தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நூல் விமர்சனம் நூலின் பெயர்:சாகாவரம் (நாவல்) நூலாசிரியர் :வெ.இறையன்பு இ.ஆ.ப. திறனாய்வாளர் :முனைவர்.ச.சந்திரா
5 posters
Page 1 of 1

நூல் விமர்சனம்
நூலின் பெயர்:சாகாவரம் (நாவல்)
நூலாசிரியர் :வெ.இறையன்பு இ.ஆ.ப.
திறனாய்வாளர் :முனைவர்.ச.சந்திரா
கோபுர நுழைவாயில் :
நாவலாசிரியர் வெ.இறையன்பு அவர்கள் தான் பார்த்த, கேள்விப்பட்ட,உணர்ந்த செய்திகளோடு கற்பனையையும் வெகுவாக ஏற்றி 'சாகாவரம்' எனும் நூலை இலக்கிய உலகிற்குப் படைத்து அளித்துள்ளார்.இப்புதினத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் தலைமை கதாமாந்தரின் மனதைப் பாதித்த ,உருக்கிய, நெஞ்சைவிட்டு அகலாத மறக்க இயலாத நிகழ்வுகளின் தொகுப்பாக உள்ளது.நாவலின் மையக்கரு உண்மையும் கற்பனையும் கலந்த கலவையாக இருக்கிறது.நாவல் ஓட்டத்தில் நிகழ்வுகள் மிகுதியாக இருப்பினும் சீரான சங்கிலிக் கோர்வையாய் ஆசிரியர் தொடுத்திருப்பதால் நூலை வாசிப்போர் கதையை நன்கு உணர முடிகின்றது.
அகமும் புறமும் :
' தனிமை கொடுமையல்ல :அது இனிமையே '- என்பதைச் சமூகத்திற்குச் சொல்ல வந்ததே இந்த சாகாவரம் நாவல்.ஆசிரியப் பணியில் இருக்கும் நாவலின் தலைமைக் கதாப் பாத்திரம் வகுப்பறையை கருவறையாக எண்ணி போதனை புரிய ,புற உலகில் உலவும் அவன் அக உலகிற்குள் அடியெடுத்து வைப்பதை மையமாகக் கொண்டு இந்த புதினமானது உருவாக்கப்பட்டுள்ளது.கற்பனை,உணர்வு,கருத்து,வடிவம் என்ற நாவலின் இலக்கியக் கூறுகள் அனைத்தும் உள்ளடக்கிய உன்னத நூல் இது எனலாம்.
கனியும் சாறும் :
மனித மனத்திற்கு பாடம் புகட்டுவது,தடம் மாறுகின்றவனை திசை திருப்புவது ,இயற்கையோடு இயைந்து வாழ்வது ,யதார்த்தத்தை நிலை நிறுத்துவது , துயரங்களை அலுக்காமல்,சலிக்காமல் உணர்வோடு துல்லியமாய் எடுத்துரைப்பது எனப் பல்வேறு நிலைக் களன்களோடு பயணிக்கிறது இந்த சாகாவரம் நாவல்.மிக நெருங்கிய நண்பர்களின் அடுக்கடுக்கான மரணம் கதைத்தலைவன் நசிகேதனை அயரவைக்க ,அதன் காரணமாய் அவன் மனநிலை தடுமாற ,ஆசிரியப் பணி விடுத்து கொல்லி மலை நோக்கி நகர்கிறான்.ஞானி ஒருவரின் உறுதுணையுடன் ,ஓலைச்சுவடிகள் அவனுக்கு கிட்ட ,அவை நிதானமாய் அவனால் படிக்கப்பட்டு ,மனதில் பதித்து வைக்கப்பட்டு ,அந்த சொல்வடிவம் செயல்வடிவம் ஆக்கப்படுவதுதான் நாவலின் உள்ளடக்கம்.
முடிவில்லா பயணம் :
புதினத்தின் கதையை வாசிப்போரும் கதைத்தலைவன் நசிகேதனுடன் விடாமல் பயணிக்கிறோம்.அவன் மேட்டில் ஏறும்பொழுது நாமும் ஏறுகின்றோம் ;அவன் பள்ளத்தில் இறங்கும்பொழுது நாமும் இறங்குகிறோம் !ஆம் !ஆசிரியர் தம் மொழிநடைச் சிறப்பால் தலைவனோடு நம்மையும் பயணிக்க வைக்கிறார்.மரணத்தைக் கண்டு நடுநடுங்கும் இந்த கதாப்பாத்திரம் போகப் போக மரணமில்லா பெருவெளியை எவ்விதம் அடைகின்றது என்பதைப் படிப்படியாகச் சொல்வதே நாவலின் கதைஓட்டம்.இந்த வித்தியாசமான பயணத்தில் அவன் சந்திக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் சின்னஞ்சிறு பாத்திரங்களாக இருப்பினும் கூட அவை வாசிப்போர் மனதில் தங்கிவிடுகின்றன.
இரத்த ஓட்டம் :
நாவலின் கதாநாயகன் நூலின் பிற்பகுதியில் கற்பனை உலகை நோக்கி நகர்கின்ற வேளையில் ஒலைச் சுவடியில் கூறியுள்ளபடி அமிழ்ந்து,தவழ்ந்து,கடந்து,தாண்டி -என மேடு பள்ளம் ஏறி,இறங்கி பெருவெளியை அடையும் பொழுது வாசிப்போரும் அவ்வுணர்வைப் பெறுகிறோம்.நாவலில் கொதிநீர் குளிர்கின்றது;முள்வேலி புல்வெளியாகின்றது;கனி கசக்கின்றது;புதைகுழி மெத்தையாகின்றது;இருள் வழி காட்டுகின்றது;வெளிச்சம் தடுமாற வைக்கின்றது;மறதி மன்றாடுகின்றது;தலைவனின் மிக நீண்ட பயணத்தின் போதான இந்நிகழ்வுகளனைத்தும் தத்துவங்கள் பலவற்றை உதிர்த்துச் செல்கின்றன.காதல்,களிப்பு,காமம் -என எவ்வித ஆட்டபாட்டமுமின்றி, மருந்துக்கு கூட ஓர் இளம்பெண் இல்லாமல் நாவலை நயமுடன் நகர்த்திச்
நகர்த்திச் செல்லும் ஆசிரியரின் சாமர்த்தியம் வியக்கத்தக்க ஒன்று.
கல்வெட்டுத்தொடர்கள் :
* காடுகளைக்காட்டிலும் இருண்மையானது மனித மனம்
*இருத்தலின் இயல்பான நிகழ்வுகளில் தலையிடாமல் இருப்பதே கருணை.
*எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான்.பிச்சை கேட்கிற நபர்கள் மட்டுமே மாறுகின்றனர்.
*அழகாக இருக்க வேண்டும் என்கிற பிரச்சனை இல்லாமல் எதைச் செய்தாலும் அது அழகாகி விடுகின்றது.
அஞ்சுக! அஞ்சற்க!:
ஆசிரியர் வெ.இறையன்பு நாவலில் குறிப்பிட்டிருக்கும் தேவபவளபுஷ்பம் உடற்பிணியைப் போக்குவது போல , சாகாவரம் நாவலில் சொல்லவந்த கருத்துக்கள் உள்ளப் பிணியைப் போக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.'எதையும் இழக்கக்கூடாது எனவந்து, அனைத்தையும் இழந்துவிட்டோமே' என்று இந்நாவலின் கதைத்தலைவன் போல் புலம்பாது ,அஞ்சுவதற்கு அஞ்சி,அஞ்ச வேண்டாததற்கு அஞ்சாமல் வாழ இந்த சாகாவரம் நூல் வழிவகுக்கும்..பாரத தேசத்து மொழிகள் மட்டுமல்லாது பன்னாட்டு மொழிகளிலும் மொழிஆக்கம் செய்யப்பெறுவதற்கான தகுதியை உடைய வெ.இறையன்பு அவர்களின் படைப்புக்கள் அனைத்தும் அலைகடல் தாண்டி அகிலம் முழுதும் வாழ்வோரின் மனதில் நிலைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
:héhé:

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: நூல் விமர்சனம் நூலின் பெயர்:சாகாவரம் (நாவல்) நூலாசிரியர் :வெ.இறையன்பு இ.ஆ.ப. திறனாய்வாளர் :முனைவர்.ச.சந்திரா
அழகிய பகிர்வுக்கு அன்பு பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நூல் விமர்சனம் நூலின் பெயர்:சாகாவரம் (நாவல்) நூலாசிரியர் :வெ.இறையன்பு இ.ஆ.ப. திறனாய்வாளர் :முனைவர்.ச.சந்திரா
அழகிய பகிர்வுக்கு அன்பு பாராட்டுக்கள்
priyamudanprabu- மல்லிகை
- Posts : 109
Points : 217
Join date : 13/09/2010
Age : 40
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா
» நூலின் பெயர்:அவ்வுலகம்.நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு.மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
» நூலின் பெயர்:என்னோடு நீ நூலாசிரியர்:சு.சோலைராஜா நூல் மதிப்புரையாளர்:முனைவர் ச.சந்திரா
» நூலின் பெயர்:ஆகாய தாமரை நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி. மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum