓவியர்
மிலிட்ரி இளங்கோவன் ரொம்ப ஃபேமஸ். இவரிடம்
தன்னம்பிக்கையோடு ஜெயித்த கதையைக் கேட்டோம்.

-
இந்திய விமானப்படையிலே தேர்வாகி பெல்காமில்
பயிற்சியை முடித்து வாகா எல்லையில் பணியில்
இருந்தேன். எங்க கேம்பஸ் ஆளுங்க சேர்ந்து ஒரு டூர்
போனோம். அங்கு எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து
ஏற்பட்டு எனக்குத் தண்டுவடம் பாதித்து விட்டது.
இரண்டு வருடம் ராணுவ மருத்துவமனையில் தீவிர
சிகிச்சை கொடுத்தும் பலன் எதுவுமில்லை.
-
என் உடலில் கழுத்துக்குக் கீழே எந்த உணர்வும்
இல்லாமல் போய்விட்டது. அப்போது என வயது 23 தான்.

-
1976இல் புனே ராணுவக் காப்பகத்துக்கு என்னைக்
கொண்டுவந்து விட்டார்கள். அங்கு என்னைப்போல்
விபத்து மற்றும் போரில் பாதிக்கப்பட்ட வீரர்கள்
இருந்தார்கள். நான் புத்தகம் படிப்பதில் ஆர்வமுள்ளவன்.
அப்போது யாரையாவது உதவிக்கு அழைத்து
ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் காட்டச் சொல்லி கல்கி
எழுதிய பொன்னியின் செல்வன், சாண்டில்யன் எழுதிய
கடல்புறா போன்ற நாவல்களைப் படிப்பேன்.
அப்போது அந்தக் கதைகளில் வருகிற ஓவியங்கள்
என் மனத்தில் நன்கு பதிந்து போனது,

நாவல்களில் வந்த கதாபாத்திரங்களும் ஓவியங்களும்
தான் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்து படுத்து
முடங்கிய நிலையிலும் எழுந்து உட்கார வைத்து
வாயாலேயே ஓவியம் தீட்ட வைத்தது.
ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு முழுமையாக வரையக்
கற்றுக் கொண்டேன்.

-
உங்கள் ஓவியத்துக்கான அங்கீகாரம் எப்படி இருக்கிறது?
-

பெண்கள் தினம், ராணுவ தினம், விமானப் படை தினம்
போன்ற சிறப்பான தினங்களில் மாற்றுத்திறனாளிகள்
ஓவியங்களை வைத்துக் கண்காட்சி நடத்துவார்கள்.
அதில் கலந்து கொண்டு என் ஓவியங்களும் விற்பனையானது.
அப்போது கிடைக்கிற சந்தோஷத்துக்கு அளவேயில்லை.
-
ஒரு கண்காட்சியில் சரத்பவார் மராட்டிய முதல்வராக
இருந்தபோது என் ஓவியம் பாராட்டுப் பெற்றது.
அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு பாதிரியார் ஜான்சன்
என்னைப் பார்த்து வெகுவாகப் பாராட்டினார்.
"உன் திறமை உலகம் முழுதும் தெரிய சுவிட்ஸர்லாந்திலுள்ள
 லீக் டென்ஸ் டின் என்ற அமைப்பில் பதிவு செய்ய வேண்டும்'
என்று சொன்னதோடுபதிவு செய்யவும் உதவினார்.
இந்த அமைப்பு உலகளாவிய வாய் மற்றும் கால்களால்
வரைவோருக்கான அமைப்பு.

இதில் தேர்வாகும் படங்கள் உலகளவில் பயன்படுத்தப்
படும். காலண்டர், கிரீட்டிங் கார்டு போன்றவற்றில் இடம்
பெறுவதோடு வரைந்தவருக்கும் நல்ல தொகை கிடைக்கும்.
அப்படி என் ஓவியம் இடம் பெற்று ஒரு பெரிய தொகையும்
கிடைத்தது. மும்பை, தில்லி, புனே, சென்னை மற்றும் வெளி
நாடுகளான சீனா, சிங்கப்பூரில் நடைபெற்ற கண்
காட்சிகளிலும் என் ஓவியங்கள் இடம்பெற்றன.
-
படிக்கிற குழந்தைகளுக்கு உதவி செய்யிறீங்களாமே?

-
1998 வரைக்கும் புனேவில் இருந்தேன். பண்டிகைக்
காலங்களில் அங்குள்ள கருணை இல்லங்களுக்குச்
சென்று இனிப்பு, புத்தாடைகள் கொடுப்பேன்.
சொந்த ஊருக்கு வந்தபிறகு அருகேயுள்ள செட்டிக்
குளத்தில் இயங்கிவரும் குருகுலப் பள்ளிக்குப்
பண்டிகைக் காலங்களில் என்னாலான உதவிகளைச்
செய்து வருகிறேன். கல்வியில் மேற்படிப்புப் படிக்கவும்
உதவி செய்து வருகிறேன்.
-
---------------------------------------------

- எம்.எஸ். மதுக்குமார்.(கல்கி)


அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வாய் பேசும் ஓவியம்! Empty Re: வாய் பேசும் ஓவியம்!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 17, 2014 12:52 pm

திறமையைப் போற்றுவோம்... வளர்ப்போம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum