தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 3:00 pm

» மே 19-ல் 'மாமன்னன்' முதல் சிங்கிள் வெளியீடு - மாரி செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:49 pm

» சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்:
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:48 pm

» ஆறுல ஆறு போகுமா...(கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:57 pm

» ரிலையன்ஸ் ஜியோ ரூ 296 திட்டம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:50 pm

» பந்திக்கு முந்து படைக்கு பிந்து விளக்கம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:41 pm

» திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:40 pm

» செய்திகள்...
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:39 pm

» உருச்சிதை -சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:34 pm

» பர்ஹானா- சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:33 pm

» மேற்கு வங்காளம்: திடீரென கண் மூடிய கடவுள் மன்சா தேவியால் மக்கள் பரபரப்பு
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:32 pm

» கட்டிய புடவையோட வா..!! (கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 9:59 am

» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Tue May 16, 2023 9:05 pm

» தமிழ்ப்பட பாடல் வரிகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:57 pm

» மகிழ்ச்சியை இரவல் பெற முடியாது!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:46 pm

» வாசம் இல்லாம குழம்பு வை!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:41 pm

» உலகிலேயே இன்பமானது எது?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:37 pm

» நிரப்ப இயலாத திருவோடு!!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:36 pm

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:31 pm

» இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:15 pm

» ஐயோ! எப்படி வளர்த்திருக்காங்க...
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:02 pm

» ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:51 pm

» கிச்சன் கைடு! அசத்தல் டிப்ஸ்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:50 pm

» கோபம் வரும்போது எப்படி செயல்பட வேண்டும்?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:47 pm

» அரேபிய ஸ்பெஷல் முதபல்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:46 pm

» பீட்ரூட் டிப்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:45 pm

» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:43 pm

» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:42 pm

» குடும்ப தின நல்வாழ்த்துகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:40 pm

» ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:39 pm

» குடி குடியை வாழ வைக்கும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:38 pm

» ராகுகாலம் அறிய எளிய வழி
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:46 pm

» ஆறு வகை லிங்கங்கள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:43 pm

» முருகப்பெருமானின் வாகனங்கள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:40 pm

» மகளுக்கு ஒரு மடல் - (கவிதை) இரா.இரவி
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:29 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:56 pm

» திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:37 pm

» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:26 pm

» முதலில் யாரை காப்பாற்றுவீர்கள்?
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:25 pm

» நேர்த்திக்கடன் - கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:22 pm

» புதுக்கவிதை!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:21 pm

» "சம்’மதம்’! - ஹைகூ கவிதைகள்
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:20 pm

» ஏமாறும் தொட்டி மீன்கள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:19 pm

» சிந்தித்து செயல்படுங்கள்! – கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:15 pm

» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:13 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நூலின் பெயர்:என்னோடு நீ நூலாசிரியர்:சு.சோலைராஜா நூல் மதிப்புரையாளர்:முனைவர் ச.சந்திரா

2 posters

Go down

நூலின் பெயர்:என்னோடு நீ நூலாசிரியர்:சு.சோலைராஜா நூல் மதிப்புரையாளர்:முனைவர் ச.சந்திரா Empty நூலின் பெயர்:என்னோடு நீ நூலாசிரியர்:சு.சோலைராஜா நூல் மதிப்புரையாளர்:முனைவர் ச.சந்திரா

Post by eraeravi Wed Apr 06, 2011 10:23 am

நூலின் பெயர்:என்னோடு நீ
நூலாசிரியர்:சு.சோலைராஜா
நூல் மதிப்புரையாளர்:முனைவர் ச.சந்திரா
கோபுர வாயில்:
கவிஞர் சோலைராஜாவின் முத்தான முதல் நூலான’ என்னோடு நீ- எனும் நூலை ஒரு கதம்ப நூல் எனலாம். மரிக்கொழுந்தும், ,மல்லிகையும்,கவின்மிகு கனகாம்பரமுமாய்த் தொகுக்கப்பட்ட இக்கதம்பச் சரம் கமகமக்கும் நறுமணத்துடன்,நூலை வாசிப்போர் மனதில் பரவுகின்றது.
இரத்த ஓட்டம்:
கிராமம்,நகரம்,வறுமை,வளமை,அலங்கோலம்,அலங்காரம்,அன்பு, ஆணவம்,இலட்சியம்,அலட்சியம்-என இருவேறு முரண்பட்ட தன்மையுடைய நாயகன்,நாயகியைப் பாத்திரங்களாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான நூல் இந்த என்னோடு நீ - நூல்.தேனும் மானுமாக,கொக்கும் குருவியுமாக,மயிலும் குயிலுமாக,பகலவனும் பால்மதியுமாக,தென்றலும் புயலுமாக எழிலுறப் பயணிக்கிறது இந்நூலின் கதையோட்டம்.
மைய மண்டலம்:
கிராமத்து நாயகன் ஒருவன் மண்வாசனையும் வியர்வை வாசனையுமாய்,கல்லூரிக் கல்விக்கென நகரத்திற்கு வந்து சேர,கூடியிருப்போர் வறுமை அவனை , பிறரது கேலிக்கும் கிண்டலுக்கும் ,நக்கலுக்கும் நையாண்டிக்கும் உள்ளாக்குகிறது.கல்லூரியில் நடந்த முத்தமிழ் விழாவோ அவனை கல்லூரி கதாநாயகனாகவே உருமாற்றி விடுகின்றது. இதுவரை நாயகனை ஏளனமாய்ப் பார்த்த கதையின் நாயகியை ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்க வைக்கிறது அவனின் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும்.தமிழன்னையின் இதயத்தில் இடம் பிடித்த காவிய நாயகன், நாயகியின் கரம் கோர்த்தானா?இல்லையா என்பதனை விவரித்துச் செல்கின்றது நூலின் முற்பாதி.கற்பனையா? நிஜமா? என உய்த்துணர முடியாத அளவிற்கு,கதைக்குள் கதையாய் ஆசிரியர் கற்பனைக் கோட்டையைக் கட்டி,அக்கோட்டைக்குச் செல்வதற்கென கனவுப் பாலம் அமைத்துத் தருவது இந்த நீள்கதையின் மறுபாதி.

கருத்துப் புதையல்:

'என்னோடு நீ'-எனும் இந்த நூலில் எட்டுத்தொகை எட்டிப் பார்க்கின்றது.புதுக் கவிதை புனலாடுகின்றது.மரபுக் கவிதையோ மன்றாடுகின்றது.இதிகாச நிகழ்வுகளோ இடையிடையே இழையோடுகின்றது. நன்னூல் நடை பயில்கின்றது.அறிவியல் செய்திகள் ஆங்காங்கே தெளித்துக் கிடக்க ,சரித்திரக் கருத்துக்களும் அத்தோடு சங்கமிக்கின்றன.இந்நூலில் கிளிப்பிள்ளை கீரிப்பிள்ளையாகின்றது;மாக்கோலம் பூக்கோலமாகின்றது;அலைகளுக்கு மோகம் வருகின்றது;இரயில்பூச்சிக்கு நாணம் வருகின்றது;பசும்புற்கள் தவம் புரிகின்றன.காட்டுச் செடிகள் வரவேற்புரை வழங்குகின்றன.சிக்கிமுக்கி கற்கள் கூட சிணுங்கிக் கொண்டே ரீங்காரமிடுகின்றன.நிலவும் சூரியனும் பக்கத்திற்குப் பக்கம் இடம்பிடிக்க ,வியர்வையும் கண்ணீருமோ போட்டிப்போட்டிக் கொண்டு நூலை நிரப்பிச் செல்கின்றது.அத்தியாயங்கள் சில வேளைகளில் வெள்ளிய மேகங்களைப் போல மெதுவாகவும் ,பல வேளைகளில் கருமேகங்களைப் போல வேகமாகவும் நகர்கின்றன.

சொல்விளையாடல்:

"அவளுக்கு அழைப்புமணி

என் கவிதைக்கு ஆலயமணி

இதயத்திற்கு ஆராய்ச்சி மணி

பெற்றோர்க்கு அபாயமணி

காதலுக்கோ சாவுமணி"

கல்வெட்டு வரிகள்:

பிள்ளைகள் அநாதையானால் அது

பிறப்பில் பிழை!

பெற்றோர் அநாதையானால் அது

ஆயுள்பிழை!

மனமார...

'அதீத அன்பு'-எனும் வட்டத்திற்குள் சிக்கித்தவிப்பவர்க்கு 'என்னோடு நீ'-எனும் இந்நூல் நல்லதொரு பாடம் .இனி சிக்கித் தவிக்க இருப்பவர்க்கோஇந்நூல் ஓர் எச்சரிக்கை! 'ஆள்பாதி ஆடைபாதி'-எனும் பழமொழி ஒருபுறமிருக்க,அறிவு பாதி ஆற்றல் பாதி என்ற புதுமொழியைப் புகட்ட வந்ததே என்னோடு நீ-எனும் நூல்.வலதுகரத்தில் தமிழன்னை,இடதுகரத்தில் இயற்கை அன்னை-என இருவரைக் கரம்பற்றிச் செல்லும் கவிஞர் சோலைராஜா இலக்கிய உலகில் ஒளிர்விடும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது உண்மை. ,
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2595
Points : 6221
Join date : 18/06/2010

Back to top Go down

நூலின் பெயர்:என்னோடு நீ நூலாசிரியர்:சு.சோலைராஜா நூல் மதிப்புரையாளர்:முனைவர் ச.சந்திரா Empty Re: நூலின் பெயர்:என்னோடு நீ நூலாசிரியர்:சு.சோலைராஜா நூல் மதிப்புரையாளர்:முனைவர் ச.சந்திரா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 06, 2011 2:11 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» நூல் விமர்சனம் நூலின் பெயர்:சாகாவரம் (நாவல்) நூலாசிரியர் :வெ.இறையன்பு இ.ஆ.ப. திறனாய்வாளர் :முனைவர்.ச.சந்திரா
» நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா
» நூலின் பெயர்:ஆகாய தாமரை நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி. மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum