தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சம்மதம் தா கற்பகத்தருவே

2 posters

Go down

சம்மதம்  தா  கற்பகத்தருவே Empty சம்மதம் தா கற்பகத்தருவே

Post by karumalaithamizhazhan Thu Oct 30, 2014 8:16 pm

சம்மதம்   தா   கற்பகத்தருவே
               பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
பூத்தமுகத்    தாமரையில்    பூசும்    மதியெழிலில்
கோத்த    அனிச்சயிதழ்ப்    புன்னகையில் – மாத்தமிழே
நேஞ்சம்    நிறைந்தாய்    இரவெல்லாம்    உன்நினைவில்
தஞ்சம்    புகுந்தேன்    தவித்து !
 
மொட்டவிழ்ந்த    பூமரமே    மொய்க்கும்    விழிவண்டைக்
கட்டவிழா    கொங்கைக்குள்    கட்டிவைத்த – கற்பகமே
பட்டத்    தழகேஉன்    பார்வைக்    கடிபணிந்தேன்
எட்டத்தில்    கொல்லுவதோ    நின்று !
 
பாரென்னும்    பூம்பருவம்    பக்கம்வா    வென்னுமிதழ்
தேரென்னும்    மேனிதழு    வென்றுரைக்கச் – சீரென்னும்
நாணம்    இடையில்    தலைகவிழ்க்க    வேகின்றேன்
காமன்    கணைமலரால்    காண் !
 
கச்சை    நகில்மூடிக்    காணும்    விழியீர்த்தே
இச்சை    பெருக    இடையசைத்தாய் – நச்சிமனம்
அன்ன    நடைபின்னே    அன்பு    குடைபிடித்தேன்
என்னைக்   குழைவாகத்    தைத்து !
 
கண்ணின்    இமைக்குள்ளே    காதற்பூ    உன்முகத்தை
தண்ணீருள்    மீனாகக்    காத்ததனால் – மண்ணில்
குருடாய்    நடக்கின்றேன்    துள்ளும்பூ     மானே
திறந்தால்நீ    போயிடுவாய்    என்று !
 
 
 
கண்திறந்த    போதே    வரும்கனவு    நாயகியே
என்னிதய   ஏக்கத்தை    எண்ணிப்பார் – உன்மீது
வீசுமிளங்    காற்றுவந்து    பட்டாலும்    என்மேனி
தீசுமந்து    போவதுதான்    ஏன் !
 
சந்தனத்    தேன்கலசம்    சாயாத    கோபுரத்தை
முந்தானை    மேகத்தால்    மூடிவரும் – சுந்தரியே
ஆலய    வாசலில்    அன்பிற்காய்    ஏங்கும்என்
கோலத்தில்    நல்லருளைக்    கூட்டு !
 
நாதம்    இயற்றும்உன்    நாமொழி    சொல்கேட்டால்
ஓதமுறு    தென்றலுக்கே    போதைவரும் – சீத
நிலவொளியும்    சொக்கிவிழும் ;  நித்திலமே    காதல்
நிலவுமொழி    நான்வாழச்    செப்பு !
 
காலைக்    கதிர்செம்மை    கண்ணில்    எடுத்துன்றன்
மாலைப்    பிறைநுதலில்    பொட்டிடுவேன் – கோதையுன்
கார்குழலின்    மீதினிலே    நட்சத்    திரப்பூவை
பார்வியக்க    வைப்பேன்    பறித்து !
 
வீட்டருகில்    வந்தபோது    வாயிற்    படிநின்றே
பாட்டிதழில்    நீசொன்ன    பாகுமொழி – கேட்டசெவி
இன்பத்தை    வேற்றொலிகள்    ஈர்த்திடாமல்    கைபொத்தி
நின்றேன்    நினைவில்    நினைத்து !
 
 
 
 
பாதம்    பெயர்க்கும்உன்    பாங்குதனைப்    பார்த்துவிட்டால்
வேத    முனிவருக்கும்    ஆசைவரும் – காதல்
ரதியாளைக்    காமனுமே    கைவிடுவான் ;   வீட்டுப்
படியிறங்கி    வாராமற்   பார் !
 
செந்தூர    மாலையிலே    சித்திரமே   நீநடந்தால்
வெந்துருகி    மாலும்    கணைதொடுப்பான் – இந்திரையின்
கண்சிவப்பில்    சாம்பலாவோம் ;   கண்மணியே    நாமிணைய
என்பார்வைக்    குள்ளே   இரு !
 
பார்வையிலே    மின்சாரம்    பாய்ச்சுகின்ற    பூச்சரமே
ஊர்சனங்கள்    மெச்சுகின்ற    அச்சாரம் – தார்சரமாய்
நான்சூட்டித்    தந்திடுவேன்    நாள்மலரே    தாகத்தைத்
தேன்ஊற்றித்    தீர்க்கவா    இன்று !
 
தங்கமே    உன்னைவர    தட்சணை    வாங்காமல்
மங்கலநாண்    இட்டு    மகிழ்விப்பேன் – இங்குலவும்
எம்மதம்     ஆனாலும்    என்னுடலின்    பாதிநீயே
சம்மதம்    உன்நாவால்    தா !
 
விண்மீன்கள்    புள்ளியிடும்    வானவில்லோ    கோலமிடும்
வெண்ணிலவும்    ஆதவனும்    தோரண – கற்பகங்கீழ்
குத்து    விளக்காய்    ஒளிகூட்டும் ;   என்னவளாய்
இத்தரையில்    நீயாகும்    போது !
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

சம்மதம்  தா  கற்பகத்தருவே Empty Re: சம்மதம் தா கற்பகத்தருவே

Post by அ.இராமநாதன் Sat Nov 01, 2014 7:38 am

[img][You must be registered and logged in to see this image.][/img]
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum