தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எங்கே போயிற்று எங்கள் கிராமம்

2 posters

Go down

எங்கே போயிற்று எங்கள்  கிராமம் Empty எங்கே போயிற்று எங்கள் கிராமம்

Post by karumalaithamizhazhan Sat Oct 18, 2014 6:57 pm

எங்கே  போயிற்று   எங்கள்   கிராமம்
 பாவலர் கருமலைத்தமிழாழன்
 
பனிபடர்ந்த   இளங்காலை   பச்சைப்   பட்டாய்ப்
            படர்ந்திருந்த   பசும்வயல்கள்   கடலைப்   போன்றே
இனிமையுடன்    அலைதந்த   பரந்த   ஏரி
            இன்னிசையில்   மயக்கிநின்ற   குயிலின்   தோப்பு
அணியணியாய்   எழில்மலர்கள்   பூத்த   தோட்டம்
            அனைவரையும்   நடுங்கவைத்த   குளிரின்   போர்வை
மனிதநேயம்   மிக்கிருந்த   மனிதர்   கூட்டம்
            மரங்களைப்போல்    மொட்டையாகிப்    போன   தின்று !
 
ஒற்றையடி   மண்பாதை   கமுகும்   தெங்கும்
            ஓங்கிநின்று   தென்றலொடு   மொழிந்த   பேச்சும்
கற்றைகுழல்   கார்முகில்கள்   கூடிக்   கூடிக்
            கரைந்ததனால்   நிறைந்திருந்த   குளங்கள்   கேணி
சுற்றிசுற்றி   உடன்வந்த   ஆடு  மாடு
            சுந்திரமாய்க்    கையிலுண்ட    கோழி   குஞ்சு
வற்றாதப்   பாசத்தால்   வாழ்ந்த   சுற்றம்
            வறிதாகி   வெறுமையெனப்    போன   தின்று !
 
குடிசைகளின்    முற்றத்தில்   மாவுக்    கோலம்
            கிருமிகளை   அழிப்பதற்கே    மெழுகும்   சாணம்
வடிக்கின்ற   கைக்குத்தல்   அரிசிக்   கஞ்சி
            வஞ்சனைகள்    இல்லாத   வெள்ளைப்    பேச்சு
நடிப்பறியா    உண்மையான    உடலு   ழைப்பு
            நல்லதற்கும்    கெட்டதற்கும்    உதவும்    நெஞ்சு
படிப்பில்லா   பட்டறிவின்    மேதைத்    தன்மை
            பழங்கதையாய்க்     கனவாகப்    போன   தின்று !
 
                                                -1-
 
 
 
 
களைபிடிங்கி    நாற்றுநட்டுப்    பாட்டுப்   பாடி
            களத்துமேட்டில்    நெல்லடித்து   மூட்டை   கட்டி
வனைந்தகொம்பு   மாட்டுவண்டி    மேலே   யேற்றி
            வான்நிலவு   வெளிச்சத்தில்    வீட    டைந்து
கிளையசையும்    மரத்தடியின்    கட்டில்   மீது
            கிழத்திக்கை    வெற்றிலையின்   சுவையில்    மூழ்கக்
களைப்புதனை    நீக்கிவிட்ட   தூய்மை    காற்று
            காலத்தால்   மாறியெங்கோ    போன    தின்று !
 
நுங்குநுரை   யோடுவரும்   புதுவெள்   ளத்தில்
            நீந்திவீர   சாகசங்கள்    மெச்சச்   செய்து
செங்கரும்பு   தோட்டத்துள்    அத்தைப்   பெண்ணின்
            செவ்விதழில்    தேனள்ளிக்   குடித்துக்   காய்த்துத்
தொங்குகின்ற   மாங்கனிகள்    பறித்துக்   கங்குல்
            தெருக்கூத்தில்    மாமனறி  யாமல்   தந்து
நங்கையொடு   வரப்புதனில்   நடந்த  காட்சி
            நனவேட்டின்   சுவடுகளாப்    போன  தின்று !
 
குருவிகளின்    கூடுகளும்   கீச்கீச்   சென்று
            குலவுவதும்   மரத்தினிலே   கொத்திக்   கொத்தி
அருங்கிளிகள்   விட்டபழம்   சுவையே   யென்று
            அணில்கடித்துத்   தின்னுவதும்   செடியில்   பூத்து
அருகழைக்கும்   வாசமலர்   அழைப்பை   ஏற்று
            அழகாகப்    பறந்துவரும்   பட்டாம்  பூச்சி
கருவண்டின்   ரீங்காரம்   தும்பிக்   கூட்டம்
            கவிதைக்குள்   கிராமத்தைப்   புதைத்த   தின்று !
 
                                    -2-
 
 
விளைநிலங்கள்   கூறுபோட்டு   விற்க   லாச்சி
            விண்முட்டும்   மாடிகளாய்   முளைக்க   லாச்சு
களைகளெனக்    கம்பிவேலி   வளர   லாச்சு
            கபடுகளும்    கயமைகளும்   பெருக  லாச்சு
விளைந்திருந்த   மனிதநேயம்  புதைய   லாச்சு
            வீண்பகட்டு   நாகரீகம்   படர   லாச்சு
துளைவிழுந்த  ஓசோனின்   படலம்   போன்றே
            தூய்மையிலா   புதியமாற்றம்   வந்த   தின்று !
 
மண்வாசத்   தெருவினிலே   தாரின்  நாற்றம்
            மலர்வாசக்   காற்றினிலே   புகையின்  நாற்றம்
கண்மகிழ்ந்த   தோப்பினிலே   தொழிலின்   கூடம்
            காதினித்த   புள்ளொலியில்   சங்கின்  ஓலம்
தண்ணீரில்   தொழிற்சாலைக்   கழிவின்   தேக்கம்
            தரையெல்லாம்   சாக்கடையின்   கால்வாய்  ஓட்டம்
வெண்ணிலவாய்க்    குளிர்ந்திருந்த  சுற்றுச்   சூழல்
            வெப்பத்தால்   மாசாகிக்   கெட்ட   தின்று !
 
புதுமுகங்கள்   பழகுதற்கே   அஞ்சு   கின்ற
            புதுமனங்கள்   பார்க்கின்ற   போது   மட்டும்
வெதுவெதுப்பாய்ப்   புன்னகைக்கும்   வெளிமு  கங்கள்
            விஞ்ஞான   வளர்ச்சியிலே   குதித்து   வந்த
புதுமைகளின்   தோரணங்கள்   எந்தி   ரங்கள்
            புரிகின்ற   அதிசயங்கள்    மனிதர்   கூட
அதுவான   அவலங்கள்   செக்கு   மாட்டின்
            அரிதாரம்   பூண்டதுவே   கிராம   மின்று !
 
                                    -3-
 
 
 
 
 
 
 
 
 
 
தொடர்வண்டி   பேருந்து   பலவாய்  ஆகி
            தொடர்கின்ற   பயணங்கள்   எளிதாய்   ஆகி
நடக்கின்ற   விபத்தாலே   குருதி   சிந்தி
            நாள்தோறும்   உயிர்பலிகள்   மலிவாய்   ஆகி
இடநெருக்கம்   மக்கள்தம்   பெருக்க   மாகி
            இயல்பான   நடைமுறைகள்   வேக   மாகி
கடல்நடுவில்   அமைதியென   இருந்த   வாழ்வில்
            கரையலையின்   ஆரவாரம்   வந்த  தின்று !
 
வன்முறைகள்   ஆபாச   விளம்ப   ரங்கள்
            வகைவகையாய்க்   கல்விதனை   ஏலம்   போட்டே
நன்முறையில்   விற்கின்ற    கலைக்கூ  டங்கள்
            நடுப்பகலில்    கற்பழிப்புக்   கலவ   ரங்கள்
புன்மைகளின்   தேரோட்டம்   பொழுது   போக்காய்ப்
            புதுமுறையில்    கணினிகளில்   சூதாட்   டங்கள்
கன்றுயென    வைக்கோலைக்    காட்டிப்   பாலைக்
            கறக்கின்ற   போலிகளே   நிறைந்த   தின்று !
 
அலங்கார    வண்டிகளின்    அணிவ   குப்பு
            அரசியலின்   தில்லுமுல்லு    வெற்றுப்   பேச்சு
இலஞ்சத்தின்   கோரமான   தாண்ட  வங்கள்
            இலவுகாத்த   கிளிகளென   ஏழை   மக்கள்
மலர்ந்துள்ள   புதியமாற்றம்   எல்லாம்   இங்கே
            மணமில்லா   மலர்களென   காட்சி   நல்க
புலராதோ  நற்காலம்  என்ற   ஏக்கப்
            பெருமூச்சில்  தகிக்கிறது   கிராம   மின்று !
                                    -4-
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

எங்கே போயிற்று எங்கள்  கிராமம் Empty Re: எங்கே போயிற்று எங்கள் கிராமம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 12:12 pm

அருமை தொடருங்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum