தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

2 posters

Go down

உன் பறக்கும் முத்தங்களும்,  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Sat Nov 15, 2014 12:08 am

உன் பறக்கும் முத்தங்களும்,
 என் பட்டாம்பூச்சிகளும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு,
சேலம்-636 015.  விலை : ரூ. 50. பேச : 98429 74697

*****
       “உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம் பூச்சிகளும்” – நூலின் தலைப்பே இது காதல் கவிதைகளின் தொகுப்பு என்பதை பறைசாற்றி விடுகின்றது.  நூலாசிரியர் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் அவர்கள் காதல் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்.  இந்த நூலை வெளியிட்ட இனிய நண்பர் வாசகன் பதிப்பக உரிமையாளர் கவிஞர் ஏகலைவன் அவரகளுக்கு பாராட்டுக்கள்.  அட்டைப்படங்கள் வடிவமைப்பு, உள்அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளது.

       பேராசிரியர் முனைவர் மு. பழனிஇராகுலதாசன், பேராசிரியர் முனைவர். மு. பாண்டி, இணைப் பேராசிரியர் முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை, இணைப்பேராசிரியர் முனைவர் சு. இராசாராம் ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பவையாக உள்ளன. 

       நூலாசிரியர் பெயர் சரவணராஜ்.  இவர் தனது மகன் பெயரான துஷ்யந்த் என்ற பெயரையும் இணைத்துக் கொண்டு புனைப்பெயராக்கி எழுதி வருவது வித்தியாசமான செயல்.   

இவர், இந்த நூலை பெற்றோர்களுக்கு காணிக்கை-யாக்கி இருப்பது பாசத்தின் வெளிப்பாடு.  இவரது முதல் நூல் கோவை விஜயா பதிப்பக வெளியீடாக வந்து வரவேற்பைப் பெற்றதன் விளைவாக விளைந்த இரண்டாவது நூல் இது.

       நீ 
 என் 
 அருகிலிருந்த பொழுதெல்லாம் 
 அறிய முடியாத
 காதலை 

 ஒரு நாள் நீ 
 விலகியிருந்த போது
 விளங்கிக் கொண்டேன்.



       பிரிவு என்பது காதலை உணர்த்தி விடும் என்பதை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார்.  காதலி என்பவள் அழகாய் இருந்தால் மட்டும் போதாது, அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்திடும் கவிதை நன்று.

       நீ 
 அழகாய் இருக்கிறாய் 
 அது போதும் 
 என் காதலுக்கு!
 நீ 

 அன்பாய் இருக்கிறாய் 
 அது போதும்  நான் வாழ்வதற்கு!


       காதலியின் சிரிப்பு, காதலுக்கு கவிதைகளை கொட்டிக் கொண்டே இருக்கும் என்கிறார்.  காதலி சிரிக்க சிரிக்க கவிதைகள் பிறக்கும் என்கிறார்.

       நீ 
 குலுங்கிச் சிரிக்கையில் 
 கொட்டிச் சிதறுகின்றன
 எனக்கான கவிதைகள் 

 ஆமாம் 
 ‘நாவல்’ மரம் போல்
 நீ என்ன 

 கவிதை மரமா?


       முன் பின் என்ற முரண்சுவையுடன் வடித்து இருக்கும் கவிதை நன்று.  காதலியின் கூந்தலையும் பாராட்டி உள்ளார். 
       நீ 
 முன்னிழுத்து விடும் 
 உன் கூந்தல் தான்
 என்னை உன் 

 பின்னிழுத்து வருகிறதென்று
 புரியாதா உனக்கு?



       சங்க காலத்துப் பாடலை நினைவூட்டும் வண்ணம் எழுதிய கவிதை ஒன்று.
       வேறு வேறாய் 
 இருந்த நம்மை 
 வேர்களாக்கிக்
 கொண்டது 

 காதல்!
       காதலி அருகிலிருந்தால் காதலனுக்கு அது போன்ற மகிழ்ச்சி வேறில்லை. 
       உன் 
 பக்கத்தில் உட்காரும் 
 பொழுதுகளில் எல்லாம்
 சொர்க்கத்தில் உட்காருவதாய்ச் 

 சுகப்படுகிறது மனசு !


       சொர்க்கம் என்பதே கற்பிக்கப்பட்ட கற்பனை தான்.  சொர்க்கம் என்றால் இன்பமயமானது என்று கற்பித்து விட்டனர்.  ஒரு மனிதன் இறந்ததும் எரிக்கிறோம் அல்லது புதைக்கிறோம் ; எரித்தால் சாம்பலாகி விடும், புதைத்தால் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும். பிறகு சொர்க்கம் போவது எங்ஙனம்? என்று யாரும் யோசிப்பதில்லை.

       காதல் கவிதை நூல் என்றால் முத்தக்கவிதை என்பது இல்லாமல் இருக்காது.  காதலின் முன்னுரையே பலருக்கு முத்தத்தில் தான் தொடங்குகின்றது.

 ஒரு முத்தத்தைக் 
 கொடுத்து விட்டுப் 
 பல முத்தங்களை
 வாங்கிப் போகிறாய் 

 நீ என்ன 
 முத்தத்திற்குச் 
 சில்லரை மாற்ற வந்தவளா?



       காதலை கடமைக்காக புரியாமல், காதலை உணர்ந்த உயிராக நேசிக்க வேண்டும்.  காதலுக்காக எதையும் இழக்கலாம்.  ஆனால் எதற்காகவும் காதலை இழக்கக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக காதலை உயிர் என்கிறார்.
 எனக்கு உயிர் நீ 
 உனக்கு உயிர் 
 நான் !
 நமக்கு உயிர் 

 காதல்!
       காதலியை நிலவோடு ஒப்பிடுவது எல்லா கவிஞர்களுக்கும் வாடிக்கை தான்.  ஆனால் நூலாசிரியர் கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் அவர்கள் நிலவோடு காதலியை வேடிக்கையாக, வித்தியாசமாக ஒப்பிட்டுள்ளார்.

 நம் குழந்தைகள் 
 கொடுத்து வைத்தவர்கள்!
 அமாவாசையில் கூட 

 நிலாச் சோறு உண்பார்கள்
 உன் முகத்தைப் பார்த்தபடி!



       இயற்கையாக வரும் மழையை காதலி கொண்டு வந்த பரிசு என்கிறார்.  கவிதைக்கு கற்பனையும் பொய்யும் சுவை கூட்டும் என்பது உண்மை.


 முதல் நாள் சந்திப்பிலேயே 
 மழை கொணர்ந்து
 பரிசளிக்கிறாய்! 

 எனக்கு மழை பிடிக்குமென
 எப்படித் தெரியும் உனக்கு?



       கடல் அலை வந்து போவதை கண்ணுற்ற கவிஞர் செய்த கற்பனை மிக அதிகம் என்றாலும், நம்ப முடியாதது என்றாலும் ரசிக்கும்படி உள்ளது என்பதே சிறப்பு.

       நீ 
 கடலில் குளித்துக் 
 கரையேறி விட்டாய்
 என்னையும் உன்னோடு 

 கூட்டிப் போ!
 கூட்டிப் போ! என்று 

 உன்  காலடியில் விழுந்து
 கெஞ்சுகிறது கடல் அலை!



       மிகப்பெரிய விமானம் கூட மிகச் சிறிய பறவை மோதி விபத்து நேர்ந்து விடும் என்ற செய்தியைப் படித்தவர் வடித்து விட்டார் கவிதை.
 நீ என்னை 
 உரசிச் சென்ற 
 ஒரு கணத்தில் தான்
 உணரத் தொடங்கினேன் 

 பறவை மோதி
 விமானம் 

 விபத்துக்குள்ளாகும் என்ற
 உண்மையை!



       காதலி பெயரை காதலன் உரக்க இல்லாவிட்டாலும் உள்ளத்தின் உள்ளே உச்சரித்துக் கொண்டே இருக்கிறான் என்பதை உணர்த்திடும் கவிதை நன்று.


 உன் பெயர் 
 கிளிப்பிள்ளையாக்குகிறது 
 என்னை !
       இப்படி காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதை வடித்த நூலாசிரியர் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்.  அவரிடம் ஒரு வேண்டுகோள்.  தங்களது மூன்றாவது நூல் சமுதாயக் கவிதைகளாக அமையட்டும்.


.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

உன் பறக்கும் முத்தங்களும்,  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 17, 2014 12:45 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன் பறக்கும் முத்தங்களும்,  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Mon Nov 17, 2014 11:03 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

உன் பறக்கும் முத்தங்களும்,  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பட்டம் பறக்கும் பட்டம்! தற்கால சிறுவர்களுக்கு புனையப்பட்ட பாடல்கள் நூல் ஆசிரியர் : கவிஞர் மோகன்ராஜ் ப.ஜெ. நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி.
» பட்டம் பறக்கும் பட்டம்! நூல் ஆசிரியர் : கவிஞர் மோகன்ராஜ் ப. ஜெ. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum