தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நூலின் பெயர் : குட்டியூண்டு மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
2 posters
Page 1 of 1
நூலின் பெயர் : குட்டியூண்டு மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
- நூலின் பெயர் : குட்டியூண்டு
- நூல் ஆசிரியர் :
கவிஞர் வசீகரன் - மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
நூலின் அட்டைப்படமே வசீகரமாக உள்ளது. பின் அட்டையில் நூல் ஆசிரியர்
கவிஞர் வசீகரன் புகைப்படமும். இந்நூல் பற்றிய கருத்து அவரது மொழியிலேயே.
குழந்தைகள் நம் வாழ்வின் வெளிச்சங்கள் அவர்களின் உலகம்
என்பதே தனி, அந்த உலகத்துக்குள் நாம் ஒரு முறை கற்பனையாக நுழைந்து வந்தால்
கூட போதும், அந்த சுகமே தனி, அந்த தனி உலகத்துக்குள் நுழைந்து நடத்தப்பட்ட
எளிய கற்பனை படப்பிடிப்பில் மலர்ந்த மூவரி கவிதைகளே இந்த குட்டியூண்டு.
நூலாசிரியர் கவிஞர் வசீகரன் பொதிகை மின்னல் மாத இதழின்
ஆசிரியர். சிந்தையைக் கவரும் சிந்தனை மிக்க வைர வரிகளை குருந்தகவல் மூலம்
அனுப்பி வருபவர். தொய்வின்றி நூல்களை வெளியிட்டு சாதனை புரிபவர். இளைப்பாற
நேரமின்றி இலக்கிய உலகில் இயங்கி வரும் இனிய உழைப்பாளி. சிறந்த சிந்தனைவாதி
உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆழ்ந்து படித்து உணர்ந்தவர். இயந்திரமயமான
சென்னை மாநகரத்தில் மனித நேயத்தோடு வாழும் பண்பாளர். மதுரை மற்றும் புதுவை
இலக்கியப் பறவைகளின் வேடந்தாங்கலாகத் திகழ்பவர்.
காவல்துறை கவிஞர் சுடர் முருகையா அவர்களின் அணிந்துரை
சுடரொளி வீசுகின்றது.குழந்தைகளுக்கான ஹைக்கூ என்ற போதிலும்; ஆறிலிருந்து
அறுபது வரை படித்து மகிழும் சிறந்த நூலாக உள்ளது. பல்வேறு சிந்தனைகளை
விதைத்து சிந்திக்க வைக்கின்றது. எள்ளல் சுவையும் துள்ளலாக உள்ளது.
குட்டிக் குழந்தைக்கான ஹைக்கூ. இந்நூலை வாங்கி அவசியம் குழந்தைகளிடம்
கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும். மொழி அறிவும் கேள்வி ஞானமும்
குழந்தைகளுக்கு வளரும். முதல் ஹைக்கூ கவிதையிலேயே முத்திரை பதிக்கிறார்.
குட்டியூண்டு நூலின் தலைப்பே குழந்தை மொழியில்.
சாப்பிட மறுத்து
செல்ல அடி வாங்குகிறது
குழந்தையிடம் பொம்மை
இந்த ஹைக்கூவை படிக்கம் போது பல்வேறு சிந்தனைகள்
வருகின்றது. அது தான் ஹைக்கூவின் வெற்றி. பொம்மை சாப்பிடாது அடிக்காதே என
குழந்தைக்கு உணர்த்துகின்றது. குழந்தையே நீ சாப்பிட்டு விடு இல்லை
என்றால்,நீ பொம்மையை அடிப்பதைப் போல உன்னை அன்னை அடிப்பார்கள், இப்படிப் பல
உணர்வுகள் இந்த மூன்று வரிகளில் உள்ளது. இப்படி 144 ஹைக்கூ கவிதைகளின்
தொகுப்பு இந்நூல்.
கணினியுகம், விஞ்ஞான வளர்ச்சி, வசதிகள் பெருகி
விட்டது. அதை விட விவகாரத்துகளும் பெருகி விட்டது. காரணம் சகிப்புத்தன்மை,
பொறுமை,மனிதநேயம்,அன்பு இவை மறந்து கோபம், எரிச்சல், விரக்தி இவை வளர்ந்து
விட்டது. முன்பு போல நீதிநெறிக் கதைகளை படிக்க நேரமில்லை, போதிக்க ஆளும்
இல்லை. இதனால் மனக்கசப்பு உண்டாகி குடும்பத்தில் பிரிவினை பெருகியது.
பிரிந்த அப்பா அம்மா
தூது போகிறது
குழந்தை
குழந்தையின் காரணமாகவே கட்டயாத்தின் பேரில் சிலர்
பிரியாமல் வாழ்கின்றனர் என்பதை உணர்த்துகி;ன்றது. குழந்தை இல்லை என்றால்
பலர் எப்போதே பிரிந்திருப்பேன் என்பார்கள். ஒரு மனிதனை உலகமே பாராட்டும்,
ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பகைமை பாராட்டுவார். இந்நிலை பலரிடம்
காண்கிறோம். பெரியவர்கள் சண்டை போட்டாலும், குழந்தைகள் ஒற்றமையாகவே
இருக்கின்றன என்பதை உணர்த்தும் ஹைக்கூ.
பக்கத்து வீட்டோடு
அம்மா அப்பா அடிதடி
கூட்டாஞ்சோறில் குழந்தை
அமைச்சர் வருகின்றார் என்ற தகவலின் பேரில்
பள்ளிக்குழந்தைகளை வரவேற்க வெயிலில் நிறத்தும் கொடுமைகளை சாடும் ஹைக்கூ.
சுள்ளென்று வெயில்
வரிசையில் குழந்தைகள்
எப்ப வருவார் அமைச்சர்?
குட்டி போடவில்லையே
கவலையில் குழந்தை
புத்தகத்தில் மயிலிறகு
குழந்தை மனத்தை படம் பிடித்து காட்டுகின்றது. நிறைய
இல்லங்களில் கேட்ட உரையாடல் இது. பெற்றோரைப் பார்த்து குழந்தைகள் உங்க
திருமணம் நாங்க பார்க்கவில்லையே என்று, அதனை உணர்த்தும் அழகிய ஹைக்கூ
பெற்றோரை குற்றஞ் சொல்லி
அழுதது குழந்தை
உங்க கல்யாணத்துக்கு ஏன்? கூப்பிடல
இப்படி எள்ளல் சுவையுடன் ஏராளமான ஹைக்கூ கவிதைகள்,
சிந்திக்க வைக்கும் சிறந்த ஹைக்கூ, போதிக்கும் ஹைக்கூ, பலவகையான ஹைக்கூ
நூலில் உள்ளன.
அப்பா வைத்தார்
எலிக்கூண்டில் வடை
பதறும் மழலை மனசு
குழந்தை மனசு பெரியவர்களுக்கும் இருந்தால் நாட்டில்
வன்முறையே இருக்காது.
கணினியில் அமர்ந்து
சொல்லிக் கொடுத்தது குழந்தை
கற்கும் அப்பா
இக்கட்சி இன்று நிறைய வீடுகளில் நடந்து கொண்டிருக்கும்
உண்மை.
துப்பாக்கியால் மிரட்டி
டுமீல் எனச் சுட்டது குழந்தை
பொய்யாகச் சாகும் தந்தை
நம் கண் முன் நடந்த காட்சிகளை காட்சிப்படுத்தி வெற்றி
பெறுகிறார் நூல் ஆசிரியர் வசீகரன்.
மகிழ வைக்கும்
ஒரே அழுகை
பிறந்த மழலை
முரண் சுவையுடன் சிறந்த ஹைக்கூ
பாடையில் தாய்
அழும் குழந்தை
எழுந்து சோறு போடும்மா
சோகத்தை கூட காட்சிப்படுத்தி கண் கலங்க வைத்து
உள்ளார். இது தான் படைப்பாளியின் வெற்றி. மிக மிக எளிமையான சொற்களால் மிக
மிக மிக வலிமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளார் ஹைக்கூ வடிவில். சில
அறிவு ஜீவிகள் இது என்ன ஹைக்கூவா? ஏன விமர்சனம் செய்யக் கூடும்.
அவர்களுக்கான பதில் “இது தான் ஹைக்கூ” என்பதாகும். ஹைக்கூ உலகில் தனி
முத்திரை பதித்து வரும் நூலாசிரியர் கவிஞர் வசீகரனுக்கு பாராட்டுக்கள்,
வாழ்த்துக்கள், தொடர்ந்து படையுங்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: நூலின் பெயர் : குட்டியூண்டு மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
மழலை மலர்கள், மனதை மயக்கும் நிஜங்கள், அவர்களின் உலகமே தனி, கல்லமில்லா வெள்ளைச் சிரிப்பை அள்ளித்தரும் வள்ளல்கள் மழலைகள் அழகிய மதிப்புரை.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: நூலின் பெயர் : குட்டியூண்டு மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
வணக்கம் மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.blogspot.com/
http://eraeravi.wordpress.com/
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.blogspot.com/
http://eraeravi.wordpress.com/
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» நூலின் பெயர்:என்னோடு நீ நூலாசிரியர்:சு.சோலைராஜா நூல் மதிப்புரையாளர்:முனைவர் ச.சந்திரா
» நூலின் பெயர் : சமர்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவிநூல் ஆசிரியர் : வித்தகக் கவிஞர் பா.விஜய்
» நூலின் பெயர் : நையப்புடை,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
» நூலின் பெயர் : சமர்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவிநூல் ஆசிரியர் : வித்தகக் கவிஞர் பா.விஜய்
» நூலின் பெயர் : நையப்புடை,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum