தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மரங்களை வெட்டி ஏரிகளை ஆக்கிரமிச்சா வெப்பம் அதிகரிக்கத்தான் செய்யும்!

2 posters

Go down

மரங்களை வெட்டி ஏரிகளை ஆக்கிரமிச்சா வெப்பம் அதிகரிக்கத்தான் செய்யும்! Empty மரங்களை வெட்டி ஏரிகளை ஆக்கிரமிச்சா வெப்பம் அதிகரிக்கத்தான் செய்யும்!

Post by அ.இராமநாதன் Fri Apr 14, 2017 11:22 am

தகிக்கும் கோடை

-ஷாலினி நியூட்டன்

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் வெயில் 
வாட்டி வதைக்க என்ன காரணம்? அடுத்தடுத்த வருடங்களில் 
இன்னும் அதிகரிக்குமா? 

வானிலை ஆய்வாளர் ரமணனிடம் கேட்டோம். 
‘‘2003ம் ஆண்டு தமிழகத்துலயே அதிகமா 45 டிகிரி செல்சியஸ் 
வெப்பம் சென்னைல பதிவாகியிருக்கு. அதற்குப் பிறகு இப்ப 
வரைக்கும் 45 டிகிரி வெப்பநிலை பதிவாகலை. 

மக்கள் தொகை பெருக்கம். நகரமயமாதல், மரங்கள் அழித்து 
கட்டடங்கள் அதிகரித்துக் கொண்டே போவது... மாதிரி பல 
காரணங்கள் இருக்கிறதால இனி வெப்பம் குறைய வாய்ப்பில்லை. 
இன்னும் அதிகரிக்கும்னு வேணா சொல்லலாம்...’’ 
என்ற ரமணன் தமிழகத்தின் வெப்பம் எதன் அடிப்படையில் இருக்கும், 
எப்படி தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல
விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“இன்னமும் கோடைகாலமே வரலை. நிலக்காற்று வீச ஆரம்பிக்கிற 
நிலையைத்தான் கோடை காலமா கணக்குல எடுத்துப்போம்.
கடல் காற்று மிதமான வெப்பநிலையா இருக்கும். நிலக்காற்று 
ஏப்ரலுக்குப் பிறகுதான் ஆரம்பிக்கும். கடல் சார்ந்த பகுதிகள்ல 
வெப்பநிலை மிதமாகவும், மற்ற இடங்கள்ல அதிகமாகவும் 
இருக்கும். 

சென்னையைப் பொறுத்தவரை நிலமையே வேற. 
இங்க 10 குடித்தனம் இருக்கிற இடத்துல 100 குடித்தனம் இருக்கு. 
ஏரி, நீர்நிலைகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கு. இதெல்லாம்தான் 
இங்க வெப்பத்தை தீர்மானிக்குது. காலை 10.30 மணிக்கு முன்னாடி 
கடல்காற்று வீச ஆரம்பிச்சா அன்னிக்கான வெப்பநிலை 36 டிகிரியா 
இருக்கும். கடல் காற்று வீச தாமதமானா வெப்பநிலை உயரும். 

கடல்காற்றுக்கு முன்னாடியும் பின்னாடியும் தமிழக வானிலை 
ஆராய்ச்சி மையம் தவிர்த்து வேறு எந்த அமைப்பு அல்லது
மீடியா வானிலை கருத்துகளை அறிவிச்சாலும் அதை நம்பாதீங்க. 
மார்ச் மாசம் கனமழை இருக்கிறதாகவும் நாசா அப்படி 
சொன்னதாகவும் ஒரு வதந்தி இருந்தது. நாசாவுக்கும், வானிலை 
மையத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்ல. 

அந்தந்த மாநில வானிலை மையங்கள் கொடுப்பதுதான் 
சரியான அறிவிப்பா இருக்கும்...’’ என்று சொல்லும் ரமணன்,
முடிந்தவரை வீடுகளுக்கு வெள்ளைப்பூச்சு அடிக்கச் சொல்கிறார். 


மாடிகளிலும், வீட்டைச் சுற்றிலும் செடிகள் வளர்ப்பதை 
பரிந்துரைக்கிறார். வீட்டின் மேற்கூரைகள் உயரமாக இருக்க 
வேண்டும் என்கிறார்.

‘‘தேவையில்லாம சில சமூக வலைத்தளங்கள்ல வதந்திகள் பரவுது. 
எதையும் நம்பாதீங்க. மனிதன் நாகரீகம் அடைய அடைய, 
காடுகளை அழிக்க அழிக்க வெப்பம் அதிகரிக்கத்தான் செய்யும். 

இப்படியே போச்சுன்னா நமக்கு அடுத்து வர்ற தலைமுறைகள் 
இதைவிட அதிக வெப்பநிலையை சந்திக்கும்!’’ என எச்சரிக்கிறார். 
-
------------------------------
நன்றி- குங்குமம்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மரங்களை வெட்டி ஏரிகளை ஆக்கிரமிச்சா வெப்பம் அதிகரிக்கத்தான் செய்யும்! Empty Re: மரங்களை வெட்டி ஏரிகளை ஆக்கிரமிச்சா வெப்பம் அதிகரிக்கத்தான் செய்யும்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 14, 2017 6:54 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum