தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...!

Go down

ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Empty ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...!

Post by அ.இராமநாதன் Sat Oct 11, 2014 9:01 pm


ரு காலத்தில் மரத்தை வெட்டி பிழைப்பை நடத்தியவர், மரம் வெட்டியது...தவறு என்று உணர்ந்து, இப்போது மரக்கன்றுகளை சுற்றுப்புறத்தில் நட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாதான் அவர். 


ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Tree%20man


‘‘பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு கூட ஒதுங்குனது இல்ல சாமி, எனக்கு தொழிலே குழி வெட்டுறதும், மரம் வெட்டுறதுதான். 30 வருசமா மரத்தை மட்டும்தான் வெட்டினேன், எனக்கு ஒரே ஒரு பையன்தான். மரம் வெட்டித்தான் பையனை வாத்தியாருக்குப் படிக்க வச்சேன். வாத்தியார் வேலை கிடைச்சதும், 'இனிமேல் மரம் வெட்டல்லாம் போக வேண்டாம் வீட்டுல ஓய்வு எடுங்கனு!' சொல்லிட்டான். 

நானும் ஒருவாரம் வீட்டுல சும்மா இருந்து பாத்தேன். என்னால இருக்க முடியலை, நேரமும் போகலை. வாராவாரம் என்னைப் பாக்க மகன் வந்திடுவான். 'மரம் வெட்டித்தான என்னைப் படிக்க வச்சீங்க... எத்தனை மரம் வெட்டுனீங்களோ அத்தனை மரம் நடுங்க. மரம் வெட்டுறது பாவம், அந்தப் பாவத்தை பிழைப்புக்காக செஞ்சுட்டீங்க, இனிமேல் மரம் நடுங்கன்னு!' பாடம் சொன்னான்.
கட்டிலில் படுத்திருந்த நான், எந்திரிச்சு உட்கார்ந்து மகன் சொன்னதை நினைச்சுப்பாத்தேன். ‘‘அட.. நிழல் கொடுத்திக்கிட்டுருந்த எத்தனை மரங்களைக் கட்டடம் கட்டுறதுக்கும், மரப்பலகை போடுறதுக்கும் வெட்டி சாய்ச்சு காசு வாங்கிருக்கோம், இனிமேல் மரத்தை நடுறது மட்டும்தான் நம்ம குறிக்கோள்’’னு முடிவெடுத்தேன். மறுநாளே மரம் வெட்ட பயன்படுத்துன கோடாரியை வித்துட்டு மண் வெட்டி, சட்டி, கடப்பாறை, பூவாளி, களைக்கொடத்தின்னு மரம் நட தேவையான சாமான்களை வாங்கியாந்தேன். அதோட அஞ்சு வேம்பு கன்னுகளையும் கையோட எங்க ஊருக்குள்ளயே நட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க. 

''இவ்வளவு காலமா.... ஒத்த மரம் கூட விடாம வெட்டிட்டு இப்போ என்ன புதுசா மரம் நடுற.. ’’ன்னு  கிண்டலாப் பேசுனாங்க.. ஆனா, அதையெல்லாம் காதுல வாங்காம மரக்கன்னுகள நட ஆரம்பிச்சேன், சிலர் வேணும்னே கன்னை பிடுங்கிப் போட்டுருவாங்க, நூறு கன்னு வச்சா... அதுல பத்து வளர்ந்து வந்தாக்கூட சந்தோசம்தான் எனக்கு. 
மகன் மாசம் ரெண்டாயிரம் ரூபாயை செலவுக்காக தருவான். அதுல முந்நூறு ரூபாயைத் துண்டா ஒதுக்கிஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Tree%20man%202பாண்டியன் கிராம பேங்குல போட்டு வச்சுடுவேன். தேவைப்படும் போது அதை எடுத்து மரக்கன்னுகளை வாங்குவேன். கோடை காலத்துல வாடகைக்கு வண்டி தண்ணி ஊத்துறதுக்கும் வச்சுக்குவேன். முதல்ல கன்று பதினைஞ்சு ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் விலைக்கு வாங்கித்தான் நட்டுட்டு வந்தேன். அப்புறம், வயக்காடு, காடுகரை, கம்மாய்னு போகும் போது கண்ணுல அரசு, வேம்பு..ன்னு ஏதாவது செடிகள் தென்பட்டா...  அப்படியே வேரோடப் பிடுங்கி பாக்கெட்டுல மண்ணைப் போட்டு நிரப்பி வீட்டுக்கு கொண்டு வளர்த்து, நடுவேன். இதுக்காக எப்பவுமே பத்து பிளாஸ்டிக் பேப்பரை, டவுசர் பையில போட்டு வச்சிருப்பேன்.

யாரு கன்றுகள் கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம கொடுத்திடுவேன். ஆனா, நூறு கன்னு கேட்டா இருபத்தைந்து கன்னுகள்தான் கொடுப்பேன். கேட்டதை விடக் குறையா கன்னுகள் கொடுத்தாத்தான் இருக்குறத வச்சு ஒழுங்கா தன்ணீர் ஊத்திப் பராமரிப்பாங்க. அப்போதான் மரத்தோட அருமை தெரியும்.

பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் காலேஜ், முதியோர் இல்லம், ராஜபாளையம் அரசு மருத்துவமனை, அக்கம்பக்கத்து கிராமங்கள்னு இதுவரைக்கும்...ஆறாயிரம் மரக் கன்னுகளை நட்டுருக்கேன். இப்போ எனக்கு வயசு 76 ஆனாலும் என்னோட ஆயுசு வரைக்கும் மரம் நடுவேன். யாரும் மரத்தை வெட்டாதீர்கள்.. அது பாவம்.. நமக்கு நிழல் தருது, காற்றை சுத்தமாக்குது. மரத்தை பாத்தா மனசு இளகும். அதனால யாரும் மரத்தை வெட்டாதீங்க"  என்று வேண்டுகோள் வைத்தார். 

-இ.கார்த்திகேயன் 

படங்கள்: 
ரா.ரகுநாதன்
நன்றித விகடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum