தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறியப்படாத மதுரை நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

அறியப்படாத மதுரை நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty அறியப்படாத மதுரை நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Wed Aug 20, 2014 9:00 pm

அறியப்படாத மதுரை
நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி.) லிட்.  41-
B, சிட்கோ இண்ட்ஸ்ட்ரீயல் எஸ்டேட், அம்பத்தூர், 
சென்னை-600 098.  விலை : ரூ.165. பேச : 044-26359906, 26251968, 26258410
*****
நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரெங்கன் அவர்கள் மாவட்ட நூலகராக இருந்து ஓய்வு பெற்றவர்.  அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்.  கலை, இலக்கிய பெருமன்றத்தின் மதுரைக் கிளையில் பொறுப்பு வகித்து இலக்கியப் பணியாற்றி வருகிறார்.  ‘அறியப்படாத மதுரை’ என்ற தலைப்பே அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.  எல்லோரும் அறிந்த மதுரை பற்றி பலரும் அறிந்திடாத பல அரிய தகவல்களின் பெட்டகமாக நூல் உள்ளது.  பாராட்டுக்கள்.  நூலை மிகத்தரமாக பதிப்பித்துள்ள என்.சி.பி.எச். நிறுவனத்திற்கும் பாராட்டுக்கள்.
இந்த நூலை “தலைகளிலும், தோள்களிலும் என்.சி.பி.எச். நூல்களைச் சுமந்து பள்ளித்தலமனைத்தும் பரவச் செய்து வரும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு” என்று காணிக்கை ஆக்கி இருப்பதிலேயே நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரெங்கன் வித்தியாசப்படுகிறார்.  ந. என்பது அவரது முன்னெழுத்து, தந்தையின் பெயருக்காக எழுதப்பட்டாலும் ‘அறியப்படாத மதுரை’ என்ற நல்ல நூலின் ஆசிரியர் என்பதால் ந. பாண்டுரங்கன் என்றும் பொருள் கொள்ளலாம்.  மாவட்ட நூலகராக இருந்த போது வாசித்த நூல்கள், இந்த நூல் எழுத உதவி உள்ளன.  வாசிப்பை நேசித்தால் எழுத்தாளர் ஆகலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு கவிஞர் ந. பாண்டுரங்கன்.  மதுரையை சுற்றிய கழுதை கூட மதுரையை விட்டு போகாது என்பார்கள்.  ஆம். ரம்மியமான ஊர் மதுரை.  நான் மதுரையில் பிறந்தவன்.  எனக்கும் பிறந்த மண் பற்று உண்டு.  முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  அவர்கள் பிறந்த ஊர் சேலம் என்றாலும் அவருக்கு பிடித்த ஊர் மதுரை.  பல்வேறு சிறப்புகள் பெற்ற மதுரையைப் பற்றி பல புதிய தகவல்களை நூலைல் எழுதி உள்ளார். நேரடியாக  பல இடங்களுக்கு சென்று பார்த்து, அறிந்து, ஆராய்ந்து, எழுதி உள்ளார் . பாராட்டுக்கள்.
மதுரையைப் பற்றி ஆய்வு நூலாக உள்ளது.  10 தலைப்புகளில் எழுதி உள்ளார்கள். 1. ஆலவாயன் தம்பிரான் கோவில் (மீனாட்சியம்மன் கோவில்) பற்றிய விரிவான  கட்டுரை கோவிலை வாசகர்களின் மனக்கண்ணில் படம் பிடித்து காட்டுகின்றது.  இந்த நூல் படித்துவிட்டு அல்லது கையில் வைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோவில் சென்று கலைகளை ரசிக்கலாம்.  மிக விரிவாகவும், விளக்கமாக எழுதி உள்ளார். 'உங்கள் நூலகம் ' மாத இதழில் கட்டுரைகளாக வந்த போதே படித்து விட்டு நூலாசிரியரைப் பாராட்டினேன். மொத்தமாக தொகுத்து நூலாகப் படித்த போது மனம் மகிழ்ந்தேன்.  கோவில் பற்றி மட்டுமல்ல, திருவிழாக்கள் பற்றி, தெரு பெயர்களுக்கான காரணம் பற்றி சுவைபட எழுதி உள்ளார்.
நூலில் இருந்து சில துளிகள் :
“தெருக்களும் வீதிகளும் வெறும் பூகோள அடையாளங்கள் மட்டுமல்ல, மக்களின் பண்பாட்டையும் கலை உணர்வையும் வாழ்க்கை முறைகளையும் வெளிப்படுத்துகிற சரித்திர சின்னங்கள். தெருக்களில் எழுகிற புரட்சிகள் தான் தேசங்களின் எழுச்சிக்கான ஆணிவேர்.  தெருக்களின் ஒருங்கிணைப்பு தான் ஊர். ஊர்களின் இணைப்பே மாவட்டங்கள்.  மாவட்டங்களின் எழுச்சியே மாநில எழுச்சி. மாநிலங்கள் இல்லையேல் தேசம் இல்லை.  எனவே தெருக்களை நேசிப்போம்”.
மதுரையின் நாட்டார் தெய்வங்கள் பற்றி தெரியாத செய்திகள் சேகரித்து விரிவாக எழுதி உள்ளார்கள். நான் வாழ்ந்து வரும் வடக்கு மாசி வீதி பற்றிய தகவலும் நூலில் உள்ளது.  “ஆயிரம் வீடுகளைக் கொண்ட யாதவர்கள் தீப்பந்த வெளிச்சத்தில் இராமாயணம் படித்து விரிவுரை சொல்லிய இராமாயணச்சாவடி இப்பகுதியில் தான் உள்ளது.  பெருந்தெய்வம் திருமால் பற்றிய அழகர் வர்ணிப்புப் பாடலை இப்பகுதிப் பெரியவர்கள் இசையோடு பாடக்கேட்பது மனதிற்குக் கிளர்ச்சியூட்டுவதாகும்”.  இன்றும் இராமாயணச்சாவடி என்ற பெயரிலேயே  சாவடி உள்ளது.சித்திரைத் திருவிழாவின் போது ஒருநாள் இந்த  சாவடிக்கு   கடவுள் சிலைகள் கொண்டு வருவது வழக்கம் .
“சீர்திருத்தக் கிறித்தவரும் மதுரையும்” கட்டுரையில் அமெரிக்கன் கல்லூரி உருவான வரலாறு அன்றைய மதிப்பு ரூபாய்கள் மிஷன் மருத்துவமனை, மதுரை Y.M.C.A. பல்வேறு பள்ளிகள் உருவான வரலாறு, மதுரையை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து நூல் எழுதி உள்ளார்கள்.  முனைவர் பட்ட ஆய்வாளர்கள் போலவே துணை நின்ற நூல்களின் பட்டியலையும் இறுதியில் எழுதி இருப்பது நூலாசிரியரின் அறிவு நாணயத்திற்கு சான்றாகும்.
“கத்தோலிக்க கிறித்துவத்தில் மதுரையின் பங்கு” கட்டுரையில் இராபர்ட்-தெ.நோபிலி, புனித அருளானந்தர், வீரமாமுனிவர் என்ற ஜோசப் பெஸ்கி ஆகியோர் பற்றிய வரலாறு ஆண்டுகளுடன் மிகத்துல்லியமாக எழுதி உள்ளார்.  கல்விப்பணி பற்றியும் எழுதி உள்ளார்.
மதுரையின் பெருமையைப் பறைசாற்றும் அற்புத நூல்.  இந்த நூல் படித்தால் மதுரையில் பிறந்ததற்காக மதுரையில் பிறந்த அனைவரும் பெருமை கொள்ளலாம்.  ஒரு காலத்தில் அப்படி இருந்த மதுரை இன்று இப்படி உள்ளதே என்று மனம் வருந்தி மதுரையை சீரமைக்க உதவிடும் நூல்.  உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் வந்த மாற்றங்கள் மதுரையில் நடந்த நெசவுத் தொழிலை எப்படி நசித்தது என்ற விபரமும் நூலில் உள்ளது.
  இஸ்லாமியர்கள் பற்றியும் கட்டுரை வடித்துள்ளார். “நூற்றாலை மறந்த ஆலைகளும் நூலிழை அறுந்த வாழ்வுகளும்” கட்டுரையில் பல ஆலைகள் மூடப்பட்ட ஆலைத் தொழிலாளிகளின் வாழ்க்கை போராட்டமானதை எழுதி உள்ளார்.
மதுரையின் புகழ்பெற்ற திரையரங்கம் “சிடிசினிமா வாகன நிறுத்தமாகவும், பேன்சிப் பொருட்கள் விற்பனை அங்காடியாகவும் மாறி விட்டது” இப்படி மதுரையின் பல்வேறு தெருக்களையும், கட்டிடங்களையும் அன்றும் இன்றும் என்று ஒப்பிட்டு ஆய்வு நூலாக வடித்துள்ள நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரங்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» க்ளிக்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : யாழ் சு. சந்திரா, பேராசிரியர், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை
» கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum