தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby அ.இராமநாதன் Yesterday at 5:37 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1
க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
க்ளிக்-2
புதுக்கவிதைகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
புதுக்கவிதைகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
[size=14]வெளியீடு : கி. முரளிதரன், தொடர்புக்கு : 98429 63972
14/7/17, நர்மதா நதி முதல் குறுக்குத் தெரு,
மகாத்மா காந்தி நகர், மதுரை-14 muralipri@yahoo.co.in
[/size]
14/7/17, நர்மதா நதி முதல் குறுக்குத் தெரு,
மகாத்மா காந்தி நகர், மதுரை-14 muralipri@yahoo.co.in
[/size]
******
திரைப்படம் வெற்றிப் பெற்றதும் இரண்டு, மூன்று என்று வருவது போலவே கிளிக் என்ற புதுக்கவிதை நூல் பாராட்டுப் பெற்றதும் நூல் ஆசிரியர் உடனடியாக கிளிக்-2 என்று எழுதி வெளியிட்டு விட்டார். பாராட்டுக்கள்.
எழுத்துவேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன், கவிஞர் பாஸ்கர், முன்னணி வழக்கறிஞர் கு. சாமிதுரை, செந்தமிழ்க் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி ஆகியோர் அணிந்துரை நல்கி சிறப்பித்து உள்ளனர். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அவர்களும் அணிந்துரை நல்கி உள்ளார்.
அகில இந்திய வானொலியில் கதை நாடகம் எழுதிய எழுத்தாளர், தொடர்வண்டித்துறையின் பொறியாளர் புதுக்கவிதையிலும் தடம் பதித்து உள்ளார். மதுரைக்கு பெருமை சேர்த்து வருவதால் தன் பெயருடன் மதுரையையும் இணைத்துக் கொண்டார். பாராட்டுகள்.
க்ளிக் / பல்லாங்குழி / பச்சைக்குதிரைபாண்டியாட்டம் / கள்ளன் காப்பான் / கோலிகுண்டு
உடலும் மனசும் / ஒருசேர மகிழ்ந்த
விளையாட்டுக்கள் .... விடைபெற்றன !
கையடக்க அலைபேசி / அழை(ழி)ப்பான்
களால் ஆக்கம் ... அழிவு / இயற்கையின்
இருபாடங்கள் / படிக்கவில்லை ... நாம்!
உண்மை தான், உடலுக்கும் மனதிற்கும் உண்மையான விளையாட்டுகளை மறந்து விட்டு அலைபேசியில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே விளையாடி உடலுக்கும், மனதிற்கும் கேடுகளை வரவழைத்துக் கொள்கிறோம். சிறிய குழந்தைக்குக் கூட அழுகை நிறுத்திட அலைபேசியால் கெடுத்து வருகிறோம். அலைபேசியால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. நன்மைக்கு மட்டும், நல்லவைக்கு மட்டும் பயன்படுத்திடும் கட்டுப்பாடு வர வேண்டும். விழிப்புணர்வு விதைக்கும் கவிதை நன்று.!
உன் பாதம் / பதித்த சுவடுகளில் / புதைய ஆசைபுதையலாய் மேலே / நீ நிற்பதால் / எனக்கு
காதல் கவிதைக்கு பொய் அழகு. எல்லோரும் ரசிப்பதும் உண்டு. காதலியின் பாதம் பதிந்த இடத்தில் புதையவும் விருப்பமாம். காரணம் மேலே அவள் புதையலாய் நிற்பதால். இக்கவிதையை காதலி மட்டுமல்ல, படிக்கும் மற்றவர்களும் ரசிப்பார்கள் என்பது உண்மை.
பேராசிரியர்கள் / பெயர்கள் / தினசரிசெய்திகளில் / சேதாரமாய் / ஆதாரத்துடன்
அவலம் .... ஆரம்பம் ! தொடர்?
‘ஆசிரியப்பணி, அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி!’ என்பார்கள். முன்னாள் குடியரசுத் தலைவர்கள் சர்வபள்ளி இராதா-கிருஷ்ணன், மாமனிதர் அப்துல் கலாம் இருவரும் ஆசிரியர் பணிக்கு பெருமை சேர்த்தவர்கள். ஆனால் இன்று ஒரு சில பேராசிரியர்களின் அற்பமான செயலால் மதிப்பிழந்து வருகின்றனர். மாணவியின் தற்கொலைக்கு பேராசிரியர்கள் காரணமாக இருந்தது நாட்டில் நடந்த அவலம். அதனை நினைவூட்டியது கவிதை.
புகழ், போதை / இறங்க மறுக்கும்ஏறினால் / தலையில் வீழும் வரை!
தலையில் வீழும் வரை என்றால் கொட்டு விழும் வரை என்று கொள்ளலாம். அல்லது தரையில் வீழும் வரை என்றும் பொருள் கொள்ளலாம். புகழையும் போதையையும் ஒப்பிட்டது சிறப்பு. இரண்டுமே போதை தான். இதனால் திறமையை இழந்து வீழ்ந்தவர்கள் பலர்.
கோடிகள் / கொடுத்த அங்கிகள்திவால் / வாங்கியவன் / வானூர்தியில்
வாயில் “லார்ஜ்” உடன் / ஊத்திக்கிச்சு
உண்மை!
கோடிகள் கொள்ளையடித்த கொள்ளைக்காரனை வெளிநாட்டிற்கு கைகாட்டி அனுப்பி வைத்துவிட்டு அவன் ஓடியபின் அய்யோ, அய்யோ என்று அலறி நாடகமாடி வருகின்றனர். குறைந்தபட்சம் கைது கூட செய்ய முடியவில்லை. குற்றவாளி அவனோ, மட்டை விளையாட்டை உலக நாடுகளில் பார்த்து மகிழ்ந்து வருகிறான். உழவன் ஓராயிரம் கட்டத் தவறினால் கெடுபிடி காட்டும் வங்கிகள், பல்லாயிரம் கோடித் திருடர்களை உடன் பிடித்திட முன்வர வேண்டும். இப்படி பல சிந்தனை விதைத்தது கவிதை!
உன் நினைவு / இல்லாத நான்!என் நினைவு நாள் / காதலின் வலி
காதில் ஒலியாய்!
காதலியை தினமும் நினைத்து வருகிறான் காதலன். காதலியை நினைக்காத நாள் காதலன் இறந்த நாளாக இருக்கும், அன்று நினைவு நாளாகி விடும் என்கிறார்.
உண்மை தான். உண்மையான காதலனுக்கு காதலி நினைவு என்றும் நிலைத்து இருக்கும்.
தனக்கு வரும் வரை / எல்லாம் வேடிக்கை தான்ஆற்றில் மூழ்கி / அவலக்குரல் கொடுத்தவனை
வீடியோ எடுத்து / வைரல் ஆக்கியவன்
அடிபட்டுப் போனான் / அடுத்த முயற்சியில்
சுற்றிலும் கூட்டம் / வேடிக்கை கூட்டம்
வாடிக்கை கூட்டம்!
‘கூட்டம் கூட்டம், கூட்டம் பார்க்கக் கூட்டம்’ என்று கவிஞர் மீரா எழுதி;ய கவிதை நினைவிற்கு வந்தது.
உண்மை தான். ஆபத்தில் இருப்பவரை உடனடியாகக் காப்பாற்றிட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போய்விட்டது. அலைபேசி மோகம் தலைவிரித்து ஆடுகின்றது. உதவுவதை விட ஆபத்தை காட்சியாக்கி படம் பிடிக்கும் ஆர்வம் பெருகி விட்டது. மொத்தத்தில் மனிதநேயம் மறந்து வரும் அவலத்தைக் கதையில் சுட்டி உள்ளார், பாராட்டுக்கள்.
கவிதை அழகா? படம் அழகா? என்று பட்டிமன்றம் நடத்தி கவிதையே அழகு என் தீர்ப்பு வழங்கி முடிக்கின்றேன். நூல் ஆசிரியர் கவிஞர் மதுரை முரளிக்கு பாராட்டுகள். அடுத்த நூலிற்கு க்ளிக்-3 என்று பெயர் வைக்காமல் நல்ல தமிழ்ப்பெயர் சூட்டுங்கள். ‘அம்மா’ என்ற சிறுகதை சிறப்பு.
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2642
Points : 6362
Join date : 18/06/2010
Similar topics
» க்ளிக்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» அறியப்படாத மதுரை நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
» கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம்! ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அறியப்படாத மதுரை நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
» கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம்! ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum