தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்திய இலக்கியச் சிற்பிகள் மீரா ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Go down

இந்திய இலக்கியச் சிற்பிகள் மீரா ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  Empty இந்திய இலக்கியச் சிற்பிகள் மீரா ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Thu Nov 06, 2014 9:54 pm

இந்திய இலக்கியச் சிற்பிகள்
மீரா !
நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

சாகித்திய அகாதெமி, குணா கட்டிடம், 443, அண்ணா சாலை,
சென்னை – 600 018.  விலை : ரூ. 50.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
*****
       இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில், சிவகங்கையில் உதித்த புதுக்கவிதை கங்கை மீரா எனும் 
மீ. இராசேந்திரன் அவர்கள் பற்றி நூல் வெளியிட்டமைக்கு முதற்கண் சாகித்திய அகாதெமிக்கு பாராட்டுக்கள்.  மீரா எனும் மிகப்பெரிய கவிதை ஆளுமை பற்றி, மிக நுட்பமாக ஆராய்ந்து அவரது படைப்புகளை மேற்கோள் காட்டி, மீரா அவர்களை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்திட்ட இந்நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு அடுத்த பாராட்டுக்கள்.

       கவிஞர் மீரா அவர்கள் படைத்த நூல்கள் கொஞ்சம்.  ஆனால் அதன் வீச்சு மிக மிக அதிகம். அந்தக்காலத்து இளைஞர்கள் கைகளில் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூல் இருக்கும்.  மனதில் காதல் இருக்கும்.  ஒரே ஒரு காதல் கவிதை நூலின் மூலம் உச்சம் அடைந்தவர் மீரா. இந்த நூலில் உள்ள கவிதைகள் திரைப்படத்திலும் இடம் பெற்றன.

       இப்படி மட்டும் அறிந்திருந்த மீராவைப் பற்றி அவர் மரபுக் கவிதையில் மணம் வீசியவர், புதுக்கவிதையில் பூபாளம் இசைத்தவர், வசன கவிதையில் எள்ளல் உதிர்த்தவர், கவியரங்கக் கவிதையில் கைதட்டல் பெற்றவர், குக்கூ கவிதையில் ஜப்பானை வென்றவர், கட்டுரை வடிப்பதில் புதுப்பாணி வகுத்தவர், நல்ல நகைச்சுவையாளர்.  இப்படி அவரது பல்வேறு ஆளுமைகளை உதாரணங்கள், மேற்கோள்கள் காட்டி கவிஞர் மீரா பற்றிய ஆவணநூலாக வந்துள்ளது.  பாராட்டுக்கள்.  நூலாசிரியர் தமிழ்த்தேனீ அவர்களின் கடின உழைப்பை உணர முடிந்தது. நூல் எழுதுவதில் சதம் தாண்டியவரின் சாதனை நூல் இது.

       இந்த நூல் கவிஞர் மீரா அவர்கள் வாழும் காலத்தில் தந்து இருந்தால் அவரது வாழ்நாள் இன்று வரை நீட்டித்து இருக்கும்.  ஆம். அவ்வளவு அகமகிழ்வை அவருக்கு வழங்கி இருக்கும். படைப்பாளியின் படைப்பை மேற்கோள் காட்டி பாராட்டப்படுவதை விட உயர்ந்த இன்பம் வேறில்லை.

       இன்று, அரசு வேலை சில ஆயிரங்கள் என்றால், அதற்கு தேர்வு எழுதுபவர்கள் பல இலட்சம் பேர். அந்த அளவிற்கு போட்டி மிகுந்து விட்டது.  ஆனால் கவிஞர் மீரா அவர்கள், தேர்வு எழுதி வெற்றி பெற்று கிடைத்த பதவியில், வருவாய்த்துறையின் உதவியாளராக சிலகாலம் பணியாற்றி, தமிழ்ப்பற்றின் காரணமாக வேலையை துறந்தவர் என்ற செய்தி இந்த நூலில் படித்து வியந்து போனேன்.  பின்னர் அவர் சிவகங்கை கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து, முதல்வராக பொறுப்பு ஏற்றவர் என்று தகவலும்  நூலில் உள்ளது. அரசுப்பணியை விட ஆசிரியப் பணியே சிறந்த அறப்பணி என்று விரும்பி ஏற்றவர் மீரா என்பதை அறிந்து வியந்து போனேன்.

       நூலில் மீரா-வின் வாழ்க்கை வரலாறு மிகச் சுருக்கமாக, ஆனால் மிகத் துல்லியமாக உள்ளது.

நூலிலிருந்து சில துளிகள் :
       “மீராவின் திருமணம் 1964-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது, சுசீலா என்னும் நல்லாள் அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். இல்லற வாழ்வின் பயனாக மீரா-சுசீலா இணையருக்கு ஆண் மக்கள் இருவரும் (சுடர், கதிர்), பெண்மகள் ஒருத்தியும் (கண்மணி செல்மா) பிறந்தனர்”. 

       மீரா அவர்களின் மகள் கவிதை எழுதி வருகிறார்.  மீராவின் குழந்தைகள் மட்டுமன்றி அவரது இலக்கியப் படைப்பும் குழந்தைகள் பற்றியும் விரிவாக நூலில் உள்ளன. 

மரபில் பூத்த புதுமலரின் வாசத்தில் சில துளிகள்.

       இறைநிலை எய்தல் இருக்கட்டும் ; முதலில்
       மனிதனாய் மாறு ; மாற்று உன் சாதியை
       ......... இதோ வாள் :                                          (பக். 142-143)



“கடவுளாகிறேன் என்று கதை கட்டுவதை விட்டு விட்டு முதலில் மனிதனாக மாறு என்று எள்ளல் சுவையுடன் உள்ள கவிதையை மேற்கொள்காட்டி கவிஞர் மீராவின் படைப்பாற்றலை படம்பிடித்துக் காட்டியது. நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.

       கவிஞர் மீரா அவர்களின் கவியரங்கக் கவிதை ஆற்றலை உணர்த்தும் கவிதை ஒன்று.மூடநம்பிக்கைகளை சாடும் விதமாக வடித்த கவிதை நன்று.

 மூன்றுபே ராய்ச் சென்றால் 
 முடியாது வினை என்று
 மூன்றை வெறுப்பவர்கள் 

 முட்டாள்கள் ; மாறாக
 மூன்றாம் உலகப் போர் 

 மூளக்கூடாது என்போர்
 சான்றோர் துயரச் 

 சரித்திரத்தைக் கற்றுர்ந்தோர்!     (பக். 81-82)


       தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், நூல் எழுதும் போது எதையும் மேலோட்டமாக எழுத மாட்டார்கள்.  நுட்பம், செம்மை எல்லாம் இருக்கும். பக்க எண் வரை மிக நுட்பமாக குறிப்பிட்டு எழுதுவார்கள். வாசகர்கள் அந்த நூலை எடுத்துப் பார்த்து படிக்க வசதியாகவும், வியப்பாகவும் இருக்கும்.

       கவிஞர் மீரா அவர்கள் வசன கவிதை படைப்பதிலும் வித்தகர்.  அதிலும் காதல் கவிதை அனைத்தும் கற்கண்டு.  அன்றைய பல காதலர்கள், அவர்கள் எழுதியது போல எழுதி, காதலியிடம் தந்த வரலாறுகளும் உண்டு.  காதல் கவிதை அறியாமல், காதலன் எழுதிய கவிதை என்று, ஏமாந்த காதலிகளும் உண்டு.

 நீ முதல்முறை 
 என்னைத் தலைசாய்த்து 
 கடைக்கண்ணால் 
 பார்த்தபோது 

 என் உள்ளத்தில் 
 முள் பாய்ந்தது
 அதை இன்னும் எடுக்கவில்லை 

 முள்ளை முள்ளால் தானே
 எடுக்க வேண்டும்? 

 எங்கே இன்னொரு முறை பார்.     
(கவிதை 13, பக்.25)
       இன்றைக்கு உள்ள அரசியலைச் சாடி, நான் உள்பட பலரும் கவிதைகள் எழுதி வருகின்றோம்.  ஆனால் எங்களுக்கெல்லாம் முன்னோடி யார்? என்றால் கவிஞர் மீரா தான்.  அங்கதச் சுவையுடன் அரசியல்வாதிகளை சாடுவதற்கு புதுப்பாதை போட்ட மீராவின் அற்புதமான படைப்பாற்றலைக் கண்டு வியந்து போனேன்.  கவிஞர் மீரா அவர்கள் அரசியல்வாதிகள் குறித்து அன்று எழுதிய கவிதை இன்றும்,என்றும் பொருந்துவதாக உள்ளது. பாருங்கள்.  
பதச்சோறாக ஒன்று மட்டும்.

 அப்புசாமியின் 
 அப்பா 
 ஆணை மாதிரி 
 இருந்த போது 
 எம்.பி. பதவி 

 இறந்த போது 
 சிவலோக பதவி
 அப்புசாமியின் 

 அப்பா 
 ஆணை மாதிரி             (ஊசிகள் பக். 24)


       ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மிஞ்சும் வண்ணம் குக்கூ கவிதையும் வடித்தவர் கவிஞர் மீரா. இலக்கியத்தின் எல்லா வடிவத்திலும் முயற்சிகள் செய்து வெற்றி பெற்றவர்.  குக்கூ கவிதையில் சித்தர்கள் போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தி உள்ளார்.  பாருங்கள்.

 வீடு கட்டினேன் 
 சுடுகாட்டுக் கெதிரில்,
 எந்த நேரமும் 

 விடை பெறலாம் எளிதில்          (பக். 39)


       கவிஞர் மீரா அவர்கள் நகைச்சுவை உணர்வுடன் வடித்த கவிதை ஒன்று.

       வாத்தியார் மனைவி 
 செத்ததற்காக 
 விடுமுறை
 மகிழ்ச்சியில் குதித்த 

 மணிப்பயல் கேட்டான்
 வருத்தமாயிருக்கு 

 ஒரே ஒரு மனைவி தானா 
 அவருக்கு?
       படித்தால் வியப்பில் ஆழ்த்தும் கவிஞர் மீரா அவர்களின் படைப்பாற்றலை படம் பிடித்துக் காட்டும் அற்புத நூல்.  பாராட்டுக்கள்.
நூல் ஆசிரியர்  தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் எழுத்து ,பேச்சு என்ற இரண்டு துறையிலும் தனக்கென தனி முத்திரை  பதித்து தொடர்ந்து நூல்கள் பல எழுதி இலக்கிய நேசர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து உள்ளார். பாராட்டுக்கள் .

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் ) நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» சங்க இலக்கியச் சாறு! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதை ஒளி! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமிழ் விருந்து! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அமுதும் தேனும் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum